Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட சுவாரசியமாக தம்பி யாழ்ப்பாணத்தில எங்கையெண்டுவினம்.. அங்கையோ.. அங்கை எங்கை.. அட அதுக்குள்ளயே.. அதுக்கை மேற்கையோ கிழக்கோ எண்டுவினம்..

ஆனா இது தாயகத்தில் முதியவர்களால் தான் சாதி பார்க்கும் அர்த்தத்தில் கேட்கப்படுகிறது. புலத்தில் மேற்படி நபர் தமது உறவாக அல்லது தமது பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டாரா என்ற ஆர்வத்தில் தான் கேட்கிறார்கள் போலும்.

சாதிய வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் கொண்ட ஒரு இனம் சமூக விடுதலை அடையவில்லையென்பது பொருள். சமூக விடுதலை அடையாத ஒரு இனம் இன விடுதலை அடைந்த பிறகு ஒருபோதும் பிரகாசிக்கப் போவதில்லை.

  • Replies 115
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை விட சுவாரசியமாக தம்பி யாழ்ப்பாணத்தில எங்கையெண்டுவினம்.. அங்கையோ.. அங்கை எங்கை.. அட அதுக்குள்ளயே.. அதுக்கை மேற்கையோ கிழக்கோ எண்டுவினம்..

ஆனா இது தாயகத்தில் முதியவர்களால் தான் சாதி பார்க்கும் அர்த்தத்தில் கேட்கப்படுகிறது. புலத்தில் மேற்படி நபர் தமது உறவாக அல்லது தமது பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டாரா என்ற ஆர்வத்தில் தான் கேட்கிறார்கள் போலும்.

சாதிய வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் கொண்ட ஒரு இனம் சமூக விடுதலை அடையவில்லையென்பது பொருள். சமூக விடுதலை அடையாத ஒரு இனம் இன விடுதலை அடைந்த பிறகு ஒருபோதும் பிரகாசிக்கப் போவதில்லை.

இதே கேள்விகள் வானொலியிலும் தான் கேட்கிறார்களே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிய வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் கொண்ட ஒரு இனம் சமூக விடுதலை அடையவில்லையென்பது பொருள். சமூக விடுதலை அடையாத ஒரு இனம் இன விடுதலை அடைந்த பிறகு ஒருபோதும் பிரகாசிக்கப் போவதில்லை.

சாதியத்தை அழிப்பதற்கு ஒரு தளம் தேவை.

சாதிவெறி தமிழனின் இரத்தத்தில் இருக்கிறது. அதை அழிப்பது மிக மிகக் கடினமானது. இதை அழிக்க என்னென்ன ஆயுதங்கள் கிடைக்குமோ அவையெல்லாம் பாவிக்கப்பட வேண்டும். சகல விதத்தாலும் சாதியத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும். 2000 வருடங்களுக்கு முன் சாதி எப்படித் தோன்றியது என்ற ஆராய்ச்சியை விட அதற்கு ஒட்சிசன் இன்று எங்கிருந்து வருகிறது என்று அறிந்து அந்தந்த வழங்கல் பாதைகளை துண்டிக்க வேண்டும்.

1) சட்டம் - சாதியம் சம்பந்தமாக பொது இடங்களில் கதைப்போருக்கு பண அபராதம் (10,000 நடைமுறையில் இருந்தது)

2) ஊக்குவிப்பு - வெவ்வேறு சாதியினர் மணமுடித்தால் இனாமாக இவ்வளவு பணம் (வேறுயாரோ குறிப்பிட்டது போல கலப்புத்திருமணம் என்ற பதத்தை நான் எதிர்க்கிறேன். மனிதனுக்கும் மாட்டுக்கும் நடந்தால் தான் அது அது)

3) குழந்தைகள் - குழந்தைகள் கல்வியில் சாதி என்ற சொல்லே வராதவாறு மற்றியமைத்தல் (பாரதியாரின் "சாதிகள் இல்லையடி பாப்ப்பா" போன்ற விடயங்களை துடைத்தெறிதல்)

4) பெற்றோர்- இங்கு வெளிநாடுகளில் குழந்தையை வன்முறையாக தண்டிக்கும் பெற்றோரை குழந்தைகளோ அல்லது வேறு யாருமோ பொலிசில் சொன்னால் பெற்றோருக்கு கடும் தண்டனை கிடைக்கும். அதேபோல, குழந்தைகளுக்கு சாதிபற்றி சொல்லிக்கொடுக்கும் பெற்றோரை (இதை சிம்பிளாக பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஒரு இனிப்புக் குடுத்துவிட்டு கேள்வி கேட்பதன் மூலம் பிடிக்கலாம்) கடுமையாக தண்டிக்க வேண்டும். அதாவது சாதி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பறிமுதல் செய்யப்பட்டு அரச காப்பகத்தில் விடப்படும்

போன்ற பல முனைத் தாக்குதல்களினால் நாங்கள் நினைத்தால், சாதியினை சுத்தமாகவே துடைத்துவிட முடியும்.

போன்ற பலவிதமான நெருக்குதல் களைக் கொடுப்பதன் மூலமே சாதியை அழிக்க முடியும். இதற்கு தமிழீழம் என்ற தளம் மட்டுமே உள்ளது. எனவே அந்தத் தளத்தை மீட்டெடுக்காமல் சாதியத்தை ஒழிக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் சாதி வாழ இரு வழங்கற்பாதைகளுள்ளன

1) முதலாவது சந்ததி புலம்பெயர்ந்தோர் (first generation immigrants)

2) தாயகம்

இதில் 1) இன் கையிருப்பு முடிந்ததும் இங்கு சாதியம் 95 % செத்துவிடும்.

ஆனால் 2) இல் சாதியத்தை ஒழிக்காதவரை இடையறா வழங்கல் இருந்து கொண்டிருக்கும்.

எனவே,

சாதியத்தை சங்காரம் செய்ய வேண்டியது தாயகத்தில்.

அதற்கு தாயகம் வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? :blink::icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen::D :D

வன்னியில் இன்றைக்கும் மாடுகள் சாதி அடையாளத்தோடு திரிவதாக கேள்விப்பட்டேன்.

ஒரு மாட்டின் சொந்தக்காரர் அந்த மாட்டில் தன்னுடைய பெயரின் இரண்டு எழுத்துக்களோடு தன்னுடைய சாதியின் அடையாளமாக ஒரு சின்னத்தை குறியாக வைப்பாராம்.

அந்த சாதிக் குறிகளோடுதான் வன்னியில் மாடுகள் அலைகின்றனவாம்.

இது பற்றி யாராவது தகவல் சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தை முற்றாக ஒழிக்க,

சாதி ஒழிப்புடன், கல்வி, பொருளாதார வளர்ச்சியும் அருகருகாக (parallel) பயணிக்க வேண்டும். அதற்குரிய சூழ்நிலை இன்று வன்னியில் இல்லை. ஆனாலும் அங்கு ஓரளவுக்கு சாதி கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இன்றைக்கும் மாடுகள் சாதி அடையாளத்தோடு திரிவதாக கேள்விப்பட்டேன்.

ஒரு மாட்டின் சொந்தக்காரர் அந்த மாட்டில் தன்னுடைய பெயரின் இரண்டு எழுத்துக்களோடு தன்னுடைய சாதியின் அடையாளமாக ஒரு சின்னத்தை குறியாக வைப்பாராம்.

அந்த சாதிக் குறிகளோடுதான் வன்னியில் மாடுகள் அலைகின்றனவாம்.

இது பற்றி யாராவது தகவல் சொல்வீர்களா?

இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத பல விடயங்கள் அலம்பப் படுகிறது. இப்போ நீங்கள் வன்னி மாடுகளையும் விட்டு வைக்கவில்லைப் போலும்! அவன் சொன்னான், இவன் சொன்னான் என்பதை வைத்துத் தான் உங்கள் வாதங்களா?

வன்னியில், மாடுகள் என்றைக்குமே சாதிக் குறிகளோடு அலைந்ததும் இல்லை, இப்போது அலையவும் இல்லை! உங்களையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு திரியாதீர்கள்!

சாதி அரக்கன் எந்தத் தமிழனைத் தான் விட்டு வைத்தான், அந்த வகையில், அது வன்னியிலும் மக்கள் மத்தியில் இருந்தது என்பதை மறுக்க முடியாது, ஆனால் ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது, வன்னியில் மிக மிகக் குறைவு என்பது எனது (தனிப்பட்ட) கணிப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தை முற்றாக ஒழிக்க,

சாதி ஒழிப்புடன், கல்வி, பொருளாதார வளர்ச்சியும் அருகருகாக (parallel) பயணிக்க வேண்டும். அதற்குரிய சூழ்நிலை இன்று வன்னியில் இல்லை. ஆனாலும் அங்கு ஓரளவுக்கு சாதி கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது

வன்னியில், சாதி ஒழிந்து விட்டதோ இல்லையோ, புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் ஒழியவும் இல்லை, ஒழியவும் மாட்டாது போலுள்ளது!

எம்மில் பலர், பிற நாடுகட்கு வந்து, உணவு விடுதிகளிலும், மற்றைய இடங்களிலும் மற்றவனுக்குப் பணிவிடை செய்வதையோ, அவனது உணவுக் கோப்பைகளைக் கழுவுவதையோ அல்லது மல சல கூடங்களைக் கழுவுவதையோ தரக் குறைவாகக் கருதவில்லை, ஆனால் ஓர் "சாதி குறைந்த" தமிழன் வீட்டுக்கோ அவனது வீட்டு வைபவத்துக்கோ போவதை இன்னும் தரக் குறைவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எம்மை முதலில் நாம் திருத்திக் கொள்வோம், மற்றவன் தானாகவே திருந்துவான், வன்னியில் உள்ளவனும் கூட!

சாருமதி! உங்களுக்கு நான் வைக்கும் வாதங்களுக்கும் கேட்கும் கேள்விகளுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லையா?

அந்தச் செய்தியை நான் முற்று முழுதாக நம்பியிருந்தால், அதை ஒரு கருத்தாக வைத்திருப்பேன். கேள்வியாகக் கேட்டிருக்க மாட்டேன்.

மாடுகள் பற்றி குறிப்பிட்ட செய்தியை வன்னியை சேர்ந்த ஒருவர் மூலமாக அறிந்தேன். வேளாள மாடுகள் வேல்க்குறியோடு திரியும் என்றும், இப்படி ஒவ்வொரு மாடுகளுக்கும் உள்ள குறியை வைத்து மாட்டுச் சொந்தக்காரரின் சாதியை அறிந்து கொள்ளலாம் என்றும் சொன்னார்.

சொன்னவர் ஒரு விடுதலை உணர்வாளர். இதை அவர் எந்த விதமான உள்நோக்கத்தோடும் சொல்லவில்லை.

ஆயினும் எனக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதனால் கேட்கிறேன். யாராவது வன்னியை சேர்ந்தவர்கள், மாடு வைத்திருந்தவர்கள், அப்படியான மாடுகளை கண்டவர்கள் இது பற்றி சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாருமதி! உங்களுக்கு நான் வைக்கும் வாதங்களுக்கும் கேட்கும் கேள்விகளுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லையா?

நன்றாக விளங்குகிறது! நான் சொல்ல வந்தது, இப்படியான மூலமில்லாத, அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று இங்கு பதிவதின் மூலம் எதை அடைய நோக்குகிறீர்கள்? சரி, ஒரு வாதத்திற்காக, என்றோ ஒரு நாள் அப்படி நடந்ததாகவே வைத்துக் கொள்வோம்! அப்படியாயின், இப்போ எதைச் சொல்ல வருகிறீர்கள்?

யாராவது வன்னியை சேர்ந்தவர்கள், மாடு வைத்திருந்தவர்கள், அப்படியான மாடுகளை கண்டவர்கள் இது பற்றி சொல்வீர்களா?

வன்னியில், மாடுகள் என்றைக்குமே சாதிக் குறிகளோடு அலைந்ததும் இல்லை, இப்போது அலையவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் நன்றாக விளங்குகின்றது.. இங்கு கருத்தாடும் பலரிடம் "சிங்களப் பார்வை" தாராளமாகவே இருக்கின்றது.. :o

ஒன்று மட்டும் நன்றாக விளங்குகின்றது.. இங்கு கருத்தாடும் பலரிடம் "சிங்களப் பார்வை" தாராளமாகவே இருக்கின்றது.. :o

அப்படியே அந்த வன்னி மாடுகளின் உடம்பில் அடையாளங்கள் வைப்பதுபற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும் சொல்லிவிட்டு போனால் புண்ணியமாக இருக்கும். இந்த விடயத்தை ஒரு புத்திஜீவி எப்படி அணுகுகின்றார் என்று பார்க்க ஆசையாக இருக்கிறது! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரையில் பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழ் நாட்டு ரீவி சீரியல்களில் சாதியம் பேசப்படுவதாகவும் அதை எமது தொலக்காட்சிகள் காட்டி பிள்ளைகளுக்கு நஞ்சு ஊட்டுவதாகவும் வேறொரு கட்டுரையில் சொன்ன ஆசிரியர் இப்போ தானே பலவிதமான சாதிகளின் பெயர்களையும் கூறி (அதற்கு விளக்கம் வேறு) கட்டுரை வரைகிறார்.

ஆனாலும் அவர் இந்தக் கட்டுரை வேறு பிரிவினருக்கானது என நியாயம் கற்பிக்கலாம். என்னைப் பொறுத்தவரை நியாயம் எல்லாருக்குமொன்றே. சாதியத்தை அழிக்க வழி, பிரிவினை வாதத்துக்கெதிராக புலிகள் பாவித்த ஆயுதமே (கவனிக்காமல், சாதியம் பற்றி, சாதியம் என்ற சொல்லை கதைக்காமல் விடுவது).

இன்று வன்னியிலிருந்தால், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சாதியின் பெயருக்கும் ஒரு விலை போட்டு மொத்தமாக அபராதம் கட்ட வேண்டி வந்திருக்கும். கடூழியத் தண்டனையும் தரப்படலாம். இங்கு அவற்றையெல்லாம் மறந்து நாங்களே எல்லா சமூக பிரச்சனைகளையும் கையெலெடுக்க விளைவது எம்முள் நல்ல வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லையென்பதையே காட்டுகிறது. இந்த லட்சணத்தில், ஊடகங்களை நாங்கள் எவ்வாறு எடுத்த மாத்திரத்தில் குறை கூற முடியும்?

இத்தொடரில் எனது விவாதம், சாதியம் தேசியத்தை இங்கு வளர்க்க ஒரு தடையா என்பதை ஆராய்ந்து அது ஒரு தடையாயின் அதை எவ்வாறு களையலாம் என ஆராயவேண்டுமென்ற ரீதியிலிருந்ததே தவிர சாதிகளை பற்றி அலசுவதிலல்ல. மேலும் சாதியத்தை அழிக்க ஒரு திட்டமும் தளமும் இல்லாமல் அதை விவாதிப்பது அதை வளர்ப்பதன்றி வேறென்ன?

நான் கூட மிகவும் பிந்தி இப்ப தான் இதை உணர்ந்தேன். எனவே, தேசியத்திற்கு என்னால் செய்யக்கூடியது தேசியத்தின் கொள்கைகளை (சட்டங்களை!) கடைப்பிடிப்பதேயன்றி வேறென்ன?

இந்தக்கணத்திலிருந்து நான் இந்த விவாதத்திலிருந்து விலகுவதோடு, இனிமேல் எந்த ஒரு சாதியின் பெயரைக் கூறவோ சாதி தொடர்பான குருட்டுத் தனமான விவாதங்களில் கலந்து கொள்ளவோ மாட்டேனெனெ கூறிக்கொள்கிறேன்.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தை அழிக்க வழி, பிரிவினை வாதத்துக்கெதிராக புலிகள் பாவித்த ஆயுதமே (கவனிக்காமல், சாதியம் பற்றி, சாதியம் என்ற சொல்லை கதைக்காமல் விடுவது).

புலிகள் சாதி பற்றி 16 வருடங்களுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள். கதைத்திருக்கிறார்கள். கவனித்திருக்கிறார்கள்.

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

பாலபண்டிதர்.. சரி ஒரு பேச்சுக்கு சாதி தேசியத்தை வளர்க்க ஒரு தடை இல்லையென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் சாதி ஒழிக்கப்பட வேண்டியதில்லையா.

சீதனம் கூடத்தான் தேசியத்தை வளர்க்க ஒரு தடை இல்லை. அதற்காக புலிகள் சும்மாவா இருந்தார்கள்.

தளமற்ற நிலையில் சாதியப் பிரச்சனைகளை கையிலெடுப்பது சரியானதல்ல என்ற உங்கள் வாதத்தில் புலிகள் பார்வையில் நியாயம் உள்ளது. சாதியத்துக்கு எதிரான கருத்தியல் செயற்பாட்டு ரீதியான பெரியளவிலான நடவடிக்கைகளை எடுத்தல் சாதி புரையோடிப் போன சமூகங்களில் சில குறித்த பிரிவினரின் ஆதரவை விடுதலைப் போருக்கு இல்லாமல் செய்யும். இது இப்போதைக்கு புலிகளால் விரும்பப்படாத ஒன்று.

சாதி தேசியத்திற்கு தடையாய் உள்ளதா இல்லையா என்பதல்ல.. ஒரு வேளை சாதி தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாய் இல்லாத பொழுதிலும் அது இல்லாதொழிக்கப் பட வேண்டும்.

புலிகள் இன விடுதலையைப் பெற்றுத் தந்து பின்னர் சமூக விடுதலையையும் பெற்றுத்தருவார்கள் என எல்லாத்திற்கும் அவர்கள் மீதுதானா பாரத்தை போட வேண்டும். நாமாக சாதி எண்ணக்கருவை இல்லாதொழிக்க செய்யப்போவது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

'' சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். "

வணக்கம்

சாதி என்ற கண்ணால் பார்க்கமுடியாத ஆனால் தமிழர்கள் எல்லோராலும் உணர்ந்துகொள்ளக்கூடிய ஒரு விடயத்தைப்பற்றி மிகவும் விரிவாகத்தான் அலசியிருக்கிறார்.

சாதி என்ற சொல்லே இந்த பிரிட்டிஷ்காரங்க தான் எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக யாரோ சொன்னதாக ஞாபகம் இருக்கு. அதுக்காக அவங்க திரும்பி வந்தால் தான் அதை இல்லாதொழிக்கலாம் என்ற கருத்தை இங்கு வைக்க நான் முயற்சிக்கவில்லை. சாதிவெறியென்பது ஒரு பொல்லாத நோய் அது எந்த உருவத்தில் வரும் என்று சொல்ல முடியாது.

இதில் வைத்த ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதாவது சாதி என்பது விடுதலைப்புலிகளை நெருங்கமுடியாது என்ற பொருள்பட கூறியிருக்கிறீங்க. அப்படியென்றால் விடுதலைப்புலிகளில் இருந்து திசைமாறிய ஒரு மந்தை அதற்காக கூறப்பட்ட காரணமும் ஒரு சாதி சம்பந்தப்பட்டது தானே?

இப்போ நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் சாதியை இல்லாதொழிக்கவேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக சிந்தித்தால் தான் நிறைவேறும் என்பது என்னுடைய கருத்து. இது நிறைவேறுமா?

இறுதியாக என்னுமொரு விடயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அதாவது இனிமேல் இந்த சாதி சம்பத்தப்பட்ட விடயங்களை மேடைகளிலோ, அல்லது பத்திரிகை, இணையத்தளங்களிலோ விவாதிக்காமல் விடுவதும் ஒரு சிறந்த வழியாகவே எனக்கு படுகிறது.

இதைப்பற்றி நாம் திரும்ப திரும்ப பேசும்போது பெரிசாக ஒன்றும் அறிந்திராத எமது அடுத்த சந்ததிக்கும் இதை திணிக்கிற மாதிரி ஒரு உணர்வு எனக்கு தோன்றுகிறது.

Edited by Valvai Mainthan

பாலபண்டிதர் நீங்கள் சொல்வது தான் சரி. முன்னர் நான் எனது கருத்தில் சில தர்க்கரீதியிலான கேள்விகளைக் கேட்டேன். இதுவரை எந்த புத்தியீவியும் அதற்குப் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இந்தக் கருத்தாடல் பயனிலும் பாதகத்தையே அதிகம் விளைவிக்கும் என்பதனால் நான் தொடர்ந்து கருத்தெழுவதை எப்போதோ நிறுத்திக்கொண்டேன். தேசியத்தின் வழி நடப்பதாலேயே நாம் பல பிரச்சினைகளுக்கு விடைகாணமுடியும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. பலபேர் கருத்தெழுதுவதாக நினைத்துக்கொண்டு தம்மை பெரிய அறிவாளிகளாகக் காட்டவே முற்படுவதாக எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தின் வழி நடப்பதாலேயே நாம் பல பிரச்சினைகளுக்கு விடைகாணமுடியும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

சாதியத்தை அணைத்துக் கொண்டே தேசியத்தின் வழியும் நடக்க முடியும். மலரவனின் போருலாவில் மலரவன் சந்திக்கும் ஒரு முதியவர் புலிகளுக்குப் பலவழிகளில் உற்ற துணையாக இருக்கிறார். தேசிய விடுதலையில் விருப்புள்ளவராக இருக்கிறார். சிங்கள இனவாதத்திற்கெதிரான பார்வையுள்ளவராக இருக்கிறார். ஏன்.. சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதை விரும்பாத ஒரு ஆளாய் இருக்கிறார். ஆனால் அவர் தனது பிள்ளைகளுக்கு தனது சாதியில் தான் திருமணம் செய்து வைப்பேன் என்றும் சாதிய எப்பிடி விட்டுக்கொடுப்பது என்றும் சொன்னதாக மலரவன் பதிவு செய்திருக்கிறார். அது பற்றி மலரவன் தமிழர்களுக்குள் சாதி ஆழப் படிந்து போயுள்ளது என குறிப்பிடுகிறார்.

சாதி பற்றிய விவாதம் இளையவரை திசை திருப்பும் என்பவர்கள் யாழ்ப்பாணத்தின் கொழும்பின் புலத்த நாடுகளின் பத்திரிகைகளில் சாதியைக் குறிப்பிட்டு விளம்பரம் வருகிறதே.. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இளையோரைத் திசை திருப்பும் என்றால் அந்த நடவடிக்கைகளை நிறுத்தலாமே.. ஏன்.. இளையோரே நிறுத்தக் கோரலாமே.. இன்றைய தேதியில் திருமணம் முடிப்பது இளைய தலைமுறைதானே.. அவர்களிடம் ஏன் அந்த விழிப்புணர்வு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். "

வணக்கம்

மோகன் சாதி என்ற கண்ணால் பார்க்கமுடியாத ஆனால் தமிழர்கள் எல்லோராலும் உணர்ந்துகொள்ளக்கூடிய ஒரு விடயத்தைப்பற்றி மிகவும் விரிவாகத்தான் அலசியிருக்கிறார்.

சாதி என்ற சொல்லே இந்த பிரிட்டிஷ்காரங்க தான் எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக யாரோ சொன்னதாக ஞாபகம் இருக்கு. அதுக்காக அவங்க திரும்பி வந்தால் தான் அதை இல்லாதொழிக்கலாம் என்ற கருத்தை இங்கு வைக்க நான் முயற்சிக்கவில்லை. சாதிவெறியென்பது ஒரு பொல்லாத நோய் அது எந்த உருவத்தில் வரும் என்று சொல்ல முடியாது.

இதில் மோகன் வைத்த ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதாவது சாதி என்பது விடுதலைப்புலிகளை நெருங்கமுடியாது என்ற பொருள்பட கூறியிருக்கிறீங்க. அப்படியென்றால் விடுதலைப்புலிகளில் இருந்து திசைமாறிய ஒரு மந்தை அதற்காக கூறப்பட்ட காரணமும் ஒரு சாதி சம்பந்தப்பட்டது தானே?

இப்போ நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் சாதியை இல்லாதொழிக்கவேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக சிந்தித்தால் தான் நிறைவேறும் என்பது என்னுடைய கருத்து. இது நிறைவேறுமா?

இறுதியாக என்னுமொரு விடயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அதாவது இனிமேல் இந்த சாதி சம்பத்தப்பட்ட விடயங்களை மேடைகளிலோ, அல்லது பத்திரிகை, இணையத்தளங்களிலோ விவாதிக்காமல் விடுவதும் ஒரு சிறந்த வழியாகவே எனக்கு படுகிறது.

இதைப்பற்றி நாம் திரும்ப திரும்ப பேசும்போது பெரிசாக ஒன்றும் அறிந்திராத எமது அடுத்த சந்ததிக்கும் இதை திணிக்கிற மாதிரி ஒரு உணர்வு எனக்கு தோன்றுகிறது.

நண்றி

வல்வை மைந்தன்

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

வெள்ளக்காரன் இலங்கைக்கு வந்தே 200 வருசம்தான் இருக்கும் அப்ப அதுக்கு முதல் சாதி இலங்கையில் இல்லையோ, அவன் சொல்லுறான் இவன் சொல்லுறான் என்று கதைக்கமுதல் தமிழனின் வரலாற்றை படித்துப்பாரும். :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தை அணைத்துக் கொண்டே தேசியத்தின் வழியும் நடக்க முடியும். மலரவனின் போருலாவில் மலரவன் சந்திக்கும் ஒரு முதியவர் புலிகளுக்குப் பலவழிகளில் உற்ற துணையாக இருக்கிறார். தேசிய விடுதலையில் விருப்புள்ளவராக இருக்கிறார். சிங்கள இனவாதத்திற்கெதிரான பார்வையுள்ளவராக இருக்கிறார். ஏன்.. சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதை விரும்பாத ஒரு ஆளாய் இருக்கிறார். ஆனால் அவர் தனது பிள்ளைகளுக்கு தனது சாதியில் தான் திருமணம் செய்து வைப்பேன் என்றும் சாதிய எப்பிடி விட்டுக்கொடுப்பது என்றும் சொன்னதாக மலரவன் பதிவு செய்திருக்கிறார். அது பற்றி மலரவன் தமிழர்களுக்குள் சாதி ஆழப் படிந்து போயுள்ளது என குறிப்பிடுகிறார்.

"போர் உலா" பற்றிக் குறிப்ப்டுள்ளீர்கள்! ஓர் அற்புதமான படைப்பு! துரதிர்ஷ்டவசமாக அவர் எம்மோடு இல்லை மேலும் சில படைப்புக்களைப் படைப்பதற்கு! இந்தத் தளத்திலுள்ள நண்பர்கள் இப் பெட்டகத்தைப் இன்னும் பார்க்கவில்லையாயின், தேடிப் படியுங்கள், நிட்சயமாக ஏமாற்றப் பட மாட்டீர்கள்!

முதியவர் சாதீய நம்பிக்கை... பல நாடுகள் அடிபட்டு, வாழ்வின் பல வடிவங்களையும் பார்த்து, பல இன, நிற மக்களையும் பார்த்த எமது இளைய தலைமுறை இன்னும் 'சாதி' பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அந்த முதியவர், வன்னியின் ஓர் மூலைக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவரை குறை சொல்வதில் என்ன பலன் (அவருடைய கருத்தை ஆமோதிப்பது எனது வாதமல்ல),

[ஐயா சாதியத்தை ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் எழுதவதால் அதுபற்றி பற்றி தெரியாத இளைய தலைமுறை தெரிந்து கொண்டுவிடும் என்று சொல்வது பூனை கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு உலகம்இருட்டாக இருக்கிறது என்று நினைப்பதற்கு ஒப்பானதாகும்.

சாதியை பிள்ளைகள் இளையத்தளத்தில் பாத்துத் தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.அவர்களுக்கு அது வீட்டுக்குள்ளளேயே சொல்லி வளர்க்கப்படுகிறது.ஒரு சில முற்போக்கு சிந்தனை கொண்ட பெற்றோர்கள் அதை சொல்லாமல் இருந்தாலம் பெரும்பாலான தமிழ் பெற்றோர்கள் சோற்றுடன் சோர்த்து அதை ஊட்டியயே வளாக்கிறார்கள்.

இன்றைக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்தேசியம் என்ற அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்க சாதியமே தடையாக இருக்கிறது.

சிறீலங்கா அரசு தனது கைக் கூலிகளை வைத்த அதை ஊக்குவிக்கிறது. சாதியத்தால் பாதிக்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட ஏராளமான பிள்ளைகளின் கதைகள் இருக்கின்றன.சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் படிக்கக்; கூடாது அவர்களுக்குள் காதல் வந்து சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பாடசாலையையும் இருப்பிடத்தையும் மாற்றிய பல பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று ஆராய்வதற்கு பதிலாக பிரச்சனையே இல்லை என்று சொல்வதும் எங்கள் பிள்ளைகளுக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது என்று சொல்வதும் எங்களது இனத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரர்களுக்கும் தேசியத் தலைவருக்கும் நாங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பிள்ளைகள் தமது பெற்றோர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட சாதிய அடையாளத்துடன் தாங்கள் டொக்டர்கள் எஞ்சினியர்கள் கல்விமான்கள் என்று சொல்லிக்கொண்டு தாயகத்தில் போய் இறங்குவாhர்கள்.அதைவிட அதிகமானவர்கள் அடையாளம் இழந்தவர்களாக காவாலிகள் குழப்படிக்காரர்கள் ஊத்தையங்கள் என்ற பெயர்களுடன் போய் இறங்குவார்கள்.

புலம்பெயாந்த சமூகத்தில் சாதி அப்பட்டமாக இருக்கிறது என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.தமிழ்தேச

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் குறைந்த இடங்களிலேல்லாம். மக்களை ஒரு கூட்டம் ஏதாவாது ஒன்றை சொல்லி

ஏமாற்றியே வந்திருக்கின்றது. அறிவியலால் வளர்ந்து காணப்படும் இடங்களில் ஏமாறும் கூட்டம் குறைவு. ஆகவே ஒரே ஓரு வழி நமது நாட்டில் அறிவியலை வளர்ப்பதுதான்.

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். அதாவது....... எந்த தகுதியுமில்லாதவனிடம் இருக்கும் சாதியென்ற தகுதியையும் விட சொன்னால் விடமாட்டான். அவனுக்கு அறிவால் வேறொரு தகுதியை கொடுத்தால். சாதியை தானாகவே விட்டுவிடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர் வல்லுறவில் ஈடுபட்டவரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஆறுமுக நாவலர் ஒரு சாதி வெறியர் என்பது பலரும் அறிந்த ஒரு விடயம். அவர் எழுதிய நூல்களே அதற்கு சாட்சி.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%....AE.AE.E0.AF.8D

ஆறுமுகநாவலரைச் நேரே சந்திக்கத் துப்புக் கெட்டவர்கள் தான், அவரைப் பெண்களோடு இணைத்துக் கதைத்தனர் என்பதே நான் சொல்ல வருவது. அவ்வாறே அவரின் மக்கள் எழுச்சித் தூண்டலை நேரடியாகச் சந்திக்க முடியாதவர்கள் தான் ஜாதி வாதமாக அணுகுகின்றார்கள்.

எதற்கு எடுத்தாலும் விக்கிபீடியாவைக் காட்டாதீர்கள். அங்கே யார் வேண்டுமானலும் எதையும் எழுதலாம். ஆனால் தற்போது, அங்கே தமிழ் கட்டுரைகளையும், ஆக்கங்களையும் இணைப்பவர் உங்களைப் போன்ற ஒருவரே! கவலைப்படாதீர்கள். பகுத்தறிவு எப்படிச் சுத்துமாத்து என்று நானும் விரைவில் கட்டுரை எழுதுவேன். அதையும் ஆதாரமாகப் போடத் தயாராகுங்கள்.

உங்களுக்கும் விக்கிபீடியா போல ஒன்றைத் தொடங்க ஆசையிருந்தால் இவ் இலவச புரோக்கிராமைப் பாவித்துக் கொள்ளுங்கள். www.mediawiki.org/wiki/Download

இன்றைக்கு பாடசாலைகளில் சாதி பார்க்க முடியாது. அதை வைத்துக் கொண்டு அதே பாடசாலைகளில் என்றைக்கும் சாதி இருக்கவில்லை என்று சொல்வது அறிவற்ற செயல்.

ஒரு விவாதம் நடக்கின்ற பொழுது திறந்த மனதுடன் நேர்மையான முறையில் விவாதம் செய்ய வேண்டும்.

பாடசாலையில் கல்வி கற்ற எனக்காக பாடசாலை வரலாறு ஒன்றும் தெரியாது. நீர் தான் அறிவற்றவன் போலக் கதைக்கின்றீர். இன்றைக்கு கூட பல பாடசாலைகளில் குறித்த பிரிவினர் தான் அதிகமாகப் படிக்கின்றனர் என்பதற்காக அப்பாடசாலை குறித்த ஜாதிப் பாடசாலை என்றா வரைவிலக்கணம் கொடுப்பது?

நேர்மையான விவாதம் பற்ற நீங்கள் சொல்லாதீர்கள். இந்து மதம் என்பதற்காக, தமிழ் வளர்த்த பெரியவர்கள் மீதும் காறித்துப்பும் உங்களுக்காக நேர்மையான விவாதம் பற்றிக் கதைக்க யோக்கியம் இல்லை.

இது நீதிமன்றம் அல்ல. எம்முடைய கட்சிக்காரரை பொய் சொல்லி காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

நாவலர் சாதி பார்க்கவில்லை, பிராமணர்களுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை என்று பொய் பேசியபடி உண்மைய ஏற்க மறுத்துக் கொண்டிருந்தால், சாதி பற்றி திறந்த மனதுடன் விவாதம் செய்து தீர்வு காண முடியாது.

இன்று வரை சாதி இருப்பதற்கு இது போன்று மனநிலைகளும் ஒரு முக்கிய காரணம்.

என் சாட்சிக்காரர் என்று நாவலர் கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழும் சைவமும் ஒன்று. அதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பேன். பிராணமரர்கள் மட்டும் ஜாதியை வளர்க்கவில்லை. நிலச்சுரந்தர்கள், பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைத் தானே சொல்லிக் கொள்பவர்கள், இனத் துரோகிகள் எல்லோரும் சேர்ந்து வளர்த்தார்கள். அன்றைக்கு பிராமணர்களுக்கும், நிலச்சுரந்தர்களுக்கும் எவ்வாறு ஜாதி வெறி இருந்ததோ, அவ்வாறே இன்று பகுத்தறிவுவாதிகளுக்கும், இனத்துரோகிகளுக்குமம் ஜாதி வெறி கொண்டு அலைகின்றார்கள்.

ஜாதி இருப்பதற்கு இன்னும் காரணம், அதை தூண்டி அணையாமல் காக்கின்ற உங்களைப் போன்றவர்களும் தான்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் பொய் சொல்லக் கூடாதென்று சொல்லுதா?! நல்ல வேடிக்கை. இந்து மதக் கடவுள்கள் அத்தனை பேரும் பொய்யர்களும் புரட்டர்களும்தானே! துரோணரைக் கொல்வதற்காக தருமனை பொய் சொல்லத் தூண்டியது யார்?????

அடிநிலையில் நின்று அடிப்படையற்றவிதத்தில் விவாதிக்கும் உம்மோடு விவாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. துரோணரைக் கொல்லத் தூண்டிய கதை என்பது காப்பியம். அதில் கண்ணன் பாத்திரம் என்பது ஒரு கதை மட்டுமே. அங்கே அது ஒருத்தனுக்கு வழிகாட்டியாக அமையவில்லை.

தமிழ்கடவுள் முருகன், ஸ்கந்தனாக சரணவப்பொய்கையில் தோன்றி சூரனை எதிர்க்கப் போரிட்ட தத்துவம், ஆணவன், மன்மம், மாயைகளை மனங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக்க கொண்டு. அன்றைய மக்கள் படிப்பறிவில்லாத நிலையில் தான், அவ்வாறன கதைகள் தேவைப்பட்டன. இன்றைக்கும் கூட விளக்கம் கெட்ட நிலையில் அக் கதைகள் கொண்டு செல்கின்றன.

அவ்வாறே கடவுளுக்குச் சிலை அமைப்பது மற்றிய கதைகள். இந்துமதம் இறைவனுக்கு உருவமுள்ளதாகச் சொல்லவில்லை. ஆனால் அதை அடிப்படையில் இருந்து மக்களுக்குப் புரிய வைக்க மனிதர்கள் போன்ற உருவத்தைக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. கடவுள் சிலை வடிவானவரே, என்றால் ஞானிகளும், முனிவர்களும் சிலை வழிபாடு இன்றி தவம் இருந்ததை, பிற மதத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறி விடமுடியுமா?

இந்தத் தத்துவத்தை வைத்துத் தான், ஆதிசங்கரர், சைவம், வைணவம், சாக்தம், கணபத்தியாயம், செளரம், கெளமாரம் என்று 6 பிரிவுகளையும் ஒன்றிணைத்தார். அங்கே, அவர் தெளிவாக்கிய விடயம், பெயர்களும், உருவங்களும் வேறு, தவிர கொள்கை ஒன்று தான்.

அதைத் தான் விவேகாந்தரும் சொன்னார். " எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன. அவ்வாறே மதங்களும் என்று."

அசோக் சிங்காலும் சொன்னதும் இதைத் தான்." எந்த மதத்தையும் பின்பற்றலாம். ஆனால் அது இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்று.

நவீன உலகம் என்று சொல்லிக் கொண்டு, அடிப்படையில் இருந்து விவாதிக்கின்ற நிலைமையில் நீங்கள் உள்ளபோது, படிப்பறிவற்ற சமூதாயமாக இருந்த அவர்கள் சிந்தனை மட்டும் தெளிவாக இருந்தன என்று எவ்வாறு சொல்ல முடியும்?

ஒழுக்கத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்? பெத்த பெண்ணையே பெண்டாள நினைத்தவர்கள்தாம் இந்து மதத்து நாயகர்கள்.
ஏன் பாடையில் போற வயதில் 25 வயது இளம் பெண்ணை முடித்த உங்கள் தலைவர் மட்டும் என்னவாம். இது கூட ஆண் அடிமைத்தனம் தானே! இவரின் முதல் மனைவி அப்படி ஒரு இளம் பையனை மணந்தால், அனுமதித்திருப்பீர்களா? அல்லது முதிய பெண்மணி இளம்பையனைத் திருமணம் செய்யத் தான் அனுமதிப்பீர்களா?

பெத்த மகளையே....என்று நீர் கக்கிய வசனம் சூழ்ச்சி வசனம். பிரம்மனின் தத்துவத்தை உம் கருத்துக்காகப் பாவிக்கின்றீர் போலும்.பிரம்மன் தமிழருக்கு உரியவர் அல்ல. அவரை வழிபடுவதுமில்லை. லொயிக்கில்லாத இப்படியான கருத்துக்களுக்குப் பதிலளிக்க முடியாது. ஆதாமும், ஏவாளும் தான் முதல் மனிதர்கள் என்றால், அவரை யார் பெற்றார்கள் என்று கேட்கின்ற விதம் தான் இது. அப்படி பார்த்தால் கூட, ஆதாமின் பிள்ளைகள் எப்படி அடுத்த சந்ததியினை உருவாக்கினர் என்ற கேள்வி மாதிரித் தான் இதுவும்.

மேலே சொன்னது போல, மதிப்பற்ற கருத்துக்களை தூக்கிப் பிடிக்கின்றது, விவாதம் என்று வரையறுக்கலாமா எனத் தெரியவில்லை.

அடுத்தவன் சொத்தை விடுங்கள் . அடுத்தவர்களின் பெண்சாதிமாரையே விட்டு வைக்காதவர்கள் தான் இந்து மத மும்மூர்த்திகள். அதில் சிவனார் மிகவும் விசேடமானவர். விலங்குகளும் மேற்கொள்ளாத இழிந்த முறைகளைக் கையாண்டவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது இந்து மதம்.

சாதியத்தின் ஆணிவேரே இந்து மதம்தான். இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியத்தை ஒழிக்கமுடியாது.

ஐாதிக்கட்சிகள், பிராமணிகள் என்று தாங்களே ஜாதி வெறி கொண்டலைந்த பொறுக்கிகள், பெயருக்குப் பின்னால் ராமசாமி நாயக்கர் என்று, போட்டு தங்களின் ஐாதி பெருமையடிக்கின்றவர்கள். ஒன்று போதது என்று, மேலதிக திருமணங்கள், அதையும் தாண்டி வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் பெண்களோடு கூத்துக்கட்டியவர்கள், அவர்களைப் பின்பற்றும் விபச்சார விரும்பிகள், ஜாதிகளை அழிக்கத் திட்டம் போடுகின்றார்களாம்.

இதற்கு மேலே என்னால் சிரிக்க முடியாது நண்பா! ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

கிறிஸ்தவர்கள் உயர்ந்தவர்கள் எல்லக் கிறிஸ்தவர்களும் பைபிள் படிக்க வேண்டும் என்று கிறிஸ்தவம் கூறுகிறது

முஸ்லீமகள் உயர்ந்தவர்கள் எல்லக் முஸ்லீம்களும் குர்ரான் படிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது

ஆனால் இந்து மதமோ பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றுதான் கூறுகிறது. இந்து மத்தை ஒரு தமிழன் தன்னுடையது என்று கூறினால் அவன் சூடு சொரணையற்றவன்.

பைபிளையும் முழுசாகப் படிக்காதீர்கள். அங்கேயும், பெத்த மகளோ, சகோதரனோடு.... எண்டு நிறையக் அசிங்கங்கள், குர்ரானில் தந்தையில்லாமல் பிறந்த பிள்ளைகள், கண்ணாடி போலப் பளிங்கில் பெண்ணை நடக்கவிட்டு, அதில் அவர்களின் உடலைப் பார்வையிட்டஅசிங்கங்கள் நிறைய இருக்கும். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒருவனை நல்வழிப்படுத்தும் தத்துவங்கள் மட்டுமே, நோக்கப்பட வேண்டியவை. காலத்துக்கு உதவாதவை கழிக்கப்பட வேண்டியவை.

'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! என்று சொன்ன பெரியாரைப் பின்பற்றிய நீங்கள் சூடுசொறணை பற்றிக் கதைக்கின்றீர்களா? சைவம் எங்களுக்குரியது. அதை ஆரியர் ஆக்கிரமிக்க விட்டது எம் தப்பு. அதை மட்டுமல்ல, அதை எங்களுக்குரியதல்ல என்று சொல்ல வைப்பதில் இந்தப் பகுத்தறிவுவாதிகளும், ஆரியர்களுக்குத் துணை போகின்ற மறைமுக வேலையைச் செய்கின்றார்கள்.

அவர்களின் இந்தக் கபட வேலை குறித்து அவதானாக இருக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காரன் இலங்கைக்கு வந்தே 200 வருசம்தான் இருக்கும் அப்ப அதுக்கு முதல் சாதி இலங்கையில் இல்லையோ, அவன் சொல்லுறான் இவன் சொல்லுறான் என்று கதைக்கமுதல் தமிழனின் வரலாற்றை படித்துப்பாரும். :angry: :angry: :angry:

வெள்ளையன் வந்து 400 வருடங்களுக்கு மேல். தமிழருக்குள் சாதி வாதம் ஊடுருவி இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதை ஊக்குவிப்பதில் எம்மை ஆக்கிரமித்து நின்ற சக்திகளுக்கு நிறையப் பங்கிருந்தது. தமிழனுக்குள் அடிபட வைப்பது மூலம், தமிழனின் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் அவனுக்குள் இருந்தது.

இப்போது கூட துரோகத் தழங்கள் யாழ்பாணத்தில் சாதிவகுப்பு என்று எழுதுவதன் நோக்கமே, போராட்டத்தை மலினப்படுத்த வேண்டும் என்பதற்காக. அதைப் போன்ற நிலமையைத் தான் எம்மவர் சிலர் கூட யோசிக்காமல் செய்கின்றார்கள்.

மற்றும்படி, தொழில் பின்பற்றலும் அங்கே ஜாதி வாதத்தை விதைக்கின்றன.

மலையகத் தமிழர்களை எடுங்கள். அங்கே அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். கொழுந்து பறிப்பவர்களாக அவர்கள் இருந்ததால், அவர்களிடம் இருந்த சில ஜாதி அமைப்புக்கள் அழிந்தே விட்டன. சொல்லப் போனால் தமிழ்நாட்டவரைப் போல, அவர்கள் ஜாதி கதைப்பதும் இல்லை. இதை விட மீனவர் என்ற தொழிலும் இல்லாது போனதால், அந்த பிரிவும் இல்லை.

இதனால் தான் சொல்லுகின்றேன். ஜாதிப் பிரிவினை ஆழிக்க வேண்டுமானால், அக்கல்வியை சமத்துவமாகக் கற்க வேண்டும். மீன்பிடித்தலில் கூட புலத்தில் கற்கை நெறிகள் உண்டு. அதை கற்கைநெறியாக, அனைவருக்கும் பொதுவாக்கினால் தான் பிரிவினைகள் அகலும். அத்தோடு, இப்படி ஜாதி வெறி என்று தூண்டலை மறக்கடிக்க முனைவதால் மூலம் விலத்த வைக்கலாம்.

வெள்ளையன் வந்து 400 வருடங்களுக்கு மேல். தமிழருக்குள் சாதி வாதம் ஊடுருவி இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதை ஊக்குவிப்பதில் எம்மை ஆக்கிரமித்து நின்ற சக்திகளுக்கு நிறையப் பங்கிருந்தது. தமிழனுக்குள் அடிபட வைப்பது மூலம், தமிழனின் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் அவனுக்குள் இருந்தது.

இப்போது கூட துரோகத் தழங்கள் யாழ்பாணத்தில் சாதிவகுப்பு என்று எழுதுவதன் நோக்கமே, போராட்டத்தை மலினப்படுத்த வேண்டும் என்பதற்காக. அதைப் போன்ற நிலமையைத் தான் எம்மவர் சிலர் கூட யோசிக்காமல் செய்கின்றார்கள்.

மற்றும்படி, தொழில் பின்பற்றலும் அங்கே ஜாதி வாதத்தை விதைக்கின்றன.

மலையகத் தமிழர்களை எடுங்கள். அங்கே அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். கொழுந்து பறிப்பவர்களாக அவர்கள் இருந்ததால், அவர்களிடம் இருந்த சில ஜாதி அமைப்புக்கள் அழிந்தே விட்டன. சொல்லப் போனால் தமிழ்நாட்டவரைப் போல, அவர்கள் ஜாதி கதைப்பதும் இல்லை. இதை விட மீனவர் என்ற தொழிலும் இல்லாது போனதால், அந்த பிரிவும் இல்லை.

இதனால் தான் சொல்லுகின்றேன். ஜாதிப் பிரிவினை ஆழிக்க வேண்டுமானால், அக்கல்வியை சமத்துவமாகக் கற்க வேண்டும். மீன்பிடித்தலில் கூட புலத்தில் கற்கை நெறிகள் உண்டு. அதை கற்கைநெறியாக, அனைவருக்கும் பொதுவாக்கினால் தான் பிரிவினைகள் அகலும். அத்தோடு, இப்படி ஜாதி வெறி என்று தூண்டலை மறக்கடிக்க முனைவதால் மூலம் விலத்த வைக்கலாம்.

ஐயா உங்கள் கருத்து ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.குலத்தொழில் முறையை முற்றாக ஒழிப்பதன் சாதியை ஆட்டங்காணவைக்கலாம்.ஆனால் தங்களை சாதியில் உயாந்தவர்கள் என்று சொல்பவர்கள் மரம்ஏறி கள் இறக்கும் தொழிலை செய்வதற்கும் மீன்பிடிப்பதற்கும் பறை மேளம் அடிப்பதற்கும் தயாரா?

நமது கோவில்களில் சாதிவேறுபாடின்றி தமிழர் மெய்யிலை கற்றுத்தேர்நதவர்களை பூசகர்களாக நியமிக்க நாங்கள் தயாரா?

ஆனால் புலம் பொந்த நாடுகளில் பிரச்சனை அதுவல்லவே. நமது நாட்டிலே எந்தத் தொழில்களை எல்லாம் கேவலமான தொழில்களாக கருதினார்களோ அதே தொழில்களை இங்கே எல்லோரும் செய்கிறார்கள்.ஆனால் தங்களது பிள்ளைகளை வளாக்கும் போது மட்டும் சாதி செல்லி வளர்க்கிறார்கள்.இது தானே பிரச்சனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.