Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா கலைவாணி பேச்சு

 

  • Replies 3k
  • Views 276.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டித்து, கடந்த ஆறு மாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்து, கடந்த ஆறு மாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்குக் கடந்த ஆறுமாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை எனும் செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தேக்கநிலையில் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தைத் தராது பிடித்தம் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குவது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மைச் செயலாகும்.

தமிழகத்திலுள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை நேர வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டு சுழற்சி முறையிலும் ஏறத்தாழ 4,000 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் இவர்களுக்கான பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மாதாமாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக்குழு ரூ 50,000 அளவுக்குக் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த கடந்த பத்தாண்டுகளில் மூன்றுமுறை பரிந்துரை செய்தும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையிலும் பலமுறை ஊதிய உயர்வுக்கு கோரிக்கை வைக்கப்பாட்டும் இதுவரை அவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்துவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மிகக்குறைவாக வழங்கப்பட்டு வந்த ரூ.15,000 ஊதியமும் கொரோனோ நோய்த்தொற்று நிலவும் இந்த அசாதாராணக் காலகட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்படாததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாததால் இப்பேரிடர் காலத்தில் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் வறுமையில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வேறு வாழ்வாதாரம் ஏதும் இல்லாத காரணத்தினால் பொருளாதாரத் தட்டுப்பாட்டால் கடும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரைக்குமான 6 மாத காலத்திற்கு மட்டுமே இந்த 2020-21 கல்வியாண்டில் பணி ஒப்பந்தம் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது கௌரவ விரிவுரையாளர்களுக்கு மேலும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்புகள் நடைபெறாதபோதும் கல்லூரிகளில் வழமையான மற்ற அனைத்துப் பணிகளையும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர். எனவே, சிந்தனை உளி கொண்டு செதுக்கி அறிவார்ந்த திறன்மிக்கத் தலைமுறையை உருவாக்கித் தேசத்தின் வருங்காலத்தைத் தீர்மானிப்பவர்களாகத் திகழக்கூடிய அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்த உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இத்தோடு, 2020-21ஆம் கல்விஆண்டுக்கான ஒப்பந்தத்தை உடனடியாக நீட்டித்து, விரைவாக சிறப்பு தேர்வு நடத்தி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை கோருகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-tn-govt-for-swift-action-on-govt-college-guest-lecturers-salary-issue/

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் நிவாரண நிதியில் ஊழல் செய்ததா பாஜக?

 

  • கருத்துக்கள உறவுகள்

தலித் மக்களுக்கு போலியாக போராடும் பெரியார் இயக்கம் ? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வீர வணக்க முறையில்  வழிபாடு

 

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தால் ஏன் வீழ்ந்தோம்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய பகுதியில் நாம் தமிழர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு சரி பாதி இட ஒதுக்கீடு சரித்திர சாதனை மலையாள ஊடகம் புகழாரம்.. 

பெண்களுக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் தான் இந்த பதிவை விரும்பாமாட்டார்கள். எப்ப ஆணையும் பெண்ணையும் தலைவர் மாதிரி சமமாக எண்ணுகின்றார்களோ அன்றுதான் விடிவு எமக்கு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி சொல்லும் வளர்ச்சி இதுதானா? சீமான் தங்கை அனீஸ்பாத்திமா சரமாரிக்கேள்வி |

 

  • கருத்துக்கள உறவுகள்

திமுக பரிதாபங்கள்😂

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிக்காக போராடிய நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு ஆன்ட்டி பரிதாபங்கள் - 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் கோரி மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தனது அதிகார எல்லையைத் தாண்டி மத்திய அரசுக்கு நேரிடையாகக் கடிதமெழுதி அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அபகரிக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிற அளவுக்கு அதிகாரம் தந்தது யார்? இதுவெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? தமிழக அரசு இதுகுறித்து எவ்வித எதிர்வினையுமாற்றாது ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? என நீளும் எவ்விதக் கேள்விகளுக்கும் விடையில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் தந்தாலும் நிதிச்சுமையை மாநில அரசு அரசுதான் கவனித்துக்கொள்ள வேண்டும் எனக்கூறும் மத்திய அரசு, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இதுவரை எவ்வித உறுதிப்பாடும் தராத நிலையில் துணைவேந்தர் சூரப்பா தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து மத்திய அரசிற்குக் கடிதமெழுதியிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய அதிகார அத்துமீறலாகும். மாநில அரசின் நிதிப்பங்களிப்பு இல்லாமலேயே ஐந்தாண்டுகளுக்கு 1,500 கோடிவரை நிதித் திரட்டிக்கொள்ள முடியும் எனக்கூறி, மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தைக் கையகப்படுத்த துணைவேந்தர் துணைபோவது பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைத்து தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும். மாநிலத்தன்னாட்சியைத் தனது உயிலெனக் கொண்டிருந்த அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தையே மாநிலக்கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கையடக்கத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியைத் தமிழக அரசு இன்னும் வேடிக்கைப்பார்ப்பது வெட்கக்கேடானது.

தமிழகத்தின் தனித்துவமிக்க உயர்கல்வி அடையாளங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தைச் சிறப்பு அங்கீகாரத்தின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் அது தமிழ் இளையோர்க்கான வாய்ப்பை மொத்தமாகப் பறித்து வடநாட்டவர்களின் வருகைக்கு வாசல் திறந்துவிடும் அபாயமுள்ளது. ஆகவே, பல்கலைக்கழகத் துணைவேந்தரது நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து, அது அரசின் நிலைப்பாடு இல்லை என்பதைத் தெளிவுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-demands-tn-govt-to-save-anna-university-from-vice-chancellor-m-k-surappa/

  • கருத்துக்கள உறவுகள்

தலித் என்றதற்காக தரையில் உட்கார வைத்த ...

  • கருத்துக்கள உறவுகள்

லட்சாதிபதியான அதிமுக எம்எல்ஏ

 

  • கருத்துக்கள உறவுகள்

லெனின் தெரியுமா ? ஃபெடரல் தெரியுமா ? களவாணி கூட்டம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சிக்கு எதிராக புதிய தமிழ் தேசிய கட்சி துவக்கம் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் தமிழரகட்சி_சீமான்_குறித்து புதியதலைமுறை_கார்த்திகைசெல்வன்

 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றத்தில் செந்தமிழன் சீமானின் சிறப்பான பேச்சு | நடுவரே கண்ணீர் விட்டு அழுது விட்டார்

 

  • கருத்துக்கள உறவுகள்

Rajinikanth supports Naam tamilar katchi principle |Tamils only rule Tamilnadu|seeman rajinikanth

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.