Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம்

Featured Replies

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம்

 

 

வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது.

 

 

நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார்.

ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்த போது மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது சென்றுள்ளனர். பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் வழி மறித்தும் பின்னால் அமர்ந்து சென்ற நபரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மற்றைய இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இளைஞனை பொலிஸார் தாக்குவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/19279

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இந்தியாவில் இது சகஜம், பொலிஸ் என்றால் அடிக்க வேண்டும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, MEERA said:

சிறீலங்கா இந்தியாவில் இது சகஜம், பொலிஸ் என்றால் அடிக்க வேண்டும் தானே

ஒரு சிறு திருத்தம் மீரா அவர்களே! தமிழர்கள் என்றால் பார்த்துப் பாராது அடித்து உதைக்க வேண்டும்.:(  ஏனையோரைப் பார்த்து அடிக்க வேண்டும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

ஒரு சிறு திருத்தம் மீரா அவர்களே! தமிழர்கள் என்றால் பார்த்துப் பாராது அடித்து உதைக்க வேண்டும்.:(  ஏனையோரைப் பார்த்து அடிக்க வேண்டும்.:grin:

ஒரு சில சில  சம்பவங்களை வைத்து நாங்கள் எல்லா பொலிஸும் குறை கூறமுடியாது...:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

ஒரு சில சில  சம்பவங்களை வைத்து நாங்கள் எல்லா பொலிஸும் குறை கூறமுடியாது...:unsure:

உண்மைதான்.! தமிழீழ காவல்துறையும் அதுபற்றிய அனுபவங்களும் எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன் புத்தன் அவர்களே.!! :100_pray:

வட மாகாணத்தின் பல பிரதேசங்களில் தலைக்கவசம் (உயிர் பாதுகாப்பு) இல்லாமல், உந்துருளியில் 3 பெரியவர்கள் (இளைஞர்கள்) பயணிக்கும் (தமிழரின்) எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தமிழரின் இந்த பொறுப்பற்ற செயல்கள் சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்களில் முடிவடைவதையும் அவதானிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.