Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக நிற வேறுபாடு அல்லது பூர்வீக வேறுபாடு சார்ந்த வேறுபாடுகள் நிலைக்கலாம்.. ஆனால் சாதி நிலைக்கக் கூடாது என்பது உங்கள் வாதம் என்றால் நிச்சயம் உங்களால் சாதியப் பாகுபாடுகளை உலகில் அழிக்க முடியாது என்பது வருத்தமளிக்கும் உண்மையாகவே இருக்கும்..! மனித குலத்துள் உள்ள அனைத்துப் பாகுபாடுகளும் களையப்படும் நிலை அவசியம். அது மனதில் ஆழ இருந்து புறப்பட வேண்டும். எந்த நிறம் உயர்வானது என்ற சிந்தனை றேசிசத்தை காவுகிறதோ அதே போல் இந்த சாதி உயர்வானது என்ற சிந்தனையும் காவப்படும். நிறத்தால் உள்ள றேசிசத்தை அழிக்க முடியாதென்றால் சாதியையும் மனித மனங்களில் இருந்து முற்றாக அழிக்க முடியாது என்பதாகவே கொள்ள வேண்டும். ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்பதே யதார்த்தமான பார்வையாக இருக்கும்.

சிந்தனை சமத்துவம் பேணும் போது நிறமென்ன தொழில் என்ன பணம் என்ன கல்வி என்ன எதுவுமே ஏற்றத்தாழ்வற்ற நிலையை அடைய முடியும். அதுவே மனிதப் பலவீனங்களை உண்டு பண்ணும் பாகுபாடுகளைக் களையும். அது சாத்தியப்படாத போது ஒன்று மட்டும் எப்படி அகலும்..??! :huh:

Edited by nedukkalapoovan

  • Replies 115
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்பதே யதார்த்தமான பார்வையாக இருக்கும்.

எது எப்படியோ அழிப்பதற்கு முதல் படி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல். இன்று மேற்குலகில் சட்டங்கல் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.

எங்களுக்கு (தமிழர்) உள்ள பௌதீக advantage இனால் அது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததும் தானாக அழிந்து விடும். தமிழரூக்குள் உள்ள சாதிய வேறுபாட்டை அழிப்பதே முதல் நோக்கம். ஏனென்றால் அது எம்மை எமது போராட்டத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.

சிந்தனை சமத்துவம் பேணும் போது நிறமென்ன தொழில் என்ன பணம் என்ன கல்வி என்ன எதுவுமே ஏற்றத்தாழ்வற்ற நிலையை அடைய முடியும். அதுவே மனிதப் பலவீனங்களை உண்டு பண்ணும் பாகுபாடுகளைக் களையும். அது சாத்தியப்படாத போது ஒன்று மட்டும் எப்படி அகலும்..??! :huh:

அந்த சமத்துவத்திற்கும் மேற்சொன்னதே முதற்படி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை படிக்கும் பாக்கியம் கிடைத்தது..

-------

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

--------

  • கருத்துக்கள உறவுகள்

சாதி உட்பட்ட மனிதர்கள் மீது ஏற்றத்தாழ்வுகளை செருகும் உலகில் உள்ள அனைத்துப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான தளம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும்.

சாதி எமது போராட்டத்தை அழிக்கிறது என்பது தவறான பரப்புரை. சாதியைவிட பிரதேச வேறுபாடுகள் மிக மோசமாக தலைவிரித்தாடுகிறது. யாழ்ப்பாணத்தவர்கள் என்பதும் அவர்கள் தங்களுக்குள் ஊர் பேரோடு அடையாளம் தேடுவதும் பாகுபாடுகள் வளரவே இடமளிக்கின்றன. அண்மையில் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வில் கையளிக்கப்பட்ட அஞ்சலி செய்திகளை வாசித்தால் இதைத் தெளிவாகக் காணலாம். வல்வெட்டி இளையோர் வரணி இளையோர் வட்டுக்கோட்டை இளையோர் என்று கிராமப்பாகுபாடுகள் கூட வெளிப்பட்டது. அந்தளவுக்கு ஒரு தமிழ் தேசிய தளத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் கூட தமிழர்களால் நாம் தமிழீழத்தவர் என்ற நிலையில் ஒரு அஞ்சலியை செலுத்த முடியவில்லை. அஞ்சலியில் கூட பாகுபாடுகள் காட்டுவதை பெருமையாக எண்ணினரோ கடமையாக எண்ணினரோ தெரியவில்லை. போராட்டத்தை அழிப்பதில் சாதியை விட பிரதேசவாதமே இன்று எதிரியால் தமிழர்களுக்கு எதிராக வலுவாக பாவிக்கப்படுகிறது. சாதி என்பது போராட்டக்களத்தில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. புகலிடத்தில் எல்லாமே புத்தியிர்ப்புப் பெற்று வருகிறது. காரணம் மனங்களில் இருந்து அது அழிக்கப்படவில்லை. பதுக்கப்பட்டிருந்ததால்..! இந்த நிலையே உலகெங்கும் றேசிசம் தொடங்கி மனிதப் பாகுபாடுகளை வளர்க்கின்றதன் அடிப்படையாகும். :huh::huh:

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை படிக்கும் பாக்கியம் கிடைத்தது..

-------

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

--------

தாழ்ந்த சாதியினர் என்பதனை நாவலர் அவர்களின் மனிதர்கள் சிலரிடம் இருந்த கெட்ட பழக்கங்களின் அடிப்படையில் வைத்திருக்கலாம். அவர் இதுதான் தாழ்ந்த சாதி என்று குறிப்பிடவில்லை அந்த இடத்தில். நாம் பாட் பீப்பிள் குட் பீப்பிள் என்பதைப் போல நாவலர் பாட் பீப்பிளை அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம். நாவல எதிர்ப்புவாதிகள் அதற்கும் சாதியச் சாயம் பூச முற்படுகின்றனர். :huh: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிக்கலான விடயத்தை மீண்டும் பேச துணிந்து இருக்கிறோம்.

சாதி முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது அதுக்காக இன்று தலை விரித்து ஆடுகிறது என்றும் இல்லை.

ஆனால் தற்காலிகமாக அது உறங்குவது போல் இருக்கிறது இந்த சாதி என்ற அசுரனும் எமது போராட்டத்தின் வெற்றி தோலிவியோடு பின்னி பினைந்து கொண்டு இருக்கிறது......... எமது விடுதலை போராட்டம் அதன் போக்கும் தான் இந்த சாதி என்ற அசுரனின் வெற்றியையும் அழிவையும் திர்மானிக்கும்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி உட்பட்ட மனிதர்கள் மீது ஏற்றத்தாழ்வுகளை செருகும் உலகில் உள்ள அனைத்துப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான தளம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும்.

சாதி எமது போராட்டத்தை அழிக்கிறது என்பது தவறான பரப்புரை. சாதியைவிட பிரதேச வேறுபாடுகள் மிக மோசமாக தலைவிரித்தாடுகிறது. யாழ்ப்பாணத்தவர்கள் என்பதும் அவர்கள் தங்களுக்குள் ஊர் பேரோடு அடையாளம் தேடுவதும் பாகுபாடுகள் வளரவே இடமளிக்கின்றன. அண்மையில் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வில் கையளிக்கப்பட்ட அஞ்சலி செய்திகளை வாசித்தால் இதைத் தெளிவாகக் காணலாம். வல்வெட்டி இளையோர் வரணி இளையோர் வட்டுக்கோட்டை இளையோர் என்று கிராமப்பாகுபாடுகள் கூட வெளிப்பட்டது. அந்தளவுக்கு ஒரு தமிழ் தேசிய தளத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் கூட தமிழர்களால் நாம் தமிழீழத்தவர் என்ற நிலையில் ஒரு அஞ்சலியை செலுத்த முடியவில்லை. அஞ்சலியில் கூட பாகுபாடுகள் காட்டுவதை பெருமையாக எண்ணினரோ கடமையாக எண்ணினரோ தெரியவில்லை. போராட்டத்தை அழிப்பதில் சாதியை விட பிரதேசவாதமே இன்று எதிரியால் தமிழர்களுக்கு எதிராக வலுவாக பாவிக்கப்படுகிறது. சாதி என்பது போராட்டக்களத்தில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. புகலிடத்தில் எல்லாமே புத்தியிர்ப்புப் பெற்று வருகிறது. காரணம் மனங்களில் இருந்து அது அழிக்கப்படவில்லை. பதுக்கப்பட்டிருந்ததால்..! இந்த நிலையே உலகெங்கும் றேசிசம் தொடங்கி மனிதப் பாகுபாடுகளை வளர்க்கின்றதன் அடிப்படையாகும். :huh::huh:

ஆமாம். நீங்கள் சொல்வதை நான் வழிமொழிகிறேன். ஒரு வகையில் அடுத்து நான் எழுத இருந்த விடயம் இதுவாகும்.

சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் இரு கருத்துக்களிற்கு இடமில்லை. இதை தவிர சாதியை அழிக்க என்று நான் மேற்சொன்ன வழிமுறைகள் தாயகத்துக்கு மட்டுமே பொருந்தும். இங்கு நாம் ஒரு வித்தியாசமான களத்தில் புலம்பெயர்ந்து இருக்கிறோம்.

அதாவது இன்று புலம்பெயர் தேசங்களில் பல புதுப் புதுச் சாதிகள், பிரிவினைகள் உருவாகிவருகின்றன. அதில் முக்கியமான சாதி படித்தவர்கள் பகுத்தறிவாளிகள் என்ற சாதி. இவர்கள் போராட்டத்தினை விட்டு விலகியே இருக்கிறார்கள். இதை விட ஊர் பேரால் உள்ள குழுமங்கள். இவ்வாறான பிரிவினைகள் எந்த அளவுக்கு போராட்டத்தை பின்னுக்கு இழுக்கிறது என்றும் ஆராயவேண்டும். போராட்டத்தை விட்டு விலகி இருப்பவர்களி விடுவோம். ஆதரவானவர்களின் இப்படியான குழுமங்களினால் என்ன வகையான backfiring ஏற்படுகிறது போன்ற ஆராய்ச்சிகள் தேவை. அது தவிர போராட்டத்தை விட்டு விலகி இருக்க விருப்புவோர் யாவர்\/ ஏன் போன்ற வகையிலான ஆராய்ச்சிகளும் தேவை. ஒவ்வொரு பள்ள்ளிகளுக்கும் பழைய மாணவர் சங்கம் இருப்பது போல இவ்வாறான ஊர் குழுமங்கள் இருப்பதில் தவறில்லை தான். ஆனால் இவை ஊரை சொல்லி அடிபடுதல்ல் போட்டி போன்றவிடயங்கள் கூடியதால் ஏதாவது புதுப்புதுப் பூதங்கள் கிளம்புகின்றனவா என்று விவாதிக்க வேண்டும்.

போராட்டத்துக்கு ஆதரவானவர் விலகி இருப்பவர் என்பதை தவிர போராட்டத்தை விளங்கியோர், விளங்காதோர் என்றபிரிவும் உண்டு. :huh::lol: :lol: :lol::o:D

விடுதலைப்போராட்டத்தின் வீச்சைத் திசை திருப்பும் அல்லது அதன் பலத்தைக் குறைக்கும் சமுக சார்பான எந்த ஒரு விடயத்திலும் இக்காலகட்டத்தில் எமது மக்கள் மனச் சஞ்சலமற்ற போக்கைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். தமிழ்மக்கள் விடுதலை அடைவதற்கு அவர்களின் ஒட்டுமொத்தமான ஆதரவு விடுதலைப்போராட்டத்துக்கு தேவை. அந்த அடிப்படையில் நான் மிக இலகுவான ஒரு வழிமுறையைக் கைக்கொண்டுவருகிறேன். எனது விருப்பம்-எனது வழக்கம்-எனது பாரம்பரியம் என்பதிலிருந்து என்னால் முடிந்தளவு விடுபட்டு தேசியத்தலைவரின் கொள்கைகளை முன்னெடுக்கும் படியாக எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் அது. இதில் கேள்விக்கு இடமில்லை. விவாதமும் தேவையில்லை. நான் என்ன சாதி என்பதை மறந்து அல்லது அப்படி ஒருவனாக என்னை உயர்வாகவோ தாழ்வாகவோ எண்ணிப் பார்ப்பதைத் தவிர்த்து பல வருடங்களாகிவிட்டன.

இங்கு எல்லோரும் எல்லாக் கருத்துக்களையும் படித்தீர்கள். வெளிப்படையாக சொல்லுங்கள் யார் யார் சாதி வழக்கம் தமிழினத்துக்கு வேண்டுமென்று சொல்லுகிறீர்கள். உங்களில் யார் வேண்டாமென்று சொல்லுகிறீர்கள்.

இன்னும் வெளிப்படையாகக் கேட்பதானால் சாதிபற்றிய விடுதலைப்புலிகளின் கொள்கைகளை சொல்லிலும் செயலிலும் மானசீகமாக பின்பற்ற எத்தனைபேர் தயாராயிருக்கிறீர்கள்? இது தான் இப்போது தெரியவேண்டிய உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை அழிப்பதில் சாதியை விட பிரதேசவாதமே இன்று எதிரியால் தமிழர்களுக்கு எதிராக வலுவாக பாவிக்கப்படுகிறது. சாதி என்பது போராட்டக்களத்தில் பலவீனப்பட்டுப் போயுள்ளது.

நீங்கள் சொல்லும் எதிரி யார்? 2000 ஆண்டுக்கு முன்பிருந்தே எமது எல்லாக்கெட்ட மழக்கங்க்களூக்கும் காரணம் அப்பப்போதைய எமது எதிரிகளே! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:huh:

Edited by balapandithar

வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.

தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது. செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை. அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது. ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை 'புனிதம் தீட்டு அகமணமுறை' என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். 'நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது. நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள், கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும். எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்து வருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது

தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும் தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியில் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த (பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடு காண முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதும் தான் தமிழர் மதமாகும். சிவலிங்கம் என்பது ஆண் பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது. ஐரோப்பியர்களான தாங்கள் கடல் கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம் எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள். இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள்.இன்று சோழர்களும் இல்லை. அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுழைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை. இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.

இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்

இந்தக் கட்டுரையின் சாராம்சம் இதுதான். இதை ஐரோப்பிய இனவாதத்துடன் ஒப்பிடுபவர் இந்தக்கட்டுரையை முழுவதுமாக படிக்கவில்லை அல்லது அது அவருக்கு விளங்கவில்லை என்று தெரிகிறது.

இனவாதத்துக்கான அடிப்படையும் சாதியத்துக்கான அடிப்படையும் வேறு என்பதை தயவு செய்து புரிந்;து கொள்ள முயற்சிக்கவும்.

சாதியம் தமிழீழ விடுதலைப்போரை பாதிக்கவில்லை என்றும் ஆறுமுகநாவலர் சாதி பாக்கவில்லை என்றும் சொல்பவரிடம் யாழ் குடாநாட்டில் கோவில்களை வைத்து சாதி அரசியல் நடத்தும் மக்களை பிளவுபடுத்தும் டக்களஸ் ஐயாவின் அரசியல் சாயல் தெரிகிறது.

ஐயா தமிழர்களுக்கு என்று தனித்துவமான மெய்யியல் இருக்கிறது. அதேபோல தமிழர்களுக்கென்று மீக நிண்டகால வரலாறும் இருக்கிறது.

சமஸ்கிரதத்தை தேவ பாசை என்றும் தமிழை இழிசனர் வழக்கெற்றும் இழிவு படுத்திய ஆரிய மதத்தை தமிழர் மதமென்று நிறுவ முற்படவேண்டாம்.இந்தியாவுக்க

சாதியத்தை உடன் பிறந்தே கொல்லும் வியாதிக்கு ஒப்பிடுவதில் எனக்கு சம்மதமில்லை. காரணம் சாதியம் என்பது ஒருவரின் உடலுடனோ உயிருடனோ அல்லது ஒருவரின் மரபணுக்களுடனோ சம்பந்தப்படாத ஒரு பட்டம் அல்லது ஒரு வகை குறியீட்டுப் பெயர்.

எப்படி ஒரு மனிதனின் பெயர் அவனுடன் உடன் பிறக்கவில்லையோ அது போலவே சாதியம் என்ற குறியீட்டுப் பெயரும் அவனுடன் உடன் பிறக்கவில்லை என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து.

ஏனெனில் வித்தியாசமான சாதியைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் மனிதர்களை உலகில் உள்ள எந்த ஒரு விஞ்ஞான-சமய-சாஸ்திர-தொழில்நுட்ப முறைகளாலும் இவர் இன்ன இன்ன சாதிக்காரர் என்று அடையாளம் கண்டு பிரிக்க முடியாது. சாதியம் என்று ஒன்று உண்டு அது ஒருவருக்கு பிறப்பினால் வருவது என்று கூறி அது அவரின் சிறப்பு அல்லது குறைபாடு என்று எண்ணும் தத்துவத்தை முறியடிக்க நாம் அனைவரும் முதலில் முன் வருதல் வேண்டும்.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாசின்னப்பொடி அவர்களுடைய கட்டுரை மிகவும் ஆழமானது.

ஏற்றத் தாழ்வு மிக்க சாதி என்பதற்கு இந்து மதமே அடிப்படைக் காரணம் என்பதையும், தமிழர் கடவுள்கள் எப்படி ஆரியக் கடவுள்கள் ஆக்கப்பட்டனர் என்பதையும் மிக அழகாக விளக்கி இருக்கிறார்.

நான் இந்தக் களத்தில் அடிக்கடி "ஈழத்தில் பார்ப்பனியம் வேளாளர்கள் வடிவில் இருக்கிறது" என்று சொல்லி வந்திருக்கிறேன். அதையும் சரியான முறையில் இந்தக் கட்டுரை சொல்லி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

ஐயோ சபேசன் எங்கயென்றில்லை கிடைக்கும் இடத்தில் மதவிரோதத்தை கடை போடுவதற்க்கென்றே அலைகிறீர்கள் போல் உள்ளது.

மதம் இன்னும் பல சொல்கிறதே1

பொய்சொல்லாதே!

வாழ்கையில் ஒழுக்கம் பேணு!

மாற்றான் சொத்துக்கு ஆசைப் படாதே!

....................................................

......................................................

இப்படி மதம் சொல்லும் எல்லாவற்றையும் உயிர் போல் போற்றி வாழ்கிறான். எனவே சாதியத்தையும் போற்றுவதற்கு மதமே குற்றவாளி என்று நிரூபித்து விடலாம் போல் இருக்கிறது. இல்லையா?

சாதியம் பற்றி கதைப்பதால் சாதியம் வளரும் என்று சொல்பவர்கள் எதன் அடிப்படையில் அப்படிச் சொல்கிறார்கள்?

சாதியம் ஒரு கீழ்த்தரமான விடயம் என்று சொல்வதால் ,எப்படி சாதியம் வளரும் என்று விளங்கவில்லை?

கீழ்த் தரமான விடயங்களை ஏன் பூசி மெழுகி மறைக்க முற்படுவான்? பூசி மெழுகுவது மறைப்பதற்காக,அவற்றைப் பொத்திப் பாதுகாக்க.ஆறுமுக நாவலர் வழி வந்த சற்சூத்திர சைவ மரபை கட்டிக் காட்கத் தான், அதன் கீழ்த்தரமான கடந்த காலத்தை இங்கே மறைக்க பலர் முற்படுகின்றனர்.

அங்கே புலத்தில் முழைவிட்ட ஒரு சாதிய எச்சம் , வேளாளர் தேசிய விடுதலைப் போரிற்காக போராடவில்லையா என்று எழுதிக் கொண்டே, நான் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுகிறார்.புலம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் சாதியையும் சேர்த்துத் தான் புலம் பெயர்ந்து உள்ளது.ஒவ்வொரு குடும்பத்தில் கதையாடல்களிலும் உறவு முறைகளிலும் சாதி நித்தம் நித்தம் வந்து போகிறது.பொதுத் தளத்தில் இவற்றைப் பேசினால் மட்டும் சாதி முழை விட்டு விடுமாம்.

நாவலர் அடியொற்றி உருவாக்கப்பட்ட சைவ வேளாளத் திமிரின் எச்சமே இந்த , சாதியைப் பற்றிப் பேசதையுங்கோ என்பதன் அடி நாதம்.ஆட்டங் கண்டுள்ள சாதியாத்தை புலத்தில் தக்க வைத்து பின்னர் பதியம் செய்யலாம் எங்கிற நப்பாசை தான் இது.ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்போது பிராபகரன் கோவிலில் படையல் செய்தார் என்றும் எழுதத் தொடங்கி விட்டார்கள்.

சமய சாதிய வரமுறைகள் அற்றதே தமிழ்த் தேசியம் என்பதை இவர்களால் உள் வாங்க முடியவில்லை.பூசி மெழுகி சாதியா அப்படியெண்டா என்ன என்று கேட்பதே இவர்களின் தற்போதைய உபாயமாக இருக்கிறது.பிரதேச வாதத்தை எதிரிகள் பாவித்தது போல் சாதியையும் பாவிக்க எத்தனிகிறார்கள்.இவர்களுக்கு வசதியாக இந்தச் சைவ சாதியக்குருத்துக்குளின் எழுதுக்கள் இப்போது புலத்தில் உள்ள புலி எதிர்ப்பாளர்களால் பயன் படுகின்றன. குறிப்பாக தமிழ்த் தேசிய விடுதலையின் பால் மிகுந்த ஆதரவைக் காட்டி வரும் தமிழ்னாட்டில் இயங்கும் தலித்திய அமைப்புக்கள் மத்தியில் புலிகளின் சமூகனீதிக்கான போராட்டத்தை மறைத்து ,தமிழ்த் தேசிய விடுதலைப்போரை புலத்தில் உள்ள சைவ வேளாளரின் போராட்டமாகக் காட்டும் யுக்திகள் மேடை ஏறத் தொடங்கி உள்ளன. ஆனந்தசங்கரி எப்படி யாழ் நூலகத் திறப்பு விடயத்தில் சாதியைப் பாவித்தாரோ அதே முறையில் சாதியம் புலத்தில் தமிழர்களைப் பிரிப்பதற்கு கையாளப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது.இந்த தருணத்தில் தமிழ்த் தேசிய விடுதலையின் பால் நேசம் கொன்றோர் அனைவரும் சாதியம் பற்றிய சரியான கருத்துக்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன் வைக்க வேண்டும்.பூசி மெழுகுவது எதிரிக்கு வாய்ப்பனதாகவே முடியும்.'பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமாம்' எங்கிற பாலகத் தனமான கருத்தாடல்களில் இருந்து விடு பட்டு அரசியல் முதிர்ச்சியுடன் செயற்பட வேண்டிய காலமிது.

பிரதேச வாதத்தை எதிரிகள் பாவித்தது போல் சாதியையும் பாவிக்க எத்தனிகிறார்கள்.இவர்களுக்கு வசதியாக இந்தச் சைவ சாதியக்குருத்துக்குளின் எழுதுக்கள் இப்போது புலத்தில் உள்ள புலி எதிர்ப்பாளர்களால் பயன் படுகின்றன. குறிப்பாக தமிழ்த் தேசிய விடுதலையின் பால் மிகுந்த ஆதரவைக் காட்டி வரும் தமிழ்னாட்டில் இயங்கும் தலித்திய அமைப்புக்கள் மத்தியில் புலிகளின் சமூகனீதிக்கான போராட்டத்தை மறைத்து ,தமிழ்த் தேசிய விடுதலைப்போரை புலத்தில் உள்ள சைவ வேளாளரின் போராட்டமாகக் காட்டும் யுக்திகள் மேடை ஏறத் தொடங்கி உள்ளன. ஆனந்தசங்கரி எப்படி யாழ் நூலகத் திறப்பு விடயத்தில் சாதியைப் பாவித்தாரோ அதே முறையில் சாதியம் புலத்தில் தமிழர்களைப் பிரிப்பதற்கு கையாளப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது.இந்த தருணத்தில் தமிழ்த் தேசிய விடுதலையின் பால் நேசம் கொன்றோர் அனைவரும் சாதியம் பற்றிய சரியான கருத்துக்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன் வைக்க வேண்டும்.பூசி மெழுகுவது எதிரிக்கு வாய்ப்பனதாகவே முடியும்.'பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமாம்' எங்கிற பாலகத் தனமான கருத்தாடல்களில் இருந்து விடு பட்டு அரசியல் முதிர்ச்சியுடன் செயற்பட வேண்டிய காலமிது.

சரியாகச் சொன்னீர்கள் ஐயா! நாங்கள் பிரச்சனை எங்கே இருக்கிறது என்று இனங்கண்டு அதை வேரோடு பிடிங்கி எறிவதற்கு பதில் அதை பூசி மெழுகி முடி மறைத்து காப்பாற்றவதற்கு முயல்கிறோம். புலம்பெயாந்த அடுத்த தலைமுறையையாவது சாதியற்ற ஒரு சமூகமாக தாயகத்தை நேசிக்கும் உண்மையான தமிழ் சமூகமாக ஊருவாக்குவது தான் எங்களது தேசத்தக்கும் தேசியத் தலைவருக்கும் நாங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி உட்பட்ட மனிதர்கள் மீது ஏற்றத்தாழ்வுகளை செருகும் உலகில் உள்ள அனைத்துப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான தளம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும்.

சாதி எமது போராட்டத்தை அழிக்கிறது என்பது தவறான பரப்புரை. சாதியைவிட பிரதேச வேறுபாடுகள் மிக மோசமாக தலைவிரித்தாடுகிறது. யாழ்ப்பாணத்தவர்கள் என்பதும் அவர்கள் தங்களுக்குள் ஊர் பேரோடு அடையாளம் தேடுவதும் பாகுபாடுகள் வளரவே இடமளிக்கின்றன. அண்மையில் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வில் கையளிக்கப்பட்ட அஞ்சலி செய்திகளை வாசித்தால் இதைத் தெளிவாகக் காணலாம். வல்வெட்டி இளையோர் வரணி இளையோர் வட்டுக்கோட்டை இளையோர் என்று கிராமப்பாகுபாடுகள் கூட வெளிப்பட்டது. அந்தளவுக்கு ஒரு தமிழ் தேசிய தளத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் கூட தமிழர்களால் நாம் தமிழீழத்தவர் என்ற நிலையில் ஒரு அஞ்சலியை செலுத்த முடியவில்லை. அஞ்சலியில் கூட பாகுபாடுகள் காட்டுவதை பெருமையாக எண்ணினரோ கடமையாக எண்ணினரோ தெரியவில்லை. போராட்டத்தை அழிப்பதில் சாதியை விட பிரதேசவாதமே இன்று எதிரியால் தமிழர்களுக்கு எதிராக வலுவாக பாவிக்கப்படுகிறது. சாதி என்பது போராட்டக்களத்தில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. புகலிடத்தில் எல்லாமே புத்தியிர்ப்புப் பெற்று வருகிறது. காரணம் மனங்களில் இருந்து அது அழிக்கப்படவில்லை. பதுக்கப்பட்டிருந்ததால்..! இந்த நிலையே உலகெங்கும் றேசிசம் தொடங்கி மனிதப் பாகுபாடுகளை வளர்க்கின்றதன் அடிப்படையாகும். :huh::huh:

தாழ்ந்த சாதியினர் என்பதனை நாவலர் அவர்களின் மனிதர்கள் சிலரிடம் இருந்த கெட்ட பழக்கங்களின் அடிப்படையில் வைத்திருக்கலாம். அவர் இதுதான் தாழ்ந்த சாதி என்று குறிப்பிடவில்லை அந்த இடத்தில். நாம் பாட் பீப்பிள் குட் பீப்பிள் என்பதைப் போல நாவலர் பாட் பீப்பிளை அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம். நாவல எதிர்ப்புவாதிகள் அதற்கும் சாதியச் சாயம் பூச முற்படுகின்றனர். :huh: :P

நாவலர் நல்லது பலது செய்திருந்தாலும் அவர் சாதி பார்த்தவர்தான் இதை மூடி மறைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. :lol::lol: :P :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மாட்டை தொழுவத்தில் கட்டி அடிக்கவேணும்

அப்ப தான் சிந்தாமல் சிதறாமல் அடிக்க முடியும்"

சாதியம் என்ற மாட்டையும் தமிழீழம் என்ற தொழுவத்தில் தான் கட்டி அடி(ழி)க்க முடியும்

எனவே

தேசியம் என்ற கண்ணாடியை அனைவரும் அணிந்துகொள்ளுவோம்

அப்போதுதான்

சிங்கள பேரினவாதம் என்ற கொடிய அரக்கன் கண்ணுக்குத் தெரிய

நம்முள்உள்ள மற்றைய வேறுபாடுகள் சிறிதாகித் தெரியும்

புலத்தில் நாம் புலிப்பாய்ச்சல் செய்யவேண்டிய நேரமிது

புத்தியை அதற்காகத் தீட்டுவோம்

நாம் தாக்குதல் மனநிலை (offensive mode) இற்கு மாறி சிங்கள பேரினவாதத்தின் பிரச்சார யந்திரத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

ஆறுதலாக அமர்ந்து 2000 வருடங்களுக்கு முன் சாதி எப்படித் தோன்றியது என்று வாதாடும் நேரம் இதுவல்ல.

கவனமாயிருங்கள்

2000 வருடங்களுக்கு முன் தோன்றிய சாதிப் பேயை நீங்கள் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது

50 வருடங்களுக்கு முன் தோன்றிய பேரினவாதமும்

2 வருடங்களுக்கு முன் தோன்றிய பிரதேசவாதமும்

எமது தேசியத்துக்குச் சடங்கு பண்ணிவிடும்.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தருணத்தில் தமிழ்த் தேசிய விடுதலையின் பால் நேசம் கொன்றோர் அனைவரும் சாதியம் பற்றிய சரியான கருத்துக்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் முன் வைக்க வேண்டும்.பூசி மெழுகுவது எதிரிக்கு வாய்ப்பனதாகவே முடியும்.'பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமாம்' எங்கிற பாலகத் தனமான கருத்தாடல்களில் இருந்து விடு பட்டு அரசியல் முதிர்ச்சியுடன் செயற்பட வேண்டிய காலமிது.

இன்னொரு விசயம்

"கருநா"கம் படமெடுத்து ஆடிய நேரம்

எங்கட ஆக்கள் எல்லாரும் றேடியோவில கோல் எடுத்து

"அவர"ப்பற்றி கவிதையாய் எழுதி - பாம்பே பேயே நாயே எண்டு பெரிய கொண்டாட்டம்

பிறகு பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாக்கும் பொறுக்கேலாமல் தமிழ்ச் செல்வன் ஒருநாள் பேட்டிகுடுத்தவர்.

அதுக்குப் பிறகு தான் எங்கட ஆக்கள் அடங்கினவை, ஆளை கவனிக்காமல் விட்டவை

இப்ப நிலமை பிழை எண்டபடியால் புலம்பெயர்ந்த ஒவ்வொருவனுக்கும் நீ இதைத்தான் செய்யவேண்டும் எண்டு

தனித் தனியாக அறிவித்தல் வராது

வாற அறிவித்தல் அறிக்கைகளை கவனமாக படித்து மண்டையை பாவித்து

எங்கட திசையை நாங்கள் தீர்மானித்து முன்னேறவேண்டும்

உது தான் சொல்லுறது தக்க ஒரு தலமை வேணும் புலம்பெயர்ந்த மக்களுக்கெண்டு

"தலை"(மை)யும் வேணும் கண்டியளோ

கிடக்குது, பாவியுங்கோ!!

("18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது. ஐரோப்பியர்களான தாங்கள் கடல் கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம் எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள். இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள்.இன்று சோழர்களும் இல்லை. அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.")

சிங்களப் பேரனிவாதம் பிரதேசவாதத்தை மட்டுமல்லை சாதியத்தையும் வைத்து தமிழ்தேசியத்தை அழிக்க முனைகிறது.யாழ் குடாநாட்டில் இன்று பழையபடி கோவில்களையும் கோவில் திருவிழாக்களையும் மையமாக வைத்து சாதியக் கலவரங்களுக்கு புத்துயிர் அழிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே புலம் பெயர்ந்த நாடுகளின் சமீபகாலமாக என்றுமில்லாத அளவுக்கு இந்த சாதியம் தூண்டி விடப்படுகிறது. பிரான்சிலே சிறிலங்கா தூதரகத்தின் பின் பலத்தடன் நடக்கும் ஒரு கோவில் தேர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த பொறுமையின் விளிம்பில் தமிழர்கள் என்ற முக்கியமான தாயக நிகழ்வுக்கு 1800 பேர் மட்டுமே வந்திருந்தார்கள். மற்ற நாடுகள் எப்படியோ எனக்கு தெரியாது நான் வசிக்கும் பிரான்ஸிலுள்ள தமிழ் மக்கள் சாதியத்தின் பேரால் திட்டமிட்டு பிளவு படுகிறார்கள். இளைய சமூகம் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுகிறது. இங்கே ஒருவர் ‘பாட் பீப்பிள்ஸ்’ என்று கருத்துத் தெரிவித்ததை போல இந்தப் பிரச்சனை இங்கே நாசூக்காக கையாளப்படுகிறது. லா சப்பல் தெருவில் நின்று அட்டகாசம் செய்யும் இளைஞர்களின் தொகை அதிகரிப்பது சாதாரண விடயமாக பார்க்க முடியாது. இந்தப் பிரச்சனையை கையாள்வதற்கு என்று மாதம் 2000 யூரோ சம்பளத்தில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை சிறீலங்கா அரசு டக்ளஸ் ஐயாவின் துணையோடு நியமித்திருக்கிறது எண்டால் பாருங்களேன்.

திரும்பவும் செக்குமாடு போல வட்டத்துள் இருந்து சுற்றத் தொடங்கிவிட்டீர்களா.

வாங்கப்பா வெளியே. பழைய விடயத்தைப் பற்றி கதைத்து அதைப்பற்றி ஆராய்ச்சி

செய்ய இதுவா தருணம். சாதியம் வேண்டாம் எண்டு முடிவெடுத்திட்டு

"வானமா எல்லை, இல்லவே இல்லை" எண்டு சொல்லிட்டு

போய்கிட்டே இருங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் நல்லது பலது செய்திருந்தாலும் அவர் சாதி பார்த்தவர்தான் இதை மூடி மறைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. :icon_mrgreen::icon_mrgreen: :P :blink:

நாவலர் வாழ்ந்த காலப்பகுதியில் சாதியப் பாகுபாடுகள் அதிகமிருந்திருக்கலாம். நாவலர் சாதி பார்த்தார் என்பதை நிறுவுவதல்ல இந்தத் தலைப்பின் நோக்கம். அவர் பார்த்திருக்கட்டும் விட்டிருக்கட்டும். ஆனால் நாவலரின் பெயரால் சாதிய எச்சங்களை பரப்புரை செய்வது அநாவசியமானது. எக்காலத்துக்கும் உபயோகமற்றது. அதுமட்டுமன்றி அது நாவலர் மீதான விரோதத்தை வளர்க்கும் செயல். இதைத்தான் பெரியார் போன்ற பகுத்தரிவு வாதிகளும் செய்தனர். பாகுபாடு இல்லை என்று கொண்டே பாகுபாட்டிற்கான வித்தை இட்டவர்கள். மனிதருக்குள் மோதல் மனப்பான்மையை சாதிய எதிர்ப்பின் பெயரில் ஆரம்பித்து இன்று அதுவே கட்சி அரசியல் என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது தமிழகத்தில். அது நாளை ஈழத்துக்கும் தாவலாம் என்பதற்கு யாழ் களத்தில் புதிதாக முளைத்துள்ள தலித்தும் தலித்தியமும் தமிழ் தேசிய தளத்துக்குள் செருகப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆக சாதி இருப்புக் கோசமும் ஒழிப்புக் கோசமும் அவரவருக்கு வேண்டியதை அளிப்பதால்தான் இன்னும் அது வாழ வைக்கப்படுகிறது.

நாவலரைத் திட்ட எதிர்க்க சாதி வேண்டும். சாதி இருந்தால்தான் சாதி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்து நாவலரை எதிர்க்கலாம். நாமெல்லாம் இந்த நிலைகளுக்கு அப்பால் சிந்திக்க கோருகின்றோம். நமக்கு நாவலர் வேறல்ல சாதாரண ஈழக் குடிமகன் வேறல்ல. காலவோட்டத்தில் நாவலர் சாதி பார்த்தார் என்பதற்காக நாவலர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் சாதியச் சாயக்தை இன்னும் பூசிக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. சாதியச் சாயம் பூசப்பட்டவை அழிக்கப்பட வேண்டும். அதை விடுத்து நாவலர் சாதி பார்த்தார் என்று சாதியத்துக்கு நாவலர் சான்றிதழ் வழங்குதலையும் செய்யலாம். பார்க்க சாதி எதிர்ப்புப் போன்ரிஉந்தாலும் நாவலர் போன்ற தமிழ் தொண்டர்களே சாதி பார்த்திருக்கிறார்கள் ஏன் நாம் பார்க்க கூடாது என்ற கேள்வியை விதைக்க அது அதிக நேரம் எடுக்காது. சாதி என்பது அருகிவரும் நிலையில் சாதி எர்திர்ப்பு என்ற போர்வையில் விதைக்கப்படும் பொதுக்கருத்துக்களே சாதிய எச்சத்தை காவி நிற்கின்றன. அதற்கு விளக்கம் சொல்லி நிற்கின்றன. இந்த நிலை வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு.

வீடுகளுக்குள் சாதி மட்டுமல்ல இன்னும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. பேசட்டும் அதை யாரும் தடுக்க முடியாது. தடுக்க முடியும் என்பது சுத்த முட்டாள் தனமானது வாதம். ஆனால் வீட்டுக்குள் பேசப்படுவது சமூகத்தாக்கம் செய்யவல்லதாக அமைவதை தடுக்க முடியும். வீட்டுக்குள் பேசுவதை வீட்டோடு நிறுத்த முடியும். வீட்டுக்குள் பேசப்படுவதை நிறுத்த வேண்டின் பேசப்படும் விடயத்துக்கு பொதுத்தளத்தில் முக்கியம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஒன்றை ஒழிப்போம் என்பதே அதற்கு முக்கியமளிக்கும் என்ற எண்ணக்கருவை மறந்து விடுகின்றனர். அளிக்கப்படும் அந்த முக்கியம் சாதி என்ற மாயைத் தோற்றம் பற்றிய அறிவியல் நிலைகளூடு விளக்கப்படும் போது அவற்றின் அவசியம் தேவையற்றதாக்கப்படும் போது அவை நிராகரிக்கப்படும் போது மக்கள் அதைப் பற்றிப் பேசுவதையும் தவிர்த்துக் கொள்வர். ஆனால் ஒழிப்போம் துடைப்போம் என்பது எதிர்வினைகளையும் வளர்க்கும். ஒருவர் ஒழிக்கச் சொன்னால் மற்றவர் வளர்க்க முற்படுவார். அதனால் தான் கூறுகின்றோம் மனிதரில் ஏற்றத் தாழ்வுகளை உண்டு பண்ணும் அனைத்துப் பாகுபாடுகளும் அகற்றப்பட பொதுவான தளம் ஒன்றின் அடிப்படையில் சரியான அறிவியல் ரீதியான அறிவூட்டல் பிரச்சாரமே அவசியம். அதைவிடுத்து நாவலரை திட்டுவதாலோ தலித்தென்று தலித்தியம் பேசுவதாலோ பாகுபாடுகள் அழிக்கப்படாது மாறாக விதைக்கப்படும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை ஒழிப்போம் என்பதே அதற்கு முக்கியமளிக்கும் என்ற எண்ணக்கருவை மறந்து விடுகின்றனர்.

ஐயோ ஐயோ.. உதை எழுதினவர் கொஞ்சக் காலத்துக்கு முதல் விபசாரிகளை ஒழிப்போம் எண்டு பொங்கி யெழுந்து பொளந்து கட்டினவர். உவருக்கு உதே வாடிக்கையாப் போச்சு.. இருந்து பாருங்கோ இப்ப நான் சொன்னதுக்கும் 100 சொற்களுக்கு குறையாமல் அலட்டுவார்.

நாவலர் ஒரு சாதி வெறியர் என்பதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு சாதி வெறியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் நடத்திய பாடசாலைகளில் வேளாளர் பிராமணர் தவிர்ந்த மற்றயை சாதியினரை சேர்த்துக் கொள்ள மறுத்தார். தாழ்ந்த சாதியனரோடு போசனம் செய்யக்கூடாது, வசிக்கக்கூடாது போன்ற விடயங்களை வெளிப்படையாக எழுதி வைத்துள்ளார்.

நாவலரின் தமிழ் தொண்டிற்காக அவரிடம் இருந்த அழுக்குகளை மறைப்பது அழகல்ல. நாவலர், ராமநாதன் போன்றவர்களிடம் இருந்த வெள்ளாள சாதி வெறி இன்று தமிழ் மக்கள் படுகின்ற பெரும் துயருக்கு முக்கிய காரணம்.

அன்றைய தமிழ் தலைமை தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக்குவது குறித்து சிந்திக்கவில்லை. அவர்களுடைய பார்வையில் சாதியம் இருந்தது. இனத்துவம் இருக்கவில்லை.

வேளாளர் என்கின்ற உயர் சாதியும், கண்டிச் சிங்களவர் என்கின்ற உயர் சாதியும் இணைந்து தாழ்ந்த சாதிகளை ஆளுகின்ற ஒரு நாடு இலங்கை என்கின்ற பார்வையை அன்றைய தமிழ் தலைமை கொண்டிருந்தது.

அதனால்தான் நளை சிங்கள இனம் தமிழினத்தை அடக்கக்கூடும் என்பதைக் சிந்திக்க மறந்தனர். சாதியின் வலிமை அவ்வளவு தூரம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. உதை எழுதினவர் கொஞ்சக் காலத்துக்கு முதல் விபசாரிகளை ஒழிப்போம் எண்டு பொங்கி யெழுந்து பொளந்து கட்டினவர். உவருக்கு உதே வாடிக்கையாப் போச்சு.. இருந்து பாருங்கோ இப்ப நான் சொன்னதுக்கும் 100 சொற்களுக்கு குறையாமல் அலட்டுவார்.

விபச்சாரம் என்பது ஓர் ஈனச்செயல். அதை செய்பவர்களை ஒழிப்பதன் மூலம் அதை ஒழிக்கலாம். சாதியம் என்பது எண்ணக்கருவாக வளர்ந்துள்ள ஒன்று. அதை ஒழிப்பது என்பது மக்களின் மனங்களில் ஏற்படும் கருத்தியல் தெளிவால் அன்றி ஆட்களை ஒழிப்பதால் அல்ல. வன்முறையான வழிமுறைகளில் எண்ணக்கருவை ஒழிக்க முயல்வது சரியான பலனை அளிக்காது. விடுதலைப்புலிகளும் சரி மற்றைய குழுக்களும் சரி கையாண்ட சில வன்முறைத்தனமான அணுகுமுறைகள் கூட சாதிய எண்ணக்கருவை மறைத்து வைத்தனவே தவிர மனங்களில் இருந்து அகற்றவில்லை. காரணம் மக்கள் அறிவியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக மாற்றங்களை பெறுவதற்குப் பதில் துப்பாகி முனைகளுக்குப் பயந்து நடித்துக் கொண்டதால் துப்பாக்கி முனைகள் நீங்கியதும் மக்களின் மனம் சுயரூபத்தைக் காட்ட வெளிக்கிட்டு விடுகிறது.

காவடி நீங்கள் கருத்துத் தெளிவுகளை எட்ட நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது. கருத்தாளர்களின் கருத்தாழம் உங்களுக்கு அடிக்கடி புலப்படாமல் போவது தொடர்கிறது. கவனித்துக் கருத்தாட முயலுங்கள். :P :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் ஒரு சாதி வெறியர் என்பதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு சாதி வெறியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் நடத்திய பாடசாலைகளில் வேளாளர் பிராமணர் தவிர்ந்த மற்றயை சாதியினரை சேர்த்துக் கொள்ள மறுத்தார். தாழ்ந்த சாதியனரோடு போசனம் செய்யக்கூடாது, வசிக்கக்கூடாது போன்ற விடயங்களை வெளிப்படையாக எழுதி வைத்துள்ளார்.

நாவலரின் தமிழ் தொண்டிற்காக அவரிடம் இருந்த அழுக்குகளை மறைப்பது அழகல்ல. நாவலர், ராமநாதன் போன்றவர்களிடம் இருந்த வெள்ளாள சாதி வெறி இன்று தமிழ் மக்கள் படுகின்ற பெரும் துயருக்கு முக்கிய காரணம்.

அன்றைய தமிழ் தலைமை தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக்குவது குறித்து சிந்திக்கவில்லை. அவர்களுடைய பார்வையில் சாதியம் இருந்தது. இனத்துவம் இருக்கவில்லை.

வேளாளர் என்கின்ற உயர் சாதியும், கண்டிச் சிங்களவர் என்கின்ற உயர் சாதியும் இணைந்து தாழ்ந்த சாதிகளை ஆளுகின்ற ஒரு நாடு இலங்கை என்கின்ற பார்வையை அன்றைய தமிழ் தலைமை கொண்டிருந்தது.

அதனால்தான் நளை சிங்கள இனம் தமிழினத்தை அடக்கக்கூடும் என்பதைக் சிந்திக்க மறந்தனர். சாதியின் வலிமை அவ்வளவு தூரம் இருந்தது.

மீண்டும் சாதிய எச்சங்களூடு பிரச்சாரங்களை சாதியம் என்றதுக்கு எதிராக எடுக்க முனைவது மிகவும் பலவீனமான கருத்தியல் நிலைப்பாடு.

நாவலர் மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலப்பகுதியில் சாதிய ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதற்குள் நாவலர் அகப்பட்டிருக்கலாம். அதற்குள் இருந்துதான் அவரால் பணிசெய்ய வேண்டிய சூழல் அவருக்கு இருந்திருக்கலாம். அதற்காக அவர் சாதியைக் காவினார் என்று நிறுவ முயல்வதும் நாவலரை சாதி வெறியர் என்ற நிலைக்குக் கொண்டு வருவதும் நாவலரை மதிக்கும் மக்கள் மனதில் சாதிய எதிர்ப்பு என்பது தவறான பார்வையைப் பெறும். அது நாவலர் எதிர்ப்பாக மாறும்.

தமிழ் தேசிய தளத்துக்கு வெளியில் தமிழ் அரசியல் வாதிகள் செயற்பட்டதுக்கு சாதி ஒரு சாட்டே அன்றி அதுவல்ல காரணம். சாதி ஆதிக்கமுள்ள காலத்தில் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் சாதிய சாயம் பூசுவது இலகு. அதுவே தமிழ் தேசியத்தின் மீது இன்றும் தலித்தியக் கோட்பாடுகளை வலியுறுத்துவோர் சீறிப்பாய வகை செய்து கொடுக்கின்றது என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். தமிழீழக் கோட்பாட்டை வலியுறுத்திய தந்தை செல்வா போன்றவர்கள் சாதியத்துக்கு அப்பால் நின்ற தலைவர்கள். ஏன் அவர்களை உதாரணம் காட்டாமல் சகட்டுமேனிக்கு தமிழ் தேசிய தளத்துக்கு அப்பால் நின்றவர்கள் எல்லோரும் சாதி வெறியர்கள் என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி அதன் பெயரில் சாதிய எதிர்ப்பை அரசியல் ஆக்க முற்படுகின்றனர். சாதியம் என்பது அரசியல் எண்ணக் கருவல்ல. சமூக எண்ணக்கரு. அதை மக்களின் மனங்களில் இருந்து அகற்ற அதன் போலித்தனங்களை அறிவியல் மற்றும் சமூகவியல் ரீதியாக நிறுவிக் காட்ட வேண்டுமே தவிர அரசியல் வாதிகளை மற்றும் தமிழ் விசுவாசிகளை சமூகத் தொண்டர்களை இதற்குள் செருக்குவதால் அது ஓர் பிரிவு மக்களிடம் சாதிய இருப்பை வலியுற்த்தவே வகை செய்யும். உணருங்கள். இவ்வகைப் பிரச்சாரங்கள் மனித ஏற்றத்தாழ்வுகளுக்கு வகை செய்யாத வகையில் ஜனநாயக கருத்தியல் சுதந்திர தளத்தில் நடைபெற வேண்டும். :P :blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபச்சாரம் என்பது ஓர் ஈனச்செயல். அதை செய்பவர்களை ஒழிப்பதன் மூலம் அதை ஒழிக்கலாம்.

விபச்சாரம் ஈனச்செயல் என்றால் சாதியம் மட்டும்தெய்வச்செயலா? :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.