Jump to content

சாய்ந்த கோபுரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நண்பர் சுவி அவர்களுக்கு

விமர்சனத்தை முன் வைத்ததற்கு நன்றி. இது போன்றவற்றை நான் ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

முதலில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் ஒரு பேப்பரில் அரைப் பக்கத்திற்கு எழுதவதாலும் வாசிப்பவர்கள் கட்டுரை நீளமாக இருந்தால் வாசிப்பார்களோ என்ற தயக்கத்தாலும் பல விடயங்களை சுருக்கமாக எழுதிவிடுகிறேன். ஆனால் ஒவ்வோரு தலைப்பும் மிக விரிவாக அலசப் படவேண்டியது என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

அடுத்து, காந்தியடிகள் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவரைச் சிறுமைப் படுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் காந்தியடிகள் பல அரசியல் தவறுகளை இழைத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது போராட்ட வடிவத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்ட வடிவமாகக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லாப்போனால் அகிம்சை வழியில் ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த வ.உ.சி. அளவு கூட காந்தியடிகள் முயலவில்லை. அவரது கதர் ஆடைப் பிரச்சாரத்தை விட வ.உ.சி யின் போராட்டம் வீச்சானது. ஆனால் காந்தியடிகளின் அகிம்சை அவருக்கு மிகப் பெரிய செல்வாக்கை பெற்றுத் தந்தது என்பதை மறுக்க முடியாது. அனால் அதுவல்ல விடுதலைக்குக் காரணம் . எனது பதிவில் இதை விளக்கியுள்ளேன்.

அடுத்து, சங்கராச்சாரியார் எழுதிய பல வற்றை தருவதற்கு இடமில்லை. ஆனால் அவரது தெய்வத்தின் குரலானது, சாதி படி முறையை 20 ஆம் நூற்றாண்டிலும் பாதுகாத்துக் கொள்வதற்காக எழுதப் பட்டது என்பது புலனாகிறது. பார்ப்பனர்களின் வேதமதம்தான் பின் இந்து மதமாக உருவெடுத்ததது. ஆனால் அப்போது இருந்த வேதமதத்திற்கும் தற்போது உள்ள இந்து மதத்திற்கும் ஒற்றுமைகள் நிறைய உள்ளதைப்போல் வேறுபாடுகளும் உள்ளன. இப்போது உள்ளது ஒரு புதுக் கலவை. ஆனால் பார்ப்பனியமும் அது கற்பித்த வருணசிரம தர்மமும் அதிலிருந்து கொஞ்சமும் விடுபட வில்லை.

  • Replies 77
  • Created
  • Last Reply
Posted

எனக்கு ஒரு சந்தேகம். தவறு இருந்தால் திருத்தவும்.

தமிழர்களை திராவிடர்கள் என்றுதான் சொல்வார்கள்.

இந்து சமுகத்தில் உள்ள வேதங்கள், சாதிகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆரிய சமுகத்திர்கானவை.

இவை திராவிடர்களின் அடையாளமாக இருக்கவிலலை. இது சரியா?

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

8. கீதை காட்டும் பாதை

gitaup7.jpg

நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று.

அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத்தனை வீடுகளிலும் அந்த வரிகள் தொங்க விடப்பட்டுள்ளன. அது ஏதோ உலகமகா தத்துவங்களில் ஒன்று என நம்மவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கீதையைப் படிக்கும் முன், நானும் அது போன்ற ஒரு மயக்கத்தில்தான் ஆழ்ந்திருந்தேன். மிகுந்த ஆர்வத்தோடு அதனைப் படிக்கத் தொடங்கினேன். இறுதியில், மனித வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன் தராத உளுத்த வேதாந்தங்களின் தொகுப்புத்தான் கீதை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மகாபாரதம் என்பது கண்ணனின் வாழ்க்கையையோ அல்லது அவனது சிறப்புக்களையோ பெருமைப் படுத்த எழுதப் பட்ட இலக்கியம் அல்ல. துஷ்யந்தன், பரதன், (துஷ்யந்தனின் மகனாகிய பரதனின் பெயரிலிருந்துதான் பாரதம் என்ற பெயர் உருவாகியது) யயாதி, குரு, சந்தனு, போன்ற சந்திர வம்சத்து அரசர்களைப் பற்றிய தொகுப்பு நூல்தான் அது. அதன் பெரும் பகுதி அந்த வம்சத்தில் தோன்றிய பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இறுதியில் அபிமன்யுவின் பேரனும் பரீட்சித்து மன்னனின் மகனுமாகிய ஜனமேயனுடன் அந்தப் பெருங்கதை முடிவடைகிறது. இதில் கண்ணன் பாத்திரமானது பாண்டவர்களின் நண்பனாக இடையில் வரும் ஒன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது. கதைத் தன்மையின்படி மகாபாரதத்தின் முக்கிய கதா பாத்திரம் பீஷ்மரேயன்றிக் கண்ணன் அல்ல.

எனவே கண்ணனை முதன்மைப் படுத்துவதற்காகவும் மகாபாரதத்தில் வி;ட்ட குறை தொட்ட குறையாக சொல்லப் பட்ட வருணாசிரம தர்மத்தை வலியுறுத்துவதற்காகவும் இடையில் வந்தவர்கள் மகாபாரதத்தோடு இணைத்த ஒரு இடைச்செருகலே பகவத் கீதை. பதினெட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய பகவத் கீதையின் பெரும் பகுதி, கண்ணன் தன்னைத்தானே தன் பெருமைகளை பறை சாற்றிக் கொள்வதாகவே அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டாக, சிவன், காளி, போன்ற மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சிற்றறிவு படைத்தவர்கள் என்றும் தன்னை (கண்ணனை) வணங்குபவர்களே உண்மையானவர்கள் என்றம் சொல்லப் பட்டிருக்கிறது. (பகவத் கீதை அத்தியாயம் - 7, சுலோகம் 20,21,22,23).

இதில் இன்னொரு வேடிக்கையையும் நாம் பார்க்கலாம். மகாபாரதத்தைக் குறிப்பிடும் போது வியாசர் அருளிய மகாபாரதம் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கீதையைப் பற்றி குறிப்பிடும் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது என்று குறிப்பிடுகிறார்கள். கீதை போர்க்களத்தில் உபதேசிக்கப் பட்டதென்றால் அப்போது கூட இருந்து எழுதியது யார்? கீதையின் முழுச் சுலோகங்களைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாளாவது தேவைப் படும். அந்த நாளில்தான் முதல் நாள் போரும் நடை பெறுகிறது. அப்படியானால் இது எவ்வாறு சாத்தியம்? இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்ததை எதிரில் இருந்த கௌரவப் படை வாய் பார்த்துக் கொண்டிருந்ததா?. எனவே கீதை போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கப் படவும் இல்லை. அதை உபதேசித்தது கண்ணனும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு இடைச் செருகலே.

கீதையானது கற்பனையான ஒன்று, அது போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கபடவில்லை என்பதை இந்துத் துறவியான விவேகானந்தரும் ஒப்புக் கொள்கிறார். (சுவாமி விவேகானந்தர் எழுதிய கீதை பற்றிய சிந்தனைகள் - பக்கம் 1-6)

எஞ்சி இருக்கும் பகுதிகளில் மானுட இழிவைச் சுமக்கும் வருண பேதம் விளக்கப் பட்டிருக்கிறது. அடுத்து கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்றும் ஆன்மா அழிவற்றது என்றும் சொல்லப் பட்டிருக்கிறது இதைத் தவிர வேறு எதுவும் அதில் சொல்லப் படவில்லை.

கீதை போதிக்கும் வருணாசிரம தர்மம் பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் ஒரு சாதிக் கட்டமைப்பு. வைசியர்களும், சூத்திரர்களும் பெண்களும் தாழ்ந்த பிறவிகள் என்று கீதை கற்பிக்கிறது. (பகவத் கீதை அத்தியாயம் - 9, சுலோகம் 32,33).

பாருங்கள்! பெண்கள், பிராமணப் பெண்களாயினும் சூத்திரப் பெண்களாயினும் அவர்கள் தாழ்ந்த பிறவிகளே! பெண்களுக்கு கீதை கொடுத்திருக்கும் மாபெரும் கௌரவம் இது.

அது மட்டுமல்லாது அந்தந்தக் குலத்தில் தோன்றியவர்கள் அந்தத் தொழிலையே செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. குலத் தொழில் ஒழிக்கப் பட்டுவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும் அது சர்வ நாசத்திற்குத்தான் வழி வகுக்கும் என்றும் அதில் சொல்லப் படுகிறது (பகவத் கீதை அத்தியாயம் - 1, சுலோகம் 38,39,40,41 : அத்தியாயம் - 18, சுலோகம் 47 ).

இதுதான் கீதையில் கர்மா எனப் படுகிறது. இந்தக் கர்மா மீறப் படக் கூடாது என்று கீதை போதிக்கிறது. அதாவது மலம் அள்ளுபவன் என்னதான் திறமை பெற்றிருந்தாலும் அவன் அதையே அள்ளவேண்டும், கூலித் தொழிலாளியின் மகன் கூலித் தொழிலையே செய்ய வேண்டும் பிணம் ஏரிப்பவர்களின் பரம்பரையினர் அந்தத் தொழிலையே செய்ய வேண்டும் என்பது போல்தான் கீதையின் வரிகள் உள்ளன. இந்தக் கருத்தை நியாயப் படுத்தும் விதமாக காலஞ் சென்ற காஞ்சி சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் வேதம் பிராமணர் ஆல்லாதார் என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

"பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா? அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள்."

அடுத்து ஆன்மா அழிவில்லாதது என்பது பகுத்தறிவிற்கு முரணானது. உயிர் என்பது உடலை விட்டு தனித்து இயங்க முடியாது. மூளையின் செயற்பாடே உயிர் எனப் படும். அதானால்தான் தமிழ் சித்தார்களில் ஒருவரான திருமூலர் உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்றார். கீதையின் ஆன்மாக் கோட்பாட்டை விஞ்ஞானம் மறுக்கிறது.

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது நடமுறை வாழ்கைக்குச் சற்றும் பொருந்தாத உளறல் தத்துவம். அதுவும் அவரவர்க்கு விதிக்கப் பட்ட கடமையைத்தான் அது சொல்லுகிறது. அதிலும் வருணபேதம் தான் ஒலிக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தாலும் பலனை எதிர்பார்க்காமல் யாருமே உழைப்பதில்லை. ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழிய வேண்டும் என்ற பலனை எதிர்பார்காமலா இலெனின் வர்க்கப் போராட்டத்தை நடத்தினார்? பலனை எதிர்பார்க்கமலா எட்வார்ட் ஜென்னர் அம்மை நோய்க்கு மருந்து கண்டு பிடித்தார்? பலனை எதிர் பார்க்கமலா தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்? எனவே வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள், சாதி வர்க்க பேத மற்ற சமரச உலகைக் கணவிரும்புகிறவர்கள், மனிதர்களுக்குள் அன்பும் அறமும் தழைத்தோங்க வேண்டும் என்று விரும்கிறவர்கள் கீதையை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்

எதைப் பற்றியும் கவலைப் படமால் உலகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற நினைப்புடன் தண்டத்தை வைத்துக் கொண்டு மடத்தில் உட்கார்ந்திருக்கும் பேர்வழிகளுக்கு வேண்டுமானால் கீதை கட்டும் பாதை சரியானதாக அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்க இருகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

உதை எழுதினாலே சனம் ஒன்றும் யோசிக்காம அரோகரா என்று திரியும் தானே அது தான் போர்களத்தில எழுதினது என்று வதந்தியை கிளபிட்டாங்கள்.இந்த நூற்றாண்டிலேயே இப்படியான மக்கள் இருந்தால் அப்ப எப்படியான மக்கள் இருந்திருப்பார்கள்.

:blink:

Posted

நான் சொல்லுறேன் கேளுங்கோ

எது நடந்தது என்று நினைக்காதையுங்கோ

எது நடக்கிறது என்று நினைக்காதையுங்கோ

எது நடக்க இருகிறது என்றும் யோசிக்காதையுங்கோ

இந்த மூன்றையும் நீங்கள் சிந்திகாட்டி நீங்கள் வாழ்கையில் உயர்வீர்கள் இது(போர்களத்திள்)யாழ்களத்தில

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

9. பொதுவுடைமைவாதிகளின் தமிழ்ப் பற்று

சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அடிக்கடி பாரிஸ் லாச்சப்பலில் சந்திக்கும் நண்பர் ஒருவரின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நம் தமிழ் உறவுகளுடன் உரையாடத் தொடங்கியபோது அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுத் தன்மை இருந்ததைக் காணக் கூடயதாக இருந்தது. ஆம் அனைவருமே மார்க்சிய லெனினிய தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தார்கள்.

எனக்கும் பொதுவுடைமைத் தத்துவங்களில் ஈடுபாடு வரத்தொடங்கிய காலம் அது. நான் எண்ணிப் பார்க்கிறேன், பொதுவுடைமைக் கருத்துக்கள் மீதான எனது ஈடுபாடு கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் வழியாகத்தான் முதன் முதலாக ஏற்பட்டது. உழைப்பின் மேன்மை பற்றியும் தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்களையும் அந்தத் தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டி வாழும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் அவரது பாடல்கள்; மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றன. குறிப்பாக நாடோடி மன்னன் திரைப் படத்தில் வரும் “காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் ஒன்று. அதைப் போன்று காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே பசையற்றுப் போனோமடா என்ற தோழர் ஜீவாவின் வரிகளும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ட்ரொட்ஸ்கி போன்றவர்களின் கருத்துக்களை படிக்கத் தொடங்கியிருந்தேன்

இப்படி ஒரு கால கட்டத்தில் அந்தக் கூடத்திற்குச் சென்றதால் அவர்களின் பேச்சுக்கள் வழியாக மேலும் பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்லதொரு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன் என என் மனம் மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் முன் வைத்த கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேசியம் கற்பிதம் என்றும் சிங்கள வெறி பிழை என்றால் தமிழ் வெறி மட்டும் சரியா என்றும் கேள்வி எழுப்பினார்கள். இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்களப் பெருந்தேசியத்தையும் அந்த அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் தமிழ்த் தேசியத்தையும் அந்தத் தோழர்கள் ஒன்றாக ஒப்பிட்டது எனக்கு ஒரு வித சினத்தையும் ஏற்படுத்தியது.

அவர்கள் மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை நான் அறிந்து கொண்டிருக்கும் பெரும்பாலான பொதுவுடைமைவாதிகளும் பொதுவுடைமைக் கட்சிகளும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கொண்டிருப்பதையே கண்டுவருகிறேன். (தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் நல்லக்கண்ணு போன்றவர்களை விதிவிலக்குகள் என்றே எண்ணத்தோன்றுகிறது) ஈழப் போராட்டத்திற்கு பாசிசப் பட்டம் கட்டும் இவர்கள் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஸ்டாலினைப் போற்றுகிறார்கள். தோழர் லெனின் அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல அவரது நோக்கம் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் சகிப்புத் தன்மையற்று அவர் நடத்திய மனித வேட்டைகள் உலக வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்கள். ஆனால் நமது பொதுவுடைமை தோழர்களுக்கு அது தவறாகப் படுவதில்லை.

தமிழ்த் தேசியத்தை இந்துத்துவவாதிகள், இந்தியத் தேசியவாதிகள், சிங்கள இனவாதிகள், ஏகாதிபத்திய அடிவருடிகள் எதிர்க்கலாம், பொதுவுடைமை வாதிகள் ஏன் எதிர்க்க வேண்டும்? மார்க்சோ அல்லது லெனினோ தேசியத்தின்; இருப்பை என்றைக்கும் மறுக்கவில்லை. ‘தேசிய இனங்களின் தன்னுரிமை அவர்களின் பிறப்புரிமை’ என்ற புரட்சியாளர் லெனின் கோட்பாடு பொதுவுடைமைவாதிகளாலேயே கல்லறைக்கு அனுப்பப் படுகிறது.

வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது பொதுவுடைமைவாதிகளின் பல தவறுகள் புலப்படுகின்றன. பேராசான் கார்ல் மார்க்சின் மறைவுக்குப் பின் அவரது தத்துவார்த்த வாரிசாக விளங்கி தேசியங்களின் சுய நிர்ணைய உரிமைக்காக குரல் கொடுத்த கார்ல் கவுட்ஸ்கி பின்னர் நிறம் மாறி முதலாவது உலகப் போரில் தனது சொந்த நாடான ஜேர்மனியின் நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் செயலைச் செய்தார். இலங்கையில் இரு மொழி ஒரு நாடு அல்லது ஒரு மொழி இரு நாடுகள் என்று தேசியத் தன்மைக்கு சரியான விளக்கம் கொடுத்த கொல்வின் ஆர்.டி.சில்வா பின்னர் அந்தக் கொள்கையில் இருந்து விலகி தமிழர்களின் உரிமையை மறுக்கும் விதமாக 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பை எழுதினார். 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய இனவாத ஊர்வலத்தில் சமசமாஜக் கட்சியும் சோவியத் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டன. இடது சாரி இயக்க வரலாற்றிலே வெட்கக் கேடான நிகழ்வாக இது கருதப் படுகிறது.

இவர்கள் எல்லாரையும் விட இந்தியக் கொம்யூனிஸ்டுகளின் தேசியம் தொடர்பான கருத்து மற்றும் செயற்பாடுகள் அசல் கேலிக் கூத்தாக இருக்கிறது. மக்களின் நலனை அவர்களின் உரிமைகளை புறந்தள்ளி வெறும் மண்ணுக்கு மட்டும் தெய்வீகப் பட்டம் கட்டி அதை பாரத மாதாவாக வழிபாடு செய்யும் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஒடுக்கப் பட்ட இனத்தின் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியத்தை மறுக்கிறார்கள். அந்தக் கேலிக் கூத்தின் மற்றொரு வெளிப்பாடுதான் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் நடைபெற்ற தங்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜே.வி.பி. தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஈழப் பிரச்சினையில் மட்டுமல்ல கஷ்மீர், அஸ்ஸாம், பஞ்சாப், நாகலாந்து பிரச்சனைகளில் எல்லாம் இந்தியத் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் செய்யும் மார்க்சியத் துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கொம்யூனிஸ்ட்டுகள் அவரவர்களுடைய மொழி வட்டத்திற்குள் இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியக் கொம்யூனிஸ்டுகள் மாநிலப் பார்வை தவறு அகில இந்தியப் பார்வைதான் சரியானது என்கிறார்கள். தமிழர்களை ஏமாளிகள் என நினைக்கும் தன்மைதான் இவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.

இவை எல்லாம் மார்க்சியம் பேசும் நம் தமிழ்த் தோழர்களுக்கு தெரிய மறுக்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப ஒரு சமுகத்தைப் பிடித்திருக்கும் நோயின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றவாறு எங்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும். நமது தமிழ்ப் பொதுவுடைமைவாதிகள் சறுக்கும் இடமும் இதுதான்.

இன்றைய காலத்தில் ஈழத் தமிழர்களின் தலையாய பிரச்சனை தேசிய இன விடுதலையேயன்றி வர்க்க விடுதலை அல்ல. வர்க்க வேறுபாடுகள் களையப் பட வேண்டும் என்பது முற்றிலும் நியாயமானதுதான். அதன் வட்டம் தமிழ்த் தேசியத்திற்குள்தான் நிற்கவேண்டுமே தவிர சிங்களத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டு உலக பாட்டாளி வர்க்கக் கனவுடன் மிதப்பதல்ல. சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பேரிடும் தமிழ்த் தேசியத்தை சிங்கள பொதுவுடைமைவாதிகளே ஆதரித்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான மார்க்சியம். ஆனால் இந்திய தேசியத்தில் கரைந்த இந்தியப் பொதுவுடைமைவாதிகள் போல் சிங்களப் பேரினவாதத்தில் இவர்களும் ஐக்கியமாகி விட்டார்கள். எதார்த்தம்; இவ்வாறு இருக்கும் போது நாம் தமிழ்த் தேசியத்தை பலப் படுத்தினால்தானே எமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மார்க்சியம் எனப்படும் பொதுவுடைமைச் சித்தாந்தம் ஒரே தன்மையுடன் எல்லா இடங்களிலும் நடை முறைப் படுத்தப் படவில்லை, அதனை உலக முதலாளியத்திற்கு எதிரான கருத்துப் போராகவே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கண்டார்கள். லெனின் அதனை நிலவுடமையாளர்களுக்கு எதிராகவே நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். ஹோசிமின், பிடல் கஸ்ட்ரோ போன்றவர்கள் அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏதிராக பயன் படுத்தி வெற்றி கண்டார்கள்.

இதனை விளங்கிக் கொள்ளமால் மார்க்சியத்தை எந்த மாற்றத்திற்குள்ளும் உட்படுத்த விரும்பாமல் அப்படியே பின் பற்ற விளைகிறார்கள். ரஷ்ய மண்ணும் இந்திய மண்ணும் தமிழ் மண்ணும் அடிப்படையில் பல வேறுபாடுகளை உள்ளடக்கியது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள.; இதன் விளைவால்தான் வேறு சில பொதுவுடைமைவாதிகள் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதுபோல் தலித்தியத்தையும் எதிர்க்கிறார்கள். சாதியம் பற்றி எரியும் இந்திய தூணைக் கண்டத்தில் சாதியை ஒழிக்காமல் பிராமணத் தொழிலாளியையும் தாழ்த்தப் பட்ட தொழிலாளியையும் ஒன்றாக இணைக்க முடியுமா? இந்த இடத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தைக் காட்டிலும் முக்கியமானது. பிறவி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்காமல் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க நினைப்பது பிறவி ஆதிக்க சாதிகளை நிரந்தர ஆதிக்கவாதிகளாக இருப்பதற்குத்தான் வழிவகுக்கும். சாதி வேறுபாட்டை ஒழித்து சமூக நீதியைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப் பட்ட மண்டல் குழு அமுலக்கத்தின்போது இந்தியக் கொம்யூனிஸ்டுகள் காட்டிய இரட்டை நிலைப் பாடு நாடறிந்த ஒன்றாகும். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பொதுவுடைமைவாதிகளோடு முரண்பட்டதிற்கும் இதுதான் காரணம்.

மார்க்சியத்திற்கும் தமிழித் தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் களங்கள் வௌ;வேறாக இருக்கலாம் ஆனால் பொதுத் தன்மை ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆம் மூன்றுமே ஒடுக்கப் பட்ட மக்களின் போர்வாள்கள்தான்.

பொதுவுடைமைவாதிகளிடம் நான் கண்ட மற்றுமொரு தன்மை தமிழின் தொன்மை தொடர்பாக அவர்கள் காட்டும் அலட்சியம். உலகத்திலே தமிழ் மொழிதான் மிகச் சிறந்த மொழி அதைவிடச் சிறந்த மொழி இல்லை என நாங்கள் மார் தட்டத் தேவையில்லை அது அழகுமாகாது. ஆனால் தமிழ் மொழி ஒரு சிறந்த மொழி இனிமையான மொழி, கிரேக்கம் இலத்தின் போன்ற புராதன மொழிகளின் வேர்ச் சொற்கள் தமிழிலிருந்துதான் கிடைக்கப் பெற்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அந்தளவிற்கு தொன்மைக்குத் தொன்மையான மொழி. மிகச் சிறந்த இலக்கியங்களையும் இலக்கண வளமும் கொண்ட மொழி. பிற மொழிகள் கலப்பின்றி இயங்கக் கூடய தனித்தன்மை வாய்ந்த மொழி. சங்க காலம் தொடங்கி இன்று வரை பார்த்தால் ஒளவையார், கபிலர், வள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், திருமூலர், பாரதி, பாரதிதாசன் என பல ஆயிரக்கணக்கான புலவர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மொழி, கால்டுவேல், ஜி.யு.போப் போன்ற மேலை நாட்டு அறிஞர்களையும் கவர்ந்திழுத்த மொழி. ஏத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களை எதிர்கொண்டும் அழிந்து அடையாளம் தெரியாமல் போகாமல் தலை நிமிர்ந்து நின்று நாளை முடிசூடப் போகும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மொழி. இவைகள் எல்லாம் வெறும் பெருமைகள் அல்ல வரலாறுகள். எங்களுக்கு வரலாறு பெருமையாக இருக்கிறது. ஒரு மொழி குறித்த பெருமித உணர்வு வருவது தவறல்ல. பொதுவுடைமைவாதிகள் அதை மறுப்பதுதான் தவறு. மார்க்சியம் பேசுவது உயர்வானது வள்ளுவம் பேசுவது அப்படி அல்ல என்று கருதுகிறார்கள் போலும்.

மார்க்சியம் என்பது உலகை உயிர்பிக்க வந்த உயரிய தத்துவம் என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று தேசிய இன மக்களின் வாழ்வியல் நலங்களை அச்சுறுத்தும் அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் போன்றவற்றின் பாதிப்புகள் இன்றைய காலத்திலும் மார்க்சியத்தின் வரலாற்றுத் தேவையை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களாகிய நாம் எமது வரலாற்று வேர்களை கண்டறிந்து அதிலுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு மார்க்சியத்தை துணை கொள்ளவதுதான் சிறந்ததேயன்றி மார்க்சியத்தின் பரிசோதனைக் களமாக தமிழ்த் தேசத்தை மாற்றுவதல்ல.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

10. உலகமயமாக்கல்

உலகமயமாக்கல் எனும் இந்தச் சொற்பதத்தை பிரான்சில் கல்வி கற்கும் போதுதான் முதன் முதலாக அறிந்து கொண்டேன். உலகமயமாக்கல் என்பது உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் முன்னேற்றும் வழி என்றுதான் மேலை நாட்டுக் கல்வி போதித்தது. பின்னாளில் உலக மயமாக்கல் என்பதே உடல் நலத்துடன் உள்ள ஒரு விளையாட்டு வீரனுக்குப் போட்டியாக ஒரு ஊனமுற்றவனை ஓட வைக்க முயலும் அபத்தமான வழி என்பதுடன் உலகிலுள்ள தேசிய இன மக்களின் நலன்களையும் அவர்களின் மண் வளங்களையும் எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதையும் தெரிந்து கொண்டேன்.

ஊலகமயமாக்கல் என்றால் என்ன? உலகெங்கிலும் உள்ள வணிகம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை ஒன்றாக இணைத்து நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல், வணிக, பொருளாதார தடைகளை நீக்கி உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்குவதே உலகமயமாக்கலின் நோக்கம். முதலாளியத்தின் புதிய வடிவமாக இதைக் கொள்ளலாம். இன்றைய தமிழ் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் கல்வி கற்பவர்கள் உலகமயமாக்கல் தன்மைகளில் வெகுவாக உட்படுத்தப் படுகின்றனர். இன்றைய கல்வி என்பது மனித குல நன்மையை அடிப்படையாகக் கொண்டிராமல் முழுக்க முழுக்க பணத்தைக் குறிவைத்து அதற்காகவே மேற் கொள்ளும் ஒன்றாக மாறி வருகிறது. முழுக்க முழுக்க முதலாளித்துவ கருத்தியலையே அதுவும் கொண்டிருக்கிறது.

உலகமயமாக்கல் என்பது எந்தளவிற்கு உலகில் பெரும்பான்மையாக உள்ள அடிதட்டு மக்களின் வாழ்க்கையை காவு கொண்டு வருகிறது என்பதை நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உலகமயமாக்கலின் பொதுமைப் பண்பே அதுதான். அதன் எல்லைகள் விரிவாகிக்கொண்டே போகும் ஆனால் சமத்துவம் இருக்காது. முதலாளிகளுக்கு கொள்ளை இலாபத்தை அது ஈட்டிக் கொடுக்கும். ஆனால் வறுமையை அது மேன் மேலும் அதிகரிக்க வைக்கும்.

உள்ளுர் விவசாயிகளும் சிறு தொழில் செய்து பிழைத்து வரும் மக்களும் பன்னாட்டு நிறுவனங்களின் படை எடுப்பால் தங்களின் உற்பத்திப் பொருளை சந்தைப் படுத்த முடியாமல் திணறுகின்றனர். இறையாண்மையைப் பற்றி வாய் கிழியப் பேசும் அரசாங்கங்களே தங்களின் மூலதனங்களையும் சொத்துக்களையும் தனியாருக்கு விற்று விடும் அளவிற்கு பெருமுதலாளிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது. இப்படி ஒரு வளர்ச்சியை கார்ல் மார்க்ஸ் கூட கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. விளைவு கீழைத் தேச நாடுகளில் வறுமை பெருக் கெடுத்து ஓடுகிறது. தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் விவசாயிகள், எலிக்கறி சாப்பிட்டு உயிர்வாழும் சாலைப் பணியாளர்கள்;, பெரு முதலாளிகளின் வணிகப் படை எடுப்பால் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த தங்களின் சொந்த நிலங்களைவிட்டு வெளியேறி கையறுந்த நிலையி நிற்கும் பழங்குடி மக்கள் அனைவரும் உலகமயமாக்கலின் கோரப் பசிக்கு இரையானவர்களே. இயற்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.

இதன் விபரீத விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது மார்க்ஸ் வரையறுத்த முதலாளித்துவத்தையும் தாண்டிய ஒன்றாகத்தான் இதைக் கருத முடிகிறது. முன்பு பிற நாடுகளின் மீது பொருளாதாரச் சுரண்டலை மேற் கொள்வதற்கு இராணுவத்தைப் பயன் படுத்திய ஏகாதிபத்திய அரசுகள் இன்று இராணுவத்திற்கு பதிலாகப் புதிய வழிகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. ஆம் ஏகாதிபத்தியத்தின் இடக்கரடக்கல்கள்தாம் (euphemism) உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல் போன்றவைகள். ஆகையால் புதிய கொலனியம் என்று இதை அழைக்கலாம் அல்லது பின் முதலாளித்துவம் (post capitalism) என்று ஏதாவது பெயரைக் போட்டுக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்திய வெறியர்களின் சுரண்டல் மற்றும் அதற்கு அடிபணியும் உள்ளுர் கொள்ளையர்களின் ஆதிக்கம் என்பதுதான். இதிலிருந்து விடுபடுவதற்கு வழி இல்லையா என நினைக்கும் போது இரண்டு வழிகள் தோன்றுகின்றன

முதலாளித்துவத்தின் பிறப்பு வளர்ச்சி, வாழ்வு, சரிவு, அழிவு போன்றவற்றை விலாவாரியாக விளக்கி ‘மூலதனம்’ (The capital) என்ற வரலாற்றுப் புகழ் மிக்க நூலை எழுதிய பேராசான் கார்ல் மார்க்ஸ், அந்த நூலில் முதலாளித்துவத்தின் அழிவில் சோசலிசம் மலரும் என்று குறிப்பிடுகிறார். இன்று மார்க்ஸ் கற்பனை செய்திருப்பதை விட பெருவளர்ச்சி கண்டிருக்கும் முதலாளித்துவச் சமூகத்திற்குள்ளே பல நூறு போட்டிகள் நிலவுவதைப் பார்க்கிறோம். நிலவுடைமைச் சமூகம் தகர்ந்து முதலாளித்துவச் சமூகம் பிறப்பெடுத்தது போல் இந்த போட்டிகள் முற்றி வெடித்து இன்றைய முதலாளித்துவச் சமூகம் தகர்ந்து சோசலிச சமூகம் பிறப்பெடுப்பதும் வரலாற்றின் கட்டாயமாக மாறலாம். மார்க்சின் விருப்பமும் இதுதான்.

அடுத்து, இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய இடத்தை பிடித்து விட்ட உலகமயமாக்கலை பின் நோக்கிச் செலுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. இருப்பினும் அதனைக் கட்டுப் படுத்த முடியும். பல நாடுகளில் நடைபெற்று வரும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் இங்கு கவனம் கொள்ளத்தக்கது. தேசியங்களுக்குள் ஏற்படும் சுயநிர்ணய உரிமையும் அதன் அடிப்படையில் விடுதலை பெற்ற அந்தந்த தேசிய இனங்களுக்குள் ஏற்படும் சமத்துவமான உறவும் உலகமயமாக்கலை கட்டுப் படுத்தும் வல்லமை பெற்றவை. ஏனெனில் நாடுகளுக்கிடையில் உள்ள வணிகத் தடைகள் அற்றுப் போனபோதுதான் உலகமயமாக்கலின் வளர்ச்சி தீவிரம் அடைந்துள்ளது. மக்களின் நலன் அடிப்படையில் போராடி வெற்றி பெறும் தேசிய இனங்கள் அதன் அடிப்படையில் தங்கள் அரசுகளை அமைத்துக் கொள்ள முன்வரும்போது தடைகள் அதிகமாகின்றன. தடைகள் அதிகமாகும்போது உலகமயமாக்கல் எனும் இந்த புதிய முதலாளியம் கட்டுப் படுத்தப் பட்டு பாதியில் நின்று போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. முதலாளியத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் என்றார் லெனின். முதலாளியத்தின் வளர்ச்சி கட்டுப் படுத்தப்பட்டு அதற்கு மேல் அது வளர முடியாமல் போகும் போது ஏகாதிபத்தியமும் இயல்பாகவே சரிவைச் சந்தித்து மண்ணைக் கவ்வும்.

இங்கு பலருக்கு முக்கியமான கேள்வி ஒன்று எழுவது தவிர்க முடியாதது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சோசலிசப் புரட்சிகள் இறுதியில் தோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பதே அது.

சோசலிச சமூகத்தைக் கட்டி எழுப்ப முயன்ற அரசுகள் பின்னர் கொம்யூனிசத்தின் பேரால் சர்வாதிகார ஆட்சியை நடத்தின. அந்தத்த நாடுகளில் ஜனநாயகம் மறுக்கப் பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு போட்டியாக இராணுவ பலத்தைக் கட்டி எழுப்பியதில் காட்டிய தீவிரத்தை விவசாயம் அபிவிருத்தி போன்றவற்றில் காட்டாதது சேசாலிச நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் ஒரு முக்கியமாக வரலாற்று உண்மையை சுட்டிக் காட்ட வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில் சோசலிசம் விழ்ச்சியுற்றபோது பிரிந்து சென்ற நாடுகளின் நிலை முன்னரை விட மோசமாசவே தற்போது உள்ளன. ஆம் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை சேசலிசத்தின் வழியாகத்தான் சரி செய்து கொள்ள முடியுமே தவிர முதலாளித்துவம் அதற்கு ஒரு போதும் ஈடாகாது.

தேசிய இனங்களின் விடுதலையை புறக்கணித்து சகட்டு மேனிக்கு முதலாளிய எதிர்ப்புப் பேசும் கொம்யூனிஸ்டுகளின் போக்குகள்; தேசிய இன விடுதலையாளர்களை அவர்களோடு கைகோர்ப்பதற்கு தடையாக உள்ளன. கஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் கலக்கும் இஸ்லாமியத் தீவிரவாதமும் அதன் விளைவுகளால் ஏற்படும் பயங்கரவாத செயல்களும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தன்மைக்கு மாசு கற்பிக்கின்றன. தேசிய இன விடுதலை என்பது பாதிக்கப் பட்ட மக்களுக்காகவே தவிர மதத்திற்காக அல்ல. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்து கொண்டு சேசலிசவாதிகளும் தேசிய இன விடுதலையாளர்களும் ஒன்று சேர்ந்து முன்னேறுவார்களானால் சென்ற நூற்றாண்டில் ரஷ்யாவில் நடந்த ஒக்டோபர் புரட்சி போல் இந்த நூற்றாண்டிலும் ஒரு சோசலிசப் புரட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்தப் புதிய ஜனநாயக சோசலிசம் உலகெங்கும்; பூத்துக் குலுங்குவதற்கும் வாய்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் ஆக்கங்களை இன்று தான் படித்தேன். உங்களைப் போலவே எனக்கும் சில விடயங்களில் எனது கோபுரங்களும் சாய்ந்து விட்டது. அகிம்சையினை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியா என்று சொல்வார்கள். ஆனால் அன்னாட்டினால் தான் அகிம்சையினை மதிக்காததினால் தான் திலிபனையும், பூபதி அன்னையையும் நாம் இழந்தோம்.

80களில் நானும் இந்தியா ஈழத்தமிழருக்கு உதவி செய்பவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்களினால் தான் நாங்கள் பட்ட அழிவுகள் ஏராளம். போராளிக்குழுக்களுக்குள் பல போட்டிகளை உறுவாக்கியது இந்தியா. 80களில் கொழும்பில் நடைபெற்ற 10க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புக்களினை மேற்கொண்டது இந்தியா.ஆனால் பழி இயக்கங்களுக்கு ஏற்பட்டது. தங்களது சொந்த நலனுக்காக விடுதலைப்புலிகளை, மக்களை அழித்தது இந்தியா.

பிரான்சு, நோர்வே, ஜேர்மனி போன்ற நாடுகளில் தங்க அனுமதி கிடைத்தும் ஆங்கில மொழியின் விருப்பத்தில் பிரித்தானியா, அவுஸ்திரெலியா, கனடா போன்ற நாடுகளுக்கு வந்து அகதி குடியுரிமை மறுக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்த வேண்டிய நிலைக்கும் சில தமிழர்கள் தள்ளுப்பட்ட நிலையினைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களை நினைக்கச் சிரிப்பே வருகிறது. ஏன் இந்த ஆங்கில மோகம்?

ஆங்கில மொழி பல்வேறு மொழிகளில் இருந்து உறுவாகியது. ஆங்கிலத்தில் உள்ள Cash என்பது தமிழில் உள்ள 'காசு' ல் இருந்தே வந்தது. இப்படி 10க்கு மேற்பட்ட தமிழ் சொற்கள் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

The word was formerly used also to refer to certain low-value coins used in South and East Asia. This sense derives from the Tamil kasu, a South Indian monetary unit. The early European representations of this Tamil word, including Portuguese caxa and English cass, merged the existing words caixa and cash, which had similar connections with money. In the pre-1818 South Indian monetary system, the cash was the basic coin, with 80 cash equalling a fanam and 42 fanams equalling a star pagoda worth roughly 7s. 8d.[3]

This assimilated Tamil word was then applied to various other coins with which European traders came into contact, including the famous holed cash coins of China, the Chinese cash. Also called wen, these coins were commonly strung on cords for use in larger transactions; 1000 equalled a tael.[3]

http://en.wikipedia.org/wiki/Cash

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய தமிழ் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் கல்வி கற்பவர்கள் உலகமயமாக்கல் தன்மைகளில் வெகுவாக உட்படுத்தப் படுகின்றனர். இன்றைய கல்வி என்பது மனித குல நன்மையை அடிப்படையாகக் கொண்டிராமல் முழுக்க முழுக்க பணத்தைக் குறிவைத்து அதற்காகவே மேற் கொள்ளும் ஒன்றாக மாறி வருகிறது. முழுக்க முழுக்க முதலாளித்துவ கருத்தியலையே அதுவும் கொண்டிருக்கிறது.

தமிழ் மாணவர்களை மட்டும் குறிப்பாக வைத்து காலணித்துவ நாடுகள் தங்களது முதாளித்துவ வேட்டையை முயற்சிக்கவில்லை,தெற்காசிய பிராந்தியம்,ஆபிரிக்காவில் சில பிரதேசங்கள் உள்ளவர்களும் இதனால் பாதிக்கபடுகிறார்கள்,இன்று தொடங்கிய முயற்சி அல்ல பல வருடங்களிற்கு முதலே தொடங்கிய முயற்சி அதன் பயனை அவர்கள் இப்போது அநுபவகிக்கிறார்கள்,நாங்கள் இன்னும் இழித்தவாயர்களாக இருகிறோம்.கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது.

Posted

என்னமும் தொடர் நீலுமா அலல்து இவ்வளவுதானா? நல்ல விடயங்கள் உள்ளடக்கியுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கருத்துப் பதித்த அன்புறவுகள் கந்தப்பு, புத்தன், கௌதம் அனைவருக்கும் நன்றிகள். கந்தப்பு அவர்கள் கூறியது உண்மைதான் உலகின் பல மொழிகளின் வேர்ச் சொற்கள் தமிழிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களாகிய நமக்கு வரலாறு பெருமையாக இருக்கிறது.

என்னமும் தொடர் நீலுமா அலல்து இவ்வளவுதானா? நல்ல விடயங்கள் உள்ளடக்கியுள்ளது
இன்னும் நீளும், பல விடயங்களை எழுதலாம் என நினைத்திருக்கிறேன். தொடர்ந்து படத்து குறை நிறைகளை சுட்டக்காட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்

நன்றி.

தமிழ் மாணவர்களை மட்டும் குறிப்பாக வைத்து காலணித்துவ நாடுகள் தங்களது முதாளித்துவ வேட்டையை முயற்சிக்கவில்லை,தெற்காசிய பிராந்தியம்,ஆபிரிக்காவில் சில பிரதேசங்கள் உள்ளவர்களும் இதனால் பாதிக்கபடுகிறார்கள்,இன்று தொடங்கிய முயற்சி அல்ல பல வருடங்களிற்கு முதலே தொடங்கிய முயற்சி அதன் பயனை அவர்கள் இப்போது அநுபவகிக்கிறார்கள்,நாங்கள் இன்னும் இழித்தவாயர்களாக இருகிறோம்.கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது.
ஒரு எடுத்துக்காட்டுக்காக தமிழ் மாணவர்கள் என்று குறிப்பிட்டேன். நீங்கள் கூறியது உண்மைதான் புத்தன். உலகமாமாக்கல் அளைத்து தேசிய இன நலன்களுக்கும் எதிரானதுதான்.
Posted

உங்கள் எழுத்துக்கள் இலகுவாக நிறைய விடயங்களை அறியும்விதமாக எளிமையாக உள்ளது. சிறு சிறு ஆக்கங்களாக இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமானதாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இன்றைய சூழலில் வரைமுறையற்ற வகையில் சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் உலக நாடுகளின் செயற்பாடானதை உலகமயமாக்கல் என்னும் வடிவத்தினுடே தான் விளங்கி கொள்ள வேண்டியுள்ளது. அதே போல் பாராமுகமாக இருக்கும் இனப்படு கொலைகளையும் இதனூடே தான விழங்கி கொள்ள வேண்டியுள்ளது.

உலக மயமாக்கல் என்பது சிறு பான்மை இனங்களுக்குள் இலகுவாக சிதைவையும் பிரிவினையையும் ஏற்படுத்த வல்லதாக உள்ளது. உதாரணமாக இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மதரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடினார்கள் தற்போது உலகமயமாக்கலுக்கு எதிராக போரட வேண்டியுள்ளது. முதலாளிகளின் சந்தைகள் உள்ளுர் தெரு வரைக்கும் வந்து விட்டது. உற்பத்தியும் வியாபாரமும் பாதிக்கப்பட்டு பட்டிணி சாவு வரை நிலமை பல இடங்களில் வந்து விட்டது. இந்த சூழலில் அவர்கள் இரு பெரும் ஒடுக்கு முறைச்சக்திகளுடன் போரட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிலுவையில் இருந்த போரட்டத்தையே கொண்டு செல்ல வலு இல்லாத நிலையில் இரண்டு விதமான முன்னெடுப்புகள் பற்றி கற்பனை பண்ண முடியாதுள்ளது.

முதலாளித்துவம் உலகமயமாக்கல் என்பன இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சாதியம் கலாச்சாரம் மதம் போன்றவற்றுக்கு ஊடாகத்தான் நடைமுறைக்கு வருகின்றது. ஆனால் மார்க்ஸியம் மேற்கண்ட காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கீழ் மேல் என்பதை இடது வலதாக அணுகி இதுவரை காலமும் குறிப்பிட்டளவு முன்னேற்றம்கண்டதாக தெரியவில்லை. வேர் இருக்க கிழைகளோடு போராட்டம் போல் இன்று கிழையிருக்க கிழை எறிந்த விழுதுகளுடன் போராட்டம் போல் உலகமயமாக்கலை எதிர்க்கும் அணுகு முறை இருப்பதாக கருத இடமுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் எழுத்துக்கள் இலகுவாக நிறைய விடயங்களை அறியும்விதமாக எளிமையாக உள்ளது. சிறு சிறு ஆக்கங்களாக இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமானதாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

முதலாளித்துவம் உலகமயமாக்கல் என்பன இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சாதியம் கலாச்சாரம் மதம் போன்றவற்றுக்கு ஊடாகத்தான் நடைமுறைக்கு வருகின்றது. ஆனால் மார்க்ஸியம் மேற்கண்ட காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கீழ் மேல் என்பதை இடது வலதாக அணுகி இதுவரை காலமும் குறிப்பிட்டளவு முன்னேற்றம்கண்டதாக தெரியவில்லை. வேர் இருக்க கிழைகளோடு போராட்டம் போல் இன்று கிழையிருக்க கிழை எறிந்த விழுதுகளுடன் போராட்டம் போல் உலகமயமாக்கலை எதிர்க்கும் அணுகு முறை இருப்பதாக கருத இடமுண்டு.

நன்றி சுகன்

உலகமயமாக்கல் என்ற ஆதிக்க சக்தி ஆதிக்கவாதிகளோடுதான் கைகோர்க்கும். இந்தியாவில் இந்துத்துவவாதிகள் இதற்கு ஆதரவு தருவதும் இந்த அடிப்படையில்தான். உங்கள் கருத்து உண்மைதான்.

எங்களைப் போன்றவர்களக்கு மார்க்சியத்திலுள்ள ஈடுபாடு மார்சியவாதிகளிடம் இல்லாமலிருப்பது இதுபோன்ற காரணங்களால்தான். ஆதிக்க சக்திகள் வெறும் முதலாளித்துவ வடிவம் மட்டும் எடுப்பார்கள் என்று கருதுகிறார்கள் போலும்.

மதம் சாதியம் ஏன் தேசியம்கூட (சிங்களம், இந்தியம்) ஆதிக்கவாதிகளின் கைப்பாவைகள்தான்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

11. புராணங்களும் இதிகாசங்களும்

புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள் புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை. ஏனெனில் புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன.

ஆத்திக அன்பர்கள் புராண இதிகாசங்கள் மீது இரு வித கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். பலர் அவற்றை உண்மையானவை என்று முழுதாக நம்புகிறார்கள். வேறு சிலர் அவை கற்பனையாக இருந்தாலும் அவை போதிக்கும் கருத்துக்கள் நீதியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவையாக இருக்கின்றன என்கிறார்கள். சிறு வயதில் நான் முதல் கருத்தையும் அதன்பின்னர்; இரண்டாவது கருத்தையும் கொண்டிருந்தேன். தற்போது புராணங்கள் தொடர்பான எனது கருத்துக்கள் தலைகீழாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

புராணங்களில் வரும் கடவுள் பாத்திரங்கள் விலங்குகளும் மேற்கொள்ளாத இழிந்த முறையை மேற்கொண்டுள்ளன என்பதை பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளே நமக்கு சாட்சியாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக

தாருகா வனத்து முனிபத்தினகளை பாலியல் வல்லுறவு கொண்ட சிவனார்,

தான் பெற்ற மகளான திலோத்தமையை தனது தாரமாக்கிக் கொண்ட பிரம்மா,

தனது கண்ணன் அவதாரத்தில் பல்லாயிரக் கணக்கான கோபியருடன் ராஸ லீலை நடத்திய விஷ்ணு.

இந்த மும்மூர்த்திகள் முவரும் சேர்ந்து அத்தி என்ற முனிவரின் மனைவியான அனுசூயையை நிர்வாணக் கோலத்தில் பார்க்க முற்பட்டது என இந்தப் புண்ணியக் கதைகளின் ஒழுக்க விழுமியங்கள் நைல் நதி அளவுக்கு நீளுகின்றன. மும்மூர்த்திகளின் செயல்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும். இவை எந்த ஒழுக்கத்தையும் நீதியையும் போதிக்கின்றன என்பதை இதைப் படிப்பவர்களின் முளையின் செயற்பாட்டிற்கே விட்டுவிடுகிறேன்.

கடவுளர்களின் செயல்களை வெறும் பால் மயக்கத்தோடு பார்க்கக்கூடாது என வாதிடுபவர்களும் உள்ளனர். பாலியல் என்பது தவறான கருத்து அல்ல. உடலின்பத்தின் சுவைகளை வள்ளுவரின் இன்பத்துப் பால் வெளிப்படையாகவே பகர்கிறது. அகநானூறு குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்கிளிலும் பாலியல் கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

ஆனால் புராணங்கள் உடல் ஒழுக்கத்துடன் பாலியலைப் பேசவில்லை. பிறன் மனை நோக்கியவர்கள், பெற்ற பெண்ணையே பெண்டாள நினைத்தவர்கள், விலங்குகள் என்றும் பாராமல் அவற்றோடும் உடலுறவு கொண்டவர்கள் என அருவருக்கத்தக்க செயல்களை செய்தவர்களை தேவர்கள் என்றும் கடவுள்கள் என்றும் போற்றுகின்றன புராணங்கள்.

புராணங்கள் தமிழர்களுடைய சொத்து அல்ல. இது போன்ற அருவருப்பான கதைகளை பழந்தமிழர் எழுதவும் இல்லை. புறநானுற்றில் ஒரு காட்சி, காதலன் ஒருவனுக்கு மார்பில் வேல் பாய்ந்து விடுகிறது அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒடி வருகிறான் ஏன்? பூமியின் மடியில் விழுவதைவிட தனது காதலியின் மடியில் இறப்பதை அவன் விரும்புகிறான். இறுதியில் அவனது காதலியின் மடியில் உயிர் விடுகிறான்.

இதைப்போல் குறுந்தொகையில் இரு மான்கள் தாகத்துடன் செல்கின்றன வழியில் தென்படும் சிறு குட்டையில் ஒரு மான் அருந்துவதற்குத்தான் நீர் உள்ளது. இரண்டும் சென்று வாயை வைக்கின்றன ஆனால் நீர் அப்படியே உள்ளது. ஆண் மான் குடிக்கட்டும் என்று பென் மானும் பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும் தங்கள் தாகத்தின் வலியை மறைக்கின்றன. இவைகள் அல்லவா பண்பாட்டின் வேர்கள். ஆனால் நம்மவர்களோ தமிழ் இலக்கியங்களின் பெருமை தெரியாமல் புராணச் சாக்கடைக்குள் முகம் புதைக்கின்றனர்.

நமது பழந் தமிழ் இலக்கியங்களில் வரும் கதைகளை படிக்கும் போது வீரம் மிளிர்கிறது. நேர்மைப் போரிடை புகுந்து வாழாத தமிழனை வரலாறு மதிக்காதென்பது அக்கதைகளில் தெரிகிறது. இமய வரம்பினில் புலிக் கொடியைப் பறக்க விட்ட கரிகாற் சோழன், தமிழைப் பழித்த கனக விசயரின் தலையில் கல்லினை ஏற்றி கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை வென்ற தலையனங்கானத்துச் செருவென்ற பாண்டியன், எதிரியிடம் சரணடைந்து உயிர் வாழ்வதை விட மரணம் பெரிதென அதனை வரவேற்ற கணைக்கால் இரும்பொறை போன்றவர்களின் கதைகளைப் படிக்கும் போது வீரமும் தியாகமும் கொப்பளிக்கக் காண்கிறோம். சாத்திரம் காட்டும் கட்டுக்கதைகளில்கூட தமிழன் சரித்திரம் காட்டும் கற்பனைக் கதை முளைத்ததில்லை.

ஆனால் இதிகாசங்களில் வரும் போர்களிலோ சூது, வஞ்சகம் தவிர வேறு என்ன இருக்கிறது. வாலி, பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அபிமன்யு என ஒருவருமே நேர்மையான முறையில் கொல்லப் படவில்லை. போரில் ஆயுதம் தரிக்க மாட்டேன் என தான் செய்த சத்தியத்தையும் மீறி கடவுள் அவதாரமாகக் கருதப் படும் கண்ணனே பீஷ்மரைக் கொல்ல சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கூத்துக்கள்தான் இவற்றில் நிறைந்திருக்கின்றன.

அதீதக் கற்பனை கொண்ட கதைகளை நாங்கள் நம்பத் தேவையில்லை அதற்காக அவைகளை வெறுக்க வேண்டிய கட்டாயமில்லை. புராணக் கதைகள் பல நாடுகளில் இருந்திருக்கின்றன. குறிப்பாக கிரேக்க நாட்டு புராணக்கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு யாரும் கோவில் கட்டி குடமுழுக்கு செய்வதில்லை. ஒரு காலத்தில் கடவுள்களாக வழிபட்ட அந்த கதாபாத்திரங்களின் சிலைகள் தற்போது அருங்காட்சியத்தில் காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. அவற்றின் வழிபாட்டு இடங்கள் வெறும் புராதனச் சின்னங்கள் என்ற முறையில்தான் கிரேக்கம் போன்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்துப் புராணங்களின் தன்மையோ சற்று வேறுபட்டது. அவை வெறும் அதீதக் கற்பனைக் கதைகளாக மட்டும் இருந்தால் பட்டி விக்கிரமாதித்தன் கதைகளைப் போல் அல்லது தற்போது மேலை நாடுகளில் சக்கை போடு போடும் ஹரிபோர்டர் போல் வாசித்துவிட்டுப் போகலாம். மாறாக அவைகளில் தமிழ் விரோதப் போக்குகள் காணப்படுகின்றன. வேத உபநிடதங்களைப் போல் இவைகளும் பார்ப்பனர்களை உயர்த்தி சூத்திரர்களை தாழ்த்தியே எழுதப்பட்டிருக்கின்றன. மகாபாரத்தில் துரோணர் என்ற பிராமணருக்காக ஏகலைவன் என்ற சூத்திரனின் கட்டை விரல் வெட்டப்பட்டது இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. புராண இதிகாசங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அவை ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த போர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். தங்களை எதிர்த்த தமிழ் மன்னர்களைத்தான் ஆரியர்கள் அசுரர்களாகவும், அரக்கர்களாகவும் சித்தரித்து புராணங்களைப் படைத்தார்கள். அத்துடன் இராவணனுக்கு பத்துத் தலை போன்ற அதீத கற்பனைகளையும் சேர்த்தார்கள்.

பிறவிப் பெண்ணடிமைத்தனம் புராண இதிகாசங்கதைகளில் மித மிஞ்சிக் காணப் படுகின்றது. குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடிய அகலிகை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவன் பார்வையற்றவன் என்பதற்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை எண்ணும்போது பெண் என்பவள் விறகுக் கட்டைக்கு ஒப்பாகத்தான் ஆரிய தர்மத்தில் மதிக்கப் படுகிறாள் என்பது புலனாகிறது.

புராணங்களும் இதிகாசங்களும் பண்பாட்டையும் நீதியையும் போதிக்கும் கதைகள் அல்ல. மாறாக ஒழுக்கக் கேடுகளும் மனித ஏற்றத் தாழ்வுகளும் கபட நாடகங்களும்தான் அதில் நிறைந்து காணப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுவாரஸ்யமான எழுத்தாழுமைக்கு பாராட்டுக்கள்! இளங்கோ

உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்துக்கள்!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

12. உன்னைத் திருத்திக்கொள் உலகம் தானாகத் திருந்தி விடும்

உன்னைத் திருத்திக்கொள் உலகம் தானாகத் திருந்தி விடும் என்ற இச் சொற்றொடர் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் பொருட்டு காலம் காலமாக சொல்லப் பட்டு வருகிறது. தனிமனித ஒழுக்கமும் பண்பு நலன்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் தேவை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும் அந்த உணர்வுகள் ஒரு போதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. ஏனெனில் அனைவரும் அவ்வாறு நினைத்து விடப்போவதில்லை. ஒருவர் திருந்தி, பின்னர் அவரது குடும்பம் திருந்தி, அதன் பின் சமூகம் திருந்தி, நாடு திருந்தி, உலகம் திருந்தி.... இவை நடக்கக் கூடியதா? வெறும் கற்பனை வாதத்திற்குத்தான் இது உதவுமே தவிர நடமுறை சமூக வாழ்வுக்கு ஒரு போதும் உதவாது. அப்படியானால் சமூகத்தில் உள்ள குறைபாடுகளைத் திருத்த முடியாதா? முடியும் ஆனால் தனி மனித மாற்றத்தால் அது முடியாது, சமூக மாற்றத்தால் அது முடியும் என்பதுடன் அந்த சமூக மாற்றம் தனி மனிதனையும் மாற்றும். தனி மனித மாற்றத்தால் உலகம் மாறியிருக்கிறது என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை. ஆனால் சமூகமாற்றங்கள் தனி மனிதர்களை மாற்றியிருக்கின்றன என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

குறிப்பாகத் தமிழீழத்தை எடுத்துக் கொண்டால் சாதிய ஏற்றத் தாழ்வுகள் பல சமூகங்களில் இருந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தினரிடம் அது சற்று அதிகமாகவே இருக்கிறது. சாதி பார்க்கக் கூடாது அது தவறு என ஆன்மீகப் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தால் அது அவர்களைத் திருத்திவிடாது. காலம் காலமாக வாழையடி வாழையாக அது கற்பிக்கப் பட்டு வருகிறது. சாதியம் தவறு என உணர்ந்து சமரச நோக்கோடு வாழ்பவர்கள் முற்படுத்தப் பட்ட சாதியிலும் இருக்கிறார்கள். அவர்கள் விதி விலக்குகளே தவிர விதிகள் அல்ல. விதி விலக்குகளால் விதிகள் அவ்வளவு எளிதில் மீறப் பட்டு விடுவதில்லை. அவர்களால் தங்கள் குடும்பத்தினைரையே மாற்ற முடியாமல் இருக்கும்போது ஒரு சமூகத்தை நிச்சயம் மாற்றிவிட முடியாது. இறுதியில் குடும்ப அழுத்தங்களுக்கு அவர்களும் பணிந்து போய்விடுகிறார்கள்.

இந்நிலையில் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தணித்திருக்கின்றன. தமிழீழ அரசு சாதியையும் சீதனத்தையும் சட்டம் கொண்டு வந்தது ஒழிக்க முற்பட்டது நல்ல முயற்சி. இது ஒரு சமூகமாற்றம். புலம் பெயர்ந்த சமூகத்தால் சாதியம் என்பது கட்டிப் பாதுகாக்கப் படுகிறது என்றாலும் ஈழத்தில் முன்பு இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு குறைக்கப் பட்டருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியத்திற்கு எதிராக, உயர் சாதித் திமிரைக் கட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை ஒரு அரசு கொண்டு வரும்போது சாதி எதிர்ப்பாளர்களை அது மகிழ்விக்கிறது என்பதற்கும் மேலாக மற்றுமொரு நன்மை அங்கே நடக்கிறது. ஆம் சாதியவாதிகள் அச்சப் படுவார்கள் சாதி பார்ப்பது தேசக் குற்றம் என்றொரு நிலைக்கு அவர்கள் தள்ளப் படுவார்கள். ஈற்றில் சாதியம் சமூகத்தில் இருந்து மறைவதற்கும் வழிவகுக்கும்.

பிரன்சுப் புரட்சி நிலவுடமை ஆதிக்கவாதிகளைத் தகர்த்தது ஒரு சமூக எழுச்சியால்தான். கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறி தனிமனித பண்பு நலன்களால் குறைக்கப் படவில்லை. இடைவிடாது நடந்த போராட்டங்களாலும், சிந்திய இரத்தங்களாலும், மார்டின் லூதர் கிங் போன்றவர்கின் உயிர்த் தியாகங்களாலுமே அவை குறைக்கப் பட்டன. அதன் பலனாக மேலை நாட்டு அரசுகள் நிறவெறிக்கு எதிராகக் கொண்டு வந்த கடுமையான சட்டங்களே இன்று பல வெள்ளை இனத்தவர்களையே நிற ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பும் அளவிற்கு மாற்றியிருக்கின்றன. குறிப்பாக Anti Discrimination Commission எனும் மனிதர்களை வேறுபாட்டோடு நடத்துவதற்கு எதிரான ஆணைக்குழு அமுலாக்கப் பட்டு அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கபடுகின்றன.

அதைப் போன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் வணிகத் தொழிலை எடுத்துக்கொண்டால். தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாலோ அல்லது அதில் ஈடுபடும் பெண்கள் மீது வெறுப்பைக் கக்குவதாலோ அவை மறையப் போவதில்லை. அதற்கான சமூகக் காரணிகளை ஆரய வேண்டும். தமிழ் நாடு போன்ற இடங்களில் பாலியல் தொழில் செய்யும் ஏழைப் பெண்களின் கதைகள் கல்லையும் கரைய வைக்கக் கூடியவை. பணக்கார முதலைகளின் பசிக்கு பாவம் அவர்களின் வறுமை பயன்படுகிறது. தனியுடைமைதான் ஒரு குறிப்பிட்ட மக்களை பெரும் பணக்காரர்களாகவும் வேறு சில மக்களை அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாத அளவுக்கு ஏழைகளாகவும் மாற்றுகிறது. அனைவருக்கும் சமமான கல்வி வேலைவாய்ப்பு என நாட்டில் சமவுடமை பூத்துக் குலுங்கினால் நளடைவில் இவையெல்லாம் மறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளன.

நாம் வாழும் உலகம் எத்தனையோ வகையான அடக்குமுறைகளையும் மனித இழிவுகளையும் சந்தித்திருக்கின்றன. அவைகள் இன்று புதிய வடிவத்தில் தொடர்ந்தாலும் முன்பு நிலவிய ஆண்டான் அடிமை முறை, நிலவுடமை ஆதிக்கங்கள் போன்றவைகள் தற்போது இல்லை. அன்றைய அடிமையுடைமைச் சமூகத்தில் அடிமைகளைக் கொல்வதற்கும் அவர்களின் உடைமையாளர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. 1860 ஆம் ஆண்டு அப்போது அமரிக்காவின் அரசுத் தலைவராக இருந்த அபிரகாம் லிங்கன் அவர்கள் அடிமை முறையை ஒழித்துக் கட்டுவதற்கு கடுமையான சட்டங்களைப் பிறப்பித்தார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து அடிமைகளும் முற்றாக விடுதலையடைய வேண்டும் (Emancipation Proclamation) என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதனை மீறுபவர்கள் சட்ட விரோதிகளாகக் கருதப் பட்டனர். விளைவு அடிமை முறை அதன் பின்னர் முற்றாக ஒழிக்கப் பட்டு விட்டது.

எனவே ஒருவரின் உள்ளம் திருந்துவதால் உலகம் திருந்திவிடாது. மாறாக சமூக, அரசியல் மாற்றங்களே அந்த அந்த ஒருவரையும் திருத்தும் வல்லமை பெற்றவை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

13. திராவிடம்

திராவிடம் எனும் கோபுரம் சாய்ந்து விட்டது ஆனால் பெரியார் என்ற கோபுரம் சாயவில்லை இன்னும் என் மனதில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

பெரியாராலும் அண்ணாவாலும் கைவிடப்பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம்.

தமிழ் நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமல்ல ஈழத் தமிழர்களிடமும் திராவிடம் தொடர்பான மயக்கம் இருந்து வருகிறது. தங்கள் எழுத்துக்களில் தமிழர்களைக் குறிக்கும் இடங்களில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். திராவிடம் எனும் சொல் தமிழ்ச் சொல் அல்ல. தமிழைக் குறிக்க பயன் பட்ட வடமொழிச் சொல்லே அது. இது பற்றிய உண்மைகளை அறிய முன்பு திராவிடத்தின் மீது எனக்கு ஒரு மிகப் பெரிய மயக்கம் இருந்தது. திராவிட இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களாக விளங்கிய பெரியார் மீதும் அண்ணா மீதும் ஏற்பட்ட ஈடுபாட்டால் அவர்கள் பேசிய பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக நீதி போன்றவற்றின் பாதிப்பால் அவர்களின் அரசியல் வெளிப்பாடான திராவிடமும் என்னைக் கவர்ந்து கொண்டது.

பொதுவாக தமிழ்ச் சொல் வடமொழியில் திரிவாகும் போது உயிர்மெய்எழுத்து மெய்எழுத்தாக நின்று அதனுடன் ‘ர’ எனும் எழுத்து சேர்ந்து கொள்ளும் எடுத்துக் காட்டாக

பயணம் என்ற தமிழ்ச் சொல்லில் ‘ப’ என்ற உயிர் மெய் எழுத்து ப் என்ற மெய் எழுத்தாக நின்று அதனுடன் ர சேர்ந்து ப்ரயாணம் ஆகி பின் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு பிரயாணம் என திரிபுற்றது. மதங்கம் மிருதங்கம் ஆனதும், பவளம் பிரவாளம் ஆனதும் இவ்வாறே. இதன் முறையே தமிழ் என்ற சொல் த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம் என்று திரிவடைந்து பின்னர் திராவிடம் ஆனது. ஆம் தமிழர்களைக் குறிக்க ஆரியர்கள் பயன் படுத்திய சொல்லே திராவிடர் என்பதாகும். உண்மை இவ்வாறு இருக்க இடைப் பட்ட காலத்தில் இதற்கு வேறு ஒரு பொருள் கற்பிக்கப் பட்டது. ஆரியக் கலப்பால் தமிழிலிருந்து திரிபுற்ற தெலுங்கு, கன்னடம், மலையளம் போன்ற மொழிகளைப் பேசுவோர் திராவிடர் என்ற வட்டத்திற்குள் கொண்டு வரப் பட்டனர்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A comperative Grammer of Dravidian Language) என்ற ஆங்கில நூலை எழுதிய கால்டுவெல் என்பவரிடம் இருந்தே மேற்குறிப்பிட்ட கருத்து முதன்முதலாகத் தோற்றம் பெறுகிறது. அறிஞர் கால்டுவெல் அவர்கள் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தமிழின் பெருமையை உலகறிய வைத்தது என்பதை மறுக்க முடியாது. அது வரைக்கும் சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என இடைத் தரகர்களான ஆரியப் பார்ப்பனர்கள் கட்டி விட்ட கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது கால்டுவேல் அவர்களின் ஆய்வுதான். தமிழ் தனித்து இயங்கும் வல்லமை பெற்ற உயர் தனிச் செம்மொழி என அவரது ஆய்வு முழுமையாக ஒப்புக் கொண்டது. அதேசமயம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு ஒரு குறியீடு தேவையாயின் அதை திராவிடம் என வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இவரது கருத்தை பின்னாளில் திராவிட இயக்கம் தனது அரசியல் தேவைக்காக பயன் படுத்திக் கொண்டது.

இந்த இடத்தில் இன்னுமொன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழர்களிடமிருந்து திராவிட மயக்கம் விடுபடவேண்டு என்பது நியயாமானதுதான் ஆனால் திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் தந்தை பெரியாரைக் கொச்சைப் படுத்தும் செயல்கள் ஒரு சில தமிழ்த் தேசியவாதிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. பெரியார் தமிழ்த் தேசியம் பேசாமல் எதற்காக திராவிடம் பேசினார் என அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

அவர்கள் கருத்துப் படிபார்த்தால் தமிழ் பற்றாளர்களான வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் பேசமல் இந்தியத் தேசியம் பேசியதையும் மாபெரும் தவறாகவே கருதவேண்டும். உண்மையில் அப்படி ஒரு குற்றச் சாட்டை இன்றைய காலத்தில் இருந்து கொண்டு அவர்களின் மேல் சுமத்த முடியாது. செப்பு மொழி பதினெட்டு இருந்தால் சிந்தனை எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்?! என்று விழித்துக் கொண்ட தமிழன் கேட்கும் கேள்விக்கு நாம் பாரதியைப் பொறுப்பாக்க முடியாது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விரட்ட அனைத்து மக்களையும் ஒன்று திரட்டும் நோக்கோடு போராடிய காலத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட இந்திய உணர்வை நாம் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பின் குரலாக இந்தியத் தேசியம் இல்லை. அதுவே தேசிய இனங்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஏகாதிபத்திய வடிவமாகவே மாறியுள்ளது.

அதைப்போலவே வடவர்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள திராவிடம் என்ற சொல்லை பெரியார் அண்ணா போன்றவர்கள் பயன் படுத்தினார்கள். 1925 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறிய தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் சமூக விடிவுக்காக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அன்றைய காலத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்காக தென் இந்திய நலவுரிமைச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இயங்கிவந்து. ‘ஜஸ்டிஸ்’ (The Justice) என்ற ஆங்கில நாளிதழை வெளியிட்டு வந்ததால் ‘ஜஸ்டிஸ் பார்டி’ (தமிழில் நீதிக் கட்சி) என அழைக்கப் பட்டது. 1938 ஆம் ஆண்டு பெரியார் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் தனது சுயமரியாதை இயக்கத்தை நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இவ்வாறுதான் திராவிட இயக்கம் உருப்பெற்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு வலுவான ஆயுதமாகவே பெரியார் அண்ணா போன்றவர்கள் திராவிடத்தை உயர்த்திப் பிடித்தார்கள் தமிழ் நாட்டுடன் ஆந்திராவின் பெரும் பகுதியும், கன்னடம் கேரளம் அகியவற்றின் சில பகுதிகளுமாகச் சேர்ந்து சென்னைத் தலைமாகாணம் என அழைக்கப் பட்டது. அதையேதான் பெரியார் திராவிட நாடு என்றார்.

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகி சென்னைத் தலைமாகாணத்திலிருந்து ஆந்திரம், கன்னடம், கேரளம் போன்றவைகள் வெளியேறியவுடன் தனித்து நின்ற தமிழ்ப் பகுதிகளுக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பெரியார் கோரிக்கை விடுக்கிறார். அது வரைக்கும் திராவிட நாடு கோரிய பெரியார் அன்றிலிருந்து அதைத் தூக்கிப் போட்டு விட்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். இறுதிவரைக்கும் அதிலிருந்து அவர் விலகவில்லை.

பெரியாரை விட்டு அண்ணா வெளியேறிய பின் அண்ண முன்வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கை என்பது வேறு. தமிழ் நாடு டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடையே வேண்டும். அதைப்போலவே ஆந்திரம் கன்னடம், கேரளம் போன்றவைகளும் விடுதலையடையவேண்டும் இவை நான்கும் சேர்ந்து தங்களுக்குள் ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இதைத்தான் அண்ணா திராவிட நாடு என்றார். அண்ணாவின் திராவிட நாட்டிற்குள் தமிழ் நாடு தனது இருப்பை இழக்கவில்லை நான்கு தேசியங்களுக்கள் அதுவும் ஒரு தேசியமாக, டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தேசியமாக இருப்பதை மறுக்க முடியாது.

இந்தியத் தேசியம் பேசிய சில தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தை இந்தியத் தேசியத்திற்குள் அடகு வைத்தது போல் பெரியாரோ அண்ணாவோ தமிழ்த் தேசியத்தை திராவிடத்திற்குள் அடகு வைக்க வில்லை.

1956 ஆம் ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சர் நேரு அவர்களால் தட்சிணப் பிரதேசம் என்றொரு திட்டம் கொண்டு வரப் பட்டது. தமிழ் நாடு மற்று கன்னடம் கேரளம் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு பிரதேசமாக மாற்றுவதுதான் நேருவின் திட்டம். மேலோட்டமாகப் பார்த்தால் பெரியார் அண்ணா போன்றவர்கள் முன்வைத்த திராவிட நாடு போன்றே இதுவும் தோற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு பெரியார் அண்ணா போன்றவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப் கிளம்புகிறது. தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்களுக்கு தற்கொலைக்குச் சமம் என பெரியார் வெகுண்டார் பெருமளவில் போராட்டம் வெடித்தது. இறுதியில் திட்டம் கைவிடப் பட்டது. உண்மையில் தமிழ் நாட்டுடன் ஆந்திரம் கேரளம் போன்ற பகுதிகளை இணைக்கும் ஒன்றுதான் திராவிடம் என்றால் பெரியரோ அண்ணாவோ இதை எதிர்த்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. தட்சிணப் பிரேதேசத்தில் தமிழ்த் தேசியம் தன்னுடைய இருப்பை இழக்கிறது. திராவிட நாட்டில் தமிழ் நாடும் ஒரு தேசமாக விளங்குகிறது. எனவே பெரியாரோ அண்ணாவோ திராவிடம் பேசி தமிழர்களை ஏய்த்தனர் என்ற குற்றச் சாட்டில் உண்மை இல்லை. இருப்பினும் திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் தேவையால் காலவதியாகிவிட்டது. ஆம் பெரியாராலேயே கைவிடப் பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம். பேராசிரியர் சுபவீ அவர்கள் குறிப்பிடுவதைப் போல் திராவிடத் தேசியம் மறைந்து தமிழ்த் தேசியம் முகிழ்ந்தது வளர்ச்சியை நோக்கிய பாதையே! ஈழத்தின் எழுச்சியுடன் இன்று அது வீறு கொண்டு நிற்கிறது.

எனவே திராவிடம் என்பது தமிழர்களைக் குறிக்கும் வடசொல்லேயன்றி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழரோடு சேர்த்துக் குறிக்கும் சொல் அல்ல. திரிபுற்ற அந்தச் சொல்லை பயன் படுத்தாமல் தமிழ் தமிழர் என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது.

சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்தவர்கள் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதை விட அதை அமைத்தவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுவதுதானே தமிழர்களுக்குச் சிறப்பானது.

இடைப் பட்ட காலத்தில் என் மனதில் உருவாகிய திராவிடம் என்ற கோபுரமும் சாய்ந்து விட்டது. ஆனால் பெரியார் என்ற கோபுரம் சாயவில்லை இன்றும் என் மனதில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

14. தமிழ்த் தேசியத்திலும் அடிப்படைவாதம்

தமிழ் தமிழ் என்று உச்சரிக்கும் நீங்கள் இப்படி உணவருந்தலாமா? நான் உணவருந்துவதைப் பார்த்த நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கேட்டார். காரணம் என்னுடன் கூட இருந்தவர்கள் கையால் உணவருந்திக் கொண்டிருந்தபோது நான் கத்தியையும் முள்ளுக் கரண்டியையும் பாவித்து இயல்பாக உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்படிச் சாப்பிடுவதுதான் நாகரிகம் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. எனக்கு அது பிடித்திருப்பதால் பொதுவாகவே நான் அப்படிச் சாப்பிடுவதுதான் வழக்கம். இருப்பினும் அதனை தமிழுடன் தொடர்பு படுத்தி கேட்டவரின் கருத்தில் துளியும் உடன் பாடில்லை. இது போன்ற பல கேள்விகள் என்னிடம் கேட்கப் பட்டிருக்கின்றன.

தமிழனுக்கு மீசைதானே அழகு அதை ஏன் மழித்து விட்டுச் செல்கிறாய் என்பார் ஒருவர். புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் நாகரிக உடைகளையும் அதிலும் குறிப்பாக பொட்டு வைப்பதை அவர்கள் தவிர்ப்பதையும் கூந்தலை குட்டையாக வெட்டி அழகு படுத்துவதையும் தமிழர்களுக்கு ஏற்பட்ட பெரும் குறையாக வருணிப்பார் இன்னெருவர்.

நாகரிகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மையுடையது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அந்த நாகரிக மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அன்றியும் அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? இன்று தங்களின் தாய் மொழியை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டிருக்கும் ஆங்கிலேயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் அணிந்த உடைகளையா தற்போதும் அணிகிறார்கள்?

பண்பாடு என்பது வேறு மரபுப் பழக்கவழக்கங்கள் என்பது வேறு. சேலை, தாலி, பொட்டு போன்றவைகள் உண்மையாகவே தமிழர்களின் மரபுகளா என்பதில் நம்மைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உண்டு. அப்படியே அவைகள் தமிழர்களின் மரபுகளாக இருப்பினும் சேலை அணிவதையும் தாலி கட்டுவதையும் பொட்டு வைத்து பூ முடிப்பதையும் நாம் பண்பாடாக வகைப் படுத்த முடியாது. அப்படியானால் தமிழ்ப் பண்பாடுகள் எவை? தமிழ் இலக்கியங்களே அவற்றை தெளிவுற விளக்குகின்றன. விருந்தோம்பல், இனியவை கூறல் இவைகள்தாம் பண்பாடுகள். இவை தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவையானவை. பண்பாடு என்பது பகுத்தறிவின் பாற்பட்டது. பகுத்தறிவுக்கு உடன்படாத எதுவும் பண்பாடு அல்ல.

கால மாற்றம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் தேவையானது. மொழி என்பது கடவுளோ மதமோ அல்ல. வெறும் சொற்களின் கூட்டமும் அல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வளர்த்தெடுக்கப் படவேண்டியது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே

என நன்னூல் எனும் இலக்கண நூலை எழுதிய பழந்தமிழ்ப் புலவரான பவாணந்தி முனிவரே மாற்றங்களுக்கு இடமளித்து கொடுக்கவில்லையா? தமிழ் மொழி இவ்வளவு காலம் நீடித்து நிலைத்து நிற்கிறதென்றால் அது பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டதாலயே! எடுத்துக் காட்டாக தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தந்தை பெரியாரால் கொண்டுவரப் பட்டதாலேயே கணினியில் அதனைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. தொல்காப்பியத்தில் சொல்லப் பட்ட இலக்கண வடிவங்களுக்குள் அடக்க முடியாமல் புதுப் புதுப்புது யாப்பு வடிவங்கள் பின்னாளில் தோன்;றியதாலயே அதனை விளக்க யாப்பெருங்கலம் போன்ற இலக்கண நூல்களை படைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழ் இலக்கணங்கள் மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் சந்தித்தே வந்திருக்கின்றன. அந்த மாற்றங்களால் தமிழ் செழித்திருக்கின்றதே தவிர குன்றிப் போய்விடவில்லை. அதே நேரம் தமிழில் ஏற்பட்ட ஏல்லா மாற்றங்களும் அதற்கு நன்மையை ஏற்படுத்தி விடவில்லை.

குறிப்பாக மணிப்பிரவாள நடை என்ற பெயரில் தமழிழுடன் வட மொழியைப் பயன்படுத்தும் பழக்கம் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கம் பெறலாயிற்று. மணியும் பவளமும் சேர்த்துக் கோர்த்தது போல் தமிழையும் வடமொழியையும் சேர்த்துக் கோர்த்து அந்த நடை தொடங்கியது. அதிலும் தமிழைப் பார்க்கிலும் வடமொழியின் சொற்களே அதிகமாகக் காணப்பட்டன. இதனால் அழகான தமிழ்ச் சொற்கள் புறந்தள்ளப் பட்டு வாயில் நுழைய முடியாத வடமொழிச் சொற்கள் கலந்தன. தமிழின் இனிமை இதனால் கெட்டதேயன்றி வளம் பெறவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டது.

1916 ஆம் ஆண்டு வடமொழியை முற்றாக தமிழிலிருந்து நீக்கும் பொருட்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் என்ற ஓர் அமைப்பையே தோற்றுவித்தார். அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ் இனிமையும் எளிமையும் கலந்து புத்துணர்வு பெற்றது. தமிழ் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் அதனிலிருந்து பெறுவதுதான் சிறந்தது.

எடுத்துக் காட்டாக சங்க காலத்தில் உண என்ற சொல் பின்னர் நாயன்மார் காலத்தில் ஊன் என்றாகி தற்போது உணவு என்று மாற்றம் பெற்றுள்ளது. இது போன்று பல்லாயிரக் கணக்கான சொற்கள் மிக அழகாக மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் மணிப்பிரவாள காலத்தில் தமிழுடன் கலந்த உணவைக் குறிக்கும் சொற்களான போஷனம், ஆகாரம் போன்ற வடமொழிச் சொற்கள் தமிழனுக்குத் தேவையில்லை. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கி தன்னை பூர்த்திசெய்து கொள்ளும் தேவை தமிழுக்கு ஒரு போதும் இல்லை.

தற்போது ஏற்பட்டு வரும் தமிங்கிலமும் முற்றாகப் புறக்கணிக்கப் படவேண்டும். மொழிக் கலப்பு என்பது மொழிச் சிதைவிற்கும் பிற மொழியின் ஆதிக்கத்திற்கும்தான் வழிவகுக்குமே தவிர நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. தமிழ் பண்பாடு என்ற பெயரில் மரபு வழி மடமைகளைக் கட்டிக் காப்பதை விட இயன்ற வரை தனித் தமிழை வளத்தெடுத்து அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதே சிறந்தது.

இலக்கண இலக்கியங்களே மாற்றங்களைச் சந்தித்திருக்கும்போது மரபுகளில் மாற்றங்கள் வரக்கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் அடிப்படைவாதம் பேசுபவர்கள் பலர் புலத்தில் இருகிறார்கள் ஆனால் அவர்கள் தமிழில் பேசமாட்டார்கள் ஆனால் எடுத்ததிற்கெல்லாம் எங்களுடைய தமிழ் கலாச்சாரம் என்று புலம்புவார்கள் ஆனால் அது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரமாக இருக்கும்.சிலர் தமிழ் பெயர் என்று புலம்புவார்கள் ஆனால் அது முழுக்க முழுக்க வட இந்திய சம்ஸ்கிருத பெயராக இருக்கும் கேட்டால் தமிழ் பெயர் என்பார்கள்.தமிழ் பெயர் இல்லாம தமிழிற்கு உதவிய தமிழ் தேசியதிற்கு உயிர் துறந்தோர் பலர் உண்டு.உங்கள் ஆக்கதிற்கு நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி புத்தன்

நாங்கள் தனித்தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று நக்கலடிப்பார்கள். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.

ஈழத்தில் பட்டிப்பளை ஆற்றை கல்லோயா என்றும், மணலாற்றை வெலி ஓயா என்றும் ஏன் மாற்றுகிறது சிங்களம். நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?இவ்வளவு ஏன் இலங்கைத் தீவின் கடைசி மன்னன் கண்ணுச்சாமி என்ற தமிழன் அவனையே சிறி விக்கிரமராஜசிங்கா என்று மாற்றி விட்டார்கள். நாம் கூடவே 'ன்' சேர்த்து சிறி விக்கிரமராஜசிங்கன் என்று கூறிவருகிறோம்

Posted

சேலை உடுத்திக்கிட்டு தமிங்கிலம் பேசும்தமிழ் பெண்களைவிட ஜீன்ஸ் போட்டுகிட்டு சுத்த தமிழ்பேசும்பெண்கள் பரவாயில்லேன்னு சொல்ல வாறிங்க

அப்படித்தானே இளங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உது சாய்ந்த கோபுரமா இல்ல கவுண்ட கோபுரமா.. ஏனுன்னா.. ஒரு பக்கம் மரபை மாத்தனும் என்றீங்க இன்னொரு பக்கம் மணலாறு யாழ்ப்பாணம் என்று மரபை தூக்கிப்பிடிக்கிறீங்க. உங்களைப் போலதானே மகிந்த சிந்திக்கிறார்.. ஏன் மரபைக் காக்கனும்.. நாவற்குழியை.. மகிந்தபுர என்று மாத்தினா என்ன. அது முற்போக்குத்தானே என்று சிந்திக்கிறாராம்..! நிமிர்ந்திருந்த கோபுரத்தை நீங்க சாயுங்கோ.. மகிந்த கவுட்டு விடுவார்..! எல்லாம் அறிவு மித்தின செயல். :)

ஓசிப்பேப்பரில..சா ஒரு பேப்பரில வாரா வாரம் வாசகரட்ட திட்டு வாங்கியும் திருந்திறாப் போல இல்ல...! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐயா நெடுக்கு!

மரபு மாற்றம் என்பது வேறு பிற மொழி, இன ஆதிக்கம் என்பது வேறு.

தங்களுக்கு புரியாவிட்டால் நானா பொறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா நெடுக்கு!

மரபு மாற்றம் என்பது வேறு பிற மொழி, இன ஆதிக்கம் என்பது வேறு.

தங்களுக்கு புரியாவிட்டால் நானா பொறுப்பு?

ஓஓ... மகிந்த புர என்றதை பிறமொழி திணிப்பு.. அப்ப மகிந்த புரம் என்று மரபு மாற்றம் செய்தால் வசதியா இருக்குமோ..???!

ஏன் மரபை மாற்றாமல் புதியவற்றை நிறுவ உங்களுக்கு கஸ்டமா இருக்கோ...???! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

15. தீபாவளி

தீபாவளி வெறும் சமய விழா மட்டுமல்ல ஓர் இனத்தை இழிவு படுத்தும் விழா!

முன்னொரு காலத்தில், எந்தக் காலத்தில் என்று கேட்காதீர்கள் கி.மு. என்றோ கி.பி. என்றோ எதுவும் இல்லாத ஒரு விசித்திரமான காலத்தில் இரணியாட்சதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பூமியைப் பாயாய்ச் சுருட்டி….. பூமிதான் உருண்டை வடிவமாய்ச்சே அதை எப்படி பாயாய் சுருட்ட முடியும் என்று கேட்காதீர்கள். அவன் ஏதோ சுருட்டிவிட்டான். சுருட்டிய பூமியை கடலுக்கு அடியில் கொண்டுபோய் ஒளித்து வைத்தான். பூமியில் கால் பகுதி நிலம் முக்கால் பகுதி நீர் இந்தப் புதுக் கடல் எங்கிருந்து வந்தது என்று கேட்காதீர்கள்.

உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அசுரனைக் கொன்று பூமியை மூக்கின் மேலே வைத்து துக்கிக் கொண்டு வந்தார். அவர் முக்கின் மேலே வைத்து துக்கிக் கொண்டு வருவதற்கு பூமி என்ன முக்குத்தியா என்று கேட்காதீர்கள். உடனே தன்னைக் காப்பற்றிய பன்றி மேல் பூமிக்குக் காதல், விவகாரம் முற்றி அவர்களுக்கு பிள்ளையும் பிறந்து விட்டது. அவன்தான் நரகாசுரன். மகாவிஷ்ணுதான் தேவமகா குலத்தில் தோன்றிய புண்ணியவான் ஆயிற்றே அவருக்குப் பிறந்த நரகாசுரன் எப்படி அசுரன் ஆனான் என்று கேட்காதீர்கள். நரகாசுரன் கடும் தவம் இயற்றி தனது தாயைத் தவிர மற்ற எவரும் தன்னைக் கொல்ல முடியாது என்றொரு வரத்தை பிரம்மாவிடமிருந்து வாங்கி விட்டான். ஆதன் பின் அவன் தீய செயல்களின் ஈடுபடத் தொடங்கினான்;. அது என்ன தீய செயல்கள்?!

பிரம்மாவைப் போல் பரமசிவன் மனைவி பார்வதிமேல் ஆசைப் படவில்லை, இராமனைப் போல் தவம் செய்து கொண்டிருந்த சூத்திரனின் தலையை வெட்டவில்லை, இந்திரனைப்போல் பிறன் மனையாளை மயக்கி உறவு கொள்ளவில்லை அவன் செய்த தீங்கு இந்திரனையும் அவன் கூட்டத்தையும் பிடித்து சிறையில் அடைத்ததுதான். அப்போதும் அவன் இந்திரனின் மனைவி சசிதேவியையோ அல்லது பிற தேவ குலப் பெண்களின் மீதோ கை வைக்க வில்லை அங்கு அவன் தேவர் கூட்டத்தைப் போல் அல்லாது கண்ணியமாக நடந்து கொண்டதால்தான் அவனை அசுரர் கூட்டத்தில் சேர்த்தனரோ? என்னவோ

நரகாசுரன் செய்ததில் என்ன தவறு? நரகாசுரன் போன்ற வீரர்கள் இந்திரனைப் போன்ற கோழைகளை அடக்கியாள்வது அவாள்களின் சத்திரிய தர்மம்தானே! ஆனால் பெருந்தெய்வங்களான விஷ்ணுவும் சிவனும் இந்திரனைப் போன்ற புல்லர்களைக் காப்பாற்ற வீரர்களான அசுரர்களை அழித்தார்கள். நரகாசுரனும் இறுதியில் அழிக்கப்பட்டான் எப்படி? அவன் பெற்ற வரத்தின் படி அவனது தாய் பூமாதேவி கண்ணனின் மனைவி சத்தியபாமாவாக அவதரித்தபோது சத்தியபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரன் இறந்த நாளே தீபாவாளி அதை எல்லோரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என புராணப் புழுகர்கள் கதை கட்டிவிட்டனர்.

அறிவுக்கு பொருத்தமற்ற இந்தக் கதை ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் நரகாசுரன் யார்? புரணங்களில் அசுரர்கள் ராட்சதர்கள் அரக்கர்கள் எனப் பட்டம் கட்டிவிட்டவர்கள் வேறு யாருமில்லை பண்பாட்டுப் படை எடுப்பாளர்களான ஆரியர்களை எதிர் கொண்ட தமிழ் மன்னர்கள்தாம் தமிழ்க் கடல் மறைமலையடிகள் தனது வோளார் நாகரிகம் எனும் நூலில் வேள்வித்தியில் உயிர்களைப் பலியிட்டு வெறியாட்டம் ஆடிய ஆரியர்களை எதிர்த்த இராவணன் நரகாசுரன் போன்றவர்களே அரக்கர்களாகவும் இராட்சதர்களாகவும் சித்தரிக்கப் பட்டு இழிவு படுத்தப் பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், சோம சுந்தரப் பாரதியார் (சுப்பிரமணிய பாரதியார் அல்ல) போன்ற பல தமிழறிஞர்களும் தீபாவளி தமிழர்களை இழிவு படுத்தும் விழா எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தென் பகுதியில் வாழ்ந்தவர்களையே இராமாயணம் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் சித்தரித்திருக்கின்றது என்பதை தமிழரல்லாத விவேகானந்தரே குறிப்பிட்டுள்ளார். அப்போது ஈழத்தில் சிங்களமோ தென்னாட்டில் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளே தோன்றியிருக்கவில்லை அப்படியானால் அவர்கள் யார்? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்தானே

சமய விழாக்களை கொண்டாடுவது அவரவர் உரிமை இதை எதிர்ப்பதுதான் பகுத்தறிவா என பலர் நினைக்கலாம். உண்மைதான் சமய விழாக்களில் நம்மைப் போன்றவர்களுக் நம்பிக்கையற்று இருக்கலாம் அதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தீபாவளி வெறும் சமய விழா மட்டுமல்ல ஓர் இனத்தை இழிவு படுத்தும் விழா!

சற்று எண்ணிப் பாருங்கள் உலகில் எந்த இனமாவது தன் இனத்துக்காரன் அழிக்கப் பட்ட நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடக் கேள்விப் பட்டு இருக்கின்றோமா? ஆனால் நம்மவர்களோ நரகாசுரன் எனும் தமிழன் இறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பலர் ஒன்று கூடி மகிழ்வதற்கு விழா தேவை என்றால் நமக்கு தைப்போங்கல் இருக்கிறது. இயற்கையோடு இயைந்த விழா. வேறு திருநாட்கள் தேவையாயின் நாட்டிற்காவும் மொழிக்காகவும் தங்களை ஈர்ந்த பெருமக்களின் பிறந்த நாட்களை நாம் விழாவாகக் கொண்டாடலாம்.

தமிழனை இழிவு செய்யும் இந்த விழா நமக்கு எதற்கு?!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.