Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தை அழுததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட இந்திய தம்பதி: இனவெறியுடன் திட்டிய ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ மீது புகார்

Featured Replies

குழந்தை அழுததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட இந்திய தம்பதி: இனவெறியுடன் திட்டிய ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ மீது புகார்

 
 
British-Airways

3 வயது குழந்தை அழுத காரணத்தால், இந்திய தம்பதியை இனவெறியுடன் திட்டி, விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இறக்கிவிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள், மத்திய  விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த மாதம் 23-ம் தேதி  லண்டனில் இருந்து பெர்லின் நகருக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பிஏ 8495 என்ற விமானம் புறப்பட்டது. இதில் பல இந்தியர்களும் பயணித்தனர். அதில் ஒரு இந்திய தம்பதி தங்களின் 3 வயது மகனுடன் பயணிக்க டிக்கெட் பெற்றிருந்தனர்.

 

விமானம் லண்டன் நகரில் இருந்து  பெர்லின் புறப்பட இருந்த நேரத்தில் இந்திய தம்பதியின் மகன் திடீரென்று அழத் தொடங்கினார். அவரின் சத்தம் விமானம் முழுவதும் எதிரொலித்தது. அந்தக் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் முயற்சித்தும் நடக்கவில்லை,  பிஸ்கட், சாக்லேட்டுகள் கொடுத்தும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

இதைக்கவனித்த விமான ஊழியர்கள், குழந்தையின் அழுகையை நிறுத்துங்கள் மற்றபயணிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது எனக் கூறினர். ஆனால், குழந்தை நிறுத்தவில்லை என்பதால், விமானத்தில் இருந்து இறங்கிவிட்டு, மாற்றுவிமானத்தில் செல்ல அறிவுறுத்திவிட்டுச் சென்றனர். அப்போது விமான ஊழியர்கள் இந்தியத் தம்பதியை இனவெறியுடன் திட்டி, அவமானப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் பின் அந்த இந்தியத் தம்பதி  லண்டன் நகரில் இருந்து வேறு விமானம் மூலம்  பெர்லின் நகருக்கு சென்று சேர்ந்தனர்.

iasjpg
 

இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தையான மத்திய சாலைப்போக்குவரத்து துறை அதிகாரி, மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு  புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த புகாரில் கூறியுள்ளதாவது:

‘‘எனது  3 வயது குழந்தை விமானத்தில் அழுதது என்பதற்காக லண்டன் இருந்து பெர்லின் செல்லும் விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ளனர். எங்களை இனவெறியுடன் திட்டி அவமானப்படுத்தினார்கள்.

நாங்கள் குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகிறோம், நீங்கள் விமானப்பயணத்தை தொடரலாம் என்று கூறியும், இனவெறியுடன் வார்த்தையைக் கூறி இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான் என்று திட்டினார்கள். எங்களின் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த இந்தியர்களும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையின் அழுகை நிறுத்த முயற்சித்தனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும’’ என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இது பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்கையில், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம். எந்த வகையிலும் இனவெறி உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்துவோம், அந்தப் பயணியையும் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அடுத்த விரிவாக அறிக்கை விடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

https://tamil.thehindu.com

  • கருத்துக்கள உறவுகள்

நான் பலமுறை கவனித்த ஒன்று இது. சிறு குழந்தைகள் தொடச்சியாக அழும். அதிக அழுத்த்தினால அல்லது ஒவ்வாமயினால தெரியவில்லை. பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாகவும் பெற்றோருக்கு மிகவும் சங்கடமாகவும் இருக்கிம்.   

எனக்கு இந்த தந்தை கூறுவதில் தான் டவுட் இருக்கு. இந்தியர்களில் சிலர், முக்கியமாக வட இந்தியர்களும் பஞ்சாபியினரும் எங்கு சென்றாலும் இடம் பொருள் பார்த்து அதற்கேற்ப நடக்க தெரியாதவர்களாகவும். எந்த நேரமும் சவசவ என்று கதைத்துக் கொண்டோ அல்லது மூன்று தெரு தள்ளி இருப்பவர்களுக்கு கேட்கும் வண்ணம் சாப்பாட்டை சப்பிக் கொண்டோ இருப்பவர்கள். பிரச்சனை வேறு எதுவுமாக இருக்கும். குழந்தை அழுததுக்கு எல்லாம் பயணிகளை இறக்க மாட்டர்கள்.

அது சரி, பிரிட்டிஷ் விமானத்தில் இருந்து இறக்கியமைக்கு இவர்கள் ஏன் இந்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் முறையிட்டுள்ளனர்? விமான நிறுவனத்திடம் முறையிட்டு இருக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளுத் தான்.

இந்திய மத்திய அரசு அதிகாரி...... தான் இருப்பது ஜரோப்பாவில் எனபதை மறந்து , சன்னதம் ஆடியிருப்பார்.

தாங்க முடியாமல், இறக்கிவிட்டதுடன், அவர் நடத்தை குறித்து, இந்திய அரசுக்கும் தெரிவித்திருப்பார்கள்.

உடனே, ரேஸ் காட்டை தூக்கி தன்னை காப்பாத்தப் பார்கிறார்.

அவருடன் வந்த அணைத்து இந்தியர்களும் ஒத்து ஊதுவர்.

பிரிட்டிஸ் ஏர்வேஸ் உலகத்தரமானது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்காலை எனது 9 மாத பேரன் நியூயோர்கிலிருந்து சன்பிரான்சிஸ்கோ வாறான்.என்ன நடக்கப் போதொன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இப்படியும் நடக்கலாம் என்று எண்ணி பக்கத்திலுள்ளவர்களுக்கு சிறிய கடிதமும் அன்பளிப்பும் கொண்டுவருகிறார்கள்.

 

9_A426553-59_B7-45_FF-_A87_A-8_A2_F086_D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை நம்ப கூடிய கதை அல்ல ரீல் விடுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2018 at 8:25 AM, ஈழப்பிரியன் said:

நாளைக்காலை எனது 9 மாத பேரன் நியூயோர்கிலிருந்து சன்பிரான்சிஸ்கோ வாறான்.என்ன நடக்கப் போதொன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இப்படியும் நடக்கலாம் என்று எண்ணி பக்கத்திலுள்ளவர்களுக்கு சிறிய கடிதமும் அன்பளிப்பும் கொண்டுவருகிறார்கள்.

 

9_A426553-59_B7-45_FF-_A87_A-8_A2_F086_D

இந்த விமானத்தில் நடந்ததை வைத்து எனது பேரனும் முதன்முதல் விமானமேறப் போகிறான்.என்ன நடக்கப் போகுதோ என்று ஒரே அந்தரமாக இருந்தது.

ஆனால் எதுவித பிரச்சனையும் பண்ணாமல் முதலே பக்கத்திலிருந்தவர்களுக்கு சிறிய அன்பளிப்பு கொடுத்திருந்ததால் அவர்களும் உற்சாகப்படுத்தியதால் சந்தோசமாக வந்து சேர்ந்துட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த விமானத்தில் நடந்ததை வைத்து எனது பேரனும் முதன்முதல் விமானமேறப் போகிறான்.என்ன நடக்கப் போகுதோ என்று ஒரே அந்தரமாக இருந்தது.

ஆனால் எதுவித பிரச்சனையும் பண்ணாமல் முதலே பக்கத்திலிருந்தவர்களுக்கு சிறிய அன்பளிப்பு கொடுத்திருந்ததால் அவர்களும் உற்சாகப்படுத்தியதால் சந்தோசமாக வந்து சேர்ந்துட்டான்.

எனது பேரன் பதின்னோரு மாத குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றோம்..

விமான தரையேற்றத்தின் போது அழவில்லை..தூங்கிவிட்டான்..

ஆனால் விமானம் தரையிறங்கும்போது, காதுகளில் உணரும் அதிக காற்றழுத்த வேறுபாட்டால் ஒரே அலறலான அழுகை.. விமான பணிப்பெண் கொடுத்த பால், பிஸ்கட் எதற்கும் மசியவில்லை.. இருபது நிமிடங்கள் மிகவும் சங்கடமாகிவிட்டது.. விமானம் தரையிறங்கியவுடன் தான் சரியானான்..

பொடியருக்கு தற்பொழுது ஐந்து வயதாகிறது.. அடுத்த மாதம் விமானம் ஏறப்போகிறார், என்ன நடக்கப்போகிறது என்பது சற்று கவலையாக உள்ளது.. 'விமான இருக்கை திரையில், கார்ட்டூன் படங்களை ஓடவிட்டால் அமைதியாகிவிடுவார்' என நினைக்கிறேன்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் 5 வயது என்றால் கொஞ்சம் சொல்வது விழங்கும்.புரிய வைக்கலாம்.

இறங்கும் போது அழுதால் கொஞ்சம் பரவாயில்லை.

ஏறும் போது என்றால் இறங்கும் வரை பக்கத்திலுள்ளவர்கள் ஏதோ பரம எதிரியாக பார்ப்பார்கள்.

எனது மகனும் மனைவியும் செய்ததை பலரும் பாராட்டி தாங்களும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என கூ றியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.