Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன்.

Featured Replies

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன்.

இராணுவம் தனது எல்லைக் கோட்டை தாண்டி எங்களது பிரதேசத்துக்குள் பிரவேசித்திருப்பது பாரதூரமான விடயம். இந்த நிலைமை குறித்து எமது தலைமைப் பீடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தொலை பேசி மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினரின் நடவடிக்கையின்போது பெரியதம்பனைக் கிராமத்தில் 120 பொது மக்கள் சிக்கியுள்ளனர். படையினர் அவர்களை மனித கேடயமாக வைத்திருக்கிறார்கள். இது மோசமான கள நிலைவரமாகும். இது தொடர்பாக எமது மத்தியகுழு தீவிர மாகப் பரிசீலித்து வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மறுத்துள்ளார். அச்சுறுத்தல் வரும்போது எதனையும் பார்க்கமுடியாது அச்சுறுத்தல் ஏற்படும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி, அரசின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று பார்க்க முடியாது வேறுபாடும் இருக்காது. எமது இலக்கு மீது ஒருவர் தாக்குதல் நடத்தும்போது அதை அழித்தாக வேண்டும். அதைத்தான் படையினர் செய்கின்றனர் என்றார்.

-Uthayan-

  • Replies 53
  • Views 8.9k
  • Created
  • Last Reply

மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் சிங்களக் குண்டர்களினால் சிறைப் பிடிக்கவைப்பதை தடுப்பதற்கு ஏன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்படவில்லை? ஏன் இவ்வாறு மனிதக் கேடயங்கள் பயன்படுத்தப்படும் விடயம் தெரியாதா? இந்த மனிதக் கேடய விடயம் சில பத்து வருடங்களின் முன்பே சிறீ லங்கா குண்டர்களினால் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், இதற்கு தமிழர் தரப்பு இன்னும்தான் சரியான தீர்வைக் காணவில்லையே? ஏன்? தமிழ்நாதத்தின், இராணுவப் போர்ப் பாசறைப் பேராசிரியர் திரு. அருள் வேல்ஸ் தேவையில்லாத கற்பனைக் கதைகளை புனைந்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, இவ்வாறான மனிதக் கேடயச் சிக்கல்களிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு வழிகள் கூறலாமே? :)

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மட்டும் தான் மக்களை மனித கேடயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமா? மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

இராணுவம் தனது எல்லைக் கோட்டை தாண்டி எங்களது பிரதேசத்துக்குள் பிரவேசித்திருப்பது பாரதூரமான விடயம். இந்த நிலைமை குறித்து எமது தலைமைப் பீடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

அடடா இப்போதுதான் எல்லை கோடுமீறப்பட்டுள்ளதா?

இனித்தான் தலமைப்பீடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

கிழக்கு ஏற்கனவே கருணாவிற்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதா?

"கிழக்கிலிருந்து விரட்டப்படப்போவது நாங்கள் இல்லை" என்று இளந்திரையன் முன்னர் கூறியது அதைத்தானா?

புலிகள் மட்டும் தான் மக்களை மனித கேடயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமா? மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

தமிழர் பிரதிநிதிகளாக (அரசியல் + ராணுவ) பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது யார்?

மற்றவர்கள் யார் உள்ளனர்?

மற்றவர்கள் எனப்படுவோர் செய்யக்கூடிய நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் என்ன?

Edited by சாணக்கியன்

மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் சிங்களக் குண்டர்களினால் சிறைப் பிடிக்கவைப்பதை தடுப்பதற்கு ஏன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்படவில்லை? ஏன் இவ்வாறு மனிதக் கேடயங்கள் பயன்படுத்தப்படும் விடயம் தெரியாதா? இந்த மனிதக் கேடய விடயம் சில பத்து வருடங்களின் முன்பே சிறீ லங்கா குண்டர்களினால் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், இதற்கு தமிழர் தரப்பு இன்னும்தான் சரியான தீர்வைக் காணவில்லையே? ஏன்? தமிழ்நாதத்தின், இராணுவப் போர்ப் பாசறைப் பேராசிரியர் திரு. அருள் வேல்ஸ் தேவையில்லாத கற்பனைக் கதைகளை புனைந்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, இவ்வாறான மனிதக் கேடயச் சிக்கல்களிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு வழிகள் கூறலாமே? :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21071 :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா இப்போதுதான் எல்லை கோடுமீறப்பட்டுள்ளதா?

இனித்தான் தலமைப்பீடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

கிழக்கு ஏற்கனவே கருணாவிற்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதா?

"கிழக்கிலிருந்து விரட்டப்படப்போவது நாங்கள் இல்லை" என்று இளந்திரையன் முன்னர் கூறியது அதைத்தானா?

ஏன் கிழக்கில் இருந்து சண்டையே முடிந்து விட்டது என்று இயக்கம் சொன்னதா? கொழும்பில் கொழுத்த உடம்பை நீர் வளர்த்துக் கொண்டிருந்தால், வெறுமனே போராடி வெற்றி பெறலாம் என்று சொன்னதா?

எப்படா வெளிநாடு பாயலாம் என்று, வாயில் வழிய, வழிய நிற்கின்ற உமக்கு புலிகளைப் பற்றிக் கதைக்க வெட்கமாக இல்லை.

தமிழர் பிரதிநிதிகளாக (அரசியல் + ராணுவ) பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது யார்?

மற்றவர்கள் யார் உள்ளனர்?

மற்றவர்கள் எனப்படுவோர் செய்யக்கூடிய நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் என்ன?

தமிழர் பிரதிநிதியாக புலிகள் என்பது சிங்களதேசம் எடுத்த முடிவு. உலகம் எடுத்த முடிவு. மற்றய அடிவருடிக் கும்பல்கள் சிங்களவனுக்கு கழுவிக் கொண்டிருப்பதால் யாரும், அதைக் கணக்கெடுப்பதில்லை. அல்லது ஆனந்தசங்கரியோடும், டக்ளஸ் கூடவும் பேசப் போகின்றேன் என்று மகிந்த பல தடவை சொன்ன போதும் புலிகள் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே!

தமிழர் பிரச்சனை தொடர்பாக, இவர்களுக்கு பேச உரிமையில்லை என்பது, அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மற்றவர்கள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவர்கள்.

புலிகள் ஒன்றும், உங்களின் வாய்ப் பேச்சாலும், உலகத்தின் அனுசரனையாலும், தமிழர் தரப்பின் குரலாகக் கணிக்கப்படவில்லை. சிங்கள இராணுவத்தோடு போராடித் தான் அந்த நிலையை அடைந்தார்கள். எனவே, கை நீட்டிக் கேட்கின்ற லாயக்கு எவனுக்குமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா திரையன் அண்ணா இராணுவம் உங்கட கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி றொம்ப நாள்ஆச்சுனா....நீங்களும் அடிக்கடி இந்த டயலக்க தான் அடிக்கிறிங்க..

ஏன் கிழக்கில் இருந்து சண்டையே முடிந்து விட்டது என்று இயக்கம் சொன்னதா?

30 வருமாக சண்டைதான் நடைபெறுகிறது!

கொழும்பில் கொழுத்த உடம்பை நீர் வளர்த்துக் கொண்டிருந்தால், வெறுமனே போராடி வெற்றி பெறலாம் என்று சொன்னதா?

எப்படா வெளிநாடு பாயலாம் என்று, வாயில் வழிய, வழிய நிற்கின்ற உமக்கு புலிகளைப் பற்றிக் கதைக்க வெட்கமாக இல்லை.

கேட்ட கேள்விக்கு பதிலில்லை எனின், ஏன் என்னை பற்றிய வேண்டாத ஆராட்சி? கருத்து வறட்சியா? சார் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? யாரை சண்டைபிடிக்கச் சொல்லுகிறீர்கள்? யாரை சாகச் சொல்லுகிறீர்கள்?

புலிகள் ஒன்றும், உங்களின் வாய்ப் பேச்சாலும், உலகத்தின் அனுசரனையாலும், தமிழர் தரப்பின் குரலாகக் கணிக்கப்படவில்லை. சிங்கள இராணுவத்தோடு போராடித் தான் அந்த நிலையை அடைந்தார்கள். எனவே, கை நீட்டிக் கேட்கின்ற லாயக்கு எவனுக்குமில்லை.

தமிழ் மக்களுக்குக் கூடவா அந்த உரிமையில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சானக்கியன் நீங்க இப்படியெல்லாம் பேச கூடாது அவை அங்க கள முனைல நிண்டு கருத்து எழுதேக்க இப்படி சொன்னா கோபம் வரும் தானே...

கேட்ட கேள்விக்கு பதிலில்லை எனின்இ ஏன் என்னை பற்றிய வேண்டாத ஆராட்சி? கருத்து வறட்சியா? சார் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? யாரை சண்டைபிடிக்கச் சொல்லுகிறீர்கள்? யாரை சாகச் சொல்லுகிறீர்கள்?

விடுங்க சாணக்கியன் உதுகளுக்கு சொல்லி என்ன விளங்க்போகுது சனம் படுகிற பாடு தெரிஞ்சாத்தானே ?

என்ன கொஞ்சம் சந்தோசம் இந்த முறை இளந்திரையன் பாட்டை கொஞ்சம் மாத்திப் போட்டார் தரமை பரிசிலிக்ககு தெண்டு

இல்லாட்டி தெரியும் தானே

"உறுதியாய்ய இருக்கிறம்

தெளிவாய் இருக்கிறம்

பாரியபின் விளைவு ஏற்படும்

தென்னிலங்கை யுத்தத்தை உணரும் "

எண்டெல்ல விடுகிறவர்.

:(:(

அண்ணாக்களா ! தம்பிகளா ! நண்பர்களா !

என்ன குழப்பம்? உங்கள் மனங்களில் எழுந்துள்ள

ஆதங்கந்தானென்ன? களத்தின் போக்கினைப் விடுதலைப்புலிகள்தான் நகர்த்த வேண்டியவர்களே

தவிர மற்றவர்களல்ல. பேரிடுதல் அறிக்கையிடுதல் என்பன களநிலைக் கேற்பத்தான் நடைபெறும்.

ஏன் பொய்களைக் கூட சந்தர்ப்பத்திற்கேற்ப சொல்லித்தானாக வேண்டும். ஆகவே சினங் கொள்ளாதீர்கள். தமிழர் சேனை தனது தடத்தில் பிறழாமல் சென்று கொண்டிருக்கிறது. அதைமட்டும் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். இது கருத்துக் களம். ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து எதிர்க்கருத்துக்கு மாற்றுக் கருத்தென வளர்ந்து கொண்டிருக்கும் ஆனால் அங்கு நிலைமை அவ்வாறில்லை. ஒரு உயிர் போனால் மாற்றுயிரென்பது சாத்தியமாகாத விடயம்.

இந்த மண் எங்களின் சொந்த மண் எல்லைகள் மீறி யார் வந்தவன்?.... என்று மனம் திறந்து பாடி........ 60பாடியுடன் 150சிதைந்துடன் யார் திரும்பி ஒடியவன்(துண்டக்....

துணியக்......) என்றும் மீண்டும் பாடி ...... எது எது எப்போது நடக்குமோ அப்போது தான் நடக்கும் :( ...... மனதுக்கு இதமாக விடுதலைபபாடல்கள் இசைத்துக் கொண்டு

விடுதலை விரைபுபட உங்களால் எவ்வழிகளில்(பணம் மட்டுமல்ல) சிந்தித்து செயல்படுங்கள் எமது சகோதரங்களே.............

  • கருத்துக்கள உறவுகள்

"ஏன் இவங்கள் (இவங்கள்தான்) சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு தெரியேல்லை.. பேசாமல் ஆமியை ஊருக்குள்ளை விட்டுவிட்டு காட்டுக்குள்ளை போயிருந்தாங்கள் எண்டால் எல்லாப் பிரச்சினையும் தீரும். 4% வீதமான தமிழர் 0% ஆக முன்னம் இதுகளைச் செய்தால் நல்லது.. " :(

இப்படியான ஐடியாக்களோடு கனபேர் திரிகிறார்கள்.. ஆனால் ஒண்டும் சரிவருகுதில்லை..

படையினரின் நடவடிக்கையின்போது பெரியதம்பனைக் கிராமத்தில் 120 பொது மக்கள் சிக்கியுள்ளனர். படையினர் அவர்களை மனித கேடயமாக வைத்திருக்கிறார்கள். இது மோசமான கள நிலைவரமாகும்.

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் இப்படி இராணுவத்தில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது சரியா?

மக்களுக்கு தேவை அறிக்கை அல்ல. விரைந்து நிரந்தரமான ஒரு தீர்வு! அவர்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்றாகிவிட்டது.

நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு தமிழன் கொல்லப்படுகிறான். இந்த கருத்து ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு தமிழன் கொல்லப்பட்டோ காணாமலோ போயிருப்பான்!

சகோதரர்களே...உங்கள் ஆதங்ககளை யாரும் குறை சொல்வதற்கு இல்லை. அவை நியாயமானதும் சாதாரண ஒருவரால் முன்வைக்கப்படக்கூடியதுமே. ஆனால் இராணுவ வியூகங்களை எடுத்த எடுப்பில் வகுக்க முடியாது. இன்றய உலகில் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எதைச் செய்ய முனைந்தாலும் அதன் பிரதி கூலங்கள் ஏராளம் ஏராளம் அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். என்னப்பா திரும்ப திரும்ப சொல்லவேண்டி இருக்குதே....... போரின் மூலம் சாதிக்க முடியாத ஒன்றை சிக்களமும் உலகமும் சமாதான காலத்தில் அதைனை செவ்வனே செய்ய முனைந்தார்கள் அது தமிழர் தரப்பால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றபடியால் தலைக்கு வந்தது தலைப்பாகயுடன் தற்காலிகமாய் போய்விட்டது. புரியும் என நினைக்கிறேன்.

தந்திரோபாய பின்னகர்வு இது தோல்வி இல்லை................... புரிந்து கொள்ளுங்கள். எங்கோ ஒரு முன் குறிக்கப்பட்ட பிரதான களத்திற்கான படைநகர்த்தலே.

புலி இரையை நோக்கி பாய்வதற்கு முன் நன்றாக பின்னோக்கி நகரும் தன் புலன்களை எல்லாம் ஒடுக்கிக்கொள்ளும் நன்றாகவே அமைதியாகும் ஆனாலும் இரையில் இருந்து தன் கண்களை ஒருபோதும் விலக்கிகொள்ளாது. தக்க தருணம் வரும் வரை சலசலப்பு காட்டது. ஈற்றில் அதன் நேரம் வந்தபொழுது தானே தன் முழு விசையுடன் இரையின் மீது பாயும். பாய்ச்சல் பாய்ச்சலாகவே இருக்கும்.

சரி பொறுத்திருந்து பாருங்களன் நம் தமிழீழப்புலியின் பாய்ச்சலை.

சிங்களவனை தமிழன் மோடன் என்கிறான். ஆனால் அவனிலும் பார்க்க புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர் ஒன்றோ இரண்டோ படி மேலே நிற்கிறார்கள்.

Edited by mathuka

மாதுகா,

உங்கள் விளக்கம் டிஸ்கவரி சனல் பார்த்த திருப்தியை தந்ததே ஒழிய, மக்களின் அவலத்திற்கு விரைந்த தீர்வெதனையும் அல்ல.

மாதுகா,

உங்கள் விளக்கம் டிஸ்கவரி சனல் பார்த்த திருப்தியை தந்ததே ஒழிய, மக்களின் அவலத்திற்கு விரைந்த தீர்வெதனையும் அல்ல.

20-30 வருடங்களாக.................................................

ஆகப் பொறுத்தனீர்கள் ஏன் ஆறப் பொறுக்கமுடியவில்லை ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதுகா,

உங்கள் விளக்கம் டிஸ்கவரி சனல் பார்த்த திருப்தியை தந்ததே ஒழிய, மக்களின் அவலத்திற்கு விரைந்த தீர்வெதனையும் அல்ல.

உங்களிடம் ஏதாவது தீர்விருந்தால் சொல்லலாமே.

"ஏன் இவங்கள் (இவங்கள்தான்) சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு தெரியேல்லை.. பேசாமல் ஆமியை ஊருக்குள்ளை விட்டுவிட்டு காட்டுக்குள்ளை போயிருந்தாங்கள் எண்டால் எல்லாப் பிரச்சினையும் தீரும். 4% வீதமான தமிழர் 0% ஆக முன்னம் இதுகளைச் செய்தால் நல்லது.. " :(

இப்படியான ஐடியாக்களோடு கனபேர் திரிகிறார்கள்.. ஆனால் ஒண்டும் சரிவருகுதில்லை..

தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதை எழுதுவது அவசியம் என்று தோன்றியதால், எழுதுகிறேன்.

4% தமிழர்களா? எவன் சொன்னான்? எவன் போய் கணக்கெடுத்தான்? பாலித கோஹன, ரம்புக்வெல போன்ற கடைந்தெடுத்த பொய்யர்களா? கிட்டத்தட்ட 30% தமிழர்களை அகதிகளாக உலகம் எங்கும் ஓடச் செய்து விட்டு, தமிழர் தாயகத்தில் 70% நிலப்பரப்பில் சிங்கள இராணுவம் கூட புக முடியாத நிலையில், எங்கிருந்து வந்தது இந்த 4% கணக்கெடுப்பு.

ஒருவேளை தமிழீழம் தவிர்ந்த எதிர்கால ஸ்ரீலங்காவில் 4% தமிழர்கள் இருப்பார்கள் என்று பாலிதகோஹனவின் கணினி கணக்கெடுத்து சொல்லியதோ என்னவோ. பாலித கோஹன போன்ற திருடர்கள், தமிழ் மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் உள்நோக்கத்துடன் சொல்லும் பொய்யான தரவுகளையும், விகிதாசாரங்களையும், மீண்டும் மீண்டும் நாமும் சொல்வதால், சிங்கள அரசின் கபடத்திற்கும் பொய் பிரசாரத்திற்கும் தான் துணை போகிறோம்.

சிங்கள அரசிற்கு அடிவருடும் சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுக்கு இப்படியான பொய்களை கூட தட்டி கேட்க திராணி இல்லை. இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா? கொழுத்து திரியும் உங்கள் உடம்புகள் ஒரு நாள் புழுத்து போகும் திருடர்களே!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது - இளந்திரையன்.

மாப்பிள்ளையின்ர கதையய் பார்த்தால் அவருக்கும் அருஸ்க்கும் தீராத பகை போல - எவர் சொல்ல எவரை தப்புக்கணக்கு போடுகிறார்.......... ஆ கண்ணக்கட்டுதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா இப்போதுதான் எல்லை கோடுமீறப்பட்டுள்ளதா?

இனித்தான் தலமைப்பீடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

கிழக்கு ஏற்கனவே கருணாவிற்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதா?

"கிழக்கிலிருந்து விரட்டப்படப்போவது நாங்கள் இல்லை" என்று இளந்திரையன் முன்னர் கூறியது அதைத்தானா?

தமிழர் பிரதிநிதிகளாக (அரசியல் + ராணுவ) பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது யார்?

மற்றவர்கள் யார் உள்ளனர்?

மற்றவர்கள் எனப்படுவோர் செய்யக்கூடிய நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் என்ன?

மற்றவர்செய்யக்கூடிய நடைமுறைசாத்தியமான விடயம் மக்களை கொலைசெய்து களவெடுப்பது மட்டும்தான், உமக்கு தெரியாத விடயமா? :(:( :P

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதை எழுதுவது அவசியம் என்று தோன்றியதால், எழுதுகிறேன்.

4% தமிழர்களா? எவன் சொன்னான்? எவன் போய் கணக்கெடுத்தான்? பாலித கோஹன, ரம்புக்வெல போன்ற கடைந்தெடுத்த பொய்யர்களா? கிட்டத்தட்ட 30% தமிழர்களை அகதிகளாக உலகம் எங்கும் ஓடச் செய்து விட்டு, தமிழர் தாயகத்தில் 70% நிலப்பரப்பில் சிங்கள இராணுவம் கூட புக முடியாத நிலையில், எங்கிருந்து வந்தது இந்த 4% கணக்கெடுப்பு.

ஒருவேளை தமிழீழம் தவிர்ந்த எதிர்கால ஸ்ரீலங்காவில் 4% தமிழர்கள் இருப்பார்கள் என்று பாலிதகோஹனவின் கணினி கணக்கெடுத்து சொல்லியதோ என்னவோ. பாலித கோஹன போன்ற திருடர்கள், தமிழ் மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் உள்நோக்கத்துடன் சொல்லும் பொய்யான தரவுகளையும், விகிதாசாரங்களையும், மீண்டும் மீண்டும் நாமும் சொல்வதால், சிங்கள அரசின் கபடத்திற்கும் பொய் பிரசாரத்திற்கும் தான் துணை போகிறோம்.

சிங்கள அரசிற்கு அடிவருடும் சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுக்கு இப்படியான பொய்களை கூட தட்டி கேட்க திராணி இல்லை. இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா? கொழுத்து திரியும் உங்கள் உடம்புகள் ஒரு நாள் புழுத்து போகும் திருடர்களே!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

உதாரணத்துக்கு 1987 இல் யாழ் குடாநாட்டின் மக்கள் சனத்தொகை 8 லட்சம். இன்று அதுவே 3 இலட்சம். 1987 இல் கனடாவில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆயிரம். இன்று கிட்டத்தட்ட 5 இலட்சம். 1987 இல் பிரித்தானியாவில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 இன்று அது 4 இலட்சமாகி விட்டது.

1987 இல் கொழும்பில் இருந்த வடக்குக் கிழக்கு தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரம். இன்று அது 3 இலட்சம்.

1987 இலங்கையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 32 இலட்சம். இன்று அந்த எண்ணிக்கை 14 இலட்சமாகி விட்டது. மேற்குலகுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டி இருக்கிறது. கொழும்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 இலட்சமாக மாறிவிட்டது. இந்த நிலையில் பாலிதன்ன சொன்னது பொய்யா.. இல்ல நாங்கள் தான் ஈழம் காணுவம் என்று சுதந்திரத்தை கைவிட்டு சுகபோகம் தேடி உலகெங்கும் ஓடி போராட்டதை விலை பேசி சுகபோக வாழ்வைத் தேடிய சுயநலவாதிகள் என்பதை மறைக்க முற்படுகின்றமா..??! இக்காலத்தில் மேற்குலகுக்கு ஓடி வந்த சிங்களவர்கள் எத்தனை..??! முஸ்லீம்கள் எத்தனை..??! மலையகத்தமிழர்கள் எத்தனை..??!

போதாக் குறைக்கு செய்த பாவம் பத்தாதென்று போன இடங்களில வன்முறை ஏமாற்றல் பித்தலாட்டம் செய்து இறுதியில் பயங்கரவாதப்பட்டம் சுமத்த வழிகோலிவிட்டதுதான் கண்ட மிச்சம்..!

தமிழர்களின் எண்ணம் உலகம் தங்கட கையில என்று. பாவங்கள்.. அவர்களை உலகம் நன்றே இறுகக் கட்டியுள்ளதை அறியமட்டும் மறந்துவிட்டார்கள். அடுத்தவை முட்டாள் முட்டாள் என்று முட்டாளானது தமிழர்களே அன்றி உலகில் வேறு யாரும் இல்லை..! :(:(

Edited by nedukkalapoovan

மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் சிங்களக் குண்டர்களினால் சிறைப் பிடிக்கவைப்பதை தடுப்பதற்கு ஏன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்படவில்லை? ஏன் இவ்வாறு மனிதக் கேடயங்கள் பயன்படுத்தப்படும் விடயம் தெரியாதா? இந்த மனிதக் கேடய விடயம் சில பத்து வருடங்களின் முன்பே சிறீ லங்கா குண்டர்களினால் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், இதற்கு தமிழர் தரப்பு இன்னும்தான் சரியான தீர்வைக் காணவில்லையே? ஏன்? தமிழ்நாதத்தின், இராணுவப் போர்ப் பாசறைப் பேராசிரியர் திரு. அருள் வேல்ஸ் தேவையில்லாத கற்பனைக் கதைகளை புனைந்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, இவ்வாறான மனிதக் கேடயச் சிக்கல்களிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு வழிகள் கூறலாமே? :(

தமிழர் தரப்பில் நீர் மட்டும் இல்லை என்ற கருத்தா? அல்லது தமிழர் தரப்பில் இராணுவப் போர்ப்பாசறைப் பேராசிரியர் திரு அருள் வேல்ஸ் தான் மக்களை காப்பாற்ற பிறந்தவரா? புரியவில்லை உமது கருத்து தயவு செய்து விளக்குவீர்!

நன்றி நாதன்

மாதுகா,

உங்கள் விளக்கம் டிஸ்கவரி சனல் பார்த்த திருப்தியை தந்ததே ஒழிய, மக்களின் அவலத்திற்கு விரைந்த தீர்வெதனையும் அல்ல.

டிஸ்கவரி சனல் அடிக்கடி பார்த்தால் அப்படித் தான் இருக்கும். :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.