Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பத்திரிகை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம். பல்வேறு தடைகளை தாண்டி இப்போது வெளிவந்திருக்கிறது.

ராஜீவ் படுகொலை மற்றும் அது தொடர்பான விசாரணையை அப்பட்டமாகச் சொல்லும் வரலாற்று படம் என்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றம். படுகொலை என்ற நிஜ சம்பவத்துக்கு முன்னும் பின்னும் கற்பனை கதையை கலந்து வழக்கமான வியாபார சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், பொழுதுபோக்கு படமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிறது.

ராம்கி, ரகுமான் இருவரும் போலீஸ் அதிகாரிகள். ஒருவர் ராஜீவ் படுகொலை சம்பவத்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒருவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். இருவருக்கும் தனித்தனியான காதல். குடும்ப பிரச்னைகள். கடைசியில் எல்லாம் முடிந்து சுபம்.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிடுவதையும், அதை நிறைவேற்றுவதையும் நேரில் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்டுகள் பல ஆனாலும் அந்த ரத்த ஆறு இப்போதும் வலிக்கிறது. ஆனால் கொலை விசாரணையில் யதார்த்தத்தை மீறிய சினிமாத்தனம். நிறைய வெட்டு விழுந்திருப்பதால் காட்சிகள் முழுமையடையாமல் போவது உறுத்தல். உரிய காலத்தில் வெளிவந்திருந்தால் உயரிய இடத்தைப் பெற்றிருக்கலாம்.

தவறான பார்வையால் ஒரு படைப்பை 14 ஆண்டுகள் முடக்கி வைத்திருந்ததால் அதனால் ஏற்படும் இழப்பு மிகவும் கொடுமையானது. ஒரு நிஜ சம்பத்தை நேரடியாக பயன்படுத்திக் கொண்டு அதில் கற்பனையை திணிக்கும்போது கற்பனையும் நிஜம் என்றே பதிவாகும் ஆபத்து இருக்கிறது. இந்த இரண்டும் இனிமேல் நிகழாமல் இருக்க இந்த படம் பாடமாக இருக்கட்டும்.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிடுவதையும், அதை நிறைவேற்றுவதையும் நேரில் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்டுகள் பல ஆனாலும் அந்த ரத்த ஆறு இப்போதும் வலிக்கிறது. ஆனால் கொலை விசாரணையில் யதார்த்தத்தை மீறிய சினிமாத்தனம். நிறைய வெட்டு விழுந்திருப்பதால் காட்சிகள் முழுமையடையாமல் போவது உறுத்தல். உரிய காலத்தில் வெளிவந்திருந்தால் உயரிய இடத்தைப் பெற்றிருக்கலாம்

ஆம் ஆண்டுகள் பல போனாலும் இந்திய அமைதிப்படை பயங்கரவாதிகளால் ஈழத்தில் ஊண்டான்ன் இரத்த ஆறையும் நாம் மறக்கல்ல

படத்தை பார்க்க மனம் வலிக்கும் ஆனால் எமக்கு படத்தை பார்க்காமலே மனதில் வலி சாகும் வரை இருக்கும்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

நானுந்தான் ஈழவன்!!!!!!!!!!!. :lol::lol::lol::D

நானுந்தான் ஈழவன்!!!!!!!!!!!. :blink::blink::blink::o

விஜய் மக்களை கொன்றவர்களை பலியெடுத்தால் அவர் இளைய தளபதி

ரஜனி செய்தால் சுப்பர் ஸ்ரார்

ஆனால் நாமோ தீவிரவாதிகள் என்ன கேவலம் இது

நான் பார்க்கவில்லை படம் எங்கள் ஊர் தியேட்டரில் ஒரு வாரம் கூட ஓடவில்லை.

சிவாஜி படத்துக்கு கருத்தெழுதுறதை விட்டுட்டு இங்கே என்ன வெட்டிக்கதை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தைப் பார்த்தேன். கர்ப்பனையாக, நடக்காத சில சம்பவங்களையும் இப்படத்தில் காட்டி உள்ளார்கள். முன்னாள் இந்தியாப் பிரதமரைக் கொலை செய்தவர்கள், செய்யாதவற்றையும் செய்ததாகக் காட்டி, அவர்கள் மிகவும் கோடுரமானவர்கள் போல சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. எட்டப்ப ஊடகங்களிலோ அல்லது பாப்பண ஊடகங்களில் வரும் செய்திகளைப் போல கற்பனைகளால் உண்மைக்கு புறம்பான செய்திகளைத் தரும் இப்படத்தினை பார்த்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாம்.

இன்றுதான் இந்த படத்தை பார்க்க கிடைத்தது முழுக பார்க்க முடியவில்லை அப்படி அசிங்கம் புலிகளை ஒரு காட்டு மிராண்டிகள் போல சித்தரித்து இருகீனம் எமது உணர்வை செல்வமணி கொச்சை படுத்திவிட்டார் புலிகளை சிகரட் குடிப்பவர்களாக காட்டுவதன் மூலமே செல்வமணி தோற்கடிக்கப்பட்டு விட்டார் ஆனால் இப்படி தமிழக தமிழர்கள் ஏமாற மாட்டார்கள என நினைகின்ரேன்.கடைச்யில் ராம்ஜி கேட்கும் கேள்விகள் மனதை வேதனையாக்குகிரது செல்வமணியும் அவர்களின் குழுவினரும் முழுமையான மிகைப்படுத்தலுடன் இதனை வெளியிட்டு அசிங்கபடுத்தீட்டார்கள் குற்றபத்திரிகை வெளீல் வந்திருப்பதை வுடுத்து பெட்டுக்குள்ளே சமாதியாகி இருக்கலாம்

நானும் ஓரிரு தினங்களுக்கு முதல் இந்த படத்தை பார்த்தேன், இதை 100% சினிமாதனமான சினிமாவேன்றே சொல்லலாம், ஒரு உண்மையான விடுதலை இயக்கத்தை கொச்சை பண்ணும் நோக்கத்திலையும் வியாபார நோக்கத்திற்காகவுமே இத் திரைப்படம் எடுத்துள்ளனர். இந்திய சினிமாக்காரர்கள் யாரும் எமது போரட்டத்திற்க்கு உதவ வேண்டாம், அதே நேரத்தில் உபத்திரவம் செய்யாமலிருந்தால் போதும்

யாருக்காவது செல்வமணியின் மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றப்பத்திரிகைக்கு 14 வருட தணிக்கைத் தண்டனை கொடுக்கப் பட்டது, அது என்ன காரணத்துக்காக என்பது தான் புரியவேமாட்டாது எவருக்கும்

ஒன்று மகாமட்டமான சினிமா தரத்துக்காக என்றால் உடன் படத்தக்கது

படம் பார்த்து முடித்ததும் 14 வருடத் தணிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

என்ன கேவலமான கற்பனையில் உருவாக்கப் பட்ட குப்பை.

செல்வமணியின் குரங்குப் புத்திக்கு ஏன் இந்த வேலை எல்லாம்.

கன்னடரால் எடுக்கப்பட்ட சயனைட்டு அது

எப்படி அழகாகத் தயாரிக்கப் பட்டிருக்கின்றது

மரணத்தின் இறக்கம் வரைக்கும் அந்த வாழ்வுகள் செய்த சாகசங்கள், தமிழ் இரத்தத்தை பெருமையில் பூரிக்கச் செய்கிறது.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

"தீவிரவாதிகள்" திட்டமிடுவதற்குச் சில ஆண்டுகள் முன்னிருந்து காட்டியிருந்தால் ஏன் திட்டமிட்டார்கள் என்றும் விளங்குமல்லவா? அல்லது அது இன்னுமொரு இந்திய சினிமா மசாலாவுக்கான கருப்பொருளா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தில் சில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரளவு ஈழ ஆதரவுச் செய்திகள் வந்திருக்கலாமோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்படத்தில் சில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரளவு ஈழ ஆதரவுச் செய்திகள் வந்திருக்கலாமோ தெரியாது
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படத்தில் சில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரளவு ஈழ ஆதரவுச் செய்திகள் வந்திருக்கலாமோ தெரியாது

ஓரளவுக்கு என்ன எந்த அளவுக்தான் வந்தாலும் அந்த அமைப்புக்கு இருக்கக் கூடிய பண்பை சினிமாப் பாணியில் மிகக் கேவலமாக, உண்மைக்கு புறம்பாக, நிகழ்வுகளுக்கு முற்றிலும் தலைகீழாக, வேண்டுமென்றே கொச்சைப் படுத்தப் பட்டிருக்கின்றதே!

துவக்கத்தில் இருந்து முடிவுவரை அந்த அமைப்பைக் கொச்சைப் படுத்த வேண்டுமென்றே ஒவ்வொரு சம்பவங்களினதும் உண்மை திரிக்கப்பட்டு நயவஞ்சகப் புத்தி ஒன்றால் புதுக்கதை அளக்கப் பட்டிருக்கிறது.

பிராமணியவாதத்தின் நயவஞ்சகத்தனத்துக்கு செல்வமணி ஒரு வடிகாலா?

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

'குற்றப்பத்திரிக்கை'க்கு விடுதலை!

[ தற்ஸ் தமிழ் ] - [ Feb 02, 2008 05:00 GMT ]

நீண்ட காலமாக ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வந்த குற்றப்பத்திரிக்கை திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் குற்றப்பத்திரிக்கை. ஆர்.கே.செல்வமணி இதை இயக்கினார். இப்படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து வந்ததால் பல ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியவில்லை.

இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வசதியாக சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை படத்தை ஒரு திரையரங்கில் வைத்து பார்த்தனர்.

மேலும், தயாரிப்பாளர் தரப்பில் வழங்கப்பட்ட சி.டி. ஒன்றையும் நீதிபதிகள் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை படத்தை திரையிட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்யக் கோரிய தணிக்கை வாரியத்தின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் மூலம் 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் மக்கள் முன் 'தாக்கல்' செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து இயக்குநிர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், கடந்த 1991ம் ஆண்டு படத்தை ஆரம்பித்து 1992ம் ஆண்டு எடுத்து முடித்தோம். ஒரு குழந்தை பிறப்பதற்குக் கூட 10 மாதங்கள்தான் ஆகும். ஆனால் அதையும் தாண்டி 14 ஆண்டுகள் ஆகி விட்டது இப்படத்தை வெளியிட.

இப்படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதல்ல. இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது குறித்து எனக்குத் தெரியாது. நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.

நீண்ட காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட இந்தக் காலத்திற்கும் பொருத்தமான வகையில் இப்படம் இருக்கும். தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டால் ஒரே நாளில் கூட படத்தை வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் செல்வமணி.

என்ன நுணாவிலான் மிகப் பழைய செய்தியை இப்போது கொண்டு வந்து போடுகின்றீர்கள். இது 2006 இல் நடந்த விடயமாயிற்றே !!!!!!

இந்தப் பட டிவிடி வெளிவந்து பல மாதங்களாகிவிட்டது.

படம் உதவாது. குப்பி (சயனைட்) படம் இதைவிட நல்லா

எடுத்திருக்கினம். ரெண்டும் ஒரே கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே தமிழ்நாட்டில் மக்களும், ஊடகங்களும், கலைத்துறையும் ஈழப்பிரச்சனை தொடர்பாக என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட இது நல்ல உதாரணம். தாமும் குழம்பி, பார்ப்பவர்களையும் குழப்பியிருக்கும் ஒரு மட்டமான மூன்றாம் தரப் படம். புலிகளை கேவலமானவர்களாகக் காட்டிவிட்டால் போதும், படம் முழுமை அடைந்து விடும் என்று நினைக்கும் செல்வமணி போன்ற மசாலா இயக்குனர்கள் மத்தியிலும் "தம்பி", " காற்றுக்கென்ன வேலி" போன்ற ஈழப்பிரச்சனையை முழுமையாகக் கொண்டுவந்த இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி" " காற்றுக்கென்ன வேலி" போன்ற ஈழப்பிரச்சனையை முழுமையாகக் கொண்டுவந்த இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

தம்பி படம் ஈழப் பிரச்சனையை முழுமையாக கொண்டு வந்ததா ? சொல்லவேயில்லை :wub:))

  • கருத்துக்கள உறவுகள்

அப்படம்( தம்பி) ஈழப்பிரச்சனையைக் காட்டவில்லை, ஆனால் அப்படத்தின் நாயகன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது இலட்சிய நாயகனாக நினைத்துப் போராடுகிறார். அவ்வளவுதான். காற்றுக்கென்ன வேலி, ஈழப்பிரச்சனையை ஒட்டிய கதை.

விளக்கம் போதுமா ? இல்லையென்றால் இன்னுமொருமுறை பாருங்கள், சிலவேளை புரிந்தாலும் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படம்( தம்பி) ஈழப்பிரச்சனையைக் காட்டவில்லை

அவ்வாறு நீங்களே சொன்ன பிறகு மேலதிகமாக எதுவுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.