Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும்! - நரேந்திர மோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும்! - நரேந்திர மோடி Top News 
FRIDAYarrow-10x10.png 2017-05-12 19:00]
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த பகவானின் போதனைகள் 21ம் நூற்றாண்டிலும் செல்லுபடியாகும் என்றும் அதன் பெறுமதியை எதிர்காலத்திலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையில் இந்திய விமான நிறுவனத்தின் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு "என்னுடைய தமிழ் சகோதரர்கள்´ பயணிப்பதற்கு இலகுவாக இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், தான் இதனைக் கூறுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

modi-vesak-120517-seithy%20(1).jpgmodi-vesak-120517-seithy%20(2).jpg
modi-vesak-120517-seithy%20(3).jpg
  • கருத்துக்கள உறவுகள்

அழகான தீவை நாசம் பண்ணியது இந்தியா நிம்மதியா இருந்தவங்களை கூப்பிட்டு ஆயுதமும் தந்து பயிற்சியும் தந்து சண்டையை உருவாக்கி பின்பு அதே குழுக்களிடையே முரணை உருவாக்கி கடைசியில் லட்சத்துக்கு அதிகமான உயிர் பலிகளை காவு வேண்டி இலங்கையை தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியான மாநிலம் என்ற தொனியில் ஐயா இருக்கிறார் போல் உள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்

modi-vesak-120517-seithy%20(3).jpg

இனி.... ஸ்ரீலங்கா பக்கம், மோடி... தலை வைச்சும் படுக்க மாட்டார்.  :grin:

இந்திய பிரதமர்  மோடியின்,  இலங்கை  வரவை... 
இலங்கை புத்த பிக்குகள், இருந்த... இடத்திலையே இருந்து, கழுத்தை மட்டும் திருப்பி.... 
வரவேற்ற காட்சி எனக்கு, மிகுந்த சதோசத்தை ஏற்படுத்தியது. :)

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

ஸ்ரீலங்காவின், சிறந்த  எதிர்க் கட்சி  தலைவர்....
சம்பந்தன் பையனை.... இந்தக் கூட்டத்தில், தேடினேன். 
கண்டு பிடிக்க... முடியவில்லை. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, பெருமாள் said:

அழகான தீவை நாசம் பண்ணியது இந்தியா நிம்மதியா இருந்தவங்களை கூப்பிட்டு ஆயுதமும் தந்து பயிற்சியும் தந்து சண்டையை உருவாக்கி பின்பு அதே குழுக்களிடையே முரணை உருவாக்கி கடைசியில் லட்சத்துக்கு அதிகமான உயிர் பலிகளை காவு வேண்டி இலங்கையை தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியான மாநிலம் என்ற தொனியில் ஐயா இருக்கிறார் போல் உள்ளது . 

போற போக்கை பாத்தால் அப்பிடிப்போலைதான் கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und Text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutesarrow-10x10.png ago, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் அப்பிடிப்போலைதான் கிடக்கு...

என்ன குமாரையா சிங்களவனே ஏற்றுக்கொண்டு வாழேக்க உங்களுக்கேனாம் கொதிதிதிதிதிதி......க்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, nochchi said:

என்ன குமாரையா சிங்களவனே ஏற்றுக்கொண்டு வாழேக்க உங்களுக்கேனாம் கொதிதிதிதிதிதி......க்குது.

அசிங்கப்பட்டார் பாரதப்பிரதமர்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

"சந்தர்ப்பங்களை..... தவற  விடும்,  சம்பந்தன்."
தண்ணி.... குடிக்கிறதிலும்... அவசரம் என்றால்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அசிங்கப்பட்டார் பாரதப்பிரதமர்...:grin:

நாங்க பிடரி அடிவேண்டிறதிலையிருந்து  சிங்களம் என்ன செய்தாலும் ரோசம் வராது. இதெல்லாம் வெறும் யுயுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

தனது நாட்டு தேசிய கீதத்துக்கு மரியாத செய்யாதவருக்கு வேறு யாரும் ஏன் மரியாதை செய்ய வேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

18402758_1416942431732534_37193738137434tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

நாங்க பிடரி அடிவேண்டிறதிலையிருந்து  சிங்களம் என்ன செய்தாலும் ரோசம் வராது. இதெல்லாம் வெறும் யுயுப்பி.

இந்தியப் பிரதமர்களுக்கு சிறீலங்கா கொடுக்கும் மரியாதை.:grin:

Bildergebnis für Rajeev gandhi in Sri Lanka

C_pHzIyVwAAozYh.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

18402758_1416942431732534_37193738137434tw_blush:tw_blush:

எங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக நாங்கள் இங்கு பல வித கருத்துக்களை வைக்கின்றோம்.என்ன இருந்தாலும் தனது நாட்டின் (இந்தியாவின்) வெளிவிவகாரத்திற்காக பிறமதத்தின் மதகுருக்களுக்கு இப்படி குனிந்து மரியாதை செலுத்துவதை வரவேற்கத்தான் வேண்டும்....

உதுல இருக்கிற பிக்குமாரைவிட மோடி நல்லவர் என்பது எனது கருத்து.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இந்தியப் பிரதமர்களுக்கு சிறீலங்கா கொடுக்கும் மரியாதை.:grin:

Bildergebnis für Rajeev gandhi in Sri Lanka

C_pHzIyVwAAozYh.jpg

இதில மொட்டைகளின் திமிர் தான் வெளிப்பட்டிருக்கு. இதுங்க எல்லாம் புத்தரின் தர்மம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்வது கேவலம். இதனை கட்டி எழுப்பத்தான்.. மோடி தலைகுனிஞ்சு நிற்கிறார். தேசிய தலைவர் பிரபாகரன் ஒருவரே.. இந்த திமிரை அடக்கி.. உண்மையான புத்த தர்மத்தை இதுகளுக்கு உணர்த்த முயன்றார் என்று சொல்லனும். tw_blush:

Image result for பிரபா - பிக்கு சந்திப்பு

சம்பந்தனை கூட அருகில் வைச்சுப் பார்த்தவர் தான் தலைவர். மற்ற எல்லாரும் எதிரில தான் வைச்சிருக்கினம். மோடி உட்பட. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இதில மொட்டைகளின் திமிர் தான் வெளிப்பட்டிருக்கு. இதுங்க எல்லாம் புத்தரின் தர்மம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்வது கேவலம். இதனை கட்டி எழுப்பத்தான்.. மோடி தலைகுனிஞ்சு நிற்கிறார். தேசிய தலைவர் பிரபாகரன் ஒருவரே.. இந்த திமிரை அடக்கி.. உண்மையான புத்த தர்மத்தை இதுகளுக்கு உணர்த்த முயன்றார் என்று சொல்லனும். tw_blush:

Image result for பிரபா - பிக்கு சந்திப்பு

சம்பந்தனை கூட அருகில் வைச்சுப் பார்த்தவர் தான் தலைவர். மற்ற எல்லாரும் எதிரில தான் வைச்சிருக்கினம். மோடி உட்பட. tw_blush:

தலைவருக்கு தேவை தமிழரும் ,ஈழமும்....மோடிக்கு தேவை சிறிலங்காவும் சிங்களவர்களும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.