Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலக்க போவது யாரு?

Featured Replies

பொன்னி தாத்தா இரண்டு பேரிட்டையும் சொல்லுங்கோ ஜம்மு பேபியிட்ட நாட்டை தரசொல்லி அதற்கு பிறகு எப்படி என்று பார்க்க சொல்லுங்கோ!! <_<

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • Replies 502
  • Views 74.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சார்லி சாப்ளினும் தபால் தலையும்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்றார். சாப்ளின் நாக்கை நீட்டினார். “நாக்கின் நிறம் மாறி விட்டதே” என்று பதறிய டாக்டர், நாக்கை கூர்ந்து கவனித்து விட்டு, “பத்து செண்ட் தபால் தலை அல்லவா நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்றார் நிதானமாக. “டாக்டர் சார்! இத்தனை நேரம் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்ததற்கு ரொம்ப நன்றி” என்று சாவாதானமாகக் கூறிய சாப்ளின் அந்த அஞ்சல் தலையை எடுத்து மேஜை மேல் இருந்த கவரில் ஒட்டத் தொடங்கினார்

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் கேள்வி

.

வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தனது புது மனைவியோடு அவர் சிறிய வீடு ஒன்றில் வசிக்கத் தொடங்கினார். ஒருநாள் இருவரும் அமர்ந்து தங்கள் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

.

வாலிபருக்கு தான் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் குடும்பத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற கவலை இருந்தது. எனவே தனது மனைவியிடம் இதுபற்றி கூறிவிட்டு, சம்பளம் குறைவாக இருக்கிறதே உன்னால் சமாளித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். உடனே மனைவி, இது என்ன பிரமாதம். இந்த சம்பளம் எனக்கு போதும். ஆனால் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டார்.

மாணவியின் குறும்பு

.

________________________________________________________________________________

____

.

வாழ்வியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, கடவுள் என்று ஒருவர் இல்லை என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க முயன்றார். ஒரு மாணவியை அழைத்து, வெளியே சென்று மரம் தெரிகிறதா பார் என்றார். அந்த மாணவி, தெரிகிறது என்றார். இலைகள் தெரிகிறதா என்று ஆசிரியை கேட்க மாணவி, தெரிகிறது என்றார்.

.

கடவுள் தெரிகிறாரா என்று ஆசிரியை கேட்டார். இல்லை என்று மாணவி பதில் அளித்தார்.

கண்ணுக்கு புலப்படாத கடவுள் இல்லை என்று இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார். உடனே வகுப்பறையில் இருந்த குறும்புக்கார மாணவி, அதே மாணவியை அழைத்து ஆசிரியை தெரிகிறாரா? என்று கேட்டாள். தெரிகிறார் என்று முதல் மாணவி பதில் அளித்தாள்.

உடனே குறும்புக்கார மாணவி, ஆசிரியையின் மூளை தெரிகிறதா என்று கேட்டாள். இல்லை என்று முதல் மாணவி கூற, அதனால் ஆசிரியைக்கு மூளை இல்லை என்று முடிவு செய்து கொள்ளலாமா? என்றாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவைக் களஞ்சியம்:

'எனக்குச் சிரிப்பு வருவதேயில்லை. உண்மையாகச் சிரிக்கமுடியவில்லை, சிரிப்பினால் வரும் உடல் ஆரோக்கியத்தை நான் எப்படிப் பெறுவது?" என்று கவலைப்படுபவர்களே! கவலையை விடுங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி குட் ஹார்ட் (Good Heart) கூறும் ஐடியா இது.

'உண்மையாகச் சிரிக்க முடியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். சிரிப்பதுபோல நடியுங்கள்.அதாவது பொய்ச் சிரிப்பு. அது உங்கள் தசைகளை இயங்கவைத்து உதரவிதானப் பகுதியை உசுப்பிவிட்டு, உண்மையான சிரிப்பு தரக்கூடிய அத்தனை பலன்களையும் உங்களுக்கு அளிக்கும்.

ஏனென்றால் உங்கள் உடலின் பாகங்கள் மெய்ச் சிரிப்பு - பொய்ச் சிரிப்பு என்ற வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவை. சிரிக்கும்போது ஏற்படும் தசைகளின் இயக்கமே அவற்றுக்கு சிக்னல்! காலப் போக்கில் உங்களுக்கு மெய்ச்சிரிப்பு உருவாகும் ஆற்றலும் விரைவில் வந்துவிடும்!"

('Laugh and Health' நூலிலிருந்து) - கிரிஜா மணாளன்.

ஜோக்:

'கல்யாணத்துக்கு முந்தி நம்ம கேசவன் எப்பவும் சிரிப்பாவே இருப்பானே.....இப்ப எப்படி இருக்கான்?"

'சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"

'அப்படின்னா......?"

'பெண்டாட்டியால தெருவுல ~சிரிப்பாச் சிரிக்கறான்!|"

பிரபலங்களின் நகைச்சுவை!

பிறர் நம் வாயைக் கிளறும்; விதமாக ஒரு கேள்வியைக் கேட்கும்போது நமது பதில் அவர்களின் முகத்திலடித்தாற்போல இருப்பதைவிட நகைச்சுவையோடு இருக்குமானால் அவர்கள் மனமும் புண்படாது. அத்தகைய கேள்வியை மீண்டும்; நம்மிடம் கேட்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தியைப் பார்த்து ஒருவர் கேட்ட இந்தக் கேள்வியைக் குறிப்பிடலாம்.

'எப்போதும் நீங்கள் ரெயிலில் மூன்றாவது வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்கிறீர்களே ஏன்?"

அதற்கு காந்திஜியின் பதில்: 'நான்காவது வகுப்பென்று ஒன்று இல்லையே... அதனால்தான்!"

பிறர் மனத்தைப் புண்படுத்த விரும்பாத, அஹிம்சையின் நாயகரான மகாத்மா காந்தியடிகள் இவ்வாறென்றால், நகைச்சுவையுணர்வு மேனாட்டு அறிஞர்கள் இருவர் ஒருவரையொருவர் மூக்கை உடைத்துக் கொண்டதில் நமக்குக் கிடைத்துள்ள நகைச்சுவையைப் பாருங்கள்!

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

'இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்."

சர்ச்சில் அனுப்பிய பதில்: 'இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் - இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்."

இரு அறிஞர்கள் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதன் மூலம் உலகத்துக்கு, சிந்தித்துச் சிரிக்கத்தக்க ஓர் அரிய நகைச்சுவை கிடைத்துவிட்டது!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி (girijamanaalan2006@yahoo.co.in)

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதும் சொல்லாமல் விட்டதும்

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :

ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :

இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :

பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :

நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.

3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :

வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :

எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.

4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:

காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :

அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்

  • கருத்துக்கள உறவுகள்

சுனில்: உங்க அப்பாவுக்கு எத்தனை வயசு?

ஜீவா: எனக்கு எத்தனை வயசோ அத்தனை வயசுதான்

எங்க அப்பாவுக்கும்.

சுனில்: அது எப்படி?

ஜீவா: நான் பிறந்தப்பதான அவர் அப்பா ஆனார்.

--------------------------------------------------------------------------------

பேரன்: தாத்தா இனிமேல் கம்ப்யூட்டர் படிச்சாதான்

வேலை கிடைக்கும்.!

தாத்தா: அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதா?

--------------------------------------------------------------------------------

வேலு: நான் சரியா படிக்கலைன்னா எங்க அப்பாவுக்கு

மூக்கு மேல கோபம் வரும்.

சுந்தர்: அப்படியா? எங்க அப்பாவுக்கு என் மேல தான்

கோபம் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்

நடிகையின் வயசு

நடிகைக்கு வயசாயிடுச்சுன்னு அவரோட கணவன் ஓடிப்போயிட்டானாமே அப்படி என்னதான் வயசு அந்த நடிகைக்கு!

93 வயசு.

சம்பள உயர்வு

அவருக்கு சம்பள உயர்வு வராத வெறுப்ப எப்படி காட்டுவார் தெரியுமா?

அவர் வீட்டுக்கு யாராவது வரும்போது அதிசயமா சம்பள உயர்வு மாதிரி வந்திருக்கீங்களே அப்டீன்னுவார்.

இன்டர்வியூ வந்தவங்க

என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க?

வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் ஐ வாஷ்னு சொல்லப்போறீங்க அதையும் அவங்களே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!

108 தேங்காய் உடைக்கிறேன்

அந்த பக்தருக்கு இவ்வளவு குறும்பு கூடாது

ஏன் என்னாச்சு?

108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக்கிட்டாராம். இப்போ தேங்காய் விலை கூடியிருக்குன்னு சொல்லி, நாளைக்கு ஒருநாள் தேங்காய் விலையை குறைச்சா 2 தேங்காய் சேர்த்து உடைக்கிறேன்னு வேண்டிட்டிருக்காரு

ப்ளேன் மோதுதுன்னா என்ன செய்வ?

இன்டர்வியூ செய்பவர் : திடீர்னு அந்த ஜன்னல் வழியா பெரிய ப்ளேன் ஒண்ணு வந்து மோதுதுன்னா நீ என்ன செய்வ?

அத ஒரு பெரிய ராக்கெட் வச்சு அடிச்சுடுவேன்?

ராக்கெட் எங்கேந்து கிடைக்கும்?

உங்களுக்கு ப்ளேன் எங்கேந்து கெடச்சுதோ அங்கேந்துதான்!

108 தேங்காய் உடைக்கிறேன்

அந்த பக்தருக்கு இவ்வளவு குறும்பு கூடாது

ஏன் என்னாச்சு?

108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக்கிட்டாராம். இப்போ தேங்காய் விலை கூடியிருக்குன்னு சொல்லி, நாளைக்கு ஒருநாள் தேங்காய் விலையை குறைச்சா 2 தேங்காய் சேர்த்து உடைக்கிறேன்னு வேண்டிட்டிருக்காரு

அட......அட கடவுளுக்கே அல்வாவா :lol: அது சரி நல்லா கலக்கிறீங்க நுணாவிலன் அண்ணா தொடர்ந்து கலக்குங்கோ!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நர்ஸ்

நர்ஸ் 1 : டாக்டர் ஏன் ஆறாம் நம்பர் ரூமையும், நூறாம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் செய்யற பேஷண்ட்டுகளுக்காக ஒதுக்கி வச்சுருக்கார்?

நர்ஸ் 2: ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதால் தான்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வயித்துவலி -பொறுக்க முடியவில்லை

நோயாளி : வயித்துவலி -பொறுக்க முடியவில்லை

டாக்டர் : வயித்துவலியின்போது ஏன் பொறுக்கப் போறீங்க?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்டக்டர் தொங்கினா யாரும் டிக்கட்

எடுக்கமாட்டாங்க!

ஆனா டிரைவர் தொங்கினா

எல்லாரும் டிக்கட் எடுத்துடுவாங்க!

தெனமும் பூ வாங்கிட்டுப்போரியே!

பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?

ம்..பாசம் பூக்காரி மேல!

ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே

“ஈ” குளிக்குது!

ஆமா...நீ கொடுக்கர இரண்டார் ரூபா காசுக்கு

திரிஷ்ஷாவா வந்து குளிப்பா!

ஒரு அரசனுக்கு தூதுவந்த புறாவுக்கு இரண்டு

கால்களுல் இல்லை

என்ன மந்திரி இது!

இது தான் “MISSED CALL” அரசே!

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்

அவராலே ஒரு குரலில்தான் போசமுடியும்.

‘RATION ‘ ‘FASHION ‘ என்ன வித்தியாசம்?

எடை கொறஞ்சா…RATOIN !

உடை கொறஞ்சா .. FASHION!

முக்காலியிலே உக்காரலாம்

நாற்காலிலே உக்காரலாம் ஆனா

தக்காளியிலே உக்கார முடியுமா!

வெட்டி சம்பளம் வாங்கரவங்க யாரு?

‘டைலர்’,’பார்பர்’,

கேள்வி: நீ மூன்றாம் மாடியில் இருக்கும்போது

தீ பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்!

எப்படி நீஅங்கிருந்து தப்பிப்பாய்?

ரெம்ப சுலபம்...கற்பனையை நிருத்திக்கொள்வேன்.

.When u r in bright, everything will follow u…

When u enter dark even ur own shadow will not follow u…

ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்?

மரங்கள் நட்டினார்?

மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க!

மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க!

நாம அடிச்சா அது மொட்டை!

அதுவாவிழுந்தா சொட்டை!

மண்டையிலே போடறது DAI

மண்டையப்போடறத DIE .

பதிணெட்டுப்பட்டி மக்களுக்கும் நான் சொல்லரது

என்னான்..னா..

GOOD EVENING….

நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு!

O K .O K . GOOD MORNING…

. A Dog was following Sardar ,

Sardar was laughing. A man asked, ”WHY R U laughing?”

Sardar : “I have “AIRTEL” but “HUTCH” network is

FOLLOWING me

‘ கஜினி’ சூர்யா:- நான் சஞ்சய் ராமசாமி, அசின் “I LOVE U”

அசின் :-டெய் மொட்டை இது மட்டும் என் அண்ணனுக்கும்

LOVER- க்குத்தெரிஞ்சுது நீ..தொலஞ்சே !

சூர்யா :- யார்டி உங்க அண்ணே? வெண்னெ!

அசின்:- இந்த SMS படிக்கறவர்!

சூர்யா:- யார்டி உன் LOVER ?

அசின்:- கொஞ்சம் கீழ போய்ப்பாரு பேரு, போன் நெம்பர்

இருக்கும்!

.புறா,அணில் இதில் தபால் அனுப்ப உகந்தது எது?

அணில்தான் அதுக்குத்தானே “பின்கோடு” இருக்கு!

.பீடியால் சுட்டபுண் உள்ளாரும் ஆராதே

பிராந்தியால் வெந்த வயிறு _ புதுக்குறள்...555

  • 3 months later...

கிராந்தி பிடித்த ஒருவர் ஆகாய விமானத்தில் பயணம் செய்தார் (எங்கட குமாராசாமி அண்ணை மாதிரி). நீண்ட பயணமாதாலல், பக்கத்தில் இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் பெரியவர்.

பெரியவர் - பேசிக் கொண்டு போனால், பிராயாணம் சுருக்காய் முடிந்து விடும் என்று ஒரு பேப்பரில வாசித்தானான்.

சிறுமி - அப்படியா, என்னத்தை பற்றி போசாலம்?

பெரியவர் - அணு சக்தியை பற்றி பேசாலாமே ( நக்கலாகா!)

சிறுமி - சரி போசலாம். அதுக்கு முதல் ஒரு கேள்வி? மாடு, மான், குதிரை எல்லாம் ஒரே புல்லை தான் சாப்பிடுகின்றது அல்லாவா?

பெரியவர் - ஆமாம்.

சிறுமி - ஆனாலும் அவ் மிருகத்தின் கழிவுகள் ஒரே மாதிரி இல்லையே, மாடு சாணம் போடுகிறது, மான் புழுக்கை, குதிரை வேறு விதம். ஏன் என்று தெரியுமா?

பெரியவர் - சற்று யோசித்த பின்னர், தெரியவில்லை என்று கையை விரித்தார்.

சிறுமி - இந்த சின்ன மலப்பிரச்சனையே தெரியாத நீயெல்லாம் அணு சக்தி பற்றி, ஆளை விடு ஜாயா என்று சொல்லி விட்டு துங்க போய் விட்டாள் சிறுமி.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் கேட்ட வரம்

..

இளைஞன் ஒருவன் கடவுளை சந்தித்து வரம் ஒன்றை கேட்க தவமிருந்தான். கடவுளும் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பேராசை பிடித்த அந்த இளைஞன், எனக்கு ஒரு வேலை வேண்டும். எப்போதும் என் கையில் இருக்கும் பையில் நிறைய பணம் இருக்க வேண்டும் என்று இழுத்தான்.

.

உடனே கடவுள் இதுபோதுமா என்று கேட்டார். உடனே அவன் இல்லை இல்லை இன்னும் ஒரு வரம் வேண்டும் என்றான். என்ன அது என்று கடவுள் கேட்டார். அதற்கு அவன் என் வண்டியில் எப்போதும் பெண்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றான்.

நீ கேட்ட அனைத்தும் தந்தேன் என்றார் கடவுள். இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தான். மறுநாள் அவனுக்கு போக்குவரத்து கழகத்தில் இருந்து மகளிர் பேருந்தின் கண்டக்டர் வேலை கிடைத்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்கொலை

வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். அதற்காக அந்த ஊரிலிருந்த பெரிய கிணற்றின் மீது ஏறி நின்று கொண்டான்.

கண்களை மூடிக்கொண்டு குதிக்க தயாராக இருந்த அவனை அந்த வழியாக சென்ற பெரியவர் ஒருவர், கையை பிடித்து இழுத்தார்.

நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னைத் தடுக்காதீர்கள் என்று அவன் கூறினான். உடனே அந்த பெரியவர், இந்த கிணற்றில் குதிக்கப்போகிறாயே; கிணற்றுக்குள் ஒரு பெரிய முதலை உள்ளது அது உன்னை கொன்றுவிடும் என்று எச்சரித்தார். உடனே பயந்து போன அந்த இளைஞன், ஐயோ என்று அலறியபடி அங்கிருந்து ஓடிவிட்டான்.

.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி ,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால் ,

ஜனவரி 1க்கும் ,

டிசம்பர் 31க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம் .

இதுதான் உலகம் .

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும்...!!

தத்துவம் 1:

ஆட்டோக்கு 'ஆட்டோ 'ன்னு பேர் இருந்தாலும் ,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 2:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 3:

வாழை மரம் தார் போடும்,

ஆனா

அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ ! ஹலோ!!!!)

தத்துவம் 4:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா ?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா ?

( டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 5:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,

அதுக்காக ,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது ,

கடன் வாங்கித்தான் ஆகனும் .

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா ,

சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

இதுதான் உலகம்

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும் ,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது .

இளநீர்ல யும் தண்ணி இருக்கு ,

பூமிலயும் தண்ணி இருக்கு .

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது ,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .

உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்' கு

ஆனா ....

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு .

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது ..

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால் ...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ? இல்ல பிளேன்

ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,

Rewindலாம் பண்ண முடியாது .

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால் ,

ஜனவரி 1க்கும் ,

டிசம்பர் 31க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம் .

இதுதான் உலகம் .

இது இப்படி வரவேணும்:

டிசம்பர் 31க்கும்

டிசம்பர் 30க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால் ,

ஜனவரி 1க்கும் ,

டிசம்பர் 31க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம் .

இதுதான் உலகம் .

இப்படிக்கு,

சரியாக சிந்திப்போர் சங்கம்

(எமக்கும் வேறு கிளைகள் கிடையாது.

தொடர்பு: சசிச@சசிச.காம்)

இது இப்படி வரவேணும்:

டிசம்பர் 31க்கும்

டிசம்பர் 30க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால் ,

ஜனவரி 1க்கும் ,

டிசம்பர் 31க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம்

இதுதான் உலகம் .

இப்படிக்கு,

சரியாக சிந்திப்போர் சங்கம்

(எமக்கும் வேறு கிளைகள் கிடையாது.

தொடர்பு: சசிச@சசிச.காம்)

மாப்பு உங்க கணக்கு தப்பு <_<

(இதைசொல்லபயமாய் இருக்கு எங்கே நாளைக்கு என்னைபற்றி ராஜாவே சிறந்த யாழிணையநேயர் என்று எழுதாமல் விட்டுவிடுவீங்கலோ என்று :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி--உங்களுக்கு என்னிடம் பிடித்தது எது.

கணவண்--உனது வாய்(உதடுகள்).

மனைவி--என்னிடம் பிடிக்காதது எது.

கணவன்--அதே வாய்தான்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மகன் - அப்பா, நீங்கள், எகிப்து நாட்டுக்கு போயிருக்கிறீர்களா?

அப்பா - இல்லை, ஏன்?

மகன் - அப்ப, எங்கை மம்மியை பிடித்தனிங்கள்?

  • தொடங்கியவர்

டி வீ கடையில் ஒரு கடியர் - அண்ணை கலர் டி வீ இருக்கோ?

கடைகாரர் - ஓம்

கடியர் - அப்ப ஒரு பச்சை டி வீ தங்கோ?

கடைகாரர் ???????

  • தொடங்கியவர்

ஆடிய பாதம், ஏன் எப்பவும் 18 போரை படத்துக்கு கூட்டிக்கொண்டு போறவர்?

18 க்கு குறைஞ்சால், உள்ளுக்கை விடமாட்டங்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீதி தடையில் வாகனங்களுக்கு நுழைய வேண்டாம் (நோ என்ட்ரி ) என்று போடப்படிருந்தது

அந்த வழியால் வந்தவர் கேட்டார் காவலாளியிடம் : நான் போகலாமோ ?

ஏன் என்ன பிரச்சனை ? என் பெயர் மயில் வாகனம் ????????

வீதி தடையில் வாகனங்களுக்கு நுழைய வேண்டாம் (நோ என்ட்ரி ) என்று போடப்படிருந்தது

அந்த வழியால் வந்தவர் கேட்டார் காவலாளியிடம் : நான் போகலாமோ ?

ஏன் என்ன பிரச்சனை ? என் பெயர் மயில் வாகனம் ????????

நன்றியுடன் நிலாமதி அக்கா....! வாகனமே போகவேண்டாம் என்டதுக்கு அப்புறம் (மயில்) வாகனத்துக்கு அங்க என்ன வேலை... ? :( :( :D

Edited by ithayanila

  • கருத்துக்கள உறவுகள்

பௌலர் ஓடி வரும்போது கூடவே ஒருத்தர் ஓடி வர்ராறே யாரு அவர்?

பௌலருக்கு தொண்டை கட்டிடுச்சான், ஹவ் இஸ் தட் கேக்க ஒரு ஆள கூட வர்றச் சொல்லியிருக்காரு.

பௌலர் ஓடி வரும்போது கூடவே ஒருத்தர் ஓடி வர்ராறே யாரு அவர்?

பௌலருக்கு தொண்டை கட்டிடுச்சான், ஹவ் இஸ் தட் கேக்க ஒரு ஆள கூட வர்றச் சொல்லியிருக்காரு.

என்ன நுனாவிலான் யோக்கை பார்த்தாலே சிரிப்பு வருகுது....! :D அதுக்கு அப்புறம் எப்பிடி வாசிச்சு சிரிக்கிறது. தப்பாய் நினைக்க வேண்டாம் சத்தியமாய் ஒண்டுமே புரியல....! உங்கட தமிழ் எனக்கு புரிய வில்லையா அல்லது நான் அறியாத வார்த்தைப் பிரையோகமா எண்டுதான் குழப்பமா இருக்கு....! :( :(

Edited by ithayanila

  • தொடங்கியவர்

ஆடிய பாதம் ஒரு நாள் கடவுளுக்கு முட்டுக்காலில் நின்று நன்றி சொல்லிக்கிட்டு இருந்தார்.

ஒரு வழிப்போக்கர் கேட்டார், ஆடிய பாதம், ஆடிய பாதம் ஏன் இந்த நடு ரோட்டில் நின்று கடவுளுக்கு நன்றி சொல்லிகிறாரீர் என்று.

அதற்கு ஆடியபாதம் "என்னுடைய கழுதை துலைந்து விட்டது அதற்கு தான் கடவுளுக்கு நன்றி சொல்லிகிறேன்.

வழிப்போக்கர் - கழுதை துலைந்ததுக்கு ஏன் கடவளுக்கு நன்றி?

ஆடியபாதம் - கழுதை துலையேக்க நான் கழுதையில தான் இருந்தானன். நல்ல காலம் கடவுளுன்ர அருளால நான் தொலையெல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நுனாவிலான் யோக்கை பார்த்தாலே சிரிப்பு வருகுது....! :wub: அதுக்கு அப்புறம் எப்பிடி வாசிச்சு சிரிக்கிறது. தப்பாய் நினைக்க வேண்டாம் சத்தியமாய் ஒண்டுமே புரியல....! உங்கட தமிழ் எனக்கு புரிய வில்லையா அல்லது நான் அறியாத வார்த்தைப் பிரையோகமா எண்டுதான் குழப்பமா இருக்கு....! :wub: :wub:

கிறிக்கட் விளையாட்டில் பந்து போடும் ஒருவர் தான் ஓடி வந்து பந்து போடுவார். அனேகமாக பந்து போட்டதும் அம்பயரிடம்(how is that) என்று கேட்பதுண்டு. இந்த பகிடியில் பந்து போடுபவரோடு என்னுமொருவர் ஓடி வருகிறார்.ஏனெனில் பந்து போடுபவருக்கு தொண்டை கட்டி விட்டது. (how is that)கேட்க தான் பக்கத்தில் ஒருவர் ஓடி வருகிறார் என்பது பகிடி.

சிரிப்பு சின்னசாமி

ஹலோ இன்ஸ்பெக்டர் சார்'10'நம்பர் வீட்ல விபச்சாரம் நடக்குது உடனே வாங்க!சீ போனை வைய்யா.. நான் அந்த மாதிரி ஆள் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.