Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்துக்கான சுதந்திர வாக்கெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!!

ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள்.

அவன் செய்வான்.. இவன் தருவான் என்று வாய் பார்த்துக் கொண்டு.

எனவே நாமே ஆரம்பிப்போம்...

இந்தச் செய்தியை பரப்புங்கள். உலகத் தமிழினத்தின் குரலை இதற்காக ஓங்கி ஒலிக்கப் பண்ணுங்கள்.

சோரம் போகத் தயாரானவர்களின் வாய்ப்பார்த்திருந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டீர்கள் ஆனால்.. அவை மீளவும் உங்களுக்கு கிடைக்காமலே போய் விடும். 

விழித்திடுங்கள்.. கிளர்ந்திடுங்கள்.. உங்களின் விடுதலை.. உங்களின் குரலில்.. உங்களின் ஒற்றுமையில்.. உங்களின் முயற்சியில்.. உங்களின் உழைப்பில்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

மக்கள் விரும்புவதை தெரிவிப்பது ஐனநாயகம். அதை தடுக்க முடியாது தான் ஈராக்கும், ஸபெயினும் தவியாய்த் தவித்தன.

இந்த குடியொப்பத்துக்கு சட்டவலு இல்லை, என்று அவர்கள் சப்புக் கொட்டினாலும்..... மக்கள் விருப்பம் உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவலு இல்லாவிடினும் சிறப்பாக ஒருங்கினைக்கப்பட்டு  தனியார்களின் இடத்துக்கு போய் மக்கள் வாக்களிப்பதை தடுக்க முனைவதே ஜனநாயக விரோதம் என்பதால் நெளிந்தார்கள்.

ஈழத்திலாயின் இது முஸ்லீம் மக்களின் ஒத்துழைப்புடன் மிகக் கவனமாக திட்டமிடப்பட வேண்டிய ஒன்று. 

நமது பகுதியில் போலீஸ், இராணுவத்தை வைத்து பயமுறுத்தலாம். ஆனாலும் வன்முறையை பாவித்து, அமைதியான ஜனநாயக முறைமையான நடவடிக்கையை தடுக்க முடியாது.

நாட்டின் எந்த சட்டத்தின் நடாத்துகிறீர்கள் என்றால், அப்படியானால் சட்டப்படி நடாத்துங்கள் என பதில் கிடைக்கும்.

ம்...கும்.. நடாத்தவே மாட்டோம் என்றால்... 'தெரியும் தான்', ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்த்து, அதன் படி அரசுடன் பேசும் நோக்கத்தில் தனிப்பட்ட ரீதியாக நடாத்துகிறோம் எனலாம்.

எவ்வாறாயினும் இது முயன்று பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

No automatic alt text available.

Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!!

ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள்.

அவன் செய்வான்.. இவன் தருவான் என்று வாய் பார்த்துக் கொண்டு.

எனவே நாமே ஆரம்பிப்போம்...

இந்தச் செய்தியை பரப்புங்கள். உலகத் தமிழினத்தின் குரலை இதற்காக ஓங்கி ஒலிக்கப் பண்ணுங்கள்.

சோரம் போகத் தயாரானவர்களின் வாய்ப்பார்த்திருந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டீர்கள் ஆனால்.. அவை மீளவும் உங்களுக்கு கிடைக்காமலே போய் விடும். 

விழித்திடுங்கள்.. கிளர்ந்திடுங்கள்.. உங்களின் விடுதலை.. உங்களின் குரலில்.. உங்களின் ஒற்றுமையில்.. உங்களின் முயற்சியில்.. உங்களின் உழைப்பில்.

தாயகத்திலே கட்சி கதிரை இணைப்பு நீக்கம் எனத்தொடரப் புலத்திலே பொறுப்பு இருப்பு என இழுபடவே நேரம் போதாது. பிறகெப்படியாம் செயற்பாடுகளைத் திட்டமிடுவது.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை...

தனி ஈழத்திற்க்கான வாக்கெடுப்பு நடத்தப்பட போகின்றதா அல்லது அதற்க்கான முயற்சி முன்னெடுக்கப்பட போகின்றதா...

அப்படியாயின் இலங்கையில் இந்த முயற்சியை மேற்கொள்வதற்க்கான சூழ்நிலை இருக்கிறதா...(nedukkalapoovan)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மியாவ் said:

சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை...

தனி ஈழத்திற்க்கான வாக்கெடுப்பு நடத்தப்பட போகின்றதா அல்லது அதற்க்கான முயற்சி முன்னெடுக்கப்பட போகின்றதா...

ஏலவே இந்த விடயம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால்.. பிரேரணையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோக சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை நடத்தனும் என்ற கோரிக்கை ஐநா மனித உரிமைகள் சபையிலும் தமிழ் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்டுள்ளது.

அதுபோக நாடு கடந்த தமிழீழ அரசுப் பொறிமுறை இதனை பல தரப்பிலும் வலியுறுத்தி வரும் நிலையில்..

இன்றைய காலச் சூழல்.. இத்தகைய வாக்கெடுப்புகளுக்கு உகந்ததாக தென்படும் நிலையில்..

தமிழ் மக்களை இது குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்ட வேண்டி உள்ளது.

அதனை இலக்காகக் கொண்டது தான் இத்தலைப்பு. 

இத்தகைய ஒரு முன்னெடுப்பு.. சிங்கள அரசுக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க மறைமுகமாக உதவுவதோடு.. தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை உலகின் மனச்சாட்சி ஏற்கச் செய்ய கூடிய வழிமுறை பிறக்கும். :104_point_left:

தமிழ் மக்களின் விடிவுக்கு மிகவும் அவசியமான முயற்சி!

சர்வதேசம் / மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுத்தல் அவசியம். ஐ.நா. வின் அண்மைக்கால அறிக்கைகள் அதற்கு உதவும் சூழ்நிலையை தவற விடாது பயன்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்தான்....

இருந்தாலும் அயல்நாட்டின் செயல்கள் என்னவாக இருக்கும்?

மனித உரிமைகள் ஓரளவு உள்ள நாடுகளில் கூட அடிதடியாக உள்ளது.  

மனித வதையை கண்கொள்ளாமல் மிருக வதையை மட்டும் கண்காணிக்கும் நாட்டு அரசியல் நடவடிக்கைகள் எப்படியிருக்குமோ யாரறிவார்?

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது !

September 28, 2017

குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.IMG_1354-300x225.jpg

ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர்.
 
ஈராக்க, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் உள்ள குர்திஷ்தான் அமைப்புக்களினாலும் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
அமெரிக்காவின் நியு யோர்கில் அமைந்துள்ள குர்திஷ்தான் தூதரகத்தின வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் மக்களுக்கும் குர்திஷ்தான் தேசத்துக்கும் ஈழத்தமிழர் தேசத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
 
குர்திஷ்தானின் தூதுவர் Ms. Bayan Sami Abdul Rahman அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
தோழமையினையையும் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரை ஒன்றினை வழங்கையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு ஒன்றினை வலியுறுத்தும் “YES TO REFERENDUM”எனும் இயக்கதினை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
 
தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும்  வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே அதன் பிரதான விடயமாக உள்ளது.
 
தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக உள்ளது.
 
இந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இத்தகைய ஒரு முன்னெடுப்பு.. சிங்கள அரசுக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க மறைமுகமாக உதவுவதோடு.. தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை உலகின் மனச்சாட்சி ஏற்கச் செய்ய கூடிய வழிமுறை பிறக்கும். :104_point_left:

இத்தகைய முயற்சி ஐநா வில் மேற்கொள்ளும் பொழுது இந்தியா இலங்கை பக்கம் சாய வேண்டும், ரஷ்யாவும் சீனாவும் நடுநிலை வகிக்க வேண்டும்... 

மற்ற வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, அமேரிக்கா தாங்கள் சொன்னது போல் மனசாட்சியுடன் செயல் பட்டால் நலம்... 

இத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்கள் எங்கெங்கே ஓட்டை உடைசல் இருக்கிறது என்பதனை கவனமாக பார்த்து செயல்பட வேண்டும்... 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது பிளாக் ஸ்பாட்டைப் பார்த்தேன், மிகவும் அருமையான பதிவாக (சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?!) இது இருக்கிறது...

இந்தியா மிக மிக குறுகிய கண்ணோட்டத்தினூடே ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறது... உலக நாடுகள் இந்தியாவை 2009 ல் தன் கையை வைத்ததே தன் கண்ணை குத்துவதற்கான செயலை செய்யப்பெறவைத்தது வெற்றிக் கொண்டது... 

இன்றும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது... இதை இந்தியா உணராவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா உடைந்து போவது உறுதி... 

மற்ற நாடுகளை விட பொருளாதார முன்னேற்றத்திற்க்காக 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த நாடுகளையே நம்பி இருக்கிறது, இது உள் நாட்டு கொள்கையிலும் வெளி நாட்டு கொள்கையிலும் மற்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் செயல் படுவதற்கு திணறிக்கொண்டிருப்பதாக உள்ளது... எந்த தைரியமான முடிவுகளையும் மற்ற நாடுகளின் நகற்வுக்கு பிறகே முன்னெடுக்கிறது... இதுவே இந்தியா எதிர்காலத்தில் உலகத்தின் அடியாளாகவும், சேவகனாகவும், அடிமையாகவும் வலம் வருவதற்கான அடித்தளமாக இருக்கப் போகிறது...

சீனா அருணாச்சல பிரதேச பிரச்னையை வைத்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதே ஐநா வில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்கக் கூடாது என்பதற்கான ஒற்றை காரணம் என்பதே இந்தியா இன்று வரை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.