Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறத் தமிழ் பெட்டை நாய்களே, முடிந்தால் போய் பறத்தமிழ் அமைச்சனிடம் சொல்லுங்கள் என கல்லெறிந்து விரட்டிய சிங்களவர்!

Featured Replies

21271326_10207418801787394_8787663295938

கள்ளத்தோணி பறத்தமிழ் பெட்டை நாய்களே, முடிந்தால் போய் பறத்தமிழ் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள் என 10 தமிழ் குடும்பங்களின் காணிகளை அபகரித்து அந்த இடத்தில் குடியேறிய பெரும்பான்மைச் சிங்களவர் ஒருவர் கல்லெறிந்து கலைத்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கொழும்பு புறநகர் ஜயவர்தனபுர கோட்டே பகுதி. ஒரு பின்தங்கிய தோட்டம். பத்து ஏழை தமிழ் குடும்பங்கள். பெரும்பாலும் பெண்கள். அங்கே அவர்களுக்கு தண்ணீர் பெற ஒரு கிணறும், அதற்கு முன் ஒரு சிறு முற்றமும் உள்ளது.

ஒரு பெரும்பான்மை இனத்து மனிதன், அடாத்தாக தோட்டத்துக்குள் நுழைகிறான். முதல்நாள், முற்றத்தை ஆக்கிரமித்து, கூடாரம் கட்டி குடியேறுகிறான். இரண்டாம் நாள், கிணற்றையும், கொன்கிரீட்டால் மூடி, அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க முயல்கிறான்.

அந்த அப்பாவி பத்து தமிழ் குடும்ப பெண்கள் கோட்டே மாநகரசபை, பொலிஸ் என்று இரண்டு வாரம் ஓடித்திருந்து களைத்துப்போய்விட்டர்கள். வேறுவழியில்லாமல், அவர்களில் ஒரு சிலர், அந்த ஆக்கிரமிப்பு பெரும்பான்மை இனத்தவனிடம் கேள்வி கேட்ட போது, தூஷணமும் பேசி, “கள்ளத்தோணி, பறத்தமிழ் பெட்டை நாய்கள், மண்டைகளை உடைப்பேன். முடிந்தால் போ, போய் அந்த கள்ளத்தோணி பறத்தமிழ் அமைச்சனிடம் சொல்” என்று கல்லெறிந்து விரட்டியுள்ளான்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,

நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் தினத்தன்று என்னை பார்க்க என் அமைச்சுக்கு அப்பெண்கள் பரிதாபமாக வந்து காத்து நின்றார்கள். விஷயத்தை புரிந்துக்கொண்டவுடன், கோட்டே ஜயவர்தனபுர மாநகரசபை ஆணையாளரையும், அப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியையும் என் அமைச்சு அலுவலகத்துக்கு உடன் வரச்சொல்லி பணித்தேன். அரைமணியில் ஓடி வந்து விட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னிலையில், எனது கறார் விசாரணையின் பின், இப்பிரச்சினையில், தங்கள் கவனயீனத்தை அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள். உடன் இந்த ஆக்கிரமிப்பாளனை அகற்றுகிறோம் என்று ஆணையாளரும், அதற்கு வேண்டிய பொலிஸ் பாதுகாப்பை தருகிறோம் என காவல்துறையும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=77609

 

  • கருத்துக்கள உறவுகள்

அதை பெற்றுக்கொடுத்த பின்பே இந்த செய்த்தி வந்திருக்க வேண்டும்  அமைச்சர் மனோ 

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் ஒரு பம்பந்துதான் சார்

  • கருத்துக்கள உறவுகள்

//பறத் தமிழ் பெட்டை நாய்களே.... //
இப்படியான ஒரு வார்த்தையை, மற்ற இனத்தவன் சொல்லும் போது...
ரோசமுள்ள  முழுத் தமிழ் இனத்துக்கும்  நெஞ்சு வலித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு எம் இனத்தின் சார்பில், பதில் கொடுக்க வேண்டிய.... 
தமிழ் எதிர்க் கட்சி தலைவரும்,  அவரது சகாக்களும்... யாருடைய   ***  ***** கொண்டு இருக்கிறார்கள்? tw_angry: 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே கிழவியலா இருக்குது... உங்க எங்கப்பா பெட்டையள். 

இவர் கொஞ்சம் கூட பிட்டப் போட்டிருக்கிறார் போல கிடக்குது.

கொழும்பில் சேரி பக்கம்.... கலப்பு கூட.. அங்கே இனவாதம் இருப்பதில்லை.

ஒன்று, இரண்டு விடயங்கள் இருந்தாலும்.... யுத்தமில்லா காலத்தில், சிங்களவர்களை தெரிந்த முறையில், சொல்கிறேன்... கீழ்மட்டத்தில்... 'அரி நா நேத', ( சரி இல்லை தானே ) என்ற நியாய பூர்வ நிலைப் பாடு எடுப்பார்கள். இது மேல் மடட நாதாரி ஓன்று வந்து மாத்தினால், அப்படியே ஒட்டு மொத்தமாக மாறி விடுவர்.

சிங்களவரின் இந்த மனப்பான்மையே, இன்னும் மகிந்த.. போனறவர்களை, அரசியல் கதிரைக் கனவுடன் வைத்து உள்ளது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Athavan CH said:

எனது கறார் விசாரணையின் பின், இப்பிரச்சினையில், தங்கள் கவனயீனத்தை அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள்.

லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன்! கவனிக்கவும். ஐயா கறாராம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் சம்பந்தர் சிங்களவர்கள் நல்லவர்கள் என கிறடிட்(credit) கொடுத்தவர். அதற்குள் இப்படி நடந்து விட்டதே

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

இப்ப தான் சம்பந்தர் சிங்களவர்கள் நல்லவர்கள் என கிறடிட்(credit) கொடுத்தவர். அதற்குள் இப்படி நடந்து விட்டதே

இப்படி செய்வது தமிழர்களாக இருந்து சிங்களவ்ராக மாறியோர் தான் ....பூர்வீக சிங்களவ்ர்கள் நல்லவர்கள் என்று ஐயா மீண்டும் சொல்லுவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.