Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. 

இரு நாட்டு தலைவர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. 

அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில் பரஸ்பரமாக கைகுலுக்கி கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, இருவரும் ஊடகவியலாளர்களை சந்திக்கும் வண்ணம் பிரதான பகுதியிலிருந்து அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு, நடந்து சென்று, அங்கு ஒரே இருக்கையில் அமர்ந்து சர்வதேச ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர். 

அப்போது கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவருடனான இன்றைய பேச்சுவார்த்தையில், தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார். 

மேலும், ´´இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை´´ எனவும் வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்எதிர் துருவங்களாக திகழும், அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு, உலக அரங்கில், அனைத்து மட்டத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதன்முறை: உலகமே வியந்து பார்த்த கிம்- ட்ரம்ப் சந்திப்பு

June 12, 2018
trump-kim-2-jpg-696x522.jpg

வடகொரியாவும், அமெரிக்காவும் ஜென்ம எதிரிகளாக கருதப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவர்கள் கிம் -ட்ரம்ப் இருவரும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேசினர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பதிவு செய்ய உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் திரண்டனர். உலகின் பல நாடுகளிலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பானது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 12-ல் சிங்கப்பூரில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதன்படி, வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ‘ஏர் சீனா’ விமானத்தில் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்தடைந்தார். பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை அதிபர் கிம் சந்தித்துப் பேசினார். இதுபோல, சிங்கப்பூருக் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வந்த டொனால்டு ட்ரம்ப், அங்குள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் தங்கினார்.

வரலாற்றில் முதன்முறை

இதைத்தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் கிம்மும் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று சந்தித்தனர். இருநாடுகளும் ஜென்ம எதிரிகளாக வர்ணிக்கப்பட்ட நிலையில் அதன் தலைவர்கள் சந்தித்து கொள்வதை உலகம் முழுவதும ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை இருதலைவர்களும் முதலில் தனியாக நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கினர். வசைபாடியவர்கள் நேரில் சந்தித்து கொண்டதால் இருவரிடையே சிறிது நேரம் தர்மசங்கடம் நிலவியது. அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் கைகுலுக்கினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக ‘போஸ்’ கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் காமிரா இந்த காட்சியை படம் பிடித்தது.

 

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது.. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.

வியந்து பார்த்த உலகம்

வடகொரியா- அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டதை உலகமே உற்று நோக்கியது. பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இணையதள செய்தி நிறுவனங்கள், அதிக முக்கியத்துவத்துடன் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வெளியிட்டன. கிம்- ட்ரம்ப் சந்திப்பை வடகொரியா மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு வடகொரிய அதிபரின் செயல்பாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ட்ரம்ப், கிம் தங்கியுள்ள ஹோட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஹோட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக ரூ.135 கோடி செலவிடப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

http://www.pagetamil.com/8053/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

 

வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்
 
சிங்கப்பூர்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
 
201806121059337456_1_trump._L_styvpf.jpg
 

அதன்பின்னர், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர் இருவரும் தனியாக நடந்து சென்று பேசினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. 

https://www.maalaimalar.com/News/World/2018/06/12105933/1169554/Trump-says-he-and-Kim-will-be-signing-something.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கும் அரசியல் தீர்வுக்கும் அணுகுண்டும் ஆயுதங்களும் அதி முக்கியம் என்பதை இந்த சந்திப்பு உணர்த்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

3a575553b0abbd7fc64791dd358ffaca.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாய் 100 கோடியை சிங்கப்பூர் வேஸ்ட் பண்ணிட்டுது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

3a575553b0abbd7fc64791dd358ffaca.jpg

 

29 minutes ago, nunavilan said:

 

உண்மையாகவே... இரண்டு பேரும்  சேர்ந்து  குளித்து,  ? "கிஸ்" ?  அடித்தவர்களா? ?
அப்பாடா... உலகத்தில்... இனி,  ?அணு ஆயுத ☠️  பயம் இல்லை என்று, நிம்மதியாக நாங்கள் இருக்கலாம். ? ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1f4cc.png? 1985: North Korea signs Nuclear NonProliferation Treaty
1f4cc.png? 1992: North Korea signs historic agreement to halt nuclear program!
1f4cc.png? 1994: North Korea signs historic agreement to halt nuclear program!
1f4cc.png? 1999: North Korea signs historic agreement to end missile tests
1f4cc.png? 2000: North Korea signs historic agreement to reunify Korea! Nobel Peace Prize is awarded
1f4cc.png? 2005: North Korea declares support for "denuclearization" of Korean peninsula
1f4cc.png? 2005: North Korea signs historic agreement to halt nuclear program and "denuclearize"!
1f4cc.png? 2006: North Korea declares support for "denuclearization" of Korean peninsula
1f4cc.png? 2006: North Korea again support for "denuclearization" of Korean peninsula
1f4cc.png? 2007: North Korea signs historic agreement to halt nuclear program!
1f4cc.png? 2007: N & S Korea sign agreement on reunification
1f4cc.png? 2010: North Korea commits to ending Korean War
1f4cc.png? 2010: North Korea announces commitment to "denuclearize"
1f4cc.png? 2010: North Korea again announces commitment to "denuclearize"
1f4cc.png? 2011: North Korea announces plan to halt nuclear and missile tests
1f4cc.png? 2012: North Korea announces halt to nuclear program
1f4cc.png? 2015: North Korea offers to halt nuclear tests
1f4cc.png? 2016: North Korea again announces support for "denuclearization"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.