Jump to content

குரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்

Recommended Posts

பதியப்பட்டது

இந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை.
குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் என்று அல்லோகலபடுகின்றன.

இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன.

தேவகுருவாகிய வியாழன் என்பவனின் மனைவியை குருவின் சீடனான சந்திரன் கற்பழித்து விட்டான் என்றும், குருவின் சாபத்தால் ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் அழகு குறைந்து தேய்பிறை ஏற்பட்டது என்றும் இந்துப் புராணம் கூறுவது எல்லாம் எவ்வளவு ஆபாசமும், அறியாமையும் ஆகும்!

1781ஆம் ஆண்டில் யுரேனஸ், 1846ஆம் ஆண்டில் நெப்டியூன், 1930ஆம் ஆண்டில் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டன. விண்ணியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இதில் புளுட்டோ என்பது கோளின் அம்சத்துக்குக் கீழ் வரவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு கிரகங்களின் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

புதிய இரு கிரகங்களுக்கு சோதிடத்தில் பலன் இல்லையே _ எங்கே போய் முட்டிக்கொள்ளப் போகிறார்கள் _ இந்த சோதிட சிகாமணிகள்? கிரகங்களில்கூட வருணங்கள் உண்டு; வியாழன், வெள்ளி இரண்டும் பிராமணர்கள், ஞாயிறும், செவ்வாயும் சத்திரியர்கள், சந்திரனும், புதனும் வைசியர்கள், ராகு, கேது சூத்திரர்களாம். சோதிட மூடத்தனத்தில்கூட வருண பேதங்கள். இவையெல்லாம் பார்ப்பனீய இட்டுக்கட்டும் கற்பிதங்கள் என்று விளங்க வில்லையா?
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்? 
-கலிபூங்குன்றன்

https://www.newsdogapp.com/ta/article/5bb71d2112313a54b131da4e/?d=false

  • 11 months later...
  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹலோ...  ருல்பன், 🔨
ராசி, நட்சத்திரம் பார்ப்பவர்கள்....  அவர்களது,  தனி உரிமை. 
அதில்... நீங்கள், தலையிடுவது... உங்களுக்கு தேவையில்லாத வேலை. 
உங்களுக்கு... அது பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கி இருப்பதே அழகு.   :)

Posted

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/2/2019 at 11:48 PM, ampanai said:

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

வல்லுனர்😂. சும்மா கிச்சு கிச்சு மூட்ட வேணாம் அம்பனை.

*****

#வெள்ளைகாரன் பொய்சொல்ல மாட்டான்

Posted
22 hours ago, தமிழ் சிறி said:

ஹலோ...  ருல்பன், 🔨
ராசி, நட்சத்திரம் பார்ப்பவர்கள்....  அவர்களது,  தனி உரிமை. 
அதில்... நீங்கள், தலையிடுவது... உங்களுக்கு தேவையில்லாத வேலை. 
உங்களுக்கு... அது பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கி இருப்பதே அழகு.   :)

தமிழ சிறீ   மூடப்பழக்களுக்கு எதிராக பொது வெளியில் கருத்து வைப்பது அந்த மூடப்பழக்களை கடைப்பிடிப்போரின் தனி உரிமையை எப்படி பாதிக்கிறது என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை.  நான் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள்  மூடப்பழக்கங்களுக்கு  addicted ஆகி உள்ளவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே. 

ஆரிய பிராமணர்களின் மூடக்கொள்கைகளை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்று தற்போதைய நூற்றாண்டிலும் வாழ்ந்து கொண்டு  கீழடியில்  கி. மு வில்  வாழ்ந்த மக்களின் அறிவு திறனை வியந்து பாராட்டுவதில் அர்த்தம் இல்லை. 

Posted
22 hours ago, ampanai said:

ஐரோப்பியாவில்  வாழும் Santos Bonacci. இந்த தமிழரல்லாத  வல்லுனரின் விளக்கம் 🙂 

பல நூறு ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்தும் உள்ளார்  

எப்போதெல்லாம் எமது இல‍ங்கை இந்திய  நாடுகளில்  சாதாரணமாக நடைமுறையில் இருக்கும் அர்த்தமற்ற மூடப்பழக்கங்கள்  ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட படுகிறதோ அப்போதல்லாம் அதற்கு  பதில் கூற முடியாமல் தவிப்போர்  அவற்றை நியாயப்படுத்துவற்காக  மேற்கு நாடுகளின் வாழும் சில விதிவில‍க்குகள் (Exceptions) வலிந்து இழுக்கபடுவது வழமையாகி விட்டது. அந்த வழமையான செயலை தான் நீங்களும் செய்துள்ளீர்கள் அம்பனை.

Posted
19 minutes ago, tulpen said:

எல்லா சமூகத்திலும் "மூட நம்பிக்கைகளை" நம்புவார்கள் உள்ளார்கள் என்பதை கள உறவுகளுக்கு கூறுவதே எனது பதிவின் நோக்கம். 

ஏனெனில் எங்கள் மக்கள் மத்தியில் மட்டும் தான் இது உள்ளது என்ற பரப்புரை தவறானது.  

உலகம் எல்லாமிடமும் சாதாரண வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் உண்டு. மேற்குலக நாடுகளில் அவர்கள் அவற்றை வியாபாரமும் ஆக்கி உள்ளார்கள். சில இடங்களில் அதை  தொழில்நுட்பமாயும் காட்டி வருகிறார்கள். 

அதில் இந்த ஐரோப்பியரும் ஒருவர். அவரை தொடரும் மேற்குலக மக்களும் உள்ளார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.  

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ampanai said:

இப்படி மூடநம்பிக்கைகளை தடுக்காமல் விட்டதால் அவை ஏனைய மனிதர்களுக்கு துன்பம் தரும் சம்பிரதாயங்களாகவும் (பெண்கள் கோயிலுக்குள் போவது தீட்டு என்பது போல!) சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் விஞ்ஞான எதிர்ப்பாகவும் வளர்ந்திருக்கிறது. இதை சாதாரணமாகக் காவித்திரிவதற்கும் பிரபலமாக்குவதற்கும் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை அதை மறுத்து பலவீனப் படுத்த ஏனையவர்களுக்கும் இருக்கிறது! இது தனி மனித சுதந்திர மறுப்பாக அமையாது!  

Posted
2 minutes ago, Justin said:

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை. 

Posted
30 minutes ago, ampanai said:

எல்லா சமூகத்திலும் "மூட நம்பிக்கைகளை" நம்புவார்கள் உள்ளார்கள் என்பதை கள உறவுகளுக்கு கூறுவதே எனது பதிவின் நோக்கம். 

ஏனெனில் எங்கள் மக்கள் மத்தியில் மட்டும் தான் இது உள்ளது என்ற பரப்புரை தவறானது.  

உலகம் எல்லாமிடமும் சாதாரண வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் உண்டு. மேற்குலக நாடுகளில் அவர்கள் அவற்றை வியாபாரமும் ஆக்கி உள்ளார்கள். சில இடங்களில் அதை  தொழில்நுட்பமாயும் காட்டி வருகிறார்கள். 

அதில் இந்த ஐரோப்பியரும் ஒருவர். அவரை தொடரும் மேற்குலக மக்களும் உள்ளார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது.  

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

மீண்டும் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் வழக்கொழிந்து போன விதிவிலக்குகளோடு தொங்கி கொண்டு எமது மூடப்பழக்கங்களுக்கு விழுந்து விழுந்து வக்காலத்து வாங்ககும் உங்களால் கூட மூடப்பபழக்கங்கள் சரியானவை அவற்றை கடைப்பிடிப்பது அறிவு பூர்வமானது என்று வெளிப்படையாக கூற முடிவதில்லை. 

Posted
1 minute ago, tulpen said:

மீண்டும் மீண்டும் உங்களுக்கு கூறுவது எது மூடப்பழக்கம் என இறுதியில் முடிவு செய்வதை யாரும் தடுக்க முடியாது.  அது தனி மனித சுதந்திரம் என்பதையே. 

ஒன்றை நான் மூட நம்பிக்கை என எண்ணுவதால் அதை எல்லோரும் மூட நம்பிக்கையாக ஏற்க வேண்டும் என எண்ணுவதும் மூட நம்பிக்கைதான். 

Posted
5 minutes ago, ampanai said:

மீண்டும் மீண்டும் உங்களுக்கு கூறுவது எது மூடப்பழக்கம் என இறுதியில் முடிவு செய்வதை யாரும் தடுக்க முடியாது.  அது தனி மனித சுதந்திரம் என்பதையே. 

ஒன்றை நான் மூட நம்பிக்கை என எண்ணுவதால் அதை எல்லோரும் மூட நம்பிக்கையாக ஏற்க வேண்டும் என எண்ணுவதும் மூட நம்பிக்கைதான். 

மூட நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் உரிமை உங்களுக்கும் எல்லோருக்கும் உண்டு. அதில் நான் தலையிட வில்லை. ஆனால் இவை எல்லாம் மூட நம்பிக்ககைகள் என்று ஆதாரங்ளுடன் பொது வெளியில் சொல்லுவது தனிமனித உரிமையை மீறிய செயல் இல்லை. அப்பிடி கூறுவதே தனிமனித உரிமை மீறல் என்று நீங்கள் சொல்லுவது தவறு. 

37 minutes ago, ampanai said:

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை. 

தேவகுருவாகிய வியாழன் என்பவனின் மனைவியை குருவின் சீடனான சந்திரன் கற்பழித்து விட்டான் என்றும், குருவின் சாபத்தால் ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் அழகு குறைந்து தேய்பிறை ஏற்பட்டது என்றும் இந்துப் புராணம் கூறுவது எல்லாம் எவ்வளவு ஆபாசமும், அறியாமையும் ஆகும்!

இதை நம்புவது தவறு மூடத்தனம்  என்று நான் கூறினால் அது தனிமனித உரிமை மீறல் என்று கூறுகின்றீர்கள் அம்பனை. அப்படியானால் இது சரியானது என்று ஆதரிக்கின்றீர்களா? நிச்சயமாக ஆம் என்று உங்களால் கூற முடியாத‍தால் எங்கோ இருக்கும் உப்பு சப்பில்லாத ஐரோப்பிய விதிவிலக்குகளை இங்கு இழுக்கிறீர்கள்.

Posted
35 minutes ago, ampanai said:

சகல நாடுகளிலும், இலங்கை உட்பட, பாடசாலைகளில் அடிப்படை கல்வியும், சிந்திக்கும் ஆற்றலையும் கற்றுத்தருகிறார்கள். ( எல்லாருக்கும் அந்த வசதிகள் இல்லை என்பது வேறு). 

அவ்வாறு கற்றவர்களும், உயர் கல்வி கற்று பெரும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் கூட சிலவற்றை பின்பற்றுகிறார்கள். அவை சட்டத்தை மீறாத வரையில் யாரும் அது முட்டாள்தனம் என கூறுவதால் அதையும் சாதிப்பதில்லை, சாதிக்கவும் முடியாது, சாதிக்கவும் முனைவதில்லை.

இலங்கை போன்ற நாடுகளில் மதம் கல்வியில் உள்ளது. அதில் சித்தியடைவதும் அது மேற்கொண்டு உயர்தர படிப்பிற்கு செல்ல உதவுவதும் உண்டு. 

அதையும் கற்று தாண்டி வந்த பின்னர் எது சரி இல்லை எது பிழை என அறிந்து அங்கும் புலம்பெயர் தேசங்களிலும் வெற்றிகரமாக வாழ்பவர்களே எம்மில் அதிகம். 

இல்லை மதங்கள் மற்றும் மூட நம்பிக்கையை ஒருவர் அகற்ற விரும்பினால் அவரால் செய்யக்கூடிய பல வழிகள் உண்டு. ஒரு தளத்தை திறந்து பரப்புரை செய்யலாம், நாட்டிற்கு சென்று கல்வி திட்டத்தை நவீன உலகிற்கு ஏற்ப மாற்றலாம், இல்லை மக்கள் பொருளாதார பலத்தை உயர்த்தலாம் என பல ஆக்கப்பூர்வமான வழிகள் உண்டு.    

53 minutes ago, ampanai said:

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

இலங்கை போன்ற பல சமூகம் பல மாதங்கள் உள்ள நாட்டில் ஒரு மதம் மட்டும் முதன்மை மதமாக முன்னிறுத்தப்படுகின்றது. இதனால் மற்றைய மதங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த இலங்கை போன்ற நாட்டில் தனி மனித சுதந்திரமும் இல்லை மத சுதந்திரமும் இல்லை. 

ஒடுக்கப்பட்ட, பொருளாதார வலிமை குன்றிய சமூகங்களில் மூட நம்பிக்கைகள் ஆழமாக இருக்கும். அவை சேலையில் இருந்து பார்க்க தவறாக தெரியலாம். ஆனால், அதற்குள்ளே வாழ்பவர்களுக்கு அது ஒரு மருந்தாக அமையலாம். 

அதனால் சிறுபான்மை மக்களின் மதங்கள் மதம் சார்ந்த சில பழக்கங்களை மூட நம்பிக்கை என முத்திரை குத்துவதும் அந்த பெரும்பான்மை மத திணிப்பிற்கு உதவுகின்ற செயல்பாடு  எனவும் பார்க்கலாம்.   

Posted
1 hour ago, ampanai said:

இதை இந்த நாட்டு சட்டங்களும் தடுப்பதில்லை.  எது மூட நம்பிக்கை என இன்னொருவருக்கு சொல்ல தனி மனித சுதந்திரமும் இல்லை.  

ஒரு கோலம் வீட்டின் முற்றத்தில் போடுவது பற்றிய ஒரு விளக்கத்தை இந்த களத்தில் மெய்யானப்படுவது என்ற திரியில் இணைத்தேன். காரணம், அதிலும் ஒரு செய்தி, புரியாத செய்தி உள்ளதாக நான் நம்பினேன்.  ஆனால், என்னால் அறிவுபூர்வமாக அதை விளக்க முடியவில்லை. ஆனால், அதற்காக அதை முழுதாக மூடச்செயல் எனவும் ஏற்க முடியவில்லை. 

ஆனால், நிர்வாகம் அதை எடுத்துவிட்டது.  நான் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன். காரணம், நிர்வாக சட்ட நீதிபதிகள் அவர்கள். 

Posted
23 minutes ago, ampanai said:

ஒடுக்கப்பட்ட, பொருளாதார வலிமை குன்றிய சமூகங்களில் மூட நம்பிக்கைகள் ஆழமாக இருக்கும். அவை சேலையில் இருந்து பார்க்க தவறாக தெரியலாம். ஆனால், அதற்குள்ளே வாழ்பவர்களுக்கு அது ஒரு மருந்தாக அமையலாம். 

தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்.

Posted
54 minutes ago, tulpen said:

தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்.

இருக்கலாம். என் பார்வையில் நான் கனடாவில் இருந்தாலும் ஒடுக்கப்பட்டவன்

நீங்கள் எனது சமூகத்தை சார்ந்தரவர். உங்கள் பார்வையில் நீங்கள் மூடத்தனங்கள் எதுவுமே இல்லாத நிலைக்கு உயர்ந்திருக்கலாம், உங்கள் பார்வையில். 

ஆனால், எனது முன்னேற்றத்திற்கு நீங்கள் தடையாக இருக்க முடியாது என்பதும் எனது பணிவான நம்பிக்கை.  

Posted

மூட நம்பிக்கைகள் என்று கூறப்படுவதை ஆங்கிலத்தில் அல்டெர்னட் ரியாலிட்டி எனவும் கூறலாம் என எண்ணுகின்றேன். காரணம், அவர்கள் வாழுவது வேறு ஒரு உலகில் அதை எம்மால் புரிந்துகொள்ளமுடியாத எமது நிலை. 

The phrase alternate reality often serves as a synonym for a parallel universe. It may also refer to: Alternate universe (fan fiction), fiction by fan authors that deliberately alters facts of the canonical universe they are writing about. ... Virtual reality, simulated reality. A euphemism for "psychedelic experience"

ஒரு உதாரணத்திற்கு அமெரிக்க இன்றைய அதிபர் டிரம்ப் அவ்வாறான ஒரு உலகில் வாழுவதாக பல அமெரிக்கர்கள் கூறுகின்றனர். 

Posted
13 minutes ago, ampanai said:

இருக்கலாம். என் பார்வையில் நான் கனடாவில் இருந்தாலும் ஒடுக்கப்பட்டவன்

நீங்கள் எனது சமூகத்தை சார்ந்தரவர். உங்கள் பார்வையில் நீங்கள் மூடத்தனங்கள் எதுவுமே இல்லாத நிலைக்கு உயர்ந்திருக்கலாம், உங்கள் பார்வையில். 

ஆனால், எனது முன்னேற்றத்திற்கு நீங்கள் தடையாக இருக்க முடியாது என்பதும் எனது பணிவான நம்பிக்கை.  

நீங்கள் கூறியது அனோகமாக உங்களுக்கே புரிந்திருக்காது என்று நினைகிறேன். 

Posted

அறிவியல் ரீதியாக எம்மால் எல்லா நிகழ்விற்கு விளக்கம் தர கூடிய வல்லமை இல்லை. இருந்தால் ஆய்வுகூடங்களும் பல்கலைக்கழகங்களும் தேவையற்றைவை ஆகிவிடலாம். 

எம்மால் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியாத விடயங்களை நாம் மூடத்தன்மை நிறைந்ததாக பார்க்கலாம். அவற்றிற்கு காரணம் கற்பிக்க விருப்புவர்களை அவர்கள் ' வெள்ளைப்பூச்சு '  பூசுகிறார்கள் என கூறி தட்டியும் விடலாம்.  

அப்படி எல்லாவற்றையும் ஒரு குட்டைக்குள் போட்டிருந்தால் எம்மால் முன்னேறி இருக்கவும் முடியாது. 

3 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியது அனோகமாக உங்களுக்கே புரிந்திருக்காது என்று நினைகிறேன். 

உங்களுக்கு மீண்டும் ஒரு விளக்கத்தை தருவதில் மகிழ்ச்சியே !

ஒரு மேற்குலக நாட்டில் நான் வாழ்வதால் நான் முன்னேறியவன் ஆகிவிடமுடியாது. இந்த நாட்டில் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன். பல விடயங்களில் பின் தங்கியவன். பல விடயங்களில் நிறம், தாய் மொழி, பழக்கவழக்கம் என பலவேறு காரணங்களால்  ஒடுக்கப்பட்டவன். 

அதேவேளை நான் வாழும் நாட்டில் எனது சமூகத்தை சார்ந்தவர் தன்னை முழுமையாக  ஒரு சம அந்தஸ்த்தை உடையவனவாகவும் ஒரு அறிவியல் ரீதியாக என்னை விட உயர்நதவனாகவும் எண்ணலாம். அது அவனின் உரிமை. 

அப்படி எண்ணுபவன் மட்டுமல்ல எவனும் எனது வளர்ச்சிக்கு தடையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. 

Posted
9 minutes ago, ampanai said:

நீங்கள் கூறியதற்கும் எமது விவாத‍த்திற்கும் என்ன சம்பந்தம். 

Posted
3 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியதற்கும் எமது விவாத‍த்திற்கும் என்ன சம்பந்தம். 

" தங்கள் பார்வையே தவறு. ஒடுக்கபட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகள் தளிர்விட வில்லை. மூட நம்பிக்கைகளே அவர்கள் முன்னேற்றத்திற்கும் மற்றவர்கள் அவர்களை ஒடுக்கவும் காரணம்" - tulpen 

Posted

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை.  ஆனால் அதற்கு ஆதரவாக வாதாடுகின்றீர்கள்.  நேரடியான விவாத்த‍த்தை தவிர்த்து திசை மாற்றுகின்றீர்கள். மூட நம்பிக்கைகள் அறிவு பூர்வமானவை என்று நீங்கள் கருதிதனால் அதறக்கான விளங்கங்களை தரலாம்.  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்து சிறிய புள்ளியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா? இந்த விளக்கத்தையாவது தெளிவாக தந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.  

Posted
1 minute ago, tulpen said:

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை.  ஆனால் அதற்கு ஆதரவாக வாதாடுகின்றீர்கள்.  நேரடியான விவாத்த‍த்தை தவிர்த்து திசை மாற்றுகின்றீர்கள். மூட நம்பிக்கைகள் அறிவு பூர்வமானவை என்று நீங்கள் கருதிதனால் அதறக்கான விளங்கங்களை தரலாம்.  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்த சிறிய புள்ளயியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா? இந்த விளக்கத்தையாவது தெளிவாக தந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.  

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை

எது மூடப்பழக்கம் என்பதை யார் வரையறை செய்வது என்பதில் நான் உங்களுடன் உடன்படவில்லை. இது ஒரு மூடப்பழக்கம் என கூற யாருக்கு எவர் அந்த உரிமையை தந்தது? என்பதே எனது வாதம்.  

  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்த சிறிய புள்ளயியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா?

அவ்வாறு ஏற்கும் மக்கள் அங்கும் இருக்கிறார்கள். அங்கு மட்டும் தான் இல்லை என்பதை ஐரோப்பியர் ஒருவரின் கருத்தை இணைத்து உங்களுக்கு தெளிவுபடுத்த முயன்றேன். 

இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள எல்லா மக்களும், நூறு வீத மக்களும் இதை ஏற்கவில்லை எனவும் அப்படி அதை ஏற்பவர்களை நீங்கள் மாற்ற விரும்பினால் அதற்கு தேவையான வழிவகைகள் பற்றியும் மேலே கூறி இருந்தேன். 

ஒரே பாடசாலையில் ஒன்றாக படித்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும் என நாம் எண்ணினால் இந்த உலகம் மிகவும் அலுப்பானதாக மாறிவிடும் 🙂 

Posted

கடவுள் இல்லை  கடவுளை நம்பிக்கை மூட நம்பிக்கை என்ற வாதத்திற்காக ஆயிரமாயிரம் வருடம் பழமையான கோயில்களை இடிக்க முடியாது ஏனெனில் அவைகள் வரலாற்று அடயாளமாக நிற்கின்றது. அதேபோல் தேவராம் திருமுறை திருவாசகங்களை அழிக்கவும் முடியாது அவை தமிழையும் இலக்கியங்களையும் தாங்கி நிற்கின்றது. 

வானியல் சோதிடம் பல்லாயிரம் வருடங்களாக மானுடத்துடன் பயணிக்கின்றது.  உண்மை பொய் முட்டாள்த்தனம் என்ற வாதங்களுடன் அது  தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். 

இது சரி இது பிழை, இது முட்டாள்தனம் இது புத்திசாலித்தனம் என்ற வரைவிலக்கணங்களுக்குள் நாம் அணுகும் பல விசயங்கள் வராது.  அதில் வானியல் சோதிடமும் அடங்கும். 

Posted

துல்பன்,

ஒரு வேலையாக வெளியில் போகவேண்டும். நீங்கள் தொடர்ந்து விவாதிக்க விரும்பினால், ஒரு அல்லது இரண்டு விடயத்தை எடுத்துவாருங்கள். இல்லாவிட்டால் திசை மாறி இல்லை தெளிவு குறையும் சாத்தியம் நிறையவே உண்டு, அந்த பெட்டிக்குள் இருந்து ஆரோக்கியமாக மதிப்புடன் விவாதிக்கலாம். 

நன்றி - அம்பனை 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.