Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி

Featured Replies

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி

 
 

ஃபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், மனைவியுடன் மேடையில் தோன்றியபோது "பிரிகெட்டி! பிரிகெட்டி! பிரிகெட்டி!" என்று மக்கள் முழங்கினார்கள்.

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி?படத்தின் காப்புரிமைREUTERS

யார் இந்த பிரிகெட்டி?

வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான தம்பதியினர் மக்ரோங்-பிரிகெட்டி.

"பொதுவான, சாதாரண ஜோடி அல்ல நாங்கள்" என்று தனது திருமண நாளின்போது, அவரே தங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தம்பதியின் வயது வித்தியாசத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்பதியின் வயது வித்தியாசத்திலும் ஒரு ஒற்றுமை உண்டு. 24 ஆண்டுகள் என்பதுதான் அது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மெலினாவை விட 24 ஆண்டுகள் மூத்தவர், பிரான்சு அதிபரோ, மனைவியை விட 24 வயது இளையவர் என்பது தான் ஒரே வித்தியாசம்.

இமான்வெல் 15 வயது சிறுவனாக இருந்தபோது, புத்திசாலியாகவும், படுசுட்டியாகவும் இருப்பாராம். அமியென்ஸில், ஜெஸ்யூட் தனியார் பள்ளியில் மாணவராக இருந்தபோது, பிற பெரியவர்களுடன் சமமான நட்பை கொண்டிருந்ததாக சொல்கிறார், அவரது முன்னாள் நாடக ஆசிரியரும், இன்னாள் மனைவியுமான பிரிகெட்டி. அப்போதே அந்த புத்திசாலி மாணவனால் கவரப்பட்டேன் என்கிறார் அவர்.

அண்ட்ரே ஒளஜைர் என்ற வங்கியாளரை திருமணம் புரிந்து, மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிகெட்டி ட்ரோங்னெக்ஸ், பிரபல சாக்லேட் நிறுவன குடும்ப வாரிசு ஆவார்.

தனது மகன் காதல்வயப்பட்டிருப்பது தெரிந்தாலும், காதலி யார் என்று தெரியாமல் இருந்த மக்ரோங்கின் பெற்றோருக்கு, அது பிரிகெட்டி என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. வேறு வழியில்லாத நிலையில் மக்ரோங்குக்கு 18 வயதாகும்வரை ஒதுங்கியிருக்குமாறு பிரிகெட்டியை கேட்டுக்கொண்டனர். மக்ரோங்குக்காக எந்த உறுதியும் அளிக்க தயாராக இருந்தேன் என்கிறார் பிரிகெட்டி.

சக மாணவியான லாரன்ஸ் ஒளஜைரின் மீது மக்ரோங்குக்கு காதல் இருக்கலாம் என்று பிறர் ஊகித்திருந்த நிலையில், மக்ரோங் காதலிப்பது அவரின் தாயார் பிரிகெட்டியை என்பது ஆச்சரியமாக இருந்தது என்று, மக்ரோங்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக்கியுள்ள அனே ஃபுல்டா குறிப்பிட்டுள்ளார்.

17 வயதாக இருந்தபோது, ஒருநாள் நாம் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வோம் என்று தனது காதலிக்கு வாக்களித்த மக்ரோங், 2007 இல் அந்த வாக்கை பூர்த்திசெய்தார்.

பிரிகெட்டி எனது மருமகள் என்பதைவிட சிறந்த தோழி என்று மக்ரோங்கின் தாயார் சொல்கிறார்.

மக்ரோங்கின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர், சக மாணவியாய் இருந்து மக்ரோங்குக்கு மகளான லாரன்ஸ் ஒளஜைரும், அவரது உடன்பிறப்பும், வழக்கறிஞருமான 32 வயது டிபைனும் அதிபர் தேர்தலுக்கான பாரீஸ் தேர்தல் பேரணியில் (இறுதி) முக்கிய பங்குவகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஒரே மேடையில் கூடி, வெற்றியை கொண்டாடினார்கள்.

இமான்வெல் மக்ரோங்குக்கு பிரிகெட்டியின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகளும், ஏழு பேரப்பிள்ளைகளும் பரிசாக கிடைத்தது.

மக்ரோங், பிரான்சின் பொருளாதார அமைச்சராக பதவியேற்றபோது, பிரிகெட்டி தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, கணவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி?படத்தின் காப்புரிமைAFP

அரசியலில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு தரவேண்டும் என்ற கருத்தை மக்ரோங்கிற்கு ஏற்படுத்தியதற்காக பிரிகெட்டி பாராட்டப்படுகிறார். ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், "என் மார்சே" என்ற மக்ரோங்கின் புதிய இயக்கம், தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள் என்று மக்ரோங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் பெண்மணியின் பங்கை முறைப்படுத்த விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறிய மக்ரோங், "நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மன்னிக்கவும், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கும் முக்கியமான பொறுப்பும், இடமும் உறுதியானது" என்றும் குறிப்பிட்டார்.

"முதல் பெண்மணியின் பொறுப்புக்கு சம்பளம் கிடையாது, அவர் அந்த பதவிக்கு மதிப்பை ஏற்படுத்துவார், குரல் கொடுப்பார், விஷயங்களின் மேல் கருத்து கொண்டிருப்பார், எனது பக்கத்தில் எப்போதுமே இருந்தாலும், பொதுத்தளத்திலும் பங்காற்றுவார்" என இமான்வெல் மக்ரோங் கூறுகிறார்.

மாணவரான மக்ரோங், பிரிகெட்டியிடம் இருந்து அறிவுரைகளை கேட்பது போன்ற கார்ட்டூன்கள் இப்போது பிரான்சில் பிரபலமாகியிருக்கிறது. அதிபர் தேர்தலில் மக்ரோங்குடன் இறுதிச்சுற்று போட்டியில் இருந்த மரைன் லெ பென் மிகவும் ஜாக்கிரதையாக மக்ரோங்-பிரிகெட்டியின் உறவின் தோற்றம் குறித்து கிண்டலடித்திருந்தார்.

"மக்ரோங்… ஆசிரியர்-மாணவர் விளையாட்டை என்னுடன் விளையாட நீ முயல்வது தெரிகிறது. ஆனால், அது எனக்கு ஒத்துவராது" என்று ஏளனப் புன்னகையுடன் கூறியிருந்தார் மரைன் லெ பென்.

திருமதி மக்ரோங் தனது கணவருடனான வயது வித்தியாசம் குறித்த பிறரின் விமர்சனத்தை புன்னகையுடன் எதிர்கொள்கிறார். ஒரு புத்தகத்தில் அவர் என்ன குறிப்பிட்டிருக்கிறார் தெரியுமா? "2017 தேர்தலை மக்ரோங் சந்திக்க வேண்டும். ஏனென்றால், 2022-இல் எனது முகத்தோற்றமே அவருக்கு சவாலாக இருக்கும்".

http://www.bbc.com/tamil/global-39853514

  • தொடங்கியவர்

ஒரு சாமானியன் பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த அதிபரானது எவ்வாறு?

 


ஒரு சாமானியன் பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த அதிபரானது எவ்வாறு?
 

இமானுவல் மக்ரோன் 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர். பிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயற்பாடுகள் கவனம் ஈர்த்துள்ளன. இத்தனைக்கும் இம்மானுவல், பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின் வலிமையான பின்புலங்களைக் கொண்டவரல்ல.

பிரான்ஸ் அரசாங்கத்தில் சிவில் அதிகாரியாக தன் பணியைத் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக பல மில்லியன் டொலர்கள் வர்த்தகம் நடக்கும் வங்கியொன்றின் முதலீட்டு வங்கியாளராக மாறி அங்கிருந்து பிரான்ஸின் பொருளாதார அமைச்சராகி இன்று அதிபராகிவிட்டார்.

பிரெஞ்சு அரசியல் களத்தில் நடுநிலைவாதியான மக்ரோனை நான்கு வருடங்களுக்கு முன்பு வரை பிரான்ஸ் மக்களுக்கு யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்றோ பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த, உலகின் இளமையான அதிபர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தேர்தலின் போது எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கூறியவாறு, மக்ரோனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ்மிக்க பிரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும் பிரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை.

இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி, ”என் மார்ச்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவரின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக, மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் பிரான்ஸின் அதிபராகி இருக்கிறார்.

39 வயதான இம்மானுவல் மக்ரோன் மணந்து கொண்டது தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிகிட் ட்ரோனியக்ஸை. முன்னாள் ஆசிரியையான பிரிகிட் மக்ரோனைச் சந்திக்கும் போது அவருக்கு வயது 15. திருமண வயது வரும் வரைக்குமான மூன்று ஆண்டுகள் காத்திருந்து மக்ரோனுக்கு 18 வயதானதும் இருவரும் மணம் செய்து கொண்டனராம். தனது மனைவி குறித்துப் பேசும் போது தேர்தல் நேரத்தில் தனது பிரசார உரைகளைத் தயாரித்து உதவியதில் பெரும்பான்மையான பங்கு மனைவிக்கே இருப்பதாக மக்ரோன் குறிப்பிட்டார்.

ஒரு சிவில் சேவையாளராக இருந்து, சடாரென பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்வானது மக்ரோனின் அரசியல் கவர்ச்சிகளில் ஒன்று. திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலவே ஒரு சாமனியன் அதிபராவதை பிரான்ஸ் மக்களும் விரும்பினர். ஏனெனில், மக்ரோன் தனது பிரசார உத்திகளில் முன் வைத்தது பெரும்பாலும் முரட்டுத்தனமான ஃப்ரெஞ்சு அரசியல் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களையே. எனவே, தான் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொருளாதார அமைச்சராக அனுபவம் பெற்று, பெரிதாக ஃப்ரெஞ்சு அரசியலில் அறிமுகமற்றிருந்த போதிலும், மக்ரோன் மக்களின் நம்பிக்கையை வென்று அதிபராகி இருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை 7% க்கும் குறைவாகக் குறைப்பது அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. முந்தைய பிரான்ஸ் அதிபரான ஃப்ரங்கோயிஸ் ஹோலண்ட் தோல்வி கண்ட விவகாரம் இது. ஐரோப்பியச் சந்தையில் பிரான்ஸ் இழந்த இடத்தை மீண்டும் உருவாக்கி, பிரான்ஸை மட்டுமே மையப்படுத்தும் ஒற்றைச்சந்தை முறையை உருவாக்குவதே தனது லட்சியமாக மக்ரோன் அறிவித்துள்ளார்.

மக்ரோன் பொருளாதார ரீதியாக தாராளவாதத் தன்மை கொண்டவராக தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். சார்புடைய அல்லது சார்பற்ற என எந்த மாதிரியாக இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைகளில் தாராளவாதத் தன்மையைப் பின்பற்றினாலும் சமூகப் பிரச்சினைகளில் இடது சார்புடையவராகவும் மதச்சார்பற்ற பிரான்ஸ் தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் அனுமதி அளித்து, சமத்துவம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் முற்போக்குத் தன்மையைக் கடைப்பிடிக்கும் மக்கள் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதுவே அவரது வெற்றிக்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமல்ல, மக்ரோன் 120,000 பொதுத்துறை வேலைகளைக் குறைக்க விரும்புகிறார், பொது செலவீனங்களை 60 பில்லியன் யூரோக்கள் (65 பில்லியன் டொலர்) ஆகவும் குறைக்க விரும்புகிறார், மேலும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார். அதோடு மட்டுமல்ல; தோல்வியுற்ற மற்றும் வீணான பிரெஞ்சு அரசியல் அமைப்புகளை மாற்றுதல், தொழிலாளர் சட்டங்களை நிதானப்படுத்துதல், சமூக இயக்கத்தை ஊக்குவித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் ஒரு யூரோ அரசாங்கத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் மக்ரோனின் அரசியல் வியூகங்களில் அடங்கும்.

ஃப்ரெஞ்சுப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸின் சார்பாக ஒலிக்கும் குரல்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான வணிக நட்பு நடவடிக்கைகளை மக்ரோன் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பதை ஆரோக்கியமானதாக ஃப்ரெஞ்சு மக்கள் கருதுகின்றனர்.

தனது பரந்த வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும், ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்திக்கொண்டு, சிரியா மற்றும் வேறு இடங்களில் நீடிக்கும் போர் விவகாரங்களை முடிவுக்குக்கொண்டு வரத்தக்க அரசியல் தீர்வைக் கொண்டு செயலாற்றுவதற்கு உறுதியளிப்பதாகக் கூறும் மக்ரோன், உலக நாடுகளிடையே பிரான்ஸ் அதிபராகத் தனது செயற்பாடுகளில் ஒரு இராஜதந்திர தொனியை பின்பற்றுகிறார்.

மக்ரோன் டிசம்பர் 21, 1977 அன்று பிரான்ஸின் வடக்கு நகரமான அமியென்ஸில் ஃபிராங்வா நோஜூஸ் என்ற மருத்துவர் மற்றும் நரம்பியல் பேராசிரியரான ஜீன்-மைக்கேல் மக்ரோன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

http://newsfirst.lk/tamil/2017/05/ஒரு-சாமானியன்-பிரான்ஸ்-ம/

  • தொடங்கியவர்

’என் மகளின் வயதுதான் என் கணவருக்கும்!’ பிரான்ஸ் முதல் பெண்மணி!

 

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான். அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன. அதற்கு காரணம் அவரின் மனைவி பிரிஜ்ஜெட் மக்ரான்!  

பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியாகவிருக்கும் பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ், அப்போது பள்ளி ஒன்றில் நாடக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அழகான மூன்று குழந்தைகளும் இருந்தன. அதே பள்ளியில் பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே (Auziere) படித்துக்கொண்டிருந்தாள். ஆசிர்ரே வகுப்பில் படித்த மற்றொரு மாணவர்தான் தற்போது  பிரான்ஸ் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரான். 15 வயதே நிரம்பிய மக்ரானுக்கு, பிரிஜ்ஜெட்டைக் கண்டதும் காதல் வயப்பட்டார்.

மக்ரானின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றங்களால் பெற்றோருக்கு தன் மகன் காதல் வயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்துகொண்டனர். ஆனாலும் அவன் யாரைக் காதலிக்கிறான் என்பது தெரியவில்லை. ஒருவேளை, பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே மீது காதல் இருக்கலாம் என்று யூகித்தனர். ஆனால், அதற்கு பிறகுதான், அவன் தன் ஆசிரியரான பிரிஜ்ஜெட்டைக் காதலிக்கிறான் என்பது தெரிந்து. கடும் அதிர்ச்சி அடைத்தனர்.

தன் மகன் 18 வயது நிரம்பும் வரை, அவனை விட்டு விலகியிருக்குமாறு, பிரிஜ்ஜெட்டிடம் கேட்டனர். மக்ரானின் பெற்றோர். ஆனால், அதற்கு பிரிஜ்ஜெட், “என்னால் அதை உறுதியாக கூற முடியாது” என்றார். 

பள்ளிக் காலத்தில், பிரிஜ்ஜெட் எழுதிய நாடகங்களின் நடித்துவந்திருக்கிறார் மக்ரான். அதன்பிறகு, இருவரும் சேர்ந்து நாடகங்கள் எழுதி நடித்தனர். மக்ரானைப் பற்றி பிரிஜ்ஜெட் பேட்டி ஒன்றில் கூறுகையில், "15 வயதுள்ள மக்ரான், வயதுக்கு மிஞ்சிய புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டான். ஓர் இளைஞரைப் போல நடந்துக்கொள்வதைவிட, முதிர்ச்சியான மனிதனாகவே மக்ரான் நடந்துகொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனின் அறிவுதிறன் என்னை ஆட்கொண்டது” என்கிறார்.  பிரிஜ்ஜெட்  தனது முதல் கணவரை கடந்த 2006ஆம் ஆண்டு விவாகரத்து  செய்தார். 

ஒரு கட்டத்தில், ஏதோ காரணத்தால் மக்ரானைவிட்டு விலகியிருக்கிறார் பிரிஜ்ஜெட். ஆனால், “என்னை விட்டு நீ எங்கும் விலகிசெல்ல முடியாது. நான் உன்னை மீண்டும் சந்திப்பேன். அப்போது நிச்சயம் நாம் திருமணம் செய்துகொள்வோம்" என்று கூறியிருக்கிறார் மக்ரான். அப்போது மக்ரானுக்கு வயது 17! சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2007-ம் ஆண்டு, பிரிஜ்ஜெட்டைக் கரம்பிடித்திருக்கிறார் மக்ரான். இருவருக்கும் கிட்டதட்ட 25 வயது வித்தியாசம்! 

இவர்களின் திருமணத்தின்போதே மக்ரான் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். ”எங்களின் திருமணம் சாதாரணமானதல்ல என்றோ, அசாதாரணமானது என்றோ குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை.  இதுபோன்ற ஒரு தம்பதியர் வாழ்கிறார்கள்  என்பதை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். இப்போது மக்ரானின் தாய், 'பிரிஜ்ஜெட்டை மருமகளாக பார்ப்பதைவிட ஒரு தோழியாக பார்க்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். 

ஆனால், பிரான்ஸ் ஊடகங்கள் இவர்களின்  திருமணம் குறித்து சர்ச்சை எழுப்பாமல் இல்லை. அதற்கு  பிரிஜ்ஜெட், “அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கு 70 வயது; அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46. இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?”, என்று  பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

கடந்த மாதம், மக்ரானும், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அதிபராக தேர்வுசெய்யப்பட்டால், இல்லை.. இல்லை... நாங்கள் அதிபர் தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டால், பிரிஜ்ஜெட்டிற்கு தனித்துவமான கடமைகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்” என்று கூறினார். எந்தச் சூழலில் பிரிஜ்ஜெட்டை பிரித்துப்பார்க்காத மக்ரானுக்கு உள்ள அன்பின் சாட்சியே இந்த வரிகள்!

http://www.vikatan.com/news/world/88892-my-daughters-age-is-as-same-as-my-husbands-says-france-first-lady.html

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தின் முன்னால் எல்லாம் தோற்றுவிடும் ...........

இன்பமே உன் பெயர் .... அனுபவமோ ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Quote

 

பிரான்ஸ் ஊடகங்கள் இவர்களின்  திருமணம் குறித்து சர்ச்சை எழுப்பாமல் இல்லை. அதற்கு  பிரிஜ்ஜெட், “அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கு 70 வயது; அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46. இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?”, என்று  பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

 
கிட்டடியிலை மக்றோனை ரம்பர் அவசரமாய் சந்திக்கவிருக்கிறாராம்....தங்கடை குடும்ப இராணுவ ரகசியங்களை பரிமாறப்போயினமோ ஆருக்குத்தெரியும். tw_yum:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 

தேர்தலின் போது எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கூறியவாறு, மக்ரோனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ்மிக்க பிரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும் பிரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை.

இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி, ”என் மார்ச்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவரின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக, மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் பிரான்ஸின் அதிபராகி இருக்கிறார்.

 

இதே மாதிரித்தான் டொனால்ட் ரம்பும் ....
பக்கெண்டு... 
வந்தார்.....
சொன்னார்..
வென்றார்....

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் ஒன்றுமே விளங்கல  

3 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கெண்டால் ஒன்றுமே விளங்கல  

சரி சரி 

இப்ப விளங்கித்தான் என்ன பண்ணப்போகிறீங்கள். :grin:

சும்மா காலத்தை கடத்தாம விளங்கிறதுக்கு இந்த வருடமாவது ஒரு முயற்சி எடுத்தால் நல்லம் முனிவரே. :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி 

இப்ப விளங்கித்தான் என்ன பண்ணப்போகிறீங்கள். :grin:

சும்மா காலத்தை கடத்தாம விளங்கிறதுக்கு இந்த வருடமாவது ஒரு முயற்சி எடுத்தால் நல்லம் முனிவரே. :grin::grin:

நோ ஐடியா பார்ப்போம் பார்ப்போம்  மீண்டும் மத்திய கிழக்கு பக்கம் பாயும் ஐடியா இருக்கிறது   நல்ல வேலை சரிவந்தால் பாய்வது என இருக்கிறன்  இங்கே  காசு மரம் வேண்டும் வாழ்க்கைக்கு உங்களுக்கு தெரியாதா என்ன tw_cold_sweat:tw_cold_sweat:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.