Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

Featured Replies

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

 

"யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச் சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம்."

- இவ்வாறு நேற்று தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள உள்ளூராட்சிச் சபைகளில் உதிரிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் திட்டத்தை ஏனையோர் மறந்துவிடவேண்டும்.

அவ்வாறு செய்யக்கூடாது. எமது உறுப்பினர்கள் அவ்வாறு சோரம் போக மாட்டார்கள் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் செயலாளர் என்.சிறீகாந்தா நேற்றுமுந்தினம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பருத்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகியவற்றில் அதிகப்படியான ஆசனங்களை பெற்றிருக்கின்றது. எனவே அந்த இரு நகரசபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைக்கும்.

அதே போல் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

இந்த சபைகளில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று முதன்மையாக இல்லாவிட்டாலும் வேறு கட்சிகளை சேர்ந்த - சுயேற்சைக்குழுக்களை சேர்ந்த - உறுப்பினர்கள் எங்களுடன் இனைவதற்கான விருப்பத்தை நேரடியாக தெரிவித்துள்ளனர்.

விருப்பம் தெரிவித்திருக்கும் உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்களாயின் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/174339?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சைக்கிள் ஓவரா ஆடுது போல் இருக்கு யாராவது சொல்லுங்க இது முழுமையான வெற்றி அல்ல என்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனக்கென்னவோ சைக்கிள் ஓவரா ஆடுது போல் இருக்கு யாராவது சொல்லுங்க இது முழுமையான வெற்றி அல்ல என்று .

பெருமாள் இம்முறை தேர்தலில் கூடுதல் ஆசனங்களை எடுத்தவர்களை விட மற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் கஜேந்திரன் கூறுவது சிலவேளை சாத்தியமாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் இம்முறை தேர்தலில் கூடுதல் ஆசனங்களை எடுத்தவர்களை விட மற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் கஜேந்திரன் கூறுவது சிலவேளை சாத்தியமாகலாம்.

நீங்கள் சொல்வது சரி கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவார்களோ ஆதங்கம் எழுவதை தடுக்க முடியாமல் இருக்கு இது உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் பாலத்துக்கு பெயின்ட் அடிப்பது போன்றதுகள் இதில் மக்களை கவர் பண்ண தவறினால் எக்காலுமும் எழுந்திருக்க முடியாது . என்கன்னவோ நரி கூட்டம் வேண்டும் என்றே விளையாட்டு காட்டுவது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

இதே பாரழமன்ற தேர்தலிலிலும் என்று மகிந்த உட்டபட யாரும் நினைக்க குடாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சுவைப்பிரியன் said:

இதே பாரழமன்ற தேர்தலிலிலும் என்று மகிந்த உட்டபட யாரும் நினைக்க குடாது.

சாதாரண பணிகளுக்கான தேர்தலே நாடு முழுவதிலும் ஆட்டிப் படைத்திருக்கு.

அடுத்து மாகாணசபைத் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 அப்படி எனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சிகளான ஐ.தே.க. / சுதந்திர கட்சி யுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

யாழ் மாநகர சபையில் த.தே.ம.மு பெற்றது 13 இடங்க்கள். ஈபிடிபி 10 யூன்பி 3 சுதந்திரக் கட்சி 2, சங்கரியின் கூட்டணி பெற்றது 1. கூட்டமைப்பு பெற்றது 16 இடங்கள். பெரும்பான்மை பெற வேண்டும் எனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி பெரும்பான்மை பலத்தை அடைய வேண்டும் எனில் ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சியுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

ஏனைய இடங்களிலும் இதே போன்ற ஒரு நிலைதான்.

16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

அடுத்து மாகாணசபைத் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாகாணசபை தேர்தலில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  போட்டியிடப் போகின்றதா? கடந்த முறை மாகாணசபை தேர்தலின் போது, மாகணசபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, புலிகளும் எதிர்த்த ஒரு சபை, ஒற்றையாட்சியை முற்றுமுழுதாக ஏற்ற அதிகார அலகு என்றுதானே  மக்களை பகிஷ்கரிக்க சொல்லி தாமும் அதில் போட்டியிடாமல் விட்டவர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

 அப்படி எனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சிகளான ஐ.தே.க. / சுதந்திர கட்சி யுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

யாழ் மாநகர சபையில் த.தே.ம.மு பெற்றது 13 இடங்க்கள். ஈபிடிபி 10 யூன்பி 3 சுதந்திரக் கட்சி 2, சங்கரியின் கூட்டணி பெற்றது 1. கூட்டமைப்பு பெற்றது 16 இடங்கள். பெரும்பான்மை பெற வேண்டும் எனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி பெரும்பான்மை பலத்தை அடைய வேண்டும் எனில் ஈபிடிபியுடனோ அல்லது சிங்கள கட்சியுடனோ சேர்ந்தே ஆட்சி அமைக்க முடியும்.

ஏனைய இடங்களிலும் இதே போன்ற ஒரு நிலைதான்.

இந்த தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் கயிற்றில் நடப்பது போல தான்.

கூட இருப்பவர்கள் என்ன செய்தாலும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.இல்லை என்றால் ஆதரவை நிற்பாட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி  போட்டியிடப் போகின்றதா? கடந்த முறை மாகாணசபை தேர்தலின் போது, மாகணசபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, புலிகளும் எதிர்த்த ஒரு சபை, ஒற்றையாட்சியை முற்றுமுழுதாக ஏற்ற அதிகார அலகு என்றுதானே  மக்களை பகிஷ்கரிக்க சொல்லி தாமும் அதில் போட்டியிடாமல் விட்டவர்கள்?

மாகாணசபைத் தேர்தல் எப்படி போகும் என்பதை முதலமைச்சர் விக்கி தான் முடிவெடுப்பார் என எண்ணுகிறேன்.

கூட்டமைப்பிலுள்ளவர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப்படுகிறவர் தேர்தலில் வேறு ஒருவரையே முதலமைச்சராக நியமிப்பார்கள்.

மக்கள் ஆதரவுள்ளவர் எப்படி செயற்படுவார்?
பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. தமிழரசு கட்சியின் வினைத்திறன் குறைந்த நிலைக்கு பலமான எதிர்க்கட்சி இது வரை இல்லாமல் இருந்ததே காரணம். இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த பலமான எதிர்க்கட்சி உருவாகி இருக்கிறது. அவர்கள் பல உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு வினைத்திறன் மிக்க தலைமைத்துவம் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கடசி இருவரிடம் இருந்தும் கிடைக்கும். 

பாட்டனார் புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தார். கோடீஸ்வரர் ஆனார். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் அனைத்து பாரிய அரச தொழிற்சாலைகளையும் தான் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டி நூற்றுக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அவ்வாறு செய்வார் என்றும் எதிர்பார்ப்போம். பாட்டனரையும் விஞ்சி இன்று தமிழரசு கட்சியை ஆட்டம் காண செய்து இருக்கிறார். ஆகவே இவர் ஆற்றல் மிக்கவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.