Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

Featured Replies

டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

douglas.jpg?resize=300%2C223

கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா   நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எமது மக்களது காணி, நிலங்களில் பல படையினரிடமிருந்து இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், எமது மக்களுக்குச் சொந்தமான மேலும் காணிகளை படையினரின் பல்வேறு தேவைகளுக்கு என சுவீகரிப்பது நியாயமற்ற செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா மேற்படி காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் இக் காணி அளவீட்டை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/63115/

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிபோட்டு செய்யுறாங்களா அல்லது செய்து போட்டு சொல்றாங்களா ஒரே குழப்பம் மை லார்ட் ..

எப்படியும் அடுத்த கோதாவில் ஆள்வந்து விடும் டமில் அரசுக்கு போட்டியா .

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசுக்கு இப்பவும் அரசியல் Power இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

டக்ளசுக்கு இப்பவும் அரசியல் Power இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் உள்ளது.

2015 பாராளுமன்ற
தேர்தலில் 10 வீதம்
வாக்கு பெற்ற
கட்சி ஈபிடிபி
என்பதை மறக்க வேண்டாம்

ஒன்றுமே செய்யாத
வடக்கு மாகாண சபையை
விட
டக்கிளஸ் செய்தவை அதிகம்
என்று சனம் அடுத்த
தேர்தலிலும்
வாக்கு போடும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வைரவன் said:

2015 பாராளுமன்ற
தேர்தலில் 10 வீதம்
வாக்கு பெற்ற
கட்சி ஈபிடிபி
என்பதை மறக்க வேண்டாம்

ஒன்றுமே செய்யாத
வடக்கு மாகாண சபையை
விட
டக்கிளஸ் செய்தவை அதிகம்
என்று சனம் அடுத்த
தேர்தலிலும்
வாக்கு போடும்

அமைச்சராக இருந்து மண் அள்ளும் அளவுக்கு power இருக்கவில்லை என்றேன்.

வடக்கு மாகாண சபையை விட டக்ளஸ் அதிகம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. ஆதாரமற்ற தகவல்.

தடுத்து நிறுத்தப்பட்டது நல்ல விடயம்!

தேர்தலில் கொஞ்சமாவது வாக்குகளைப் பெற இதைவிட வேறுவழியில்லை டக்ளசுக்கு!

முன்னர் போல டக்ளஸ் கும்பல் வாக்காளர் அட்டைகளை பறித்து மொத்தமாக போடும் கள்ள வாக்குகளுக்கு இப்ப சந்தர்ப்பம் குறைவு.

தமிழரசுக் கட்சியால் இதைக் கூட செய்ய முடியாது என்பது ஒன்றும் இரகசியம் இல்லை!

அவர்கள் ரணில்-மைத்திரி அரசிடம் வாங்கிய இலஞ்சப் பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்து தந்திர நாடகம். அவர்கள் அளப்பார்களாம், இவர் தடுப்பாராம். அவர்கள் நிறுத்துவார்களாம். நல்ல நாடகம். நம்புறோம். அதோட உங்கட பவரைப் பாவிச்சு அரசியல் கைதிகளை விடுவிச்சு, அபகரிக்கப்பட்ட ட் காணிகளையும் மீட்டுத் தாருங்கோ ஐயா.  தானும் இருக்கிறேன், தேர்தலில் நிக்கிறேன் என்று கட்டியம் சொல்லுறார்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

On 1/25/2018 at 10:51 AM, nunavilan said:

டக்ளசுக்கு இப்பவும் அரசியல் Power இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் உள்ளது.

இப்ப நம்பி

இருப்பீர்கள்

என நினைக்கின்றேன்
நுணா

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வைரவன் said:

 

இப்ப நம்பி

இருப்பீர்கள்

என நினைக்கின்றேன்
நுணா

தீவில் கடந்த தேர்த்தலில் கூட்டமைப்பு உறுப்பினர்களை அடித்து விரட்டியவர்கள் என நினைக்கிறேன். அராஜகம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அது தானே இப்போ அரசியல் trend.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.