Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவிற்கு ஆலோசணை வழங்க 'வெள்ளையர்களுக்கு' அருகதை இல்லை: அமைச்சர் மனோ கணேசன்

Featured Replies

ஸ்ரீலங்காவிற்கு ஆலோசணை வழங்க 'வெள்ளையர்களுக்கு' அருகதை இல்லை: அமைச்சர் மனோ கணேசன்

 

 
 

யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமற்றது என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்காவின் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன்இ யுத்தக் குற்ற விசாரணைகள் உட்பட போரின் போது நிகழ்ந்த பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமது அரசாங்கத்திற்கு கூறுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அருகதை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரச தலைவரின் பொறுப்பில் இதுவரை இருந்த தேசிய நல்லிணக்க அமைச்சின் கடமைகளை இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் சர்வதேச நாடுகளை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தியதுடன்இ போர் குற்ற விசாரணைகளை நடத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த மணோ கணேசன்:

' எமக்கு ஆலோசணை வழங்க வெள்ளையர்களுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை. சிரியாவில் ஈராக்கில் லிபியாவில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது உண்மையில் எவருக்கும் எமக்கு ஆலோசணை வழங்க அருகதை இல்லை. நாம் கருத்துக்களை பறிமாறிக்கொள்வோம். ஆனால் முடிவை நாம்தான் எடுப்போம். நாம் ஒரு அரசாங்கம். முதுகெழும்புல்ல அரசாங்கம். எவரது கூற்றுக்களையும் ஏற்று நாம் செயற்பட முடியாது. மனித உரிமைகள் என்பது வெள்ளையர்களோ அல்லது அமெரிக்காவோ ஐரோப்பாவில் இருந்தோ நாம் இறக்குமதி செய்த ஒன்று அல்ல. எமது வரலாற்றை பார்த்தால் நாம் தொண்டு தொட்டே மனித உரிமைகளை மதித்து வந்திருக்கின்றோம். எமது நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் மதங்களும் மனித உரிமைகளை முழுமையாக மதிக்கின்றன.

எவ்வாறாயினும் கொழும்பு உட்பட தென்பகுதிகளில் இடம்பெற்ற ஆட் கடத்தல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆனால் யுத்த வலையத்திற்குள் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கும் யுத்த வலையத்திற்கு வெளியில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் யுத்த வலையத்திற்கு வெளியில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும்  அவர்களுக்கு எதிராக நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.ibctamil.com/politics/80/100293?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து 10 வருடமாகப் போகின்றது. பல ஆணைக்குழுக்கள் மூலம்  சாட்சிகளின் வாக்கு மூலங்கள் எடுக்கப்பட்டன, அவற்றுக்கு என்ன நடந்தது?
10 வருட போர் முடிவில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது?

 

  • கருத்துக்கள உறவுகள்

678_F510_D-0151-4_A63-9_D9_C-852_B34_DE9

  • தொடங்கியவர்

மனோவின் கருத்து அவரின் அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது - சிவாஜிலிங்கம்

(ரி.விரூஷன்)

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளில் தலையீடுகள் அவசியமில்லை என அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ள கருத்தானது சிங்கள பெளத்த அரசங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிங்கம் தெரிவித்தார்.

mano-ganesan.jpg

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அமெரிக்காவின் பல இரகசிய அறிக்கைகள் உட்பட பல தகவல்களை விக்லீஸ் வெளியிட்டிருந்த நிலையில்,  அதில் இலங்கைக்கான முன்னாள்  அமெரிக்க  தூதுவர் இலங்கை தொடர்பாக அனுப்பிய அறிக்கையிலே, அமைச்சர் மனோகணேசன் போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என கூறியிருந்தமையை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போதும் அவர் தாம் அங்கம் வகிக்கக் கூடிய பௌத்த சிங்கள அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அவர் கூறிய கருத்தானது வேதனையளிப்பதுடன் சிங்கள பௌத்த அரசாங்கத்தின் மீதான அவரது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது என்றார்.

http://www.virakesari.lk/article/33337

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.இதே மாதிரி போருக்கு ஆலோசனை வழங்கும் போதும்

சிங்களவர்களும் தமிழர்களும் எங்கள் சண்டையை நாமே முடித்துக் கொள்ளுவோம்.

உங்கள் ஒருவரின் ஆலோசனைகளும் தேவையில்லை என்று தவிர்த்திருக்கலாம்.

இப்போ நாங்கள் தமிழீழத்தில் இருந்திருப்போமே.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்  உண்மையான முகம் இப்போதுதான் வெளிப்பட தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் போனால் போர் குற்றங்கள் எதுவுமே நடைபெறவில்லை  என்று கூறுவார் போலிருக்கிறது.   எல்லா நாய்களுமே எலும்பு துண்டுக்காகத்தான் குரைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.