Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்

Featured Replies

போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்

 

Col Anil Kaul -Lt Gen Depinder Singhசிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடந்த இராணுவ இலக்கிய விழாவில், சிறிலங்காவில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த இராணுவ இலக்கிய விழா, கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்து, நேற்று நிறைவடைந்தது.

நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வில், 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட  ஒப்பரேசன் பவான் நடவடிக்கை தொடர்பாக கேணல் அனில் கௌல், உரையாற்றினார்.

Col Anil Kaul -Lt Gen Depinder Singh

“திரும்பி வராதவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பிளட்டூனில் இருந்தவர்கள் முற்றாகவே அழிக்கப்பட்டனர்.  அதில் இருந்த கோரா சிங் ஒருவர் மட்டும் தான் உயிர் தப்பினார்.

அவர் கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே ஆனார்.  ஏனென்றால் அவர் மாத்திரம் உயிருடன் இருந்தார். அவரது தோழர்கள் 35 பேர் உயிரிழந்தனர்.

போருக்காக நாம் பணம் கொடுத்து பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் போர் நல்லதல்ல.

இராணுவம் எந்தக் கேள்வியும் இன்றி தனது பணிகளை நிறைவேற்றும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/12/09/news/27838

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கண்போனபின்பும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய போரில் தர்மமில்லை என்று சொல்ல தளபதிக்கு மனம் வரவில்லை.:(

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஒரு கண்போனபின்பும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய போரில் தர்மமில்லை என்று சொல்ல தளபதிக்கு மனம் வரவில்லை.:(

அது வராது அண்ணா

என்ன  இருந்தாலும்  எங்களில்  கைவைக்கப்படாது

இறுதியாக  ஒரு  வார்த்தை  கவனித்தீர்களா?

இராணுவம் எந்தக் கேள்வியும் இன்றி தனது பணிகளை நிறைவேற்றும்

  • கருத்துக்கள உறவுகள்

வேறை எண்ணத்தை சொல்வது ஒரு விடுதலை அமைப்பு கொண்டுள்ள ஆயுதங்களுக்கு நிகரா தங்கள் ஆயுதங்கள் இல்லை வெட்க்கத்தில் பழைய ஆயுதம்களை துணியால் மறைத்தபடி சண்டையிட்டவை இதில் வல்லரசு கனவு வேறை 

(ஆமா குஜராத்தில் இருந்து ஒரு ஆளும் ராணுவத்துக்கு ஆக இறக்கவில்லையாமே உண்மையா சார் )

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

ஒரு கண்போனபின்பும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய போரில் தர்மமில்லை என்று சொல்ல தளபதிக்கு மனம் வரவில்லை.:(

அது ஒருவிதமான மனநோய்.

'வல்லரசுக்கு(?) இணையான ராணுவபலம் கொண்ட ஒரு தேசத்தின் அமைப்பு, சாரம் கட்டின பொடியன்களிடம் வாங்கிக்கட்டினதை ஒத்துக்கொள்வதா..?' என்ற இறுமாப்பு..

இது எப்படியென்றால், கணவன்-மனைவி சண்டையில், மனைவியின் பக்கம் நியாயம் இருந்தாலும், 'ஆண் என்ற திமிர்' அதை ஒத்துக்கொள்ள பல ஆண்களுக்கு மனம் முன்வருவதில்லை..! :)

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ராசவன்னியன் said:

.

இது எப்படியென்றால், கணவன்-மனைவி சண்டையில், மனைவியின் பக்கம் நியாயம் இருந்தாலும், 'ஆண் என்ற திமிர்' அதை ஒத்துக்கொள்ள பல ஆண்களுக்கு மனம் முன்வருவதில்லை..! :)

அது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.