Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா? 83 members have voted

  1. 1. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

    • ஆம்!
      58
    • இல்லை!
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சாணக்கியனின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். தமிழ் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்திய இந்திய திரைப்படங்களை நான் பார்ப்பதில்லை. அதுவும் ரஜனி என்ற கொள்கையில்லாதவனின் படத்தை பார்த்து நமக்கு என்ன பயன்.

  • Replies 135
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஆட்களை( அது சுயநலத்திற்காக இருந்தாலும்), அவர்களின் படங்களை வரவேற்போம். மற்றவர்களைப் புறக்கணிப்போம். தமிழீழத்தை ஆதரிச்சால் தான், தமிழக சினிமாப் படங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம் என்ற நிலை உருவானால், நிச்சயம் அவர்கள் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வருவினம்.

உண்மையாக ஆதரவு தாறவையை தனியா தெரியும் தானே. அவங்களுக்கு என்றைக்குமே, எங்கட மரியாதையைச் செலுத்துவோம். ரஜனியை நிகழ்ச்சி செய்ய புலத்தில் இருந்து எங்கட ஆட்கள் கூப்பிட்டதாகவும், அவர் தன்னால் வாற நிதியைப் போராட்டத்துக்கு பாவிப்போம் என்று சொல்லி அதை மறுத்ததாகவும் கதை ஒன்று அடிபட்டது. அது உண்மையா? அப்படியிருந்தால், புலத்தில் அதைத் தோற்கடிக்க வேணும்.

முந்தியொருக்க விசு இயக்கத்தைப் பற்றிக் கேவலமாகக் கதைச்சதையும், (90களில்) அதை நாங்கள் மறந்திடுவம் என்று, 2000ம் ஆண்டுகளில் கனடாவில் அரட்டையரங்கம் நடத்த வந்த போது, நாங்கள் கொடுத்த எதிர்ப்பையும் விசு இப்பவும் மறக்க மாட்டார்.

ஏதோ, அற்பச் சினிமாவுக்காக எம் மரியாதையை இழக்க கூடாது பாருங்கோ

நீங்கள் கூறியது உண்மைதான், ஏற்கனெவே அவருக்கு ஒரு நிகழ்ச்சி நடந்து துடப்பம்,செருப்பு எல்லாம் காட்டப்பட்டது. இது போன்ற சுயநலவாதிகளை புறக்கணித்து ஈழத்தமிழருக்காக உண்மையாக குரல் கொடுப்பவர்களை நாம் ஆதரிக்கவேண்டும்.

சொல்ல மறந்துவிட்டேன்.. ஆங்கிலப் பட rate இல் tickets விற்றால்தான் பார்க்கமுடியும் என்ற நிதி நிலைமை.. :lol: இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது Tamil Torrents! B)

செவ்வாய் கிழமையில் பார்த்தால் ஆங்கில படத்தை விட மலிவாக 4 பவுண்சுக்கு பார்க்கலாமாம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படம் பார்ப்பது எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை. பார்க்காமல் இருப்பதுதான் பிரச்சனை (வீட்டில் உள்ளவர்களின் கோபத்திற்கு முகம் கொடுப்பது).

இது எனது சொந்தப்பிரச்சனை இல்லை. நாளும் பாரிய மனித அவலத்தை எதிர் நோக்கும் நான் பிறந்த தமிழ் சமுகத்திற்காக எனது எல்லைகளுக்குற்பட்டு நான் செய்யக் கூடிய ஒரு துளி முயற்சி. இது எங்கள் பிரச்சனை என்று உணர்பவர்கள் இணைந்து கொள்ளுங்கள்!

நேசக்கரம் நீண்ட வேண்டியது நாமல்ல அவர்கள்!

நாம் அவலக்குரல் எழுப்பினோம!

அவர்கள் வரவில்லை!

இனி என்ன செய்யலாம்?

அவர்களுக்கு புரியும் மொழியில் ஒன்றாக இணைந்து உரத்து குரல் கொடுப்போம்!

இது பாதிக்கப்பட்ட மக்களின் குரல். எந்த ஒரு அமைப்பிற்கும் தொடர்பில்லை!

ஈழத்தமிழரை ஆதரித்து இந்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் ஊர்வங்கள், கூட்டங்கள் என்பவற்றுடனும் அதனை நடத்தும் அமைப்புகளுடனும் நாம் அவதானமாக விலகி இருக்க வேண்டுமா?

ஒன்று மட்டும் புரிகிறது. சிலர் தாமும் செய்யமாட்டார்கள் மற்றவரையும் செய்விடமாட்டார்கள். எல்லாம் புலிகள் பார்ப்பார்கள் என்று விட்டு சுகமாக நித்திரை கொள்கிறார்கள்!

************************************************************************

ககோதரா சாணக்கியன் அவர்களே நீங்க எனது கருத்தை தப்பாக புரிந்த விட்டீர்களோ என்று எனக்கு படுகிறது. அதாவது இன்று நாங்கள் ஒரு முக்கிய கட்டத்தில் நிற்கிறோம். சற்று தெளிவாக கூறப்போனால் தமிழீழப் பிரகடனம் என்ற விழிம்பில் நிற்பதாக ஒரு உணர்வு, இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சினைகளை இப்போதைக்கு வேறு வழியாகத் தான் கையாள வேனும். அதாவது என்னும் ஒரு விடயம் என்னவென்றால் தமிழ் மகன் ஒருவரால் எடுக்கப்படும் இது போன்ற எதிர்ப் பிரச்சாரம் எல்லாம் விடுதலைப் புலிகளின் தலையில் தான் போய் விழும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அவர்களுக்கு மேலும் சங்கடத்தை நாங்களே குடுக்கலாமா? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் எனது கருத்தை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டுல அரசியலும் சினிமாவும் இரட்டை மாட்டு வண்டி / இண்டெர்நெட்டும் ப்ரொவ்ஸரும் போல!!! :rolleyes:

தமிழகத்தில் கூட பல ப்ரச்சனைகளுக்கு சுய லாபத்திற்காக மட்டுமே குரல் கொடுத்து வந்துருக்கிறார்..

தற்போதைய தமிழக/இந்திய அரசாவது போராளிகளையும் சாதாரண மக்களையும் பிரித்துப்பார்க்கிறது.

ஒருவேளை இவர் தமிழக முதல்வரானால் தமிழ் பேசும் அனைத்து மக்களையும் பயங்கரவாதி என்று அறிவித்து விடுவார்...

ஈழ மக்களே !!ஜாக்கிரதை!!!

லிசா! நீங்க சொல்றது ரொம்ப தப்பு....

ஒரு தமிழக தமிழனா சொல்றேன்!!!

ரஜினிக்கு ஒரு பெரிய கொள்கை இருக்கு...

அது "சுய லாபம்" - ஒருவேளை அவரது படங்களை ஈழத்தமிழர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றால் ரொம்ப நல்லாவே "வாய்ஸ்" கொடுப்பார்!!

கப்பல் பயணி!!!

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தாம் எமக்காக ஆதரவு தரும் தமிழக உறவுகளான மருத்துவர் தமிழ்குடிதாங்கி, திருமாவளாவன் அவர்கள் சொன்னதற்கு ஏற்ப, தமிழ்ப் பெயர் அல்லாத பெயர்களில் வந்த திரைப்படங்களை புறக்கணிக்கும் படி சொல்ல, கனடா தமிழர் படைப்பாளிகள் கழகமும் வேண்டுகோள் விட 'மும்பை எக்பிரஸ்' என்ற கமலின் திரைப்படத்தினை திரையில் சென்று பார்ப்பதினை புறக்கணித்தேன். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்கட சனம் போய் இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டது. சபேசன் சொல்வது போல ரஜனியின் சிவாஜி படத்தினை ஏற்கனவே புலம் பெயர் தமிழர்கள் காசு கொடுத்து வாங்கி இருந்தால் ரஜனிக்கு நட்டம் ஏற்ப வாய்ப்பிருக்காது. ரஜனியின் படத்தினைப் புறக்கணிக்க முதல் சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியினை முதலில் புலம் பெயர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் பார்ப்பதினைப் புறக்கணிக்க வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் எமது மக்களில் இருந்து எவ்வளவோ பணம் இத்தொலைக்காட்சிகளுக்கு விரயமாகிறது. இத் தொலைக்காட்சிகளில் செய்திகளில் எமக்கு ஆதரவான செய்திகள் வருவது மிகவும் குறைவு. பீடா கடத்துனவர்களையும் புலிகளாக செய்திகள் வெளியிடுகிறது இத்தொலைக்காட்சிகள். வேணுமென்றே தமிழைக் கொலை செய்கிறது இத்தொலைக்காட்சிகள். இத்தொலைக்காட்சி பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. எமக்காக ஆதரவு கொடுக்கும் சீமான், தங்கர்பச்சான். ஜோன், மகேந்திரன், பாரதிராஜா, சத்தியராஜ், அறிவுமதி போன்றவர்களின் படங்களினை புறக்கணிக்கக்கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடித்தாம் எமக்காக ஆதரவு தரும் தமிழக உறவுகளான மருத்துவர் தமிழ்குடிதாங்கி, திருமாவளாவன் அவர்கள் சொன்னதற்கு ஏற்ப, தமிழ்ப் பெயர் அல்லாத பெயர்களில் வந்த திரைப்படங்களை புறக்கணிக்கும் படி சொல்ல, கனடா தமிழர் படைப்பாளிகள் கழகமும் வேண்டுகோள் விட 'மும்பை எக்பிரஸ்' என்ற கமலின் திரைப்படத்தினை திரையில் சென்று பார்ப்பதினை புறக்கணித்தேன். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்கட சனம் போய் இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டது. சபேசன் சொல்வது போல ரஜனியின் சிவாஜி படத்தினை ஏற்கனவே புலம் பெயர் தமிழர்கள் காசு கொடுத்து வாங்கி இருந்தால் ரஜனிக்கு நட்டம் ஏற்ப வாய்ப்பிருக்காது. ரஜனியின் படத்தினைப் புறக்கணிக்க முதல் சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியினை முதலில் புலம் பெயர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் பார்ப்பதினைப் புறக்கணிக்க வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் எமது மக்களில் இருந்து எவ்வளவோ பணம் இத்தொலைக்காட்சிகளுக்கு விரயமாகிறது. இத் தொலைக்காட்சிகளில் செய்திகளில் எமக்கு ஆதரவான செய்திகள் வருவது மிகவும் குறைவு. பீடா கடத்துனவர்களையும் புலிகளாக செய்திகள் வெளியிடுகிறது இத்தொலைக்காட்சிகள். வேணுமென்றே தமிழைக் கொலை செய்கிறது இத்தொலைக்காட்சிகள். இத்தொலைக்காட்சி பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. எமக்காக ஆதரவு கொடுக்கும் சீமான், தங்கர்பச்சான். ஜோன், மகேந்திரன், பாரதிராஜா, சத்தியராஜ், அறிவுமதி போன்றவர்களின் படங்களினை புறக்கணிக்கக்கூடாது

கந்தப்பு.....நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி,

குறிப்பா சன் டிவி யை பாக்காதீங்க...

தெரியாத தேவதையை(சன்) விட தெரிஞ்ச வேதாளம்(ஜெயா) எவ்வளவோ மேல்...

ஜெயலலிதா முதல் நாளிலிருந்தே ஈழத்தமிழருக்கு ஆதரவா பேசியது கிடையாது.....

அதனாலே அந்த அம்மாவிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனா கருணாநிதியும் அவரது குடும்பமும் தன் சொந்த லாபம் கருதியே தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறது...

எங்களையெல்லாம் ஹிந்தி கற்க வேண்டாம் என்று சொன்ன கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஹிந்தி ரொம்ப சரளமாக சோனியாவிடம் பேசுகிறார்!!!

:rolleyes::blink: VCD or FREE download :(:blink:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maapillai annan avarkalai naan ongali sonnavillai it is too late for 30 years enru sonnavaraithan sonnain

  • கருத்துக்கள உறவுகள்

Thamizaka + Indiya sinimavukethiraka oru puthiya por munaiyai thiRappathanal emathu viduthalaip pOrAddaththukku enna nanmai kidaikkum enpathai puriya vaiperkala? lapam ethuvAnAlum athu pulampeyarnthu vazum engkalukku. OK. Naddam ethu? athu yar thalaiyil vidiyum enpathaiyum puriya vaiperkala? iththakaya Nakarvukalin Naddam SingkaLa arasukku sellum enkirerkala? puriyavillaiye

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தயார்!! எமது ஊடகங்களும் தயாரா என்டு கேட்டுச் சொல்லுங்கோ!!!

ஒவ்வொருமுறையும் நாங்கள் புறக்கணிக்க எங்கட "டி" பெயர் கொண்ட ஊடகம் ஒளிபரப்புதுதானே.

  • தொடங்கியவர்

நானும் புறக்கணிப்பிற்கு பூரணமாகத் தயார்! சிவாஜி திரைப்படத்தையோ, அல்லது பாடல்களையோ, நானாகத் தேடிச் சென்று இணையத்திலோ அல்லது தியேட்டரிலோ அல்லது வீசீடீயிலோ பார்க்க மாட்டேன்! கேட்க மாட்டேன்!

ஆனால், தற்செயலாக போகும், வரும் நண்பர் வீடுகளில் அவற்றை பார்க்க, அல்லது கேட்க வேண்டி வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும், என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட புறக்கணிப்பில் உறுதியாக இருகின்றேன்.

அனைவரினதும் ஒத்துழைப்பும் இருந்தால் தான் இதில் நாம் வெற்றி பெற முடியும். ஒரு சிலர் மட்டும் புறக்கணிப்பதில் பயனில்லை.

sivagijs7.jpg

அன்பு நண்பர்களே நண்பிகளே

நான் சிவாஜி படத்தை புறக்கணிக்கப் போவதில்லை ஏனென்றால் நான் விருப்பி படங்கள் பாத்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போதும் கூட மனிசி சண்டை பிடிக்கிறாள் இணையத்தில் படம் அல்லது சண் ரீவி பாக்க போறாளாம்.நானும் கெஞ்சிக் கூத்தாடித்தான் யாழ் பார்க்க முடியுது. என்ன செய்யிறது நமக்கு நேரக்குறைவு.

:Pசரி விடுங்க... நானும் பாக்கிறன் இலங்கை அரசு மாதிரி நாங்களும் பெரும் எடுப்போடுதான் எதையும் ஆரம்பிக்கிறது. (நாங்கள் என்று நான் குறிப்பிடுவது யாழ்கள நண்பர்களை மட்டும்). ஆனால் முடிவு?????? :P

:) யாழ்களம் முதலில் தனது சினிமாவுக்கான பகுதியை மூடுமா? சினிமா நடிகர் நடிகைகளின் முகத்தையோ அல்லது பெயரையோ தமது முகமூடிகளாக கொண்ட பல நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களின் கருத்தென்ன??? :lol:

முதலில் வீட்டை சுத்தப்படுத்தனும்(யாழ்களம் உங்கள் வீடானால்) அப்பு அப்புறம் ஊரை சுத்தப்படுத்தலாம்.

வீட்டுக்குள்ள ஓணாணை வைச்சிட்டு வெளியிள தேட கூடாது பாருங்க அதுதான் நான் சொல்லுறது.

அன்புடன்

வாசகன்

எமது போராட்டத்துக்காக யாழ்களத்தில் உருவாக்கப் பட்ட இன்னொரு தலைப்பையும் வாசித்து ரசியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19942

ம்....பண்ணியில் பண்ணிப்பாருமன்???????????????

இலவசம் என்றால் பொலிடோலாயினும் சிலவேளைகளில் தேவை வரலாம் என்று வேண்டிவைக்குமளவுக்கு சனம் இருக்கும் வரை என்னுடன் பந்தயம் கட்டாதீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறுமனே இங்கே யாழ் களத்தில் இதுபோன்ற விடயங்களை கதைத்து கதைத்து நேரத்தை நான்கு சுவர்களுக்குள் வீணடிப்பதை விடுத்து வித்தியாசமாக யோசித்தால் என்ன?

ஒரு Online petition போன்று ஒன்றை ஆரம்பித்து பல ஆயிரக்கண்கான ஈழத்தமிழர்களை கையொப்பமிட வைத்து அதை நடிகர் சங்கத்தினருக்கும் தமிழ்நாட்டு நடிகர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பினால் என்ன?

அது ஒரு வேளை பலன் தரலாம்..

அவர்களிடம் இருந்து வருகின்ற பதில்களை வைத்து ஒவ்வொரு நடிகர்களின் மன நிலையையும் ஆராய்ந்து அதை அடிப்படையாக வைத்து வேறு ஏதாவது திட்டம் போடலாம்..

இது பற்றிய உங்கடை கருத்து என்ன?

  • தொடங்கியவர்

நல்ல திட்டம், இதை முன்னின்று செய்வது யார்? யாராவது முன்வருவார்களா?

நல்ல திட்டம், இதை முன்னின்று செய்வது யார்? யாராவது முன்வருவார்களா?

கனடா வந்து அழைத்தவரின் குடும்பத்துடன் நிகழ்ச்சி நடத்தியவருக்கு ஈழத்தமிழர் பற்றி நன்றாகத்தெரியும்.படத்தை வேண்டுபவர்கள் வேண்டாமல் விட்டால்சரிதானே! :blink::unsure::rolleyes::mellow::blink::lol::o:D:(

வெறுமனே இங்கே யாழ் களத்தில் இதுபோன்ற விடயங்களை கதைத்து கதைத்து நேரத்தை நான்கு சுவர்களுக்குள் வீணடிப்பதை விடுத்து வித்தியாசமாக யோசித்தால் என்ன?

ஒரு Online petition போன்று ஒன்றை ஆரம்பித்து பல ஆயிரக்கண்கான ஈழத்தமிழர்களை கையொப்பமிட வைத்து அதை நடிகர் சங்கத்தினருக்கும் தமிழ்நாட்டு நடிகர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பினால் என்ன?

அது ஒரு வேளை பலன் தரலாம்..

அவர்களிடம் இருந்து வருகின்ற பதில்களை வைத்து ஒவ்வொரு நடிகர்களின் மன நிலையையும் ஆராய்ந்து அதை அடிப்படையாக வைத்து வேறு ஏதாவது திட்டம் போடலாம்..

இது பற்றிய உங்கடை கருத்து என்ன?

பிறகும் ஏன் தம்பி நாலு சுவருக்குள்ள கருத்தை கேட்டு காலத்தை கடத்தூகிறீர். இது உமக்கு சரி என்று பட்டா உடன செயலில இறங்கும். அல்லது யார் யாரிடமிருந்து Green Signal எதிர்பார்கிறீர்? இங்கு எல்லோரும் சேர்ந்து இதை செய்வம் என்று ஒருநாளும் சொல்லப்போவதில்லை. அல்லது உமது திட்டம் வேறு யாராலும் செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்கிறீறோ?

பண்டிதரிடம் கேளும் கடிதம் எழுதித்தருவார். யார் யாருக்கு அனுப்புவது, அவர்கள் தொடர்புகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தும். இணையத்தளத்தில் போட்டு உடன கருத்துக்கணிப்பை ஆரம்பியும்.

வெற்றி நிச்சயம்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பார்ப்பது பார்க்கமால் விடுவது பெரிதாக ஒன்றும் பிரயோசனமில்லை. திரைஅரங்கில் பார்க்கமால் விடுவது தான் வெளியுலகுக்கு தெரிந்து, திரைஅரங்கில் படம் ஒடவில்லை என்று செய்திகள் போக வாய்ப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் இணையும் போது நான் மட்டும் விலகி நிற்பேனா என்ன?

நீங்கள் எல்லோரும் இணையும் போது நான் மட்டும் விலகி நிற்பேனா என்ன?

நண்பரே,

புரிந்து கொண்டு இணைந்து கொண்டமைக்கு நன்றிகள்!

இன்னமும் தெரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியவைத்து புரிய வையுங்கள்.

எங்களை புறக்கணித்த ரஜனியின் சிவாஜியை புறக்கணிப்போம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் என்னை!!!

நான் இன்ரர்நெட்டில் களவாக பார்த்தே திருவேன்! எனது நண்பர்கள் திரையரங்கிற்கு போகாமல் இருப்பதற்கும் அவர்களிற்கு திருட்டு விசிடி கொடுத்தே திருவேன்.

நீங்குள் இந்தப்படத்திற்கு லாபம் வரக்குடாது என்று நினைக்கிறீர்கள். நானோ நட்டம் வர வைக்கலாம் என்று நினைக்கிறன். என்ன சொல்லுறீங்கள்?

ஒற்றன் கூறியது போன்று நாம் விசுவுக்குக் கொடுத்த மரியாதைக்கு அவர் ஈழத்தமிழர்களை அவர் வாழ்நாளில் மறக்கமாட்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதும் ஈழத்தமிழர்கள்தான் என்பதை மறக்கக்கூடாது. எந்தவொரு விடயத்திற்கும் நமது மக்களிடையேயே எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைக் கண்டு நாம் மனம் தளரக்கூடாது. இதனை நாம் முன்னின்று நடத்தவேண்டும் என்பது எனது வேண்டுகோள். படம் திரையில் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. இதனை ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறிய போராட்டமாகத் தொடங்கினால் நன்றாக இருக்கும். அதை மீறி அவர்கள் திரையிட்டாலும் அத்திரையரங்கின் முன் 10-15 இளைய தலைமுறையினர் நின்று போராடினால் நாளடையில் அதனை நிறுத்தினாலுமே எமக்கு வெற்றிதான்.

1990ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் (92 அல்லது 93 என நினைக்கிறேன்) ரஜினியின் நிகழ்வொன்று ரொறன்ரோவில் நடக்கவிருந்தது. அந்நிகழ்வு உலகத்தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புடையவர் ஒரிவரினால் நடத்தப்படவிருந்தது. அதனால் அது உலகத்தமிழர் இயக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டதென ஒரு தவறான கருத்து மக்களிடம் பரப்பப்பட்டது. இதனை அறிந்த அப்போதைய உலகத்தமிழர் இயக்கப்பொறுப்பாளர் உலகத்தமிழர் பத்திரிகையில் 'அந்நிகழ்விற்கும் உலகத்தமிழர் இயக்கத்தினருக்கும் எவ்வித சமபந்தமும் இல்லை'யென ஒரு சிறு விளம்பரம் செய்யப்பட்டது. அதனால் அந்நிகழ்வு மாபெரும் தோல்வியாக முடிந்தது. அதனால்தான் ஈழத்தமிழர்களின் நிகழ்வுகளுக்கு ரஜினி செல்வதில்லை. இன்றுவரை அவர் சொந்தவிடயமாகக்கூட ரொறன்ரோ வந்ததாக நான் கேள்விப்படவில்லை. பலதடவைகள் அமெரிக்கா வந்திருந்தாலும், அதற்கு அண்மையிலிருக்கும் ரொறன்ரோவிற்கு வராதது மிகப்பெரிய செய்தியைக் கூறுகிறது.

விசு, ரஜினி போன்று எஸ்.வி.சேகருக்கும் இதேமாதிரி கனடாவில் 'மரியாதை' கொடுக்கப்பட்டது. சிவாஜி படத்தை எதிர்ப்பதற்கு நாம் நிறையப்பாடுபட வேண்டியிருக்காது. சாணக்கியன் போட்டுள்ள படத்தை நாம் விநியோகித்தாலே எமக்கு வெற்றி கிடைக்குமென நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.