Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்

Featured Replies

வேற பெயரில வந்து விக்கிறாறோ......யாருக்குத் தெரியும்?

  • Replies 275
  • Views 59.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பஸில் ராஜபக்ஸ நோர்வே விஜயம்

சிறீலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ நோர்வே சென்று அதிகாரபரவலாக்கல் மற்றும் சமாதான முயற்சிகள் தொடர்பாக நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொது அமெரிக்காவில் இருக்கும் அவர் அங்கிருந்து இந்தவாரம் ஒஸ்லோ செல்லவுள்ளதாக அறியமுடிகிறது.

- பதிவு

மோகன் அண்ணா,

இந்தச் செய்தியை தவறான இடத்தில் இணைத்துவிட்டேன் என்று இடம்மாற்றிவிடாதீர்கள்

இதனை இணைப்பதற்கு இதைவிடப் பொருத்தமான இடம் தெரியவில்லை.

மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை மோசடிக்கு அத்திவாரம்.

BBC இணையத்தளத்தில் TEAF (Tamil Eelam Air Force) படங்கள்!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6494121.stm

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உல்லாசப் பயணத்துறையை முழுமையாக முடக்கக்கூடிய அளவிற்கான பிரச்சாரங்களைப் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டில் நாயக்கர் :P மீது தாக்குதல் நடைபெற்ற சமயம் நிதர்சனம் இணையம் தனது செய்மதி மூலம் எடுத்த படத்தை கீழே காணலாம்.

biaat0.jpg

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு!

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார், அதான் ச்சும்மா ஒருக்கால் நிதர்சனத்தின் இணையச் செய்தியில் ஏதாவது ஒண்மை இருக்குமோ? என்று பரிசோதித்துப் பார்த்தேன்!

sky தலைப்புச் செய்திகளில் இரவு பூராவும் இந்தப்படம் போடப்பட்டது. கூகிள் ஏர்த் சார்பாக..!

தாக்குதல் அழிவுகள் வெளிவர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. மதிப்படப்படுபவை அளவுக்கு அதிகமாக இருப்பது நமக்குத்தான் நல்லதல்ல..!

வான்புலிகளின் துணிகரத்தாக்குதலை பாராட்டியேதான் ஆக வேண்டும். சிறீலங்கா விமானப்படை நடத்திய முதல் தாக்குதலில் யாழ் கொக்குவில் தாவடியில் பொதுமக்கள் பலர் உடல் சிதறிப் பலியாகினர். அதற்கு இத்தாலிய தயாரிப்பு சீமாசெட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன..! அது பகல் நேரத் தாக்குதல். இரவில் துல்லியமாக இலக்கைத் தாக்கும் தகுதியை சில மேற்குலக நாடுகள் மட்டுமே கொண்டிருந்தன. தற்போது புலிகள் கூட இரவு துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளனர்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உல்லாசப் பயணத்துறையை முழுமையாக முடக்கக்கூடிய அளவிற்கான பிரச்சாரங்களைப் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

உண்மைதான் மணிவாசகன் எங்கள் பரப்புரையை நாங்கள் மிக வேகமாக துரிதப் படுத்த வேண்டும்.

களத்தில் நிற்கும் அந்தப் போராளிகளுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்கவேண்டும். இங்கு நாங்கள் செய்ய வேண்டியது பங்களிப்பையும் பரப்புரையையும்தான். அனைவரும் ஒன்று திரள்வோம்.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sky தலைப்புச் செய்திகளில் இரவு பூராவும் இந்தப்படம் போடப்பட்டது. கூகிள் ஏர்த் சார்பாக..!

தாக்குதல் அழிவுகள் வெளிவர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. மதிப்படப்படுபவை அளவுக்கு அதிகமாக இருப்பது நமக்குத்தான் நல்லதல்ல..!

வான்புலிகளின் துணிகரத்தாக்குதலை பாராட்டியேதான் ஆக வேண்டும். சிறீலங்கா விமானப்படை நடத்திய முதல் தாக்குதலில் யாழ் கொக்குவில் தாவடியில் பொதுமக்கள் பலர் உடல் சிதறிப் பலியாகினர். அதற்கு இத்தாலிய தயாரிப்பு சீமாசெட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன..! அது பகல் நேரத் தாக்குதல். இரவில் துல்லியமாக இலக்கைத் தாக்கும் தகுதியை சில மேற்குலக நாடுகள் மட்டுமே கொண்டிருந்தன. தற்போது புலிகள் கூட இரவு துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளனர்..! :rolleyes:

நிச்சயமாக வாயில் விரலை வைக்கும் செயல் தான் புலிகளின் வான் தாக்குதல். ஆனல் இங்கு பலர் அளப்பது போல் உண்மயில் பெரிய அழிவுகளை உண்டுபண்ணினார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேன்டும் இங்கு கரும்புலிகளின் இழப்புக்கு பதிலாக இரண்டு உலங்கு வான் ஊர்திகளின் சேததுக்கும் இரன்டு கடற்படையினரின் இழப்பையும் தான் (சிங்கள செய்திகள் சொல்ல்வது போல்) கன்டோம் என்றால்....இது சிங்கள வெறியர்களை ஆட்டம் காண வைக்கும் என்றால் நிச்சயமாக இல்லை. இனிமேலும் தொடர்ந்து எப்பேற்பட்ட தாகுதல்களை புலிகள் நடத்தபொகின்றார்கள் எந்த அளவில் இங்கு அவர்களுடைய விமானத்தாகுதல் அமையப்போகின்றது என்பதை நாம் தொடர்ந்தும் பார்கத்தான் போகின்றோம் அது வரை அளவுக்கு மீறி அளக்காமல் அடக்கி அளப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பதினொரு பக்கங்களில் விமானத்தாக்குதல் பற்றி எழுதப்பட்டிருக்கின்றது.

ஆனால் ஒருவர் கூட கட்டுநாயக்கா விமானத்தளத்தை அழித்திருக்கவேண்டும் என்றோ அல்லது

பிரயாண விமானங்களை தாக்கியிருக்கவேண்டும் என்றோ கூறவில்லை.

மிகவும் பெருமைப்படக்கூடியவிடயம்

அதேநேரம் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்தே தலைமையும் இயங்கவேண்டியிருப்பதால்

எமது மக்கள் அவசரப்படுவதுபோலெல்லாம் தாக்குதல்களை செய்யமுடியாது போகலாம் அல்லவா???

அப்படியான சந்தர்ப்பங்களில் நாம் பொறுமை காப்போமாக.....

தவறி ஏதாவது நடந்திருந்தால் இதற்குள் எத்தனை அறிக்கைகள் வந்திருக்கும்

அறிக்கைகள் கைவசம் தயாராக இருந்தாலும் அதைவெளியிட ஏதாவது காரணம் வேண்டுமல்லவா???

_42726939_tigersplane_afp203b.jpg

Photo AFP !!?? :rolleyes::D :D....

அர்ரா அர்ரா....

BBC

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://de.bluewin.ch/news/index.php/intern...20070326:brd001

வெற்றி வெற்றி வெற்றி!!

என்றுமே இல்லாதவாறு சுவிசிலிருந்து வெளிவரும் இணையத்தளம் சற்று வித்தியாசமான செய்தியை வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் (பயங்கரவாதிள் என்பது பாவிக்கப்படவில்லை) முதன் முறையாக ஆகயாத்தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் விடுதலைப்புலிகள் மிக் ரக விமானங்களை குறி வைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் ரவிநாத ஆர்யசிங்க(?!?!?) வெளிநாட்டிற்கான பயணங்கள் சற்று தடைபட்டதாக தெரிவித்துள்ளார்.

அப்பாவிக்பொதுமக்கள் மீது மேலும் குண்டுகள் வீசப்பட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் தொடருமென புலிகள் எச்சரித்துள்ளனர் என மேலும் அச் செய்தியில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_42726939_tigersplane_afp203b.jpg

Photo AFP !!?? :rolleyes::D :D....

அர்ரா அர்ரா....

BBC

நம்மட தமிழ் இணையங்களை விட மோசமானதோ AFP?

வெற்றி வாகை சூடும் நாள் வெகுதொலைவில் இல்லை. வாழ்த்துக்கள் வான் புலிகளிற்கு. எம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை மிகமிக ஆழமாக நிருபித்திருக்கின்றார்கள்.

மிகமிக கனமாக புரிந்துகொள்ளக்கூடிய ஓரு விடயம் என்னவென்றால் சேதவிபரங்கள் எம்மைப் பொறுத்தவரையில் தற்சமயம் தேவையற்றவை.

இராணுவத்தினரினதும் ஓட்டுக்குழுக்களினதும் மனநிலை மிகமிக மோசமான அளவிற்கு கிலிகொள்ளப்பட்டிருப்பதுதான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மட தமிழ் இணையங்களை விட மோசமானதோ AFP?

அப்படியல்ல சினேகி. AFP நிறுவனத்திற்கு அப்படங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அதை மற்றவர்களுக்கு வழங்குகின்றார்கள். அவர்களிடம் இருந்து எடுக்கும் போது அவர்களது பெயர் குறிப்பிடப்படுகின்றது. AFP இப்படங்களை எடுத்து வழங்குவதே நமக்கு நன்மை தானே :rolleyes:

இது ஒரு யுத்த மீறல். எனவே புலிகளிடம் விளக்கம் கோரப்படும் என்று கண்காணிப்புக்குழு இன்னமும் சொல்லக் காணோம் :P :P அதோட நோர்வேத் தூதரும் புலிகளின் தலைமையுடன் பேச வெளிக்கிடுறதாவும் செய்தியைக் காணோம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிறிலங்கா வான்படையினர் வான் தாக்குதல்

ஜதிங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007இ 14:58 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

சிறிலங்கா வான்படையினரின் வான்படைத் தளம் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் அழிவுகளை மறைக்கும் நோக்கில் சிறிலங்கா வான்படையினரின் கிபீர் வானூர்திகள் வன்னிப் பகுதியில் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

வன்னிப் பகுதியில் உள்ள வெள்ளாங்குளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக வன்னிப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன

திங்கள் 26-03-2007 13:05 மணி தமிழீழம் ஜமோகன்ஸ

ரணிலின் 58வது பிறந்த தினம் தாய்லாந்தில் கொண்டாடட்பட்டுள்ளது.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தாய்லாந்து சென்றிருக்கிறார்.

அங்கு அவர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கொண்டாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியார் மைத்ரேயி மற்றும் கட்சியின் மூத்த பிரமுகரும் தனது நெருங்கிய நண்பருமா கிய மாலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பாங்கொக் சென்றிருக்கிறார்கள்

விடுதலைப் புலிகளின் வான் படை தாக்குதல் நடத்திய நேரம் இலங்கையர் கிரிக்கெட் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். அசமந்தப் போக்குடன் இருக்கும் எந்த ஒரு தருணத்தையும் சாதகமாக்கிக் கொள்ளும் திறன் மற்றும் சாணக்கியம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை இத் தாக்குதல் காட்டி நிற்கிறது.

தாக்குதல் இலக்கு கூட பொது மக்களை பாதிக்காத வகையில் நடத்தியிருப்பது உலக அரசியல் விமர்சகர்களை மட்டுமல்ல இராணுவ மேதைகளைக் கூட ஆச்சிரியப்பட வைக்கும் என்பது மிகையாகாது. தவிரவும் தாக்குதல் நடத்திய விமானங்கள் பத்திரமாகத் திரும்பியது என்பது

இலங்கை வான் படையின் அல்லது இலங்கை இராணுவ பலகீனத்தை அம்பலப்படுத்துகிறது.

உலக வரலாறில் விடுதலைப் போராளிகள் முதல் முறையாக வான் படைத் தாக்குதல் ஒன்றை நடத்தியது இதுவே முதல் முறை எனவே சாதனை படைத்த தமிழர் வான் படைக்கு

வாழ்த்துகள்........... பலத்தாலும் தொகையாலும் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது

லட்சியம் என்பது அதையும் தாண்டிய ஒன்று.

விமானத்தாக்குதல் ஆச்சரியமளிக்கிளது – தோப்பனூர் ஓமர்சன்

நேற்று விடுதலைபுலிகளின் வான்வழித் தாக்குதல் தொடர்பில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘வான் வழித்தாக்குதல்களை நடாத்திவிட்டு விமானங்கள் தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.’

ஆவர் மேலும் தெரிவிக்கையில் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

இந்தியச் செய்தி ஓன்றில் இலங்கை அரசு புலிகளின் விமானத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருக்கின்றுது. வேடிக்கையாக இருக்கின்றது. குருக்கள் . . விட்டால் தப்பில்லை. மற்றவன் விட்டால்தான் தப்பு என்பதுதான் இலங்கை அரசின் நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளினதும் தாயக மக்களினதும் பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து இருந்து கொண்டு துள்ளிக் குதிக்க முதல்..! படைக்கல அழிவுகள் தற்கால வெற்றிகள் தான் என்பதை ஏலவே 2001 தாக்குதல் நிரூபித்துவிட்டுள்ளது. எனவே சிந்தித்து செயல்களை உணர்வுகளை வெளியிடுங்கள்.

போராளிகளின் மக்களின் இழப்புக்களை துன்பங்களை அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தாக்குதலின் போதும் எமது அன்புச் சகோதரர்கள் சகோதரிகள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடக்கி வாசியுங்கள். இழப்புகளற்ற யுத்தமல்ல நடந்து கொண்டிருப்பது..! :rolleyes:

அய்யா நெடுக்காலப்போவான் புலிகள் தம் வீரர்களின் இன்னுயிரை இழக்காமல் வான் தாக்குதல் நடத்தி விட்டு வெற்றிகரமாக தம் தளங்களுக்கு திரும்பியுள்ளனர்.வாழ்க ஈழத்தமிழர்கள் . இந்த தாக்குதல் மூலம் நாஙகள் புலிகள் பற்றி தமிழகத்தில் பரப்பப்படும் பொய் செய்திகளை முறியடிப்போம்.எம் ஈழ சகோதரர்கள் தம் விடுதலைப்போரில் வெல்ல தமிழகம் வாழ்த்துகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: பங்குச் சந்தை சரிந்தது

ஜதிங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007இ 15:13 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களைஇ இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக வானூர்தி நிலையமான கட்டுநாயக்காவை நோக்கி வந்த மற்றும் அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து வானூர்திகளும் பல மணிநேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும்இ நிலைமை முழுமையாக வழமைக்கு திரும்ப மேலதிகமாக 24-36 மணி நேரம் எடுக்கும் எனவும்இ சிறிலங்கா வானூர்திப் போக்குவரத்து நிறைவேற்று அதிகாரியான பீற்றர் கில் தெரிவித்துள்ளார்.

இப்படியான தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்களும்இ தாமும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ராடார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு மிகவும் சாதூர்யமாக அதிஉயர் பாதுகாப்புக் கொண்ட வான்படைத் தளத்திற்குள் நுழைந்த தமிழீழ வான்படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்திவிட்டு அவர்களின் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிச் சென்றது சிறிலங்காவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் படையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இத்தாக்குதலும்இ அதற்கு அனைத்துலக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும்இ பங்குச் சந்தையில் மாத்திரமின்றி ஏற்கனவே சீரழிந்து போயுள்ள சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிறிலங்கா வான்படையினர் வான் தாக்குதல்

ஜதிங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007இ 14:58 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

சிறிலங்கா வான்படையினரின் வான்படைத் தளம் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் அழிவுகளை மறைக்கும் நோக்கில் சிறிலங்கா வான்படையினரின் கிபீர் வானூர்திகள் வன்னிப் பகுதியில் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

வன்னிப் பகுதியில் உள்ள வெள்ளாங்குளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக வன்னிப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன

திங்கள் 26-03-2007 13:05 மணி தமிழீழம் ஜமோகன்ஸ

அடடா அப்போ மிக் விமானங்கள் இன்னமும் சேதம் அடையவில்லை என்பதை சிங்கள அரசு காட்ட முனையுது...

ரணிலின் 58வது பிறந்த தினம் தாய்லாந்தில் கொண்டாடட்பட்டுள்ளது.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தாய்லாந்து சென்றிருக்கிறார்.

அங்கு அவர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கொண்டாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியார் மைத்ரேயி மற்றும் கட்சியின் மூத்த பிரமுகரும் தனது நெருங்கிய நண்பருமா கிய மாலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பாங்கொக் சென்றிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் இலக்கு கூட பொது மக்களை பாதிக்காத வகையில் நடத்தியிருப்பது உலக அரசியல் விமர்சகர்களை மட்டுமல்ல இராணுவ மேதைகளைக் கூட ஆச்சிரியப்பட வைக்கும் என்பது மிகையாகாது. தவிரவும் தாக்குதல் நடத்திய விமானங்கள் பத்திரமாகத் திரும்பியது என்பது

இலங்கை வான் படையின் அல்லது இலங்கை இராணுவ பலகீனத்தை அம்பலப்படுத்துகிறது.

உலக வரலாறில் விடுதலைப் போராளிகள் முதல் முறையாக வான் படைத் தாக்குதல் ஒன்றை நடத்தியது இதுவே முதல் முறை எனவே சாதனை படைத்த தமிழர் வான் படைக்கு

வாழ்த்துகள்........... பலத்தாலும் தொகையாலும் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது

லட்சியம் தியாகம் என்பன அதையும் தாண்டிய ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிறிலங்கா வான்படையினர் வான் தாக்குதல்

ஜதிங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007இ 14:58 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

சிறிலங்கா வான்படையினரின் வான்படைத் தளம் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் அழிவுகளை மறைக்கும் நோக்கில் சிறிலங்கா வான்படையினரின் கிபீர் வானூர்திகள் வன்னிப் பகுதியில் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

வன்னிப் பகுதியில் உள்ள வெள்ளாங்குளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக வன்னிப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன

அடடா அப்போ மிக் விமானங்கள் இன்னமும் சேதம் அடையவில்லை என்பதை சிங்கள அரசு காட்ட முனையுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.