Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்

Featured Replies

4 minutes ago, நவீனன் said:

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை

நல்ல தீர்ப்பு!

  • Replies 184
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வித்தியா கொலை – 
7 பேருக்குத் தூக்கு!!

 
வித்தியா கொலை –  7 பேருக்குத் தூக்கு!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

2 வது எதிரி – பூபாலசிங்கம்  ஜெயக்குமார்
3 வது எதிரி – பூபாலசிங்கம் தவக்குமார்
4 வது எதிரி – மகாலிங்கம் சசீந்திரன்
5 வது எதிரி – தில்லைநாதன் சந்திரகாசன்
6 வது எதிரி – சிவதேவன் துசாந்த்
8 வது எதிரி -ஜெயதரன் கோகிலன்
9 வது எதிரி – மகாலிங்கம் சசிக்குமார்

 

http://newuthayan.com/story/32513.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வித்தியா கொலை – 
7 பேருக்குத் தூக்கு!!

வித்தியா கொலை –  7 பேருக்குத் தூக்கு!!
 

குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் ஓலமிட்டு கதறி அழுகின்றனர்.

 

http://newuthayan.com

 

பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

வித்தியா கொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை – 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு

punkuduthivu-vithya

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள்  குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.

மூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின் விளக்கங்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது. சிறிலங்கா அதிபர் தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட வித்தியா குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாவை இழப்பீடாக எதிரிகள் ஒவ்வொருவரும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மரணதண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தீர்ப்பைக் கேட்டதும், குற்றவாளிகளின் உறவினர்கள் ஓலமிட்டு அழுதனர்.

http://www.puthinappalakai.net/2017/09/27/news/26289

  • தொடங்கியவர்

வித்தியாவுக்கும் நீதியில்லை எமக்கும் நீதியில்லை; குற்றவாளிகள் கதறல்!

 

வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் குற்றவாளிகளிடம் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக் குற்றத்தினை செய்யவில்லை என அவர்கள் அனைவரும் முற்றாக மறுத்தனர்.

நிரபராதிகளாகிய தாம் அ நியாயமாக தண்டிக்கப்பட்டுவிட்டதாக நீதிபதிகள் முன்னாலேயே கண்ணிர் மல்க தெரிவித்தனர்

https://news.ibctamil.com/ta/internal-affairs/vithya-case-judgement-4

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – ஏழு பேருக்கு மரணதண்டனை – மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் இழப்பீடு

vithya.jpg

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
 
மாணவி படுகொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டது.அதன் போது குறித்த வழக்கின் 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் மன்றினால் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்
 
வழக்கின் 2, 3 , 5, மற்றும் 6 ஆம் எதிரிகளை குற்றவாளியாக கண்ட தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தும் , 30 வருட சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் தலா 10 ஆயிரம் தண்டம் பணம் கட்ட வேண்டும் என்றும் தவறின் 4 மாத சிறை தண்டனையும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தவறின் 2 வருட சிறைத்தண்டனை விதித்து மன்று தீர்ப்பளித்தது.
 
அதேவேளை 4, 8 மற்றும் 9 ஆம் எதிரிகள் குற்றத்திற்கு உடந்தை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்கு மரண தண்டனையும், 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது. அத்துடன் தண்டப்பணமாக தலா 70 ஆயிரம் தண்டப்பணம் செலுத்த வேண்டும் தவறின் 7 மாத சிறை தண்டனை , மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் தவறின் 2 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/archives/42827

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீதிமன்ற சுற்றுப்புறத்தில் குழுமியுள்ள பொதுமக்கள்!! – பலத்த பாதுகாப்பு!!

 
நீதிமன்ற சுற்றுப்புறத்தில் குழுமியுள்ள பொதுமக்கள்!! – பலத்த பாதுகாப்பு!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

யாழ். நீதிமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

குற்றவாளிகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்ப்பதற்கான நீதிமன்றத்தைக் சூழவுள்ள பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் குழுமியுள்ளனர்.

 

http://newuthayan.com/story/32612.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரணதண்டனைக் குற்றவாளிகளின் மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழட்டும். அந்த மரணத்தை எண்ணி அவர்கள் அச்சப்படுவார்களே தவிர, மரணத்தின் வலியை அவர்கள் உணரமாட்டார்கள். அந்த வலியை அவர்கள் உணர வேண்டும். வித்தியா என்ற அந்த அபலைப் பெண் பட்ட வலியைவிடவும் ஆயிரம் மடங்கு அதிகமாக அனுபவிக்க வேண்டும். அவர்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் சிறிது சிறிதாக பலநாட்கள் வலியை உணர்ந்து இறுதியில் உயிர் பிரிய வேண்டும்.   
 

 

  • தொடங்கியவர்

இரண்டரை வருடம் நாம் பட்ட வேதனைக்கு என்ன தீர்வு? விடுதலையான நபரின் மனைவி!

கடந்த இரண்டு வருடங்களாக தமது குடும்பம் பட்ட வேதைனைக்கும் துன்பத்துக்கும் யார் உதவி செய்வார் என்று விடுதலையான நபரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய வித்தியா கொலைவழக்கு நீதிமன்றத் தீர்ப்பில் விடுதலையான இரண்டு நபர்களில், முதலாம் இலக்க சந்தேக நபர் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பூபாலசிங்கம் இந்திரகுமாரின் மனைவியே இந்தக் கேள்வியினை முன்வைத்துள்ளார்.

மேலும் தனது கணவர் கைதாகி சிறையில் இருந்த காலத்தில தனது குடும்பம் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

”மாணவி வித்தியா படுகொலை செய்யபட்ட சம்பவம் நடந்து, எனது கணவரைக் கைதுசெய்தபின் எங்கள் வீடு மற்றும் உடமைகளை அழித்தார்கள். எங்களது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் யாழ்ப்பாணம் நகரில் உறவினர் வீட்டிலேயே இதுவரை தங்கியிருந்தோம்.

அங்கு எமது வாழ்வாதாரத்தேவைகளுக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை. இதன்காரணமாக நானும் எனது பிள்ளைகளும் யாழ் கோட்டைப் பகுதியில்கச்சான் கடலை வியாபாரம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக எமது பிள்ளைகளுக்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுதும் யாழ் நீதிமன்றில் அந்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

இரண்டரை வருடங்களின்பின்னர் எனது கணவர் இன்று விடுதலையாகியுள்ளார். இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த சம்பவமாக இருந்தாலும் இரண்டரை வருடங்களும் எமது குடும்பம் சந்தித்த வேதனைகள் சொலில் அடங்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vithya-case-judgement-5

  • தொடங்கியவர்

வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி

 
 
வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன்.

இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார்.

வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் நன்றிகள். கடந்த இரு ஆண்டுகளாக வித்தியாவுக்காகக் குரல் கொடுத்த ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இரு கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவிகின்றேன். என்னைப் போன்று ஒரு தாயும் இனி அழக் கூடாது. வித்தியாவுக்கு நடந்த கொடுமை யாருக்கும் இனி நடக்கக் கூடாது. – என்று அவர் குறிப்பிட்டார்.

http://newuthayan.com/story/32638.html

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை இறுதித் தீர்ப்பின் போது விஜயகலா தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தது என்ன ?

 

 

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமாரைத் தப்பவைப்பதற்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த நடவடிக்கை குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இளஞ்செழியன் தனது 332 பக்க அறிக்கையை வாசிக்கும்போதே  விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்பவைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக தெரிவித்திருந்தார்.

குறித்த அறிக்கையில், சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருக்கும்போது, அங்குசென்ற விஜயகலா கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், குறித்த சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ விஜயகலா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இராஜாங்க அமைச்சரான விஜயகலாமகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்ப வைப்பதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் நீதிபதி இளஞ்செழியன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

யாழ்.புங்குடுதீவில் கடந்த 2015 மே 13ஆம் திகதி கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட “வித்தியா“ படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று நண்பகல் அறிவிக்கப்பட்டது. 

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும்  30 வருட கடூழிய சிறைதண்டனையும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வித்தியாவின் குடும்பத்துக்கு குற்றவாளிகள் தலா 10 இலட்சம் ரூபா வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

http://www.virakesari.lk/article/24984

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தூக்கு விதிக்கப்பட்ட 7 பேரும் போகம்பரை சிறைக்கு

 
தூக்கு விதிக்கப்பட்ட 7 பேரும் போகம்பரை சிறைக்கு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளையும் போகம்பரை சிறைக்குக்குக் கொண்டு செல்வதற்கான கட்டளையைத் தீர்ப்பாயம் வழங்கியது.

7 குற்றவாளிகளும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் போகம்பரை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பை யாழ்ப்பாணம் பொலிஸார் வழங்கவுள்ளனர்.

http://newuthayan.com/story/32705.html

வித்தியா கொலை வழக்கிற்கு கிடைத்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு: மகிழ்ச்சி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அங்கு அவை நிறைவேற்றப்படுபவை அல்ல. எனவே காலம் பூரா களி தின்று கொண்டு காலத்தை சிறையில் கழிக்க வேண்டியது தான். இதில் மக்களின் வரிப்பணம் வீணாக போனாலும் காலம் பூரா சிறையில் கிடந்து உழன்று சாக போனதை நினைக்க ஆனந்தமாக இருக்கு.

அல்லது கடைசி காலத்தில் இளமையையும் உடல் பலத்தையும் தொலைத்த பின் எவரும் துணைக்கு இல்லா காலத்தில் வெளியே வந்து (**** வட்டுக்குள் போன பின்) உழல வேண்டியதை நினைக்க சந்தோசமாக இருக்கு.

ஆயினும் ஆயினும் எத்தனை தண்டனை கொடுப்பினும் வித்தியாவுக்கு செய்த கொடூரத்தை எந்த தீர்ப்பும் ஆறுதல் படுத்த முடியாது.

பாலியல் வல்லுறவு அற்ற / பெண்களுக்கு முழு பாதுகாப்பு கொண்ட சமூகமாக (புலிகளின் காலத்தில் இருந்தது போன்ற) எம் சமூகம் மாறும் மட்டும் வித்தியாவின் மேல் புரிந்த கொடூரத்தின் வேர்கள் களையப்படாமலே தொடரும்

  • தொடங்கியவர்

போகம்பரை சிறைக்கு கொண்டு செல்லப்படும் குற்றவாளிகள்

 
 
போகம்பரை சிறைக்கு கொண்டு செல்லப்படும் குற்றவாளிகள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரும் கடும் பாதுகாப்புடன் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றவாளிகளை போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு தீர்ப்பாயம் கட்டளையிட்டிருந்தது. அதன்படி குற்றவாளிகள் சற்றுமுன்னர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளை கொண்டு செல்லும் அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

viber-image6-2-750x400.jpgviber-image7-1-750x400.jpgviber-image9-750x400.jpg

http://newuthayan.com/story/32716.html

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் மலையக மக்கள்

 

 

படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர்.

Local_News.jpg

கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து வழங்கிய  செய்தியை கேட்டு பூரிப்பு அடைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட நினைக்கும்  நபர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டதாகவும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிப்பதாகவும் மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/24993

  • தொடங்கியவர்

'' என்ட பிள்ளை வரப்போறதில்லை '' : கண்ணீருடன் வித்தியாவின் தாய் தெரிவிப்பு (காணொளி இணைப்பு )

 

 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் இறுதித்திர்ப்பு இன்று யாழ்.நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட போது வித்தியாவின் தாயார் நீதிமன்றில் மயங்கிவிழுந்துள்ளார்.

vithya-mother.jpg

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்ட்டதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்தா வித்தியாவின் தாயார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“ இன்று நீதி கொடுத்தால் போல என்ட பிள்ளை வரப்போறதில்லை. என்னத்ததான் கொடுத்தாலும் என்ட பிள்ளை வரப்போறதில்லை. 

 

இனி வரப்போற சமுதாயத்திற்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். எந்த வொரு தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது. என்னைப்போல் ஒருதாய் இருக்கக் கூடது. 

நீதிபதி ஐயா இளஞ்செழியன் உட்பட 3 நீதிபதிகளுக்கும் எமக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டதற்காக பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வாவுக்கும் அவர்களது குழுவினருக்கும் நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

கடந்த இரண்டரை வருடங்களாக நான் பட்டபாடும் எனக்காக பாடுபட்ட ஊடகங்களுக்கும்  ஏனைய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  மரண தண்டனை இன்று விதிக்கப்பட்டது.

இதன் படி, 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

22091771_10208227851928706_1193438954_n.

மேலும், வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திறந்த நீதிமன்றில் இருந்த வித்தியாவின் தாய் மயங்கி வீழ்ந்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/24987

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டணை விதித்து ட்ரயல் அற்பார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • தொடங்கியவர்

மேன்முறையீடு  செய்யப்படும் – குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி!!

 
மேன்முறையீடு செய்யப்படும் – குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் 2ஆம், 3ஆம், 6ஆம், 8ஆம் எதிரிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன.

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு இன்று தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டது. 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்து ஏனைய 7 பேரும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு தூக்குத் தண்டனை விதித்தது தீர்ப்பாயம்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மகிந்த ஜெயவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

 

http://newuthayan.com/story/32726.html

  • தொடங்கியவர்

வித்தியா வழக்கில் விடுதலையானவர் மீண்டும் கைது

 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

vithya-kaithi.jpg

வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட முதலாம் மற்றும் 7ஆம் இலக்க சந்தேகநபர்களில் முதலாம் இலக்க சந்தேக நபரே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க நபர், திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு வழக்கொன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அவர் விடுதலையான சிறிது நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் நீதிமன்றிலிருந்து, கடுமையான பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24999

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனை (முழுமையான விபரங்கள்)

 

 

 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

மாணவியைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் மற்றும் 02, 03, 04, 05, 06, 08 ஆம் இலக்க பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 குற்றவாளிகளுக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 02, 03, 05, 06, 08 ஆம் இலக்க குற்றவாளிகள் தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக நான்கு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 04, 09ஆம் இலக்க குற்றவாளிகள் 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவின் குடும்பத்தினருக்கு, குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை காரணமாக அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரச தரப்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இன்று காலை 8.20 தொடக்கம் 8.28 வரையான நேரத்திற்குள் நீதிபதிகள் மேல் நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தனர்.

நீதிபதி மா.இளஞ்செழியன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

நீதிபதி மா.இளஞ்செழியனின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதியிலும் நேற்றிரவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 8.31-க்கு எதிரிகள் 9 பேரும் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரத்தினம் தனது குழுவினருடன் காலை 9.50 அளவில் மன்றுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து காலை 10.05 க்கு தீர்பாயம் கூடியது.

தீர்ப்பாயத்தின் தலைவரான வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், எதிரிகளுக்கு எதிரான 41 குற்றச்சாட்டுக்களையும் வாசித்து அவை தொடர்பில் தமது விளகத்தையும் வழங்கியுள்ளார்.

2015 மே மாதம் 13 ஆம் திகதி மாணவி வித்தியா காலை 6 மணிக்கு பாடசாலைக்கு சென்ற போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் 53 சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியங்கள் மற்றும் தீர்ப்பு தொடர்பில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் இணங்குவதாக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவு, கூட்டு வன்புணர்வு , கொலை, கூட்டு எண்ணம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலைச் சம்பவத்தின் கதாநாயகனாக சுவிஸ் குமார் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரை கட்டிவைத்து மக்கள் தாக்குதல் நடத்திய போது, இரவு 11 மணியளவில் அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”நீங்கள் சசியின் சகோதரனா” என சுவிஸ் குமாரிடம் வினவியதும், பின்னர் அவரை விடுவிக்குமாறு கூறியதும் நல்ல விடயம் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நகைப்பாகக் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்து தன்னைக் காப்பாற்றியமை தொடர்பில் சுவிஸ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளமையையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறனுடன் சுவிஸ் குமார் சென்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் முன்னிலையில் ஆஜராகியதாகவும் பின்னர் பொலிஸாரின் துர்நடத்தையால் அவர் விடுவிக்கப்பட்டமையும் சாட்சியங்களூடாகத் தெரியவந்துள்ளதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமக்கு எதிரான மென்பொருள் பொறியியலாளரின் சாட்சியத்தை சுவிஸ் குமார் மறுதலிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் குமாரின் மனைவியின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தமையையும் நீதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வௌிக்கொணர்ந்த போது, 10 மாதம் இருண்டு கிடந்த வழக்கை வௌிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா எனவும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குயிண்டஸ் பெரேரா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே வழக்கின் இழுத்தடிப்பிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது, ஒவ்வொரு பிரதிவாதிகளும் தனித்தனியாக தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

 

http://newsfirst.lk/tamil/2017/09/வித்தியா-படுகொலை-சுவிஸ்/

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு

மயூரப்பிரியன்

 
 
 
 7
  •  
  •  
  •  
  •  
  •  

13.05.2015 –
காலை பாட­சா­லைக்கு சென்ற மாணவி வித்­தியா மாலை வரை வீடு திரும்­ப­வில்லை. இர­வி­ர­வாக உற­வி­னர்­கள் மாண­வியைத் தேடி­னார்­கள்.

14.05.2015. –
காலை­யி­லும் வித்­தி­யா­வின் சகோ­த­ரன் , வித்­தியா வளர்த்த åநாயை­யும் தன்னுடன் கூட்­டிக் கொண்டு ஊர­வர்­க­ளு­டன் சேர்ந்து தேடு­கின்­றார்­கள். வித்­தியா பாட­சாலை செல்­லும் பாதை­யில் உள்ள பாழ­டைந்த வீடொன்­றின் பின்­பு­ற­மாக, கைகள் கால்­கள் கட்­டப்­பட்டு வாய்க்­குள் துணி அடை­யப்­பட்ட நிலை­யில் வித்­தியா சட­ல­மாக மீட்­கப்­ப­டு­கின்­றாள்.

2-7-1.jpg

14.05.2015.
புங்குடுதீவு 9ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார் (வயது 40), பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் (வயது 34), பூபா­ல­ சிங்­கம் தவக்­கு­மார் (வயது 32) ஆகிய மூவ­ரும் கைது.

15.05.2015. – 
வாய்க்­குள் துணி அடைந்­த­மை­யால், மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­ட­தா­லும், தலை அடி­பட்­ட­தில் மூளை­யில் குரு­திக் கசிவு ஏற்­பட்­ட­தா­லும் மாணவி வித்­தியா உயி­ரி­ழந்­தார் என்று உடற் கூற்றுப் பரி­சோ­த­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. கூட்டு பாலி­யல் வன்புணர்வுக்கு உட் ப­டுத்­தப்­பட்­ட­மை­யும் உறுதி செய்­யப்­பட்­டது.

15.05.2015. –
வித்­தி­யா­வின் இறு­திக் கிரி­யை­கள் இடம்­பெற்­றன. புங்­கு­டு­தீ­வில் கடை­ய­டைப்பு . தீவ­கத் துக்கான போக்­கு­வ­ரத்­தும் இடை­நி­றுத்­தம்.

17.05.2015 –
வித்­தியா கொலை தொடர்­பில் மேலும் 5 பேர் கைது. சந்­தேக நபர்­களை தம்­மி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரி, குறி­காட்­டு­வான் பகு­தி­யில் உள்ள ஊர்­கா­வற்றுறை பொலிஸ் காவல ரணை முற்­று­கை­யிட்டு மக்­கள் இர­வி­ர­வா­கப் போராட்­டம். சில மணி நேரத்­தில் சந்­தே­க­ந­பர்­களை பொலி­ஸார், கடற்­ப­டை­யின் உத­வி­யு­டன் யாழ்ப்­ப­ாணத்­திற்கு கடல் வழி­யாக கொண்டு சென்­ற­னர்.
மக்­கள் ஆத்­தி­ர­முற்றுகாவலரணைத் தாக்­கி­னார்­கள். கைது செய்­யப்­பட்ட 5 சந்­தேக நபர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர் என சுவிஸ் குமார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என்­ப­வரை பிடித்து மின் கம்­பத்­தில் கட்டி வைத்து மக்­கள் தாக்­கி­னார்­கள்.
அவ்­வி­டத்­திற்குச் சென்ற தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் குறித்த நபரை பொலி­ஸா ­ரி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு அங்­கி­ருந்­த­வர்­க­ளி­டம் கூறி­யதை அடுத்து அவர் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

2-5-1.jpg

19.05.2015. –
சுவிஸ்குமார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் எனும் நபர் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ராக கொழும்பு வெள்­ள­வத்­தை­யில் வைத்­துக் கைது. (குறித்த நபர் பொது மக்­க­ளால் பிடிக்­கப்­பட்டு யாழ்ப்­பாண பொலி­ஸில் 17 ஆம் திகதி ஒப்­ப­டைக்­கப்­பட்டு, யாழ்ப்­பாண பொலி­சா­ரால் விடு­விக்­கப்­பட்ட பின்­னர் 19 ஆம் திகதி வெள்­ள­வத்­தை­யில் வைத்து மீண்­டும் கைது செய்­யப்­பட்­டார்)
மாலை. புங்­கு­டு­தீ­வுக்குச் சென்ற கொழும்பு பல்­க­லை­க­ழக சட்­டத்­துறை விரி­வு­ரை­யா­ள­ ரான வி.ரி.தமிழ்­மா­றனே, சுவிஸ் குமார் தப்­பிச் செல்ல உத­வி­னார் எனக் கூறி ஊர­வர்­கள், அவரை சுமார் 5 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக பொலிஸ் வாக­னத்­திற்­குள் முடக்­கி­னர். பின்­னர் கடற்­ப­டை­யின் உத­வி­யு­டன் பொலி­ஸார் தமிழ்­மா­றனை ஊர­வர்­க­ளி­டம் இருந்து பாது­காப்­பாக மீட்­ட­னர்.

20.05.2015. –
மாண­விக்கு நீதி கோரி முழு அடைப்பு. அன்­றைய தினம் சந்­தேக நபர்­களை யாழ்.நீதி­வான் நீதி­மன்­றில் முற்­ப­டுத்த பொலி­ஸார் நட­வ­டிக்கை.நீதி­மன்ற கட்­ட­டத் தொகு­தி­யைச் சுற்றி பெரு­ம­ள­வான மக்­கள் கூடி நின்­ற­னர். மதி­யம் 11. 30 மணி. மக்­கள் திடீ­ரென வன்­மு­றை­ யில் இறங்­கி­னர். நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகுதி மீது கல் வீசி தாக்­கு­தல். கல­கம் அடக்­கும் பொலி­ஸார் போராட்­ட­க் கா­ரர்­களைத் துரத்­தி­னர். வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­னர் எனக்­கூறி 139 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

20.05.2015
மாண­வி­யின் குடும்­பத்­தின் சார்­பில் இல­வ­ச­மாக முன்­னிலை ஆவோம் என்­றும் , சந்­தேக நபர்­கள் சார்­பில் முன்­னி­லை­யாக மாட்­டோம். என­வும் யாழ். சட்­டத்­த­ர­ணி­கள் கூட்­டாக அறி­விப்பு.

26.05.2015
வித்­தி­யா­வின் தாய், சகோ­த­ரனைச் சந்­தித்து அரச தலை­வர் ஆறு­தல். “ விசேட நீதி­மன்­றம் மூலம் விரை­வான விசா­ரணை, வித்­தியா குடும்­பத்­துக்கு வீடு ” என்­னும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்.

15.12.2015 –
பத்­தா­வது சந்­தேக நப­ராக ஜெய­வர்த்­தன ராஜ்­கு­மார் (வயது 26) எனும் நபரை ஊர்­கா­வற்றுறை பொலி­ஸார் ஊர்­கா­வற்­துறை நீதி­வான் நீதி­ மன்­றில் முற்­ப­டுத்­தி­னார்­கள்.

19.02.2016 –
குற்­றப்­பு­ல­னாய்வு துறை­யி­னர் மர­பணுச் சோதனை அறிக்கை உட்­பட எந்த அறிக்­கை­யும் மன்­றில் சமர்ப்­பிக்­க­வில்லை.
அறிக்­கை­களை விரை­வில் சமர்ப்­பிக்க வேண்­டும் என ஊர்­கா­வற்­துறை நீதி­வான் நீதி­மன்ற நீதி­வான் ஏ.எம்.எம்.றியாழ் உத்­த­ரவு.

IMG_8140-1.jpg

04.03.2016 –
வித்­தி­யா­வின் கொலைக்­கான கார­ணத்தை குற்­றப்­பு­ல­னாய்வு துறை­யி­னர் ஊர்­கா­வற்­துறை நீதி­மன்­றில் வெளி­யிட்­ட­னர். “வித்­தி­யாவை புங்­கு­டு­தீ­வைச் சேர்ந்த சிவ­தே­வன் துஷாந்த் ஒரு தலைப்­பட்­ச­மா­கக் காத­லித்­தார். ஆனால் வித்­தியா அதற்கு உடன்­ப­ட­வில்லை. வித்­தி­யா­வைப் பழி­வாங்க, தன் நண்­ப­ரான தில்­லை­நா­தன் சந்­தி­ர­ஹா­ச­னு­டன் கூட்டுச் சேர்ந்து மாண­வி­யைக் கடத்த திட்­ட­மிட்­டார். திட்­டத்­தின் சூத்­தி­ர­தா­ரி­யாக மாறி­னார் சுவிஸ் குமார்.
இவர்­க­ளு­டன் இரு­வர் துணைக்­குச் சேர்க்­கப்­பட்­ட­னர்.அப்­ப­டிச் சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் வித்­தியா குடும் பத்­துக்­கும் முன்­பகை இருந்­தது. அவர்­க­ளுக்கு எதி­ராக களவு வழக்­கில் வித்­தி­யா­வின் தாயார் சாட்­சி­யம் சொல்லி இருந்­தார்.
திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. வித்­தியா கடத்­தப்­பட்டு கோர­மாக கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கொல்­லப்­பட்­டார்.துசாந்த், சந்­தி­ர­ஹா­சன் ஆகிய இரு­வ­ருமே கொலை செய்­த­வர்­கள்” இதுவே குற்­றப்­பு­ல­னாய்வா­ளர்­க­ளின் அறிக்கை.

03.03.2016. –
11ஆவது சந்­தேக நப­ரான உத­ய­சூ­ரி­யன் சுரேஷ் கரன் கைது.

18.03.2016. –
வழக்கு ஒரு சில மாதங்­க­ளில் யாழ்.மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றம் செய்­யப்­ப­டும் என ஊர்­கா­வற்­துறை நீதி­மன்று அறி­விப்பு.

01.04.2016 –
பன்­னி­ரண்­டா­வது சந்­தேக நப­ராக தர்­ம­காலிங்­கம் ரவீந்­தி­ரன் நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்தப்பட்­டார்.

20.04.2016. –
மர­பணு பரி­சோ­தனை அறிக்­கையை தம்­மி­டம் ஜின்­ரேக் நிறு­வ­னம் இது­வரை கைய­ளிக்­க­வில்லை என பொலி­ஸார் மன்­றில் தெரி­விப்பு. ஜின்­ரேக் நிறு­வன அதி­கா­ரியை நீதி­ மன்­றில் முன்­னிலை ஆகு­மாறு உத்­த­ரவு.

09.05.2016. –
வித்­தியா கொலை வழக்­கின் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சுவிஸ் குமா­ரு­ டன் தொடர்­பு­களை பேணி­ய­வர்­கள், தப்பி செல்­வ­தற்கு உத­வி­ய­வர்­கள், தொடர்­பில் விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்க வேண்­டும் என குற்ற புல­னாய்வுப் பிரிவு பணிப்­பா­ ள­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீத­வான் ஏ.எம்.எம்.றியாழ் உத்­த­ரவு.

18.05.2016. –
வித்­தியா கொலை வழக்­கின் மர­ப­ணுப் பரி­சோ­தனை அறிக்­கையை குற்­றத் த­டுப்புப் புல­னாய்­வுப் பிரிவு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் சமர்ப்­பித்­த­னர்.(சம்­ப­வம் நடந்து ஒரு வரு­டத்­தின் பின்­னர். )

18.07.2016.-
வித்­தி­யா­வின் தாயை மிரட்­டிய குற்­றத்­தில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்டு இருந்த சுவிஸ் குமா­ரின் தாயா­ரான மகா­லிங்­கம் தயா­நிதி சிறைச்­சா­லை­ யில் சுக­வீ­னம் கார­ண­மாக உயி­ரி­ழப்பு.

18.07.2016. –
வித்­தியா கொலை வழக்­கில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு உள்ள சுவிஸ் குமா­ரும், அவ­ரது தம்பி மகா­லிங்­கம் சசீந்­தி­ரன் ஆகிய இரு­வ­ரும் தாயா­ரின் இறு­திக் கிரி­யை­க­ளில் கலந்து கொள்ள ஊர்­கா­வற்­துறை நீதிவான் நீதி­மன்ற பதில் நீத­வான் இ. சபே­சன் அனு­மதி.

23.07.2016. –
வித்­தியா கொலை வழக்கு தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­களை சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் பாரப்­ப­டுத்தி உள்­ள­தாக குற்­றத் தடுப்­புப் புல­னாய்வு பிரி­வுப் பொலி­சார் ஊர்­கா­வற்­துறை நீத­வான் நீதி­மன்­றில் தெரி­விப்பு.

20.09.2016. –
வித்­தியா கொலை வழக்­கின் குற்­ற­வா­ளி­கள் , இனம் காணப்­ப­டக் கூடிய நிலை­யில் குற்­றப் புல­னாய்வு பிரி­வின் விசா­ரணை அறிக்கை உள்­ள­தாக ஊர்­கா­வற்­றுறை நீத­வான் நீதி­மன்ற நீதி­வான் மன்­றில் தெரி­விப்பு.

09.11.2016 –
வித்­தியா கொலை வழக்கு தொடர்­பில் மிக விரை­வில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யக் கோரி யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் சட்­டமா அதி­ப­ருக்­குப் பணிப்­புரை.

22.02.2017 –
வித்­தியா கொலை வழக்­கின் 11 ஆவது சந்­தேக நபர் அரச தரப்­புச் சாட்­சி­ய­மாக மாறு­வ­தற்கு ஊர்­கா­வற்­றுறை நீதி­வான் நீதி­மன்­றில் ஒப்­பு­தல்.

22.02.2017. –
வித்­தியா கொலை வழக்கு 98 சத­வீத விசா­ர­ணை ­கள் முடி­வ­டைந்து விட்­ட­தாக ஊர்­கா­வற்­றுறை நீதி­வான் .எம்.எம். றியாழ் தெரி­விப்பு.

28.04.2017.-
வித்­தியா வழக்­கின் 10 ஆவது சந்­தே­க­ந­ப­ரான ஜெய­வர்த்­தனா ராஜ்­கு­மார் மற்­றும் 12 ஆவது சந்­தே­க­ந­ப­ரான ரவீந்­தி­ரன் ஆகி­யோர் சாட்­சி­யங்­கள் இல்­லா­மை­யால் வழக்­கில் இருந்து விடு­தலை.

05.05.2017. –
வித்­தியா கொலை வழக்­கின் குற்றப் பகிர்வு பத்­தி­ரம் மே மாதம் 12 ஆம் திக­திக்கு முன்­னர் யாழ்.மேல் நீதி­மன்­றில் பாரப்­ப­டுத்­தப்­ப­டும் என அரச சட்­ட­வாதி நாக­ரத்­தி­னம் நிஷாந்த் மேல் நீதி­ மன்­றில் தெரி­விப்பு.

10.05. 2017
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்கை கொழும்­பில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் மூவர் முன்­னி­லை­யில் ‘ட்ரயல் அட் பார்’ முறை­யில் நடத்த சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் தீர்­மா­னித் துள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கின.

11.05.2017. –
வித்­தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதி­மன்­றி­லையே நடை­பெற வேண்­டும் என கோரி மாண­வி­யின் தாய் உட்­பட புங்­கு­டு­ தீவு மக்­கள் போராட்­டம்.

12.05.2017. –
வித்­தியா கொலை வழக்கு குற்­றப் பகிர்வு பத்­திர வழக்­கே­டு­கள் யாழ். மேல் நீதி­ மன்­றில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டன.

29.05.2017.
வட­மா­கா­ணத்­தில் முத­லா­வது “ ரயல் அட் பார் “ தீர்ப்­பாய முறை­மை­யி­லான நீதி­மன்ற அமர்வு யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் சமா­தான அறை­யில் கூடி­யது.

12.06.2017.
மாணவி கொலை வழக்­கின் ஒன்­பது எதி­ரி­க­ளான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ ல­ சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­ நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன், மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகி­யோர் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட ­னர். அத­னைத் தொடர்ந்து வழக்கு விசா­ர­ணை­கள் மன்­றில் ஆரம்­ப­மா­னது, 41 குற்­றங்­கள் சுமத்­தப்­பட்டு எதி­ரி­க­ளுக்கு திறந்த நீதி­மன்­றில் தமிழ் மொழி­யில் வாசித்து காண்­பிக்­கப்­பட்­டது. அதன் போது எதி­ரி­கள் தம் மீதான 41 குற்­ற­ சாட்­டை­யும் மறுத்து தாம் சுற்­ற­வா­ளி­ கள் என மன்­று­ரைத்­த­னர்.

அதன்­போது 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்­றும் 6ம் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக மாண­வியை பல­வந்­த­மாக கடத்­தி­யமை , வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை மற்­றும் கொலை செய்­தமை ஆகிய குற்ற சாட்­டுக்­கள் முன் வைக்­கப்­பட்­டன. ஏனைய 4ஆம் , 7ஆம் , 8ஆம் மற்­றும் 9ஆம் எதி­ரி­கள் மீது குறித்த குற்ற சம்­ப­வத்­திற்கு சதித்­திட்­டம் தீட்­டி­யமை , அதற்கு உடந்­தை­யாக இருந்­தமை உள்­ளிட்ட 41 குற்ற சாட்­டுக்­கள் எதி­ரி­கள் மீது முன் வைக்­கப்­பட்­டன. 53 சாட்­சி­யங்­கள் அணைக்­கப்­பட்­டன.

அத்­தனை குற்­றச்­சாட்­டுக்­க­ளும் எதி­ரி­க­ளுக்கு தனித்­த­னியே மன்­றில் உரத்த குர­லில் வாசித்­துக்­காட்­டப்­பட்­டன. அத்­தனை குற்ற சாட்­டுக்­க­ளை­யும் எதி­ரி­கள் தனித்­த­னியே மறுத்­த­னர்.

 

பதில் சட்­டமா அதி­பர் தொடக்­க­வுரை

அன்­றைய தினம் பதில் சட்­டமா அதி­பர் டபிள்யூ.டி. லிவேரா மன்­றில் முன்­னி­லை­யாகி உரை நிகழ்த்­தி­னார். அதன்­போது , இந்த வழக்­கின் 2ஆம் , 3ஆம் , 5ஆம் மற்­றும் 6ஆம் எதி­ரி­களே மாண­வி­யைக் கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி உள்­ள­னர். இவர்­கள் நால்­வ­ரும் மாறி மாறி மாண­வியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி உள்­ள­னர்.

கொடூர சம்­ப­வ­மா­னது சாதா­ரண கடத்­தல் , வன்­பு­ணர்வு , கொலை போன்­றது அல்ல. இது முன் கூட்­டியே நன்கு திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட குற்­றம். இதற்கு பன்­னாட்டு ரீதி­யில் திட்­டம் வகுக்­கப்­பட்டு உள்­ளது. அத­னால் இதைப் பன்­னாட்டு குற்­றம் என்று கூடச் சொல்­ல­லாம். இதன் பின்­ன­ணி­யில் இந்த நாட்­டின் நற்­பெ­ய­ருக்­கும் கீர்த்­திக்­கும் களங்­கம் ஏற்­ப­டுத்த வேண்­டும். என திட்­ட­மிட்டு செயற்­பட்டு உள்­ள­னர்.

இந்­தக் குற்­ற­செ­ய­லின் பிர­தான சூத்­திர தாரி ஒன்­ப­தாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலி­யல் வன்­பு­ணர்­வினை நேர­டி­யாக காணொ­லி­யா­கப் பதிவு செய்து பன்­னாட்­டுச் சந்­தை­யில் விற்­பனை செய்ய முயன்று உள்­ளார்.

ஒன்­ப­தாம் எதிரி இலங்­கை­யில் பிறந்­தி­ருந்­தா­லும் சுவிஸ் நாட்­டின் குடி­யு­ரிமை பெற்­ற­வர். அவர் சுவிஸ் நாட்­டில் இருந்து அடிக்­கடி இலங்­கைக்கு வந்து செல்­ப­வர். அந்த நிலை­யில் அவர் சுவிஸ் நாட்­டில் இருந்து 6ஆம் எதி­ரி­யு­டன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசி­யுள்­ளார்.

பன்­னாட்­டுச் சந்­தை­யில் தெற்­கா­சிய நாட்­டைச் சேர்ந்த இளம் பெண்­களை கூட்டு பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­து­வ­தனை நேர­டிக் காட்­சி­யாக வீடியோ ஒளிப்­ப­திவு செய்து அதிக விலைக்கு விற்­பனை செய்ய முடி­யும். இதனை ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் தன்­னு­டன் சிறை­யில் இருந்த சக­பா­டிக்­குச் சொல்லி இருக்­கின்­றார்.

அதே­வேளை ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் தன்னை இந்­தக் குற்ற செய­லில் இருந்து தப்­பிக்க உத­வு­மாறு கோரி பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு 20மில்­லி­யன் ரூபாய் பணம் கைமாற்­றம் செய்­ய­வும் முயன்று உள்­ளார்.

ஏனைய 4ஆம் 7ஆம் மற்­றும் 8ஆம் எதி­ரி­கள் இந்த குற்ற செய­லுக்கு உதவி அளித்­தத்­து­டன் , திட்­டம் தீட்­டி­யுள்­ள­னர். இந்த ஒன்­பது எதி­ரி­க­ளுக்­கும் எதி­ராக முன் வைக்­கப்­பட்­டுள்ள 41 குற்­றச் சாட்­டு­க­ளும் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­ப­டும் என தெரி­வித்­தார்.

snapshot_003.png

மாண­வி­யின் தாயின் சாட்­சி­யம்

அன்­றயை தினம் வித்­தி­யா­வின் தாய் சாட்­சி­யம் அளிக்­கை­யில் , எமது வீட்­டில் இருந்து எனது மகள் தின­மும் பாட­சா­லைக்கு துவிச்­சக்­கர வண்­டி­யில் தான் செல்­வார். சம்­பவ தினத்­தன்று (13.05.2015) காலை 7.30 மணிக்கு வித்­தியா பாட­சா­லைக்­குச் செல்­லப் புறப்­பட்­டாள் நானே வீட்­டுக் கேற் வரை­யில் சென்று வழி­ய­னுப்பி வைத்­தேன் அன்­றைய தினம் தன்­னு­டன் கூட படிக்­கும் மாண­வி­யு­டன் செல்­வ­தா­கக் கூறி சென்­றார். ஆனால் அன்­றைய தினம் அந்த மாணவி பாட­சாலை செல்­லாத கார­ணத்­தால் வித்­தியா தனி­யா­கவே பாட­சாலை நோக்கி சென்­றாள்.

பாட­சாலை சென்ற வித்­தியா பாட­சாலை நேரம் முடி­வ­டைந்து வீட்­டுக்கு வரும் நேரத்தை கடந்­தும் வரா­த­தி­னால் வித்­தி­யாவை பார்த்து வரு­மாறு எனது மக­னைப் பாட­சா­லைக்கு அனுப்­பி­னேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாட­சாலை பூட்டி உள்­ள­தாக தொலை பேசி­யில் சொன்­னான். அதன் பின்­னர் பாட­சாலை மாண­வர்­க­ளி­டம் விசா­ரித்த போது வித்­தியா அன்­றைய தினம் பாட­சா­லைக்கு வர­வில்லை என தெரி­வித்­த­னர்.

அதன் பின்­னர் நானும் எனது மக­னும் வித்­தி­யாவை தேடி அலைந்­தோம். மாலை 6.30 மணி­ய­ள­வில் குறி­கட்­டு­வான் பொலிஸ் காவ­ல­ர­ணில் முறைப்­பாடு செய்­யச் சென்­றோம். அங்கு அவர்­கள் இந்த முறைப்­பாட்டை ஏற்க முடி­யாது. நீங்­கள் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யம் சென்று முறைப்­பாடு செய்­யுங்­கள் என தெரி­வித்­த­னர்.

பின்­னர் இரவு 8 மணி­ய­ள­வில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­திற்­குச் சென்ற முறைப்­பாடு கொடுக்க முற்­பட்ட போது இந்த வயது பிள்­ளை­கள் எங்­கே­னும் போயி­ருக்­குங்­கள் திரும்பி வருங்­கள் என பொலி­சார் சொன்­னார்­கள். அதற்கு நாம் எங்­கள் பிள்ளை அப்­ப­டிப்­பட்­ட­வள் இல்லை என கூறி­ய­தும் பின்­னர் எமது முறைப்­பாட்டை ஏற்­று­கொண்­டார்­கள்.

அன்­றைய தினம் இரவு மழை பெய்து கொண்டு இருந்­த­தால் , மேற்­கொண்டு பிள்­ளையை தேட­வில்லை மீண்­டும் மறு­நாள் (14ஆம் திகதி) காலை 6.30 மணி­ய­ள­வில் நானும் மக­னும் அய­ல­வர்­க­ளு­டன் வித்­தி­யா­வைத் தேடிச் சென்­றோம்.

வீதி­யின் இரு மருங்­கி­லும் இரு­வர் வீதம் பிரிந்து தேடிச் சென்­றோம். எம்­மு­டன் வித்­தியா வளர்த்த நாயும் வந்­தது. திடீ­ரென எனது மக­னும் அய­ல­வ­ரும் கத்­தும் சத்­தம் கேட்டு நானும் என்­னு­டன் கூட வந்­த­வ­ரும் சத்­தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்­றோம்.

அப்­போது என் மகன் ஓடி­வந்து “அம்மா வித்­தியா “ என கத்­திக்­கொண்டு மயக்­க­முற்று வீழ்ந்­தான். அதன் பின்­னர் நானும் சுய­நி­னை­வின்றி போனேன். எம்­மு­டன் வந்­த­வர்­கள் தான் ஓடிச் சென்று வேறு ஆள்­களை அழைத்து வந்­த­னர்.

நான் சுய­நி­னை­வுக்கு வந்து வித்­தி­யா­வின் சட­லம் இருந்த இடத்­திற்கு சுமார் 20அடி தூரத்­தில் இருந்தே சட­லத்தை பார்த்­தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்­க­முற்று வீழ்ந்­த­மை­யால், மகனை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்று விட்­டார்­கள்.

பின்­னர் காலை 10 மணி­ய­ள­வில் ஊர்­கா­வற்­றுறை பொலி­சார் சம்­பவ இடத்­திற்கு வருகை தந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட­லத்தை உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் கொண்டு சென்­ற­னர் என தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டார்.

 

29.06.2017.
ஐந்­தா­வது சாட்­சி­யும், சட்­டமா அதி­ப­ரி­னால் நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்ட அரச தரப்­புச் (கண்­கண்ட) சாட்­சி­யு­மான உத­ய­சூ­ரி­யன் சுரேஷ் கரன் சாட்­சி­யம் அளிக்­கும் போது; ‘‘கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவை எனக்­குத் தெரி­யும். அவ­ரது குடும்­பத்­தி­ன­ரை­யும் எனக்கு நன்கு தெரி­யும். வித்­தியா எவ­ரை­யும் காத­லித்­தாரா என்­பது எனக்­குத் தெரி­யாது. ஆனால் பெரி­யம்பி என அழைக்­கப்­ப­டும் துஷாந்த் (6ஆவது எதி­ரி­யான சிவ­தே­வன் துஷாந்த்) என்­ப­வர் வித்­தி­யா­வைக் காத­லிப்­ப­தாக கூறி­னார்.

அத­னால் நானும் பெரி­யம்­பி­யும் வித்­தியா பாட­சாலை செல்­லும் நேரம், பாட­சா­லை­யால் வீடு திரும்­பும் நேரங்­க­ளில் தின­மும் வித்­தி­யா­வின் பின்­னால் பெரி­யம்­பி­யின் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று வரு­வோம். அவ்­வே­ளை­க­ளில் வித்­தி­யா­வு­டன் பெரி­யம்பி கதைக்க முற்­ப­டு­வார் ஆனால் வித்­தியா கதைக்க மாட்­டார். வித்­தியா சில வேளை­க­ளில் அவ­ரின் அண்­ணா­வு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் பாட­சாலை சென்று வரு­வார். அண்ணா இல்லை என்­றால் சைக்­கி­ளில் சென்று வரு­வார்.

பெரி­யம்­பி­யும் நானும் கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­கள் வித்­தி­யா­வின் பின்­னால் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று வந்­தோம். அவ்­வே­ளை­க­ளில் அவ­ரு­டன் கதைக்க முற்­பட்­டால் அவர் கதைப்­ப­தில்லை. ஒரு நாள் தன்­னு­டன் கதைக்க வேண்­டாம் என­வும் கூறி இருந்­தார்.

கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒன்று ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்பு, ஒரு­நாள் வித்­தியா பெரி­யம்­பிக்கு செருப்­பால் எறிந்து பேசி இருந்­தார்.

நாங்­கள் புங்­கு­டு­தீ­வில் மாப்­பிள்ளை என்­ப­வர் வீட்­டில் கள்­ளுக் குடிப்­போம் , அங்கே ரவி­யி­டம் வித்­தி­யாவை தூக்­கித் தர சொல்லி பெரி­யம்பி கேட்­டான். அப்­போது அந்த இடத்­தில் நானும், (5ஆம் எதிரி) பெரி­யம்பி, (2ஆம் எதிரி) ரவி, (6ஆம் எதிரி) சந்­தி­ர­ஹா­சன் மற்­றும் (3ஆம் எதிரி) தவக்­கு­மார் ஆகி­யோர் இருந்­தோம்.

வித்­தி­யா­வைத் தூக்­கித் தாறது என்­றால் எனக்கு 20, – 23 ஆயி­ரம் ரூபாய் பணம் தர வேண்­டும் என ரவி பெரி­யம்­பிக்கு கூறி­னான். அதற்கு பெரி­யம்பி தான் சம்­ப­ளம் எடுத்த உடனே பணத்­தைத் தரு­கி­றேன் எனக் கூறி­னான். அதன் படி ரவிக்கு பெரி­யம்பி பணம் கொடுத்­தான்’’ என சுரேஷ்­க­ரன் தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டார்.

அத­னைத் தொடர்ந்து, தான் சாட்­சி­யம் அளிப்­ப­த­னால் தனது அல்­லது தனது குடும்­பத்­திற்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என­வும் , அத­னால் தான் ரக­சி­ய­மான முறை­யில் சாட்­சி­யம் அளிக்க போவ­தா­க­வும் மன்­றில் கூறி­னார்.

அதனை அடுத்து மன்­றில் இருந்த பொது­மக்­கள் , ஊட­க­வி­ய­லா­ளர்­களை வெளியே செல்­லு­மாறு மன்று அறி­வித்­தது. அதனை அடுத்து அவர் தனது மேல­திக சாட்­சி­யங்­களை மன்­றில் பதிவு செய்­தார்.

மாப்­பிள்­ளை­யின் சாட்­சி­யம்.
வழக்­கின் மூன்­றா­வது சாட்­சி­ய­மான மாப்­பிள்ளை என்று அழைக்­கப்­ப­டும் நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் அன்­றைய தினம் (29ஆம் திகதி) மாலை 4 மணி­ய­ள­வில் சாட்­சி­யம் அளித்­தார். அவர் தனது சாட்­சி­யத்­தில்; அதில் ,

நான் சீவல் தொழில் செய்­கி­ற­வன். பெரி­யாம்­பி­யும் சுரேஷ்­க­ரன் ஆகிய இரு­வ­ரும் வழ­மை­யாக என் வீட்­டுக்கு வந்து கள்ளு வாங்­கிக் குடிக்­கி­ற­வர்­கள். ஒரு­நாள், தான் வித்­தி­யா­வைக் காத­லிப்­ப­தா­க­வும் , அவ­ரையே திரு­ம­ணம் செய்­யப் போவ­தா­க­வும் பெரி­யாம்பி என்­னி­டம் கூறி­னார்.

சம்­பவ தினத்­திற்கு முதல் நாள் 12ஆம் திகதி, வித்­தியா பாட­சாலை செல்­லும் வழிக்கு பெரி­யாம்­பி­யும், சந்­தி­ர­ஹா­ச­னும் என்னை அழைத்­துச் சென்­ற­னர். அன்­றைய தினம் வித்­தியா வேறு ஒரு மாண­வி­யு­டன் வந்­த­தால் எது­வும் கதைக்­க­வில்லை.

மறு­நாள் 13ஆம் திகதி (சம்­பவ தினத்­தன்று) மீண்­டும் வித்­தியா பாட­சாலை செல்­லும் வழி­யில் ஆல­டிச் சந்­திக்கு அரு­கில் வித்­தி­யா­வுக்­கா­கக் காத்­தி­ருந்­தோம். வித்­தியா வரும் வேளை என்­னை­யும் சுரேஷ்­க­ர­னை­யும் அரு­கில் இருந்த பற்­றைக்­குள் ஒளிந்து இருக்­கு­மாறு பெரி­யாம்­பி­யும் சந்­தி­ர­ஹா­ச­னும் கூறி­னார்­கள். நாமும் பற்­றைக்­குள் மறைந்து இருந்­தோம்.

அவ்­வேளை அந்த இடத்­திற்கு ரவி­யும் , தவக்­கு­மா­ரும் வந்­தி­ருந்­தார்­கள். அந்­நே­ரம் வித்­தியா பாட­சாலை சீரு­டை­யு­டன் காலில் சப்­பாத்­து­டன், சைக்­கி­ளில் வந்து கொண்டு இருந்­தார். அவ­ரு­டைய சைக்­கிள் முன் கூடைக்­குள் குடை ஒன்­றும் இருந்­தது.

சைக்­கி­ளில் வந்த வித்­தியா அவர்­க­ளுக்கு அரு­கில் வந்­த­தும் சந்­தி­ர­ஹா­ச­னும் , பெரி­யாம்­பி­யும் அவரை அவரை மறித்­த­னர். பின்­னர் சந்­தி­ர­ஹா­சன், பெரி­யாம்பி, ரவி , மற்­றும் தவக்­கு­மார் ஆகிய நால்­வ­ரும் வித்­தி­யாவை பிடித்து இழுத்து சென்­ற­னர். அப்­போது வித்­தியா கத்­தி­னார். உடனே பெரி­யாம்பி வித்­தி­யா­வின் வாயைப் பொத்­தி­னார். வித்­தி­யா­வின் மூக்­குக் கண்­ணா­டி­யை­யும் பெரி­யாம்­பியே கழட்டி எடுத்­தான். பின்­னர் நால்­வ­ரு­மாக வித்­தி­யாவை பற்­றை­கள் ஊடாக பாழ­டைந்த வீட்­டுக்­குள் இழுத்­துச் சென்­ற­னர்.

பின்­னர் வித்­தி­யாவை வன்­பு­ணர்ந்­த­னர். முத­லில் பெரி­யாம்­பி­யும் (துசாந்த்) பிறகு சந்­தி­ர­ஹா­ச­னும் , தொடர்ந்து செந்­தில் (தவக்­கு­மார் ) பிறகு ரவி­யும் (ஜெயக்­கு­மார்) என மாறி மாறி வன்­பு­ணர்ந்­த­னர். அதனை பெரி­யாம்­பி­யும் சந்­தி­ர­ஹா­ச­னும் மாறி மாறி காணொலி எடுத்­த­னர். அவர்­கள் பெரிய ‘டச் மொடல்’ போனி­ல­தான் காணொலி எடுத்­த­னர். அந்த காணொ­லியை சுவிஸ்­கு­மா­ருக்கு கொடுக்க வேண்­டும். அவர் அதனை வெளி­நாட்­டுக்கு கொண்டு போகப் போகி­றார் எனப் பேசிக்­கொண்­டார்­கள்.

பின்­னர் வித்­தியா மயங்­கிய நிலை­யில் அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய (பாழ­டைந்த வீடு) இடத்­தில் இருந்து கைத்­தாங்­க­லாக நால்­வ­ரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்­றர் தூரத்­தில் உள்ள அலரி மரம் ஒன்­றில் வித்­தி­யாவை கட்­டி­னார்­கள். அவ­ரின் ஆடை­களை அவ­ரின் உட­லின் மீது போட்­டார்­கள். பின்­னர் பாட­சாலை சீரு­டை­யின் இடுப்பு பட்­டி­யி­னால் கைகள் இரண்­டை­யும் ஒன்­றாக கழுத்­துக்கு பின்­னால் வைத்து கட்­டி­னார்­கள். பாட­சா­லைப் பையின் நாடா­வால் ஒரு காலை இழுத்து மரத்­து­டன் கட்­டி­னார்­கள். சப்­பாத்து நூல்­க­ளி­னா­லும் கட்­டி­னார்­கள்.

இவ்­வ­ளவு சம்­ப­வ­மும் ஒன்று , ஒன்­றே­கால் மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் நடை­பெற்­றது. அதன் பின்­னர் நான் 8.30 மணி­ய­ள­வில் சீவல் தொழி­லுக்­காக சென்று விட்­டேன். என சாட்­சி­யம் அளித்­தார்.

முஹ­மட் இப்­ரான் சாட்­சி­யம்.

30.06.2017.

ஆறா­வது சாட்­சி­யான முக­மட் இப்­ரான் சாட்­சி­யம் அளிக்­கை­யில்; வவு­னியா சிறைச்­சா­லை­யில் சுவிஸ் குமார் என்­னைச் சந்­தித்து, தொலை­பே­சி­யில் அழிக்­கப்­பட்ட தர­வு­களை மீள எடுக்க முடி­யுமா ? எனக் கேட்­டார் நான் ஆம் என்­றேன். மென்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்தி அழிக்­கப்­பட்ட தர­வு­க­ளை­யும் எடுக்க முடி­யுமா ? என திரும்­பக் கேட்­டார். அதற்கு நாம் ஆம் என்­னால் முடி­யும் என்­றேன்.

சாதா­ர­ண­மாக, தொலை­பேசி பாவிக்­கின்­ற­வர்­கள், அதில் உள்ள தர­வு­களை அழிப்­பது என்­றால் சாதா­ர­ண­மா­கத் தான் அழிப்­பார்­கள். மென்­பொ­ருள் ஊடாக அழிப்­பது என்­றால் அதில் எதோ பிரச்­சனை இருப்­ப­தாக புரிந்து கொண்­டேன்.

மறு­நாள் சுவிஸ் குமாரை நான் தனி­யா­கச் சந்­தித்­த­போது , பொலிஸ் இன்ஸ்­பெக்­டர் நிஷாந்த சில்­வா­வின் பல­வீ­னம் என்ன எனக் கேட்­டார். அதற்கு நான் அது தெரி­யாது. உங்­க­ளுக்கு அவ­ரி­டம் என்ன வேண்­டும் என கேட்­டேன். வித்­தியா வழக்­கில் நாங்­கள் மூன்று சகோ­த­ரர்­க­ளும் அரச சாட்­சி­யாக மாற வேண்­டும் அதற்கு பொல்ிஸ் இன்ஸ்­பெக்­டர் நிஷாந்த சில்­வா­வு­டன் கதைத்து ஏற்­பாடு செய்து தரு­மாறு சுவிஸ் குமார் கேட்­டார்.

அவ்­வாறு செய்­தால் பொல்ிஸ் இன்ஸ்­பெக்­டர் நிஷாந்த சில்­வா­வுக்கு என்ன கொடுப்­பீர்­கள் எனக் கேட்­டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடி­யும் என தெரி­வித்­தார்.

பின்­னர் ஒரு நாள் ‘‘நான் சுவிஸ் நாட்­டில் இருந்­தேன். அங்­குள்ள மாபியா குழு ஒன்று தெற்­கா­சிய நாட்டு இளம் பெண் ஒரு­வ­ரைக் கூட்டு பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்­வ­தனை வீடியோ எடுத்து தரு­மாறு என்­னு­டன் ஒப்­பந்­தம் செய்­தி­ருந்­த­னர்.

நான் இலங்­கை­யில் உள்ள ஒரு­வ­ரு­டன் தொடர்பு கொண்டு அது பற்­றிக் கூறி­னேன். 20 வய­துக்கு உட்­பட்ட பெண் பிள்ளை ஒரு­வர் தேவை எனச் சொன்­னேன். அவர் ஒரு பெண்­ணின் ஒளிப்­ப­டத்தை எனக்கு அனுப்பி வைத்­தார். அந்த பெண் ஓகே என்­றேன்’’ என சுவிஸ் குமார் என்­னி­டம் கூறி­னார் நான் இலங்­கை­யில் உள்ள எவ­ரு­டன் தொடர்பு கொண்­டீர் எக்ன கேட்­ட­தற்கு இங்கு எதிரி கூண்­டில் ஆறா­வது நப­ராக உள்­ள­வரை (சிவ­தே­வன் துஷாந்­தன் ) சுவிஸ் குமார் எனக்­குக் காட்டி இருந்­தார்.

இதில் ஆறா­வ­தாக உள்ள நப­ரு­டன் சேர்ந்து இலங்­கை­யில் உள்ள ஏனை­ய­வர்­கள் அதற்கு ஏற்­பாடு செய்­த­னர். அதற்­காக அந்த பெண்­ணின் தாயா­ரு­டன் பெரி­தொரு வழக்­கில் தொடர்­பு­டைய ஏனைய மூன்று பேரை­யும் தம்­மு­டன் கூட்­டுச் சேர்ந்­த­னர். என சுவிஸ் குமார் என்­னி­டம் கூறி­னார்.

வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்­வதை எடுத்த காணொ­லியை அலை பேசி ஊடாக சுவிஸ் குமா­ருக்கு அனுப்­பி­யுள்­ளார்­கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யுள்­ளார்.
அத்­து­டன் வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்த நேரத்­தில் நான் அங்கு இருந்து இருந்­தால், நான்­தான் முத­லில் வன்­பு­ணர்ந்து இருப்­பேன். அவ­ரின் உடலை பார்க்­கும் போது ஆசை­யாக இருக்­கின்­றது என­வும் என்­னி­டம் சுவிஸ் குமார் தெரி­வித்து இருந்­தார் என சாட்­சி­யம் அளித்­தார்.

தனு­ராம் சாட்­சி­யம்.

03.07.2017.

09ஆவது சாட்­சி­ய­மான , மணி­வண்­ணன் தனு­ராம் சாட்­சி­யம் அளிக்­கை­யில்; நான் புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­தில் கல்வி கற்­கி­றேன். நான் தின­மும் வீட்­டில் இருந்து சின்ன ஆல­டிப் பகுதி (மாணவி படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­திற்கு அரு­கில் உள்ள பகுதி ) ஊடா­கத் தான் பாட­சா­லைக்­குச் செல்­வேன்.

சம்­பவ தினம் நானும் என்­னு­டன் ஒரே வகுப்­பில் கல்வி கற்­கும் சக மாண­வ­னான தனு­ஜ­னும் துவிச்­சக்­கர வண்­டி­யில் சென்­றோம். அது தனு­ஜ­னின் சைக்­கிள். அவன் தான் சைக்­கிளை ஓட்­டி­னான்.

செல்­லும் போது சின்ன ஆல­டிக்கு அரு­கில் தனு­ஜ­னின் செருப்பு கழன்று வீதி­யில் வீழ்ந்து விட்­டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்­கிளை நிறுத்­தி­னான். நான் பின்­னால் இருந்து இறங்­கிச் சென்று செருப்பை எடுத்து வரச் சென்­றேன்.

அந்த நேரம் வீதி ஓர­மாக அலரி மரங்­கள் உள்ள பகு­தி­யில் ரவி­மாமா (இரண்­டாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார்) மஞ்­சள் கலர் ரீ.சேர்ட்­டு­டன் நின்­றார். அப்­போது “ம் .. ம் .. “ என சத்­தம் கேட்­டது. நான் முத­லில் பேய் என்று பயந்­தேன். ஏனெ­னில் அந்த வீதி­யில் சன­ந­ட­மாட்­டம் இருப்­ப­தில்லை. வழ­மை­யாக பாட­சாலை செல்­லும் போது , சின்ன ஆல­டிப் பகு­திக்­குக் கிட்ட வந்­த­தும் வேக­மா­கவே செல்­வோம்.

அன்­றும் அந்த சத்­தத்தை பேய் என்று பயந்­தா­லும் , அது மாடு கத்­தும் சத்­தம் போன்று இருந்­தது. மன பயம் இருந்­த­தி­னால் செருப்பை எடுத்து தனு­ஜ­னி­டம் கொடுத்­த­தும் அவன் போட்­டுக்­கொண்டு நாங்­கள் இரு­வ­ரும் அந்த இடத்­தில் இருந்து பாட­சா­லைக்கு சென்று விட்­டோம்.எனச் சாட்­சி­யம் அளித்­தார்.

தனு­ஜன் சாட்­சி­யம்.

அத­னைத் தொடர்ந்து பத்­தா­வது சாட்­சி­யான இலங்­கேஸ்­வ­ரன் தனு­ஜன் சாட்­சி­யம் அளிக்­கை­யில் ,

நானும் தனு­ரா­மும் 13ஆம் திகதி பாட­சா­லைக்­குச் சென்று கொண்­டி­ருந்­தோம். எனது சைக்­கி­ளில் நான் தான் அவ­னைப் பின்­னுக்கு ஏற்­றிக்­கொண்டு சென்­றேன்.

சின்ன ஆலடி எனும் பகு­தி­யில் , சைக்­கிள் பெடல் கட்டை இல்­லா­த­தால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்­டது. நான் சைக்­கிளை நிறுத்தி , சைக்­கிளை பிடித்­துக்­கொண்டு இருந்த போது , தனு­ராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்­தான். பின்­னர் நாங்­கள் செருப்பை போட்­டுக்­கொண்டு பாட­சா­லைக்கு சென்று விட்­டோம். எனச் சாட்­சி­யம் அளித்­தான்

பால­சந்­தி­ரன் சாட்­சி­யம்.

அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்­சி­யான , பால­சிங்­கம் பால­சந்­தி­ரன் சாட்­சி­யம் அளிக்­கை­யில் ,
நான் 13ஆம் திகதி காலை 8.47 மணி­ய­ள­வில் கடைக்­குச் சென்ற போது வித்­தியா கொலை நடந்த இடத்­திற்கு அரு­கில் , பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் மற்­றும் பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் ஆகிய இரு­வ­ரும் நின்று கொண்டு இருந்­த­னர்.
அதில் ரவி என்று அழைக்­கப்­ப­டும் பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் எனது தங்­கை­யின் கண­வன். மற்­றை­ய­வ­ரான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , ஜெயக்­கு­மா­ரின் சகோ­த­ரன்.
மறு­நாள் 14 ஆம் திகதி தான் வித்­தியா இறந்த செய்தி எனக்­குத் தெரி­யும். வித்­தியா எனக்கு கிட்­டத்து சொந்­த­மும் கூட , வித்­தி­யா­வின் உடல் மீட்­கப்­பட்ட இடத்­திற்கு சுமார் 15 அடி தூரத்­தில் தான் முதல் நாள் ஜெயக்­கு­மார் மற்­றும் தவக்­கு­மார் ஆகி­யோரை கண்­டேன். என சாட்­சி­யம் அளித்­தார்.

இலங்­கேஸ்­வ­ரன் சாட்­சி­யம்

அத­னைத். தொடர்ந்து வழக்­கின் 07ஆவது சாட்­சி­ய­மான ஞானேஸ்­வ­ரன் இலங்­கேஸ்­வ­ரன் சாட்­சி­யம் அளிக்­கை­யில் , 

‘‘நான் வித்­தியா வீட்­டுக்கு அரு­கில் தான் வசிக்­கி­றேன். 14ஆம் திகதி காலை வித்­தி­யா­வின் அம்­மா­வும் சகோ­த­ர­னும் , வித்­தி­யாவை நேற்­றில் இருந்து காண­வில்லை. என தெரி­வித்து தேடிப் பார்க்­கச் சென்­றார்­கள். அவர்­க­ளு­டன் நானும் சென்­றேன்.

வித்­தியா பாட­சாலை செல்­லும் வழி­யில் உள்ள கிண­று­கள் , கேணி­க­ளில் தாய் தேடிக்­கொண்டு வந்­தார். நான் வீதி­யோ­ர­மாக பற்­றை­க­ளுக்­குள் தேடி சென்­றேன். வித்­தி­யா­வின் அண்ணா ஆட்­கள் அற்ற வீட்டு பகு­தி­களை தேடி சென்­றோம். அப்­போது திடீ­ரென்று வித்­தி­யா­வின் அண்ணா ஐயோ வித்­தியா வித்­தியா என கத்­தி­னான்.

அந்த இடத்­திற்கு நான் சென்­றேன். அப்­போது வித்­தி­யா­வின் அம்­மா­வும் அங்கு வந்து விட்­டார். அவர் உடனே என்­னி­டம் , வித்­தி­யா­வின் சட­லம் கிடக்­கி­றது தொடர்­பில் ஊருக்­குள் சென்று செல்­லு­மாறு கூறி­னார். நான் சென்று ஊரில் உள்­ள­வர்­களை அழைத்து வந்­தேன்.

வித்­தி­யாவை சம்­பவ தினத்­திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்­யப்­பட்­டது 13ஆம் திகதி சட­லம் மீட்­கப்­பட்­டது 14 ஆம் திகதி) ஆலடி சந்­தி­யில் கண்­டேன்.

அன்­றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்­கள் வாங்க என ஆலடி சந்­தி­யில் உள்ள கடைக்­குச் சென்­றி­ருந்­தேன். அப்­போது வித்­தியா பஞ்­சா­பி­யு­டன் பஸ்­ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அரு­கில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த சைக்­கிளை எடுத்­துக்­கொண்டு சென்­றார்.

அந்த நேரம் கடைக்கு எதிரே வீதி­யின் மறு­பு­றத்­தில் , டொல்­பீன் ரக வாக­னத்­தில் , முன் ஆச­னத்­தில் (சாரதி ஆச­னத்­திற்கு அரு­கில்) 09 ஆம் எதி­ரி­யான சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் கறுத்த கண்­ணாடி அணிந்­த­வாறு இருந்­தார். மற்­றைய ஆச­னங்­க­ளில் 04ஆம் எதி­ரி­யான மகா­லிங்­கம் சசி­த­ரன் , 05ஆம் எதி­ரி­யான தில்­லை­நா­தன் சந்­தி­ர­ஹா­சன் மற்­றும் 08ஆம் எதி­ரி­யான கண்­ணன் என அழைக்­கப்­ப­டும் ஜெய­த­ரன் கோகு­லன் ஆகி­யோ­ரு­டன் மேலும் இரு­வ­ரும் இருந்­த­னர். அவர்­களை யார் என்று எனக்­குத் தெரி­யாது. மொத்­த­மாக வாக­னத்­தில் ஆறு பேர் இருந்­த­னர்.

அவர்­கள் அனை­வ­ரும் பஸ்­சி­னால் வந்து இறங்கி சைக்­கிளை, எடுத்­து­கொண்டு சென்று வித்­தி­யா­வையே பார்த்­துக்­கொண்டு இருந்­த­னர்’’ என சாட்­சி­யம் அளித்­தார்.

சதா­னந்­த­ரூ­பிணி சாட்­சி­யம்.

15 ஆவது சாட்­சி­யான செல்­வ­ராசா சதா­னந்­த­ரூ­பிணி சாட்­சி­யம் அளிக்­கை­யில் ,

நான் சம்­பவ தின­மான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்­கும் 8 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் எனது சைக்­கி­ளில் வேலணை பிர­தேச செய­ல­கத்­திற்­குச் சென்று கொண்டு இருந்­தேன். அப்­போது நான் சென்று கொண்­டி­ருந்த வீதி­யில் ஒரு இடத்­தில் உள்ள ஒற்­றை­யடி பாதை ஊடாக , சந்­தி­ர­ஹா­சன் சரம் ஒன்­றினை மடித்­துக்­கட்­டி­ய­வாறு வேக­மாக நடந்து சென்று கொண்­டி­ருந்­தார். அவர் போய்க் கொண்­டி­ருந்த தூரம் எனக்­கும் அவ­ருக்­கும் இடை­யில் “ தம்பி “ எனக் கூப்­பிட்­டால் கேட்­கும் தூரம் தான் அப்­போது இருந்­தது.

அவர் சென்ற ஒற்­றை­யடி பாதை ஊடாக சுமார் 200 மீற்­றர் தூரம் சென்­றால் , வித்­தி­யா­வின் சட­லம் கிடந்த இடத்­துக்­குச் செல்ல முடி­யும். அதற்­காக அவர் அங்கு தான் சென்­றார் என நான் உறு­தி­யாக சொல்ல மாட்­டேன்.

பின்­னர் மறு­நாள் வித்­தி­யா­வின் சட­லம் கிடக்­கின்­றது என்ற செய்தி அறிந்து நானும் அய­ல­வர்­கள் சுமார் 10 பேரும் சட­லம் கிடந்த இடத்­திற்கு சென்­றோம்.

அப்­போது அந்த இடத்­திற்கு சந்­தி­ர­ஹா­ச­னும் வந்­தி­ருந்­தார். அவர் அந்த இடத்­தில் சுமார் 10 நிமி­டங்­கள் நின்று விட்டு சென்று விட்­டார்’’ எனச் சாட்­சி­யம் அளித்­தார்.

 

சட்­ட­வைத்­திய அதி­காரி உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ர­தன் சாட்­சி­யம்.

வழக்­கின் 23 ஆவது சாட்­சி­ய­மான சட்­ட­வைத்­திய அதி­காரி உருத்­திர பசு­பதி மயூ­ர­தன் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில்;

சட­லத்தை அவ­தா­னித்த போது , இரண்டு கைக­ளின் பெரு­வி­ரல்­க­ளும் ஒன்­றாக சேர்த்து கட்­டப்­பட்டு தலை­யில் பின் பகு­தி­யில் கட்­டப்­பட்டு இருந்­தது. கால்­கள் இரண்­டும் 180 பாகைக்­கும் அதி­க­மாக விரித்து கட்­டப்­பட்டு இருந்­தது. கண்­கள் வீங்கி இருந்­தன. காதின் ஒரு பகுதி மூக்கு போன்ற இடத்­தில் இருந்து இரத்த கசி­வு­கள் காணப்­பட்­டன. வாய்க்­குள் உள்­ளாடை திணிக்­கப்­பட்டு இருந்­தது.

மார்­பக பகு­தி­யில் இரண்டு முடி­கள் காணப்­பட்­டன அவற்றை தட­ய­வி­யல் பிரி­வி­னர் சேக­ரித்­துக்­கொண்­டார்­கள். பெண் உறுப்­பில் இருந்து வடிந்த ஒட்­டும் தன்மை உள்ள திர­வத்தை சேக­ரித்­துக் கொண்­டேன்.

பின்­னர் சட­லத்­தின் கட்­டுக்­களை தட­ய­வி­யல் பிரி­வி­ன­ரின் உத­வி­யு­டன் அவிழ்த்­தேன் அப்­போது சட­லத்­தின் கழுத்து பகு­தி­யில் பாட­சாலை கழுத்­துப்­பட்­டி­யால் கழுத்து இறுக்கி கட்­டப்­பட்டு நிலத்­தில் இருந்து சுமார் இரண்டு அடி உய­ரத்­தில் உள்ள மரத்­தில் கட்­டப்­பட்டு இருந்­தது. அந்­தக்­கட்­டு­களை அவிழ்த்து சட­லத்தை திருப்பி பார்த்த போது பிட்ட பகு­தி­யில் காயங்­கள் இருந்­ததை அவ­தா­னித்­தேன்.

அதன் பின்­னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக யாழ்.போதனா வைத்­திய சாலை க்கு சட­லத்தை எடுத்து வந்­தோம். அன்­றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணி­ய­ள­வில் பிரேத பரி­சோ­த­னையை மேற்­கொண்­டேன்.

சட­லத்­தில் 8 காயங்­களை அவ­தா­னித்­தேன். எனத் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/32398.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வு...தீர்ப்பை விட.....
அந்த ராஜாங்க அமைச்சரை சிறையிலை அடையுங்கையா... குற்றம் செய்தவன் எந்த தைரியத்திலை செய்தான் எண்டது ஊர் உலகத்துக்கு தெரியட்டும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கின் தீர்ப்பு பெளதீக சான்றுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதா அல்லது சாட்சிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதா? :unsure:

  • தொடங்கியவர்

"வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே"

Published by RasmilaD on 2017-09-28 09:46:43

வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான சாட்­சி­யங்­க­ளையும் தயார்செய்து எங்­க­ளுக்கும் வித்­தி­யா­வுக்கும் நீதி கிடைக்­காது செய்­து ­விட்­ட­னர் என்று வித்­தியா படு­கொலை வழக்கின் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட ஏழு குற்­ற­வா­ளி­களும் ரய­ல்ட் அட்பார் மன்றில் தெரி­வித்­தனர்.

Local_News.jpg

வித்தியாமீதான கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ரய­லட் அட்பார் நீதி­மன்றில்  திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தல­மையில் இடம்­பெற்­று­வந்­தது. 

இவ் வழக்கு விசா­ர­ணையில் அனைத்து வழக்கு நட­வ­டி­கை­களும் பூர்த்­தி­யாக்­கப்­பட்டு நேற்று புதன்­கி­ழமை  காலை 10.02 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்­போது குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட ஏழு பேருக்கும் எதி­ரான தண்­டனை தீர்ப்­பா­னது வாசிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு மன்­றா­னது ஏன் உங்­க­ளுக்கு இத் தண்­டனை வழங்­கப்­ப­டக்­கூ­டாது என அவர்­க­ளிடம் வினவி­யது.

இதற்கு ஒவ்­வொரு குற்­ற­வா­ளி­களும் தனித்­த­னி­யாக பதி­ல­ளித்தனர். இதன்­படி இவ் வழக்கின் இரண்­டா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார் கூறும்­போது, நான் ஒன்றும் செய்­ய­வில்லை, சந்­தே­கத்தில் தான் என்னை பிடித்­தார்கள், நான் எதுவும் செய்­ய­வில்லை, எனக்கு பிள்ளை குட்­டிகள் என கூறி அழுதார். இவரை தொடர்ந்து மூன்­றா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பூபா­ல­சிங்கம் தவக்­குமார் கூறும்­போது, எனக்கும் இந்த குற்­றச்­சாட்­டுக்கும் சம்­பந்­த­மில்லை, நான் ஏன் இந்த கொலையை செய்ய வேண்டும், சி.ஜ.டியினர் பொய்­யான குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ளனர் என தெரி­வித்தார். இவரை தொடர்ந்து நான்­கா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்த மகா­லிங்கம் சசி­தரன் கூறும்­போது, எனக்கும் இந்த சம்­ப­வத்­திற்கும் தொடர்­பில்லை, நான் 12ஆம் திகதி கொழும்பில் தான் இருந்தேன். ஸ்ரேசன் றோட் ஏஞ்சல் லொட்ஜில் தான் இருந்தேன், ஸ்ரேசன் றோட்­டில் எல்லா இடத்­தி­லயும் சீ சீ.ரி.வி கமரா இருக்­கி­றது. அதில் பார்த்­தாலே தெரியும், அதனை செய்­யுங்கள், 13 திகதி வீடி­யோவ நாங்கள் சமர்ப்­பிக்­க­வில்லை. சி.ஜ.டியினர் தான் சமர்­ப்பித்­தார்கள். எனக்கு துணையாக இருந்த அம்­மாவும் சிறை­யில அடைத்து அவாவும் செத்து போய்­விட்டா, அம்­மா­விட்டா மற்­றது மனைவி பிள்­ளைகள் தான், அவை­ய­ளுக்கு ஒன்னும் தெரி­யாது. அப்­படி இருந்தும் மனை­விய வீடியோ

எடுத்­து­வர அனுப்­பினான், யாழ்.ஹோட்டல் வாறன் என்டு சொல்லி போட்டு அதுக்கு பிறகு போன்­ஆன்சர் பண்­ண­வில்லை. எல்லாம் கட­வு­ளுக்கும் தெரியும் என தெரி­வித்தார்.

இதனை தொடர்ந்து 5ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தில்­லை­நாதன் சந்­தி­ர­காசன் கூறும்­போது, எனக்கும் இந்த சம்­ப­வத்­துக்கும் தொடர்­பில்லை, நான் ஐந்து பொம்­பிள பிள்­ளை­க­ளோட தான் பிறந்தேன். சி.ஐ.டியினர் பொய்­யான சாட்­சி­யத்தை உரு­வாக்கி எங்­கள குற்­ற­வா­ளி­க­ளாக காட்­டி­விட்­டார்கள். இதில் எங்­க­ளுக்கும் நீதி கிடைக்­க­வில்லை, வித்­தி­யா­வுக்கும் நீதி கிடைக்­க­வில்லை. இது கண்­கட்டி வித்த போன்று உள்­ளது. வீடியோ எடுத்தம் எடுத்தம் என்று சொல்­கி­றார்கள். அந்த வீடி­யோவ சி.ஐ.டி யினர் எடிட் பண்ண கொடுத்­தி­ருக்­கி­றார்கள் போல, அந்த வீடி­யோவை எடுத்து நீதி­ப­திகள் ஐயாட கையில கொடுக்க வேணும். அத வைச்சு உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள கண்­டு­பி­டிக்க வேண்டும். ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்­தில மயூரன் பெட்­ட­யல வைத்து ஐந்து பேறு­டைய டி.என். என்று கொடுத்­தவர். அந்த விந்­த­னுக்கள் அழிக்­கப்­பட்­டதா தெரி­ய­வில்லை. இது தமி­ழ­னுக்கு ஏற்­பட்ட அவ­மானம், இப்­ப­டி­யான சம்­ப­வங்கள் எங்கள் ஊர்ல முதலே நடந்­தி­ருக்கு. அத அப்­பவே கவ­னித்­தி­ருந்தா இப்­போது இப்­ப­டி­யான சம்­பவம் நடந்­தி­ருக்­காது.

எங்­க­ளுக்கு முதலில் யாரும் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­க­வில்லை. இப்­போது தான் ரகு­பதி ஐயா ஆஜா­ரானர், எங்­க­ளுக்கு முதல்­லயே சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கி­யி­ருந்தால் நாங்கள் இன்று குற்­ற­வா­ளிக்­கப்­பட்­டி­ருக்க மாட்டோம். சட்­டத்­தில கூறு­கின்­றார்கள் 1000 குற்­ற­வாளி தப்­பித்­தாலும் ஒரு நிர­ப­ராதி கூட தண்­டிக்­கப்­பட கூடாது என்று. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளி­யில இருக்­கின்­றார்கள். எல்­லோரும் அவர்­க­ளிடம் கவ­ன­மாக இருங்கள் என தெரி­வித்தார்.

இதன்­பின்னர் 6ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­தேவன் துஷாந்தன் கூறும் போது,

நானும் ஐந்து பெண் பிள்­ளை­க­ளோட பிறந்­தவன், நான் வித்­தி­யாவை காத­லித்­த­தாக கூறு­கின்­றார்கள். நான் வித்­தி­யாவை காத­லிக்­க­வில்லை, சுரேஸ்­கரன் என்­ப­வரை முதலில் கிளி­நொச்­சில வைத்து பிடித்த சி.ஐ.டியினர் பின்னர் அவரை விட்­டு­விட்­டார்கள். அப்­படி விடும் போது 800 ரூபா காசு கொடுத்தே இர­யலில் ஏற்றி அனுப்­பி­னார்கள். பின்னர் ஒரு­வ­ருடம் கழித்து பிடித்­தார்கள். என்­னையும் அரச சாட்­சி­யாக மாறு­மாறு நான்காம் மாடி­யில வைத்து கேட்­டார்கள். எங்­க­ளுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்­கவே கூடாது. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியில் இருக்­கின்­றார்கள். அவர்­களை தப்ப விட்­டது சி.ஐ.டியி­னர்தான். நான் என்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரிக்­கின்றேன். கடவுள் ஒருவர் இருக்­கின்றார். அவர் எல்­லோ­ரையும் பார்த்­துக்­கொண்டு தான் இருக்­கின்றார் என தெரி­வித்தார். இவரை தொடர்ந்து 8ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ஜெய­தரன் கோகிலன் கூறும்­போது,

நான் உதவி செய்­யவும் போக­வில்லை, ஒத்­தாசை செய்­யவும் போக­வில்லை. நான் எந்­த­வொரு தப்பும் செய்­வில்லை. எனக்கு நீதி கிடைக்கும் என்று தான் நான் இவ்­வ­ளவு நாள் பொறுத்­தி­ருக்­கிறேன் என தெரி­வித்தார். இறு­தி­யாக 9ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த மகா­லிங்கம் சசிக்­குமார் (சுவிஸ்­குமார்) கூறும்­போது, எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனைய அத்தனை பேரும் சொன்

னதும் உண்மை, இது சி.ஐ.டியினரால் உருவாக்கப்பட்ட பொய் கேஸ், இதுல பெரிசா நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை, உங்களால முடிஞ்சா சட்லைட் மூலமாக யார் இத செய்தது என்று கண்டுபிடியுங்கள், சி.ஐ.டியினர நம்பி பிரியோசனம் இல்லை.

நீதிபதி ஐயாக்கள் சட்டலைட் மூலமா தேடிப் பாருங்கள் உண்மையான குற்றவாளிகள் வெளியே தான் இருக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டை சி.ஐ.டி யினர் போட்டார்கள். இந்த நிலமை இனி இங்க யாருக்கும் ஏற்பட கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவர்களுக்கான தீர்பானது மன்றினால் வாசிக்கப்பட்டது.

http://www.virakesari.lk/article/25010

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு : விளக்கமளிக்கின்றனர் சட்டத்தரணிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.