Jump to content

ஏனடி காதலால் கொல்லுகிறாய்


Recommended Posts

பதியப்பட்டது

உன்......... 
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

கவிதை நன்று... 
நாம் என்ன நினைக்கின்றோம் என்பதனை.... சரியாக  கூறியுள்ளிர்கள். :grin:

Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

கவிதை நன்று... 
நாம் என்ன நினைக்கின்றோம் என்பதனை.... சரியாக  கூறியுள்ளிர்கள். :grin:

ஆம் சரியாக சொன்னீர்கள்
வாழ்துக்கள் 
நன்றி நன்றி

Posted

இரண்டு சிகரங்கள்.....
அருகருகே இருப்பது.....
பொருந்துவதமற்றது.....
பொருந்துகிறது.......
உன் இமை அழகில்.....
மட்டும் தானே அன்பே....!

இப்போதுதான் புரிந்தது......
உதட்டை ஏன் இதழ்......
என்கிறார்கள்........?
நீ பேசும் போது........
ரோஜாவின் ஒவ்வொரு.....
இதழ்களும் விரிவதுபோல்....!

நீ
அசைந்து அசைந்து வருகிறாய் .....
இசைந்து இசைந்து வருகிறது......
கவிதை...........
உன் ஒரு சொல் உனக்கு......
நீர் துளி 
எனக்கு கவிதையின்.....
சமுத்திரம்...................!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

Posted

உங்கள் கவிதை நன்றாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் ஒரு காதல் சூறாவளி நண்பரே..... கவிதைகள் அத்தனை அழகு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கவிப்புயல் இனியவன் said:

 

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
 

நான் காதல் துறந்த புத்தன்.....கவிதைக்கு பாராட்டுக்கள்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் என்றதும் பெண்தான் அதன் கருவாகிறாள்..... :love:

ஆண்.... பித்தனாகிறான், சித்தனாகிறான். :oO:

Posted

உன்னை 
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!

நீ 
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

உன்னை 
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

கவிப்புயல் இனியவன் அவர்களே.....
ஒரு பெண்ணின்  பின்புலம் தெரியாமல், 
கண்டவுடன் காதல் கொள்வதை.. உண்மையில் என்னால்,  கவிதையில் கூட  ஏற்க முடியவில்லை. :grin:

Posted

காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!

நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!

பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

Posted
1 hour ago, தமிழ் சிறி said:

கவிப்புயல் இனியவன் அவர்களே.....
ஒரு பெண்ணின்  பின்புலம் தெரியாமல், 
கண்டவுடன் காதல் கொள்வதை.. உண்மையில் என்னால்,  கவிதையில் கூட  ஏற்க முடியவில்லை. :grin:

பெண்ணின் முன் புலம் பின் புலம் தெரிந்து கொண்டு பழகினால்
அது திருமணம் .நீஙக்ள்சொல்வதுபோல்   என்னலும் ஏற்க முடியவில்லை. ஆனால் காதலில் பலர் இப்படி போய் தனெ அழிந்து விடுகிறார்கள்
ஹி ஹி ஹி 
 

உன்னை.....  
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, கவிப்புயல் இனியவன் said:

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

இன்று தெருவிலும் திரைச்சேலைக்குள் மறைந்து வரும் பாலைவனத் தெய்வங்கள்...:love: தரிசனத்துக்காக் காத்திருந்தால் கால்வாசி போய்விடுமே!. :shocked:

 

பின்குறிப்பு: உங்கள் கவிதைத் திரிக்கு எண்ணை ஊற்றாத ஒரு கருத்து. மட்டுறுப்பினர் பார்வைக்குத் தப்பினால் படிக்கலாம்.

 

 

Posted

நீ 
ஊஞ்சல் ஆடுகிறாய்.....
என் இதயம் மேலும் கீழுமாய்....
ஆடுகிறது......
ஊஞ்சல் கயிற்றை..........
கவனமாய் பிடி........
நீ விழுந்தால்- நான்....
உடைந்து விடுவேன்...........!

கண்ணில் இருந்து.....
காந்த சக்தி வருவது......
உன்னிடமிருந்து தான்.....!

பட்டு ......
புடவையோடுவரவில்லை.......
பட்டாம் பூச்சிபுடவையோடு......
வந்திருக்கிறாய்..........!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

Posted

நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில் 
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16.4.2017 at 8:56 AM, கவிப்புயல் இனியவன் said:

பெண்ணின் முன் புலம் பின் புலம் தெரிந்து கொண்டு பழகினால்
அது திருமணம் .நீஙக்ள்சொல்வதுபோல்   என்னலும் ஏற்க முடியவில்லை. ஆனால் காதலில் பலர் இப்படி போய் தனெ அழிந்து விடுகிறார்கள்
ஹி ஹி ஹி 

Bild könnte enthalten: Text

:grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/15/2017 at 3:39 PM, putthan said:

நான் காதல் துறந்த புத்தன்.....கவிதைக்கு பாராட்டுக்கள்:10_wink:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, முனிவர் ஜீ said:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

இரண்டு பேர் கிடந்து புரண்டால் காதல்

தனியே கிடந்து புரண்டால் கனவுக் காதல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இரண்டு பேர் கிடந்து புரண்டால் காதல்

தனியே கிடந்து புரண்டால் கனவுக் காதல்.

balon_ojos.gif  நமக்கும்  மட்டும் ரூம் போட்டு யோசிச்சு எழுறாங்கள்  நமக்கு இந்த வயசில காதல் வருது அது இவருக்கு கனவு காதலாம் ம்கும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் காதலுக்குள் கிடந்து புரளும்  முனிவன் tw_blush:

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி..:cool:

  • 2 weeks later...
Posted

........காட்சிகள்
........கனவாகும்
........நீ 
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்

........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய் 
.!.......மாறிவிடுவேன்

........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே 

கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே 

 

எப்படி புயல் இப்படி....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.