Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது.

Featured Replies

தமிழிலும் கூகுள் வாய்ஸ் சர்ச்!

 
 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது. 

google_14264.png

 

உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும். தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி,  குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளும் அடங்கும். அறிவிப்புக்கு முன்னரே இந்த சேவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை சென்றடைந்துவிட்டது. விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-சில் இயங்கும் ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எழுத்துகள் மூலம் தேடுதலை விட குரல்வழி தேடல் மூன்று மடங்கு வேகமானது என்று கூறியுள்ள கூகுள், உலக அளவில் தேடுபொறியில் 20 சதவிகிதம் அளவுக்கு குரல்வழியே தேடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/99077-google-voice-search-adds-support-for-more-indian-languages.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இணைய களம் - ஜி-போர்டு: எழுத்துகளாக மாறும் குரல்

 

 
nooveli

கூகுள் அட்டகாசமான ஒரு வேலை யைச் செய்திருக்கிறது. நண்பர்கள் சிலர், இணையத்தில் தமிழில் எழுதவேண்டும் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை எனும்போது, என்.எச்.எம். மென்பொருளை கணினிக்கும், செல்லினம் (Sellinam) செயலியை அலைபேசிக்கும் பரிந்துரைப்பேன்.

இதுவல்லாமல் ‘கூகுள் இன்புட்’ வழியாக எழுதுகிறவர்களும் உண்டு. எனக்கு அது தோதாக இல்லை. அடுத்து என்ன எழுதவேண்டும் என்று ஒவ்வொரு சொல்லுக்கும் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தால், நாம் எதைச் சுயமாக எழுதுவது? செல்லினம் அப்படி இல்லை. ஒரு 'ஃ' வைத்தாலும் அதை நாமே எழுத வேண்டும். எங்கே எழுத்துப்பிழை விடுகிறோம் என்று நமக்குப் புரிபடும். சரி விஷயத்துக்கு வருகிறேன். ‘ஜி-போர்டு தி கூகுள் கீபோர்டு’ (G-Board the Google Keyboard) என்கிற புதிய செயலியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. 22 எம்.பி. நிறை உள்ள இந்த செயலி மூலமாக இனி தமிழில் பேசினாலே அது எழுத்தாகத் தட்டச்சு ஆகிவிடும். முன்பு ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்கு மட்டுமே இருந்த இவ்வசதி இப்போது ஜி-போர்டு வழியாக பிராந்திய மொழிகளுக்கும் அறிமுகமாகிறது.

இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், சிங்கப்பூர் தமிழ் என்று மூன்று பிராந்திய மொழி இசைவுகளை கூகுள் நீங்கள் பேசப் பேச தமிழில் இடுகையிடுகிறது. இதே போல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் குரல் தட்டச்சு முறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், தேடுபொறி என்று எங்கும் பேசியே எழுத்தைப் பதிவாக்கலாம்.

சங்கடம் என்னவென்றால், பொதுத் தமிழ் என்கிற பாடத் தமிழில்தான் அதில் எழுத முடியும்போல. ‘‘இங்கன நிக்கேன்.. நீ எப்ப வார. சீக்கரம் வந்து தொல’’ என்றால் திணறிவிடும் ஜி-போர்டு! மற்றபடி பயன்படுத்திப் பார்த்ததில் ‘இனிய காலை வணக்கம் தோழி‘ எல்லாம் ஒரே நொடியில் குரலில் இருந்து எழுத்துகளாக மாறுகிறது. ‘சாட்டையடிப் பதிவு தோழி’ என்று பின்னூட்டம் இடுவதும் இனி எளிதாகிவிடும்!

தமிழில் தட்டச்சு செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று இனிமேல் யாராவது கூறுவார்களா என்ன?

http://tamil.thehindu.com/opinion/columns/article19515398.ece

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சங்கடம் என்னவென்றால், பொதுத் தமிழ் என்கிற பாடத் தமிழில்தான் அதில் எழுத முடியும்போல. ‘‘இங்கன நிக்கேன்.. நீ எப்ப வார. சீக்கரம் வந்து தொல’’ என்றால் திணறிவிடும் ஜி-போர்டு! மற்றபடி பயன்படுத்திப் பார்த்ததில் ‘இனிய காலை வணக்கம் தோழி‘ எல்லாம் ஒரே நொடியில் குரலில் இருந்து எழுத்துகளாக மாறுகிறது. ‘சாட்டையடிப் பதிவு தோழி’ என்று பின்னூட்டம் இடுவதும் இனி எளிதாகிவிடும்!

இன்னும் மெருகேரனும் தமிழ் சில முக்கியமானதுகளை சொல்ல அடையாளம் காண கஷ்ட்டபடுகிறது.

  • 5 weeks later...

இன்றைய நவீன உலகில் எல்லாமே இலகுவாகிவிட்டது. நமது தேவையை விட வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்தது வருகிறது. இந்த கட்டுரை மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பத்தை எழுதுவதில் சந்தோசமாக இருக்கிறது. இன்று நாம் “மிக இலகுவாக ஆன்ட்ராய்ட் இல் வேகமாக தமிழில் டைப் செய்யலாம்… இனி கஷ்டம் இல்லை…” என்ற தலைப்பில் பார்க்க இருக்கின்றோம்.

முன்னொரு (ஒரு ஐந்து வருடத்திற்கு முதல்) பொழுதில் தமிழ் டைப் பண்ண தேவையானால் அதற்கென்று Kalaham என்றொரு font மற்றும் அதற்கான Keyboard Map ஒன்றும் (என்னென்ன எழுத்து எந்தெந்த keyக்கு வரும் என அறிய) தேவைப்படும். பலமணி நேரம் எடுத்து டைப் பண்ணி முடிப்போம்.

பின்னர் யுனிக்கோட் அறிமுகமான போதும் அதெற்கென சில எழுத்துருக்கள் (Fonts) தேவைப்பட்டன. உதாரணமாக சில தமிழ் தளங்களை பார்வையிட சில எழுத்துருக்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவையும் இருக்கும். இதெல்லாம் அறியாவிட்டால் எல்லா எழுத்துக்களும் கட்டம் கட்டமாக தோன்றும். (Square)

தற்போது அதிகமானவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் தமிழ் மொழியின் தேவையும் அதை வேகமாக டைப் பண்ண வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது. தமிங்கிலீஷ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட் மேப், கூகிள் கீபோர்ட், எழுத்தாணி கீபோர்ட் என பலவகை கீபோர்ட் அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கும்போதிலும் நமக்கு அதன் வேகம் போதவில்லை. அப்படித்தானே?

ஆம். நாம் இன்று பார்க்கப்போகும் முறை மூலம் நாம் தமிழில் பேசுவதை தமிழில் நமக்கு டைப் பண்ணித்தரும் ஒரு முறையை கற்றுக்கொள்ளப்போகின்றோம். இதற்காக தனியான அப்ளிகேஷன்ஸ் எதுவும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் சில செட்டிங்களை செய்வதன் மூலம் இதை செயற்படுத்திக்கொள்ளலாம்.

அதற்குமுன் பின்வரும் சில விடையங்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். அவற்றை சரியாக செய்யாமல் “எவ்வளவு லேசா சொன்னான் ஒண்டும் நடக்கல பாருங்க” என்று எனக்கு திட்டக்கூடாது.

1. இவ்வசதியை பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் அவசியம்.
2. செந்தமிழோ, பைந்தமிழோ, எழில்தமிழோ, குறைதமிழோ கொஞ்சம் நிதானமாகவும் மெதுவாகவும் சரியாகவும் பேச வேண்டும்.
3. பெயர் ஸ்மார்ட் போன் என்றாலும் அது உங்கள் அளவுக்கு ஸ்மார்ட் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

என்னடா இவன் பேசிக்கிட்டே இருக்கான் விசயத்த சொல்ரான் இல்ல என்று (உங்கள் மைண்ட் வாய்ஸ்) கவலைப்பட வேண்டாம். வாங்க வந்த விசயத்த பார்ப்போம்…

அன்ரோயிடில் இலகுவாக தமிழ் டைப் செய்ய

1. உங்கள் அண்ட்ராய்டு போன் இல் Settings க்கு செல்லவும்
2. அங்கு Language and Input என்பதை திறக்கவும்
3. அதில் காணப்படும் Google Voice Typing என்பதை திறக்கவும்
4. அதில் காணப்படும் Languages என்பதை திறக்கவும்
5. அங்கு காணப்படும் Choose Input Languages என்பதை திறக்கவும்
6. அதில் Automatic என்பது சரி “டிக்” செய்யப்பட்டிருந்தால் அதையும் மற்ற அனைத்து சரி “டிக்” எடுத்துவிடவும்.
7. Languages இல் “தமிழ் ( இலங்கை)” or “தமிழ் ( இந்தியா)” என்பதை (எதாவது ஒன்றை மட்டும்) செலக்ட் செய்து டிக் பண்ணவும்.
8. Back பண்ணி பின்னர் எங்கு டைப் பண்ண தேவை உள்ளதோ அந்த Application ஐ திறக்கவும் (Eg: Whatsapp)
9. Typing சென்றவுடன் வரும் Keyboard இல் உள்ள ஒலிவாங்கி (MIC) ஐ 3 செக்கன்கள் அழுத்திப்பிடித்து பின் விடுவிக்கவும் (Long Press)
10. இப்போது மேலே கூறப்பட்ட விதிமுறைகளுடன் பேசவும்.
11. Pause என்பதை தொட்டால் Typing நிறுத்தப்படும். தொடர மீண்டும் அதே பட்டனை தொடவும்.

அவ்வளவுதான்… உங்கள் கருத்துக்களை முடிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

இந்த கட்டுரையின் பெரும் பகுதி இம்முறை மூலம் HTC 816G மூலம் டைப் பண்ணப் பட்டது என்பதையும் இதில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் உள்ளடங்கி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவும். தமிழ் எழுத்துப்பிழைகள் இருந்தால் என்னை மன்னிப்பதோடு எனது மின்னஞ்சலுக்கு சுட்டிக்காட்டவும்.

மபாஸ் முஹைதீன்
mafazbinmohideen@gmail.com

https://config.lk/tips/ஆன்ட்ராய்ட்-இல்-வேகமாக-த/

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

ம்ம்  பேச ஒன்று வந்து விழுவது  வேற சொல்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ போன் உள்ளவர்கள் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

காமிராவை நிறுத்திவிட்டு முயற்சியுங்கள், சரியாக சொல்லுமென எண்ணுகிறேன், ஐயா..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.