Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்

Featured Replies

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்
  •  

சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் அயலுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர்.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார். இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி சித்தங்கேணியில் பிறந்தார். சின்னத்தம்பி மலேசியாவில் வசித்து வந்தபோதும் மண்பற்றுக் காரணமாக, சித்தங்கேணிக்கு வந்தபோதே ராஜரட்ணம் பிறந்தார். அதன் பின்னர் கோலாலம்பூரில் ராஜரட்ணம் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு, சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று வருகை தந்தார். தனது பயணத்தின்போது, சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக, அயலுறவுத்துறை அமைச்சராக, சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட லீகுவான் யூவின் முக்கிய ஆலோசகராகச் செயற்பட்ட ராஜரட்ணம் பிறந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று விரும்பினார்.

சித்தன்கேணி பன்னமூலையில் அமைந்துள்ள ராஜரட்ணம் பிறந்த வீட்டை நேற்று மாலை 4.10 மணிக்குச் சென்றடைந்த அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், அங்கு சுமார் 15 நிமிடங்கள் வரையில் நின்றிருந்தார். ராஜரட்ணத்தின் சகோதரியின் உறவினர்களே தற்போது அந்த வீட்டில் வசிக்கின்றனர். அவர்கள், அயலுறவுத்துறை அமைச்சரை சிறப்பாக வரவேற்றனர். அயலுறவுத்துறை அமைச்சரின் குழுவினர் செவ்விளநீர் பருகக் கொடுக்கப்பட்டது.

ராஜரட்ணத்தின் நாச்சார் வீட்டில் அயலுறவுத்துறை அமைச்சர் குழுவினர் படங்களையும் எடுத்துக் கொண்டனர். இறுதியில், அயலுறவுத்துறை அமைச்சர் நினைவுப் பரிசில்களை வழங்கினார். அதேபோன்று வீட்டாரும் அவருக்கு நினைவுப் பரிசில்களை வழங்கினர். உணவுப் பொருள்களுடன், மாதுளம்பழத்தையும் அவருக்கு கொடுத்தனர்.

IMG_6747-1024x683.jpg

IMG_6771-1024x683.gif

IMG_6773-e1500470206202.jpg

IMG_6780-1024x683.gif

IMG_6811-1024x683.gif

IMG_6826-1024x683.gif

http://newuthayan.com/story/12475.html

  • Replies 93
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விவியன் பாலகிருஸ்ணன் அவர்களின் வருகை, மரியாதை நிமித்தமான வருகையென்றாலும் பாராட்டுக்குரியதே!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் (தமிழன் என்று பொதுவாகவும் சொல்லலாம்.. தமிழகத்திலும் இதே தான் நிலை.. அங்கு ஆட்சியையும் அயலாருக்கு கொடுத்திட்டான்) ஊருக்கெல்லாம் உபதேசியா இருந்து முன்னேற்றி இருக்கான்.. ஆனால்.. தன்ர வீட்டையும்.. தன்ர தாய் நாட்டையும் (சொறீலங்கா அல்ல) முன்னேற்ற யோசிச்சதே இல்லை.. என்பதை இப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. tw_cold_sweat::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

விவியன் பாலகிருஸ்ணன் அவர்களின் வருகை, மரியாதை நிமித்தமான வருகையென்றாலும் பாராட்டுக்குரியதே!

வன்னியர் முன்னரே சொல்லி இருந்தேன்.

அமெரிக்காவின் சுதந்திர போராட்டத்தின் வெற்றியினால், கோபமடைந்த, கல்கத்தாவை தலைமையகமாக கொண்டு இயங்கிய பிரித்தானியாவின் கிழக்கு இந்திய கம்பெனியினர்,  அங்கிருந்த அமெரிக்கன் மிஷன் அமைப்பினரை வெளியேறுமாறு சொல்லி விட்டனர்.

மொரிசியஸ் போகும் வழியில், யாழ்ப்பாணத்தில் தங்க, அங்கிருந்த லோக்கல் பிரிட்டிஷ் அதிகாரியின் புண்ணியத்தில், அங்கேயே தங்க அனுமதி கிடைத்ததால், யாழ் குடாவில் மட்டும், 9 மிஷனரி பாடசாலைகளை அமைத்தனர். இங்கே படிக்க, தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்கள் இருந்து பலர் வந்தனர். அப்படி வந்த ஒரு ஆந்திராக் காரர், யாழ் இந்துக் கல்லூரி அதிபராக பின்னர் வந்தார்.

இங்கே படித்தவர்களே, தமிழ்நாடு, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பிஜி என சிவில் சேவை வேலைகளுக்கு போனார்கள்.

அவர்களில் ஒருவரே, ராஜரத்தினத்தின் தந்தை சின்னத்தம்பி. 

எனது தாய் வழிப் பாட்டனாரும், ஒரு சின்னத்தம்பி. மலேசியாவில் தான் வேலை செய்தார்.

மலேசியன், சிங்கப்பூர், பர்மா பென்சனியர் என ஒரு கூட்டம் இருந்தது.

இனி, UK, US, கனடா, பிரான்ஸ் பென்சனியர்ஸ் என்று ஒரு கூட்டம் இன்னும் 10, 15 வருடத்தில் யாழ்ப்பாணத்தில் செட்டில் ஆகும். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மலேசியன், சிங்கப்பூர், பர்மா பென்சனியர் என ஒரு கூட்டம் இருந்தது.

இனி, UK, US, கனடா, பிரான்ஸ் பென்சனியர்ஸ் என்று ஒரு கூட்டம் இன்னும் 10, 15 வருடத்தில் யாழ்ப்பாணத்தில் செட்டில் ஆகும். :grin: 

அவுஸ் பென்சனியர் சங்கத்தின் தலைவர் நான் தான் ...10 வ்ருடங்களின் பின்பு...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அவுஸ் பென்சனியர் சங்கத்தின் தலைவர் நான் தான் ...10 வ்ருடங்களின் பின்பு...

டபாரெண்டு துண்டைப் போட்டுவிட்டியள்.

அப்ப துணைத் தலைவர்; புங்கையர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

டபாரெண்டு துண்டைப் போட்டுவிட்டியள்.

அப்ப துணைத் தலைவர்; புங்கையர் தான்.

எனக்கு தொடர்ந்து தலைவரா இருக்கிற ஐடியா...ஆனால் தமிழரை துணை தலைவரா வைச்சிருக்கிறது அவ்வளவு புத்திசாலித்தனமில்லை...அவருக்கு செயலாளர் பதவியை கொடுப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

எனக்கு தொடர்ந்து தலைவரா இருக்கிற ஐடியா...ஆனால் தமிழரை துணை தலைவரா வைச்சிருக்கிறது அவ்வளவு புத்திசாலித்தனமில்லை...அவருக்கு செயலாளர் பதவியை கொடுப்போம்..

34 minutes ago, Nathamuni said:

டபாரெண்டு துண்டைப் போட்டுவிட்டியள்.

அப்ப துணைத் தலைவர்; புங்கையர் தான்.

ஓடியவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆர்ப்பாட்டம் நடத்துவம்  :unsure::unsure::11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனி ஒருவன் said:

ஓடியவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆர்ப்பாட்டம் நடத்துவம்  :unsure::unsure::11_blush:

நாங்கள் ஓடிவரவில்லை தீர்க்கதரிசனத்தொடா வெளியில் வந்தனாங்கள்.....சிறிலங்காவை சிங்கப்பூராக மாற்றுவதற்காக அதற்குறிய காலம் கனிந்துவந்தவுடன் வந்து செட்டிலாகிவிடுவோம்...அரபிக்காரனையே விடுறீயள் எங்களை விடமாட்டியளே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

நாங்கள் ஓடிவரவில்லை தீர்க்கதரிசனத்தொடா வெளியில் வந்தனாங்கள்.....சிறிலங்காவை சிங்கப்பூராக மாற்றுவதற்காக அதற்குறிய காலம் கனிந்துவந்தவுடன் வந்து செட்டிலாகிவிடுவோம்...அரபிக்காரனையே விடுறீயள் எங்களை விடமாட்டியளே?

என்னப்பா செய்வது  அவன் காசை கொண்டு  அவர்கள் இனம்  அவன்ட மக்கள் என இறைத்து விட்டு செல்கிறான் நம்ம சனம் இறைக்க ஒன்றும் இல்லையே அவனிடமோ எண்ணை விற்கும் காசு இருக்கிறது கொண்டு இறைத்து விட்டு செல்கிறான் நம்மிடமோ ஊருக்கு வந்து  ஒரு சொகுசு பங்களா கட்டிவிட்டு மீண்டும் பறந்து போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

நாங்களும் காசோடதான் வருவோம் என்ன கணக்கு பார்த்துதான் செலவளிப்போம்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

நாங்களும் காசோடதான் வருவோம் என்ன கணக்கு பார்த்துதான் செலவளிப்போம்:10_wink:

அதானே பார்த்தன் சொந்த செலவுக்கு மட்டுமே தானே  tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

அதானே பார்த்தன் சொந்த செலவுக்கு மட்டுமே தானே  tw_angry:

புண்ணியம் கிடைக்கும் என்றால் கொஞ்ச பொதுச்செலவு செய்யிற பழக்கம் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

புண்ணியம் கிடைக்கும் என்றால் கொஞ்ச பொதுச்செலவு செய்யிற பழக்கம் இருக்கு...

கோவிலுக்கு தானே அது ?? :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

கோவிலுக்கு தானே அது ?? :104_point_left:

உப்படி ரயல் அட் பார் முறையில கேள்வி கேட்க கூடாது.tw_cry:..கோவில் கட்டுவதாலும் தமிழ் வாழும் என்பதை 55 வயசுக்கு பின்பு தான் உணர்ந்தேன்....சில இடங்களில் மிகவும் வறுமையின் கீழ் மக்கள் இருப்பார்கள் ஆனால் மரத்திற்க்கு கீழ் ஒரு கல்லை வைத்து வணங்கி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்துகிரார்கள் ...அவர்களுடன் ஒப்பிடும் பொழுது நாங்கள் எல்லாம் தூசு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

புத்தன், புத்தருக்கு கோயில் கட்டுறன் எண்டு கிளம்பாம இருந்தால் சரி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புத்தன், புத்தருக்கு கோயில் கட்டுறன் எண்டு கிளம்பாம இருந்தால் சரி. :grin:

புத்தருக்கு தமிழில் அர்ச்சனை பூஜைகள் செய்து,தேவாரம் பாடினால் கோவில் என்ன மாளிகையே கட்டலாம்...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

புத்தருக்கு தமிழில் அர்ச்சனை பூஜைகள் செய்து,தேவாரம் பாடினால் கோவில் என்ன மாளிகையே கட்டலாம்...:10_wink:

இனி பள்ள்ளி வாயலை விட புத்தர் சிலை வைப்போம் என்ன புத்தர்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அடிப்படையில் குடியேறிகளின் நாடே. ஆனால் இலங்கையர் மாதிரி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த குடியேற்றத் தமிழர்களை சிங்கப்பூரில் இழிவாக, இரண்டாந்தர குடிமக்களாக  நடத்தவில்லை.

சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கும், அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் உழைத்த தமிழர்களை நினைவுடன் போற்றுவதோடு, தமிழையும் ஆராதித்து போற்றுகின்றனர். இது சிங்கப்பூரில் நான் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை..

தற்பொழுது வட இந்தியர்களும், வங்காளிகளும், இந்திக்கும், வங்காள மொழிக்கும் சிங்கப்பூரில் உயர்மட்ட அளவில் இடம்கேட்டு திணிக்க முயற்சிப்பதாகக் கேள்வி.

சிங்கப்பூரின் சுதந்திர தின விழாவில் தமிழுக்கு இடமளித்த காணொளி கீழே..!  vil-super.gif

4 hours ago, Nathamuni said:

.. இனி, UK, US, கனடா, பிரான்ஸ் பென்சனியர்ஸ் என்று ஒரு கூட்டம் இன்னும் 10, 15 வருடத்தில் யாழ்ப்பாணத்தில் செட்டில் ஆகும். :grin: 

மிக முக்கியமாக நார்வே, ஜெர்மனியை விட்டுவிட்டீர்களே..! vil-happy.gif

2 hours ago, ராசவன்னியன் said:

சிங்கப்பூர் அடிப்படையில் குடியேறிகளின் நாடே. ஆனால் இலங்கையர் மாதிரி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த குடியேற்றத் தமிழர்களை சிங்கப்பூரில் இழிவாக, இரண்டாந்தர குடிமக்களாக  நடத்தவில்லை.

முதலில நீங்கள் உங்கட இந்தியாவில இரண்டாம்தரமா நடத்தப் படுகிறதை நிறுத்த போராடுங்கோ - அப்புறமா இலங்கை தமிழரைப் பற்றி கருத்திடலாம் அருமை நண்பரே.

சும்மா உசுப்பெத்தவேன்றே வாரானுவ 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

முதலில நீங்கள் உங்கட இந்தியாவில இரண்டாம்தரமா நடத்தப் படுகிறதை நிறுத்த போராடுங்கோ - அப்புறமா இலங்கை தமிழரைப் பற்றி கருத்திடலாம் அருமை நண்பரே.

சும்மா உசுப்பெத்தவேன்றே வாரானுவ 

அதனால்தான் 30 வருட ஆயுத போராட்டமும், அதனால் இறந்த லட்சக்கணக்கான மக்களும், அதன் தொடர்ச்சியாக இன்னமும் காணி மீட்க போராட்டமும் நடைபெறுகிறதோ..? எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென்றால் ஏன் தமிழ் நாட்டைப் பார்த்து ஆதரவு கூப்பாடும், இங்கே அடைக்கலமும், போராட்டத்திற்கான பயிற்சியும்?

தேவைபட்டால் அடைக்கலம் நாட வேண்டியது, காரியம் முடிந்தவுடன் உங்கள் வேலையை பார்த்துக்கொள்ளுங்கள்! என கூவ வேண்டியது..இது ஏன் அருமை நண்பரே?

சும்மா நன்றி மறந்து இருக்கானுவ

5 minutes ago, ராசவன்னியன் said:

சும்மா நன்றி மறந்து இருக்கானுவ

அது சரி 

சும்மா இருந்தவனை உசுப்பேத்தி ஆயுதமும் கொடுத்து அப்புறம் அத்தனையும் அழித்து ஒன்னும் இல்லாம பண்ணும் வரைக்கும் கம்முன்னு இருந்து மெரீனாவில காலை சாப்பாட்டுக்கும் மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதமும் இருந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றினது போதும் அப்பனே 

இனிமேலாவது உங்கட வேலையை பாருங்க 

உங்கட கிந்தியாவின் பொட்டுக்கேடுகளை நான் எழுத வெளிக்கிட்டா யாழ் மட்டுமில்லை இந்த உலகமே தாங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அது சரி..

உங்கள் தலீவர்கள் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்களை வாக்குரிமையற்று நாடிழந்தவர்களாக்கியதை விடவா இங்கே துரோகம் செய்துவிட்டார்கள்..?

இங்கே ஆயுதம் கொடுத்தால், அதை மறுக்க, யோசிக்க உங்களுக்கு புத்தி எங்கே போயிற்று அப்பனே..?

எனக்கு கிந்தியாவிடம் ஒன்றும் பற்றுதல் இல்லை, தாராளமாக எழுதிக் கொள்ளலாம்!

1 minute ago, ராசவன்னியன் said:

உங்கள் தலீவர்கள் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்களை வாக்குரிமையற்று நாடிழந்தவர்களாக்கியதை விடவா இங்கே துரோகம் செய்துவிட்டார்கள்..?

இங்கே ஆயுதம் கொடுத்தால், அதை மறுக்க, யோசிக்க உங்களுக்கு புத்தி எங்கே போயிற்று அப்பனே..?

இது நியாயமான கேள்வி

இதைத்தான் நானும் பலரிடம் கேட்கின்றேன் - ராஜதந்திரம் என்று புலுடா விடுகிறார்கள்

கேவலமான இந்தியாவை நம்பி நம்ம வாழ்வை இழந்த மக்களில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இது நியாயமான கேள்வி

இதைத்தான் நானும் பலரிடம் கேட்கின்றேன் - ராஜதந்திரம் என்று புலுடா விடுகிறார்கள்

கேவலமான இந்தியாவை நம்பி நம்ம வாழ்வை இழந்த மக்களில் நானும் ஒருவன்.

உங்களின் அதே ராஜதந்திரம் ஏன் அந்த கிந்தியாவிற்கும் இருக்கக் கூடாது?

இந்தியா கேவலமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் துயரத்தின்போது உடனே அடைக்கலமானது தமிழகம்தான்.

1987 ஆண்டுவரை தமிழகத்தில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பை மறந்து, நன்றி இல்லாமல் தமிழகம் பற்றி எழுதவேண்டாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.