Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி

Featured Replies

'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி

தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஐந்து நாட்களுக்கு முன்பு இலங்கைக் கடற்படைத் தளபதியுடன் பேசியதாகத் தெரிவித்த அட்மிரல் சுரேஷ் மேத்தா, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தங்கள் கடற்படைக்கு இல்லை என்பதை இலங்கைக் கடற்படைத் தளபதி உறுதியாகத் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தீவைச் சுற்றி, மோதல்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையக்கூடாது என்பதை எச்சரிக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அட்மிரல் சுரேஷ் மேத்தா குறைபட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் அரசு உரிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை கடற்படைத் தளபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தங்களுக்குக் கிடைத்த தகவல்களை இந்தியக் கடற்படைத் தளபதி பகிர்ந்து கொண்டிருப்பதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

அட்மிரல் சுரேஷ் மேத்தா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படைத் தளபதியும், இதுவரை முப்படைகளின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தவருமான ஏர் சீப் மார்ஷல் எஸ்.பி. தியாகி அவர்கள், இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் முதல் முறையாக நடத்தியுள்ள விமானத் தாக்குதல், இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளிடம் விமானம் இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. அதை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் ஆனால், தாக்குதல்தான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இது புதிய பரிமாணம், அதனால், மிகவும் கவலையளிக்கும் விடயம் என்றும் தெரிவித்தார் ஏர் சீப் மார்ஷல் எஸ்.பி. தியாகி.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

எதிர்பார்த்தது போலவே செய்தி சொல்லி விட்டார்கள். சென்றமுறை அந்தோனி. இம்முறை இந்தியக் கடற்னடைத் தளபதி. அடுத்த தடவை யாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஸ் மேத்தா சிங்களக் கடைப்படைத் தளபதி சொல்வதை நம்புகின்றாரே தவிர, காயப்பட்ட, நேரில் கண்ட மீனவர்களின் செய்திகளை நம்புகின்றாரில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது, அவர்களின் கருத்துக்கள் மீது, அந்த நாட்டுக் கடற்படைத்தளபதி கொடுக்கும் மரியாதை கேவலமாக இருக்கின்றது.

மீனவர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல், கொலைகாரர்களின் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கின்றார்கள். இன்று வரைக்கும் 100க்கு மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த, சிங்கள கடற்படைகளைப் பற்றி இவர்களுக்கு வருத்தமில்லை. ஆனால், புலிகள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம், தொடர்ந்து சிங்கள தேசம், தமிழகமீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு மறைமுக அனுமதியை மேத்தா வழங்குகின்றார்.

தொடர்ந்து, சிங்கள தேசம் தமிழக மீனவர்களைக் கொன்று விட்டு, புலிகள் மீது பழியைப் போட நிறையவே வசதி. சிங்களவங்க ஒரு கல்லில் இரண்டு மாங்க அடிக்கப் போறாங்க. இதனால தொடர்ந்து சிங்களவர்களின் குண்டு அடிபட்டுச் சாகப் போவது, நம்ம தமிழ் மீனவங்க தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து, சிங்கள தேசம் தமிழக மீனவர்களைக் கொன்று விட்டு, புலிகள் மீது பழியைப் போட நிறையவே வசதி. சிங்களவங்க ஒரு கல்லில் இரண்டு மாங்க அடிக்கப் போறாங்க. இதனால தொடர்ந்து சிங்களவர்களின் குண்டு அடிபட்டுச் சாகப் போவது, நம்ம தமிழ் மீனவங்க தான்.

இக்கொடுமையைப் புலிகள் ஒருபோதும் செய்திருக்க மாட்டார்கள் என்பது எமது தமிழக உறவுகளுக்கும் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். சிறிலங்கா செய்யவில்லை என்பதை இந்தியா ஒப்புக்கொண்டால் நிச்சயமாக இந்தியா தான் தனது சொந்த நாட்டு மக்களுக்கெதிராக இதைச் செய்திருக்க வேண்டும் என்பது இப்போது தெட்டத் தெளிவாக வெளிப்படுகிறது.

இதனால் இந்தியா சிறிலங்காவுடனான கூட்டு ரோந்து, ஆயுத விற்பனை, பாக்கு நீரிணையை கண்காணிக்கும் மேலதிக பொறுப்புகள் ஆகியவிடயங்களில் முன்னேற்றமடைவது தவிர தமிழ் நாட்டில் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டைத் தோற்றிவிப்பது போன்ற நடவடிக்கைகளையும் இப்போது முடுக்கி விட வாய்ப்புத் தேடலாம். தமிழக அரசியல்வாதிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காதுவிடின் இது இறுதியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தான் முடியும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அப்பாவித் தமிழக மீனவர்களின் உயிர்களுடன் விளையாடி அவர்களை பகடைக் காய்களாக ஆக்குவது இந்திய அரசியல் வர்க்கம் அதிகாரப் போதையில் எதையும் செய்யும் என்பதையே காட்டுகிறது. இந்திய மத்திய அரசு தமிழகத் தமிழர்களை பெயருக்குத் தான் இந்தியரென்று எண்ணுகிறது போலும்.

Edited by Norwegian

அப்பாவி மீனவர்களைக் காப்பாற்றி அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிசெய்யமுடியாத இந்திய அரசு அணுக்குண்டுகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் வைத்திருந்து என்ன பயன்? அதுபோக இந்தியா தன்னுடைய வீட்டில் பாதுகாப்பை முதலில் உறுதிசெய்த பின்னர் தான் அடுத்தவன் வீட்டிலை கள்ளனைப் பிடிக்க வெளிக்கிடவேணும். இந்தியா சிறிலங்கா ரோந்துப் படைக்கு அதே கடல் பிராந்தியத்தில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லையென்றால் பிறகு இவர்கள் பீத்திக்கொண்டு திரியும் கூட்டு ரோந்தும் கும்மாளமும் எதற்கு?

Edited by Norwegian

annankale akkakale... maamankale maamikale... nanparkale nanpikale eppadiyungo tamila type panurathu? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை சிங்கள இனவெறி பிடித்த கோழைகளான படுபாதகர்களால் கொல்லப்பட்டவர்கள் எனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் .அதில் பிழைத்தவர்கள் கூறியதாவது...... சிங்கள கடற்படை தங்கள் படகை நெருங்கியதாகவும.உடனே அவர்களிடம் தாங்கள் தெரியாமல் வந்துவிட்டோம் என்று கூற படகின் மேலே சென்ற நிராயுதபாணியான தங்கள் தோழர் உட்பட 5 பேரை ...சிங்களர் தான் ஈவிரக்கமின்றி 10 மீட்டர் தூரத்திலிருந்து வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளனர்.கோழைகள் பெண்கள் குழந்தைகள்,மற்றும் நிராயுத பாணிகளிடம் மட்டுமே த்ங்கள் வீரத்தை காட்டுவர்.

இந்திய கடற்படை தளபதி கூறியதாக கூறப்பட்ட செய்தி எங்கள் தமிழக ஊடகங்கள் எதிலுமே வரவில்லை.தமிழக ஊடகங்கள் அனைத்துமே சிங்கள கடற்படை செய்த அட்டூழியம் என்றே செய்தி வெளியிட்டிருந்தன........ புலிகள் மீது அவை பழி சுமத்தி இருந்தாலும் தமிழக மக்கள் நம்பப்போவது இல்லை....... தற்போது தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போருக்கு ஆதரவு சிறிது சிறிதாக பெருகி வருவதை தடுக்க நடக்கும் சதியின் ஒரு பகுதியாக இது இருக்கலாம்

Edited by NanjilNadan

இது தன் பெண்டாட்டி சொல்வதைக்கேட்காமல் பக்கத்துவீட்டுக்காரி சொல்வதைக்கேட்பதுபோல அல்லாவ இருக்கிறது. ஏழை மீனவர்களை முதலில் இந்தியக்குடிமகனாக மதிக்கத்தெரியவில்லையே இந்த கடற்படைத்தளபதிக்கு. ஏழைகளின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. அது போதாதென்று தமிழ்நாடு அரசு அவர்களுக்கு சரியாகப்பாடம் நடத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிரிப்பதா அழுவதா இவர்கள் சொல்வதைக்கேட்டு.

இது தன் பெண்டாட்டி சொல்வதைக்கேட்காமல் பக்கத்துவீட்டுக்காரி சொல்வதைக்கேட்பதுபோல அல்லாவ இருக்கிறது. ஏழை மீனவர்களை முதலில் இந்தியக்குடிமகனாக மதிக்கத்தெரியவில்லையே இந்த கடற்படைத்தளபதிக்கு. ஏழைகளின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. அது போதாதென்று தமிழ்நாடு அரசு அவர்களுக்கு சரியாகப்பாடம் நடத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிரிப்பதா அழுவதா இவர்கள் சொல்வதைக்கேட்டு.

yesterday tamilnadu cheif minister also said [u]unidentified gunmen killed the INDIAN FISHERMEN.

இந்திய கடற்படைத்தளபதி என்ன கடவுளா?? அவரும் இலங்கை அரசின் ஊதுகுழலாக இருப்பதில் புதினம் ஏதும் இல்லை. மீனவர்களில் கருத்தை கேட்டுப்பாருங்கள் அதில் அவர்கள் சிங்கள நேவி என தான் சொல்கின்றனர். தமிழக மீனவர்களுக்கு சிங்கள கள கடற்படையையும் தமிழீழ கடற்படையையும் நன்றே தெரியும். புலிகள் ஒருபோதும் உதவிய கரங்களை மறந்ததில்லை.

அவரென்ன விடுதலைப்புலிகள் சுட்டெனரென்றா சொல்கின்றார்..

தொடர்பென்பது..

இலங்கைக்கடறப்டையை பொறுத்தவரை தூரத்தில் கறுப்பாக எதைக்கண்டாலும் அது புலிதான் என்று துப்பாக்கி பிரயோகம் செய்வார்கள்..

அது கிலியில் எடுக்கப்படும் பலி..

அவ்வாறுதான் விடுதலைப்புலிகள் இந்த மீனவப்படுகொலையில் சம்பந்தப்படுகின்றனர் :D

Edited by vikadakavi

அவரென்ன விடுதலைப்புலிகள் சுட்டெனரென்றா சொல்கின்றார்..

தொடர்பென்பது..

இலங்கைக்கடறப்டையை பொறுத்தவரை தூரத்தில் கறுப்பாக எதைக்கண்டாலும் அது புலிதான் என்று துப்பாக்கி பிரயோகம் செய்வார்கள்..

அது கிலியில் எடுக்கப்படும் பலி..

அவ்வாறுதான் விடுதலைப்புலிகள் இந்த மீனவப்படுகொலையில் சம்பந்தப்படுகின்றனர் :D

புலிகளின்ர ஆற்றல் பற்றி அவர் சொல்லுற விசயத்தை விட்டுட்டீங்களே....!

புலிகளை தங்களுக்கு தென்பகுதியில் வளர்ந்து இருக்கும் இன்னும் ஒரு சக்தியை பற்றிய கவலை அவருக்கு இருக்கு என்பதுதான் முக்கியமாக படுகிறது...! புலிகளை தாங்கள் நேச சக்தி ஆக்க வேண்டிய அவசியத்தையும் கட்டாயம் புரிந்தவராக இருப்பார்...

மேத்தா APRIL Fool பண்னிருபாரா? :lol:

  • தொடங்கியவர்

கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம்: இளந்திரையன் கடும் கண்டனம்

தமிழ்நாடு கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் எம்மைத் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் "புதினத்துக்கு" அவர் தொலைபேசி ஊடாக அளித்த நேர்காணல்:

கன்னியாகுமரி மீனவர்களை கடந்த 29 ஆம் நாள் சிறிலங்கா அரச படையினர் கொடூரமான முறையில் கொலை செய்ததனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்களது தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக உறவுகளின் வேதனைகளிலே நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

சிறிலங்கா அராஜக அரசு, தனது இனவெறித் தனத்தை ஈழத் தமிழர்களுடன் மட்டுமல்லாது இந்தியாவை நோக்கியும் வியாபித்திருப்பது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்க வேண்டியதுமான விடயமாகும்.

சிறிலங்கா கடற்படையானது தாய்த் தமிழக உறவுகளைக் கொல்வது இது முதல் முறையல்ல.

இப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

சிறிலங்காவின் இனவெறிப் போக்கானது நாடு தாண்டியும் உலகத் தமிழர்களை நோக்கி வியாபித்திருப்பதையே இது காட்டுகிறது.

தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறிலங்கா அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களை தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது மிகவும் ஒரு மோசமான அணுகுமுறையாகும். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும், நாடு இன பேதமின்றி தமிழ் மக்களை குறிவைத்துப் படுகொலை செய்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் இளந்திரையன்.

மேலும் இந்தியா- சிறிலங்கா கூட்டு கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்ளும் சதித் திட்டத்தைச் செயற்படுத்தும் வகையில் இத்தகைய விசமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

இதுதான் இந்தியாவும் உலகமும் கூறிநிற்கும்

எல்லை கடந்த பயங்கரவாதம்

சும்மா கேட்டால் கூட்டு - கடல் ரோந்துக்கு வரமாடாங்கள்.........சிறிலங்கா!

சும்மா கேட்டால் ஆயிரம் சட்ட சிக்கல் - ஏதாவது செய்யுங்க - அப்புறம் பார்க்கலாம் -இந்தியா!

இப்பிடி செய்தாதான் சரி - அப்பிட்டின்னு சிங்களவன் நினைக்கிறதுக்கும்........

இப்பிடி செய்யுங்கனு - கொள்கைவகுப்பாளர்களும் - சொல்லுறதுக்கும்........

ஓரளவு கைமேல பலன் நெருங்கி வருதா............?

அப்பிடியோ?- தெரியல!

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ...

வைப்பதே சட்டமாகலாமோ என்னமோ........

அதை மாற்ற கருணா நிதியாலயோ- மன்மோகனாலயோ.........

முடியுமா என்ன?

சிம்பிள் லொஜிக் .........

புலிகளின் ஒரு படகு வந்தது- தமிழ் நாட்டுக்கே அச்சுறுத்தல்...........

தேசியபாதுகாப்பு கேள்விக்குறி - அப்பிடி எல்லாம் சொல்லுறாங்க............

ஏறக்குறைய - சிங்களவனால் 700 தமிழகமீனவர்களுக்கு மேல- கொல்லப்பட்டும்........

இவங்கதான் எங்களை சுடுறாங்கனு -சூடு வாங்கியவங்க சொல்லியும்......

இன்றும் - இலங்கை கடற்படை செய்திருக்காதுனு - மறைமுகமா -தளபதி சொல்லுறாராம்!

திட்டமிட்டு - படிப்படியா ஏதோ ஒரு உடன்பாட்டை - நெருங்கி வாறாங்க! - இப்பிடி சொல்லலாமோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன் சாவும், இந்தியத்தமிழன் சாவும் மத்தியின் மதிப்புக்கு இரண்டுமே அநாதைப் பிணங்கள்தான்,

எங்கள் இனத்துக்கு கிடைத்த சாபமாக ஒட்டுக் குளுக்கூட்டம் இருப்பதுபோல், அங்கேயும் இருக்கிற ஒருகூட்டத்தால் இந்தியத்தேச பக்தி என்ற நாமத்தை மக்களுக்கு போடுகின்றது.

தமிழனின் சாவுகளை விட சிங்கள அரசோடு கொள்ளும் உறவுதான் மத்திக்கு இனிக்கிறது.

கொலையாளிகளை காப்பாற்றுவதென்பது மேலும் கொலைகளுக்கு ஊக்குவிப்பதென்பதே அதில் வெளிப்படும் உண்மை.

கச்சதீவை கைமாற்றிய விடயமே நல்ல உதாரணம், தமிழ்நாட்டு தமிழர் உணர்வில் மத்திக்கு உள்ள அக்கறையைக் காட்ட.

தமிழ்நாட்டு தமிழனை விட கேரளாக்காரனுக்கு தான் மரியாதை கொடுப்பார்களாம் மத்தியில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிவிமானம் இந்தியபாதுகாப்புக்கு கவலை அளிக்கும் விடயமாம்.

ஏழைத்தமிழன் உழைக்க வந்தால் கடலே அவனுக்கு சமாதி ஆகிறது

துப்பாக்கிகளால் அப்பாவிகளை வேட்டையாடும் சிங்களவெறியர் படைக்கு

கப்பல்களும், ராடர்களும் பரிசு கொடுத்து இந்தியப்பாதுகாப்பு சந்தோசிக்குதாம்.

இந்திய கடற்படை உருவாக்கம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை எந்த விதமான சண்டைகளிலும் ஈடுபடாமல் சும்மா கடலில் மீன் பிடித்துக்கொண்டு சுத்தி திரியும் இந்திய கடற்படையினரின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்க வேணும்.

தமிழனை அழிக்க இந்தியாவிலும் சதியா.என்னப்பா ஈனப்பிரவியாக போயிட்டாங்களா தமிழர்கள்.அகன்ற தமிழீழம் உருவாககூடுமென அச்சம் இந்திய மத்திய அரசியல்வாதிகளுக்கு வந்திட்டுது அதனால்தான் அழுகீனம் ஆனால் நாம் எமது விடுதலைக்கே போராடுகின்றோம் ஆனால் எம் உறவுகளுக்கு பிரச்சினை என்றால் எதுவும் செய்ய துணிவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mumbaila bomb vacchavana kandupedika vakka kanum puzhikala noondarathu veliyapoochu india intelligenceiku,ithu avarkalin oru sathiaakum

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாம் எமது விடுதலைக்கே போராடுகின்றோம் ஆனால் எம் உறவுகளுக்கு பிரச்சினை என்றால் எதுவும் செய்ய துணிவோம்"

ஈழவன்!

உங்களது வார்த்தைகளைக் கேட்க மனதுக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

தமிழீழம் அமையுமானால் அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல...இந்திய தமிழர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

தமிழக தமிழர்களுக்கு இந்திய அரசாங்கத்தை விட தமிழீழம் மிகுந்த உண்மையான பாதுகாப்பு!

தேசியவாதம் என்ற பெயரால், தமிழக தமிழர்கள் ஓர வஞ்சனை செய்யப்படுகிறார்கள் என்பதே உண்மை!

- கப்பல்பயணி

நாம் எமது விடுதலைக்கே போராடுகின்றோம் ஆனால் எம் உறவுகளுக்கு பிரச்சினை என்றால் எதுவும் செய்ய துணிவோம்

நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழீழப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசும் அதன் ஆலோசகர்களும் போடும் திட்டங்களில் இதுவும் ஒன்று.. தமிழர்களிடம் இந்தியக் கடற்படைத் தளபதியின் கருத்து எடுபடாது..

உலகத் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழீழப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசும் அதன் ஆலோசகர்களும் போடும் திட்டங்களில் இதுவும் ஒன்று.. தமிழர்களிடம் இந்தியக் கடற்படைத் தளபதியின் கருத்து எடுபடாது..

சிறீலங்கா கடற்படையும் அவர்களை பயன்படுத்தும் பாகிஸ்தான் உளவுத்துறையும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய கடற்படையின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்கள் என்ற செய்தி வரும்போதுதான் இவர்களுக்கு தாங்கள் செய்த தவறு தெரியவரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.