Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டு

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டு

 
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்  இணைந்து சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையிலேயே தமிழத் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவுடன் குறித்த நகரசபையில் ஆட்சி அமைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டு

இதேபோல் வடமாகாணத்தில் ஏனைய உள்ளுராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்கும் என்றும் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூளுரைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபைக்கான ஆட்சியமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இந்த நகரசபையில் அதிக ஆசனங்களை கைப்பற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யோகேஷ்வரன் ஜெயகுமார், இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சிவமங்கை இராமநாதன் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்காக போட்டியிட்டிருந்தனர்.

இதன் போது 12 வாக்குகள் பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சிவமங்கை இராமநாதன் யாழ் சாவகச்சேரி நகர சபையின் முதல்வராக தெரிவானர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் டகளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி மற்றும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த யாழ் சாவகச்சேரி நகர சபையின் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.

உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஈபி.டி.பியுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் இதன்போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிலுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆறு உறுப்பினர்களையும், வீட்டு சின்னத்தில் போட்டியிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐந்து உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர்.

அதேபோல் ஈ.பி.டி.பியினர் மூன்று உறுப்பினர்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA--is-jointly-with-the-EPDP-

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கும் டக்கிளசுக்கும் அதிக வித்தியாசமில்லை. குணம் குணத்தோடுதான் சேரும். டக்கியும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க ஜெனீவாவுக்கு போனது. இப்ப இது போய் குழப்பிப்போட்டு வந்திருக்குது. பேராசை பரம்பரையில் பிறந்ததுகள்.

தமிழினப் படுகொலைகாரக் கும்பல்களின் கைக்கூலிகள் ஒன்றிணைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

தமிழரசுக்கட்சி அராஜக் கும்பலின் அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வர இது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சுமந்திரனுக்கும் டக்கிளசுக்கும் அதிக வித்தியாசமில்லை. குணம் குணத்தோடுதான் சேரும். டக்கியும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க ஜெனீவாவுக்கு போனது. இப்ப இது போய் குழப்பிப்போட்டு வந்திருக்குது. பேராசை பரம்பரையில் பிறந்ததுகள்.

 

3 hours ago, போல் said:

தமிழினப் படுகொலைகாரக் கும்பல்களின் கைக்கூலிகள் ஒன்றிணைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

தமிழரசுக்கட்சி அராஜக் கும்பலின் அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வர இது உதவும்.

த.தே.கூ ஈபிடிபி யுடன் சேர்ந்து
வென்று விட்டது என்று
துரோகிகள் அவர்கள்
என்று கூக்குரல்
இடுபவர்களிடம் கேள்வி

18 உறுப்பினர்களை
கொண்ட சாவகச்சேரி
சபையில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
6 உறுப்பினர்களை தான்
கொண்டு இருக்கு

அப்படி இருக்கும் போது
பெரும்பான்மை கிடைக்க
10 வேண்டும்
அப்ப
தம் 6 பேரை தவிர
வேறு யார் ஆதரவு கொடுப்பர்
என்று நினைத்து இருந்தனர்?

ததேகூ ஆதரவு கொடுக்காது
ஆக
ஈபிடிபியும்
ஐ.தே.க. வும் தானே
ஆதரவு தருவார் என்று
நப்பாசை பட்டனர்?

இதே கதை தான்
யாழ் மாநகர சபையிலும்

16 உறுப்பினர்கள் உள்ள
ததேகூவை
எதிர்த்து
13 உறுப்பினர்களைக் கொண்ட
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
மேயர் வேட்பாளருக்கு
போட்டி போட்டது
எந்த நம்பிக்கையில்?
ஒன்றில் ஈபிடி
ஆதரவு கொடுக்கும் என்ற
நப்பாசை
அல்லது
நீங்கள் துரோகிகள்
என்று பிரச்சார காலத்தில்
கூவிய
ததேக வில் இருந்து
ஆதரவு என்ற
நப்பாசை தானே


 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த  ஒன்றுதான்

இனி   இது  தான்  தொடரும்

இதில் ஆத்திரப்பட  ஒன்றுமில்லை

 

தமிழினப் படுகொலைகாரக் கும்பல்களின் கைக்கூலிகள் ஒன்றிணைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.3.2018 at 7:52 PM, விசுகு said:

எதிர் பார்த்த  ஒன்றுதான்

இனி   இது  தான்  தொடரும்

இதில் ஆத்திரப்பட  ஒன்றுமில்லை

 

அவர்கள் நேர்மையான அரசியல் செய்திருந்தால் தமிழினத்திற்கு இந்த நிலை வந்திருக்குமா?

விட்ட தவறுகளுக்கு யார் யாரையெல்லாமோ கூட்டு சேர்க்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

இனி வரும் காலங்களில் அவர்கள் சொல்வதுதான் தாரக மந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் நிமலராஜனுக்கு சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

 இனத்தை அழித்து ஒழித்துக்கொண்டிருக்கிற சிங்களவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கினமாம். ஏன் போட்டி இல்லாமல் த. தே. ம. முன்னணியோடு சேர்ந்து ஆட்ச்சியை அமைத்து அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பாத்திருக்கலாம் . ஆனால் த. தே. கூட்டமைப்புக்கு எப்போதுமே  அவர்கள் மேல் ஒருவித பயம். தங்களுக்கு எதிராய் அவர்கள் வளர்ந்து விட்டால்  இனத்தை விற்று பிழைக்கும் பிழைப்பு, ஊர் சுற்றுவது  கெட்டுவிடும். எதிர்கால அரசியல் வாழ்வு சூனியமாகிவிடும், நடந்த, நடக்கிற தில்லுமுல்லுகள் வெளிவந்துவிடும். இந்தக் குறளியோட சேர்ந்தால் தாங்கள் தான் எப்பவும் முன்னுக்கு இருப்போம், போட்டியில்லை என்றொரு மனக்கணக்கு. சுமந்திரன் நினைக்கிறார் தான் பெரிய மேதாவி டக்கிலஸை சேர்ப்பதன் மூலம் கஜேந்த்திரகுமாரையும் , முதலமைச்சரையும் தான் ஓரங்கட்டிவிட்டேன் விட்டேன் என்று. இனி டக்கிலஸின் லொள்ளுக்கு பதில் குடுக்கேக்கை தெரியும் ஆழம் தெரியாமல் கால் விட்டொமே என்று.சிங்களவனுக்கு  சேவை செய்வதில்  சுமந்திரனுக்கும்  , டக்கிளசுக்கும்   போட்டி போட்டு யார் சிங்களவனின் செல்லப்பிள்ளை ஆகிறது என்கிற இழுபறியில் இருவரில் ஒருவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.