Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு

Featured Replies

பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு

 

maithripala-sirisena-300x200.jpgநீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிங்கள இதழான ‘அனித்த’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் நாள்  தமது இல்லத்தில் நடந்த கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. ஆனால், இன்னமும் தகவல்கள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை, பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்னவுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்தே, சிறிலங்கா அதிபர் தலைமையிலான கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, கோரப்பட்ட 34 பிரிவுகளில் உள்ள தகவல்கள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது, காவல்துறை மா அதிபரின் பக்கம் திரும்பிய சிறிலங்கா அதிபர், ஆயுதப்படையினரை சந்தேகநபர்களாக காட்டியமை குறித்து அதிருப்தியை வெளியிட்டார். அவர்களுக்கு எதிராக  எந்த சாட்சியங்களும் இல்லை என்றும் கூறினார்.

அப்போது காவல்துறை மா அதிபர், பூஜித் ஜெயசுந்தர, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சந்தேக நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான போதுமான சான்றுகள் இருந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இராணுவத் தகவல்கள் எதையும் வழங்கக் கூடாது என்று முப்படைகளின் தளபதிகளுக்கும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/04/news/32705

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பேர் தான்.....சண்டித்தனம் எண்டு சொல்லிறது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடு அதுக்கு ஒரு நல்ல அதிபர். வாழ்ந்திடும். நீதிக்குமுன்னுரிமை வழங்கி அவர்கள் கேட்கும் தகவல்களை முப்படைகளும் வழங்கவேண்டும் என்று கட்டளை போடுவியா.

நீதிமன்றம் கேட்ட தகவல்கள் உள்ளகத்தகவலா இல்லையா என்பதை இப்போது யார் முடிவுசெய்வது? வெளியிடக்கூடிய தகவல்களையும் வெளியிடாமல் விடுவதற்கு இக்கட்டளையை முப்படையும் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

நீதிமன்றத்தின் ஆணையை உதாசீனப்படுத்தும் இலங்கை நாட்டின் அதியுயர் பதவியிலிருக்கும் அதிபரின் இந்த அசமந்தப்போக்கு இலங்கைத்தீவின் நீதிப்பொறிமுறையை கேள்விக்குறியாக்குகிறது.

அரசியல்  விவகாரங்களில் நாட்டின் அதிபரை வழிநடத்தலுக்கும் ஆலோசனை செய்வதற்கும் உதவிக்குழு ஒன்று அதிபருக்கு அருகில் இல்லையா எதையும் எடுத்தவாக்கில் சொல்லுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

அரசியல்  விவகாரங்களில் நாட்டின் அதிபரை வழிநடத்தலுக்கும் ஆலோசனை செய்வதற்கும் உதவிக்குழு ஒன்று அதிபருக்கு அருகில் இல்லையா எதையும் எடுத்தவாக்கில் சொல்லுவாரா?

அதிபரின் சட்ட ஆலோசகர்களில் ஒருவர் எங்கள் திருவாளர். சுமந்திரன் ஐயாவும் ஒருவர் என்ற செய்தியைப் படித்த ஞாபகம் உள்ளது. ? 

21 hours ago, நவீனன் said:

அவர்களுக்கு எதிரான போதுமான சான்றுகள் இருந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இராணுவத் தகவல்கள் எதையும் வழங்கக் கூடாது என்று முப்படைகளின் தளபதிகளுக்கும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை தமிழினத்துக்கு நிலைத்த அடிப்படை நீதி கூடக் கிடைக்காது.
அல்லது
முழுமையான சுதந்திர தமிழீழ நாடு அமைய வேண்டும்! அதன் பின்னரே தமிழர்கள் அடிப்படை நீதியை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும்.

On 9/4/2018 at 8:53 AM, நவீனன் said:

இந்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. ஆனால், இன்னமும் தகவல்கள் வழங்கப்படவில்லை.

இலங்கை நீதிமன்றங்களை சிங்கள இனவாதிகள் எப்போது தான் மதித்துள்ளனர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.