Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

சர்ச்சைக்குரிய 'நீட்' கடந்து வந்த பாதை

நீட் கடந்து வந்த பாதைபடத்தின் காப்புரிமைMANPREET ROMANA/AFP/GETTY IMAGES

தமிழக்கத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு கடந்து வந்த பாதையின் தொகுப்பு இது.

2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்கள் நீட் தேர்விற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. கல்வி இணக்கப் பட்டியலில் ( Concurrent List) வருவதால் தங்கள் அதிகார வரம்பில் தலையிடுவது போன்று ஆகும் என சில மாநிலங்கள் வாதிட்டன.

ஜூலை, 2013: ஆம் ஆண்டு நீட் தேர்வு அரசியலமைபிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது.

ஏப்ரல், 2016: ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

மே, 2016: தான் ஆட்சிக்கு வந்தால் நீட்டிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜெயலலிதா, நீட்டிற்கு எதிராக பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

மே 7, 2017: ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது இதில் மாணவ மாணவியர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பின.

மே 26, 2017: நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்விகள் வேறாக இருந்தன என தொடரப்பட்ட வழக்கில் நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைகால உத்தரவு பிறப்பித்தது.

ஜூன் 12, 2017: நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

 

ஜூன் 23, 2017: ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

ஜூலை 14, 2017: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 25, 2017: நீட் முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ஆகஸ்டு 13, 2017: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால், அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

ஆகஸ்டு 14, 2017: நீட் தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஆகஸ்டு 22, 2017: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; மேலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர்களுக்கான சேர்க்கையை வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆக்ஸ்டு 23, 2017: மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 1, 2017: நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

http://www.bbc.com/tamil/india-41153595

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா தற்கொலை: தனிநாடு கேட்போம் வேறுவழியே இல்லை - இயக்குனர் மிஷ்கின் ஆவேசம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

' நீட்' அரச படுகொலை

 

ஜெய­ல­லிதா இருந்­தி­ருந்தால் என் மகள் உயி­ரி­ழந்­தி­ருக்க மாட்டார். அர­சியல் போட்­டியில் நீட் நுழை­வுத்­தேர்வை கொண்டு வந்து என் மகள் உயிரை பறித்து விட்­டார்­களே” என்று தனது மகளை பறி­ கொ­டுத்த ஒரு தந்­தையின் கதறல் தமி­ழக அர­சி­யலின் இன்­றைய நிலையின் உண் மைத் தன்­மையை உல­கிற்கு உணர்த்­தி­யுள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் மரணம் அர­சி­யலில் வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது என்று தொடர்ந்து கூறு­வது உண்­மைதான். ஆனால் அவர் இல்­லாத தமி­ழகம் இது­ வரை தமி­ழ­கத்தில் கால் பதிக்க முடி­யாமல் இருந்த அந்­நிய சக்­திகள் உள்­வ­ரு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த சக்­திகள் அ.தி.மு.க.வை மட்டும் அல்ல தமி­ழ­கத்­தையும் அரண் இல்­லாத கோட்­டை­யாக மாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றன.

இந்­திய கூட்­டாட்­சியில் கல்வி என்­பது மாநில பட்­டி­யலில் இருந்­தது. மாநில ரீதி­யான தேர்­வு­களில் சித்தி பெற்றே மாண­வர்கள் மருத்­து­வர்­க­ளாக ஆகினர். ஆனால் இன்று கல்வி மத்­தி­ய அ­ரசின் கைக­ளுக்கு சென்­று­விட்­டது. நீட் என்­பது இந்­தியா முழு­வ­தற்கும் பொது­வான ஒரு தேர்வு. இந்த தேர்வில் ஒருவர் சித்தி பெற்ற பின்­னரே மருத்­து­வ­ராக வேண்டும் எனும் போது அது பழங்­குடி மற்றும் பின் தங்­கிய மாண­வர்­க­ளுக்­கான கல்வி முன்­னேற்­றத்தை சிதைப்­ப­தா­கவே அமையும். தாழ்த்­தப்­பட்ட, பழங்­குடி சமூ­கங்­களை சேர்ந்த ஒரு மாணவன் கஷ்­டப்­பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்­துவப் படிப்பு வாய்ப்­புக்­காகக் காத்­தி­ருக்­கும்­போது, அவன் மீது நீட் தேர்வைத் திணித்தால் அவனால், நீட் தேர்­வுக்­கான சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடி­யாது. ஆனால், நக­ரத்தில் பணம் கொடுத்து சிறப்பு வகுப்­பு­களில் சேர முடிந்த ஒரு மாண­வ­னையும், பணம் கொடுத்து சேர முடி­யாத பழங்­குடி மாண­வ­னையும் 'ஒன்­றாக ஒரே தேர்வை எழுத சொல்லும் போது வச­தி­யில்­லாத மாணவன் வாய்ப்பை இழப்பான். பல்­வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகு­பா­டுகள் உள்ள ஒரு தேசத்­துக்கு இந்த ஒற்றைத் தேர்வு சரி­யா­ன­தாக இருக்­காது என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­ததே. இத­னால்தான் நீட்டை தமி­ழகம் எதிர்க்­கி­றது. ஜெய­ல­லி­தாவும் எதிர்த்தார்.

2013 ஆம் ஆண்டு முதல் முறை­யாக நீட் தேர்வு மத்­திய அரசால் அறிமுகப்படுத்தப்­பட்­டது. தமிழ்­நாடு, கேரளா உட்­பட பல மாநி­லங்கள் இத்தேர்­விற்கு தங்கள் எதிர்ப்பை தெரி­வித்­தன. கல்வி இணக்கப் பட்­டி­யலில் ( Concurrent List) வரு­வதால் தங்கள் அதி­கார வரம்பில் தலை­யி­டு­வது போன்று ஆகும் என சில மாநி­லங்கள் வாதிட்­டன.

 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீட் தேர்வு அர­சி­ய­ல­மை­பிற்கு எதி­ரா­னது என உச்ச நீதி­மன்றம் கூறி­யது.

 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீட் தேர்­விற்கு உச்ச நீதி­மன்றம் ஒப்­புதல் வழங்­கி­யது.

இந்­நி­லையில் 2016 ஆம் ஆண்டு தான் ஆட்­சிக்கு வந்தால் நீட்­டிற்கு எதி­ராக சட் டம் கொண்டு வரப்­படும் என தனது தேர்தல் வாக்­கு­று­தியில் தெரி­வித்­தி­ருந்த ஜெய­ல­லிதா, தமி­ழ­கத்தில் நீட் தேர்வை அனு­ம­திக்க மாட்டேன். தேவை ஏற்­பட் டால் அதற்­கென தனி­சட்டம் கொண்­டு­வர தயங்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிர­சா­ரத்தின் போது தெரி­வித்தார்.

ஜெய­ல­லிதா முதல்­வ­ராக இருந்த போது நீட் தேர்­விற்கு எதிர்ப்பு தெரி­வித்து பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தினார். இது குறித்து உச்­ச­நீ­தி­மன்­றத்­திலும் வழக்கு தொடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் ஜெய­ல­லிதா மர­ணத்­திற்கு முன்னர் மருத்­து­வ­ம­னையில் அவர் சிகிச்சை பெற்­ற­தாக கூறப்­பட்ட காலத்தில், நவம்பர் மாதம் 23ஆம் திகதி இத்­திட்டம் தமி­ழகத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் என்று அர ­சாணை வெளி­யி­டப்­பட்­டது. பின் ஜெய­ல ­லி­தாவின் மர­ணத்­தி ற்கு பின்னர் 2017ஆம் ஆண்டு மே 7ஆம் திகதி நீட் தேர்வு நடை­பெற்­றது. இதில் மாணவ மாண­வியர் கடும் சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர் என சர்ச்­சை கள் கிளம்­பின.

அந்தத் தேர்வு எழுதச் சென்ற மாண­வர்­களில், குறிப்­பாக மாண­விகள் நடத்­தப்­பட்ட விதம் உச்­ச­க்கட்ட கொடுமை. சோதனை என்ற பெயரில் அவர்­களின் ஆடை­களைக் கிழித்து, தலை­மு­டியை கலைத்து, அணி­க­லன்­களை கழற்ற வைத்து, கத்­தி­ரிக்­கோலால் வெட்டி, பெற் ­றோர்கள் முன்­னி­லை­யி­லேயே அலங்­கோ­லப்­ப­டுத்­தி­ய­போதே நீட் தேர்வு எத்­த­கைய கொடூ­ர­மா­னது என்­பது புரிந்­தது. மோடியின் குஜராத் மாண­வர்­க­ளுக்கு எளி­மை­யான கேள்­வித்­தாளும், சமூ­க­நீதி தவழும் தமி­ழக மாண­வர்­க­ளுக்கு கடி­ன­மான கேள்­வித்­தா­ளு­மாக ஒரே நுழைவுத் தேர்வில் இரு­வி­த­மான அணு­கு­ முறை என்ற மோச­டியும் நீட் தேர் வில் நிகழ்த்­தப்­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பரீட்சை எழுத வேண்டு மென் பதால் தாய்மொழியில் கல்வி கற்ற மாண வர்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

மாநில உரி­மை­களில் கூட்­டாட்சி தத்­து வம் வேண்டும் என்று எதிர்த்த ஜெய­ல­லிதா இன்று இருந்­தி­ருந்தால் நீட் வந்­தி­ருக்­காது. தன் மக­ளுக்கு மருத்­துவக் கல்­லூ­ரி யில் இடம் கிடைத்­தி­ருக்கும் என்று அரி­ய­லூரில் உள்ள கூலித்­தொ­ழி­லா­ளி­யான அனி­தாவின் தந்­தைக்கு தெரிந்­தி­ருக்கும் போது ஜெய­ல­லிதா எதிர்த்த அனைத்து சட்­டங்­க­ளையும் ஏற்­றுக்­கொண்டு மத்­திய அரசின் தலை­யாட்டி பொம்­மைகள் போன்று மாறி­யுள்ள எடப்­பாடி பழனிசாமி தலை­மை­யி­லான அ.தி.மு.க. அர­சுக்கு தெரி­யாமல் போய்­விட்­டது போல. அத­னால்தான் அதனை திற­னுடன் எதிர்­க்காமல் ஏற்­றுக்­கொண்­டு­விட்­டனர். ஸ்திர­மற்ற ஒரு அரசு நீட் தேர்வை கொண்டு வந்து ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் பாதிக்­கப்­பட்டு எதிர்­க்காலம் குறித்த கேள்­விக்­கு­றி­யுடன் இருக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நீட் தேர்­வுக்கு விலக்கு அளிக்­கப்­ப­டாத நிலையில் ஜெய­ல­லிதா இருந்­தி­ருந்தால் இன்னும் கொஞ்சம் தூண்­டு­த­லாக உறு­தி­யாக சண்­டை­யிட்­டி­ருப்பார். அதற்­கான தார்­மீக பலமும் இந்த அர­சுக்கு இருந்­தி­ருக்கும். கல்வி மீண்டும் மாநில பட்­டி­ய­ லுக்கு வர வேண்டும் என்­பதை முத­ல­மைச்­சர்கள் மாநாட்டில் வலி­யு­றுத்தி பேசி­யவர் ஜெய­ல­லிதா. கூட்­டாட்சி தொடர்­பாக மாநில உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வது சரி­யல்ல என்­பதை பதிவு செய்­துள்ளார். கூட்­டாட்­சிக்கு எதி­ரான போக்கு உள்­ளது என்­ப­தையும் பதிவு செய்­துள்ளார். இப்­போது உள்ள பிர­தமர் மோடி ­த­லை­மை­யி­லான அரசு ஆட்­சிக்கு வலி­மை­யாக வந்த பின்­னரும் அவர் துணி­வாக இதை பதிவு செய்தார்.

ஜெய­ல­லிதா உயி­ருடன் இருந்­தி­ருந்தால் அ.தி.மு.க. பிள­வு­பட்­டி­ருக்­காது. அமை ச்­சர்­களும் ஒவ்­வொ­ரு­ கருத்து க்களை சொல்­லிக் ­கொண்­டி­ ருக்க மாட்­டார்கள். இப்­போ­துள்ள கோஷ்டி அர­சியல் வந்­தி­ருக்­காது. இந்­தி­யாவின் மிக பெரிய மூன்­றா­வது கட்­சி­யான அ.தி.மு.க.வின் கருத்து ஒத்­தக்­க­ருத்­தாக வலி­மை­யாக போயி­ருக்கும். ஜெய­ல­லி­தாவை பொறுத்­த­வரை தன் மேல் உள்ள வழக்கு குறித்து அவர் கவ­லைப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. கடைசி வரை மாநில உரி­மைகள் சார்ந்த விடயத்தில் என்­றுமே ஜெய­ல­லிதா மத்திய அரசிடம் சம­ரசம் செய்­து­கொண்­ட­தில்லை. அவர் மீது ஆயிரம் விமர்­ச­னங்கள் இருந்­தாலும் மாநில உரிமை சார்ந்த விட­யத்தை அவர் விட்­டு­கொ­டுத்­த­தில்லை என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

நீட் வந்­தி­ருக்­குமோ வராமல் போயி­ருக்­குமோ தெரி­யாது. ஆனால் கடை­சி­வரை ஜெய­ல­லிதா தள­ராமல் உறு­தி­யுடன் போராடி இருப்பார் என்­பதை மறுக்க முடி­யாது.

ஆனால் எடப்பாடி தலைமையிலான இந்த அரசு பல­வீ­ன­ம­டைந்த அரசு. தின­க ரன் தரப்பு, எடப்­பாடி தரப்பு, ஓ.பி.எஸ். என்று பத­ விக்­காக போட்­டி ­போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. 5 ஆண்­டுகள் எப்­ப­டி­யா­வது ஆட்­சி­ய­ிலி­ருந்தால் போதும் என்று அவர்கள் தங்­களை தக்க வைத்­துக்­கொள்­வதில் போரா­டு­கி­றார்கள். முழு­மை­யாக தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கி­றார்கள். மத்­திய அரசு சொல்­வதை கேட்டு நடக்கும் நிலையில் மட்­டுமே உள்­ளனர். இத­னால்தான் தமி­ழ­கத்­துக்கு பாதிப்பு வரும் என்று தெரிந்தும் அனைத்து திட்­டங்­க­ளையும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். நீட்­டுக்கு விலக்கு கிடைக்கும் என்று டில்லி சென்று வந்த எடப்­பா­டியும் பன்­னீரும் பா.ஜ.க.வின் தற்­போ­தைய பாது­காப்பு அமைச்சர் நிர்­மலா சீ­தா­ராமன் உள்­ளிட்­டோரும் நம்­பிக்கை தெரி­வித்­தனர்

இந்­நி­லையில் தமி­ழ­கத்தில் மத்­திய அரசின் நீட் தேர்­வுக்கு எதி­ராக போராட்­டங்கள் நடந்­தன. ஆனால் அதை­யெல்லாம் தாண்டி நீட் தேர்வை கட்­டா­ய­மாக தமி­ழ­கத்தில் புகுத்­தி­யுள்­ளனர்.

 நீட் தேர்வால் தமி­ழக மாண­வர்கள், குறிப்­பாக கிரா­மப்­புற மாண­வ-­, மா­ண­விகள் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்ற கூற்றை மெய்ப்­பிக்கும் வித­மாக மாணவி அனி­தாவின் மரணம் அமைந்­து­விட்­டது.

அரி­யலூர் மாவட்­டத்தில் செந்­துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்­கி­ரா­மத்தில் பிறந்த அனிதா, மருத்­துவர் ஆவ­ தையே இலட்­சி­ய­மாக கொண்டு கல்வி பயின்­றுள்ளார். ஆனால் அவ­ரு­டைய இல ட்­சியம் ஈடே­று­வதில், நீட் தேர்­வினால் ஏற்­பட்ட தடங்கல் அவ­ரு­டைய வாழ்க்கை முடி­வுக்கு வர கார­ண­மா­கி­விட்­டது. சிறு­வ­ய­தி­லேயே தனது தாயை இழந்த அனிதா மருத்­துவர் ஒருவர் அருகில் இருந்­தி­ருந்தால் தன் தாயை காப்­பாற்­றி­யி­ருக்­கலாம் என்ற உண்­மையை அறிந்து என் தாய் போல யாரும் மர­ணிக்கக் கூடாது அதற்­காக தான் மருத்­து­வ­ராக வேண்டும் என இலட்­சி­யத்­துடன் தாயின் அர­வ­ணைப்பு இல்­லாமல் மூட்­டைத்­தூக்கும் கூலித்­தொ­ழி­லா­ளி­யான தந்தை வெளி­யூரில் உழைத்து அனுப்பும் பணத்தில், ஓலைக்­கு­டி­சையில் படிப்­ப­தற்­கான வச­தி­களோ, கழிப்­பிடம் போன்ற அத்­தி­யா­வ­சிய தேவை­களோ இல்­லாத நிலை­யிலும் இரண்­டாண்­டுகள் கடு­மை­யாகப் படித்து 1200க்கு 1176 மதிப்­பெண்கள் பெற்­றுள்ளார். மருத்­துவப் படிப்­புக்­கான வெட்டுப்புள்ளியும் 196.5 வீதம் என்ற அளவில் பெற்­றி­ருந்தார். ஆனால், மத்­திய அரசின் நீட்­தேர்வில் அவர் குறிப்­பிட்­ட­ளவு புள்­ளி­களை பெற­வில்லை என்று அவ­ரது மருத்­து­வ­க­னவு பறி­போ­யி­ருக்­கி­றது. ஆயினும் நீட் தேர்­வுக்கு எதி­ராக விலக்கு கேட்டு உச்­ச­நீ­தி­மன்றம் வரை சென்று அனிதா போரா­டினார். ஆனால், அவரால் மத்­திய அரசை எதிர்த்து போராட முடி­ய­வில்லை.

நீட் தேர்வு இல்­லை­யென்றால் சென்­னை ­யி­லேயே அரசு மருத்­துவக் கல்­லூ­ரியில் படிக்கும் வாய்ப்பு அவ­ருக்கு கிடைத்­தி­ருக்கும். பயிற்சி கல்­லூ­ரி­களில் தனி­யாக பணம் செல­வ­ழித்து படிக்­கக்­கூ­டிய வச­தி­யான மாண­வர்­க­ளுக்­கான நீட் தேர்­வினால் ஏழை, -­எ­ளி­ய -­ஒ­டுக்­கப்­பட்ட சமு­தா­யத் தைச் சேர்ந்த கிரா­மத்து மாண­வி­யான அனி­தாவின் மருத்­துவக் கனவு தகர்ந்து, அவ­ரது உயிரைப் பறித்­துள்­ளது.

இது தொடர்பில் அவ­ரது உற­வி­னரின் கதறல் இங்கே...

''அனி­தா­வோட அம்மா உயி­ருக்குப் போரா­டிக்­கிட்டு இருந்த நேரத்­துல பக்­கத்­துல டாக்டர் இருந்­தி­ருந்தா காப்­பாத்தி இருக்­கலாம். ஆஸ்­பத்­தி­ரிக்குப் பல மைல் தூரம் போக வேண்­டி­யி­ருந்­துச்சு. அப்­ப­டி யும் காப்­பாத்த முடி­யாம போச்சு. அந்தச் சோகத்தைக் கேட்டுக் கேட்டு அவ மன­சுல ஆழமா பதி ஞ்சு போச்சு. ‘எங்க அம்மா மாதிரி இந்த ஊர்ல இனிமே யாரும் சாகக்­கூ­டாது. அதுக்­கா­கவே நான் டாக்டர் ஆவேன்னு சொல்­லுவா. பத்தாம் வகுப்பில் 476 மார்க் எடுத்தா. ‘இந்த ஊரு க்கு முதல் டாக்­டரா அவ வரு­வாள்னு ஊரே பேசும். கேட்கக் கேட்க எனக்குச் சந்­தோ­ஷமா இருக்கும்.

ப்ளஸ் 2-வுல 1176 மார்க் எடுத்தா. அவ எடுத்த மார்க்­குக்கு நல்ல காலேஜ்ல நேரா போய் டாக்­ட­ருக்குச் சேர்ந்­து­ட­லாம்னு அவ ங்க ஸ்கூல்ல பெரு­மையா சொன்­னாங்க. ‘நான் டாக்­ட­ரா­கிட்டேனு ஊர்ல எல்­லா­ருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுத்தாள். எங்க மக்கள் அவளைக் கொண்­டா­டி­னாங்க.

ஆனால், எங்­கி­ருந்து வந்­துச்சோ இந்த நீட் இதை அறி­விச்ச அன்­னைக்கே அவ பாதி செத்­துப்­போ­யிட்டா. ‘என் கனவு எல்லாம் போச்­சுன்னு வீட்டில் முடங்கி உக்­காந்­துட்டா. அவ­ளோட அண்ணன் மணி­ரத்­தினம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவ­சங்கர் தம்­பி­யிடம் என் புள்­ளைய கூட்­டிட்டுப் போய் மனு கொடுத்­துச்சி. அதை வச்சு அந்த தம்­பியும் பல முயற்­சி­களை எடுத்­துச்சி. டில்லி வரைக்கும் போய் நீதிப் போராட்டம் நடத்­துச்சி. ஏதா­வது முடிவு வரும் என்று தினம் தினம் டி.வி. பொட்­டி­யையே பார்த்­துக்­கிட்டே இருந்­துச்சி. நீதி­மன்­றமும் கையை விரிச்­சி­ருச்சி. அன்­னை­யில இருந்தே அவ சோகமா இருந்தா. ஆனா, இப்­படி ஒரு முடிவு எடுப்­பாள்னு எங்­க­ளுக்குத் தெரி­யாதே என்று, பேச வார்த்­தைகள் இல்­லாமல் தவிக்­கின்­றனர்

இந்­நி­லையில், இந்­தி­யாவின் முக்­கி­ய­மான கல்வி செயற்­பாட்­டா­ள­ரான பேரா­சி­ரியர் அனில் சட­கோபால் இந்த நீட் தொடர்­பில்­ ஏற்­க­னவே தெரி­வித்த கருத்து நம்மை மேலும் யோசிக்க வைக்­கி­றது. அவ­ரது கருத்து

''உலக வர்த்­தக அமைப்­புக்குச் சில வாக்­கு­று­தி­களை இந்­திய அரசு அளித்­துள்­ளது. அதில், ஒன்று இந்­தியச் சுகா­தா­ரத்­து­றையை முழு­வதும் தனி­யார் ­ம­ய­மாக்­கு­வது. அதில் தங்­குத்­தடை இல்­லாமல், அந்­நிய நிதியை அனு­ம­திப்­பது. இது நிறை­வேற வேண்­டு­மானால், இந்­தியப் பொது சுகா­தாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்­கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்­க­மாகச் சொன்னால், இப்­போ­துள்ள மருத்­துவக் கல்வி முறையில் மாண­வர்கள் சில காலம் கிரா­மத்தில் பணி­யாற்ற வேண்டும். அதற்­கான ஒதுக்­கீடு இருக்­கி­றது. ஆனால், நீட் தேர்வில் அதற்­கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகா­தார நிலை­யங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்­து­வ­ம­னைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்­டை­யாகப் புரிந்­து­கொள்­ளாமல் இந்தப் பின்­ன­ணி­யில்தான் புரிந்­து­கொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்­வ­தேச அர­சியல் அல்­லாமல் சமூ­க­நீதி கண்­ணோட்­டத்தில் பார்த்­தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்­கப்­பட்ட பின்­தங்­கிய சமூக மக்­களை, மருத்­துவத் துறையில் உள்ளே வர­வி­டாமல் பார்த்­துக்­கொள்ளும் அர­சியல் தெரியும்.

''இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் ஒவ்­வொரு பத்­தியும் சமூ­க­நீ­தி­யையும், சமத்­து­வத்­தையும் பரிந்­து­ரைக்­கி­றது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெ­தி­ராக இருக்­கி­றது. இந்­தியா என்­பது ஒற் றைத் தேசம் கிடை­யாது. அது, பல்­வேறு தேசிய இனங்கள் வாழும் மாநி­லங்­களின் தொகுப்பு. பல்­வேறு தேசிய இனங்­களின் மாண­வர்­களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்­பது சுத்த அயோக்­கி­யத்­தனம். எப்­படி எதுவும் இது­வரை சேராமல் இருக் கும் வட கிழக்கு மாண­வனும், எல்லா செள­கரி­யங்­க­ளையும் பெற்ற டில்லி மாண­வனும் போட்டி போடுவான். இரு­வ­ருக் கும் ஒரே தேர்வு என்­பது மக்­களை மடை­யர்கள் ஆக்கும் வேலை இல்­லையா? என்­கிறார்.

எது எப்­ப­டியோ, மாணவி அனி­தாவின் மர­ணத்­திற்கு பின்னர் நீட் தேர்­வுக்கு எதிர் ப்பு தமி­ழகம் முழு­வதும் வலு­வாக எழுந்­துள்­ளது.

தொடர் போராட்­டங்கள் நடை­பெற்று வரு­கி­ன்றன. நீட் தேர்வு கூடாது எனவும் மாணவி அனி­தாவின் மர­ணத்­திற்கு நீதி கேட்டும் போராட்­டங்கள் தமி­ழகம் முழு­வதும் நடை­பெற்று வரு­கி­றன. இதனால் முன்னர் இருந்­ததை விட தற்­போது நீட் தேர்வு எதிர்ப்பு குறித்­தான விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்­ளது. இந்­தியா தாண்டி பல நாடு­களில் தமி­ழர்கள் நீட்­டுக்கு எதி­ரா­கவும் அனிதா மர­ணத்­துக்கு நீதி கோரியும் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த போராட்­டங்கள் ஜல்­லிக்­கட்டு போராட்டம் போல மாறுமா? மத்­திய அரசை பணி­ய­வைக்­குமா? நீட்­டுக்கு விலக்கு கிடைக்­குமா என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்டும். "உலகில் உள்ள மிக­ப்பெ­ரிய ஜன­நா­யக அரசு இந்­தியா, அது தனது கூட்­டாட்சி தத்­து­வத்தை மதிப்­ப­துதான் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு.

இந்­திய பெரும் தேசத்தில் தமி­ழகம் ஒரு தனித்­து­வ­மான மாநிலம். சேர, சோழ, பாண்­டிய பெரும் சக்க­ர­வர்த்­தி­களின் ஆட்­சியில் தமிழ் எனும் வற்­றாத நதி பெருக்கெடுத்த தேசம். தமிழனின் பாரம்பரியம், பண்பாடுகள், கலாசாரம் என்ற அனைத்துமே தனித்துவமானது. அதனால்தான் செம்மொழியாக எம் மொழி கல் தோன்றா மண்தோன்றா கால த்துக்கு முன் தோன்றி இன்றும் வாழ்கிறது. இத்தனை பெருமை படைத்த தமிழை தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழிக்கும் வன்முறைகள் காலங்காலமாக பல தேசங் களில் நடைபெற்று வருகின்றன. அதனால் தான் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை ஆட்சிபுரிந்து இமயத்தில் கொடி நாட்டிய போதும் தனக்கென ஒரு தனிநாடு இல்லாமல் தமிழர்கள் இன்றும் அந்நியர்கள் போல பல தேசங்களில் சிதறி வாழ்கிறோம். தமிழகம் மட்டுமே இன்று தமிழருக்கான தலைநகரம் போல உள்ளது. அனைவருக்கும் கல்வி தந்த காமராஜரும் சமத்துவம் சம நீதிபேசிய பெரியாரும் வாழ்ந்த தமிழகத்தில் கனவுகாணுங்கள். கனவுகளை விதையுங்கள் என்ற கலாமின் வழியில் தகுதிகளோடு கனா கண்ட பெண்ணின் வாழ்வு அரசுகளின் அசமந்த போக்கால் தூக்கில் தொங்கவிடப்பட் டுள்ளது. தமிழருக்கு பெரும் தலை குனிவே. இதனால்தான் அரசியல் தாண்டி அனிதா மரணமும் நீட் எதிர்ப்புக்கான போராட்டமும் எல்லா பக்கமும் இன்று பரவியுள்ளது.

இனியொரு அனிதா உரு வாகாமல் இருக்கவேண்டுமெனில் தமிழக அரசு ஸ்திரமானதாக எதற்கும் யாருக்கும் யாரிடமும் தலைகுனியாமல் கம்பீரமாக செயற்படும் அரசாக மாற வேண்டும். தமிழ் மாநில கொள்கைகளை எங்கும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத ஒரு தலைமையின் அவசியம் இன்று உணரப் பட்டுள்ளது. அது எடப்பாடி மற்றும் பன்னீர் தலை மையிலான இன் றைய தமிழக அரசுக்கு உண்டா என்பது கேள்விக் குறியே..

தொகுப்பு: குமார் சுகுணா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-09#page-6

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.