Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஐயா நல்லவரெண்டு சொன்னால் சனம் நம்புதில்லை. :grin:
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

சாட்சிக்கு படம் கூட போட்டுக்காட்டீனம்.:27_sunglasses:

Edited by குமாரசாமி

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக பிரிகேடியர் விவகாரம்!! சுமந்திரன் கடுமையான நிலைப்பாடு

வெளிவிவகார அமைச்சால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்ணான்டோவை மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ள அனுமதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவை பதவியில் தொடர அனுமதித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவானது சரியானது எனக் குறிப்பிடும் கூட்டமைப்பின் பேச்சாளர் பணி இடைநிறுத்தத்தின் பின்னரே விசாரணை இடம்பெற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/srilanka/01/173523?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலுள்ள பிரிகேடியர் விடயத்தில் மைத்திரியின் செயற்பாட்டால் பலர் பேரதிர்ச்சியில்!

Report us Dias 6 hours ago

இலங்கை சுதந்திரத்தினத்தின் போது லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்திருந்தார்.

இன் நிலையில் கொடூர அச்சுறுத்தல் விடுத்த லண்டனிலுள்ள இலங்கைத்தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை வெளிவிவகார அமைச்சு பணி நீக்கம் செய்திருந்தது, இன் நிலையில் மீண்டும் பணியாற்ற அனுமதித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு, பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதென மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்க லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியை மீளப் பொறுப்பேற்பதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று உறுதிப் படுத்தினார்.

படைவீரர்கள் என்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படக் கடமைப்பட்டுள்ளவர்கள். அந்தவகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை வெளிப்படுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக, உடனடியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://www.tamilwin.com/srilanka/01/173498?ref=home-top-trending

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கத்தைக் காட்டி கழுத்தை சொறிந்தால் பிரகேடியரின் வேலையை நிறுத்த வேண்டுமா ?  

முன்னாள் ஜனாதிபதி மகிந்த கேக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு ஒருவர் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று பிரிகேடியர் சொன்னது சரிதான் என்று நியாயப்படுத்துகிறார்,

இலங்கையின் தமிழர்களின் ஆதரவு என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே மஹிந்தவிடம் தோற்றுப்போகாமல் பதவிக்கு வந்த மைத்திரியோ, தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்ற பிரிகேடியரின் பதவியை பறித்தது தவறு என்று உடனடியாக திருப்பி கொடுக்கிறார்...  

அன்று நாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே எதிர்க்கிறோம் தமிழர்களை அல்ல என்று  உலகத்துக்கு சொன்னவர்கள்,

இன்று யாரை எதிர்த்து நின்று மல்லுக்கட்டுகிறார்கள்?

 போரும் புலிகளும் முடிந்து ஏறக்குறைய ஒரு தசாப்தமாகிறது,,எல்லாமே முடிந்துபோனாலும் தமிழர்களை ஒருவழி பண்ணவேண்டும் எங்கிற இனவெறிமட்டும் ஒருபோதும் முடியபோவதில்லை என்பதை, மறுபடியும் எங்களுக்கு அவர்கள் ஞாபகபடுத்தும் நிகழ்வுகளே இவை.

தாயகத்திலிருக்கும் தமிழர்கள் புலிகளின் டீ ஷேர்ட் அணியலாம், வாழ்த்து சொல்லலாம், அல்லது பகிரங்க ஆதரவு தெரிவிக்கலாம் அது தவறே இல்லை  என்று

புலத்திலிருந்தபடி , சாடையா இருளில் யாராச்சும் தும்மினா இருமினாகூட பயத்தில் பொலிசுக்கு அடிச்சு தமது பாதுகாப்பை உறுதி செய்யும் புலத்தின் கணனி தமிழர்களுக்கு இந்த பிரிகேடியர் பற்றிய செய்திகளும், அதன் பின்னான சம்பவங்களும் சமர்ப்பணம்!

சிறிலங்கா அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன

 

Maheshini Colonneபிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

எனினும், இந்த உத்தரவை ரத்துச் செய்து, மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

ஆனால், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் சேர்க்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/08/news/28914

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்..

priyanga-1.jpg?resize=800%2C460
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்தார். அதன்படி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீண்டும் அதே பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேடிப் பார்க்கும் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை என்றும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/65805/

பிரிகேடியர் பிரியங்காவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்

Lt.-Colonel-Priyanka-Fernando-33.jpg?res

குளோபல் தமிழ் செய்தியாளர்

போராட்டம் நடத்திய தமிழர்களை கழுத்தறுத்துக் கொள்வேன் என சைகை காட்டிய இலங்கை அரசின் லண்டன் தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இவரது இச்செயலுக்காகவும் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழர்களை கழுத்தறுத்துக் கொள்வேன் என சைகையால் காட்டிய பிரிக்கேடியர் பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் பின்னர் மீண்டும் அவர் அப் பதவிக்கு அமர்த்தப்பட்டார். பிரிக்கேடியர் பிரியங்கா ஒழுக்கமானவர் என்றும் அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க தேவையில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மற்றும் பிரிக்கேடியர் பிரியங்கவுக்கு எதிராக பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள போராட்டப் பேரணி இலங்கை தூதரகம் முன்பாக   13 Hyde Park Gardens, W2 2LU (Nearest Underground Station: Lancaster Gate, Central Line)  ஆரம்பிக்கப்பட்ட கொமன்வெல்த் அலுவலகம் முன்பாக நிறைவடைய உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/65912/

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் வெளியே இருந்தா கையால மட்டும் தான் காட்டுவார்

ஊருக்கு அனுப்பிவிட்டா அதி வரவேற்பில் இன்னும் உற்சாகம் பெற்று உண்மையிலேயே தமிழர்களை கொலை செய்ய போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2018 at 9:23 AM, குமாரசாமி said:

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

கனடாவிலை ஆமிக்கு மாலையும்போட்டு...பெரிய பார்ட்டியும் வைத்திருப்பினம்..

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – சிறிலங்கா அதிபரை இன்று சந்திக்கிறார் இராணுவத் தளபதி

 

maithri-mahesh (1)லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

“அன்றைய நாள், ஆர்ப்பாட்டக்காரர்கள், விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியதுடன், பிரபாகரனைப் புகழும் பாடல்களையும் பாடினர்.

அப்போது பிரிகேடியர் பிரியங்க தனது சீருடையில் இருந்த சிறிலங்கா கொடியை சுட்டிக்காட்டி, பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே கவனித்து விட்டதாக சைகை மூலம் காண்பித்திருந்தார்.

இது எந்தவகையிலும், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயல் அல்ல. அவருக்கு எதிராக விசாரணை நடத்தவோ, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

அங்கு என்ன நடந்தது என்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து விளக்கவுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/09/news/28932

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம்

Lt.-Colonel-Priyanka-Fernando-33.jpg?res
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பிரியங்க பெர்னாண்டோவின் ராஜதந்திர பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் ரயான் மற்றும் சியோபயின் மெக்டொனா ஆகியோர் கோரியிருந்தனர். இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் திஸாநாயக்க கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தாம் மறைந்த காமினி திஸாநாயக்கவின் புதல்வர் எனவும், தமது தந்தையை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர் எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய பல நாடுகளைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

ராஜதந்திரிகளுக்கு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் சிறப்புரிமை காணப்படுவதாகவும், தூதரக வளாகத்திற்குள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தூதுரக வளாகத்திற்குள் இருந்து கொண்டு செய்த காரியமொன்றுக்காக அவரைத் தண்டிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/65981/

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் மீது பிரித்தானியாவில் வழக்கு.

 

புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு பிரித்தானியாவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் மீது  பிரித்தானியாவில் வழக்கு.

பிரித்தானிய தலைநகர் இலண்டனிலுள்ள நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள ஜெயின் சட்ட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய இராணுவ அதிகாரி மற்றும் அந்த அதிகாரியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை கண்டித்தும் நாளைய தினம் பிரித்தானியாவிலுள்ள முன்னணி புலம்பெயர் அமைப்புக்கள் போராட்டமொன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் 70 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட கடந்த 4 ஆம் திகதிஇ இலண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் ஸ்ரீலங்கா அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் இராணுவ சீருடையில் நின்றிருந்த தூதரக பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தனது வலது கையின் விரல்களை கழுத்திற்கு குறுக்கே அசைத்து தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சமிக்ஞை காட்சி அச்சுறுத்தியிருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இலண்டனிலுள்ள பிரித்தானிய காவல்துறை நிலையங்களில் புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.

பிரிகேடியரின் அச்சுறுத்தல் பாணியிலான நடவடிக்கைக்கு எதிராக லண்டன் மாநகர பொலிஸ் நிலையங்களில் சுமார் 50 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஜெயின் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி குலசேகரம் கீதாரத்னம் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவின் இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய இலண்டன் மாநகர பொலிசார் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

வெஸ்ட்மினிஸ்டர்இ வெம்பிளிஇ ஹரோ இ ஓக்லண்ன்ட் உட்பட லண்டன் மாநகரத்திலுள்ள பல காவல்துறை நிலையங்களில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொது மக்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை லண்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராகவும் அவரை மீண்டும் பணியில் அமர்த்திய ஸ்ரீலங்கா ஜனாதிபதி உள்ளிட்ட அரசுக்கு எதிராகவும் போராட்டமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும்  இடதுசாரி அமைப்பான தமிழ் தோழமை இயக்கம் ஆகியன கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கமைய நாளைய தினம் வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பின்னர் அங்கிருந்து பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமான 10 இலக்க டவுனிங் வீதி வரை கண்டனப் பேரணியொன்றையும் நடத்தவுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பகிரங்கமாக கழுத்தை அறுப்பதாக அசுறுத்தல் விடுத்த ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உள்ளிட்ட பிரித்தானிய அரசை வலியுறுத்தும் நோக்கிலேயே பத்தாம் இலக்க டவுனிங் வீதியிலும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

https://news.ibctamil.com/ta/politics/Brigadier-Priyanka-Fernando-case-in-Britain

தொகுக்கப்பட்ட காணொளியொன்றே வெளியிடப்பட்டுள்ளது:-

priyanga-1.jpg?resize=800%2C460

தொகுக்கப்பட்ட காணொளியொன்றே வெளியிடப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4ம் திகதி இலங்கையின் சுதந்தி தின நிகழ்வுகள், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த தமிழ், முஸ்லிம், சிங்களவர்களை பாதுகாக்கும் முயற்சியிலேயே தாம் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொடர்பு கொண்டு பதற்றமடைய வேண்டாம் எனவும் பணி இடைநிறுத்தம் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கள் தலைவர், ஈழமே எமது நாடு என போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பிய பொது தாம் அது எல்லாம் முடிந்துவிட்டது என தாம் சைகை மூலம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/66008/

பிரிகேடியர் பிரியங்கவின் இராஜதந்திர சிறப்புரிமை பறிக்கப்படுமா?

 

 

Brigadier Priyanka Fernandoபிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இராஜதந்திர சிறப்புரிமையை இழக்கும் ஆபத்தில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 4ஆம் நாள் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முதலில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணி இடைநிறுத்தம் செய்திருந்தது. எனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனை ரத்துச் செய்ததுடன், அவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

நேற்று இந்த உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடாக, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத போதிலும், பிரித்தானியா இதனைப் பாரதூரமான விடயமாக எடுத்துக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது.

பிரித்தானிய காவல்துறையின் விசாரணைகளில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தவறிழைத்தது கண்டறியப்பட்டால், பிரித்தானிய அரசாங்கம் அவரது  இராஜதந்திர சிறப்புரிமையை விலக்கிக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன.

இராஜதந்திர உறவுகள் தொடர்பாக வியன்னா உடன்பாட்டின் படி, அனுப்பும் நாடு ஒன்றினது, இராஜதந்திரிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் முடிவை பெறும் நாடு எடுக்க முடியும்.

எனினும், அனைத்துலுக சட்டங்கள் தொடர்பான உள்நாட்டு நிபுணர்கள், அவ்வாறு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ வெளியேற்றப்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்று கூறியுள்ளனர்.

“பிரித்தானியாவில் வேண்டப்படாத நபராக அறிவிக்கப்பட்டே, இராஜதந்திர சிறப்புரிமைகளை நீக்கி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

வியன்னா பிரகடனத்தின் படி, அவ்வாறு வேண்டப்படாத நபராக அறிவிப்பதற்கு, குறித்த இராஜதந்திரி, மோசமான குற்றமிழைத்தவராக அல்லது, பெறும் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடு செய்தவராக இருக்க வேண்டும்.

எனினும், இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம், பிரிகேடியர் பிரியங்கவை அவ்வாறு வேண்டப்படாத நபராக பிரகடனம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று  சட்ட நிபுணர் நைஜெல் கீத் ஹட்ச் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/09/news/28943

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.