Jump to content

அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

Recommended Posts

அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். 

omarosha.jpg

ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்"  என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒரு கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதாலே என்னை இழிவாக பேசினார். ஒரு குற்றமும் செய்யாத என்னை வேலையிலிருந்து வெளியேற்றினர். என்னை பல முறை இழிவாக பேசினார். என்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியதுடன், ட்ரம்புடன் ஒமரோசா தொலைபேசியில் உரையாடிய உரையாடல் ஒன்றினையும் வெளியிட்டார்.

அந்த உரையாடலில், ட்ரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.

அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.

உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

’அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை, அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் ஜான் கெல்லி(வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி)’என குறிப்பிட்டு பதவிட்டுள்ளமையானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே ட்ரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாய கட்சி நிர்வாகி வில்சன், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் பெண்ணின் நிறத்தின் காரணமாக நாய் என அழைக்கலாமா? யாராக இருந்தாலும் நாய் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது ? என ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும், ஒரு அதிபர் எனும் கண்ணியத்துடன் பேச டிரம்ப் முயற்சிக்க வேண்டும் எனவும், கருப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப், அமெரிக்கா, ஒமரோசா, வெள்ளை மாளிகைஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

http://www.virakesari.lk/article/38524

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மற்றவர்களை நேருக்கு நேராகவே தரக்குறைவான வார்த்தைகளில் (பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளில்) திட்டுவது அமெரிக்கச் சமூகத்தில் வழக்கமாகிவிட்டது . 'வல்லான் வகுத்ததே வாழ்க்கை' என்பது போல் உலகில் படித்த (!!) பெரும்பாலானோர் அமெரிக்க பாணியை அனைத்து விடயங்களிலும் பின்பற்றுவதே நாகரிகம் (!!!) எனத் திரிவது அரைவேக்காட்டுத்தனம் . ட்ரம்ப் பெரும்பான்மை அமெரிக்கச் சமூகத்தின் பிரதிநிதி . வேறு என்னத்தை அவரிடம் எதிர்பார்க்க முடியும் ? ஒரு சாதாரண அமெரிக்கன், கையில் செழிப்பாக டாலர் வைத்துத் திரியும் காட்டுமிராண்டி .  இதைச் சொல்வதால் நான் ஏதோ அமெரிக்க வெறுப்பை உமிழும் பொதுவுடைமைவாதி என எண்ண வேண்டாம் . சீனர்களைப்  பற்றியும் ரஷ்ய அரசைப் பற்றியும் இதை விடக் கடுமையான விமர்சனங்கள் என்னிடம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேடம் போடுபவர்கள்....மறைத்து வைக்க முயலும் சில விடயங்கள்....அவர்களையறியாமலே ...பல வேளைகளில்....வார்த்தைகளாக வெளியே விழுந்து விடுவது உண்டு!

அப்படியான சந்தர்ப்பங்களில் ஒன்று தான் .....இது!

பொதுவாகவே...மற்றவர்களை...இழிவு படுத்த முயல்பவர்கள்.....தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு! டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385894
    • இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
    • திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில்  தருமபுரியில் செளம்யா அன்புமணி பா ம க முன்னணியில் 
    • 11 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம் திமுக - 39 (முன்னிலை) அதிமுக - 0 பாஜக - 1 நாம் தமிழர் - 0 மற்றவை - 0 தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.