Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

Featured Replies

  • வடக்கில் முடங்கியது போக்குவரத்து!!
26113751_1712869148733740_25298998041611

வடக்கில் முடங்கியது போக்குவரத்து!!

 

வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தி­னர் இன்று திங்­கட்­கி­ழமை தொடக்­கம் கால­வ­ரை­ய­றை­யற்ற பணிப்­பு­றக்­க­ணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

தமது கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்ப­டா­து­வி­டின் போராட்­டம் தொட­ரும் என­வும் அறி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லர் அரு­ளா­னந்­தம் மேலும் தெரி­வித்­த­தா­வது;

வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் தனித்­து­வத்தை இல்­லா­தொ­ழிக்­கும் முத­ல­மைச்­ச­ரின் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபைக்கு எதி­ராக அவ­ரால் எடுக்­கப்­ப­டும் தன் னிச்­சை­யான நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டித்­தும் பாராம்­ப­ரி­யம் மிக்க வவு­னியா மத்­திய பேருந்து நிலை­யத்தை எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கும் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும், வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் பிர­தி­நி­தி­களை அவ­ம­தித்­த­மை­யைக் கண்­டித்­தும் மற்­றும் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துமே இந்­தப் போராட்­டத்தை நடத்­து­கின்­றோம்.

 
 

மக்­க­ளால் மக்­க­ளுக்­காக ஒன்­று­பட்­டுத் தெரி­வு­செய்­யப்­பட்ட முத­ல­மைச்­சர், மக்­க­ளின் நலன்­க­ளைக் கருத்­தில் எடுக்­காது, தன்­னால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை இம்­மி­யும் தள­ராது நிறை­வேற்­று­வேன் என வைராக்­கி­யத்­து­டன் கூறு­வதை நாம் கண்­டிக்­கின்­றோம்.

எமது கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டும்­வரை போராட்­டத்தை நாம் நிறுத்­த­மாட்­டோம். அத்­து­டன், எமக்கு ஆத­ர­வாக கிழக்கு மாகாண சாலை­க­ளின் பேருந்­து­க­ளும் வடக்­குக்­கான சேவை­களை இடை­நி­றுத்தி எமக்கு ஒத்­த­ழைப்பு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளன. எனேவே போராட்­டம் திட்­ட­மிட்­ட­படி தொட­ரும் -­என்­றார்.

http://newuthayan.com/story/59516.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வவுனியா பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டமையால் கறுப்பு கொடி கட்டி வர்த்தக நிலையங்களை பூட்டிய வர்த்தகர்கள்

 

 
 

வவுனியா பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டமையால் கறுப்பு கொடி கட்டி வர்த்தக நிலையங்களை பூட்டிய வர்த்தகர்கள்

கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேரூந்து நிலையத்தினை மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப் பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தகர்கள் கறுப்பு கொடியினை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வட மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாலை 12.00 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர். இ.தயாபரன் அவர்களினால் பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு பேரூந்துகள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தர்கள் வர்த்தக நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக தொங்க விட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக வர்த்தகர்களிடம் வினாவிய போது,

புதிய பேரூந்து நிலையத்திற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் உள்ளுர் சேவைகளை பழைய பேரூந்து நிலையத்திலிருந்தும் வெளியூர் சேவைகளை புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நடைமுறைப்படுத்தும் சமயத்தில் எமது வர்த்தகம் பாதிப்படையாது எனவும் அனைத்து பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செல்லும் சமயத்தில் எமது வியாபாரம் முற்றாக பாதிப்படையும் எனவும் நாங்கள் நிதி நிறுவனங்களில் பணத்தினை கடனாக பெற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை வர்த்தக நிலையங்களை திறக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.DSC_0116 (1)

DSC_0104 (4)

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியா-பழைய-பேரூந்து-நி/

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

 

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

வவுனியா மத்திய பேருந்து நிலைய விவகாரத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்த தன்னிச்சையான முடிவு வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு அநீதியிழைத்து விட்டதாகத் தெரிவித்து அந்தச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தால் இ.போ.ச பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று(01) காலையிலிருந்து முடங்கின.

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை காப்பாற்றும் வகையில் நீதியான தீர்வை வழங்கும் வரை இந்தப் போராட்டம் காலவரையறையின்றித் தொடரும் என வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியாவில் சர்ச்சைக்குரிய பழைய பேருந்து நிலையம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நள்ளிரவு முதல் மூடப்பட்டடது.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ. போ. ச பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று கூறப்பட்டமையினால் நள்ளிரவு 12 மணிமுதல் பழைய பேருந்து நிலையம் நகரசபை மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

முதலமைச்சருக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை -வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/strike-in-nothern-province-bus

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“இந்தக் கதிரையை வாங்கிக் கொடுத்த நாங்கள் கதைக்க சென்றால், கதைக்க முடியாது வெளியில் போ என்கின்றார்”

கோரிக்கைகளுக்கு உரிய பதில் இல்லையெனின் போராட்டம் தொடரும் – இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…

ctb1.jpg?resize=720%2C450
வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால், போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் புத்தாண்டு தினமான இன்று மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறு தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த உத்தரவைக் கண்டித்து, இன்று (01) முதல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வடமாகாண ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரச்சினையினை முதலமைச்சர் தீர்த்து வைத்திருக்க முடியும். புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வர தயார். ஆனால், எமக்கென தனித்துவமான பாதையினைத் தர வேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்.

எமது கோரிக்கைக்கும் செவிசாய்க்க வேண்டும். கனடாவில் இருந்து யாரும் வந்தால், கை கொடுத்துக் கதைக்கின்றார். இந்தக் கதிரையை வாங்கிக் கொடுத்த நாங்கள் கதைக்க சென்றால், கதைக்க முடியாது வெளியில் போ என்கின்றார்.

முதலமைச்சருக்கு எதிராக செயற்படுகின்றதாக புத்திஜீவிகள் சொல்லியிருக்கின்றார்கள். கடைசிவரை அவ்வாறு முதலமைச்சருக்கு எதிராக செயற்படவில்லை.

தவறுகளை சரி செய்ய வேண்டும். தவறுகளை சரி செய்திருந்தால் நியாயப்படுத்தல் வந்திருக்க முடியாது. எமது கோரிக்கைக்கு செவிமடுத்து சாதகமான பதிலை தர வேண்டும். கதைத்து முடிவு எடுக்க வேண்டும்.

முதலமைச்சரின் செயலால் ஒட்டுமொத்த பொது மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட போகின்றது.

மாணவர்கள் அல்லல்படப் போகின்றார்கள். எம்மைப் பிழையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். இலங்கை போக்குவரத்துச் சேவை மக்களுக்கென சிறந்த சேவையாற்றி வந்தோம். இது ஒரு சின்னப் பிரச்சினை.

முதலமைச்சர் நினைத்திருந்தால் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். முதலமைச்சர் மத்திய அரசாங்கத்துடன் கதைத்து ஒரு முடிவினை சொல்லியிருக்கலாம்.

தான்தோன்றித்தனமாக பஸ் நிலையத்தினைக் கட்டி விட்டு, சிறுபிள்ளைக்கு சொல்வது போன்று எமக்குச் சொல்வது முற்றிலும் தவறான விடயம். இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பும் கோருகிறோம் என கூறியுள்ளனர். அத்துடன், தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடில் தமது போராட்டம் தொடருமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/58852/

13 hours ago, நவீனன் said:

ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரச்சினையினை முதலமைச்சர் தீர்த்து வைத்திருக்க முடியும். புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வர தயார். ஆனால், எமக்கென தனித்துவமான பாதையினைத் தர வேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்.

இவர்கள் பொதுமக்களிடம் அடிவாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

  • தொடங்கியவர்

இ.போ.ச. ஊழியர்களின் போராட்டத்திற்கு பின்னணி யார் ?

 

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள்விக்கு பணிப் பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.

vavuniya-bus.jpg

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண முதலமைச்சரும் மாகாண போக்குவரத்து அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் உத்தரவிட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

 

இதன் பின்னணியில் முதலமைச்சருக்கு எதிரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக பகிஷ்கரிப்பை நடாத்திவரும் இரு தொழிற்சங்கங்களிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

இது குறித்து வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணன் புவி கூறுகையில்,

 

இ.போ.ச உழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஷ்வரனுக்கு எதிரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது உண்மையே.

 

முதலமைச்சர் சீ.வி.விக்கினேஷ்வரனுக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அவரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்புக்கு பின்னால் இருந்து நடத்துவதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது. அதற்கு இணைந்தால்போல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்பின் பின்னால் இருப்பது உண்மையே என அவர் தெரிவித்தார். 

 

இதே விடயம் தொடர்பாக இ.போ.சபையின் வடபிராந்திய சாலைகளின் இணைந்த  தொழிற் சங்க தலைவர் அ.அருளானந்தம் கூறுகையில், 

 

இ.போ.ச. ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. அவ்வாறான கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகின்றது.  முதலமைச்சர் சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறார்.

 

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது வடபிராந்தியத்தில் உள்ள 7 இ.போ.ச. சாலைகளும் முதலமைச்சருக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பு செய்திருந்தமையினை வடமாகாண முதலமைச்சரும் மக்களும் மறக்க கூடாது எமக்கு பின்னால் அரசியல்வாதிகள் இல்லை.

 

இந்த பணி புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் இ.போ.ச. ஊழியர்களுக்குள் பல கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் இடம்பெற்றிருக்கின்றது. எனவே ஒரு கட்சி சார்ந்த தீர்மானங்கள் எதனையும் எங்களால் எடுக்க இயலாது. எனவே எமக்கு பின்னால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படும் கருத்து பிழையானதும் பொய்யானதும் என்றார்.

http://www.virakesari.lk/article/28832

 

 

2 ஆவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

 

வட மாகாண முதலமைச்சரினால் வவுனியா பழைய பஸ் நிலையம் நேற்று அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

vaaaaa.jpg

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ளூர்  பேரூந்து சேவைகளையாவது மேற்கொள்ள வேண்டுமென மத்திய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்துவருகின்றனர்.

 

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள் அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

 

வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச. பேரூந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேரூந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும் பயணிகளின் நலன் கருதி பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து புதிய பேரூந்து நிலையம் வரை இலவச பேரூந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

 

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண முதலமைச்சரும் மாகாண போக்குவரத்து அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் உத்தரவிட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

புதிய பேரூந்து நிலையத்தில் பேய் ஏதாவது நிக்கிறதா ? புதியதால் மக்களுக்கு என்ன பாதிப்பு உங்கடை கருவறுப்பு வேலைகளை முன்னமே உணர்ந்துதான் முன்னமே அந்தாள் சொல்லிட்டுது தான் ஓய்வெடுக்க போறன் எண்டு போகும்போது பெரிய ஆப்பு கட்டாயம் இருக்கும் காத்திருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச. பேரூந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேரூந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும் பயணிகளின் நலன் கருதி பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து புதிய பேரூந்து நிலையம் வரை இலவச பேரூந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தப் பருவச் சீட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு,  தனியார் பேருந்து சங்கம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி சீரான நேர அட்டவணையில் நடைமுறைப்படுத்தினால் எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்..  பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுபவர்களும், ஊக்குவிப்பவர்களும் தங்கட வசதிப்படி தேர்தல் முடிய பணியை ஆறுதலாய் தொடரட்டும். இது முதலமைச்சருக்கு வைக்கிற ஆப்பு. சிங்களவன் சொன்னால் தலை கீழாயும் நிப்பினம் உருப்படாத கூட்டம்

  • தொடங்கியவர்

 

DSC_0107-1-1-600x430.jpg

போராட்டத்தில் குதிக்க வவுனியா வர்த்தக சங்கம் முடிவு!!

நாளை கடையடைப்பு என அறிவிப்பு!

 
 

உள்ளூர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி நாளை கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சங்கத் தலைவர் ஆர். கிரிதரன் இவ்வாறு தெரிவித்தாா்.

நேற்றிலிருந்து வவுனியா மத்திய பேருந்து நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டது.

இதையடுத்து பேருந்து நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறு அவா் மேலும் தெரிவித்தாா்.

http://newuthayan.com/story/59818.html

  • தொடங்கியவர்

முதலமைச்சரின் உருவப் பொம்மையை ஊழியர்கள் எரித்தால் நாம் பொறுப்பல்ல!

 

முதலமைச்சரின் உருவப் பொம்மையை ஊழியர்கள் எரித்தால் நாம் பொறுப்பல்ல!

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிப்பார்கள் எனவும் அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம் பொறுப்புக் கூறாது எனவும் அதன் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர்,

"வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிணைத்ததே எமது சங்கம். நாம் பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம். எமது சங்கத்தை அங்கீகரித்தே எம்மால் முன்னர் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சு தீர்வுகளை வழங்கியது. எனவே பதிவு செய்யப்பட்டதா? என்று ஆராய்வது பொருத்தமற்றது. எமது கோரிக்கைகளுக்கான தீர்வைக் காண்பதே அவசியம்" என்றார் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிரகாசம்.

 
 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Chief-Minister-s-image

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்காய் போராடிய ஒரு பிரதேசம், இப்போ இபோச பஸ் சேவைக்காக போராடுகிறார்கள்.

எப்படியெல்லாம் எங்கள் வாழ்வு மாறியிருக்கு, மாற்றப்பட்டிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற் சங்க தலைவர்களுக்கு அடுத்த முறை தேர்தலில் கூட்டணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

பேசி உடன் தீருங்கள்!

 
 
 

வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தின் பயன்­பாடு தொடர்­பான மோதல் மீண்­டும் பெரு­வெ­டிப்­பாக மாறி­யி­ருக்­கி­றது. அரச பேருந்­து­கள் தமது சேவையை நிறுத்­திப் போராட்­டத்­தில் குதித்­துள்­ளன. இந்த இழு­பறி கடந்த ஒரு வரு­ட­கா­ல­மா­கவே தொடர்ந்து வரு­கின்­றது. அதனை ஆறப்­போட்டு ஆறப்­போட்டு பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­லாம் என்று முத­ல­மைச்­ச­ரும் முயன்று முயன்று இய­லா­மல்­போக, அதி­ர­டி­யா­கச் சில முடி­வு­களை அறி­வித்­தார். அது இப்­போது பூதா­க­ர­மாகி நிற்­கின்­றது.

வவு­னியா மத்­திய பேருந்து நிலை­யம் நக­ரின் மத்­தி­யில் அமைந்­துள்­ளது. சிறிய நெருக்­க­டி­யான வவு­னியா நக­ரி­னுள் பேருந்து நிலை­ய­மும் இருப்­ப­தால் மேலும் நெருக்­க­டி­யும் போதா­மை­க­ளும் இருக்­கின்­றன. அரச பேருந்து நிலை­யம் நக­ரின் மத்­தி­யில் இருப்­ப­தால் தனி­யார் பேருந்­து­க­ளும் நக­ரில் உள்ள குறுக்கு வீதி­க­ளில் நின்றே சேவை­க­ளில் ஈடு­ப­டு­கின்­றன.

இது நக­ரி­னுள் போக்­கு­வ­ரத்து நெரி­சலை இன்­னும் அதி­க­மாக்­கு­கின்­றது. வவு­னியா நகர விரி­வாக்­கத் திட்­டங்­க­ளின் கீழ் பேருந்து நிலை­யம் நக­ரின் மையத்­தில் இருந்து அகற்­றப்­ப­டு­வ­தன் அவ­சி­யம் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில் புதிய பேருந்து நிலை­யம் 195 மில்­லி­யன் ரூபா செல­வில் தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து சுமார் முக்­கால் கிலோ மீற்­றர் தூரத்­தில் சாந்­த­சோலை என்ற இடத்­தில் அமைக்­கப்­பட்­டது.

2017ஆம் ஆண்டு தை மாதத்­தில் அது திறந்து வைக்­கப்­பட்­டது. திறந்த அன்று தவிர ஒரே­யொரு நாள்­கூட கடந்த வரு­டத்­தில் அந்த நிலை­யத்­தில் இருந்து சேவை­கள் இடம்­பெற்­ற­தில்லை.

 

இந்­தப் பிரச்­சி­னை­யின் பின்­ன­ணி­யில் கட்சி அர­சி­யல் பல­மா­கக் காலூன்றி நிற்­கின்­றது என்­கிற குற்­றச்­சாட்­டும் உண்டு. தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் ஒரு தரப்­பி­லும் அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் ஒரு தரப்­பி­லு­மாக இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க வவு­னியா நகர வர்த்­த­கர்­க­ளும் அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் பக்­கமே நிற்­கின்­ற­னர். பேருந்து நிலை­யத்தை நக­ரின் மத்­தி­யில் இருந்து அகற்­றி­விட்­டால் தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டு­வி­டும் என்­பது அவர்­க­ளின் கரி­சனை.

வவு­னியா நக­ருக்­குள் காணப்­ப­டும் இட­நெ­ருக்­க­டியை ஒப்­பி­டும்­போது வர்த்­த­கர்­க­ளின் இந்­தக் கோரிக்கை உண்­மை­யில் நியா­ய­மா­னது அல்ல. நக­ரின் எதிர்­கால வளர்ச்சி மற்­றும் நவீ­ன­ம­ய­மாக்­க­லின் கீழ் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் விரி­ வா­கும்­போது பேருந்து நிலை­யம் அங்கு அமைந்­தி­ருப்­பது வர்த்­த­கர்­க­ளுக்­குத்­தான் தலை­யி­டி­யாக அமை­யும். எனவே பேருந்து நிலை­யத்தை அங்கு தக்க வைப்­ப­தற்கு வர்த்­த­கர்­கள் எடுக்­கும் முயற்சி ஏற்­பு­டை­ய­தல்ல. தமது வர்த்­த­கம் பாதிக்­கப்­ப­டாத வகை­யில் பேருந்து சேவையை நக­ருக்­குள் ஈர்ப்­பது குறித்த மாற்று வழி­க­ளைத்­தான் அவர்­கள் உண்­மை­யில் நாட­வேண்­டும். அது­தான் அவர்­க­ளுக்­கும் நக­ருக்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

புதிய பேருந்து நிலை­யத்­தில் அரச பேருந்­து­க­ளும் தனி­யார் பேருந்­து­க­ளும் தனித் தனி­யாக அன்றி ஒரே இடத்­தி­லி­ருந்து சேவை­யில் ஈடு­ப­டு­வதே தற்­போ­தைய முரண்­பா­டு­க­ளுக்­குக் கார­ணம் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. நிலை­யத்தை அரச மற்­றும் தனி­யார் பகு­தி­க­ளா­கப் பிரித்­து­விட்­டால் இந்­தப் பிரச்­சினை சுமு­க­மா­கத் தீர்க்­கப்­பட்­டு­வி­டும் என்று அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்த விட­யத்­தில் தற்­கா­லி­க­மான ஓர் இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்கு இது ஓர் சரி­யான உபா­ய­மா­க­வும் இருக்­கக்­கூ­டும் என்­ப­தால் அத­னைப் பரி­சீ­லித்­துப் பார்ப்­ப­தி­லும் தவ­றில்லை. அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­ன­ரி­டம் 35 பேருந்­து­களே உள்ள நிலை­யில் தனி­யா­ரி­டம் 150 பேருந்­து­கள் உள்­ளன. இத­னால் தனி­யார் சேவை­க­ளின் ஆதிக்­கத்­தில் தமது தனித்­து­வத்தை இழந்­து­வி­டப்­போ­கின்­றோம் என்­கிற அரச சேவை­யி­ன­ரின் ஆதங்­க­மும் கவ­னத்­தில் எடுக்­க­ப்ப­ட­வேண்­டிய ஒன்றே!

சம்­பந்­தப்­பட்ட தலை­வர்­க­ளும் பேருந்து சேவை பிர­தி­நி­தி­க­ளும் இணைந்து பேசி இந்­தப் பிரச்­சி­னையை முடி­வுக்­குக் கொண்டு வர­மு­டி­யும். தலை­வர்­கள் இருந்த இடத்­தில் இருந்து முடி­வு­களை எடுக்­கா­ம­லும் தொழிற் சங்­கப் பிர­தி­நி­தி­கள் விடாப்­பி­டி­யாக நிற்­கா­ம­லும் இருப்­ப­தன் மூலமே அத­னைச் சாத்­தி­ய­மாக்க முடி­யும்.

முத­லை­யும் மூர்க்­க­னும் கொண்­டது விடா என்­பது போல நிற்­கா­மல் பொது­மக்­க­ளின் நலன் கருதி இந்­தப் பிரச்­சி­னையை விரை­வில் தீர்க்க வேண்­டி­யது இந்­தத் தரப்­பி­னர் அனை­வ­ர­தும் கடமை.

https://newuthayan.com/story/59825.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

முதலமைச்சரின் உருவப் பொம்மையை ஊழியர்கள் எரித்தால் நாம் பொறுப்பல்ல!

 

முதலமைச்சரின் உருவப் பொம்மையை ஊழியர்கள் எரித்தால் நாம் பொறுப்பல்ல!

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிப்பார்கள் எனவும் அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம் பொறுப்புக் கூறாது எனவும் அதன் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர்,

"வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிணைத்ததே எமது சங்கம். நாம் பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம். எமது சங்கத்தை அங்கீகரித்தே எம்மால் முன்னர் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சு தீர்வுகளை வழங்கியது. எனவே பதிவு செய்யப்பட்டதா? என்று ஆராய்வது பொருத்தமற்றது. எமது கோரிக்கைகளுக்கான தீர்வைக் காண்பதே அவசியம்" என்றார் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிரகாசம்.

 
 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Chief-Minister-s-image

வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்கவேண்டும் எண்ணத்தை வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கொண்டிருப்பார்களோ..! இல்லையோ..! தெரியவில்லை...!! ஆனாலும் அந்த எண்ணத்தை மிக நுட்பமாக தொழிற் சங்க செயலாளர் அருட்பிரகாசம் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. :shocked:

  • தொடங்கியவர்

திடீரென மூடிய வவுனியா பேருந்து நிலைய கடைகளின் கதவுகள்: காரணம்?

 

திடீரென மூடிய வவுனியா பேருந்து நிலைய கடைகளின் கதவுகள்: காரணம்?

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவாக வவுனியா பேருந்து நிலையத்துடன் இணைப்பிலுள்ள கடைத்தொகுதி வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தெரிவித்துள்ளனர். பேருந்து சேவை மீள ஆரம்பிக்கும் போதே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

திடீரென மூடிய வவுனியா பேருந்து நிலைய கடைகளின் கதவுகள்: காரணம்?

இதேவேளை குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டமானது, வடக்கு முதலமைச்சரால் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு எதிராக அவரால் எடுக்கப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாரம்பரியம்மிக்க வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அவமதித்தமையைக் கண்டித்தும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே முன்னெடுக்கப்படுவதாக சம்மந்தப்பட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திடீரென மூடிய வவுனியா பேருந்து நிலைய கடைகளின் கதவுகள்: காரணம்?

திடீரென மூடிய வவுனியா பேருந்து நிலைய கடைகளின் கதவுகள்: காரணம்?

https://news.ibctamil.com/ta/internal-affairs/Vavuniya-Bus-Stand-Shops

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Paanch said:

வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்கவேண்டும் எண்ணத்தை வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கொண்டிருப்பார்களோ..! இல்லையோ..! தெரியவில்லை...!! ஆனாலும் அந்த எண்ணத்தை மிக நுட்பமாக தொழிற் சங்க செயலாளர் அருட்பிரகாசம் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. :shocked:

என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை தொழிற் சங்கத்தினரே சொல்லிக் கொடுக்கிறார்கள்.

வீதி அபிவிருத்தி, குளங்களின் அபிவிருத்தி, மின்சார விநியோக விரிவாக்கம் போன்ற வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் தடை போடுவது தமிழர் சிலரின் (பலரின்?) பிறவிக் குணமாக உள்ளது.

மின்சார விநியோகத்திற்காக கம்பங்களை நடும் போது அதை எங்கள் வீட்டு வேலிப் பக்கமாக நடாமல் எதிர் வீட்டு வேலிப் பக்கமாக நட வேண்டும் என்றும், வீதி அபிவிருத்திக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது எங்கள் வீட்டுப் பக்கமாக சுவீகரிக்காமல் எதிர் வீட்டுப் பக்கமாக சுவீகரிக்க வேண்டும் என்றும், வீதியோர கால்வாய்களை அமைக்கும் போது எங்கள் வீட்டுப் பக்கமாக அமைக்காமல் எதிர் வீட்டுப் பக்கமாக அமைக்க வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபடும் குறுகிய மனப்பான்மை தமிழர் சிலரின் (பலரின்?)பிறவிக் குணமாக உள்ளது.

இப்போது வடக்கு போக்குவரத்துச் சபை சங்கம் தங்களுக்கு சீதனமாக தரப்பட்ட பாரம்பரிய இடம் என போராடுகின்றனர்.

ஒரு வருடமாக மூடப்பட்டிருக்கும் விசாலமான, வசதிகள் நிறைந்த புதிய பேரூந்து நிலையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரையும் பணி நீக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள், பழைய பேருந்து நிலையம் இயங்குவதால் ஏற்படும் தீமைகள், புதிய பேருந்து அமைக்க ஏற்பட்ட  காரணி, செலவுகள் என்பவற்றை விளக்கி சேவையை தொடரும்படி சம்பந்தப்பட்டவர்களைக் கேட்கலாம்.ஒத்துழைக்காதவிடத்து,   முடியாதவிடத்து  ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் சேவையை     ஒப்படைப்பதே  சிறந்த வழி. முதல்வரை ஒரு கையாலாகாதவராக்க பல பேர் சேர்ந்து முயற்சிப்பதாகவும், அவரை தானாகவே பதவியிலிருந்து  கழற்றி விட்டால்  தாங்கள் தங்கள் பாதையில் இடையூறு இல்லாமல் பயணிக்கலாம் என சிலர் கருதுகின்றனர். முதல்வருடன் சேர்ந்து இந்தப்பிரச்சனையை தீர்க்க எந்தஒரு   தமிழ் அரசியல்வாதியும் முன்வரவில்லை. இப்படித்தான் அவர் எடுக்கும் முயற்சிகளை விமர்சிப்பதும், பெலவீனப்படுத்துவதும்,மலினப்படுத்துவதிலும் தமது நேரத்தை செலவழிக்கிறார்கள். முதல்வருடன் இணைந்து பிரச்சனைகளை கையாளும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஆடு, மாடுகள் தங்க விடவா இவ்வளவு தொகையை செலவழித்து பேருந்து நிலயத்தைக்கட்டியது? இலகுவாக சிங்களவன் எமது அபிவிருத்திகளை விமர்சிக்கவும், எள்ளி நகையாடவும், பண ஒதுக்கீடுகளை தவிர்க்கவும் வழிவகுக்கும். இதுவே ஒரு சிங்களவன் கட்டியிருந்தால் அதை திறப்பதற்கு எங்கட தமிழ்த் தலைமைகள் எத்தனைபேர் முண்டியடித்துக்கொண்டு போயிருப்பினம். பகிஷ்கரிக்கும் எத்தனைபேர் பொட்டு வைச்சு, மாலை போட்டிருப்பினம். இதுதான் நம்ம தலைமைகளும், மக்களும். சேவையை பார்க்காது செய்தவரை பார்த்து தங்கள் (எல்லோருடைய) சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2018 at 5:16 PM, நவீனன் said:

வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் தனித்­து­வத்தை இல்­லா­தொ­ழிக்­கும் முத­ல­மைச்­ச­ரின் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபைக்கு எதி­ராக அவ­ரால் எடுக்­கப்­ப­டும் தன் னிச்­சை­யான நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டித்­தும் பாராம்­ப­ரி­யம் மிக்க வவு­னியா மத்­திய பேருந்து நிலை­யத்தை எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கும் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும், வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் பிர­தி­நி­தி­களை அவ­ம­தித்­த­மை­யைக் கண்­டித்­தும் மற்­றும் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துமே இந்­தப் போராட்­டத்தை நடத்­து­கின்­றோம்.

 தமிழரின் தனித்துவம், பாரம்பரியம் எல்லாம் நாளுக்குநாள் எங்கள் தலைமைகளால் சிங்களவனிடம் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.  இதில் இவர் எந்த தனித்துவம், பாரம்பரியம் பற்றிக்கதைக்கிறார்? மக்களின் நலன் பற்றி பொதுநோக்கில்லால் தன் வறட்டுக் கௌரவம் பற்றிக் கதைக்கிறார். நிஞாயமான  வர்த்தக நிலையங்கள் எங்கு இருந்தாலும் மக்கள் தேடி வரவே செய்வார்கள். புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் இல்லாதபோது வேறு எங்கு மக்கள் போவார்கள்? கொள்ளை இலாபம் அடிக்கும் வர்த்தகர் சங்கம் இல்லாத பொய்க்குற்ற சாட்டை வைத்துக்கொண்டு முதல்வருக்கு எதிராக தொழிற்படுகிறது. ஆகவே புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் புதிய கடைத் தொகுதிகளை உருவாக்கி பயணிகளுக்கும் தொழில் அற்றவர்களுக்கும் உதவலாம். இந்த தொழிற்சங்க  நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு விரும்பியோ, விரும்பாமலோ சில ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். புதிய விண்ணப்பங்களை கோரி விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை பணியில் அமர்த்தலாம். தன் சுயநலத்திற்காக ஒரு அத்தியாவசிய பணியை முடக்கி வைத்திருக்கும் தொழிற்சங்கத் தலைவரைக் கைது  செய்து  அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கலாம். முதல்வரை அடிபணிய வைக்க வேணுமென்கின்ற நோக்கம் மட்டுமே இதற்குப் பின்னால் நிற்கிறது. அவர் பொறுமையை கடைபிடிப்பதால் அவரை ஒரு தோற்றுப் போனவராக நினைத்து செயற்படுகிறார்கள். இவர்களுக்கு இவர்கள் வழியில் நடவடிக்கை எடுத்தால்தான் விளங்கும். மக்கள் யாவரும் சிந்தித்து முதல்வரோடு சேர்ந்து பிரச்சனைகளை தீர்க்கவும், பொருத்தமான அபிவிருத்திகளை ஏற்படுத்தவும் கூடிய தலைவர்களை தெரிந்தெடுக்க வேண்டும். பிரச்சனைகளை கொம்பு சீவி விடுபவர்களை அல்ல 

  • தொடங்கியவர்
  • இ.போ.ச.பிரச்­சி­னையை ஆராய – கொழும்­பி­லி­ருந்து குழு
Capture-44-707x430.png

இ.போ.ச.பிரச்­சி­னையை ஆராய – கொழும்­பி­லி­ருந்து குழு

இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை ஊழி­யர்­க­ளின் போராட்­டம் தொடர்­பில் ஆராய சபை­யின் கொழும்­பி­லுள்ள தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து குழு ஒன்று வடக்­குக்கு இன்று வரு­கி­றது.

அந்­தக் குழு வவு­னி­யா­வில் புதி­தாக அமைக்­கப்­பட்டு சிக்­க­லில் உள்ள பேருந்து நிலை­யத்­தைப் பார்­வை­யி­ட­வுள்­ளது. பின்­னர் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரை­யும் சந்­தித்­துப் பேசத் திட்­ட­மிட்­டுள்­ளது என்று சபை­யின் ஒன்­றி­ணைந்த சாலை­க­ளின் தொழிற்­சங்­கச் செய­லா­ளர் அ.அருள்­பி­ர­காஸ் தெரி­வித்­தார்.

‘‘குழு­வி­னர் வந்து பார்­வை­யிட்டு சந்­திப்பை நடத்தி பெரும்­பா­லும் இன்று மதி­யத்­துக்கு முன்­னர் சிறந்­த­தொரு முடிவு வெளி­வ­ரும்’’ என்று எதிர்­பார்ப்­ப­தா­க­வும் மதி­யத்­துக்கு பின்­னர் தாம் பணி­யில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/60052.html

  • தொடங்கியவர்
  •  
  • வவு­னியா வர்த்­த­கர்­கள் இன்றும் கடை­ய­டைப்பு!
Capture-40-750x413.png

வவு­னியா வர்த்­த­கர்­கள் இன்றும் கடை­ய­டைப்பு!

வவு­னியா மாவட்­டம் முழு­வதும் இன்று கடை அடைப்­புக்கு அழைப்­பு­வி­டுக்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா வர்த்தக சங்­கத்­தின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க மாவட்­டத்­தில் உள்ள அனைத்­துக் கடை­க­ளை­யும் மூடி வர்த்த­கர்­கள் அனை­வ­ரும் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வர் என்று வர்த்தக சங் கத்­தின் தற்­கா­லி­கத் தலை­வர் ஆர். கிரி­த­ரன் ‘உத­யன்’ பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வவு­னியா பழைய பேருந்து நிலை­யத்­தில் இருந்து இது­வரை கால­மும் இடம்­பெற்று வந்த அனைத்­துப் பேருந்து சேவை­க­ளும் புதிய பேருந்து நிலை­யத்­துக்கு மாற்­றப்­ப­டு­வ­தைக் கண்­டித்தே இந்­தப் போராட்­டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

பழைய பேருந்து நிலை­யத்­தில் இருந்து மாவட்­டத்­துக்­கான உள்­ளூர்­சே­வை­கள் இடம்­பெ­ற­வேண்­டும் என்­பதே எமது கோரிக்கை. அனைத்­துச் சேவை­க­ளும் புதிய பேருந்து நிலை­யத்­துக்கு மாற்­றப்­ப­டு­மா­னால் நகரை அண்டி கடை­களை அமைத்­துள்ள வர்த்­த­கர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­வர். கடை­க­ளில் பணி­பு­ரி­யும் இளை­யோ­ரின் வேலை­வாய்ப்பு அற்­றுப்­போ­கும். எனவே அனை­வ­ரது நல­னி­லும் அக்­கறை கொண்டே நாம் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளோம்.

எமது கோரிக்கை தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் சென்று வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரைச் சந்­தித்து எமது நிலைப்­பாட்டை எடுத்­தி­யம்ப முயன்­றோம். நேற்­று­முன்­தி­ன­மும் நேற்­றும் அதற்­குக் கடும் முயற்­சி­கள் எடுத்­தோம். ஆனால் முத­ல­மைச்­சர் எம்­மைச் சந்­திக்­க­வில்லை. அவ­ரால் சந்­திப்­புக்கு நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்­துக் கூடிப் பேசி இன்று கடை­களை மூடி போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வது என்று தீர்­மா­னித்­தோம். போராட்­டத்­துக்கு ஆத­ரவு தரு­மாறு அனைத்து வர்த்­த­கர்­க­ளி­ட­மும் கோரிக்கை விடுத்­துள்­ளோம்-­ என்­றார்.

 

இதே­வேளை வவு­னியா நக­ரின் மத்­தி­யில் அமைக்­கப்­பட்டு இயங்கி வந்த பழைய பேருந்து நிலை­யம் மூடப்­பட்­ட­தால் அதைச் சூழ­வுள்ள வர்த்­த­கர்­க­ளின் உரி­மை­கள் மீறப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்து வர்­த­கர்­க­ளால் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வி­லும் நேற்று ஒரு முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

வர்த்­தக சங்­கத்­தின் தற்­கா­லி­கத் தலை­வ­ரின் ஒப்­பத்­து­டன் வவு­னியா வர்த்­தக சங்­கத்­தால் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் வன்னி அலு­வ­ல­கத்­தில் இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இதன் பிர­தி­கள் வவு­னியா நக­ர­ச­பைச் செய­லா­ளர், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஆகி­யோ­ருக்­கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

https://newuthayan.com/story/60020.html

  • தொடங்கியவர்
  • வவுனியா பேருந்து நிலையத்தில் கிரிகெட் விளையாடும் இளைஞா்கள்
  • DSC_0232.jpg
 

வவுனியா பேருந்து நிலையத்தில் கிரிகெட் விளையாடும் இளைஞா்கள்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பை அடுத்து வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேருந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருவதைக்காணக்கூடியதாக இருந்தது.

வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

DSC_0225.jpg

http://newuthayan.com/story/60123.html

Edited by நவீனன்

22 hours ago, நவீனன் said:

அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிப்பார்கள் எனவும் அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம் பொறுப்புக் கூறாது எனவும் அதன் செயலாளர் அ.அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தான்தோன்றித்தனமாக இயங்கும் வாள் வெட்டுக் கும்பல்கள் செயலாளர் அருட்பிரகாசத்தை வெட்டினாலோ, கொலை செய்தாலோ மக்களோ வேறு யாருமோ பொறுப்புக் கூறமுடியாது! 

 அந்த வாள் வெட்டுக் கும்பல்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும்.

அதை போலத் தான் இது என்கிறார் அருட்பிரகாசம்.

  • தொடங்கியவர்

வடபிராந்திய போக்குவரத்து சபையின் போராட்டம் முடிவு:

northern-ctbc.jpg?resize=800%2C500

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்குமாறு வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உத்தரவிட்டு இருந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையின் விசேட குழுவினருக்கும் வடமாகாணசபை முதலமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாத்தையின் போது வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள்
ஏற்கனவே காணப்பட்ட விகிதாசார அடிப்படையில் சேவையில் ஈடுபட இணங்கியுள்ளதாகவும் தூர இடங்களிலிருந்து பிரயாணங்களை மேற்கொள்ளும் பேருந்துகள், வவுனியா பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மாலை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/59214/

  • தொடங்கியவர்
  • மீண்டும் குழப்பம்!- இ.போ.ச. பணிப்புறக்கணிப்பு தொடருமாம்!!
26195944_1715261248494530_24646223498348

மீண்டும் குழப்பம்!- இ.போ.ச. பணிப்புறக்கணிப்பு தொடருமாம்!!

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால்!

 

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளையும் தொடரும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

“வடக்கு மாகாண முதலமைச்சருடன் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளோம். போராட்டத்தை விரிவுபடுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

வட பிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 3 நாள்களாக முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் இன்று பிற்பகலுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவுக்கப்பட்டது. இ.போ.சவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முதலமைச்சரிடன் நடத்திய பேச்சுககளின் பின்னரே அவ்வாறு அறிவிக்கப்பட்டது.

எனினும் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

http://newuthayan.com/story/60303.html

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த வியாதி வேறு தொழிற் சங்கங்களுக்கும் பரவமுன் நடவடிக்கை எடுக்கப்பட்டு குழப்பவாதிகள் தனிமைப்படுத்தப்படவேண்டும். அல்லது இவர்கள் ஆதரவு வேண்டி வேறு தொழிற்சங்கங்களுக்கு வரும்போது தக்க பதிலடி கொடுத்து அனுப்ப வேண்டும். அபிவிருத்தி செய்யப்படவில்லை ஒதுக்கப்படும் நிதி திரும்ப செல்கிறது என்று குற்றம் சாட்டுவோர் செய்யும் அபிவிருத்திகளை அனுபவிக்கத் தெரியாமல் சதிராடுதுகள். மக்கள் தகுந்த பாடம் புகட்ட்ட வேணும். இ.போ. ச  வை மக்கள்   புறக்கணிக்க வேண்டும். தனியார் பேருந்துச் சபை மாணவர்களுக்கு பருவகால அனுமதியை சீட்டை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செய்ய வேண்டும். சீராக சேவை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்புடன் மக்களுடன் உறவுகளை பேணவேண்டும். இது நடைபெறுமாயின்  நியாயமற்ற கோரிக்கைகள் ஒதுக்கப் பட்டு காற்றோடு அடித்துச் செல்லப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.