Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் பொது மக்களை புலிகள் சுட்டனர் - எனக்கு கவலையே இல்லை - மஹிந்தவின் பிரத்தியேக பேட்டி

Featured Replies

இறுதிப் போரில் பொது மக்களை புலிகள் சுட்டனர் - எனக்கு கவலையே இல்லை - மஹிந்தவின் பிரத்தியேக பேட்டி

 

அண்மையில் இந்தியாவிற்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ.

தனது நெருங்கிய இந்திய நண்பனான சுப்ரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று இலங்கை - இந்தியா என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அத்துடன் ராகுல்காந்தி, நரேந்திர மோடி உட்பட இன்னும் சிலரைச் சந்தித்தது மட்டுமன்றி பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய ஊடகமான தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில்,

இறுதி யுத்தம் தொடர்பிலும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பிலும் , தமிழர்களைப் பற்றிய மஹிந்தவின் எண்ணக்கரு என்ன, ராஜீவ் காந்தி கொலை வழக்கு இலங்கைக் குற்றவாளிகள் விடுதலை பெறும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற அனுமதிப்பீர்களா.... என பல்வேறான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

 

 

 

https://www.tamilwin.com/politics/01/193493?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் புலிகளிடம் யுத்த கைதிகளாக பிடிபட்ட சிங்கள படையினர் புலிகளால்  விடிவிக்கப்பட்டனர் என்ற செய்தியையும் சொன்னவரும் அவர்தான் இப்ப இப்படி கூறுவதில் எங்கேயோ உதைக்குது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழிக்க இந்தியா உட்பட பல நாடுகள் உதவியதாக குறிப்பிடுகின்றார். ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் என வரும்போது இது எங்கள் உள்ளநாட்டுப்பிரச்சனை நாங்களே விசாரிப்போம் என்கிறார்.
டாய் வடிவேலு..... உனக்கு போட்டியாய் ஆள் வந்துட்டான்டா....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சு. சாமியின் குரலாக மகிந்த ஊதுகின்றார் போல உள்ளது!

  • தொடங்கியவர்

பிர­பா­கரன் சர­ண­டை­வ­தற்கு தயா­ராக இருக்­க­வில்லை

Untitled-2-8062522d3e74b99da2b525f0c6e5f285015f60a9.jpg

 

தமது இரா­ணு­வ ­ப­லத்தை அதிகம் நம்­பி­யி­ருந்தார்  தந்தி தொலைக்­காட்­சிக்­கான பேட்­டியில் மஹிந்த

பிர­பா­கரன் அதீத நம்­பிக்­கை­யுடன் இருந்தார். அவர்களு­டைய இரா­ணுவ பலத்தை அதிகம் நம்­பினார். இறுதியில், யாரா­வது வந்து அவரை காப்­பாற்­றி­வி­டு­வார்கள் என்று நினைத்தார். ஆனால் அது நடக்­க­வில்லை. பிர­பா­கரன் சர­ண­டை­வ­தற்கு தயா­ராக இருக்­க­வில்லை. 

பிர­பா­க­ரனை பற்றி தெரி­யுமே  அவர் சரண் அடை­யக்­கூ­டி­யவர் அல்ல. அவர் சர­ண­டைய தயா­ராக இருந்தால், கைது செய்­தி­ருப்போம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

இலங்­கையில் நடை­பெற்ற இறு­திக்­கட்ட போரின் போது விடு­த­லைப்­பு­லி­களை வீழ்த்த இந்­தியா உத­வி­யது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

புது­டெல்­லிக்கு விஜயம் செய்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ‘தந்தி’ தொலைக்­காட்­சிக்கு அளித்த சிறப்பு பேட்­டி­யி­லேயே இவ்­வாறு கூறி­யுள்ளார்.

 இலங்­கையில் நடை­பெற்ற இறு­திக்­கட்ட போர் குறித்து கேட்­கப்­பட்ட கேள்­வி­களும், அவற்­றுக்கு அவர் அளித்த பதில்­களும் வரு­மாறு:-

கேள்வி:- நீங்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான போரில் வென்­றது மிக பிர­பலம். ஆனால் பிர­பா­கரன் இறந்­து­விட்டார் என்­பதை சில தமிழ் தலை­வர்கள் நம்­ப­வில்­லையே?

பதில்:- அவர்­களை இலங்­கைக்கு வந்து பார்க்கச் சொல்­லுங்கள். பிர­பா­கரன் இறந்த பிறகு எவ்­வ­ளவு வளர்ச்சி ஏற்­பட்டு இருக்­கி­றது என்று பாருங்கள். அவர் இருந்­தி­ருந்தால், இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் மேலும் மர­ணங்கள் தான் நடந்­தி­ருக்கும். சில தலை­வர்கள் கொல்­லப்­பட்டு இருப்­பார்கள்.

கேள்வி:- பிர­பா­கரன் இப்­போதும் உயி­ரோடு இருக்­கிறார் என்று சில தலை­வர்கள் சொல்­கி­றார்­களே?

பதில்:- அது அவர்­க­ளு­டைய அர­சி­ய­லுக்­காக செய்­கி­றார்கள்.

கேள்வி:- இறு­திப்­போரில் உங்கள் யுக்தி என்­ன­வாக இருந்­தது?

பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் 3 இலட்­சத்­திற்கும் மேற்­பட்­ட­வர்­களை பண­யக்­கை­தி­க­ளாக வைத்­தி­ருந்­தார்கள். அரசு கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­திக்கு வர விரும்­பி­ய­வர்­களை சுட்­டார்கள். அப்­போது நட­வ­டிக்கை எடுத்தே ஆக­வேண்டும். இறு­தியில் நாங்­கள்தான் வென்றோம்.

கேள்வி:- விடு­த­லைப்­பு­லிகள் அப்­பாவி மக்­களை சுட்­டார்­களா?

பதில்:- ஆம். தொலைக்­காட்­சி­களில் கூட காட்­டப்­பட்­டதே. அரச பகுதி நோக்கி மக்கள் ஓடி வந்த போது, துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­னார்கள்.

கேள்வி:- பிர­பா­க­ரனின் கடைசி நிமி­டங்கள் பற்றி சொல்ல முடி­யுமா?

பதில்:- அப்­போது நான் அங்கு இல்­லையே...

கேள்வி:- உங்கள் இரா­ணுவ தள­பதி சொல்லி இருப்­பாரே?

பதில்:- ஆம், அந்த பகு­தியில் இருந்த அதி­கா­ரிகள் சொன்­னார்கள். இரு தரப்­பி­ன­ரி­டையே நடந்த சண்­டையில் அவர் இரா­ணு­வத்தால் சுடப்­பட்டார்.

கேள்வி:- அவ­ருக்கு சரண் அடைய வாய்ப்பு வழங்­கப்­பட்­டதா?

பதில்:- அவர் அதற்கு தயா­ராக இல்லை. பிர­பா­க­ரனை பற்றி தெரி­யுமே... அவர் சரண் அடை­யக்­கூ­டி­யவர் அல்ல. அவர் சர­ண­டைய தயா­ராக இருந்தால், கைது செய்­தி­ருப்போம். அது­பற்றி கேட்­டுப்­பார்த்தோம்..

கேள்வி:- சரண் அடைய சொல்லி நீங்கள் கேட்­டீர்­களா?

பதில்:- ஆம், வெளிப்­ப­டை­யா­கவே அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

கேள்வி:- அந்த அழைப்பு தூதுவர் மூலம் அனுப்­பப்­பட்­டதா? அல்­லது தொலைக்­காட்சி மூலம் சொல்­லப்­பட்­டதா?

பதில்:- போர் நடந்த பகு­தியில் இரா­ணு­வத்தால் வெளிப்­ப­டை­யாக அறி­விக்­கப்­பட்­டது.

கேள்வி:- பிர­பா­க­ரனின் எந்த யுக்தி அவ­ரது தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­தது?

பதில்:- அவர் அதீத நம்­பிக்­கை­யுடன் இருந்தார். அவர்­க­ளு­டைய இரா­ணுவ பலத்தை அதிகம் நம்­பினார். இறு­தியில், யாரா­வது வந்து அவரை காப்­பாற்­றி­வி­டு­வார்கள் என்று நினைத்தார். அது நடக்­க­வில்லை.

கேள்வி:- இறு­திப்­போரில் இந்­திய அரசு உங்­க­ளுக்கு உத­வி­யதா?

பதில்:- இந்­தியா மட்­டு­மல்ல, நிறைய நாடுகள் உத­வின. அவர்கள் எங்­க­ளுக்கு எதி­ராக இருந்­தி­ருந்­தாலோ, தடைகள் விதித்­தி­ருந்­தாலோ, எங்­களால் விடு­த­லைப்­பு­லி­களை வீழ்த்தி இருக்க முடி­யாது. அவர்கள் தொடர்ந்து மக்­களை கொன்­றி­ருப்­பார்கள்.

கேள்வி:- இந்­திய அரசு எந்த அள­விற்கு உத­வி­யது?

பதில்:- அப்­போது இந்­தியா செய்த உத­விகள் என்றும் பாராட்­டுக்­கு­ரி­யது.

கேள்வி:- உயி­ரி­ழந்த அப்­பாவி தமி­ழர்­களின் சடலங் களை சர்­வ­தேச தொலைக்­காட்­சி­களில் பார்க்கும் போது, உங்­க­ளுக்கு கலக்­க­மாக இருந்­ததா?

பதில்:- ஆமாம். ஆனால் அதில் பல படங்கள் சித்­த­ரிக்­கப்­பட்­டவை. அவர்கள் வேண்­டு­மென்றே செய்­தார்கள்.

கேள்வி:- போரில் கொல்­லப்­பட்ட அப்­பாவி தமி­ழர்­க­ளுக்­காக வருந்­து­கி­றீர்­களா?

பதில்:- ஆம். ஒரு போர் நடக்கும் போது, சில பாதிப்­புகள் ஏற்­ப­டத்தான் செய்யும். எனக்கு வருத்­த­மா­கத்தான் இருக்­கி­றது. ஆனால் அதை எங்­களால் தவிர்க்க முடி­ய­வில்லை.

கேள்வி:- இன்று உல­கமே, பல அப்­பா­வி­களின் உயிர் இழப்­புக்கு நீங்­கள்தான் பொறுப்பு என சொல்­வது, உங்­க­ளுக்கு கவலை அளிக்­கி­றதா?

பதில்:- அது தவ­றா­னது. அதற்கு வேறு கார­ணங்கள் உள்­ளன.

கேள்வி:- உங்கள் மீது தவ­றில்லை என்றால், சர்­வ­தேச விசா­ரணை குழுவை ஏன் இலங்­கைக்குள் அனு­ம­திக்­க­வில்லை?

பதில்:- இப்­போ­தைய அரசு அனு­மதி கொடுத்து இருக்­கி­றது. ஆனால் சர்­வ­தேச சமூகம் இது­பற்றி ஏன் கவ­லைப்­பட வேண்டும்? எங்கள் நாட்­டி­லேயே மனித உரிமை ஆணையம் இருக்­கி­றது. ஆர்­வ­லர்கள் இருக்­கி­றார்கள். அவர்கள் விசா­ரிக்­கலாம். இந்த விஷ­யத்தை சர்­வ­தேச அள­விற்கு போக­விட்­ட­துதான் நாங்கள் செய்த தவறு. இது எங்­க­ளு­டைய உள்­நாட்டு விவ­காரம்.

கேள்வி:- இறு­திபோர் உச்­சத்தில் இருந்­த­போது, தமிழ்­நாட்டில் தி.மு.க. ஆட்­சியில் இருந்­தது. அப்­போது இந்­திய அரசு மூலம் அவர்கள் கொடுத்த அழுத்­தத்தை சமா­ளிப்­பது கடி­ன­மாக இருந்­ததா?

பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதை இந்திய அரசுக்கு புரியவைத்தோம். ஆனால் அவர்களுடைய கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்தோம். இந்தியா கேட்டுக்கொண்டதால்தான், இறுதிக் கட்டத்தில் பயங்கர ஆயுதங் களை பயன்படுத்தவில்லை.

கேள்வி:- கடந்த தேர்தலில், இந்தியா உங்கள் அரசை தோற்கடித்ததா?

பதில்:- அதுபற்றி பேச விரும்பவில்லை.

கேள்வி:- தேர்தலில் இந்திய உளவுத்துறையின் பங்கு இருந்ததாக நீங்கள் குற்றம்சாட்டினீர்களே?

பதில்:- இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறோம்.

இவ்வாறு மஹிந்த ராஜபக்சே கூறினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் மகிந்த சொல்லும் பொய்கள் உலகின் பிராந்தியத்தின் முக்கிய செய்திகளாகி விட்டன. காலக் கொடுமை. ?

11 hours ago, nedukkalapoovan said:

இப்ப எல்லாம் மகிந்த சொல்லும் பொய்கள் உலகின் பிராந்தியத்தின் முக்கிய செய்திகளாகி விட்டன. காலக் கொடுமை. ?

உலகின் மிக மோசமான இரண்டு பயங்கரவாதக் கும்பல்கள் சேர்ந்தால் இப்படியான கதைகள் தான் வெளியே வரும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.