Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி

Featured Replies

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி

7dc4fcf3-4c91-4c52-9dc5-ef8795c761ff-800
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

c4b60f75-7135-42c8-9ea7-e280680cbf1a-800e9990b4f-79e4-4a26-bf7e-9aa335f3ffa6.jpg

http://globaltamilnews.net/2018/80483/

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்த கோஷங்கள் உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்பு தொடர்பில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயல்பாட்டு உறுப்பினர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில், "காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகிய நாங்கள், 462 நாட்களாக தொடர்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம் எம்மை போல சாத்வீகரீதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராடிய 11 அப்பாவி தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசின் கை கூலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது,"என்று கூறினார்.

 

 

"இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. நாம் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்தோம் பதினாறாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் இந்தியாவில் நடந்த இச்சம்பவத்தை கேட்டு எங்கள் இதயம் துடிக்கின்றது. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள். கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்."

ஸ்டெர்லைட் Image captionசெவ்வாயன்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட வாகனம்

"இத்திட்டம் தூத்துக்குடியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியதிட்டம் இத்திட்டத்தினால் இலங்கைக்கும் பாதகம் ஏற்படும் எனவே இலங்கை அரசும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஸ்டெர்லைட் திட்டத்தினை நிறுத்த முன்வரவேண்டும். இலங்கையில் தமிழ் மக்களை இரண்டாம் பிரஜைகள் போல் பார்ப்பது போல் மோடி அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜையாக பாராமல், தமிழ் மக்களையும் தமது சொந்த பிரஜைகளாக கவனித்து அவர்களது வாழ்வுரிமையை கொடுக்கவேண்டும் அவர்களது சாத்வீக போராட்டத்துக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவேண்டும்," என்றார் லீலாதேவி ஆனந்த நடராஜா.

இலங்கையில் வலிந்து காணமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் 462வது நாளாக தொடர்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44242444

இந்த செய்தியின் நடுவிலே எரிக்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைப்போடுவதன் மூலம் தான் யார், தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அனர்த்ததுக்கு காரணமான ஆலையின் படத்தையோ, சுட்ட பின்னர் காவல்துறையினர் இழுத்து செல்லும் காட்சியையோ காட்ட துப்பில்லாத ஊடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீது சிங்களவனால் நடத்தபட்ட படுகொலைகளை நம்மில் சிலர் மறந்துவிட்டாலும், வருடா வருடம் சினத்துடன் நினைவுகூரும்..தமிழக சொந்தங்களின்மீது,

நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைக்கு

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

அது  அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு ஆத்ம பலமாக,தமிழக உறவுகள்மீது நாம் கொண்ட அக்கறைமிக்க காலத்தின் பதிவாக தமிழக உறவுகள் பார்வையில் படலாம்...

 

37 minutes ago, valavan said:

 

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

 

 

நல்ல கருத்து.

இது பொது பகுதி என்பதால் நீங்களே ஒரு திரியை திறந்து இருக்கலாம், அல்லது இனியும் திறக்க முடியும்.

  • தொடங்கியவர்

 

50 minutes ago, valavan said:

எம்மீது சிங்களவனால் நடத்தபட்ட படுகொலைகளை நம்மில் சிலர் மறந்துவிட்டாலும், வருடா வருடம் சினத்துடன் நினைவுகூரும்..தமிழக சொந்தங்களின்மீது,

நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைக்கு

யாழ்களத்திலும் துயர் பகிர்வோம் பகுதியில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

அது  அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு ஆத்ம பலமாக,தமிழக உறவுகள்மீது நாம் கொண்ட அக்கறைமிக்க காலத்தின் பதிவாக தமிழக உறவுகள் பார்வையில் படலாம்...

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

தொழிலால் இந்திய பாதுகாப்பு படையில் வேலை பார்த்தாலும், உணர்வால்  முதலில் தமிழர்கள் அதன்பின்புதான் மற்றதெல்லாம் என்பதை இவர்களின் கருத்து சொல்கிறது.

பேஸ்புக்கில் தமிழக சஞ்சிகைகளில் இலங்கையின் இறுதியுத்தம், தலைவர் பிரபாகரன் வரலாறு,புலிகள் பற்றிய செய்திகளின்போது கருத்துக்கள் எதுவும் பெரிதாக சொல்லாவிடினும் லைக்குகள், கவலை தோய்ந்த முககுறிகளிட்ட பல தமிழக எல்லைபடை வீரர்களை கவனித்திருக்கிறேன்.

தொழிலும் தேசமும்தான் வேறு என்றாலும் இனம் அவர்களுக்கு ஒன்றுதான்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

  • தொடங்கியவர்

தூத்துக்குடியில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூரில் போராட்டம்

3e4dadd1-4b15-4f82-89db-96cd7b37cafd.jpg

தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூர் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6cd2eae3-d7ee-4d9f-a5de-049455c205dc.jpg368286d7-158a-4138-bfb3-9cc432686363.jpga0d464f2-6387-4f52-8a53-171168e2b699.jpgf5a9c25c-81fd-4f30-91a1-ec828f3ad676-800

 

http://globaltamilnews.net/2018/80732/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.