Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரும் பகுத்தறிவுப்பட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சயத்தை பற்றி நாலு வார்த்தை எதிராய் எழுத தெரியுமா? பெரியாரை போட்டோவில் பாத்திருக்கிறிங்களா? அவர் பேசிய உரையை படித்திருக்கிறீர்களா? மற்றவர்கள் பேசுவதை வெட்டி பேச தெரியுமா? ஏலாகட்டத்தில் கருத்தை திசை மாற்றி வேறு திசையில் கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் மேலாய், யார் என்ன சொன்னாலும் சொன்னதில குறியா இருக்கனும். இவை எல்லாம் உங்களுக்கு இருந்தால்….இதோ நீங்களும் பகுத்தறிவு வாதி ஆகி விட்டீர்கள். மேற்கண்டவை தான் இங்கு இணையத்தில் பகுத்தறிவு பேசும் சிலரின் தகமைகள்….

ஒரு பகுத்தறிவாளன் எப்படியிருப்பான்? பெரியாரை கூட பகுத்தறிவாளனாய் ஏற்றுக்கொள்ளாதவன் நான் ஏனெனில் பகுத்தறிவு என்பதற்க்கு இன்னும் சரியான விளக்கம் எம்மவர்கள் சிலரால் புரியப்படவில்லை. வாழ்வின் முற்பகுதியில், இந்து மதத்தை பூசித்து, அதன் வழியே வந்தவர் ஏன் அவர் ஓர் தர்ம கத்தாவாக கூட இருந்தவர் பெரியார். கிட்ட தட்ட 27 வயது வரை அவர் இந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டார்? அது வரை அப்படியிருந்த அவர் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தையும் சாதியத்தையும் எதிர்த்தார். ஆனால் அவர் இந்து மதத்தை எதிர்ப்பதற்க்கு என்ன காரணம்? அது பகுத்தறிவு என்று எப்படி எடுத்து கொள்ள முடியும். தான் இந்து சமயத்தில் இருந்த காலத்தில் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்ப்பட வில்லை என்பதற்க்கு யார் சாட்சி?

அந்த பிரச்சினையே இந்து மதத்துக்கு எதிராய், அவரை பேச வைத்திருக்கலாம் அல்லவா? நான் பகுத்தறிவு வாதியும் அல்ல ஆன்மீக வாதியும் அல்ல மனிதன். யதார்த்த வாதி எனவே இந்த சந்தேககங்கள் எழுவது தவிர்க்க முடியாது.

சாதியை எதிர்த்த பெரியாரின் பெயரில் இன்று பிறிதொரு சமூகம் தமிழ்நாட்டில் இருக்கின்றது. அது சமூகத்தில் பிரிவினை தானே? ஆந்த பிரிவினையின் உச்சக்கட்டம், பெரியார் சிலையை யாரோ உடைக்க, கோவில் தாக்கப்பட்டன, இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இந்த வன்முறைக்கும்பல் ஏன் உருவானது. என் கருத்தின் படி சரியான அடித்தளம் இவர்களுக்கு இடப்படவில்லை. பெரியாரின் சிந்தனைகளின் படி இவர்கள் இல்லை அப்படியானால் இந்த பகுத்தறிவாளர்களே அவர்களது தலைவனின் கருத்தை ஏற்க்கவில்லை என்று பொருள் பட முடியுமா? இந்த பகுத்தறிவாளார்கள் கூறுவது போல, சமூகத்தை இந்து மதம் மட்டுமே பிரித்ததாய் வைத்து கொண்டாலும் முஸ்லீம்கள், மட்டக்களப்பில் தமக்குள் வன்முறையிலீடு பட்டது எதனால்? கிறிஸ்த்தவர்கள் பணமாய் இறைத்து மதமாற்றத்தில் ஈடுபடுவது எதனால்? ஆந்த பிரிவுகள் அந்தந்த மதங்களுக்கு அப்பால்ப்பட்டவையா? பகுத்தறிவின் அறிவு இது தானா?

இதை விட இன்னும் கிந்தி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று பெரியார் பற்றி பவுசு காட்டிக் கொள்பவர்களின் நிலையோ பரிதாபம். கிந்தியை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியவர்களில் பெரியாரும் குிறப்பிடத்தக்கவர் என்று தெரிகின்றது. அப்படியிருக்கையில் ஏன் அவர் அதற்கெதிராய் போராடினார். அங்கும் பல சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது . ஏனெனில் பெரியார் ஒன்றும் இலட்சிய வான் அல்லவே, தனது மூன்று வயது பிரிவின் போது மூன்று விதமான கொள்கையுடன் செயற்ப்பட்டவர். சதாரண மனிதர்கள் வாழ்வில் எழுக்கூடிய சந்தேகங்களே அன்றி எனது பெரியாருக்கு எதிரான வாதமல்ல...

பகுத்தறிவு உலகவறிவின்றி இருப்பதால் தான் பகுத்தறிவில் எனக்கு உடன்பாடில்லை. யதார்த்தத்தை கொன்று பகுத்தறிவு பேசுவது முட்டாள்த்தனமாக படவில்லையா? என்ன தான் நடந்தாலும் தம்மை தாமே பகுத்தறிவாளர்கள் என்று முத்திரை கொள்பவர்கள் எனது பார்வையில் மன நோயாளர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை ஆரம்பித்த உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? குறைந்த பட்சம் "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற நூலையாவது (எச்.வீ. இராஜதுரை, வ.கீதா) படித்திருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது.

இணையங்களில் வரும் கட்டுரைகளையும், பிற செய்திகளையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தன்னைத்தானே அறிவாளியாக நினைக்கும் நிலைமை மாறவேண்டும்.. இப்படியானவர்களால்தான் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டு விதண்டாவாதங்கள் வேண்டுமென்றே உட்புகுத்தப்படுகின்றன..

தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்ததுபோல் சவடால் விடுபவர்களை, அல்லது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கருதுபவர்களை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சொந்த வாழ்வில் மட்டுமின்றி பொது வாழ்விலும் தோல்வி கண்ட ஒருவர்.

தனிப்பட்ட வாழ்வை அலசுவதை விட்டு பொது வாழ்விற்கு வந்தவர் அரசியலில் தலை நிமிர செய்த முயற்சிகள் தோல்வியில் முடிய அவரின் அரசியல் கனவுகள் பலிக்காத நிலையில் தனது அரசியல் எதிரிகளை எதிர்க்க போட்ட தோற்றமே பகுத்து அரிவு வாதி என்ற வேசம்.

அவர் சமூகங்களை பகுத்தார். பிராமணன் பார்பர்ணன் திராவிடன் ஆரியன் என்று சமூகத்தைப் பகுத்து அரிந்து எதிர் எதிர் குழு நிலைகளை உருவாக்கி சமூகத்தில் இருந்த பிரிவினைகளை வன்முறை அணுகுமுறைக்குள் கொண்டு சென்று தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை உசுப்பி விட்டார். அதன் பின் அவரின் அரசியல் கூட்டாளிகளே அவரின் அணுகுமுறைகளோடு முரண்பட்டு திமுகவை உருவாக்கி தமிழகத்தின் திராவிடம் என்ற தலைப்பிட்டுக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு வித்திட்டனர். பெரியாரின் திக வழியில் வந்தவர்கள் திமுக, அதிமுக. மதிமுக... இப்படி ஒரே தலைவரை தங்கள் பகுத்தறிவு வாதத்துக்காக வகுத்துக் கொண்ட போதும் பிரிந்து பிரிந்து இன்று சாயிபாபாவின் பாதங்களைத் தொட்டுத் தொழும் நிலைக்கு வந்துள்ளனர்.

திமுக அதிமுக கிராமங்கள் தோறும் சாதி அடிப்படையில் வாக்குகளை சேகரிக்கும் நிலையில் சாதியக் கட்சிகளை அமைக்க அனுமதிப்பதுடன் அவற்றுடன் வாக்குகளுக்காக கூட்டணி போடுவதும் தான் திமுக அதிமுக போன்றவற்றின் வாக்கு வங்கிகளை காத்துக் கொண்டிருக்கிறது, அந்த வகையில் அவர்களுக்கு சாதி அழிப்பு என்ற போர்வையில் இந்த பிரிவினைத் தந்திரத்தை கற்றுக் கொடுத்த பெரியார் எப்பவும் போற்றப்படுபவராகவே உள்ளார். திமுக அதிமுக காலங்களில் நிகழ்ந்த சாதிய வன்முறைகளும் அவற்றின் பின் இக்கட்சி அரசியல்வாதிகள் இருந்ததையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.

ஈழத்தில் இல்லாத அளவுக்கு பிறப்புச் சான்றிதழ் வரை சாதி வந்துவிட்ட தமிழகத்தில் பெரியாரின் பகுத்து அரிவை பயன்படுத்தி மக்களை வெகுவாக பிரிவு படுத்தி இன்று பிற்படுத்தப்பட்டோர் என்று ஒரு பிரிவையே வைத்து அதன் மூலம் அரசியல் நடத்தவும் பெரியார் பகுத்தரிவு வாதிகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

பெரியாரின் பகுத்தரிவு வாதம் சாதித்தது மக்களின் மனங்களுக்குள் மட்டும் இருந்த சாதியை பிறப்புச் சான்றிதழில் பதித்து சாதிக்கு அங்கீகாரம் வழங்கியதும் சாதி இல்லை என்ற பிரச்சாரத் தொனியில் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தி அதை சாதி வன்முறைக்குள் தள்ளி அரசியல் செய்ய முனைந்ததுமே அன்றி வேறில்லை. சாதியும் சாதியக் கட்சிகளும் இல்லை என்றால் திமுக அதிமுக போன்ற கட்சிகளால் தமிழகத்தி ஆட்சி அமைக்க முடியாது. ஆக சாதி இல்லை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு பகுத்தறிவு என்ற போர்வையில் பகுத்தரிவு வாதம் பேசுவதே பெரியார் என்பவர் கற்றுக் கொடுத்த பாடம்.

தமிழகத்தைத் தவிர மற்றைய மாநிலங்களில் காங்கிரஸ் பாஜக போன்ற தேசியக் கட்சிகள் ஆட்சியமைக்கக் கூடிய ஜனநாயக நிலை இருந்தும் தமிழகத்தில் அது இல்லை என்பது ஏன் என்று ஆராய்ந்தால் இந்த பெரியார் பாசிசப் பகுத்தரிவு வாதம் வெளிப்படும். :P :D

Edited by nedukkalapoovan

காங்கிரஸ், பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது இருக்கிறது என்று கவலைப்படுகின்ற ஒரே ஒரு ஈழத் தமிழன் நெடுக்காலபோவானாக மட்டும்தான் இருக்க முடியும்.

தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழில் சாதி எதற்காக போடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்திற்கு வரும் கருத்துக்களை பதில் கருத்துக்கள், ஆதாரங்கள் மூலம்தான் வெல்ல வேண்டும். தர்க்க ரீதியாக கருத்துக்களை/ஆதாரங்களை வைக்கமுடியாமல் போகும்போதுதான் தனிநபரின் வாழ்க்கையில் இப்படி நடந்தது/அப்படி நடந்தது என்றும், கருத்துக்களை வைப்போரை மனநோயாளிகள் என்றும் என்றும் எழுதப்பண்ணுகின்றாது. இது கருத்தியல் வறுமையால் வரும் விளைவு.. கற்றுக் குட்டித்தனமாக ஒரு விடயத்தைப் பற்றி ஆராயமல் எழுதமுனையும் போது இப்படித்தான் எழுதமுடியும்.. என்ன செய்வது நம்மில் பலர் இப்படி செய்வதே சரியென்று எண்ணி எழுதுகின்றனர்.. தெரியாத/புரியாத விடயத்தை தமது அனுபவ/அறிவு சார்ந்த அளவுகோல்களைப் பாவித்து எழுத முன்னர் சிறு ஆராய்ச்சி செய்தாவது எழுதப் பழகவேண்டும். இல்லாவிடில் முன்னுக்குப்பின் முரணாகவும், பொது அறிவைக் கேலிசெய்யும் வகையாகவும்தான் எழுதமுடியும்.. :D

இந்தத் தலைப்பை ஆரம்பித்த உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? குறைந்த பட்சம் "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற நூலையாவது (எச்.வீ. இராஜதுரை, வ.கீதா) படித்திருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது.

இணையங்களில் வரும் கட்டுரைகளையும், பிற செய்திகளையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தன்னைத்தானே அறிவாளியாக நினைக்கும் நிலைமை மாறவேண்டும்.. இப்படியானவர்களால்தான் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டு விதண்டாவாதங்கள் வேண்டுமென்றே உட்புகுத்தப்படுகின்றன..

தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்ததுபோல் சவடால் விடுபவர்களை, அல்லது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கருதுபவர்களை என்னவென்று சொல்வது?

பகுத்தறிவுவாதிகள் என தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள் தவறாமல் செய்யும் ஒரு வாதம் என்னவெனில், பெரியாரின் கடல் போன்ற சிந்தனைகளை முற்றாகப் படிக்காமல் வெள்ளாடு

புல்மேய்ந்தது மாதிரி பெரியாரைப் படித்தவர்கள் தான் அவரை எதிர்த்துத் தர்க்கம் செய்கிறார்கள் எனவே இந்த பெரியாரிற்கு எதிரான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமுடியாதன என்பதாகும்.

இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி.

பெரியாரின் போதனைக் கடலை பகுத்தறிவாளர்களைத் தவிர மற்றையோர் சொற்ப பங்கு கூட நீந்தவில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பிரச்சினை இங்கு பெரியாரின் போதனைகளில்

ஆரிற்குப் புலமை அதிகம் என்பதல்ல, மாறாக பெரியாரின் கடலை நீந்தி விட்டோம் என்று தாமாகக் கூறுகின்ற பகுத்தறிவு வாதிகளால் சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பது தான் இங்கு

பிரச்சினை. சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதனை சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ்கின்ற எவரும் உணர்ந்து கொள்ளலாம். (இங்கு பலர் சுட்டிக்காட்டியிருக்கும் இத்தகைய ஒரு பாதிப்பு திட்டமிடப்பட்ட ச

மூக் பிரிவினை). இந்தப் புரிதலிற்கு புத்தகப் படிப்புத் தேவையற்றது, அன்றாட வாழ்வின் அனுபவங்கள் போதுமானது.

ஆக, பெரியாரின் பெயரால் பெரியார் இவ்வாறு சொன்னதற்கிணங்க நாங்கள் இவ்வாறு செய்கின்றோம் என நடந்து கொள்ளுகின்ற பகுத்தறிவாதிகளால் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினைகளானது,

பெரியாரின் சோதியியல் கலக்காத நாளந்த மனிதர்களிற்குப் பெரியார் மேல் தான் கோபத்தை உண்டு பண்ணும். இந்தக் கோபம் பாதிப்புக்களைப் பார்த்ததனால் வந்த நியாமான கோபம்.

பெரியாரின் கொள்கை பரப்புனர்களின் செயற்பாடுகளால் ஒரு சமூகம் இவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றது என ஒருவர் சொன்னால் அப்பாதிப்புக்களைப் பற்றி ஆராய்வது தான் பண்பு. அதைவிடுத்து,

இப்பாதிப்புக்கள் பற்றிக் கiதைப்பதற்கு உனக்கு என்ன தகுதி உள்ளது, நீ பெரியாரை முற்றாகப் படித்தாயா? எனக் கேட்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. பாதிப்புக்கள் பற்றிக்

கதைப்பதற்கு, பாதிக்கப்பட்டவன் என்பதனைக் காட்டிலும் கூடுதலான வேறென்ன தகுதி இருக்கக் கூடும்?

Edited by Innumoruvan

பகுத்தறிவு வாதிகளில் உள்ள கெட்ட பழக்கங்கள்:

ஒருவன், நான் பலவீனமான மனிதன் எனக்கு தன்னம்பிக்கை குறைவு, இதனால் வாழ்வில் பயம் அதிகம், இது எனது பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் பலத்த தடையாக இருந்தது. இந்நிலையில் தான் நான் கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டேன். இதனால் எனது வாழ்வு வெற்றி பெற்றுள்ளது. கடவுள் நம்பிக்கை என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு உதவுகிறது. எனது இந்த நம்பிக்கை அடிப்படைதான் எனது வெற்றியின் காரணம் என்று சொல்கிறான் என வைத்துக் கொள்வோம்.

இந்நிலையில், இந்த மனிதன் வெற்றி பெற்றுச் சந்தோசமாக வாழ்கிறானே என்பதனையோ, சரியோ பிழையோ கடவுள் நம்பிக்கை இந்த மனதனிற்கு ஏதோ ஒரு உளவியல் நன்மையினை செய்கிறதே

என்றோ பகுத்தறிவு வாதிகள் ஏற்றுக் கொள்ளவோ பார்க்கவோ மாட்டார்கள். அவர்களின் கண்களில் பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கு எதிராக ஒருவன் செயற்படுகிறான் என்பது மட்டுந்தான்

புலனாகும். இந்த அடிப்படையில் மேற்படி மனிதனின் நம்பிக்கை அடித்தளத்தை நாசம் செய்து அவனை ஒரு தோல்வியடைந்த மனிதனாக மாற்றும் வகையில் தான் இந்த பெரியார் விசுவாசிகள் செயற்படுவது வழமை. என்னைப் பொறுத்தவரை பெரியார் விசுவாசிகளின் இத்தகைய

நடைமுறை கூட ஒரு அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை ஒத்தது தான்.

பகுத்தறிவு மட்டுமல்ல. பல விடயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் எழுந்தமானத்தில் கருத்துக்கள் வைக்கக்படுகின்றன. உதாரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துடன் எதுவித தொடர்பும் அற்ற, அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது தெரியாத பலர் முஸ்லிம்களைப் பற்றிக் கேவலமாக எழுதியுள்ளனர். ஆகவே எதைப் பற்றியும் கருத்துக்கள் வைக்க முன்னர் (முக்கியமாக மற்றையோரை மனநோயாளிகள் என்று வரையறுக்கமுன்னர்) தாங்கள் வைக்கும் கருத்துக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.. வெறும் சாதாரண மனிதனாகவோ, பொது அறிவை வைத்தோ ஒவ்வொன்றையும் எடைபோட முடியாது.. இதற்காக எல்லோரும் எல்லாவற்றையும் படித்துக் கரைக்கவேண்டியதில்லை.. எனினும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைக்கும்போது அவற்றிற்குரிய ஆதாரங்களை தர்க்கரீதியாக முன்வைக்கவேண்டும்..

இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதிதீவிரவாத சிங்கள அமைப்புக்கள் இலங்கையில் இருப்பது தீவிரவாதப் பிரச்சினை, இனப் பிரச்சினையல்ல என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்..

உங்களுடைய இந்த உதாரணத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.. ஒருவர் வாழ்வில் முன்னேற அல்லது ஒரு சமூகம் முன்னேற்றமடைய உதவக்கூடிய எவையும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.. ஆனால் ஒரு பிரிவினரை முன்னேறவிடாமல் தடுக்கவும் ஒருவனை வாழ்க்கையில் வெற்றிபெற விடாமல் பண்ணவும் இருக்கும் எவையும் கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டியவை. உண்மையில் தூக்கியெறியப் படவேண்டியவை.. மூடநம்பிக்கைகளையும், காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகளையும் ஏன் கட்டிக் காக்கின்றோம்? இவற்றைக் கேள்விக்கு உள்ளாக்காமல் தடைசெய்வதன் மூலம் நாம் காப்பாற்ற முனைவது என்ன? கேள்விகளுக்கு உள்ளாக்காமல் "அது அப்படித்தான்.. அவற்றைக் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்றோம்.. எனவே மாற்ற முடியாது" எனும் பழமைவாதிகளால் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியாது..

பகுத்தறிவு என்று சொல்வதுகூட காலத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அது தூக்கியெறியப்படவேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை ஆரம்பித்த உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? குறைந்த பட்சம் "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற நூலையாவது (எச்.வீ. இராஜதுரை, வ.கீதா) படித்திருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது.

இணையங்களில் வரும் கட்டுரைகளையும், பிற செய்திகளையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தன்னைத்தானே அறிவாளியாக நினைக்கும் நிலைமை மாறவேண்டும்.. இப்படியானவர்களால்தான் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டு விதண்டாவாதங்கள் வேண்டுமென்றே உட்புகுத்தப்படுகின்றன..

தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்ததுபோல் சவடால் விடுபவர்களை, அல்லது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கருதுபவர்களை என்னவென்று சொல்வது?

சுயமரியாதை என்பதற்கு அர்த்தம் என்னவென்று பெரியாருக்குத் தெரியுமா? தமிழ்மக்களையே, முட்டாள் காட்டுமிராண்டி என்று திட்டிக் கேவலப்படுத்தி அம்மக்களின் மரியாதையைக் குலைத்தவர் சுயமரியாதை பற்றி விளம்புகின்றாராம். உடனே அதற்கு ஒரு காரணம் வேறு. உங்களுக்கு உணர்ச்சியைத் தூண்டத்தான் இப்படி ஒரு அவதாரம் எடுத்தேன் என்று. யார் கேட்டார்கள் அதை?

ஆனால் எம்மக்களுக்கு உணர்ச்சி எழவில்லைத் தான். எழுந்திருந்தால் அப்போக்கிரியின் அடையாளமே தெரியாமல் அழித்திருப்பார்கள். ஆனால் இப்போது சுயமரியாதையே இல்லாமல் அந்த ஆளுக்குச் சிலை வைத்துக் கொண்டல்லவா திரிகின்றார்கள்.

ஆண்டாண்டு காலமாக அறிஞர்களாலும், துறவிகளாலும் போற்றப்பட்ட ஒரு இறைநெறியை, அதைப் பற்றிய விளக்கமில்லாமல் திட்டிய விதண்டாவாதங்கள் எமக்குத் தேவையில்லை.

Edited by தூயவன்

மனிதநேயமும் யாதார்த்தமும் எம் இரு கண்கள்!

பகுத்தறிவின் பெயரால் இனவாத நெருப்பில் கருகும் சமுகத்தின் மேல் எண்ணெய் ஊற்றுபவர்கள் மனநலம் குன்றியவர்கள்!

கொடும் போர் ஈழத்தமிழர்களுக்கு இன்று பெற்றுக் கொடுத்த ஒரே வரம் இந்த சாதியக் கொடுமைகள் மெதுவாக அற்றுப் போகின்றமையே! அதை மீண்டும் தலித் என்ற பெயரால் கொண்டு வந்து விதைத்து பகுத்தறிவு வாதம் என்னும் நீரூற்றி வளர்த்து தமிழர் ஒற்றுமையை சிதைக்க சிலர் முயலுகிறார்கள். இது தாகத்தில் துடிப்பவனுக்கு சிகையலங்காரம் செய்வது போன்றது.

பெரியார் வாழ்க, பகுத்தறிவின் பெயரால் கண்கள் குருடானோர் ஒழிக!

Edited by சாணக்கியன்

......

இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதிதீவிரவாத சிங்கள அமைப்புக்கள் இலங்கையில் இருப்பது தீவிரவாதப் பிரச்சினை, இனப் பிரச்சினையல்ல என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்..

ஆம் ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் சிங்கள இனவாதிகளை ஒத்த தன்மை உள்ளவர்கள் என்பதை.

அவர்கள் இனத்தின் பெயரால் பிரிவினையை தூண்டுகின்றனர், நீங்கள் சாதியின் பெயரால் பிரிவினையை தூண்டுகிறீர்கள்.

சாதி இருந்தது, அது அழியவில்லை, இன்னமும் உயிர் வாழ்கிறது, என்றெல்லாம் கூறும் நீங்கள், ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடும், உயிர் வாழ திண்டாடும் சமுகத்திடம் எதிர்பார்ப்பது என்ன?

அல்லது நீங்கள் அவர்களுக்கு கூறும் அறிவுரைதான் என்ன?

Edited by சாணக்கியன்

பகுத்தறிவு மட்டுமல்ல. பல விடயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் எழுந்தமானத்தில் கருத்துக்கள் வைக்கக்படுகின்றன. உதாரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துடன் எதுவித தொடர்பும் அற்ற, அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது தெரியாத பலர் முஸ்லிம்களைப் பற்றிக் கேவலமாக எழுதியுள்ளனர். ஆகவே எதைப் பற்றியும் கருத்துக்கள் வைக்க முன்னர் (முக்கியமாக மற்றையோரை மனநோயாளிகள் என்று வரையறுக்கமுன்னர்) தாங்கள் வைக்கும் கருத்துக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.. வெறும் சாதாரண மனிதனாகவோ, பொது அறிவை வைத்தோ ஒவ்வொன்றையும் எடைபோட முடியாது.. இதற்காக எல்லோரும் எல்லாவற்றையும் படித்துக் கரைக்கவேண்டியதில்லை.. எனினும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைக்கும்போது அவற்றிற்குரிய ஆதாரங்களை தர்க்கரீதியாக முன்வைக்கவேண்டும்..

இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதிதீவிரவாத சிங்கள அமைப்புக்கள் இலங்கையில் இருப்பது தீவிரவாதப் பிரச்சினை, இனப் பிரச்சினையல்ல என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்..

எந்த ஒரு விவாதத்தையும் நடாத்துபவர்கள்; தமது பக்க வாதத்திற்குத் திடமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமென்பதனை நான் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனால், இந்தக் களத்தில் பகுத்தறிவுவாதிகளை விமர்சிப்பவர்கள் வெறும் தர்க்க நோக்கத்திற்காக மட்டும் ஒரு Academic Exercise போன்று மட்டும் தான் அதைச் செய்கிறார்கள் என எவரும் நினைத்துவிடக் கூடாது. சில பகுத்தறிவு வாதிகள் கடிவாளம் இடப்பட்ட குதிரை போன்று ஏற்கமுடியாத Tunnel Vision உடன் ஓடி சமூகத்தில் மற்றையோரிற்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றார்கள் என்பது தான் இங்கு பிரச்சினை. துரதிஸ்ரவசமாக தம்மை பகுத்தறிவு வாதிகள் என தாமாகவே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள சிலரிற்கு இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட உணர முடிவதில்லை. இந்தக் களத்தில் இத்தனை பேர் இவ்வளவு ஈடுபாட்டுடன் பகுத்தறிவுவாதிகளைளோடு விவாதிக்கின்றார்கள் என்றால், அதற்குப் பகுத்தறிவு வாதிகளின் மேற்படி தன்மையும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் சிங்கள இனவாதிகளை ஒத்த தன்மை உள்ளவர்கள் என்பதை.

அவர்கள் இனத்தின் பெயரால் பிரிவினையை தூண்டுகின்றனர், நீங்கள் சாதியின் பெயரால் பிரிவினையை தூண்டுகிறீர்கள்.

சாதி இருந்தது, அது அழியவில்லை, இன்னமும் உயிர் வாழ்கிறது, என்றெல்லாம் கூறும் நீங்கள், ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடும், உயிர் வாழ திண்டாடும் சமுகத்திடம் எதிர்பார்ப்பது என்ன?

அல்லது நீங்கள் அவர்களுக்கு கூறும் அறிவுரைதான் என்ன?

சாதியின் பெயரால் பிரிவினையைத் தூண்ட வேண்டிய அவசியம் நமக்கில்லை.. அதை இல்லாமல் பண்ணவேண்டியது எல்லோரினதும் கடமை..

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தற்போதும் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள எல்லோரையும் விடுவதில்லை. மக்கள் ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படுகின்றார்கள், எனினும் சிலரை தண்ணீர் எடுக்க மைல் கணக்கில் நடக்கவிடுகின்றார்கள்.. இந்த நிலைமையை மாற்றவேண்டும்.. எப்படி மாற்றலாம் என்பதற்கு உங்கள் அறிவுரை என்ன? கண்டும் காணாதமாதிரி இருக்கவேண்டும் என்பதா?

நாங்களும் போரின்போது பலமுறை இடம்பெயர்ந்து சென்ற அனுவத்தைக் கொண்டவர்கள்தான்.. யாழ்ப்பாணத்திற்குள் 15 மைல் தள்ளி உறவுக்காரர் இல்லாத இடத்திற்கு இடம்பெயர்ந்தபோது, ஓரிடத்தில் எல்லோருக்கும் "பிளா"வில்தான் சாப்பாடு தந்தார்கள்.. அதற்குக் கூறிய காரணம், வந்தவர்கள் என்னென்ன சாதியென்று தெரியாமல் எப்படிப் பரிமாறுவதென்பதுதான்.. எனினும் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்ததைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

பகுத்தறிவு என்று சொல்வதுகூட காலத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அது தூக்கியெறியப்படவேண்டியதே.

உங்களின் இந்தக் கூற்றில் வேடிக்கை என்னவெனில், பகுத்தறிவு என்ற சொல்லே பெரியாரின் கொள்கை விளம்பலிற்கு மட்டும் உரித்தானது என்பது போல் உள்ளது இந்த வசனம். பகுத்து அறிவது என்பதனை Analytical Thinking என்று சொல்லலாமா? (தவறென்றால் திருத்தவும்).

பேரியாரின் விசுவாசிகள் செய்யும் சில விடயங்களின் குருட்டுத்னத்தை எதிர்ப்பதனால் நாங்கள் எதையும் ஆராயாதவர்கள் எனக் கொள்வது கண்டனத்திற்குரியது.

கடவுள் நம்பிக்கை போன்ற சில விடயங்களில் அவற்றின் சாதகமான தாக்கங்கள் பற்றி நாங்கள் பகுத்து அறியக் கூடியதாக உள்ளவற்றை, பெரியாரின் போதனை என்ற கடிவாளமிடப்பட்ட சிலர் காண்பதில்லை. அவர்களிற்குத் தீமைகள் மட்டுந்தான் தலைவிரித்தாடுவதாய்த் தெரியும். ஊண்மையில் இங்கு பகுத்து அறியத் தவறுபவர்கள் இந்தப் "பகுத்தறிவு வாதிகளே".

சுமூக மேம்பாடு என்பதில் தாயக விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரிற்கும் உடன்பாடு இருக்கும். எனவே இது பிரித்துப் பாhத்த்துப் பேசப்படவேண்டிய ஒன்றில்லை. நாங்கள் சொல்வதெல்லாம், காட்டிற்குள் பாம்பிருக்கலாம் என்பதனால் பாம்மை அழிக்க காட்டைக் கொழுத்தாதீர்கள் என்பது தான். கடவுள் நம்பிக்iயில் நன்மைகளும் உண்டு.

பகுத்தறிவு என்பதனை பெரியார் குத்தகைக்கு எடுத்து விடவுமில்லை பகுத்து அறியும் தன்மை தம்மை "பகுத்தறிவுவாதிகள்" என கூறிக்கொள்பவர்களிற்கு மட்டும் தான் உரியதென்பதும் இல்லை.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இந்தக் கூற்றில் வேடிக்கை என்னவெனில், பகுத்தறிவு என்ற சொல்லே பெரியாரின் கொள்கை விளம்பலிற்கு மட்டும் உரித்தானது என்பது போல் உள்ளது இந்த வசனம். பகுத்து அறிவது என்பதனை Analytical Thinking என்று சொல்லலாமா? (தவறென்றால் திருத்தவும்).

பேரியாரின் விசுவாசிகள் செய்யும் சில விடயங்களின் குருட்டுத்னத்தை எதிர்ப்பதனால் நாங்கள் எதையும் ஆராயாதவர்கள் எனக் கொள்வது கண்டனத்திற்குரியது.

பகுத்தறிவு என்பதனை பெரியார் குத்தகைக்கு எடுத்து விடவுமில்லை பகுத்து அறியும் தன்மை தம்மை "பகுத்தறிவுவாதிகள்" என கூறிக்கொள்பவர்களிற்கு மட்டும் தான் உரியதென்பதும் இல்லை.

நான் குறிப்பிட்டது யாழ் களத்தில் "பகுத்தறிவு" என்னும் பதம் எப்படிப் பார்க்கப்படுகின்றது என்பதை வைத்துத்தான். பகுத்தறிவு என்பதை பெரியாருடன் இணைத்துப் பேசப்படுவதால், பகுத்தறிவு என்பதே சிலருக்கு வேண்டதகாத வார்த்தையாகப் போய்விட்டது.

என்னைப் பொறுத்தவரை மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவுதான் பகுத்தறிவு ஆகும்.. நீங்கள் கூறியபடி இதனை Analytical Thinking என்றே கொள்ளலாம். வர்க்க, சாதி, பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க உதவும் எதனையும் எதிர்க்கவேண்டிய தேவை இல்லை.

நான் குறிப்பிட்டது யாழ் களத்தில் "பகுத்தறிவு" என்னும் பதம் எப்படிப் பார்க்கப்படுகின்றது என்பதை வைத்துத்தான். பகுத்தறிவு என்பதை பெரியாருடன் இணைத்துப் பேசப்படுவதால், பகுத்தறிவு என்பதே சிலருக்கு வேண்டதகாத வார்த்தையாகப் போய்விட்டது.

உண்மை தான்.

நான் நினைக்கிறேன் இந்தப் பெரியார் விசுவாசிகள் தங்களை "பகுத்தறிவு வாதிகள்" என்பதற்குப் பதில் "பெரியார் கொள்கையினர்" என்றோ அல்தது அது போன்ற வேறு ஏதாவது ஒரு பதத்தினாலோ அழைக்கத்

தொடங்குவது பொருத்தமாயிருக்கும் என்று .....

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரார்த்தனை

தந்தை பெரியார்

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்-காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவ துண்டு.

இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலி-யவைகளும்; மறுமையில் - மேல் லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்-கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்க-மாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அ°திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்-கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும்.

ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

படித்துப் ‘பா°’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பா° செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்-சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யா-மல் கூலி கேட்கும் பெரும் சோம்-பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்-காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்-தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியி-ருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்-தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவ-மானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்-களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிற-வனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்-பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

ஏனென்றால், சகல காரியங்களும் கடவு-ளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்-திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்-பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்-டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கி-றேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையி-லேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது.

இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவு-ளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி-யாக வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று.

“நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவ-தானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணி-யம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்-பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை.

குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்த-னையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்-டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகி-தனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்-கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்-கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள்.

மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கி-யத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

- ‘பகுத்தறிவு’ மலர் 1, இதழ் 9, 1935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பை ஆரம்பித்த உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? குறைந்த பட்சம் "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற நூலையாவது (எச்.வீ. இராஜதுரை, வ.கீதா) படித்திருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது.

இணையங்களில் வரும் கட்டுரைகளையும், பிற செய்திகளையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தன்னைத்தானே அறிவாளியாக நினைக்கும் நிலைமை மாறவேண்டும்.. இப்படியானவர்களால்தான் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டு விதண்டாவாதங்கள் வேண்டுமென்றே உட்புகுத்தப்படுகின்றன..

தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்ததுபோல் சவடால் விடுபவர்களை, அல்லது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கருதுபவர்களை என்னவென்று சொல்வது?

வணக்கம் கிருபன்,

நான் பொரியார் பற்றி அறிந்தவன் என்று ஒரிடத்திலும் சொல்லவில்லை. யாதார்த்தமாக எனக்குள் எழுந்த கருத்துக்களை முன் வைத்தேன், நீங்கள் பெரியாரை நேசிப்பவராயின். அதற்காய் மன்னிக்க. முரண்பாடுகளுக்குள் இருந்து தெளிவு பிறக்கும். எங்களுக்கு தகுதி இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள். பொரியார் எதிர்ப்பு தீனி போடும் படலத்தில் .த்தலைப்பை ஆரம்பிக்க வில்லை. நீங்கள் சொன்னது போன்று நூல்களை படிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. ஏனெனில் ஏற்கனவே சொன்னது போல யதார்த்ததை கொன்று பகுத்தறிவு பேச நான் தயாரில்லை. மாறாக, ஒரு மனிதனுக்கு ஏற்படும் சந்தேகங்களையே நான் எழுதினேன். நான் என்னை அறிவாளியாக ஏற்றுக்கொள்ளும் படி உங்களையோ, இதர உறுப்பினர்களையோ கேட்கவும் இல்லை. அதை தரக்கூடிய தகுதி என்ற நிலை இங்கு யாருக்கும் இருப்பதாயும் நான் உணரவில்லை. மனதில் பட்டதை எழுதினேன்.

அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு கிடையவே கிடையாது. மற்றவர்களை பற்றிய விமர்வசனங்களை முன் வைப்பவர்கள். தாங்கள் சார்ந்த எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்க்கு பதிலளிப்பதை விடுத்து. விதாண்டாவாதம் பேசுவதும் நீங்களே, நான் இணையத்தில் நுனிப்புல் மேய்தனோ இல்லை அடிப்புல் மேய்தனோ, எலல்லாம் உங்களை போன்ற பொரியார் "ரசிகர்" களால் தான் எழுதப்பட்டது. அவர்கள் எழுதவற்றிலிருந்து எனக்கு எழுந்த சந்தேகங்களையே எழுதினேன். முடிந்தால் அப்படி அறிவாளிகளாக காட்டும் அந்த " பொரியார் விரும்பிகளை சந்தேகங்களை தீர்க்க தக்க வகையில் எழுத சொல்லுங்கள். இனியாது அடிப்புல் மேய்ந்து பார்ப்பம்... முடிந்தால் அதை சொல்லி தந்தால் நல்லது.

சாதியின் பெயரால் பிரிவினையைத் தூண்ட வேண்டிய அவசியம் நமக்கில்லை.. அதை இல்லாமல் பண்ணவேண்டியது எல்லோரினதும் கடமை..

தயவு செய்து கீழ்வரும் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடைதரவும். ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்ததில் எனக்குத் தோன்றியவை.

சாதியென்பது ஒற்றுமையை குறிக்கும் சொல்லா?

நான் என்ன சாதி? யாரிடம் கேட்பது?

எனது பெற்றோர் சொல்வது போல் குறித்த ஒரு சாதியை சேர்ந்தவனா நான்?

அதற்கு என்ன ஆதாரம்?

பக்கத்து வீட்டுக்காரன் வேறு சாதி எனில் அவன் எனக்கு மதிப்பு தருவானா இல்லை காறி உமிழ்வானா? சாதி மதிப்பு அட்டவனை இருந்தால் தந்து உதவ முடியுமா?

(எந்த எந்த சாதிகள் எனக்கு கீழே மேலே உள்ளன என்று அறிவதற்கு)

எனக்கு கீழ் உள்ள சாதிக்காரனை எவ்வாறு நான் நடத்த வேண்டும்?

உயர் சாதிக்காரன் என்னை என்ன செய்வான்?

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தற்போதும் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள எல்லோரையும் விடுவதில்லை.
அது எங்கே நடக்கிறது? சரியான இடம் குறிப்பு தரமுடியுமா? நான் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் உதாரணத்திற்கு எனது வீட்டில் கோடைக்கு வற்றாத கிணறு ஒன்று உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீர் அள்ள வருவார்கள். ஒருவர் வந்து தண்ணீர் அள்ளியதோடு சண்டித்தனம் செய்தார். அதனால் அவரை வரக்கூடாது என்று கூறிவிட்டனர் எனது பெற்றோர். இதற்காக அவர் வீதியில் செல்லும் போதெல்லாம் உபத்திரவம் தருவார் அதற்காக அவர் தண்ணீர் அள்ள விடவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மக்கள் ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படுகின்றார்கள், எனினும் சிலரை தண்ணீர் எடுக்க மைல் கணக்கில் நடக்கவிடுகின்றார்கள்..

மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு அல்லற்படும் போது, திருட்டுக்கள் நடக்கின்றதே அதற்கு ஒரு "திருட்" அல்லது "திருடியம்" என்றொரு இலக்கியம் படைப்போமா? விவாதம் ஆரம்பித்து ஜோராக நடத்துவோமா?

இந்த நிலைமையை மாற்றவேண்டும்.. எப்படி மாற்றலாம் என்பதற்கு உங்கள் அறிவுரை என்ன? கண்டும் காணாதமாதிரி இருக்கவேண்டும் என்பதா?
கேள்வி கேட்டது நான். நீங்கள் தான் பதில் தரவேண்டும்!

நாங்களும் போரின்போது பலமுறை இடம்பெயர்ந்து சென்ற அனுவத்தைக் கொண்டவர்கள்தான்.. யாழ்ப்பாணத்திற்குள் 15 மைல் தள்ளி உறவுக்காரர் இல்லாத இடத்திற்கு இடம்பெயர்ந்தபோது, ஓரிடத்தில் எல்லோருக்கும் "பிளா"வில்தான் சாப்பாடு தந்தார்கள்.. அதற்குக் கூறிய காரணம், வந்தவர்கள் என்னென்ன சாதியென்று தெரியாமல் எப்படிப் பரிமாறுவதென்பதுதான்.. எனினும் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்ததைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

பிளாவில் சாப்பாடு தந்தவர்களை நடுவீதியில் நிற்கவைத்து சுடுவோமா? அல்லது அவர்களது குடும்பத்தை நிரந்தரமாக ஒதுக்கி வைப்போமா?

மனிதநேயம் உள்ளதால் சாப்பாடு தந்தவனுக்கு சாதிபற்றிய அறிவை கொடுத்தது யார்? அவனாக கண்டுபிடித்ததா? இல்லை எமது பாழ்பட்ட சமுகம்தான் அந்த நம்பிக்கையை அவனுக்கு சொல்லிக் கொடுத்தது இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமுக சீர் திருத்தங்கள் ஒரே நாளில் செய்யப்படப் கூடியவை அன்று. இதை பேசித் தீர்க்க முடியமா? முஸ்லீம் ஒருவனிடம் ஒன்றை கேட்கும் போது ஒவ்வொரு முறையும் "இன் சா அல்லா" என்கிறான். நான் வேறு மதத்தை சார்ந்தவன் எனின் அதற்காக அவனை வெறுக்கலாமா? அது அவனது நம்பிக்கை. அது போன்றே வேறு சிலரின் தவறான நம்பிக்கைகளை, ரணங்களை சீக்கிரத்தில் ஆற்ற முடியாது. அவை நீண்ட காலத்தால் மட்டுமே மாற்ற முடியும் மறக்கப்பட முடியும்.

சந்ததி சந்ததியாக தயவு செய்து காவிச் செல்லாதீர்கள்.

சமுகத்திற்கு நன்மையை செய்யாது விட்டாலும் தீமையை செய்யாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ், பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது இருக்கிறது என்று கவலைப்படுகின்ற ஒரே ஒரு ஈழத் தமிழன் நெடுக்காலபோவானாக மட்டும்தான் இருக்க முடியும்.

தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழில் சாதி எதற்காக போடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

அப்படியானால், ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அரசாங்க கஜானாவை தாரை வார்க்க சொல்கின்றீர்களா? தி.மக. மற்றும் அ.தி.மு.க இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கும் எந்த பலனும் இல்லை அதே தான் காங்கிரஸ், பா.ஜ.க. வந்தாலும் இதில் என்ன வித்தியாசமோ..

பிரார்த்தனை

தந்தை பெரியார்

- ‘பகுத்தறிவு’ மலர் 1, இதழ் 9, 1935

பெரியார் பற்றி பெரியார் விசுவாசிகள் சொன்னவற்றில் இருந்து நான் அறிந்தவற்றில்; எனக்கு பெரயார் மீது பலத்த முரண்பாடு வரவைத்த விடயம் அவருடைய Tunnel Vision அல்லது கடிவாளமிடப்பட்ட பார்வை தான்.

உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தபோது எனது மேற்படி எண்ணம் இன்னுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கீழ்வரும் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடைதரவும். ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்ததில் எனக்குத் தோன்றியவை.

சாதியென்பது ஒற்றுமையை குறிக்கும் சொல்லா?

நான் என்ன சாதி? யாரிடம் கேட்பது?

எனது பெற்றோர் சொல்வது போல் குறித்த ஒரு சாதியை சேர்ந்தவனா நான்?

அதற்கு என்ன ஆதாரம்?

பக்கத்து வீட்டுக்காரன் வேறு சாதி எனில் அவன் எனக்கு மதிப்பு தருவானா இல்லை காறி உமிழ்வானா? சாதி மதிப்பு அட்டவனை இருந்தால் தந்து உதவ முடியுமா?

(எந்த எந்த சாதிகள் எனக்கு கீழே மேலே உள்ளன என்று அறிவதற்கு)

எனக்கு கீழ் உள்ள சாதிக்காரனை எவ்வாறு நான் நடத்த வேண்டும்?

உயர் சாதிக்காரன் என்னை என்ன செய்வான்?

அது எங்கே நடக்கிறது? சரியான இடம் குறிப்பு தரமுடியுமா? நான் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் உதாரணத்திற்கு எனது வீட்டில் கோடைக்கு வற்றாத கிணறு ஒன்று உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீர் அள்ள வருவார்கள். ஒருவர் வந்து தண்ணீர் அள்ளியதோடு சண்டித்தனம் செய்தார். அதனால் அவரை வரக்கூடாது என்று கூறிவிட்டனர் எனது பெற்றோர். இதற்காக அவர் வீதியில் செல்லும் போதெல்லாம் உபத்திரவம் தருவார் அதற்காக அவர் தண்ணீர் அள்ள விடவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு அல்லற்படும் போது, திருட்டுக்கள் நடக்கின்றதே அதற்கு ஒரு "திருட்" அல்லது "திருடியம்" என்றொரு இலக்கியம் படைப்போமா? விவாதம் ஆரம்பித்து ஜோராக நடத்துவோமா?

கேள்வி கேட்டது நான். நீங்கள் தான் பதில் தரவேண்டும்!

பிளாவில் சாப்பாடு தந்தவர்களை நடுவீதியில் நிற்கவைத்து சுடுவோமா? அல்லது அவர்களது குடும்பத்தை நிரந்தரமாக ஒதுக்கி வைப்போமா?

மனிதநேயம் உள்ளதால் சாப்பாடு தந்தவனுக்கு சாதிபற்றிய அறிவை கொடுத்தது யார்? அவனாக கண்டுபிடித்ததா? இல்லை எமது பாழ்பட்ட சமுகம்தான் அந்த நம்பிக்கையை அவனுக்கு சொல்லிக் கொடுத்தது இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமுக சீர் திருத்தங்கள் ஒரே நாளில் செய்யப்படப் கூடியவை அன்று. இதை பேசித் தீர்க்க முடியமா? முஸ்லீம் ஒருவனிடம் ஒன்றை கேட்கும் போது ஒவ்வொரு முறையும் "இன் சா அல்லா" என்கிறான். நான் வேறு மதத்தை சார்ந்தவன் எனின் அதற்காக அவனை வெறுக்கலாமா? அது அவனது நம்பிக்கை. அது போன்றே வேறு சிலரின் தவறான நம்பிக்கைகளை, ரணங்களை சீக்கிரத்தில் ஆற்ற முடியாது. அவை நீண்ட காலத்தால் மட்டுமே மாற்ற முடியும் மறக்கப்பட முடியும்.

சந்ததி சந்ததியாக தயவு செய்து காவிச் செல்லாதீர்கள்.

சமுகத்திற்கு நன்மையை செய்யாது விட்டாலும் தீமையை செய்யாதீர்கள்.

சில கேள்விகளுக்கு விடைகள் தனிமடலில் தரப்பட்டுள்ளது.. உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.. விதண்டாவாதமான கேள்விகளுக்கு விடைகள் அளிப்பதால் பிரயோசனமில்லை.. தெரியாதவர்களுக்கு சிலவற்றைத் தெரியப்படுத்தலாம்.. தெரிய வேண்டியதில்லை என்று முடிவெடுத்தவர்களுக்கு சொல்லுவது நேர விரயம்..

தண்ணீர் பிரச்சனை எங்கே இடம்பெற்றது என்பது மட்டுமே நீங்கள் பதில் அளித்தீர்கள்!

அதனை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! பாதிக்கப்பட்டவர்களின் வேதனை எனக்குத் தெரியாதுதான். ஆனால் இந்த சாதியப்பிரச்னைக்கான தீர்வுகளை எமது இனப்பிரச்சனைகளுக்க சமாந்தரமாக எவரேனும் வைத்துள்ளனரா? தயவு செய்து அறியத்தாருங்கள்?

கேள்விகள் விதண்டாவாதம் எனக்கருதிக் கொண்டு விடையளிக்காமைக்கு நன்றி.

தெரியாததால்தான் கேட்கிறேன். அப்படித் தெரிந்தும் நான் கேட்டதாக நீங்கள் கருதினாலும் விடை தருவதில் சிரமமென்ன? தெரிந்தவர்கள் விடைதாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாதியப்பிரச்னைக்கான தீர்வுகளை எமது இனப்பிரச்சனைகளுக்க சமாந்தரமாக எவரேனும் வைத்துள்ளனரா? தயவு செய்து அறியத்தாருங்கள்?

விடுதலை இயக்கங்களின் தோற்றத்தின் பின்னரும், இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடித் திரியும் அவல வாழ்க்கையிலும் சாதியம் தளர்ந்துபோய் உள்ளது.. புலிகளால் சில விடயங்கள் கட்டாயப்படுத்தப்பட்டபோது விரும்பியோ, விரும்பாமலோ பலர் ஏற்றுக்கொண்டு நடந்தனர்.. எனினும் பல்வேறு வகையான புதுப்புது வழிகளில் சாதியத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் இருக்கத்தான் செய்கின்றன..

விடுதலைப் போராட்டத்தின் வெற்றியோடு சாதியமும் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.. அது வீண்போகாது என்றே நினைக்கின்றேன்..

தனிப்பட்ட ரீதியில் அதிலும் இளையோர்கள் செய்ய வேண்டியவை..

1. நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ உரையாடும்போது சாதிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தல் (இது பெரும்பாலும் தற்போது நடைமுறையில் உள்ளது)

2. பெரியவர்கள் சாதிகளைப் பற்றி உரையாடினால், கண்டும் காணாமல் இருக்காமல் அவர்களுக்கு எடுத்துரைத்து சாதியத்தைத் தவிர்த்தல்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு இவற்றை விதைக்காமலே இருத்தல்.

4. திருமண பேச்சுக்களில் சாதி என்னவென்று பார்க்காமல் இருத்தல்.

5. "background check" என்று பெற்றோர் சாதியைப் பார்த்து சம்பந்தம் வேண்டாமென்று சொன்னால், அதனை ஒரு குறையாக ஏற்க மறுத்தல்.

6. ------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.