Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள் & தமிழக மீனவர்களை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படைதான்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள்

எப்போதெல்லாம் இலங்கையில் விடுதலைப்புலிகள் விஸ்வரூபம் எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் தங்களின் ஆத்திரத்தை, தமிழக மீனவர்கள் மீது காட்டுவது சிங்கள கடற்படையின் வாடிக்கைதானாம். அந்த வகையில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் விமானப்படைத்திறன் வெளிப்பட்டிருக்கும் வேளையில், சிங்கள கடற்படையினரும் கொத்தாக ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்களைக் குடித்து, தங்களின் ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்

Edited by கந்தப்பு

தமிழ்நாட்டு மீனவர்கள்தங்கள் துயரங்களைப் போக்குவதற்கு எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எதுவித பலன்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாநில அரசு அல்லது மத்திய அரசு எதுவித நடவடிக்கைகளையும் மீனவர்கள் சார்பாக எடுக்கவில்லை. அதைத் தவிர தமிழ் நாட்டு ஊடகங்களும் இவற்றை ஒரு செய்திகளாகத்தான் பிரசுரிக்கின்றார்களே தவிர ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏதாவது அழுத்தங் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் ஒரு விடயம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை இல்லாது செய்வதற்கான முயற்சிகளில் இந்திய ஆட்சியாளர்களும் இந்தியப் புலனாய்வாழர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டமை இவர்களுக்கு ஒரு இக்கட்டினை ஏற்படுத்தும்.

அதனால் ஏற்படப்போகும் சொந்தமக்களின் அழுத்தங்களில்லிருந்து தப்புவதற்கு புலி ஆதரவைத் தடுக்கும் நடவடிக்கைகள் தளர்தப்படலாம்.

கடல் வாழ்வின் நிரந்தரச் சொத்து கண்ணீரும் ரத்தமும்தானா?

தமிழக மீனவர்களின் வாழ்வில் துயரமும் பயமும் தொடர்கதை ஆகிவிட்டது. இயற்கையின் சீற்றம் ஒரு பக்கம் என்றால், இலங்கை கடற்படையின் துப்பாக்கிகளின் சீற்றம் மறுபக்கம்!

மார்ச் 29&ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த குமரி மாவட்ட மீனவர்களைக் குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளியிருக்கிறது இலங்கைக் கடற்படை. ஐந்து மீனவர்கள் இறந்துபோக, கடலோர மீனவர்கள் அத்தனை பேரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் திரண்டு, ஆவேசப் போர் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

குண்டு மழைக்குத் தப்பிப் பிழைத்த மரிய ஜான் என்பவரிடம் பேசினோம்... ‘‘நாங்க பத்துப் பதினஞ்சு நாள் கடல்ல தங்கியிருந்து ‘தங்குதொழில்’ பண்றவங்க. அப்படி மீன் பிடிச்சாதான் எங்களுக்குக் கட்டுப்படியாகும். கடந்த 23&ம் தேதி ஒன்பது பேர் மீன் பிடிக்கக் கிளம்பினோம். வங்கக் கடலும் அரபிக் கடலும் இந்தியப் பெருங்கடலும் சந்திக்கிற இடம் எப்போதும் கொந்தளிப்பா இருக்கும். அங்கேதான் சுறா மீன் கிடைக்கும். அன்னிக்கு, குமரி முனையிலிருந்து 35 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஆழ் கடல்ல மீன் பிடிச்சிட்டிருந்தோம்.

அதிகாலை ஆறு, ஆறரை மணி இருக்கும். திடீர்னு ரொம்ப வேகமா ஒரு படகு எங்களை நோக்கி வந்தது. அதுல இருந்தவங்க எங்களைப் பார்த்து ஏதோ சொன்னாங்க. அவங்க பேசின மொழி எங்களுக்குப் புரியலை. படகின் கீழ்த் தளத்தில் இருந்த சதீஷ், ஜஸ்டின் ரெண்டு பேரும் படகின் மேல் பகுதிக்கு வந்து, 100 மீட்டர் தள்ளி நின்னுட் டிருந்த அந்தப் படகைப் பார்த்ததுதான் தாமதம்... டுமீல்... டுமீல்னு துப்பாக்கிச் சத்தம். சடார்னு கடல்ல குதிச்சு எங்க படகு அடியில மறைவான பகுதிக்குப் போய் பதுங்கிக்கிட்டோம். தொடர்ந்து அரை மணி நேரம் வரை எங்கள் படகை நோக்கிச் சுட்டாங்க. சத்தம் அடங்கி, ரொம்ப நேரம் கழிச்சு மெதுவா மேலே வந்து பார்த்தபோது... படகின் டிரைவர், இருந்த இடத்திலேயே குண்டடி பட்டு செத்துப் போயிருந்தாரு.பக்கத்திலேயே ‘ஜீசஸ்’ங்கிறவர் ரத்த வெள்ளத்தில் விழுந்துகிடந்தாரு.

ஒரு வழியா சுதாரிச்சு, கடல்ல குதிச்ச மத்தவங்களைத் தேடினோம்; காணலை. சரி, காயம் பட்டவரையாவது காப்பாத்துவோம்னு அவரையும், இறந்துபோனவரின் உடலையும் ராத்திரி ஒன்பது மணிக்குக் கரைக்குக் கொண்டுவந்து சேர்ந்தோம். ஆனா, நேரம் ஆகி, ஏகப்பட்ட ரத்தமும் வெளியேறியிருந்ததால ஜீசஸ§ம் இறந்துபோயிட்டாரு.

சுனாமிக்குப் பிறகு ஒரு வருஷம் கடலுக்குப் போக முடியல. இப்படியே எத்தனை நாள்தான் துக்கத்தோட இருக்கிறதுன்னு, ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டு கடந்த ஒரு வருஷமாதான் மறுபடி மீன் பிடிக்கப் போயிட்டிருக் கோம். இப்போ, இப்படி நடந்து போச்சு! இனிமே துணிச்சலா கடலுக்கு எப்படிப் போறதுன்னு தெரியலே’’ என்று அழுகிறார் மரிய ஜான்.

இறந்துபோன ஐந்து மீனவர்களில் சதீஷ், ஜஸ்டீன், ஜீசஸ் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பரிதவித்து நிற்கிறது அந்தக் குடும்பம். சதீஷ§க்கு முன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாம். சதீஷின் மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழுவின் இயக்குநர் அருட்தந்தை சூசை அந்தோணி சொல்கிறார்.... ‘‘சமீபத்தில் ராமேஸ் வரத்தில் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, இலங்கைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆளும் தி.மு.க. அரசு. அந்தப் போராட்டத்தை இலங்கை அரசும் சரி, இந்திய அரசும் சரி சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிற செயலைக் கண்டுகொள்ளாமல் ராஜதந்திர நடவடிக்கை மாதிரி மௌனம் சாதிக்கிறது இந்திய அரசு.

இது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை. மத்திய அரசு கொஞ்சம் பொறுப்போடு நடந்திருந்தால், இதைத் தடுத்திருக்க முடியும். இனியாவது இதுமாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போகும் மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க அதிவேக மீட்புப் படகுகள், ஹெலிகாப்டர் வசதி செய்து தர வேண்டும். இலங்கை அரசோடு உள்ள ராஜாங்க ரீதியிலான உறவுகளை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவிடம் தன் கண்டனத்தை நேரடியாக எழுப்ப வேண்டும்’’ என்றார் அருட்தந்தை சூசை அந்தோணி.

‘‘இந்த மீனவர்கள் எல்லை தாண்டி, இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்த தாக சில இந்திய அதிகாரிகள் கூறியிருப்பது சுத்தப் பொய். அப்படியே போனதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக சுட்டுக் கொன்றுவிடுவதா? பாகிஸ்தானை இந்தியாவின் எதிரி நாடு என்கிறோம். ஆனால், எல்லை தாண்டிச் சென்ற வட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை ஒரு நாளும் சுட்டதில்லையே? கடல் எல்லை தாண்டி வருகிறவர்களைக் கைது செய்து, முறைப்படி விசாரித்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதுதானே முறை!’’ என்று ஆவேசப்படுகிறார் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் தலைவர் பீட்டர் தாஸ்.

‘‘மார்ச் 6&ம் தேதி கோடிமுனை கிராமத்திலிருந்து மீன் பிடிக்கப்போன 12 மீனவர்கள் இன்னும் கரைவந்து சேரலை. அவர்களில் ஒருவர் கேரள மீனவர். அந்த ஒருவருக்காக கேரள அரசு ஹெலிகாப் டரை வைத்துத் தேடியது. ஆனால், காணாமல் போன 11 மீனவர்கள் பற்றித் தமிழக அரசு எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது. நூற்றுக்கணக்கான படகுகளில் போய் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எங்களாலேயே முடியும். ஆனால், மீனவ மக்களைஏற்கெனவே வன்முறை யாளர்களாகச் சித்திரித்திருக்கும் அரசு இயந்திரம், மீனவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஒன்று திரள்வதையும் வன்முறையாகப் பார்க்கக்கூடும். அதனால்தான் பொறுமையாக இருக்கி றோம்’’ என்று கொதித்துப்போய்ச் சொல்கிறார் பீட்டர் தாஸ்.

‘‘இந்த மீனவர்கள் மூலம் வருகிற கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை மட்டும் அனுபவிக்கிற மத்திய அரசுக்கு, அவர்களின் உடைமை களையும் உயிரையும் காக்கிற பொறுப்பு கிடையாதா? மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கிற தி.மு.க. மத்தியிலும் ஆளும்கட்சிதானே! அங்கே எதுவும் செய்யாமல், இங்கே பந்த் அறிவித்தால் என்ன அர்த்தம்? ராமேஸ்வரத்தில் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கை தூதரகத்தின் முன் ஆர்ப் பாட்டம்; இப்போது ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு உள்ளூரில் பந்த். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து மீனவர்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக, ஒப்புக்கு பந்த் அறிவித்து தன் கட்சி பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார் கலைஞர். மீனவர்கள் இனி எந்த அரசியல் கட்சிகளையும் நம்புகிற மாதிரி இல்லை’’ என்கிறார் பேராசிரியர் வரீதய்யா.

காலம் காலமாக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்த கடலில், இனி அவர்கள் சுதந்திரமாக உயிர் பயம் இல்லாமல் மீன் பிடிக்க முடியுமா?

மத்திய, மாநில அரசுகள்தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்!

நன்றி ஆனந்தவிகடன்

பார்த்தீர்களா அவர்களின் செய்தியை நிலைமை அதுவேதான். செந்த மக்களின் நலன் பேண இந்த ஆட்சியாளர்கள் முயல்வதேயில்லை. மத்திய அரசோ மாநில அரசோ தங்களின் நலனைப் பேணி ஆட்சியில் எப்போதும் அமர்ந்திருந்தால் போதும் என்ற நிலைதான். சொந்த மக்களே அவர்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். கோரிக்கைகள் என்பது சாத்தியமற்றது. தாங்களாக நிமிர்ந்து போராடினால்தான் முடிவுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் விசேஷம் என்னவென்றால், நமது இந்திய கடல் எல்லையில் பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு இலங்கை ஆகிய நான்கு நாடுகள் உள்ளன. அதில் ரொம்பவும் நட்பு நாடாக நம் மத்திய அரசு சொல்வது இலங்கையைத்தான். ஆனால், அந்த இலங்கையைப் போல வேறு எந்த நாடும் இப்படி நம் மீனவர்களைக் கொன்றதில்லை.

குஜராத்வரை மீன் பிடிக்கப் போகும் நம் குமரி மீனவர்கள், எத்தனையோ முறை பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒருமுறை கூட அந்த ராணுவம் அவர்களைச் சுட்டதில்லை. ஓரிரு ஆண்டுகள் சிறையில் போட்டுச் சித்திரவதைப் படுத்துவதோடு விட்டுவிடுவார்கள். ஆனால், ‘நட்பு’ நாடான சிங்களப் படை சுட்டுக் கொல்லும்; அல்லது தமிழக மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போய் சிங்கள ராணுவ முகாம்களில் அடிமைகளாக்கி வேலை வாங்குவார்களாம்.

உலகில் எங்குமே இல்லாத இந்தக் கொடூரங்களைச் செய்யும் இலங்கையை, ‘நட்பு நாடு’ எனச் சொல்லும் இந்திய அரசைத்தான் நாங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இந்திக்காரன் உயிர்தான் உங்களுக்கு உயிராகத் தெரியுமா? தமிழன், அதுவும் மீனவன் என்றால் இளப்பமா? நெய்வேலி அனல் மின்நிலைய பிரச்னைக்காக ‘மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்’ என மிரட்டிய தமிழக முதல்வர், நம் மீனவர்களின் உயிர்ப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? என பட்டாசாய் வெடித்துத் தள்ளினார் பீட்டர்தாஸ்.

இந்திய அரசாங்கத்துக்கு தமிழன் இறந்தால் என்ன ? ஈழத்தமிழனாக இருந்தாலும், இந்தியத் தமிழனாக இருந்தாலும் இந்திய அரசுக்கு கவலை இல்லை.

pg11js2.jpg

pg11amr4.jpg

pg11bwe3.jpg

pg11cgp1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய படைகளை தமிழ் நாட்டு கரையோர காவலுக்கு வலிந்து இழுப்பதன் மூலம் தங்களது இலக்கை அடையலாம் என சிறிலங்கா கனவு காணுகின்றது.இதற்காக தான் தமிழ் நாட்டு மீனவர்களை சிறி லங்கா கடல்படை தாக்குகின்றது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லக் கூடாது: இந்தியக் கடற்படை அதிகாரி

இந்தியா, இலங்கை இடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் உயிரிழப்பு போன்றவை தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதில் சம்மந்தப்பட்ட மீனவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்கிறார் இந்தியக் கடற்படையின் உயரதிகாரி கமோடோர் வான் வால்டர்ன்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவத்தைப் பொறுத்தவரை, மீனவர்கள் பலர் கடல் எல்லையைத் தாண்டி அந்தப் பக்கம் இலங்கை கடற்படை இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் இவர்கள் இடையில் மாட்டிக் கொள்கின்றார்கள் என்கிறார் தமிழகத்திற்குப் பொறுப்பான இந்தியக் கடற்படை அதிகாரி வான் ஹால்டர்ன்.

"நாங்கள் மீனவர்களிடம் சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்லாதீர்கள் என்று கூறுகிறோம்...அங்கு நடக்கும் மோதலில் சிக்கி உயிர் இழக்கலாம் என்று கூறுகிறோம்...ஆனால் இலங்கைப் பகுதியில் மீன் வளம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்லவே மீனவர்கள் விரும்புகின்றனர். அங்கு செல்லும் போது சில சமயங்களில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுகின்றனர். அங்கு நடக்கும் மோதலிலும் சிக்கிக் கொள்கின்றனர்," என்றார் வான் ஹால்டர்ன்.

இந்திய-இலங்கை கடற்பரப்பில் இரு கப்பற்படைகளுக்கிடையே கூட்டு ரோந்து மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு குறித்து பதிலளித்த கமோடோர் வான் ஹால்டர்ன், கூட்டு ரோந்து என்பது இந்தப் பகுதியில் சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

மேலும், நாங்கள் இங்கு எங்களது பகுதியில் ரோந்து மேற்கொள்கிறோம்.. கூட்டு ரோந்து என்றால் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் சண்டையில் நாங்களும் சம்மந்தப்பட வேண்டியிருக்கும். இதை ஒரு நல்ல யோசனையாக நாம் கருதமுடியாது. கூட்டு ரோந்து என்றால், நாம் இலங்கைக் கடல் எல்லைக்குள் ரோந்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும் போது விடுதலைப் புலிகளை நேரடியாக சந்திக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றல்ல, என்றார் இந்தியக் கப்பற்படையின் உயர் அதிகாரி.

தவிர, இது குறித்த இறுதி முடிவு இந்திய அரசின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் கமோடோர் வான் ஹால்டர்ன்.

ஆனால், இந்திய கப்பற்படையின் அதிகாரியின் செவ்வி குறித்து கருத்து வெளியிட்ட ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பொறுப்பாளர் போஸ், தமிழக மீனவர்கள் கடத்தல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்களை மறுத்தார். ஆனால், அதேநேரம் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • 4 weeks later...

தமிழக மீனவர்களை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படைதான்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 9 மே 2007, 18:30 ஈழம்] [ப.தயாளினி]

தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை தொடர்ந்து படுகொலை செய்கிறது என்றும் 1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை 77 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர் சி.பெருமாள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஏ.கே. அந்தோணி அளித்துள்ள பதில்:

அண்மைக்காலமாக சிறிலங்கா கடற்படையால் பெருந்தொகையாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதனை மத்திய அரசாங்கம் அவதானித்து வருகிறது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்பரப்பான பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் இந்திய கற்படை தொடர்ச்சியான சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வானிலிருந்தும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதியில் 77 தமிழ்நாடு மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் குடும்பங்களுக்கான நிதி உதவியை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி வருகிறது. மீனளத்துறை அமைப்புகளின் உதவியும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அந்தோணி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரக்கம், அனுதாபம் எல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலுக்கு பிற்பாடு தான்....

குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை" தமிழனுக்கும், சிங்களனுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாதா? சிங்கள கடற்படையினர்தான் மீனவர்களைத் தாக்குவதற்கென்றே இப்படி மஃப்டியில் வருகிறார்கள்

ஜீனியர் விகடனுக்கு தமிழ்ச்செல்வன் அண்ணா கொடுத்த செவ்வி இங்கு பிரதிபலிக்கிறது

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

தன் மக்களைப்பாதுகாக்க முடியல

நான்காவது வல்லரசாம்

ஏற்கனவே ஒருத்தன் முட்டாளாக்கி

அடிபடவிட்டு வேடிக்கை பார்த்தபின்பும்

மீண்டும் மீண்டும் முட்டாளாய்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும், நாங்கள் இங்கு எங்களது பகுதியில் ரோந்து மேற்கொள்கிறோம்.. கூட்டு ரோந்து என்றால் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் சண்டையில் நாங்களும் சம்மந்தப்பட வேண்டியிருக்கும். இதை ஒரு நல்ல யோசனையாக நாம் கருதமுடியாது. கூட்டு ரோந்து என்றால், நாம் இலங்கைக் கடல் எல்லைக்குள் ரோந்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும் போது விடுதலைப் புலிகளை நேரடியாக சந்திக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றல்ல, என்றார் இந்தியக் கப்பற்படையின் உயர் அதிகாரி.

இந்தியாவைப்போன்ற இரட்டை நாடக வேடதாரிகள் யாருமில்லை.! உயிரைப் பயணம் வைக்கும் தொழிலைச்செய்யும் மீனவர்களை மலிந்த உயிர்களாக்கி விட்டார்கள்!. இப்போது 'விடுதலைப்புலிகளின் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் வீணானதே என்ற வேதனை தான் மத்திய அரசிடம் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மீனவர்கள்தங்கள் துயரங்களைப் போக்குவதற்கு எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எதுவித பலன்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாநில அரசு அல்லது மத்திய அரசு எதுவித நடவடிக்கைகளையும் மீனவர்கள் சார்பாக எடுக்கவில்லை

நான் பிறந்ததிலிருந்து இந்தப்பிரச்சினையும் இவர்களின் போராட்டங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

என்னைப்பொறுத்தவரை

இவர்கள் ஏமாளிகள்

இவர்களை எல்லோரும் சேர்ந்து ஏமாற்றிவருகின்றனர்

இதற்கு முடிவு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை

ஏனெனில் இவர்களும் முடிவுகிடைக்கும்வரை போராடப்போவதில்லை

இவர்களின் தலைவர்களும் முடிவுகிடைக்கும்வரை போராட விடப்போவதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ATTACK ON TAMIL NADU FISHERMEN BY SRI LANKAN NAVY

--------------------------------------------------------------------------------

17:26 IST

Rajya Sabha

Government is aware that a number of fishermen from Tamil Nadu are being attacked and killed by Sri Lankan Navy during the recent years. There have been incidents of firing on Indian fishing boats in Palk Bay and Gulf of Mannar area and recently slight increase in such incidents has been noticed.

To protect the Indian fishermen, surveillance and patrolling are regularly done by the Indian Navy and the Indian Coast Guard in the Indian waters of the Palk Bay and the Gulf of Mannar. Air surveillance is also undertaken. The surveillance mechanisms include coastal patrol, international maritime boundary patrol, air patrol, shallow water patrol and radar surveillance. Further, the Government of India has strongly taken up the issue of firing on Indian fishermen with the Government of Sri Lanka. The need to act with restraint and to treat India’s fishermen in a humane manner has been repeatedly emphasized to the Government of Sri Lanka. During the period from 1991 to mid April 2007, 77 fishermen of Tamil Nadu have been killed in such incidents. Government of Tamil Nadu provides immediate relief to the family of such deceased fishermen according to its norms. In addition, if the deceased belonged to the Fishermen Cooperative Society, his family is also provided financial relief under the Fishermen Accident Group Insurance Scheme operated by the Department of Fisheries through the National Federation of Fishermen Cooperative Ltd.

This information was given by the Defence Minister Shri AK Antony in a written reply to Shri C Perumal in Rajya Sabha today.

http://pib.nic.in/release/release.asp?relid=27677

------------------------------------------------------------------------------------------------------------------------------------

77 Indian fishermen killed by Sri Lankan Navy

Seventy-seven Indian fishermen had been killed by the Sri Lankan Navy in the last 16 years and New Delhi is taking steps to control such incidents, parliament was informed Wednesday.

'During the period from 1991 to mid-April 2007, 77 fishermen of Tamil Nadu have been killed in such incidents,' Defence Minister A.K. Antony said in a written reply in the Rajya Sabha.

'The government is aware that a number of fishermen from Tamil Nadu are being attacked and killed by Sri Lankan Navy during the recent years.

'There have been incidents of firing on Indian fishing boats in Palk Bay and Gulf of Mannar area and recently, a slight increase in such incidents has been noticed,' the minister added.

Stating that the Indian government had 'strongly taken up the issue' with its Sri Lankan counterpart, Antony added: 'The need to act with restraint and to treat India's fishermen in a humane manner has been repeatedly emphasized to the government of Sri Lanka.'

The Indian Navy and the Indian Coast Guard had stepped up surveillance and patrolling in the Indian waters of the Palk Bay and the Gulf of Mannar to protect Tamil Nadu fishermen, the minister pointed out.

'Air surveillance is also undertaken. The surveillance mechanisms include coastal patrol, international maritime boundary patrol, air patrol, shallow-water patrol and radar surveillance,' he added.

Antony also pointed out that the Tamil Nadu government provides immediate relief to the family of the deceased fishermen 'according to its norms'.

In addition, if the deceased belonged to the Fishermen Cooperative Society, his family is also provided financial relief under the Fishermen Accident Group Insurance Scheme operated by the Department of Fisheries through the National Federation of Fishermen Cooperative Ltd, the minister said.

http://www.indiaenews.com/india/20070509/50952.htm

  • கருத்துக்கள உறவுகள்

1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதியில் 77 தமிழ்நாடு மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

80களில் இருந்து கணித்தால் 300க்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை வருமே. சுமார் 25 வருடங்களாக தமிழக மீனவர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள். எனிவரும் காலங்களிலாவது இந்திய அரசு, அவர்களைக் காப்பாற்ற ஏதும் செய்ய வேண்டும்.

என்ன இவங்க ஒருக்கா சொல்றாங்க புலிகள்தான் சுட்டதுனு இப்போ இலங்கை கடற்படை என்கிறாங்க என்ன தான் நடக்குது............?

அமரிக்க ஜனாதிபதி சர்தாஜியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்தான் இந்தியபுலநாய் வுத்துறைக்கு வைத்த ஆப்பு.அதன் வெளிப்பாடுகள் விரைவில் வெளிவரும் போலத்தெரிகிறது.பிரித்தானியா அமரிக்காவின் நேரடிப்பார்வைகள் இலங்கை மீது வ்ழுவதை பொறுக்க முடியாத இந்தியா உடனடியாக மாற்று நடவடிக்கை மூலம் செயல்படவிருக்கிறதெனலாம்.பாத

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற..! கலைஞர் பெத்த பிள்ளையளிண்டை அடிதடியைப் பாக்கிறதா அல்லது புலிகளைப் பாக்கிறதா? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.