Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

சரியா சொன்னீங்க பரணி அண்ணா.............நான் நேரடியா சொன்னேன் புறகணிக்க மாட்டேன் பார்பேன் என்று அவ்வாறே தான் செய்தேன்......... :unsure:

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி திரைப்படத்திற்கு ஓரிடமும் இல்லாத விளம்பரம் ஒரு செலவுமில்லாமல் யாழ் இணையத்தில் நடந்தேறியிருக்கின்றது.இது எப்புடியிருக்கு............. :huh:

சிவாஜி திரைப்படத்திற்கு ஓரிடமும் இல்லாத விளம்பரம் ஒரு செலவுமில்லாமல் யாழ் இணையத்தில் நடந்தேறியிருக்கின்றது.இது எப்புடியிருக்கு............. :lol:

என்ன செய்வது

:rolleyes: இப்படி இருந்தது :D

70 பேர் வாக்களித்துள்ளார்கள், யாழ் கள கருத்துக் கணிப்பில் புறக்கணிப்பிற்கு 78.57% அறுதிப் பெருன்பான்மை இதுவரை கிடைத்துள்ளது... இதிலிருந்து என்ன தெரிகின்றது?

:huh:இப்படியாகிப் போச்சு :lol:

நகைச்சுவை என்னவென்றால் புறக்கணிப்போம் என்று சொல்லிவிட்டு இங்கே விமர்சனங்களைத்தான் அதுவும் சாதகமாக அள்ளித் தெளிக்கின்றார்கள்.

கொஞ்சக் காலத்துக்கு முன்பு இங்கு லண்டனினில "புத்தியுள்ள" ஒரு ஆங்கிலேயர் பத்திரிகை ஒண்டில் யாருக்காவது விரைவாக கோடீஸ்வரனாக வேணுமெண்டால் ஐடியா தாரன்; ஒரு பவுண் காசோலையோட சுய விலாசமும் எழுதி கடிதம் போடச் சொல்லி விளம்பரம் செய்தாராம். சனங்களும் அட ஒரு பவுண் தானே எண்டு விழுந்தடிச்சுச் செய்திச்சினமாம். கடைசியில ஒண்டுமில்ல. பிறகு சனங்களை ஏமாத்தினதாக அவர் மேல வழக்கும் போட்டிச்சினமாம். அதிலயும் "சின்னச்சின்ன தொகையாக எல்லாரிட்டயும் வாங்கினா பெரிய தொகை சேரும்இதுதான் என்னோட கோடீஸ்வரனாக வர்ரதுக்கான ஐடியா" எண்டு அந்த வழக்கிலேயும் வெண்டுட்டாராம்.

சிவாஜி திரைப்படத்திற்கு ஓரிடமும் இல்லாத விளம்பரம் ஒரு செலவுமில்லாமல் யாழ் இணையத்தில் நடந்தேறியிருக்கின்றது.இது எப்புடியிருக்கு............. :huh:

சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமல்ல "rich gets richer; poor gets poorer" என்று அவர் பட விளம்பரத்தில அவரே சொல்லக்கேட்டு ஞாபகம். அவர் தன்னைப் பற்றியும் எங்களைப் பற்றியும் சாடமாடயா முன்னுக்கே சொல்லியிருக்கிறார். நாங்கதானே சரியான ரியூப் லைற்றுக்கள். விளங்கிக் கொள்ள கொஞ்ச நேரம் எடுக்கும்.

சிறுபுள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர் தியேட்டரில் காசு கொடுத்து பாத்தீர்கள் எத்தனை பேர் இணையத்தில் இறக்கி பாத்தீர்கள், இணையத்தில் பார்த்தவர் தொகை அதிகம் என்றால் புறக்கணிப்பு வெற்றிதான். அதை விட தியேட்டரில் மக்கள் பார்ப்பதற்கு முதல் லிங்குகள் கொடுத்தவகளின் சேவை பெரிய சேவை. இதை நான் வரவேற்கிறேன். தியேட்டர்காறன் நாட்டப்பட்டு அடுத்த முறை ரஜனியின் படத்தை எடுத்து போட அவர்கள் யோசிக்கவேண்டும், அடுத்தது கமலின் தசாவதாரம் வருது இனையத்தில் பாராது எல்லோரும் தியேட்டரில் பார்த்து உலக நாயகனுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். :huh::lol::lol::rolleyes::D:(:(

சித்தன் அவர்களே நான் இணையத்தில் பார்த்தேன். நான் இருக்கும் இடத்தில் தமிழ்படம் காண்பிக்கும் தியேட்டரும் இல்லை.

நீங்கள் தசவதாரம் படத்தை ஊக்குவிப்பதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன்

இது பெரிய சோகம்

இங்கு வழமையாக விஜய் படங்களை குறிப்பிட்ட ஒரு தமிழ்க்கடைதான் ஜங்கரனிடம் எடுத்து தியேட்டரில் ஓடுவார்கள். சிவாஜி படத்தை அவர்கள் எடுக்க முயலவில்லை. பயம் படம் ஓடாவிட்டால் நட்டம் என்று ஆனால் வேறு ஒரு தமிழ்க்கடைகாரர் எடுத்து ஓடினார்கள் எத்தனையோ மடங்கு லாபம் சம்பாhதித்துவிட்டார்களாம். பழையக கடைக்காரர் இப்ப அவல் மெல்லுகிளம்

சிவாஜி திரைப்படத்திற்கு ஓரிடமும் இல்லாத விளம்பரம் ஒரு செலவுமில்லாமல் யாழ் இணையத்தில் நடந்தேறியிருக்கின்றது.இது எப்புடியிருக்கு............. :D

கு.சா தாத்தாவுக்கு இதை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகி இருக்கு இது எப்படி இருக்கு............

:P

யாழ்களத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர் தியேட்டரில் காசு கொடுத்து பாத்தீர்கள் எத்தனை பேர் இணையத்தில் இறக்கி பாத்தீர்கள், இணையத்தில் பார்த்தவர் தொகை அதிகம் என்றால் புறக்கணிப்பு வெற்றிதான். அதை விட தியேட்டரில் மக்கள் பார்ப்பதற்கு முதல் லிங்குகள் கொடுத்தவகளின் சேவை பெரிய சேவை. இதை நான் வரவேற்கிறேன். தியேட்டர்காறன் நாட்டப்பட்டு அடுத்த முறை ரஜனியின் படத்தை எடுத்து போட அவர்கள் யோசிக்கவேண்டும், அடுத்தது கமலின் தசாவதாரம் வருது இனையத்தில் பாராது எல்லோரும் தியேட்டரில் பார்த்து உலக நாயகனுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். :D:D:D:D:D:D:D

படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு தான் இணையத்தில் வந்துது. அதுவும் காசு கட்டித்தான் பார்க்க வேண்டும். ஆனால் இணையத்தில் வந்ததோ படுமோசம். இந்த நிலையில் படத்தை திரையில் தான் பலர் பார்த்தனர். இவ்வளவு நடந்த பின்பும் படத்தை திரையில் பார்த்தவர்கள் அதிகமா?? அல்லது இணையத்தில் பார்த்தவர்கள் அதிகமா?? என்று கேள்வி வேறு கேட்டிருக்கின்றீர்கள். இந்தக் களத்தை தொடர்ந்து பார்த்திருந்தால் உங்களுக்கு உலக நடப்பு கொஞ்சமாவது தெரிந்திருக்கும். ஐரோப்பாவில் படத்தை வெளியிட்ட ஐங்கரன் தனக்கு 200 வீதத்திற்கு மேல் இலாபம் என வேறு சொல்லியுள்ளார். :D

'ஐடோன்'களிலும் சிவாஜி சாதனை!

சிவாஜி படத்தின் வசனங்கள், பாடல்கள் அடங்கிய ரிங் டோன்களும், காலர் டோன்களும் (ஐடோன்கள்) செல்போன் உபயோகிப்பாளர்களைக் கலக்க ஆரம்பித்துள்ளன. அதிலும் சிவாஜி சாதனை படைத்து வருகிறது.

சிவாஜி வந்தாலும் வந்தது, எங்கு பார்த்தாலும் அதே பேச்சுதான். அரங்கு நிறைந்த காட்சிகளுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கூட்டத்தோடு கல்லாக் கட்டிக் கொண்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி.

சிவாஜிக்குக் கிடைத்துள்ள இந்த பிரமாண்ட வரவேற்பு செல்போன் நிறுவனத்திருக்கும் செமத்தியான பிசினஸைக் கொடுத்துள்ளது. சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள், பாடல்களை ரிங் டோன்களாகவும், காலர் டோன்களாகவும் மாற்றி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

தமிழே தெரியாத பலரும் சிவாஜி படப் பாடல்களை டவுன்லோடு செய்து சந்தோஷித்து வருகின்றனர். சிவாஜி படத்தில் ரஜினி பேசும் "பேரைக் கேட்டவுடனேயே சும்மா அதிருல்ல" என்ற பஞ்ச் டயலாக்கையும் பலர் டவுன்லோடு செய்து வருகின்றனர்.

சிவாஜி படத்தின் ட்யூன்களையும், பஞ்ச் வசனங்களையும் காலர் ட்யூன்களாக மாற்றி வெளியிடும் உரிமையை ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் சிவாஜி படத்தின் ரிங் டோன்கள் மற்றும் காலர் ட்யூன்களை 33 நாடுகளில் 70 நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளது.

இதுதவிர கேம்ஸ்கள், படங்கள், வீடியோக்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஹங்கமா வழங்குகிறது. ஒரு நாளைக்கு 50,000 டவுன்லோடுகள் வரை செய்யப்படுவதாகவும், இந்திய ரிங்டோன், காலர் ட்யூன் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்றும் ஹங்கமா கூறுகிறது.

இந்தியா தவிர ஆசிய பசிபிக் நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் கூட சிவாஜி ஐடோன்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறதாம். அமெரிக்கா, ஜப்பானிலும் கூட சிவாஜி மேட்டர்களை டவுன்லோடு செய்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாம்.

ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீம் மோபானி கூறுகையில், சிவாஜி ரசிகர்களிடமிருந்து தினசரி ஆயரிகக்கணான டவுன்லோடு கோரிக்கைகள் வருகின்றன. இது எங்களை பிரமிக்க வைத்துள்ளது.

ஓவர்லோடு காரணமாக எங்களது சர்வர்கள் 37 நிமிடங்களுக்கு கிராஷ் ஆகி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் கூட ரஜினி சரித்திரம் படைத்து விட்டார் என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் என்கிறார் மோபானி.

ஒவ்வொரு நாளும் சிவாஜி படைத்து வரும் சாதனையைப் பார்க்கும்போது கின்னஸ் சாதனையைத் தவிர மற்ற எல்லா சாதனைகளையும் அது படைத்து விடும் என்று தெரிகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிராவ்வின் அடுத்த திரைப்படத்திற்கு ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலும் இந்தியாவில் நடப்பதுபோல் அவரின் திரைப்பட சிகரத்திற்கு பியர் அபிஷேகம்,விஸ்கி அபிஷேகம் நடாத்த ஆவன செய்ய வேண்டும்.பாலாபிஷேகம் செய்வது என்பது மரியாதை கெட்டவேலை.ஏனெனில் மேலைத்தேயநாடுகளில் தண்ணீரை விட பாலின் விலை மிகவும் மலிவு. :) எனவே நாமும் சிவாஜிராவ் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கவேண்டும். B)

சித்து உங்களின்ட விளையாட்டு ஒரு அளவே இல்லையப்பா :rolleyes: ......................உதுகுள்ள என்னை இன்கூலூட் பண்ணிண மாதிரி இருக்கு நல்ல இல்லை சொல்லி போட்டேன். :) ...........எனக்கு அழுகை........அழுகையா வருது..........என்ன தான் சொன்னாலும் சிவாஜி போஸ் தான் பாருங்கோ.............அந்த மாதிரி இருந்துச்சு படம்...............சும்மா அதிர்துச்சே என்றா பாருங்கோ...........அதில ஒன்று சொல்லுவார் பாருங்கோ பூவிழுந்தா பூ பாதை............தலை விழுந்தா சிங்க பாதை என்று சித்து அதை மாதிரி பிறகு என்னையும் டொஸ்ட் போட வைக்க கூடாது சொல்லி போட்டே............

என்னா கொடுமை சார் இது.............யாரோ நடிக்க...........யாரோ படம் எடுக்க.........நாம ஏனப்பா சண்டை பிடிபான்............ :P

வரட்ட சித்து...............சும்மா அதிருதில்ல(நான் போன பிறகு வந்து ஏசுறதில்லை சொல்லி போட்டேன்)

Edited by Jamuna

பார்தனான்.............பார்தனான் விளக்கம் நல்லாவே இல்லை பாருங்கோ :angry:

சிங்கம் தனியா வாறதை நாம பார்க்கவில்லை பாருங்கோ கீழே ஒரு டயலக் சொல்லி இருக்கிறீங்க பாருங்கோ எப் பொருள் யார் வழி என்று யார சித்து சொன்னது அவர் சொல்லுறது எல்லாம் கேட்கிறதோ உது நல்லா இல்லை அவரும் ரஜனி மாதிரி என்னவும் சொல்லி இருப்பார் பாருங்கோ. :P

சித்தா இதுவும் சண்டை இல்லை கருத்து பரிமாற்றம்...............

வரட்டா B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்தனான்.............பார்தனான் விளக்கம் நல்லாவே இல்லை பாருங்கோ :angry:

சிங்கம் தனியா வாறதை நாம பார்க்கவில்லை பாருங்கோ கீழே ஒரு டயலக் சொல்லி இருக்கிறீங்க பாருங்கோ எப் பொருள் யார் வழி என்று யார சித்து சொன்னது அவர் சொல்லுறது எல்லாம் கேட்கிறதோ உது நல்லா இல்லை அவரும் ரஜனி மாதிரி என்னவும் சொல்லி இருப்பார் பாருங்கோ. :P

சித்தா இதுவும் சண்டை இல்லை கருத்து பரிமாற்றம்...............

வரட்டா B)

அதாலதான் யார் சொல்லுறதயும் நம்பாமல் உங்கள சொந்தமா யோசிச்சு பார்க்க சொன்னனான், யோசிச்சு பார்க்கவே இவ்வளவு யோசிச்சிக்கிறது ஏன், முதலில யோசிச்சு பார்க்க எது தேவை என்று யோசிங்க, யோசிச்சும் வர இல்லையா, அப்ப விட்டுடுங்க ரெம்ப யோசிச்சு மூளைக்கு ஏதாவது ஆயிடும் பாருங்க. :):rolleyes::D

அதாலதான் யார் சொல்லுறதயும் நம்பாமல் உங்கள சொந்தமா யோசிச்சு பார்க்க சொன்னனான், யோசிச்சு பார்க்கவே இவ்வளவு யோசிச்சிக்கிறது ஏன், முதலில யோசிச்சு பார்க்க எது தேவை என்று யோசிங்க, யோசிச்சும் வர இல்லையா, அப்ப விட்டுடுங்க ரெம்ப யோசிச்சு மூளைக்கு ஏதாவது ஆயிடும் பாருங்க. :):rolleyes::D

ஜயா சித்து தெளிவா குழப்பீட்டீங்க......................கரக்ட

ஆமா.. கீழே இருப்பவை உண்மைதானுங்களா?

  • தொடங்கியவர்

ந்டத்துங்க நடத்துங்க

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிகாகோ தமிழ் அமைப்புக்கு உதவும் 'சிவாஜி'

சிகாகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளக்கு நிதி சேர்ப்பதற்காக சிவாஜி திரைப்படம் இன்று விசேஷமாக திரையிடப்படுகிறது.

கோலிவுட், யுஎஸ்ஏ மற்றும் பரத் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த நல நிதிக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜூலை 1ம் தேதி சிகாகோவில் சிவாஜி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதில் வசூலாகும் நிதி முழுவதும் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. இந்த அமைப்பு தமிழகத்தில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்கள், படிப்புதவி, பள்ளிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டுள்ளது.

தங்களது அமைப்புக்கு உதவுவதற்காக சிவாஜியின் உதவியை தமிழ்நாடு அறக்கட்டளை நாடியது. இதையடுத்து சிவாஜி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லதுக்காகவும் சிவாஜி பயன்படுகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைமுகமாக உதவிக் கரம் நீட்டுகிறார் என்பதற்காக சந்தோஷப்படலாம்.

இதற்கிடையே சிகாகோவாவில் தொடர்ந்து சிவாஜி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்களாக ஓடிய முதல் தமிழ்ப் படம் என்பது சிகாகோவில் சிவாஜி படைத்துள்ள புதிய சாதனையாகும்.

சிவாஜி திரைப்படம் சம்பந்தமான தொலைபேசி ரிங்டோன் கோலர்டோண் இமேஜ் அனைத்திற்கும் என்னை நாடுங்கள்

( உழைப்பதற்க நல்லதொரு வழி) தனிமெயிலில் தொடர்புகொள்ளவும். கிரடிட் கார்ட்டில்தான் பேமென்ற் செய்யNவுண்டும்

பரணி அண்ணா கிரடிட் கார்ட் நம்பரை பயப்பிடாம தரலாமோ!!!!!!!!

பயம் தெளியத்தானே கிரடிட் கார்ட் பேமென்ற் செய்யச்சொல்றதே !!!!!

பரணி அண்ணா கிரடிட் கார்ட் நம்பரை பயப்பிடாம தரலாமோ!!!!!!!!

ஜமுனா உங்கள் கிரடிட்காட் விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் பரணி உங்களுக்கு தொலைபேசி ரிங்டோன் கோலர்டோண் இமேஜ் அனைத்தையும் தனிமடலில் அனுப்பி வைப்பார். :unsure::(:(

பயம் தெளியத்தானே கிரடிட் கார்ட் பேமென்ற் செய்யச்சொல்றதே !!!!!

உங்களுக்கு பயம் தெளியும் மட்டும் பேமன்றை நான் வாங்குகின்றேன். தொலைபேசி ரிங்டோன் கோலர்டோண் இமேஜ் அனைத்தையும் நீங்கள் கொடுங்கள். :(:(

Edited by Vasampu

  • தொடங்கியவர்

டிக்கெட் கிடைக்கவில்லை `சிவாஜி' படம் பார்க்க முடியாததால் கல்லூரி மாணவிகள் கண்ணீர்

ஈரோடு, ஜுலை. 2-

ரஜினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் `சிவாஜி' படம் ஈரோட்டில் 5 தியேட்டர்களில் ஓடுகிறது.

வெள்ளக்கோவில் அருகே உள்ள முத்தூரைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவிகள் சிவாஜி படம் பார்க்க ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தனர்.

ரஜினியின் தீவிர ரசிகை களான 5 மாணவிகளும் படம் பார்க்கும் உற்சாகத்தில் தங்களுக்குள் படத்தை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டே வந்தனர்.

ஈரோடு சண்டிகா தியேட் டருக்கு மேட்னி (2.15 மணி) காட்சி பார்க்க வந்த அவர்கள் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன அவர்களுக்கு டிக்கெட் கிடைக்குமா...ப என்ற சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகமும் ஊர்ஜிதமாகி விட்டது. அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

டிக்கெட்டும் கையுமாக ரசிகர்கள் தியேட்டருக்குள் முண்டியடித்துக் கொண்டு போகும் போது தங்களுக்கு டிக்கெட் கிடைக்க வில்லையே... என்ற வேதனையில் எதையோ பறிகொடுத்தது போல் காணப் பட்டார்கள்.

தியேட்டர் ஊழியர் ஒருவரிடம் போய் நாங்கள் முத்தூரிலிருந்து வர்ரோம்ங்க... டிக்கெட் கிடைக்கலீங்க... எப்படியாவது 5 டிக்கெட் வாங்கி கொடுங்க... என்று கேட்டனர்.

அந்த ஊழியர் "டிக்கெட் எல்லாம் முடிந்து விட்டதே இரவு முதல் காட்சி பார்த்து விட்டு போங்க'' என்று கூறினார்.

மாணவிகளோ, "எப்படிங்க நாங்கள் ராத்திரி நேரத்தில் ஊருக்கு போக முடியும் டிக்கெட் வாங்கி கொடுங்க என்று கெஞ்சினர்.

அப்போது மாணவிகள் வேதனையில் கண்ணீர் விட்டும் அழுது விட்டனர்.

பெண்கள் அதுவும் கல்லூரி மாணவிகள் கண் கலங்கியதை கண்டு இரக்கப்பட்ட தியேட்டர் ஊழியர் தியேட்டருக்குள் சென்று மானேஜரிடம் பேசி 5 டிக்கெட்டுகளை வாங்கி மாணவிகளிடம் கொடுத் தார்.

டிக்கெட்டுகள் கிடைத்த மகிழ்ச்சியில் நன்றி கூறி விட்டு அந்த மாணவிகள் துள்ளிக் குதித்தபடி தியேட்டருக்குள் புகுந்தனர்.

ஜமுனா உங்கள் கிரடிட்காட் விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் பரணி உங்களுக்கு தொலைபேசி ரிங்டோன் கோலர்டோண் இமேஜ் அனைத்தையும் தனிமடலில் அனுப்பி வைப்பார். :unsure::(:(

உது என்ன புதுகதையா இருக்கு வசபண்ணா உதை பற்றி பரணி அண்ணா சொல்லவே இல்லை..............நம்பி அனுப்பி வைக்கலாம் தானே..............பிறகு சிவாஜி படத்தில வந்த மாதிரி எனக்கு 1 ரூபாவை தந்திட்டு போக மாட்டீங்க தானே.............

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.