Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம்

Featured Replies

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம்
 

image_b9f8bd1fab.jpgபா.நிரோஸ்

 

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.

 

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கருத்தை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சரணடைந்தவர்கள்-கொல்லப்பட்டதான-எஸ்-பீயின்-கருத்தை-மறுத்தது-இராணுவம்/175-222044

  • கருத்துக்கள உறவுகள்

கோழியைக் கேட்டுக்.....குழம்பு வைக்கப் போனால்....இது தான் பிரச்சனை!?

  • தொடங்கியவர்

சரணடைந்த புலிகள் கொலை செய்யப்படவில்லை : அமைச்சர் மறுப்பு

 

 
 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்திருப்பதை முற்றாக நிராகரிக்கின்றேன் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

mahinda_samarasinga.jpg

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் தாய், தந்தை இருவரும்  சரணடைந்ததால் அதுதொடர்பான பொறுப்பை நாங்கள் நிறைவேற்றினோம்.

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் கேர்ணல் ரமேஸ் உள்ளிட்ட சிலரை இராணுவத்தினர் கொலை செய்திருக்கலாம் என அண்மையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

யுத்தம் ஒன்று இடம்பெறும்போது இரண்டு தரப்பிலும் மரணித்திருப்பார்கள். அது சாதாரண விடயம். அதற்காக சரணடைந்தவர்களை கொலைசெய்யுமளவுக்கு இராணுவம் செயற்படவில்லை என்பதை நாங்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றோம். 

சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களை இராணுவத்தினர் கொலைசெய்ததாக இப்போது தெரிவிக்கின்றவர்கள். அந்தக் காலத்தில் ஏன் இதனை தெரிவிக்காமல் மறைத்தனர் என்று கேட்கின்றேன். 

இதனால் இந்த பிரசாரமானது மிகவும் பயங்கமானதாகும். அதனால் இது தொடர்பில் எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் எடுக்கலாம் என்றார்.

http://www.virakesari.lk/article/40646

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சமரசிங்க கெகலியவின் உடன் பிறவா சகோதரர். உண்மையை தவிர வேறு ஏதும் இவர்கள் பேசுவதில்லை.

சிங்களவர்களின் மகா பொய் வம்சத்தினரின் வரலாறு தொடர்கிறது! 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.திஸாநாயக்க போகிற போக்கில் சொன்னால் இராணுவம் பேசாமல் இருக்குமா? 

சரணடைந்தவர்களை ஏன் சரணடையாதவர்களைக் கூடக் கொல்லவில்லை என்றுதான் சொல்வார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.