Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது

Featured Replies

பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது

 
பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது
 

பளையில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது பற்றைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்றுச் சனிக்கிழமை, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://uthayandaily.com/story/5104.html

  • தொடங்கியவர்
பளையில் பொலிஸார் மீது துப்பாக்கிசூடு: இளைஞன் கைது
 

image_d91fac0529.jpg-எஸ்.நிதர்ஷன்

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் இளைஞன், குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நேற்று இரவு  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் (வயது 29) என்ற இளைஞனே, அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி அதிகாலை, பளைப்பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதுடன் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஆயுதத்தின் ஒரு பகுதியை கைப்பற்றியிருந்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பளையில்-பொலிஸார்-மீது-துப்பாக்கிசூடு---இளைஞன்-கைது/71-197924

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை வாசித்தறிந்து அவற்றை உண்மைதான் என நம்பி உறுதிகொள்ளும் காலம் இலங்கையில் இறந்து இன்று எட்டு வருடங்களாகிறது. :( 

இந்த நாடகத்தை நம்ப தமிழரில் ஒருசிலர் மட்டுமே உள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் (வயது 29) என்பவரை பிடிக்க வேண்டும் என்றால் பிடிப்பதற்கு பளையில் பற்றைக்குள் இருந்து சுட்டார் என ஒரு நாடகத்தை ஏன் ஆட வேண்டும்??

  • தொடங்கியவர்

பளை துப்­பாக்­கிச் சூடு: முன்­னாள் போராளி கைதா­கிப் பிணை­யில் விடுவிப்பு

 
பளை துப்­பாக்­கிச் சூடு:  முன்­னாள் போராளி கைதா­கிப் பிணை­யில் விடுவிப்பு
 

பளை­யில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில், கொழும்புச் சிறப்புப் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ரால் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் சனிக் கிழமை இரவு கைது செய்­யப்­பட்ட முன்­னாள் போராளி, நேற்று மாலை நீதி­மன்­றால் பிணை­யில் விடு­விக்­கப்­பட் டார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பெரிய பரந்­த­னைச் சேர்ந்த கிரு­பா­னந்­த­மூர்த்தி விஜ­ய­க­ணே­சன் (வயது -– 32) என்­ப­வரே இவ்­வாறு கைதா­கிப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

கடந்த மே மாதம் 19ஆம் திகதி, அதி­காலை 12.15 மணி­ய­ள­வில் பளைப் பகு­தி­யில் வைத்து பொலிஸ் சுற்­றுக் காவல் அணியை நோக்கி ரி-56 துப்­பாக்­கி­யைப் பயன்­ப­டுத்தி துப்­பாக்கி வேட்­டு­கள் தீர்க்­கப்­பட்­டன என்று பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். இந்த துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் பொலி­ஸா­ருக்கோ, பொலிஸ் வாக­னத்­துக்கோ எந்­த­வொரு சேத­மும் ஏற்­ப­ட­வில்லை.

சம்­ப­வத்­தைத் தொடர்ந்து இரா­ணு­வத்­தி­னர் குவிக்­கப்­பட்டு அந்­தப் பகு­தி­யில் தீவிர தேடு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது ரி-56 துப்­பாக்­கி­யின் சிறிய பாகம் மீட்­கப்­பட்­டி­ருந்­தது.

விசா­ர­ணை­களை பல்­வேறு பொலிஸ் குழுக்­க­ளும் ஆரம்­பித்­தி­ருந்­தன. சம்­ப­வம் நடை­பெற்ற பகு­திக்கு அண்­மை­யா­க­வுள்ள தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­க­ளின் கோபு­ரங்­க­ளில், துப்­பாக்­கிச் சூடு நடந்த நேரத்­துக்கு அண்­மித்து உள்­வந்த மற்­றும் வெளிச் சென்ற அழைப்­புக்­க­ளின் தொலை­பேசி இலக்­கங்­கள் ஆரா­யப்­பட்­டன.

அத­ன­டிப்­ப­டை­யில் சந்­தே­க­ந­பர் ஒரு­வரை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் இனம் கண்­டுள்­ள­னர். அவரை யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் உரும்­பி­ராய் பிர­தே­சத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் சனிக் கிழமை இரவு அவர்­கள் கைது செய்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர், வவு­னி­யா­வில் உள்ள பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வின் அலு­வ­ல­கத்­தில் வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். விசா­ர­ணை­யின் முடி­வில், கிளி­நொச்சி நீதி­வான் முன்­னி­லை­யில் சந்­தே­க­ந­பரை அவர்­கள் நேற்று முற்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அவ­ரைப் பிணை­யில் செல்ல நீதி­வான் அனு­மதி வழங்­கி­னார்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் கடற்­பு­லி­க­ளில் இருந்­த­வர் என்­றும், போர் முடி­வின் பின்­னர் சீரு­டை­யி­ன­ரு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­தா­க­வும், பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

http://uthayandaily.com/story/5187.html

சிங்களப் போலீசால் இப்படியும் விசாரித்து தமிழரை அடையாளம் கண்டு கைது செய்ய முடிகிறதோ?

2 hours ago, நவீனன் said:

விசா­ர­ணை­களை பல்­வேறு பொலிஸ் குழுக்­க­ளும் ஆரம்­பித்­தி­ருந்­தன. சம்­ப­வம் நடை­பெற்ற பகு­திக்கு அண்­மை­யா­க­வுள்ள தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­க­ளின் கோபு­ரங்­க­ளில், துப்­பாக்­கிச் சூடு நடந்த நேரத்­துக்கு அண்­மித்து உள்­வந்த மற்­றும் வெளிச் சென்ற அழைப்­புக்­க­ளின் தொலை­பேசி இலக்­கங்­கள் ஆரா­யப்­பட்­டன.

அத­ன­டிப்­ப­டை­யில் சந்­தே­க­ந­பர் ஒரு­வரை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் இனம் கண்­டுள்­ள­னர். அவரை யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் உரும்­பி­ராய் பிர­தே­சத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் சனிக் கிழமை இரவு அவர்­கள் கைது செய்­த­னர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.