Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

Featured Replies

யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

 

 
 
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

யாழில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு தெற்கில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில், பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இதனை அடுத்து விஜயகலாவின் உரை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக விஜயகலா நேற்று (05) அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவருக்கு ஆதரவாக குடா நாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன், இன்று பதவி துறந்தவர் விஜயகலா என்று குறிப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=103841

  • தொடங்கியவர்

தமிழர்களுக்காக பதவி துறந்த ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா!- யாழில் வலுக்கும் ஆதரவு

 

vijayakala-1-1-720x450.jpg

 

தனது உரையினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தனது பதவி இராஜினாமா குறித்து அறிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு யாழ். குடா நாட்டில் ஆதரவு கரம் ஓங்கியுள்ளது.

அதற்கமைய, ‘தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர்துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா’ என எழுதப்பட்ட வாசகங்களுடன் யாழின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் யாழ். பேருந்து நிலையம் உள்ளிட்ட யாழின் பிரதான பொது இடங்களில் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பூதாகரமாக்கியதுடன், குறித்த விவகாரம் விஜயகலாவிற்கு எதிரான விமர்சனங்கள் குற்றச்சாட்டிற்கும் வழிவகுத்தன.

இதனை தொடர்ந்து தனது அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு எழுத்து மூலமான இராஜினாமாவை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேற்று மாலை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vijayakala-2.jpg

http://athavannews.com/?p=699359-தமிழர்களுக்காக-பதவி-துறந்த-‘தமிழ்த்தலைவி’-விஜயகலா!--யாழில்-வலுக்கும்-ஆதரவு

  • தொடங்கியவர்

 

தமிழர்களுக்காக பதவி துறந்த ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா!- யாழில் வலுக்கும் ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்

சுவரொட்டிகளை மட்டும் ஒட்டிக்கொண்டிராமல்.. தனது நிலைப்பாடு குறித்து.. சர்வதேச நாட்டு தூதுவர்களுடன் கூடிய ஒரு ஊடக சந்திப்பை விஜயகலா நடத்தி தனக்கு எதிராக சிங்கள தேசம் முன்னெடுக்கும் மிலேச்சத்தமான செயற்பாடுகளையும்.. தமிழர் விரோத நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் விளக்குவது காலத்தின் அவசியமாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

சுவரொட்டிகளை மட்டும் ஒட்டிக்கொண்டிராமல்.. தனது நிலைப்பாடு குறித்து.. சர்வதேச நாட்டு தூதுவர்களுடன் கூடிய ஒரு ஊடக சந்திப்பை விஜயகலா நடத்தி தனக்கு எதிராக சிங்கள தேசம் முன்னெடுக்கும் மிலேச்சத்தமான செயற்பாடுகளையும்.. தமிழர் விரோத நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் விளக்குவது காலத்தின் அவசியமாகும். 

vijayakala-2.jpg

நெடுக்ஸ் அண்ணே....
அந்த சுவரொட்டியில் கூட, பசை காணாமல்...  பேப்பர்,பிதுங்கி நிற்பதை,  கவனித்தீர்களா..... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

vijayakala-2.jpg

நெடுக்ஸ் அண்ணே....
அந்த சுவரொட்டியில் கூட, பசை காணாமல்...  பேப்பர்,பிதுங்கி நிற்பதை,  கவனித்தீர்களா..... 

ஆமாம்  மாமன்னா... கவனித்தோம்....கவனித்தோம். ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

ஆமாம்  மாமன்னா... கவனித்தோம்....கவனித்தோம். ?

அமைச்சரே...    சுவரொட்டிக்கு  ஓட்ட...  நாப்பது   மூட்டை,  கோதம்ப  மாவை,  அனுப்பி   வைத்தோமே....
அதில், கொத்து ரொட்டி  செய்து, சாப்பிட்டு விட்டார்கள்  போலுள்ளது. ?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.