Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை

Featured Replies

கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை

 

கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை

சர்வதேச ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அற்ற அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்காவும் இணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் ஸ்ரீலங்காவில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில் ஐ.நா பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் கவனிப்பில் தங்கியிருந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தென்னிலங்கையிலுள்ள சில பேரினவாத கடும்போக்கு பௌத்த பிரிவினர் தாக்குதல் நடத்தியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கடுத்த மாதமாக நவம்பரில் காலி கிங்தோட்டை பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட சிறிய முறுகல் நிலையை அடுத்து முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களும், சில வீடுகளும் இனவாதக் குழுவினரால் தீமூட்டி எரிக்கப்பட்டன.

இவை தவிர, தென்னாசிய பகுதிகளில் உள்ள நாடுகளில் ஊடகவியலாளர்கள், சமூக பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுநலன் கூடிய வலைப் பதிவாளர்கள் மீது கடந்த வருடத்தில் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் (Biraj Patnaik) தெரிவித்துள்ளார்.

தென்னாசிய நாடுகளில் சிறுபான்மையினப் பிரிவினர் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தவர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர் குறித்த அறிக்கையில் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

இதன்படி ஸ்ரீலங்கா, இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தானின் ஒருபகுதி, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இப்படியான நிலைமை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்திற்கான அமர்வு இன்னும் சில வாரங்களில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்படியான அறிக்கை வெளிவந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lanka-listed-unsafe-country-for-Muslims

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் சிறீலங்காவில் பௌத்த மற்றும் முசுலீம் மக்களிடையே அதிகரித்திருப்பது இந்த சர்வதேச மன்னிப்புச் சபைக்கு ஏன் தெரியாமல் போகிறது...??? :unsure: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

In world report Sri Lanka listed among countries unsafe for Muslims

monk-495x371.jpgSri Lanka has been listed among countries unsafe for Muslims in a newly released world report.

In the report, Amnesty International notes that Sri Lanka saw a rise in Buddhist nationalist sentiment last year, including attacks against Christians and Muslims.

In September, a group of hardline Buddhist monks attacked the homes of Rohingya refugees in Boosa, southern Sri Lanka. In November, dozens of home and businesses of Muslims were attacked near the southern city of Galle.

The State of the World’s Human Rights report for 2017 to 2018 by Amnesty International notes that in South Asia, governments invoked law and order, national security and religion as they engaged in attacks against religious minorities, criminalized freedom of expression and subjected civil society to a campaign of intimidation, threats, smears and violence

“Over the past year, the region was marked by assaults on civil society. Journalists, bloggers, activists and others human rights defenders have been vilified and subjected to threats and violence. Meanwhile, online, invasive new cybercrime legislation has been used to criminalize freedom of expression and subject people to unlawful surveillance,” said Biraj Patnaik, Amnesty International’s South Asia Director.

“South Asia also remains one of the most dangerous regions to be a member of a religious minority. Muslims in India and Sri Lanka, Shi’as in Pakistan and Afghanistan, and Hindus in Bangladesh have all come under attack over the past year. In each case, the governments have either failed to protect them, been indifferent to their fate, or even encouraged a climate of hostility.”

The report also says that in Sri Lanka, families attempting to arrange stones as memorials for loved ones lost during the 26-year internal conflict were stopped by security forces last year. Human rights defenders were also subject to surveillance and intimidation. Women human rights defenders in the north and east reported that interactions with the police were often degrading and sexualized. (Colombo Gazette)

http://www.thesundayleader.lk/2018/02/22/in-world-report-sri-lanka-listed-among-countries-unsafe-for-muslims/

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2018 at 1:38 AM, நவீனன் said:

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை

வன்னியில் நடந்த இறுதி யுத்தம், புலிகள், பல்லாயிரம் மக்கள் படுகொலைகள்பற்றி சிங்களவர்கள்கூட  இப்போது அதிகம் பேசுவதில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் இன்றுகூட தாம் பெருவெற்றி பெற்றுவிட்டதாக,அந்த இனவழிப்புபற்றி முஸ்லீம்கள் மார் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்கூட பிரித்தானியாவில் இலங்கை பிரிகேடியரின் மிரட்டல் விவகாரத்தில், ‘பிரிகேடியர் உங்களுக்கு சல்யூட், கவலை வேண்டாம் நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்’’ என்று சிங்களவர்களைவிட முஸ்லீம்கள் ,யூரியூப் மற்றும் பிற தளங்களில் பொங்குகிறார்கள், பிரிகேடியரின் படத்தை தங்கள் இலச்சினையாக்குகிறார்கள்,

வடக்கு கிழக்கை இணைத்து தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டால், நடப்பதேவேறு இலங்கை எங்களின் தாய்நாடு என்ற ரீதியில் கிழக்கு முஸ்லீம் தலைவர்கள்,முஸ்லீம் மக்கள், பெரும்பான்மை சிங்கள இனத்திற்கு விசுவாசமாக, அவர்களை தமது காவலர்களாக ஏற்றுக்கொண்டு ஆவேச மேடைப்பேச்சு நிகழ்த்துகிறார்கள்,தேசபக்தியில் மூழ்கி திளைக்கிறார்கள்.

   இத்தனைக்கும் வடக்கு கிழக்கின் பெரும்பான்மை இனமாக இருக்கும் சக தமிழினத்தின்  தலைமைகளை,வடகிழக்கில் ஒரு சிறுபான்மை இனமாக இருக்கும் அவர்கள் சிங்களவனின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்ற ஒரேயொரு துணிச்சலில் மிரட்டல் பாணியில் எச்சரிக்கிறார்கள்..

இவ்வளவத்துக்கு அப்புறமும் எந்த வகையில் இலங்கை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மன்னிப்பு சபைக்கு தெரிகிறது?

உலகில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை வெளியிடும் மேற்படி அமைப்பு, முஸ்லீம்களால்  உலகில் பாதுகாப்பற்ற நாடுகள் ஆக்கப்பட்டவற்றின் பட்டியலையும் வெளியிடுமா?

சிங்கள-பௌத்த மற்றும் முஸ்லீம் மதவெறியர்களால் தமிழ் மக்களுக்கு இருந்துவரும் ஆபத்து மிக அதிகமானது.

வட-கிழக்கில் சில நூறு கிறிஸ்தவ திருச்சொரூபங்கள், இந்து திருவுருவங்கள் இந்த சிங்கள-பௌத்த மற்றும் முஸ்லீம் மதவெறியர்களால் அழிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் ஏன் மறைக்கப்படுகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.