Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

 

japan flagமூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது.

சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும்.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை கடனாக வழங்கவுள்ளது. களுகங்கை நீர் விநியோக விரிவாக்கத் திட்டத்துக்கு 31.81 பில்லியன் யென் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

மேலும் பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டத்துக்கு 1 பில்லியன் யென் கொடையாக வழங்கப்படவுள்ளது.

இதில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக வழங்கப்படும் நிதி உதவி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊடா மாகாணங்களில், உள்ளூர் வீதிகள், சிறிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறியளவிலான நீர் விநியோகத் திட்டங்கள்,மேற்படி மாகாணங்களின் வாழ்வாதார மற்றும் உற்பத்தியுடன் நேரடித் தொடர்புடைய திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக வழங்கப்படும் 1பில்லியன் யென் நிதி, திருகோணமலைத் துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

ஜப்பான் வழங்கியுள்ள கடன்கள் இரண்டுக்கும் ஆண்டுக்கு 1.4 வீதப்படி வட்டியை செலுத்த வேண்டும் என்பதுடன், 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2017/04/13/news/22517

 

  • கருத்துக்கள உறவுகள்

 வடக்குக்கு கிழக்கும் உதவி செய்யபோகினம் என்று வெள்நாடுகளில் பிச்சை எடுப்பது பின்பு சொரிலன்காவுக்கு அந்த உதவிகளை கொண்டு சென்று திருட்டுத்தனமா அனுபவிப்பது இது கால காலமாய் நடப்பது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.4.2017 at 7:39 AM, nunavilan said:

ஜப்பான் வழங்கியுள்ள கடன்கள் இரண்டுக்கும் ஆண்டுக்கு 1.4 வீதப்படி வட்டியை செலுத்த வேண்டும் என்பதுடன், 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னத்தை வைச்சு திருப்பி குடுக்கிறதாம்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

என்னத்தை வைச்சு திருப்பி குடுக்கிறதாம்..tw_blush:

எங்கள வச்சுத்தான் ஐ மீன் மக்களை  சொன்னேன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னத்தை வைச்சு திருப்பி குடுக்கிறதாம்..tw_blush:

வட்டியே கொடுக்க முடியாது ..........
அதனால் வட்டி தர தொடங்குமட்டும் 
நாங்கள் திரிகோணமலை துறைமுகத்தை பார்த்து கொள்கிறோம் 
என்பதுதான் உடன்படிக்கை.

கொழும்பு சீனாவிட்கு ....
திருகோணமலை ஜப்பானுக்கு ...

காங்கேசன்துறைக்கு .......... நம்ம ஹிந்தியா வரலாம் 
போடும் பாலத்தில் ஏறி இறங்கவே ...
கரும்புலி உணர்வு வேண்டும். 
நான் காங்கேசன்துறை துறைமுகம் போகிறேன் 
என்று வீட்டில் எல்லோருக்கும் சொல்லி 
விடைபெற்று போவது நன்று !

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்னத்தை வைச்சு திருப்பி குடுக்கிறதாம்..tw_blush:

கிழக்கில் இல்மனைட் என்ற பெயரில் அள்ளப்படும் கனிமவள சுரண்டல் மூலம் 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஜப்பானின் கடனை வேணான்னு சொன்னதற்கும் சேர்த்துத்தான் விடுதலைப் புலிகளை ஜப்பான் இணைத்தலைமை நாடுகள் என்ற ஒரு ஏமாற்று அமைப்பின் மூலம் பலமிக்க நாடுகளை இணைத்து தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நடத்த உதவியது. அப்படியாப்பட்ட ஜப்பான்.. இப்போது அந்நிய நாடுகளில்.. தனது வளச் சுரண்டல் வேலையை செய்ய எதைத்தான் கொடுக்காது. :rolleyes:tw_anguished:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.