Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை

Featured Replies

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

8_TNA.JPG

கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன.

குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது தமது சுய லாபங்களுக்காக அரசின் முடிவுகளுக்குத் தலைசாய்த்துவருவதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ஆனந்தசங்கரி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலரே கலந்துகொண்டனர். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை, கூட்டணிக் கட்சியினர் தமது பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அதில் பெறும் வெற்றி மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://www.virakesari.lk/article/26946

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.
மன்­னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்­தின் ஏற்­பாட்­டில், மன்­னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க பலி­பா­ல­கர் கிங்ஸ்லி சுவாம்­பிள்­ளை­யின் அழைப்­பில், மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்­று இது தொடர்பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா மாத்­தி­ரமே கலந்துகொண்­டார். புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிவ­சக்­தி ­ஆ­னந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.
இவர்­க­ளு­டன் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான பா.டெனீஸ்­வ­ரன், ப.சத்­தி­ய லிங்­கம், பிறி­முஸ்­சி­ராய்வா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள்  உறுப்­பி­னர் மயூ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்­னார் அமைப்­பா­ளர் கும­ரேஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.
கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மை­யை­யும், ஒன்­றா­கத் தேர்­தல் எதிர்­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.கூட்­டத்­தில் கலந்து கொண்ட சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்த அருட்­தந்­தை­யர்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளாக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கான யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும், கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அருட்­தந்­தை­யர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.
தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி தடை­யில்லை என்­ப­தைக் குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை கட்­சி­யா­கப் பதிவு செய்­வ­தற்கு இணங்க முடி­யாது என்­றும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ் தேர்­தல் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி ஏற்­க­னவே இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.
ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, தமிழ் அர­சுக் கட்­சியை வற்­பு­றுத்தி இணங்க வைக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது கட்­சி­தான் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணை­ய­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பது தாங்­களே என்­றும் தெரி­வித்­துள்­ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் அர­சுக் கட்சி மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யுள்­ளார். கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாமை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.
கூட்­ட­மைப்பாக இயங்­கு­வ­தற்கு தமிழ் அர­சுக் கட்­சியே தடை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் கூட தனக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.
இத­னால் தமிழ் அர­சுக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் பதி­ல­ளிக்க முற்­பட்­டுள்­ள­னர். இது இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யும் வாக்­கு­வா­த­மாக மாறி­யுள்­ளது. கூட்­டம் குழப்­ப­நி­லையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த நிலை­யில், ஆயர் தலை­யிட்டு கூட்­டத்­தைச் சமா­தா­னப்­ப­டுத்தி நிறைவு செய்­துள்­ளார்.
கூட்­ட­மைப்பை ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்­கான முயற்சி நேற்­றுத் தோல்­வி­யில் முடிந்­துள்­ளது. இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே மீண்­டும் சந்­திப்பு நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.(15)

http://www.samakalam.com/

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் கூட்டத்தில் குழப்பம் - கூட்டமைப்பின் இணக்க முயற்சி தோல்வி! 
[Sunday 2017-11-12 09:00]
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.   

மன்­னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்­தின் ஏற்­பாட்­டில், மன்­னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க பலி­பா­ல­கர் கிங்ஸ்லி சுவாம்­பிள்­ளை­யின் அழைப்­பில், மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்­று இது தொடர்பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா மாத்­தி­ரமே கலந்துகொண்­டார். புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிவ­சக்­தி ­ஆ­னந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

இவர்­க­ளு­டன் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான பா.டெனீஸ்­வ­ரன், ப.சத்­தி­ய லிங்­கம், பிறி­முஸ்­சி­ராய்வா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மயூ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்­னார் அமைப்­பா­ளர் கும­ரேஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மை­யை­யும், ஒன்­றா­கத் தேர்­தல் எதிர்­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.கூட்­டத்­தில் கலந்து கொண்ட சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்த அருட்­தந்­தை­யர்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளாக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கான யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும், கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அருட்­தந்­தை­யர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி தடை­யில்லை என்­ப­தைக் குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை கட்­சி­யா­கப் பதிவு செய்­வ­தற்கு இணங்க முடி­யாது என்­றும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ் தேர்­தல் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி ஏற்­க­னவே இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.

ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, தமிழ் அர­சுக் கட்­சியை வற்­பு­றுத்தி இணங்க வைக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது கட்­சி­தான் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணை­ய­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பது தாங்­களே என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் அர­சுக் கட்சி மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யுள்­ளார். கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாமை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

கூட்­ட­மைப்பாக இயங்­கு­வ­தற்கு தமிழ் அர­சுக் கட்­சியே தடை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் கூட தனக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னால் தமிழ் அர­சுக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் பதி­ல­ளிக்க முற்­பட்­டுள்­ள­னர். இது இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யும் வாக்­கு­வா­த­மாக மாறி­யுள்­ளது. கூட்­டம் குழப்­ப­நி­லையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த நிலை­யில், ஆயர் தலை­யிட்டு கூட்­டத்­தைச் சமா­தா­னப்­ப­டுத்தி நிறைவு செய்­துள்­ளார்.

கூட்­ட­மைப்பை ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்­கான முயற்சி நேற்­றுத் தோல்­வி­யில் முடிந்­துள்­ளது. இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே மீண்­டும் சந்­திப்பு நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=193698&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

நாங்கள் தமிழ் ஈழத்தையா கேக்கப்போகிறோம் - சிவசக்த்தி ஆனந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி. comன்  ஈயடிச்சான் பிரதி சமர்களம். com மா அல்லது மாறியா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஒரே கொடியின்  கீழ் அணி திரண்டவர்களாக...
ஒரே தலைமையின் கீழ் கட்டுப்பட்டவர்களாக....

பிந்திய ஞானோதயம். 

  • தொடங்கியவர்

தொடர்ந்து­ பே­சு­வ­தற்கு மன்னார் கூட்­டத்தில் இணக்­கப்­பாடு

p26-62377157c92ed39bf6547dacc5717303bcba3dda.jpg

(வவு­னியா,தலைமன்னார் நிருபர்கள்)

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டுள்ள பிள­வுக்கு முடி­வு­கட்டி,  கூட்­ட­மைப்பை ஒற்­று­மை­யாகச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காகக் கூட்­டப்­பட்ட கூட்டம் இறுதித் தீர்­மானம் எது­வு­மின்றி முடி­வ­டைந்­தது. எனினும், இது குறித்து, நான்கு கட்­சி­களின் தலை­வர்கள் கூடிப் பேசு­வது என்ற இணக்­கப்­பாட்­டுடன் முடி­வ­டைந்­தது. 

மன்னார் ஆயர் இல்­லத்தில், மன்னார் அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை முன்­னி­லையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள், முக்­கி­யஸ்­தர்கள், குறித்து அழைக்­கப்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்டம் சனிக்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

மன்னர் மறை மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியம் இதற்­கான அழைப்பை விடுத்­தி­ருந்­தது. அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் தலை­மையில் சுமார் நான்கு மணித்­தி­யா­லங்கள் இந்தக் கூட்டம் நடை­பெற்­றது.

ஆரம்ப உரை நிகழ்த்­திய மன்னார் அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். இன்­றைய கால கட்­டத்தில் அது மிகவும் அவ­சியம் என குறிப்­பிட்டார்.

இந்தக் கூட்­டத்­திற்­கான ஒருங்­கி­ணைப்­பா­ளரும் மன்னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்தின் முக்­கி­யஸ்­த­ரு­மா­கிய ஜே.ஜே.கென்­னடி அடுத்­த­தாக உரை­யாற்­றி­ய­போது, இரண்டு முக்­கிய நோக்­கங்­களைக் கொண்­ட­தாக இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது என கூறினார்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். சரி­யா­ன­வர்­களை உள்­ளு­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிடச் செய்ய வேண்டும் என்ற இரண்டு நோக்­கங்­களை இந்தக் கூட்டம் வலி­யு­றுத்­து­கின்­றது அதற்­கான முடி­வு­களை மேற்­கொண்டு தலை­வர்கள் செயற்­பட வேண்டும் என கேட்­டுக்­கொண்டார்.

இக்­கூட்­டத்தில் மன்னார் அப்­போஸ்­த­லிக்க பலி­பா­லகர் கிங்ஸ்லி சவாம்­பிள்­ளை­யுடன் மன்னார் குரு முதல்வர் அருட்­தந்தை விக்டர் சோசை, தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, வட­மா­காண சபையின் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம், வட­மா­கண சபை உறுப்­பி­னரும் முன்னாள் மாகாண சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய டாக்டர் ப.சத்­தி­ய­லிங்கம், டெலோ இயக்­கத்தின் செய­லாளர் நாயகம் சிறி­காந்தா, அந்தக் கட்­சியின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் வினோ நோக­ரா­த­லிங்கம், முன்னாள் வட­மா­கா­ணச சபை உறுப்­பினர் செந்­தில்­நாதன் மயூரன், புளொட் அமைப்பின் சார்பில் வட­மா­காண சபை உறுப்­பி­னரும் மாகாண விவ­சா­யத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய கந்­தையா சிவ­நேசன், அந்தக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும், முன்னாள் வவு­னியா நக­ர­ச­பையின் உப­த­லை­வ­ரு­மா­கிய சந்­தி­ர­கு­ல­சிங்கம் (மோகன்), ஈபி­ஆர்­எல்எவ் கட்­சியின் சார்பில் அந்தக் கட்­சியின் செய­லா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், அக்­கட்­சியின் மத்­திய குழு உறுப்­பினர் குமரேஸ் மற்றும் ஒரு கட்சி உறுப்­பினர் ஆகி­யோரும், கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், வட­மா­காண சபை உறப்­பினர் சிறாய்வா, முன்னாள் மாகாண அமைச்­சரும் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய டெனீஸ்­வரன், பொது­மக்கள் சார்­பி­லான கருத்­து­ரைப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்த ஊர் முக்­கி­யஸ்தர் ரெஜி ஆகி­யோ­ருடன், மன்னார் பிர­ஜைகள் குழுத் தலைவர் அருட்­தந்தை ஞானப்­பி­ர­காசம், மற்றும் அருட் தந்­தை­யர்­க­ளான ஜெப­மாலை, மார்க்கஸ், டெலிமா, ஜெய­பாலன், ஒல்மன், வங்­காலை பங்­குத்­தந்தை ஜெய­பாலன் உள்­ளிட்­ட­வர்­களும் கலந்து கொண்­டனர்

கட்சித் தலை­வர்கள் வரி­சையில் உரை­யாற்­றிய தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­ய­துடன், இடைக்­கால அறிக்கை தொடர்­பான விளக்­கத்­தையும் அளித்தார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய டெலோ அமைப்பின் செய­லாளர் நாயகம் சிறி­காந்தா விட்­டுக்­கொ­டுப்­புடன் கூடிய ஒற்­றுமை கூட்­ட­மைப்பில் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தினார். ஒற்­று­மைக்­காக அனை­வரும் சிந்­தித்துச் செயற்­பட வேண்டும். கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அது விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

புளொட் அமைப்பின் சார்பில் இங்கு உரை­யாற்­றிய வட­மா­காண விவ­சா­யத்­துறை அமைச்சர் கந்­தையா சிவ­நேசன், இரண்டு பேரின கட்­சி­களும் ஆட்­சியில் இணைந்­துள்ள சூழ்­நி­லையைக் கருத்­திற்­கொண்டு முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்­டி­யது அவ­சியம் என்றார்.

ஈபி­ஆர்­எல்எவ் கட்­சியின் சார்பில் இங்கு கருத்­து­ரைத்த அந்தக் கட்­சியின் செய­லா­ளரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற பிரச்­சி­னைகள் குறித்தும், அந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்­கான வழி­முறை குறித்தும் வெளிப்­ப­டை­யாகப் பேச வேண்டும் என தெரி­வித்து, கூட்­ட­மைப்­புக்குள் ஜன­நா­யகம் இல்லை என்றும் வெளிப்­ப­டைத்­தன்மை, கருத்துப் பரி­மாற்றம், கூடி முடி­வெ­டுக்கும் தன்மை என்­பன இல்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி, தனக்கு இடைக்­கால அறிக்கை தொடர்பில் உரை­யாற்­று­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தையும் எடுத்துக் கூறினார்.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வாக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­கென யாப்பு ஒன்று அவ­சியம் பொதுச் சின்னம் தேவை, அது கட்­சி­யாகப் பதிவு செய்ய வேண்டும் என தெரி­வித்­த­துடன், இடைக்­கால அறிக்கை குறித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்தார்.

கட­சி­க­ளு­டைய நிலைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை ஞானப்­பி­ர­காசம் உள்­ளிட்ட ஏனைய அருட்­தந்­தை­யர்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் நில­வு­கின்ற ஒற்­று­மை­யின்மை தொடர்பில் மக்கள் மத்­தியில் நில­வு­கின்ற நிலை­மைகள், உள்­ளு­ராட்சி தேர்தல் தொடர்பில் மக்கள் கொண்­டுள்ள நிலைப்­பா­டுகள் குறித்தும் எடுத்­து­ரைத்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்­சிகள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தைச் சுட்­டிக்­காட்­டினர்.

இதனைத் தொடர்ந்து உரை­யாற்­றிய மன்னார் மறை­மா­வட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியத் தலைவர் சட்­டத்­த­ர­ரணி அன்ரன் புனி­த­நா­யகம், தங்­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து செயற்­டு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட பிர­தி­நி­திகள் ஏன் தங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட முடி­ய­வில்லை என கேள்வி எழுப்­பினார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த இடம் முன்னை நாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்­க­ளினால் பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்ட இடம். இருக்­கிற பிரச்­சினை எல்­லோ­ருக்கும் தெரியும். கூட்­ட­மைப்­பில பிரச்­சி­னைகள் இல்­லை­யென்று சொல்ல முடி­யாது. கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு என்ன செய்­தது என்று மக்­களே இன்று கேள்வி கேட்­கி­றார்கள். மக்கள் மத்­தியில் ஒரு வெறுப்புத் தன்­மையும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. பல கருத்­த­ரங்­கு­க­ளுக்குச் செல்­லும்­போது, மாற்றம் ஒன்று வேண்டும் என்ற கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இது என்ன மாற்றம் வேண்டும் என்று நாங்கள் எங்­க­ளுக்குள் சிந்­தித்துப் பார்த்தோம். அப்­ப­டி­யானால், எங்­களை நாங்­களே மாற்­ற­லாம்­தானே, நாங்கள் மனி­தர்கள். பிழை விடு­வது மனித இயல்பு. அதனை நாங்கள் ஏன் திருத்தக் கூடாது என்று நாங்கள் யோசித்தோம். ஆகவே, முன்­னைநாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்­க­ளு­டைய தலை­மையில் பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்ட இடத்தில் அவ­ரு­டைய வழியைப் பின்­பற்றி, அந்த நட­வ­டிக்­கையை, மன்னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியம் ஏன் தொட­ரக்­கூ­டாது என்று நாங்கள் யோசித்து, அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் என்ற ரீதி­யிலே ஆயர் அவர்­க­ளு­டனும், குரு­மு­தல்வர் மற்றும் அருட் தந்­தை­யர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.

அந்த வகையில், இந்தக் கூட்­டத்­திற்கு அனை­வரும் வருகை நத்­தி­ருப்­பது மகிழ்ச்சி. ஆகவே, எங்­க­ளுக்கு உள்ள பிரச்­சி­னைகள் என்ன என்­ப­தையும் அவற்றை எவ்­வாறு தீர்த்துக் கொள்­ளலாம் என்­ப­தையும் இந்தக் கூட்­டத்தில் நாங்கள் கூடித் தீர்­மா­னிப்போம்.

கூட்­ட­மைப்­புக்குள் பிரச்­சினை என்று வெளி­வந்­த­வற்றில் முக்­கி­ய­மான சில விட­யங்கள் இருக்­கின்­றன. முத­லா­வ­தாக, வவு­னி­யாவில் பொரு­ள­தார மத்­திய நிலையம் அமைப்­பதில் கருத்து மோதல்­களில் ஈடு­பட்­டீர்கள். முடிவு காண்­ப­தற்கு வாக்­க­ளிப்­புக்குச் சென்­றீர்கள். நீங்கள் 16, 17 பேர் இணைந்து மக்­க­ளு­டைய ஒரு தேவையைப் பூர்த்தி செய்­வதில் ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யாமல் போய்­விட்­டது. கடை­சி­யாக அது ஓமந்­தை­யிலும் இல்லை. தாண்­டிக்­கு­ளத்­தி­லையும் இல்லை. எங்­கேயோ கொண்டு சென்று அதனைக் கட்­டு­கி­றார்கள்.

அடுத்­த­தாக மக்­களால் தங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்ட நீங்கள் எல்­லோரும் சேர்ந்து தெரிவு செய்த வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஐயா­வி­னு­டைய விட­யத்தில் உங்­க­ளுக்குள் பிரச்­சினை ஏற்­பட்டு அது வெளியில் வந்­தது.

அதற்குப் பிறகு இடைக்­கால அறிக்கை பற்­றிய விடயம். அதில் எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பேச வேண்டும் என்று வந்­தது. அதில் ஒரு உறுப்­பி­ன­ருக்குப் பேசு­வ­தற்கு சந்­தர்ப்பம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அவர் கேட்டார் கேட்டார். கேட்­டுப்­பார்த்தார். முடி­ய­வில்லை. அது­பற்றி பேப்­ப­ரி­லையும் இணைய தளங்­க­ளி­லையும் வரும்­போது எங்­க­ளுக்கு வெட்­க­மாக இருக்­கின்­றது.

ஏனென்றால் ஒற்­று­மை­யாக இருந்து எங்­க­ளுக்­காகப் பாடு­ப­டு­வீர்கள் என்று உங்கள் மீது நம்பி;க்கை வைத்து, நாங்கள் உங்­களைத் தெரிவு செய்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைத்தோம். மக்­கள்தான் உங்­களை அனுப்பி வைத்­தார்கள். மக்கள் பிர­தி­நி­தி­க­ளாகச் சென்­றீர்கள். அங்கு சென்று ஏன் இப்­படி நடக்­கி­றது? என்ன பிரச்­சினை? அடிப்­ப­டையில் என்ன பிரச்­சினை என்­பது குறித்து, உங்­களை அழைத்துப் பேசி, ஒரு முடிவு காண வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.

பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற பிரச்­சி­னை­யாக இருக்கி;ன்றது. ஆகவே ஏற்­க­னவே பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்ட இந்த இடத்தில் வைத்து இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முயற்­சித்­தி­ருக்­கிறோம். இங்கு ஆயர் இருக்­கின்றார். ஏனைய குரு­மார்கள், இருக்­கின்­றார்கள். மக்­க­ளு­டைய அடி­மட்டப் பிர­தி­நி­திகள் மத்­தியில் கட்சி ரீதி­யாக உங்­க­ளு­டைய நிலைப்­பா­டு­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்­றீர்கள். ஆரோக்­கி­ய­மான ஒரு சந்­திப்­பாக இதனைக் கருதி பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும்.

உள்­ளுக்­குள்­ளேயே பல நாட்­க­ளாக நான் நான் என்று இருந்து இப்­போது பூதா­க­ர­மாக வெளியில் வந்­தி­ருக்­கின்­றது. ஆகவே, இது, உட­ன­டி­யாகத் தீரக்­கக்­கூ­டிய ஒரு பிரச்­சி­னை­யல்ல. ஆனால் மக்கள் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் வெறுப்­ப­டைந்­தி­ருக்கி;ன்றார்கள். விடு­த­லைப்­பு­லி­க­ளி­னாலும் எங்­க­ளுக்குத் தீர்­வில்லை. காட்­டிக்­கொ­டுப்பின் மூலம் ஏற்­பட்ட நிலை­மை­க­ளினால் கடை­சி­யாக எங்­க­ளுக்கே பிரச்­சி­னை­க­ளாக இருக்­கின்­றது என்று மக்கள் கூறு­கின்­றார்கள்.

எனவே, எப்­படி இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்­கலாம்? நீங்கள் எல்லாம் மூத்த அர­சி­யல்­வா­திகள் நாங்கள் சிறி­ய­வர்கள். எங்­க­ளுக்கு அர­சியல் அறிவு கிடை­யாது. ஆனால், மக்கள் பிர­தி­ந­தி­க­ளா­கிய நீங்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும்.

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் ஒன்றைத் திறப்­ப­தாகக் கூறி­னார்கள். இது­வ­ரையில் திறக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது – ஒன்­று­மில்லை. சிறைச்­சா­லையில் அர­சியல் கைதிகள் இருக்கி;ன்றார்கள். அவர்­க­ளு­டைய பிரச்­சி­னைக்குத் தீர்­வில்லை. உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற நேரத்தில் அவர்­களைப் போய்ப் பார்ப்­ப­தோடு சரி. வேறொன்றும் நடக்­கு­தில்லை.

அதே­நேரம் விசேட மேல் நீதி­மன்றம் என கூறி அனு­ரா­த­பு­ரத்தில் அமைத்­தார்கள். ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­டைய வழக்கை வவு­னி­யாவில் இருந்து அனு­ரா­த­பு­ரத்தி;ற்கு மாற்­றி­னார்கள். அப்­போது, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திற்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்து அவ்­வாறு மாற்­றாமல் விடச் செய்­யுங்கள் என்று கூறினேன். எதுவும் நடக்­க­வில்லை. அதற்குப் பிறகு வழக்­கு­களை வவு­னி­யாவில் இருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்குத் தொடர்ச்­சி­யாக மாற்­றிக்­கொண்­டி­ருக்கி;ன்றார்கள். கைதிகள் விடப்­ப­டு­வ­தில்லை.

கடை­சி­யாக இவ்­வாறு ஒரு வழக்கு மாற்­றப்­பட்­ட­தற்கு ஒரு சாட்சி;க்குப் பாது­காப்பு இல்லை என்­ற­துதான் காரணம். ஒரு சாட்­சிக்குப் பாது­காப்பு இல்லை என்­பற்­காக அனு­ரா­த­பு­ரத்­திற்கு வழக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கை­யில்தான் இந்த நிலைமை. இவ்­வ­றான நிலை­மையில் நீங்கள் எல்லம் ஏன் ஒற்­று­மை­யாக இருக்­கக்­கூ­டாது?

நாங்கள் மக்­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருக்கி;ன்றோம். அவர்­களைச் சந்­திக்­கும்­போது பல கேள்­விகள் கேட்­கின்­றார்கள். அண்­மையில் நூறுபேர் அடங்­கிய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான கருத்­த­ரங்கு ஒன்றில் தமிழ்த் தலை­வர்கள் ஒன்­று­பட மாட்­டார்கள். தமி­ழர்­க­ளு­டைய வர­லாறும் அதைத்தான் கூறு­கின்­றது. எனவே ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும் என அவர்கள் கூறி­னார்கள். அத்­த­கைய மாற்றம் ஒன்று அவ­சி­ய­மில்லை. இருக்­கின்ற நான்கு கட்சித் தலை­வர்­களும் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். ஒன்­றி­ணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டது.

பிரச்சினைகள் எல்லாம் பொதுப் பிரச்சினைகள். உங்களுடைய தனிப்பட்ட பிர்சசினைகளல்ல. பொதுவானவை. அந்தப் பொதுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் எல்லோரும் உங்களை நம்பிப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இதற்கு என்ன செய்யலாம்? உங்கள் மீது குறை கூறுவுதாக நீங்கள் தயவு செய்து எண்ண வேண்டாம். உங்களுக்குள் கதைத்துப் பேசி பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும். ஆயர் அவர்கள் இது விடயத்தில் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருக்கி;ன்றார். அவருடைய முன்னிலையில் நான்கு கட்சிகளுடைய தலைவர்களும் கூடிப் பேசலாம். கூடிப்பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தெரிவித்தார்.

அன்ரன் புனிதநாயகத்தின் உரையைத் தொடர்ந்து டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சில விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனையடுத்து, ஈபிஆர்எல்எவ் சார்பில் அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

இறுதியில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக அடுத்த கட்டமாக நான்கு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி முடிவுகளை மேற்கொள்வது என்ற இணக்கப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது.

-- 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-13#page-1

On 11/12/2017 at 11:32 AM, நவீனன் said:

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை

தற்போதைய ஆயர்கள் முன்னர் இருந்த உறுதியான ஆயர்களுடன் துளியும் ஒப்பிட முடியாதவர்கள். கைக்கூலி மனோநிலை இவர்களிடம் காணப்படுகிறது. தமிழினத்தை விற்றுப்பிழைக்க தயங்காதவர்கள் என்று இவர்களின் சில நடவடிக்கைகள் கட்டியம் கூறவிட்டன. இவர்கள் தமிழர் அரசியலில் கருத்துக்கூறும் தகைமையை முற்றாக இழந்துள்ளனர். எனவே இவர்கள் அரசியலில் மூக்கை நுழைக்காமல் தங்கள் வேலைகளை சர்ச்சுக்குள் நிறுத்திக்கொள்வது தான் சிறந்தது.

இந்த ஆயர்கள் குழப்பக்கோஷ்டி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க முனைகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

இந்த ஆயர்கள் குழப்பக்கோஷ்டி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க முனைகிறார்களோ?

தம்பி கற்பூரம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.