Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளிடமிருந்து மகிந்த நாட்டைக் காப்பாற்றியதாலேயே இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிகிறது – சம்பந்தன்!

Featured Replies

சம்­பந்தன் – மஹிந்த சந்­திப்பு

 

(நமது நிருபர்)

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் தனிப்­பட்ட சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது.

விஜே­ரா­மவில் உள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நேற்று முன்­தினம் பிற்­பகல் 3.30மணி­ய­ளவில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இச்­சந்­திப்­பின்­போது அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒன்­றாக நடத்­து­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து மஹிந்த ராஜ­ப­க் ஷ கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு தொடர்­பிலும் அதற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வதில் காணப்­படும் சிக்கல் நிலை­மைகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

இதே­வேளை இன்று வியா­ழக்­கி­ழ­மை­யு­டன புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வழி­ந­டத்தல் குழு­வி­டத்தில் அனைத்­துக்­கட்­சி­களும் தமது நிலைப்­பா­டுகள் தொடர்­பி­லான முன்­மொ­ழி­வு­களை சமர்­ப்பிப்­ப­தற்­கான இறுதி தினம் வழங்­கப்­பட்­டி­ருந்­தி­ருந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­ப­தி­க்கு ஆத­ர­வா­க­வுள்ள கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் கடந்த வழி­ந­டத்தல் குழு கூட்­டத்தில் முன்­மொ­ழி­வொன்றைச் செய்­ய­வி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்­தார்கள்.

குறிப்­பாக நாட்டின் தன்மை ஒற்­றை­யாட்சி அரசு என்­பது மும்­மொ­ழி­க­ளிலும் வேறு­ப­டுத்­தப்­ப­டாது அமைய வேண்டும் என்­பதை மையப்­ப­டுத்­தியே அம்­முன்­மொ­ழிவு அமை­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. காரணம் கூட்டு எதிர்க்­கட்­சியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஏற்­க­னவே இந்த விட­யத்­தினை சுட்­டிக்­காட்டி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளார்.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வரவை மேலும் தாம­தப்­ப­டுத்தும் வகையில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான அணி­யினர் செயற்­ப­டக்­கூ­டாது. அவ்­வ­றிக்கை தொடர்­பாக கூட்டு எதி­ர­ணி­யினர் கொண்­டி­ருக்கும் நிலைப்­பா­டுகள் அவற்றின் யாதார்த்தம் தொடர்பில் பரஸ்பரம் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் சுமார் இரண்டு மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-31#page-1

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி மகிந்தர் ஆட்சியில் 15 சுற்றுச் சந்திச்சவை.. இப்ப மீண்டும்.

இது நல்லாட்சி  காட்சி பாகம் 2 இன் ஆரம்பமாக இருக்கும்.

சம்பந்தன் சாக முதல் எல்லாச் சிங்கள ஆட்சியாளர்களான.. தமிழினப்படுகொலையாளர்களையும்.. புனிதப்படுத்திட்டு தான் சாவார். :rolleyes:tw_angry:

நவாலி.. செம்மணி.. நாகர்கோவில்.. இனப்படுகொலைகள் புகழ் சந்திரிக்கா புனிதப்படுத்தப்பாட்டாயிற்று.

செம்மணி.. முள்ளிவாய்க்கால்.. இனப்படுகொலைகள் புகழ் சரத் பொன்சேகா புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கூட்டுப் பங்குதாரி மைத்திரிபால சிறீசேன புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

1983 இனக்கலவரம் முதல்.. தமிழினப் படுகொலையின் முக்கிய பங்காளி ரணில் விக்கிரமசிங்க.. புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

எனி...

மகிந்தவும் சகோதரர்களும் தான் பாக்கி.

அவர்களையும் புனிதப்படுத்திட்டு..

புலிகளையும்.. பிரபாகரனையும்.. பயங்கரவாதி ஆக்கிட்டு.. 

தமிழ் மக்களை கோவணத்தை உருவி.. நடு ரோட்டில விட்டிட்டு..

சிங்கள அரசின் எதிர்க்கட்சி தலைவர் என்ற மாட்சிமையோடு.. சம்பந்தன் மடிந்து போக வேண்டியான்.

இது தான் அவர் தமிழ் மக்களுக்கு செய்த அரசியல். :rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்

கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு

 
 
கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு
 

கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத்­தான் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் எடுத்­துக்­கூ­றி­னேன் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கேள்வி எழுப்­பி­னார்.

‘‘எனது ஆட்­சிக் காலத்­தில் சம்­பந்­தன் இப்­படி வந்து மனம்­விட்­டுப் பேசி­யி­ருந்­தால் பல பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­தி­ருக் க­லாம்’’ என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கூறி­யமை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு கொழும்பு, விஜே­ராம மாவத்­தை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் பேசப்­பட்ட விட­யங்­கள் தொடர்­பாக இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது:இது நல்ல சந்­திப்பு. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கருத்­துக்­க­ளைப் பரி­மா­றி­னோம். மகிந்த ராஜ­பக்­ச­வின் அழைப்­பி­லேயே இது நிகழ்ந்­தது.

அண்­மைக் கால­மாக இதற்­கான ஏற்­பா­டு­கள் இருந்­தன. இப்­போ­து­தான் சந்­திப்பு சாத்­தி­ய­மா­யிற்று. பல விட­யங்­கள் குறித்­துப் பேசி­னோம். தற்­போ­தைய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் குறித்து நான் எடுத்­து­ரைத்­தேன்.

புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும் என அவ­ரி­டம் வலி­யு­றுத்­தி­னேன். இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் ஒன்­று­சேர்ந்து நாட்­டின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­து­வைக்க முன்­வந்­துள்­ளன, பிள­வு­ப­டாத ஒரு நாட்­டுக்­குள் ஒரு­மித்த தீர்வு காணப்­பட ஏது­நிலை உரு­வா­கி­யுள்­ளது, மக்­கள் ஒரு­வித எதிர்­பார்ப்­பு­டன் உள்­ள­னர் என்­பதை எடுத்­துச் சொன்­னேன்.

நீங்­க­ளும் உங்­க­ளது பத­விக்­கா­லத்­தில் பல முன்­மொ­ழி­வு­க­ளைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­றும் சுட்­டிக்­காட்­டி­னேன். இப்­போது உங்­க­ளி­ன­தும் உங்­கள் கட்சி சார்ந்த தலை­வர்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கி­றது என்­பதை வலி­யு­றுத்­திக் கூறி­னேன்.

எல்­லா­வற்­றை­யும் செவி­ம­டுத்­தார். கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­பதை நான் அவ­ருக்கு சொல்­லி­யி­ருக்­கி­றேன். இந்­தக் கரு­மங்­க­ளுக்கு ஒத்­து­ழைக்க வேண்­டி­யது அவ­ரின் கடமை என்­ப­தை­யும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன் — என்­றார் சம்­பந்­தன்.

http://newuthayan.com/story/24571.html

தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார்! சம்பந்தன் நம்பிக்கை

தமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சம்பந்தன் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்க தங்களினாலேயே தீர்வு ஒன்று வழங்க முடியும் என சம்பந்தன் தெரிவிதள்ளார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் தலையிட்டு உதவுமாறு தான் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/157037

sampanthan-e1354460177963-415x260-415x26

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதாலேயே இன்று சுதந்திரமாக திருகோணமலைக்குச்சென்று வர முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த ராஜபக்ஷவினாலேயே தீர்வினை வழங்கமுடியும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதாலேயே இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாகச் சென்று வரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவே என இரா.சம்பந்தன் மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சனையை மகிந்த ராஜபக்ஷவினாலேயே தீர்த்துவைக்கமுடியும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, புதிய அரசியலமைப்பில் தலையிட்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

http://thuliyam.com/?p=77591

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறம் தமிழ் மக்கள் ஆகிய நாங்கள்  இப்பதானே ஒட்டு மொத்த சுயரூபமும் தெரிய வருகிறது ஒட்டு மொத்த அரசியல் வாதிகளினதும் ஒரு பக்கம் அங்கால வியஜகலா மகேஸ்வரம் சுட்டு தள்ள சொல்கிறார் இவர்  ஒரு பக்கம்  சொல்லுங்கோ சொல்லுங்கோ இன்னும் எத்தினை நாளைக்கு நீங்களும் கூவபோறியள் என்று பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

உ ணர்ச்சி வசப்பட்டு பேசுறாருங்கோ......அதை நாம் ஏற்றுக்கொள்ளுவம்.....அய்யாவின் கதிரை பறி போகுதென்ற பயம் வந்திட்டுது...

  • தொடங்கியவர்

மஹிந்தவிடம் சம்பந்தன் விடுத்த கோரிக்கை! மஹிந்த எடுத்திருக்கும் தீர்மானம்

 

புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை, அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பேசிவிட்டு சம்பந்தனுக்கு பதில் வழங்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் புதிய அரசமைப்புக்கு மஹிந்த ஆதரவளிக்க வேண்டும் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் மஹிந்தவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசமைப்பு குறித்தும், அதற்கு எனது ஆதரவின் அவசியம் குறித்தும் சம்பந்தன் என்னிடம் விளக்கினார். நானும் அதிலுள்ள சில விடயங்கள் குறித்து பிரஸ்தாபித்தேன்.

புதிய அரசமைப்பு ஒன்றுக்கான அவசியமொன்று இப்போது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எனது ஆதரவாளர்களையும் கட்சி முக்கியஸ்தர்களையும் கைது செய்து எனக்கெதிராக கெடுபிடிகளை விதிக்கும் இந்த அரசு என்னிடம் ஆதரவை எப்படி எதிர்பார்க்கின்றது என்பது தெரியவில்லை.

எப்படியாயினும், இந்த விடயத்தில் என்னால் தனித்துத் தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.

பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் நிலைப்பாட்டை முதலில் நான் அறிய வேண்டும். பின்னரே சம்பந்தனின் கோரிக்கை குறித்து பதிலொன்றை வழங்க முடியும்.

எப்படியோ சம்பந்தன் எனது ஆட்சிக் காலத்தில் இப்படி வந்து பேச்சுகளை மனம் விட்டு நடத்தியிருக்கலாம். அப்போது பல பிரச்சினைகளைப் பேசித் தீர்த்திருக்கலாம். இதை நான் அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன் என்று மஹிந்த கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/157063?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போன்று துளியம்
பத்திரிகையின் பொய் இது.

குறைந்தது
அந்த சிங்கள ஊடகத்தின்
பெயரையாவது துல்லியம்
குறிப்பிட்டு இருக்க வேண்டும்

துளியம் சைக்கிளுக்கும்  விக்கியருக்கும்
வால் பிடிப்பதற்காக
செய்திகளை திரித்து
எழுதுவது ஒன்றும் புதிதில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
On 31.8.2017 at 10:47 AM, nedukkalapoovan said:

முந்தி மகிந்தர் ஆட்சியில் 15 சுற்றுச் சந்திச்சவை.. இப்ப மீண்டும்.

இது நல்லாட்சி  காட்சி பாகம் 2 இன் ஆரம்பமாக இருக்கும்.

சம்பந்தன் சாக முதல் எல்லாச் சிங்கள ஆட்சியாளர்களான.. தமிழினப்படுகொலையாளர்களையும்.. புனிதப்படுத்திட்டு தான் சாவார். :rolleyes:tw_angry:

நவாலி.. செம்மணி.. நாகர்கோவில்.. இனப்படுகொலைகள் புகழ் சந்திரிக்கா புனிதப்படுத்தப்பாட்டாயிற்று.

செம்மணி.. முள்ளிவாய்க்கால்.. இனப்படுகொலைகள் புகழ் சரத் பொன்சேகா புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கூட்டுப் பங்குதாரி மைத்திரிபால சிறீசேன புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

1983 இனக்கலவரம் முதல்.. தமிழினப் படுகொலையின் முக்கிய பங்காளி ரணில் விக்கிரமசிங்க.. புனிதப்படுத்தப்பட்டாயிற்று.

எனி...

மகிந்தவும் சகோதரர்களும் தான் பாக்கி.

அவர்களையும் புனிதப்படுத்திட்டு..

புலிகளையும்.. பிரபாகரனையும்.. பயங்கரவாதி ஆக்கிட்டு.. 

தமிழ் மக்களை கோவணத்தை உருவி.. நடு ரோட்டில விட்டிட்டு..

சிங்கள அரசின் எதிர்க்கட்சி தலைவர் என்ற மாட்சிமையோடு.. சம்பந்தன் மடிந்து போக வேண்டியான்.

இது தான் அவர் தமிழ் மக்களுக்கு செய்த அரசியல். :rolleyes:tw_angry:

அருமையான.. கருத்து, நெடுக்ஸ். :101_point_up:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, வைரவன் said:

வழக்கம் போன்று துளியம்
பத்திரிகையின் பொய் இது.

குறைந்தது
அந்த சிங்கள ஊடகத்தின்
பெயரையாவது துல்லியம்
குறிப்பிட்டு இருக்க வேண்டும்

துளியம் சைக்கிளுக்கும்  விக்கியருக்கும்
வால் பிடிப்பதற்காக
செய்திகளை திரித்து
எழுதுவது ஒன்றும் புதிதில்லை

 

அப்பிடியெண்டால் நீங்கள் சம்பந்தன் எண்டவர் நேர்மையானவர்? திறமையானவர்! வல்லவர்,எல்லாம் தெரிஞ்சவர் எண்டு சொல்ல வாறியள்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ராஜதந்திரம் எண்டிட்டு போங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.