Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வை படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வல்வைப் படுகொலைகள 28 வருட கால தொடரும் வேதனை....
 
மனைவியைப் பிணமாகத் தேடிய கணவனும்,கணவனை பிணமாகத் தேடிய மனைவியும்..சோகத்தையும் சொத்துகளையும் இழந்த நாட்கள் அவை! -அமைதிப் படையின் அட்டூழியங்கள்!போராட்ட காலத்தில் சில நினைவில் இருந்து அழியாத நினைவுகள்!–
 
1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர். 
 
ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர்சன் சிங் தலைமையில் ஏ வடிவ வியூகம் அமைத்து விடுதலைப் புலிப் போராளிகளைக் குறிவைத்து நகர்ந்தபோதே இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பமானது. 
 
வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச் சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது. 
 
அந்தக் கனவான் ஒப்பந்தத்தை மீறும் வகையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் செயற்பட்ட சீக்கியப்படைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அன்று அவர்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 
 
அன்று ஒன்பது சீக்கியச்சிப்பாய்கள் கொல்லப்பட்டது இந்திய ஆக்கிரமிப்பாளருக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதன் விளைவு!... 
 
வெறிகொண்ட இந்தியப்படைகள் ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகரத்தையும் அயல் ஊர்களையும் சுற்றிவளைத்து ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு ஆடிய வெறியாட்டத்தில் நேர்ந்த 'வல்வெட்டித்துறைப் படுகொலைகள்" வரலாற்றில் இந்தியருக்குக் கறைபடிந்த செய்தியாக இன்றும் நிலைத்துவிட்டது. 
 
அமெரிக்க இராணுவத்தினரின் வெறியாட்டத்திற்கு ஆளாகிய வியட்நாமின் மைலாய் படுகொலை போல் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இந்தியாவின் 'ஜாலியன் வாலா பாக்" படுகொலை போன்று இந்தியாவுக்கு ஒரு வல்வைப் படுகொலை களங்கம் சேர்த்துவிட்ட வரலாறாகிவிட்டது. 
 
ஆம், அந்தப் படுகொலையின் விளைவாக 63 அப்பாவிப் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற பேதமின்றி வெட்டப்பட்டும், சுடப்பட்டும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். 
 
நூற்றுக்கதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர். 
 
ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன. 
 
15 திருமணமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட�
�ர். 
 
50இற்கும் அதிகமான இளம்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
 
பல இந்துக்கோயில்கள் சேதமாக்கப்பட்டன. 
 
இவ்வளவும் செய்துமுடித்த இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குக் காரணமாக இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் அந்த ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் எப்படி நிம்மதியாக உறங்கியிருக்க முடியும்? 
 
அந்த அழியா நினைவுகள் - மறக்கமுடியாத அவலங்களை விதைத்துச்சென்ற கொடூரமான இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் துயரின் விளிம்பில் உழன்றுகொண்டிருக்கும் வல்வை மக்களால் எப்படி மறக்க முடியும்?... எப்படி மன்னிக்கமுடியும்? 
 
அந்த நிலையிலும், இந்தியாவைத் தாய் நாடு என்று ஒரு காலத்தில் நம்பி இந்திய விசுவாசிகளாக இருந்து இந்தியர்களால் முதுகில் குத்தப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களில் ஒருசில ஆயிரமாக இருந்து கண்ணீர் விடுவதைத் தவிர விடுதலை வேள்விக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கிய வல்வெட்டித்துறை மக்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்? 
 
ஆனால், எமது நெஞ்சில் துயரங்களை விதைத்துச்சென்ற அந்தத் துன்பியல் நாள்களை நினைவு கூரும் ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளையும் ஈழத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்படுவதற்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்த ராஜீவ் காந்தியையும் நிம்மதியான ஒரு நிரந்தரத் தீர்வுக்குத் தடையாக இருக்கும் இந்தியாவையும் எப்படி வல்வெட்டித்துறை மக்களால் மறக்கமுடியும். 
 
இன்றும் அந்த நினைவுடன் வாழும் நாம் அனைவரும் அன்று இந்தியர்களால் கொல்லப்பட்ட எம்மவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.
sugatharan.blogspot
  • கருத்துக்கள உறவுகள்

வல்வைப் படுகொலைகளின் இறுதிநாட்கள்…!

ஜாலியன் வாலா பாக் படுகொலை, மைலாய் படுகொலைஎன்ற வராலாற்றுப்புகழ் பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில் இந்த வல்வெட்டித்துறைப் படுகொலையும் இன்று இடம் பெற்றுவிட்டது என்பதை எவரும் எக்காலமும் மூடி மறைத்து விடமுடியாது.
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம், 4ம், திகதிகளில் இந்தியப் படையினர் வல்வெட்டித்துறை யில் நடாத்திய படுகொலைகள் இன்றும் கூட எமது நெஞ்சை விட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல் நிகழ்வாகும். ஈழத்தில் தமிழர்களைக் காப்பதற்கு என்ற போர்வையில் வந்த இந்தியப் படையினர் எமது நாட்டைக் கபளீகரம் செய்து சின்னாபின்னப் படுத்தி, அமைதியற்ற ஒரு பிராந்தியமாக்கி விட்டுச் சென்றனர்..!
1. ஆயிரக் கணக்கான வீடுகளை உடைத்தும், எரித்தும் தரைமட்டமாக்கினார்கள்.
2. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகளை ஆண், பெண்குழந்தைகள், வயோதிபர்கள் என்ற பாகுபாடே இன்றி சுட்டும், எரித்தும் துவம்சம் செய்தனர்.
3. நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி னார்கள்.
4. தமிழ்ப் பள்ளிகளை எரித்தார்கள்.
5. ஹிட்லர் கூடச் செய்யத்தயங்கிய படுகொலைகளை வைத்தியசாலையி னுள்ளேயே மேற்கொண்டு வெறியாட்டம் ஆடினார்கள்.
6. பல நூற்றுக்கணக்கான பென்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி நர்த்தனம் ஆடினார்கள்...!

அவர்களது படுகொலைகளின் உச்சக்கட்டமாக நிகழ்த்திய வல்வைப் படுகொலை நிகழ்ந்து 18 வருடங்களின் பின் இன்றும் கூட நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் V வடிவத்திலான வியூகம் அமைத்துப் புறப்பட்டனர் . இவ்வாறு புறப்பட்ட இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ண மேனன் , கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதும் , ஆயுதம் தாங்கிய புலிகளை அழிக்கத் திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.
ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவோ அல்லது அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.
• ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி 71 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டி ருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.
• நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.
• 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்ப ட்டன.
• 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
• வல்வை சனசமூக நிலையம் மற்றும் பொது நூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்பட்டு இருந்தன.
• 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம 2ஆம்,3 ஆம்,4ஆம் திகதிகளில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான வல்வைப் படுகொலை நடந்து முடிந்த கையுடன் அந்தக் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும். என்ற உணர்வில் தமிழகத்தில் பல தலைவர்களைச் சந்தித்ததில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு.ஜோர்ஜ் பெர்ணான்டஸ் தந்த உற்சாகமும், ஆதரவும் இந்திய இராணுவத்தினரின் கொடுரமான தாக்குதலை வருணிக்கும் விவரணச் சித்திரமான எனது வல்வைப் படுகொலை நு|லுக்கு உத்வேகம் அளித்தது.

இலங்கையில் அமைதி காக்க என வந்த இந்திய அமைதிப் படை யினரால் 1989 ம் ஆண்டு ஆகஸ்ற் 2, 3, 4 ம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்த மக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டி ருக்கின்றது…… வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவினரால் இந்தச் சம்பவம் சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட தால், இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டது. இந்தப் படுகொலைகளை இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒப்பாகவும்வியட்நாமில் அமெரிக்கர்களினால் மேற்கொள்ளப்ட்ட மைலாய் படுகொலைக்கு ஒப்பாகவும்; அன்று இங்கிலாந்தின் ~டெய்லி டெலகிராஃப்| மற்றும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ இந்தியாவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை யாளர்களுக்குக் நான் கொடுத்த பேட்டியின் மூலம் தான் உலகமே அதன் கொடுரத்தைப் புரிந்து கொண்டது. நான் எழுதிய வல்வைப் படுகொலை” என்ற நூலை தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதி அதற்குரிய புகைப்படங்களையும் எடுத்துச் சென்று கடலூரில் தங்கியிருந்த ஜோர்ஜ் பெர்னான்டஸ் அவர்களைச் சந்தித்து இந்தியா வின் மைலாய் படுகொலைபற்றிய விளக்கத்தை எழுதி எனது நூலுக்கான அணிந்துரையை எழுதித் தருமாறு கேட்ட பொழுது அதிர்ந்து போன ஜோர்ஜ் பெர்னான்டஸ் மனம் உருகி என்னிடம் கையளித்த அணிந்துரையின் ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது .இவரே அடுத்து வந்த திரு.வி.பி.சிங் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர் நீத்த 71 பொது மக்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

ஜோர்ஜ் பெர்னான்டசினால் வழங்கப்பட்ட அணிந்துரை:

ராஜீவ் காந்தியின் இராணுவ சாகசத்தால், இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மைலாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன், மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தியிருக்கின்றேன்.

இன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் தனது மைலாயை நிகழ்த்தி யிருக்கிறது. இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் காட்டிய காட்டு மிராண்டித் தனத்தைப்பற்றி லண்டனிலிருந்து வெளிவரும் ~டெய்லி டெலகிராஃப்| தனது தலையங்கத்தில் விமர்சிக்கிறது: ~~இந்த நாசவேலை மைலாயை விடக் கொடுமை யானது. அங்கே அமெரிக்கப் படைகள் நிதானமிழந்து வெறியாட்டம் ஆடினர். ஸ்ரீலங்காவின் கிராமத்தில் இந்தியப்படையினர் திட்டமிட்டுச் செயல் பட்டிருக்கின்றனர். ஆட்களைப் படுக்கவைத்து முதுகில் சுட்டுக் கொன்றிருக் கின்றனர். வேற்றுமை அதுமட்டுமல்ல, மைலாய் அமெரிக்கப் பத்திரி்கையாளர் களாலேயே உலகின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மைலாய் பொதுமக்களுக் கெதிரான அமெரிக்க இராணுவத்தினரின் அடாவடிச் செயலை அமெரிக்க மக்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள், மாணவர், இளைஞர்கள்- ஒன்றுதிரண்டு எதிர்த்தனர்

வல்வெட்டித்துறையில் இந்தக் கோரச்சம்பவம் நடந்து பதின்மூன்று நாட்களுக்குப்பின் அங்கு சென்ற பைனான்சியல் டைம்ஸ்(லண்டன்) பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தை அறிந்தார். இதைப்பற்றிய அவரது செய்தி ஆகஸ்ட் 17 அன்று அவரது பத்திரிகையில் வெளியானது. அதற்கு முன்பே ஆகஸ்ட் பதின்மூன்றாம் திகதி லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை, தனது நிருபர் ஜெரமி கவ்ரான் தொகுத்தனுப்பிய செய்தியை வெளியிட்டது. இந்தியப் பத்திரிகை யாளர்களின் ஒரு சிறு பகுதியினரே அதுவும் செப்டம்பர் மூன்றாம் தேதிக்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸில் ரீட்டா செபாஸ்டியன் கொடுத்த செய்தியை தொடர்ந்தனர்.

உண்மை என்னவென்றால் வல்வெட்டித்துறை சம்பவம் இந்திய அரசால் திட்ட மிட்டு மறைக்கப்பட்டது. இந்தியப் பத்திரி்கை யாளர்களின் பெரும்பகுதியினர் இதில் கூட்டுச் சேர்ந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்தனர். இந்தியாவில் இராணுவம் புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் அடாவடித்தனங்களில் ஈடுபடும் போது, இப்புனிதத்தன்மை மேலும் கூடுகிறது. வடகிழக்கு மாகாணத்தில் இராணுவ உடையில் நம்மவர்கள் நடத்தும் பாலியல் வல்லுறவுக்களையும் கொள்ளைகளையும் பற்றி - யாரேனும் வாய்திறப்பதுண்டா?

அதிகார வர்க்கத்தையும், இராணுவத்தளபதிகளையும் மக்கள் சக்தி வென்றபோது வியட்நாமும்இ மைலாயும் முடிவுக்கு வந்தன.வல்வெட்டித்துறை பற்றிய உண்மை களை வல்வைப் படுகொலைகள் என்ற இச்சிறு பிரசுரம் உலக மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு உணர்த்தும்என நம்புகிறேன். இந்திய மக்களின் மனசாட்சியை விழிப்படையச்செய்து, வல்வெட்டித்துறையில் உயிரிழந் தோருக்காக அவர்களை நீதி கேட்கச் செய்யுமானால், இவ்வெளி யீட்டின் நோக்கம் முழுமை பெறும். -

Image may contain: food

Image may contain: one or more people and food

Image may contain: fire

Image may contain: tree and outdoor

Image may contain: outdoor

FB

 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்குப் முன்பு மட்டக்களப்பினைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவரைச் சந்திதேன்.  இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்ட அப்பாவி மட்டக்களப்பு மக்கள் சார்பாக அவரும் சில ஆசிரியர்களும்  ஒரு மகஜரினை இராஜீவ் காந்திக்கு அனுப்பிவைத்தார்கள். ஒரு மாதத்தின் பின்பு அந்த மகஜரை எழுதிய 26 ஆசிரியர்களில் 25 பேர் இந்தியப்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் . அந்த ஆசிரியரின் மனைவியும் (அவரும் ஒரு ஆசிரியை, அந்த மகஜரில் கையோப்பமிட்டவர்) இந்தியப்படையினால் கொல்லப்பட்டார்.  அந்த ஆசிரியர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்றதினால் தப்பினார். அவரின் பெயர் தேவராஜா.

 

கொக்குவில், இணுவில், உரும்பிராய் என இந்தியா   இராணுவத்தினால் (Innocent people killing force) கொல்லப்பட்ட பலர்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, colomban said:

வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச் சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது. 

ஜேம்ஸ் அண்ணையை என்றும்  மறக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை படுகொலையை அன்று வெளி உலகிற்கு கொண்டு வந்த ஜேர்மனி.. இன்று சிங்கள இனப்படுகொலையாளர்களை பாதுகாக்கும் கேடுகெட்ட எண்ணத்தோடு இருக்கிறது. இதற்கு யார் காரணம்.. ஏன் ஜேர்மனி இந்த நிலைப்பாட்டுக்கு வந்தது.. அதற்கும் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் தொடர்புண்டா...??! :rolleyes:tw_angry:

ஏன் உலகம்.. சிறீலங்காவையும்.. ஹிந்தியாவையும் எந்த மனிதப் படுகொலைகளை இட்டும் தண்டிக்க வக்கற்று.. அவை எல்லாவற்றையும் வலிந்து மறந்து மன்னிக்கக் கேட்கிறது. அதேவேளை தமது தேவைகளுக்காக பல படுகொலைகளை அரங்கேற்றி அவற்றை தூக்கிப் பிடித்தும் வருகிறது...?! இதுதான் உலகின் (மேற்குலகின்) இராஜதந்திரமா...??! இந்தக் கேள்விகளை ஏன் அவர்களின் மனச்சாட்சியை தொட யாரும் கேட்பதில்லை..!! :rolleyes:

9 minutes ago, nedukkalapoovan said:

வல்லை படுகொலையை அன்று வெளி உலகிற்கு கொண்டு வந்த ஜேர்மனி.. இன்று சிங்கள இனப்படுகொலையாளர்களை பாதுகாக்கும் கேடுகெட்ட எண்ணத்தோடு இருக்கிறது. இதற்கு யார் காரணம்.. ஏன் ஜேர்மனி இந்த நிலைப்பாட்டுக்கு வந்தது.. அதற்கும் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் தொடர்புண்டா...??! :rolleyes:tw_angry:

ஏன் உலகம்.. சிறீலங்காவையும்.. ஹிந்தியாவையும் எந்த மனிதப் படுகொலைகளை இட்டும் தண்டிக்க வக்கற்று.. அவை எல்லாவற்றையும் வலிந்து மறந்து மன்னிக்கக் கேட்கிறது. அதேவேளை தமது தேவைகளுக்காக பல படுகொலைகளை அரங்கேற்றி அவற்றை தூக்கிப் பிடித்தும் வருகிறது...?! இதுதான் உலகின் (மேற்குலகின்) இராஜதந்திரமா...??! இந்தக் கேள்விகளை ஏன் அவர்களின் மனச்சாட்சியை தொட யாரும் கேட்பதில்லை..!! :rolleyes:

அவர்கள் நாகரிகமற்ற ஹிந்தியர்களுடன் வேறுபல சுயலாப திட்டங்களில் நெருக்கமாக இணைந்து பணியாற்றியது தான் இதற்கு முதலாவது காரணம். இவற்றில் ஹிந்திய பயங்கரவாதக் கும்பலின்  பங்களிப்பு கணிசமாக உள்ளது.

ஆனால், 2009 இல் முடிந்த இனப்படுகொலைகளின் பின்னர் ஜெர்மனி அரசு கொலைகார ஹிந்திய அரசுடன் நெருக்கத்தை குறைத்தனர். இதை எம்மவர்கள் இதுவரை சரியாக பயன்படுத்த முயலவில்லை.

ஜேர்மனிய மக்களின் கவனத்துக்கும் திட்டமிட்ட தமிழினப் படுகொலை பற்றிய உண்மைகளை கொண்டு சென்றால் எதிர்காலத்தில் சாதகமான நிலை உருவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.