Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா? 83 members have voted

  1. 1. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

    • ஆம்!
      58
    • இல்லை!
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

Mar 24 2007, 02:32 AM அன்று இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டது. உங்கள் எண்ணங்களை திரும்பவும் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சிவாஜி படத்தை புறக்கணிபு செய்திருந்தால் அறியத்தரவும்...

நான் சிவாஜி படத்தை பார்க்கவோ அல்லது பாடல்களைக் கேட்கவோ இல்லை. எதிர்காலத்திலும் தற்செயலாக எதிர்பாராதவிதமாக பார்க்க நேர்ந்தால் ஒழிய நானாகப் போய் இந்தப்படத்தை பார்க்கமாட்டேன்.. பாடல்களையும் நானாக கேட்டமாட்டேன்...

ரஜினியின் அடுத்த ரிலீசைப் பார்க்க நீங்கள் ரெடியா?

  • Replies 135
  • Views 15.4k
  • Created
  • Last Reply

ரஜினியின் அடுத்த ரிலீசைப் பார்க்க நீங்கள் ரெடியா?

நான் ரெடி மாப்பி

:P

வடிவேலின் நண்பர்கள் கள்ளச் சிடி வெளியிடுவதாக உறுதியளித்துள்ள நிலையில், படத்தை பார்த்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையுடன் இருக்கவும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பார்ப்பது பார்க்கமால் விடுவது பெரிதாக ஒன்றும் பிரயோசனமில்லை. திரைஅரங்கில் பார்க்கமால் விடுவது தான் வெளியுலகுக்கு தெரிந்து, திரைஅரங்கில் படம் ஒடவில்லை என்று செய்திகள் போக வாய்ப்பாக இருக்கும்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நீங்க சொன்னா சரி தான்

:rolleyes::lol: :P :lol: :P

புறகணிக்கப்போவதில்லை என்று வாக்களித்தேன், ஏன்னா டிக்கட் விலை குறைந்ததும் போய் பார்க்கலாமுன்னு இருக்கேன். மத்தவங்களை மாதிரி உள்ளே ஒன்னு வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசி எனக்கு பழக்கமில்லை பாருங்கோ.

இதெல்லாம் பேச்சோடு போச்சு...

செயல்வீரர் யார்..

நானில்லை

ரஜினி கோச்சுக்குவாரா நான் பாக்காட்டி :D

நாம் எங்கே போய்கொண்டு இருக்கிறோம், திருட்டு வீசிடி வெளியிடுவதால் நம் தேவைகள் பூர்த்தி அடையுமா?

முன்னேற துடிக்கும் ஒரு சமுகத்தில், "அடுத்தவரை அழித்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம்" அவ்வளவு உகந்ததல்ல. மாறாக இதே படத்தை ஏதாவது ஆக்க காரியங்களுக்கு பயன் படுத்தமுடியுமாஎன்று ஏன் சிந்திக்க கூடாது.

நான் ரஜினி ரசிகன் இல்லை, ஏன் சினிமா ரசிகனுமில்லை.

ஆனால் நமது எண்ணங்கள் முன்னேற்றத்தினை நோக்கியதாக இருக்க வேண்டும் என் விரும்புகிறேன். பிழை இருப்பின் சுட்டிகாட்டவும்.

பிகு. ரஜினி மட்டுமல்ல எந்த ஒரு சினிமா பிரபலமும் தமிழீல மக்களுக்காக குரல் தராத நிலையில், ரஜினியை மட்டும் குறிவைப்பதேன். கமல் சொந்த ரத்தம், அவரும்தான் அமைதியாக இருக்கிறார்.

Edited by கர்ணன்

ஆனாலும் கமலஹாசன்

"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா

என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா"

என்று பாடி மோடி மஸ்தான் வித்தை எல்லாம் காட்டி தமிழரை ஏமாற்றி கொண்டிருக்கவில்லை.

காவிரி பிரச்சினையில் தெரிந்ததே இந்த போலி சினிமா சாமியாரின் கன்னட வெறி.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் புறக்கணிப்பிற்கு பூரணமாகத் தயார்! சிவாஜி திரைப்படத்தையோ, அல்லது பாடல்களையோ, நானாகத் தேடிச் சென்று இணையத்திலோ அல்லது தியேட்டரிலோ அல்லது வீசீடீயிலோ பார்க்க மாட்டேன்! கேட்க மாட்டேன்!

ஆனால், தற்செயலாக போகும், வரும் நண்பர் வீடுகளில் அவற்றை பார்க்க, அல்லது கேட்க வேண்டி வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும், என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட புறக்கணிப்பில் உறுதியாக இருகின்றேன்.

அனைவரினதும் ஒத்துழைப்பும் இருந்தால் தான் இதில் நாம் வெற்றி பெற முடியும். ஒரு சிலர் மட்டும் புறக்கணிப்பதில் பயனில்லை.

மிஸ்டர் கலைஞன் உங்களிடம் பல திறமைகள் இருப்பது போல தெரிகின்றது. அதை வெளிப்படுத்தாது எதற்கு உங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் இப்படியான செயற்படுத்த முடியாத செயற்பாடுகளுக்காக செலவழிக்கின்றீர்கள்?

இப்படத்தை தயாரித்தவர்கள் நட்டமடைவதால் உங்களுக்கு என்ன நன்மை?இது என்ன இலங்கை நாட்டில் தயாரிக்கப்பட்ட படமா? அல்லது ஈழத்தமிழருக்கும் இந்த படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? இந்த படம் வருவாய் ஈட்டும் போது, அதில வரும் வருமானம் எந்தவொரு கெட்ட காரியத்திற்காகவாவது பயன்படுத்தப்பட போகின்றது என நினைக்கின்றீர்களா? அல்லது படத்தை புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அடையப்போகும் நன்மை என்ன? ஒரே ஒரு விடயம், நீங்கள் இப்படத்தை புறக்கணிப்பதன் மூலம் சம்பாதிக்க கூடிய ஒன்றே ஒன்று, தென்னிந்திய சினிமா துறையின் வெறுப்பை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க போகின்றீர்கள். தென்னிந்திய சினிமாவை நம்பி ஈழத்தமிழர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். (படம் பார்ப்பதற்காக அல்ல, பணம் சம்பாதிப்பதற்காக) நாட்டுப்பற்று இருக்கத்தான் வேண்டும் அதற்காக அதைக்கொண்டு வந்து எல்லா இடத்திலும் திணிக்கக்கூடாது. அதன் விளைவுகள் நம்மையே தாக்கக்கூடும். தென்னிந்திய சினிமாவில், ஈழத்தமிழர் பிரச்சனையை தப்பான வடிவில் காட்டி இந்திய தமிழரது வியாபாரத்திற்கு ஈழத்தமிழர் எதிரி, இந்திய தமிழர் பலரது வாழ்க்கை, வருமானம் ஈழத்தமிழரால் அழிந்து போகின்றது என்ற ரீதியில் ஒரு படம் வெளியானால், குறைந்த பட்சம் 70வீதமான இந்திய தமிழரது எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள். சம்பாதிப்போம். இன்னுமொருவிடயம், சிவாஜி படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவர்களுக்கு போதுமான அளவு வியாபரம் உள் நாட்டிலேயே நடக்கும்.

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லோரும் இணையும் போது நான் மட்டும் விலகி நிற்பேனா என்ன?

மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக எதையும் செய்யாதீர்.... அப்படி செய்பவர்கள் சுயசிந்தனை ஆற்றல் அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தயார்!! எமது ஊடகங்களும் தயாரா என்டு கேட்டுச் சொல்லுங்கோ!!!

ஒவ்வொருமுறையும் நாங்கள் புறக்கணிக்க எங்கட "டி" பெயர் கொண்ட ஊடகம் ஒளிபரப்புதுதானே.

உம்மைப்பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. யாழில் உமது பெயர், போட்டு இருக்கும் அவதார் போன்றவற்றை மாற்றி விட்டு இதைப்பற்றி நீங்கள் பேசினால், அதில் ஒரு கருத்து இருக்கலாம்.

மிஸ்டர் கலைஞன் உங்களிடம் பல திறமைகள் இருப்பது போல தெரிகின்றது. அதை வெளிப்படுத்தாது எதற்கு உங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் இப்படியான செயற்படுத்த முடியாத செயற்பாடுகளுக்காக செலவழிக்கின்றீர்கள்?

இப்படத்தை தயாரித்தவர்கள் நட்டமடைவதால் உங்களுக்கு என்ன நன்மை?இது என்ன இலங்கை நாட்டில் தயாரிக்கப்பட்ட படமா? அல்லது ஈழத்தமிழருக்கும் இந்த படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? இந்த படம் வருவாய் ஈட்டும் போது, அதில வரும் வருமானம் எந்தவொரு கெட்ட காரியத்திற்காகவாவது பயன்படுத்தப்பட போகின்றது என நினைக்கின்றீர்களா? அல்லது படத்தை புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அடையப்போகும் நன்மை என்ன? ஒரே ஒரு விடயம், நீங்கள் இப்படத்தை புறக்கணிப்பதன் மூலம் சம்பாதிக்க கூடிய ஒன்றே ஒன்று, தென்னிந்திய சினிமா துறையின் வெறுப்பை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க போகின்றீர்கள். தென்னிந்திய சினிமாவை நம்பி ஈழத்தமிழர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். (படம் பார்ப்பதற்காக அல்ல, பணம் சம்பாதிப்பதற்காக) நாட்டுப்பற்று இருக்கத்தான் வேண்டும் அதற்காக அதைக்கொண்டு வந்து எல்லா இடத்திலும் திணிக்கக்கூடாது. அதன் விளைவுகள் நம்மையே தாக்கக்கூடும். தென்னிந்திய சினிமாவில், ஈழத்தமிழர் பிரச்சனையை தப்பான வடிவில் காட்டி இந்திய தமிழரது வியாபாரத்திற்கு ஈழத்தமிழர் எதிரி, இந்திய தமிழர் பலரது வாழ்க்கை, வருமானம் ஈழத்தமிழரால் அழிந்து போகின்றது என்ற ரீதியில் ஒரு படம் வெளியானால், குறைந்த பட்சம் 70வீதமான இந்திய தமிழரது எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள். சம்பாதிப்போம். இன்னுமொருவிடயம், சிவாஜி படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவர்களுக்கு போதுமான அளவு வியாபரம் உள் நாட்டிலேயே நடக்கும்.

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள தக்கது தான்

  • தொடங்கியவர்

மன்னிக்கவும், இது நான் தொடங்கிய திட்டம் அல்ல.... வேறு ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தந்து ஆதரவு கேட்டார். கேட்டது நியாயமாகப்பட்டது. ஆதரவு கொடுக்கின்றேன்... அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும், இது நான் தொடங்கிய திட்டம் அல்ல.... வேறு ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தந்து ஆதரவு கேட்டார். கேட்டது நியாயமாகப்பட்டது. ஆதரவு கொடுக்கின்றேன்... அவ்வளவுதான்!

கொலை செய்யும் குற்றத்தை விட, செய்யத்தூண்டும் குற்றம் பாரதூரமானது...

Edited by chumma....

  • தொடங்கியவர்

புரியவில்லை.... சிவாஜி படத்தை புறக்கணிக்குமாறு ஆதரவு கேட்பது கொலைக் குற்றத்திற்கு ஒப்பானதோ? இது அவரவர் விருப்பம், ஒருவரையும் புறக்கணிக்குமாறு வற்புறுத்தவில்லை... இது ஜனநாயக தேசம்.. விருப்பமென்றால் புறக்கணிக்கலாம்... விருப்பமில்லையென்றால் பார்த்து ரசிக்கலாம்... அவரவர் தேர்வு...

நமக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்ககூடும். இந்த பக்கத்தை விட்டு ஆரோக்கியம்மான அல்லது நாலு பேருக்கு பயனளிக்ககூடிய விசயத்தை பற்றி ஏன் யோசிக்ககூடாது.

இங்கே பலரும் திறமையானவர்கள், அதை ஆக்க காரியங்களுக்கு பயன் படுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சிவாஜி 15 திகதி வந்து இந்தியாவ விட வெளிநாடுகள்ள தான் சக்க போடு போடபோது அதுவும் அவுஸ்திரேலியால டிக்கெட் எல்லாம் இப்பவே booked இதுக்குள் நீங்கள ஏணப்பா சண்டை பிடிக்கிறிங்க...புறக்கணிக்க போறதெண்டு சொல்லுறாக்கள் கண்டிப்பா திருட்டு டிவிடி ல பாப்பிங்க........... :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லை.... சிவாஜி படத்தை புறக்கணிக்குமாறு ஆதரவு கேட்பது கொலைக் குற்றத்திற்கு ஒப்பானதோ? இது அவரவர் விருப்பம், ஒருவரையும் புறக்கணிக்குமாறு வற்புறுத்தவில்லை... இது ஜனநாயக தேசம்.. விருப்பமென்றால் புறக்கணிக்கலாம்... விருப்பமில்லையென்றால் பார்த்து ரசிக்கலாம்... அவரவர் தேர்வு...

மிஸ்டர், ஒரு விடயத்தை செய்வதை விட, செய்யத்தூண்டுவது அதிக குற்றம் என்று சொல்ல வந்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மணித்தியாலங்களைப் பாழ் செய்வதற்குச் சமன் எந்த ரஜினி படத்தையும் பார்ப்பது. இது இப்போது வர வர அனைத்து கோடம்பாக்கத் தயாரிப்புகளுக்கும் பொருந்தும். இதைச் செய்வதோடு இப்படி ஒன்று நடக்கிறது என்று செய்தியைக் கசிய விட்டாலும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மைப்பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. யாழில் உமது பெயர், போட்டு இருக்கும் அவதார் போன்றவற்றை மாற்றி விட்டு இதைப்பற்றி நீங்கள் பேசினால், அதில் ஒரு கருத்து இருக்கலாம்.

முதலில் உமது பெயரை பார்க்கவும்!

மிஸ்டர், ஒரு விடயத்தை செய்வதை விட, செய்யத்தூண்டுவது அதிக குற்றம் என்று சொல்ல வந்தேன்...

இப்ப யார் உங்களை தூண்டினது?

உமக்கு சுய அறிவு ஒன்று இருக்கு தானே அதை வைத்து சிந்திக்கலாமே! நாங்கள் எது சொன்னாலும் நீர் செய்துவிடுவீரா?

இங்கு யாரும் உங்களை தவறு செய்ய தூண்டவில்லையே!! ஒரு படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது உமக்கு தவறா? அப்படி என்றால் சிறு வயதில் பெற்றோர்கள் அது செய்யாதே இது செய்யாதே என்று சொல்லும் போது என்ன செய்தனீர்???

நான் திரையரங்கு சென்று பார்ப்பது இல்லை என ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்.

இங்கே தியேட்டரில் பார்க்கும் புத்திசாலிகள் யாரும் கிடையாது.

இலவச இனைய பக்கங்கள் எத்தனையோ இருக்கும் போது, தியேட்டரில் போய் பார்ப்பார்கள் என்று யாரையும் என்ன வேன்டாம்.

97 கருத்துகள் (என்னுடைதையும் சேர்த்து) வெட்டிவாதம்,

இதை இதர்க்குமேலும் தொடர்வது விதண்டாவாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிப்பை விட இன்னுமொன்று முக்கியமானது.

எமக்கு ஆதரவாக உள்ள தமிழகத் திரையுலகினரின் படங்களை நாம் திரையில் சென்று பார்த்து அவர்களுக்கு வரவேற்புக் கொடுக்க தயாராக இருக்கிறோமா?

உதாரணமாக சீமான், சத்தியராஜ், தங்கர்பச்சான் போன்றவர்களின் படங்களை வரவேற்கத் தயாரா?

சபேசன்,

வீராச்சாமி ராஜேந்தரை ஏன் விட்டீர்கள்? நீங்களும் சறுக்கிவிட்டீர்களே?

சீமானின் தம்பி படத்தை வெற்றிபெற வைத்துக் காசு கொட்டி ஈழத்தவர்கள் வீராச்சாமிக்கு அப்படிச் செய்யாதது நம்பிக்கைத் துரோகமென்றே நான் சொல்வேன்.

இப்போது ஆதரவளிக்க வேண்டிய பட்டியலிலும் அவரின் பெயரை விட்டுவிட்டது, திட்டமிட்ட புறக்கணிப்பாகவே எனக்குப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களைப் புறக்கணிப்பது போலவே ஈழத் தமிழருக்காக எதுவும் செய்திடாத மைக்ரோ சொப்ட் பில்கேட்சின் விண்டோஸ் வெளியீடுகளையும் புறக்கணிப்போம்.

முக்கியமாக நமது புனைபெயர்களாக ஈழத் தமிழருக்காக 5 சதமும் தராத வடிவேலு போன்றவரின் பெயர்களைச் சூட்டுவதையும் அவர்களின் படங்களைப் பயன்படுத்துவதையும் புறக்கணிப்போம். தயாரா..

நான் (வடிவேல்) உங்களுக்கு 5 சதம் தாறேன் என்டு ஏதாவது மேடையிலயோ இல்லை படத்திலயோ வீர வசனம் விட்டனானோ? இல்லை என்ர படத்தை பாருங்கோ என்டு உங்களிட்ட வந்து அழுதனானோ? என்ர பெயர் பிடிக்கேலை என்டா யாழ் நிர்வாகத்துக்கு சொல்லி என்னை தடை செய்யுங்கோ!

சும்மா நீங்கள் முட்டாள் தனமா அவன் எங்ளுக்கு இது செய்வான் அது செய்வான் என்டு கனவு கண்டுட்டு பிறகு அது பொய்யானவுடன சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ட கதை தான்.

இதோட எத்தின தேரம் சொல்லீட்டன் என்டு எனக்கே தெரியா. வடிவேல் எப்படி பட்ட மனிதர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரின் நகைச்சுவைகளை நான் நன்றாக ரசிப்பேன். ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு அவரை பிடிக்கும்.

இங்க இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் கானக்குயில் 2007 நடந்தது. அதில உங்கட தமிழ்த்தேசிய தொ(ல்)லைக்காட்சியில வாற சாரு என்டவர் வடிவேலின்ர நகைச்சுவைகளையும் இடைக்கிட எடுத்து விட்டவர். அவருக்கு ஒருக்கா ஒரு மெயிலோ அல்லது கடிதமோ எழுதி அனுப்பினீங்கள் என்டால் கோடி புண்ணியம் உங்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.