Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் சிங்கள மக்கள் சிறப்பு வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து பங்கேற்றிருந்தனர்.

   

தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற செயல்களுக்கு சிங்கள மக்கள் மன்னிப்பு கோரும் சிறப்பு வழிபாடாகவே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டினை நிகழ்த்திய பிரதான ஏற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கல் வழிபாட்டின்போது கூறுகையில், 2009ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்குள் இவ்விடத்தில் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர். அப்பொழுது மக்கள் வாழ் விடங்களை இலக்கு வைத்து கொத்து கொத்தாக குண்டுகள் வீசப்பட்டது. அப்பாவி பொதுமக்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.

அச்சமயம் யுத்தம் நடைபெறாத பகுதியில் இருந்த மக்களாகிய நாம் பால்சோறு உண்டு சந்தோசக்களிப்பில் இருந்துள்ளோம். அவ்வாறன நிகழ்வுக்காக தற்பொழுது முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம். மேலும் விழுந்துள்ள சமூகத்தை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும். அதற்காக எழுந்து நிற்கும் சமூகம் குனிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. அவ்வாறு குனிந்தால் மட்டுமே விழுந்த சமூகத்தை மீண்டும் எழுப்ப முடியும். இவ்வாறு எழுந்து நிற்கும் நாம் குனியும் போது எங்களுடைய வசதிகள் அனைத்தையும் விடுக்க வேண்டி வரலாம். அல்லது நாங்கள் தேசத்துரோகியாக கூட கருதப்படலாம்.

எவ்வாறாயினும் நாம் குனிந்தால் மட்டுமே வீழ்ந்தவர்களை எழுப்ப முடியும். அவ்வாறு வீழ்ந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்போம்.என்று கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் சிறப்பு வழிபாட்டினை மேற்கொள்வதற்கு என்ன காரணம் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்பாட்டாளர்கள் பதிலளிக்கையில்… இவ்வாறான கிறிஸ்தவ திருச்சபை வழிபாட்டினை இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தி அங்குள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று பெரும்பாலான கிறிஸ்தவ சிங்கள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய இந்த சிறப்பு வழிபாடு இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=179973&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதிப்புகளை நிவர்த்திசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டு அதனை ஈடேற்றிய பின்பு, நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதே வரவேற்கக் கூடியது. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சியை வரவேற்கும் அதேவேளை, நடாத்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியைச் சிங்கள அரசு வழங்கும் வகையிலே  சிங்களமக்கள் குரல்கொடுப்பதே சரியான வழியும் உண்மையான ஆற்றுப்படுத்தலும் மன்னிப்புக்கோரலுமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

சில தன்மானத் தமிழர்களுக்கு இது பிடிக்காதே

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை வாழ்விலும் ஒரு சுகம் உண்டு. அதிலிருந்து மீள்வதும் கடினமானதே!! :(

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழரசு said:

முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம். மேலும் விழுந்துள்ள சமூகத்தை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும்.

 

19 hours ago, தமிழரசு said:

இவ்வாறான கிறிஸ்தவ திருச்சபை வழிபாட்டினை இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தி அங்குள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று பெரும்பாலான கிறிஸ்தவ சிங்கள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடிடா அடிடா ,சக்கை என்டானாம்.....சிங்கள சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்து சிங்கள பெரும்பான்மை சமுகத்துக்கு முன்டுகொடுக்கின்றது என்பது எமக்கு விளக்குது கண்டியளோ......."சில்வா" க்களும் "டிமெல்களும்" "சொய்சாக்களும்" செய்த குற்றங்களை நாம் மறக்கமுடியாது ஆனால் மன்னிக்கலாம்....ஆனால் காதில பூ வைக்க இடம் கொடுக்கமுடியாது...

5 minutes ago, putthan said:

 

அடிடா அடிடா ,சக்கை என்டானாம்.....சிங்கள சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்து சிங்கள பெரும்பான்மை சமுகத்துக்கு முன்டுகொடுக்கின்றது என்பது எமக்கு விளக்குது கண்டியளோ......."சில்வா" க்களும் "டிமெல்களும்" "சொய்சாக்களும்" செய்த குற்றங்களை நாம் மறக்கமுடியாது ஆனால் மன்னிக்கலாம்....ஆனால் காதில பூ வைக்க இடம் கொடுக்கமுடியாது...

டீ மேல்களும், சொய்ஸாக்களும் கிறிஸ்த்தவர்கள் இல்லை, இவர்களில் பலர் பௌத்தர்கள்.??

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Dash said:

டீ மேல்களும், சொய்ஸாக்களும் கிறிஸ்த்தவர்கள் இல்லை, இவர்களில் பலர் பௌத்தர்கள்.??

போர்த்துகிஸ் அல்லது டச்சு  .....பைலா கோஸ்டிகள்

23 minutes ago, Dash said:

டீ மேல்களும், சொய்ஸாக்களும் கிறிஸ்த்தவர்கள் இல்லை, இவர்களில் பலர் பௌத்தர்கள்.??

போர்த்துகீசர், ஒல்லாந்தர்கள் எல்லாம் பெளத்தர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.