Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!

Featured Replies

  • வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!
 
 

வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!

வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GIFT & CRAFT ) சில பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

28870402_190603135048629_65852108476805028870366_190603031715306_48220624286325928870207_190603005048642_31425843662539228795680_190603041715305_81227904665640428795175_190602988381977_41480660424534528685485_190603045048638_18802787795328128685443_190603311715278_81529816366089528661297_190603225048620_69450888593898128660420_190603148381961_60278240734129128576549_190603121715297_82499269140583928870811_190603218381954_781851751155139

http://newuthayan.com/story/85323.html

  • தொடங்கியவர்

வணக்கம் தாய்நாடு...

IBC தமிழ் நிறுவனத்தின் நலிந்தோரை ஊக்குவிக்கும் கைத்தொழில் பேட்டை

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன!

எனக்குள்ள கவலையெல்லாம்....வனைந்தவர்களுக்கு வருமானத்தின் பெரும்பகுதி போய்ச் சேர வேண்டும்..என்பதே!

ஊமல் கொட்டைக்குள்ளையும்....எவ்வளவு அழகு புதைந்து போய்க் கிடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

வேற்று இனத்தவர்களுக்கு அழகியல் பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கும்போது பெரு விருப்போடு வாங்கிக் கொள்வார்கள் தாத்தா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, யாயினி said:

வேற்று இனத்தவர்களுக்கு அழகியல் பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கும்போது பெரு விருப்போடு வாங்கிக் கொள்வார்கள் தாத்தா..

வடிவு பாக்க  சோக்கேசுக்கை வைக்கிற மாதிரி  இல்லாமல் டெய்லி பாவிக்கக்கூடியமாதிரி  பொருட்களை வாங்கி குடுங்கோ......இனிவரும் சமுதாயத்துக்கு எங்கடை முன்னோர் பாவித்த உமல்,பன்பை....பனையோலையிலை இழைச்ச கடகம் பெட்டி பாய்கள் தான் அவசியம் தேவைப்படும். 
இப்ப இஞ்சை ஒரு சில கடையள்ளை பிளாஸ்டிக் எண்ட கதைக்கே இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

கனடாக்காரருக்கு மட்டுமல்ல... இயற்கை மீள் சுழற்சிக்கு உட்படக் கூடிய இந்த இயற்கை தாவரங்களின் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் இந்த உற்பத்திகள்.. உலக சந்தைகளை உருப்படியாக எட்டின்.. இவற்றின் வருவாய் என்பது எமது தேசத்தின் பொருண்மிய மீட்சியில் பெரும் பங்களிப்புச் செய்யும்.

இந்த உற்பத்திப் பொருட்கள் பனை.. தென்னை கழிவுகளில் இருந்து உற்பத்தியாவதால்.. அத்தாவர வளங்கள் அழிக்கப்பாடமல்... பெருக்கப்பட வாய்ப்பும் உருவாக்கப்படும். 

இன்று உலகம்.. பிளாஸ்ரிக்கில் இருந்து மீள்வது பற்றிச் சிந்திக்கும் இந்த நிலையில்... இந்த பொருட்களின் சர்வதேச நுழைவு என்பது எமது பொருண்மியத்துக்கு பலம் சேர்க்கும். அதனால்.. நலிவுற்றிருக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்யலாம். ஆனால்.. இதய சுத்தி வேண்டும். ஈட்டப்படும் பொருண்மியம் அந்த மக்களைச் சரியாகச் சென்றடைய.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகள் முழுதும் இயற்கையை விரும்புதுகள் நம்ம சனம் மட்டும் பிளாஸ்டிக்கில நின்று மல்லுக்கட்டுதுகள் எவராச்சும் ஒரு துணிப்பையை வைத்து பயன்படுத்துகிறார்களா

ஒருவன் சாமிகிட்ட வரம் கேட்டானாம் அதுவும் சாகாவரம் சாமியும் பொலித்தீனாக மாறு என்று சொன்ன கதயாக்க்கிடக்கு :11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.