Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள்  பாரிய அசெளகாரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு  முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மேற்கொண்டனர்.

Local_News.jpg

மாநகர சபையினரின் குறித்த அசமந்த போக்கின்  காரணமாக மட்டக்களப்பு பூராகவும்  துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது என்றும் பாதையோரங்களிலும், வாவிகளிலும், வடிகான்களிலும் கழிவுகளை மக்கள் போடுவதனால் மட்டக்களப்பு நகரம் முழுவதும் குப்பைகள் நிரம்பி வழிகின்றது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.     

21317884_1483765471717832_36933098607943

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதனால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால்  தொற்று  நோய் உருவாகும் அபாயம் தோன்றியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபயின் மட்டக்களப்பு விஜயத்தை தொடர்ந்து அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் கழிவு அகற்றல் தொடர்பாக இடம்பெற்ற  இரகசிய கலந்துரையாடலை அடுத்து  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாணசபை, மாநகரசபை உதவுவதாகவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறி இன்றுடன் 16 நாட்கள் நகர்ந்தும் இதுவரை  எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24282

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிடல் இல்லாதவரை இவற்றுக்கான விடையென்பது   காணமுடியாத ஒன்று  நன்கு திட்ட மிடலை முதலில் கற்பிக்க வேண்டும் அரச துறையில் முதுமானி , கைக்கடிகாரம் ,சுவர்க்கடிகாரம் போன்ற பட்டங்கள் பெற்றவர்களை :cool:

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சு என்ன பிரயோசனம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

படிச்சு என்ன பிரயோசனம் .

ஆனால் ஒரு விடயமாக உள்ள ஒருத்தரை சந்திக்க போனால் முடியாது சாரை  இப்ப பார்க்க இயலாது அப்படியும் பார்க்க போனால் சாரின்ற பெயருடன் பட்டங்கள் தொங்கும் ஆனால் அந்த பட்டங்களுக்கு பலன் இல்லாமல் சாதாரண ஒரு குடிமகனுக்கு உள்ள சில சிந்தனைகள் அதிகம் படித்த ஆட்களுக்கு இல்லை அதை சொன்னாலும்  தங்களுக்கு கீழ் உள்ளவன் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கன பேரிடம் இல்லை  எனென்றால் தன்னை விட குறைவாக படித்தவன் என்ற பாகுபாடு   மூக்கை தொட  காதெல்லாம் சுற்றி வந்து தொடுவது  போல் உணர்க்கிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

திட்டமிடல் இல்லாதவரை இவற்றுக்கான விடையென்பது   காணமுடியாத ஒன்று  நன்கு திட்ட மிடலை முதலில் கற்பிக்க வேண்டும் அரச துறையில் முதுமானி , கைக்கடிகாரம் ,சுவர்க்கடிகாரம் போன்ற பட்டங்கள் பெற்றவர்களை :cool:

21317884_1483765471717832_36933098607943

35/40 வருசத்துக்கு முதலே மட்டக்களப்பு ஒழுங்காய் செந்தழிப்பாய் இருந்த பிரதேசம்....யாழ்மாவட்டத்தை மாதிரி போர் பாதிப்புகள் இல்லாத பிரதேசம்.
ஏன் ஐய்யா இப்ப இப்பிடி?????

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் பல இடங்களில் சிறிய ஒழுங்கை அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பிரவேசங்களில் அதுவும் டெங்குகரரர் வாறாங்கள் என்றவுடன் தங்கள் தங்கள் வாழ்விடங்களை துப்பரவாக்கி பொது இடங்களில் கொண்டு வந்து போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

யாழிலும் பல இடங்களில் சிறிய ஒழுங்கை அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பிரவேசங்களில் அதுவும் டெங்குகரரர் வாறாங்கள் என்றவுடன் தங்கள் தங்கள் வாழ்விடங்களை துப்பரவாக்கி பொது இடங்களில் கொண்டு வந்து போடுகிறார்கள்.

நாங்கள் முந்திச் செய்யிற மாதிரிக் கூட்டிப் போட்டுக் கொழுத்தி விட ஏலாதா< ஈழப்பிரியன்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நாங்கள் முந்திச் செய்யிற மாதிரிக் கூட்டிப் போட்டுக் கொழுத்தி விட ஏலாதா< ஈழப்பிரியன்?

முன்னரெல்லாம் எவரும் குப்பையைக் கொழுத்துவதில்லை.வீட்டில் ஒரு மூலையில் கூடடித்து அதற்குள் சேகரித்து வைத்து வயலுக்குள் கொட்டி உழுதுவிடுவோம்.வயல் இல்லாதவர்கள் குப்பையை விற்றுவிடுவார்கள்.

இப்போதும் குப்பைகளை கொழுத்துகிறார்கள்.பிரச்சனை எங்கே வருகிறதென்றால் பிளாஸ்ரிக் அல்லது தகரம் போன்றவற்றை எங்கே போடுவது?

டெங்குகாரர் வந்தால் பிளாஸ்ரிக் அல்லது தகரம் கிடந்தால் நிச்சயம் அபதாரம் விதிப்பார்கள்.அதுவும் ஆயிரக் கணக்கில்.

ஆனபடியால் பொதுமக்கள் என்ன தான் செய்யலாம?நகரசபை கிராமசபைகள் தான் இவற்றை அப்புறப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

21317884_1483765471717832_36933098607943

35/40 வருசத்துக்கு முதலே மட்டக்களப்பு ஒழுங்காய் செந்தழிப்பாய் இருந்த பிரதேசம்....யாழ்மாவட்டத்தை மாதிரி போர் பாதிப்புகள் இல்லாத பிரதேசம்.
ஏன் ஐய்யா இப்ப இப்பிடி?????

 குப்பை கொட்டுவதற்கு திருப்பெருந்துறை என்ற இடம் அரசாங்கத்தால் அந்த நாளிலிருந்து ஒதுக்கியிருந்தது தற்போது மக்கள் அந்தப்பகுதியில் குடியேறி உள்ளதால் குப்பை கொட்ட வேண்டாம் என கன தடவை ஆர்ப்பாட்டம் பண்ணி இருந்தார்கள் சில நாட்களின் முன் யாரோ சிலரால் அந்த குப்பை திடலுக்கு தீ மூட்டி விட அந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக  காட்சியளிக்க நீதிமன்றத்தால எந்த மாற்று திட்டமும் அறிவிக்கப்படாமல் குப்பை கொட்டுவதை நிறுத்த சொன்னது இதன் காரணமாக குப்பை கொட்ட இடம் இல்லாமல் போல மட்டக்களப்பு மாநகரசபையும்  குப்பைகளை எடுப்பதை நிறுத்த்க்கொண்டது இதன் காரணமாக குப்பை  நகர் பகுதியில் நிறந்து வளிகிறது நகரத்தில் வசிப்பவர்கள் தங்களின் வீடுகளில் அருகாமையில் உள்ள முச்சந்திகளில் வீசிவிட்டி ஒட்டு மொத்த சமூகத்தையும் முகஞ்சுழிக்க வைத்து வாழ்கிறார்கள் இதனால் பாதிக்கப்படபோவது அவர்களின் குழந்தைகளும் அங்கு வேலை செய்ய வருபவர்களும் தரம் பிரித்து எரிக்கலாம் ,புதைக்கலாம் ஆனால் இந்த மக்கள் ( இலங்கயில் வாழும் சகலரும் ) தான் மட்டும் வாழணும் நினைப்பவர்களே அதிகம்  

மாற்று திட்டத்தினை யோசிக்க நினைக்காத மேதைகள் கேட்டால் படித்தவரகள் படித்தது புத்தகத்தை மட்டுமே என்பது சில நடவடிக்கையின் போது தெரிகிறது  வெளி உலகம் மற்ற நாடுகள் குப்பைகளை என்ன செய்கிறது எப்படி கையாள்கிறது எனபது பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னரெல்லாம் எவரும் குப்பையைக் கொழுத்துவதில்லை.வீட்டில் ஒரு மூலையில் கூடடித்து அதற்குள் சேகரித்து வைத்து வயலுக்குள் கொட்டி உழுதுவிடுவோம்.வயல் இல்லாதவர்கள் குப்பையை விற்றுவிடுவார்கள்.

இப்போதும் குப்பைகளை கொழுத்துகிறார்கள்.பிரச்சனை எங்கே வருகிறதென்றால் பிளாஸ்ரிக் அல்லது தகரம் போன்றவற்றை எங்கே போடுவது?

டெங்குகாரர் வந்தால் பிளாஸ்ரிக் அல்லது தகரம் கிடந்தால் நிச்சயம் அபதாரம் விதிப்பார்கள்.அதுவும் ஆயிரக் கணக்கில்.

ஆனபடியால் பொதுமக்கள் என்ன தான் செய்யலாம?நகரசபை கிராமசபைகள் தான் இவற்றை அப்புறப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்.

எமது வாழ்க்கையின் ஒரு அம்சமாக  சேகரித்த குப்பைகளையெல்லாம் மாரி வருமுன் வயல்களில் பரவி விதைத்து பசளையாக்கியதெல்லாம்.... இந்தக்கால சந்ததி பள்ளியிலே படித்து பரீட்சை எழுதி  டாக்டர் எஞ்ஜினியர் என முன்னேறி விட்டார்கள்.

அந்த குப்பை அப்படியே இருக்கின்றது. பயன்படுத்துவார் யாருமில்லை.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.