Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான் பலத்தால் இந்தியாவின் அணு உலைகளுக்கு ஆபத்து கொழும்பு எச்சரிக்கை

Featured Replies

வி.புலிகள் வான் பலத்தைக் கொண்டிருப்பதாவது தென்னிந்தியாவிலுள்ள அணு உலைகளை இலக்கு வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படலாமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி?? பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

வி.புலிகளின் வான் படையானது நினைத்தளவிற்கு இல்லாது மிக மோசமானதாயிருக்குமென இலங்கை அரசானது முதல் தடவையாக இந்திய அதிகாரிகளுக்குத தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் நெளவ்"வை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஒப் இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது.

வி.புலிகளின் வான் படை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதெனவும் இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்ட்டுள்ளது . எனினும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலை தங்களால் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமென இந்திய அரசு நம்புகிறது.

ஆனாலும் தென்னிந்தியாவிலுள்ள மிக முக்கிய அணு நிலைகள் குறித்து அச்சமடையத் தேவையில்லையென இநந்திய பாதுகாப்புத்தரப்பு கருதுகிறது. புலிகள் வசமிருப்பாதாக நம்பபப்படும் செக்குடியரசுத் தயாரிப்பான 'சிலின்' ரக வானுர்தியின் வீச்செல்லையானது ஆயிரம் கிலோமிற்றருக்கும் அதிகமானது .

புலிகளினால் ஏற்படும் வான் வழியிலான அச்சறுத்தலை எதிர் கொள்ளும் விதத்தில் தென்னிந்தியாவில் முக்கிய பகுதிகளில் 'ராடர்கள்" நிறுத்தப்பட்டுள்ளதுடன் இந்திய அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது விமானங்கள் வடக்கே (இந்தியா நோக்கி) இலகுவாகப் பறக்க்க கூடியவை என்பதுடன்இந்தியாவிலுள்ள மிக முக்கிய கேந்திர நிலைகளுக்கு புலிகளின் சிறிய ரக விமானங்களால் ஆபத்து ஏற்படலாமென்றும் கோஹன தெரிவித்துள்ளார்.

புலிகளின் வான் படை பலமானது இலங்கைகு மட்டுமன்றி இந்ப் பிராந்தியத்திறகு எமது அயல் நாடுகள் மற்றும் சர்வதேச கடல போக்குவரத்ததுக்கும் அச்சுறுத்லானதெனவும் கோஹன தெரிவித்துள்ளார்.

நன்றி : தினக் குரல் 07 ஏப்பிரல் 2007

உங்கள் விருந்தாளிகளான பாகிஸ்தானின் உ(இ)ளவுப்படையால் இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பில்லையா கோஹன??

ஆகா ஆத்தாமையின் வெளிப்பாடு. இப்ப உலக பையன்களுக்கு தெரியும். யார் திறமையானவன், யார் மொக்கனாசுந்தரம்கள் என்று ஆகவே..இந்த கத்தல் எனி மேல் எடுபடாது. :icon_idea:

ஆடு நனையுது என ஓநாய் அழுகுதாம் தன்னால முடியாது அதுக்கு இந்தியாவை வம்புக்கு இழுத்து கடைசியில் பாகிஸ்தான் சீனாவை இறக்கி இந்தியாவுக்கு தண்ணிகாட்ட செய்யப்படும் நடவடிக்கை இது

இலங்கையின் அலறல்கள் முன்பொருகாலத்தில் எல்லா நாடுகளாலும் பிழையான ரீதியில் உள்வாங்கப்பட்டுத் தமிழருக்கெதிரான நடவடிக்கைகளைச் சர்வதேசம் எடுக்கவும் அதன்மூலம் உள் நாட்டில் தமிழருக்கெதிரான அடக்குமுறை தாக்குதல் நடவடிக்கையில் இலங்கையரசு ஈடுபடவும் வழிவகுத்தது.

இப்போது அந்த அலறல்கள் இந்தியா தொடக்கம் மற்றைய உலக நாடுகள் வரை காதில் வாங்கிக் கொள்ளாதத போல் நடந்து கொள்கின்றன. இந்தியாவின் அணு உலைகளுக்கே ஆபத்து புலிகளின் விமானம் என்ற பெரிய அணுக்குண்டினை இந்தியா மீது போடுவதற்கு முனைந்து தோற்றுப்போயுள்ளது. இனி இவர்களது எந்த எச்சரிக்கையும் அலறல்களாகத்தான் நோக்கப்படப் போகின்றது. ஜே.வி.பி ஹெல உறுமய என்பன எழுப்பும் சர்வதேசத்தை நோக்கிய கேள்விகள் இதை வெளிப்படுத்துகிறது.

  • தொடங்கியவர்

கொழும்பில் விமான எதிர்ப்பு பீரங்கிகளை பொருத்த முடிவு

[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007, 08:51 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலையடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் விமான எதிர்ப்புப் பீரங்கிகளைப் பொருத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

கொல்லன்னாவ பெற்றோலியக்களஞ்சியம், களனி திஸ்ஸ மின் நிலையம், தொலைத்தொடர்பு மத்திய நிலையம் ஆகியவற்றில் முதல் கட்டமாக விமான எதிர்ப்பு பீரங்கிகளை சிறிலங்கா அரசாங்கம் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.

அட தெற்காசிய நாடுகளுக்குத் தானே அச்சுறுத்தல் இவையள் ஏன் பொருத்திகினமாம்?? சுதந்திர தினத்துக்கு வெடிசுடவே?

இந்திய அணு உலைகளுக்கு

வான் புலிகளால் ஆபத்தாம்!

தென்னிந்தியாவில் உள்ள அணு உலைகளைக் கூட இலக்கு வைக்கக் கூடிய வான்படை ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாக இந்திய இணையத்தளம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படை வெறும் பல் இல்லாத சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதை இலங்கை இப்போதுதான் முதற்தடவையாக இந்தியாவுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றது என "ரைம்ஸ் நௌ' என்ற ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

புலிகளின் வான்படைப் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விடவேண்டாம் என இந்தியாவிடம் இலங்கை தெரியப்படுத்தி இருக்கின்றது. ஆனால், வான் புலிகளினால் எழக்கூடிய எந்தச் சவாலையும் இலகுவாக முறியடித்து விடலாம் என இந்திய அரசு கருதுகின்றது. எனினும், இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அணு உலை மையங்களைப் பாதுகாப்பின்றி விட்டுவைக்கும் வாய்ப்பை அளிக்காமல் இருப்பதற்காக, அது விடயத்தில் இந்தியா அதிக கவனம் எடுத்துள்ளது.

புலிகள் பயன்படுத்தும் செக் தயாரிப்பு "ஸிலின்' விமானங்கள் ஆயிரம் கிலோ மீற்றருக்குக் கூடிய இலக்கு வரை பயணிக்கக் கூடியன. புலிகளின் வான்படையால் எழக்கூடிய சவால்களைச் சந்திப்பதற்காக அவற்றை வழிமறிக்கக் கூடிய வகையில் தென்னிந்தியப் பிரதேசத்தில் முக்கிய நவீன "ராடர்' கருவிகளை இந்தியா மீளவும் பொருத்தி பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி இருக்கின்றது. "அவர்களின் விமானங்கள் இலகுவாக வடக்கு நோக்கி (இந்தியாவை நோக்கி) பறக்கக் கூடியவை. புலிகளின் சிறிய விமானங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய முக்கிய மையங்கள் அங்கு உள்ளன. புலிகளின் வான் படையால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்துக்கும், எங்கள் அயல் நாடுகளுக்கும், சர்வதேச விமானப் பதைகளுக்கும் கூட ஆபத்து உள்ளது.'' இவ்வாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன தெரிவித்தார்.

இப்படி அந்த இணையத்தளச் செய்தி மேலும் தெரிவித்தது. (சி)

uthayan.com

ஏன் இதால இன்றைக்கு1750000 வருசத்துக்கு முன்பிருந்தே சிங்களதேசத்துக்கு ஆபத்திருக்குது அது தெரியவில்லையா இந்தக்கோகணவிற்குpost-2821-1175919891_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பிதற்றத் தொடங்கி விட்டான், இது தான் அவனின் அழிவின் ஆரம்பம். உன் உளறல் எல்லாம் முந்தினமாதிரி வேலை செய்யாது, உதுக்காகத் தானே இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்தோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு, அதை விடப் பெரிய விமானங்களை எல்லாம் வைச்சிருக்கே! அதலா இவ்வளவு நாளும, ஆபத்து ஏற்படல்லிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களை இந்தியப் புலனாய்வு அமைப்பின் அனுசரணையோட படுகொலை செய்துபோட்டு அதற்கான பொறுப்பை இலங்கைத் தமிழர்களின் தலையில் சுமத்தி இந்திய இலங்கைக் கூட்டு ரோந்துக்கு அடித்தளம்போட முயற்சிக்கிறது போல. தென்னிந்திய இராணுவக் கேந்திர ஸ்தானங்களையும் இலங்கை விமானப்படை தாக்கிப்போட்டு அதை இலங்கைத் தமிழரின் விமானங்கள்தான் தாக்கிச்சுது எண்டு நமக்கெதிராக இந்தியாவை ஏவிவிடப் பார்க்கலாம். கொஞ்சம் விழிப்பாயிருக்கிறது நல்லது. இந்தியப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சின்ன சந்தர்ப்பத்தைத் தானும் தமிழ் நாட்டு மக்களை எங்களுக்கெதிராகத் திருப்பிவிடுறதுக்கு நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்தியப் புலனாய்வுத் துறைக்கும், நடுவண்அரசுக்கும் இலங்கைத் தமிழரை எப்படியாவது தமிழ் நாட்டு மக்களிடமிருந்து பிரித்து தமிழீழ எதிர்ப்பலையை அவர்களிடம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு ராஜதந்திர அணுகுமுறைகள் இல்லை. பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளோடு இலங்கை ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தித் தங்களுக்கு ஒரு சவாலாக மாறிவிடாமலிருக்க தமிழ்நாட்டு மீனவர்களையும், ஈழத்தமிழர்களையும் பலிக்கடாக்களாக்குவது ஒன்றேதான் இந்திய ராஜதந்திரத்திற்கு இன்றுள்ள ஒரே வழி போலத் தெரிகிறது. ஆனபடியால் நாங்களும் இந்தியாவுடைய இந்த அப்பட்டமான ஓரவஞ்சனை ராஜதந்திரத்துக்கு இடங்கொடுக்காத வகையில மிகவும் அவதானமாக நடக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்கட்கு தெரியும் இந்திய அரசு தமிழர்களை

தமிழீழத்தமிழர் தமிழகத்தமிழர்

என்றெல்லாம் பார்ப்பதில்லை

ஏன் இன்னும் நேரடியாக சொல்வதென்றால்

தமிழீழத்தமிழரை விட தமிழகத்தமிழர் மீதே

இந்திய அரசுக்கு வெறுப்பு அதிகம்

இதற்கு பல ஆதாரங்களை என்னால் கூறமுடியும்

ஆனால் ஒரு உதாரணமே போதும்

இந்தியா எம்மண்ணில் செய்த அநியாயங்களுக்கு எம்மீது இருந்ததைவிட தமிழகத்தமிழர மீது இருந்த கோபமே காரணம்

இது தமிழகத்தலைவர்களுக்கு முக்கியமாக எம்ஜிஆர் அவர்கட்கு தெரியும்

அதனாலேயே அவர் அதை எதிர்த்தார்

அதனாலேயே அவர் மனமுடைந்து உயிர் துறந்தார்

அதனாலேயே கலைஞர் அவர்கள் இன்று கூட்டு ரோந்தை எதிர்க்கிறார்

விடுதலைப்புலிகளின் வான் பலத்தை எடை போடப் புறப்பட்ட ஆய்வாளர்கள் இப்போது தலை கால் புரியாமல் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். சிறிலங்கா அரசபடைகளின் மத்தியில் கூட காணப்படாத ஒரு சிறந்த ஆயுதக் கலாசாரத்தை விடுதலைப் புலிகள் பின்பற்றி வருகிறார்கள் என்பதை பல தருணங்களில் அவர்கள் உலகுக்கு நிருபித்திருப்பதைக் கண்டிருக்கிறோம். புலிகளின் வான்படைப்பலமும் இதற்கு விதிவிலக்கல்லவே. பூகோள ரீதியாக தமிழகமும் தமிழீழமும் குறைந்த தொலைவிலேயே அமைந்திருக்கின்றன. ஆகவே தமிழகத்திலுள்ள அணு மின் நிலையத்தைக் குறிவைத்து இந்தியாவின் அயல் நாடுகளாகிய சீனா பாகிஸ்தான் இராணுவம் தாக்கினாலும் கூட பாதிக்கப்படுவது இந்திய மக்கள் மட்டுமல்ல தமிழீழத்தில் வாழும் மக்களும் தான் என்பதை இந்த புரளிக் காரர்கள் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை?. அணு உலைகள் தாக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து வெளியாகும் அணுக் கதிர்வீச்சு பல மைல்தூரத்துக்கு ஊடுருவி மனித இனத்தையும் மற்றும் பிராணிகள் செடி கொடிகள் அனைத்தையும் கொல்ல வல்லது. வேறெரு விதமாகச் சொல்வதாயின் புலிகளின் இவ்விதமான ஒரு நடவடிக்கை தன் தலையிலே தானே ஒரு அணுக்குண்டை போடுவதற்கே ஒப்பாகும். இப்படியான புரளிகளை இந்தியா நம்புவதற்குப் பதிலாக சிறிலங்கா குண்டுவீச்சு விமானப் படை விமானஓட்டி ஒருவன் அவனுக்கு வழங்கப்பட்ட கட்டளையை மீறி குண்டை எடுத்துச் சென்று வேண்டுமென்றே இந்திய அணுசக்தி நிலையத்தில் போட நினைத்தால் அதைத் தடுப்பதற்கு இந்தியா வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வைத்திருக்கிறதா என்பதில் தான் இந்தியா இப்போது கவனம் செலுத்த வேண்டும். இந்தியா தமிழீழத்தை அங்கீகரித்து கைகொடுக்கும் பட்சத்தில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் எமது நாடு அமையும்போது அது இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமென்பதில் ஐயமில்லை.

Edited by Norwegian

இலங்கையின் நோக்கம் இந்தியாவிற்கு புலி பூச்சாண்டி காட்டி

இந்தியாவை புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடவைத்து தான் தப்புவது(கருணாவின் படையை எப்படி முன்னனியில் விட்டு இராணுவதின் இழப்பை இல்லாமல் செய்யும் தந்திரம்).

தமிழ் நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும் இதே பாணிதான்..

இந்தியா இதனைப்புரிந்தால் சரி--- முன்னர் ஏற்பட்ட அனுபவம் மறக்காவிட்டால் போதும்...

இலங்கை வரைவிலக்கணம்--- தமிழர் அழிப்பு,உலகத்தில் பூச்சாண்டி, நிதி உதவி பெறுதல் இராணுவ ஆயுத பெருக்கம்,தமிழர் அழிப்பு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் நாட்டு விமானிகளை வைத்து, இலங்கையில், முக்கியமாக வடக்குப் பகுதியில் தமிழனின் தலையில் குண்டு போட்டபோது, பக்கத்தில் இருக்கின்ற கல்பாக்கத்திற்கு, பாகிஸ்தான் விமான ஓட்டி சென்று குண்டு போட எவ்வளவு நேரம் ஆகும் என்று இலங்கை சிந்திக்கவில்லையா?

அல்லது, அப்போது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வரும் என்றும் அதற்குத் தெரியாததோ?

சமீபத்தில் அமெரிக்கா கூட, ஒப்பந்தம் செய்தபோதும், இந்தியாவிற்கு பாதிப்பு வரும் என்று இலங்கையரசுக்குத் தெரியாதோ?

பாகிஸ்தான் விமானிகளை இந்தியாவின் கீழ்பக்கம் வைத்து அச்சுறுத்தல் செய்தபோது, கவலைப்படதா, பாலித கோகன்னா இப்போது, இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து கண்ணீர் வடிக்கின்றாராம்.

ஒரு மெலிய தாடி மூஞ்சிக்குள் இவ்வளவு பெரிய குள்ளநரி ஒளிந்திருக்கின்றதோ?

கொஞ்சம் எங்களையும் மனசுல வச்சுக்கங்கய்யா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்காகவே மாதா மாதம் பல கோடி டாலர் செலவு செய்து பல அணு ஏவுகணைகளை பாகிஸ்தான் செய்து கொண்டிருக்கிறதே இதை யாரும் கவனத்தில் எடுக்கிறார்களா?கடந்த இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இலங்கையில் தளம் கொடுத்த சிங்கள் அரசை இந்தியர்கள் மறந்தாவிட்டார்கள்.

தூங்கும் கயவாணியை எழுப்பலாம் தூங்குவது போல சினிமா காட்டும் தூங்கு மூஞ்சிய எழுப்ப முடியாதுங்க...மேலே சொன்னாப்பல ஆரிய திராவிட மாயைக்குள்ளால நான் பெரியவன் நீ சின்னவன்கிற போட்டிதானுங்க.... பலசாலீன்னா வழி விட்டொதுங்கும் கூட்டமிங்க...... அம்புட்டுத்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I see this as very serious issue than mere warning!!!

"insecurity of India" என்று சொல்லிப்பார்த்தது,

"insecurity of whole south asia" என்றும் சொல்லிப்பார்த்தது...

யாரும் கவனத்தில் எடுப்பாராக தெரியவில்லை,

இந்தியாவின் "we're okay, we don't believe they will target us" என்ற கருத்தின் பின்பு

இப்படி ஒரு குண்டு...

இந்தியாவின் "we're worried about their aerial attack" என்பது புலிகள் தம்மை தாக்கிவிடுவார்களோ என்பதால் வந்த worry அல்ல. புலிகளின் பெயருள் மறைந்திருந்து "மற்றவர்கள்" தாக்கலாம் என்ற பயமே! யார் அந்த மற்றவர்கள், ஏன் இதற்கு முன் அந்த மற்றவர்களால் worry இருக்கவில்லையா...இல்லை!,புலிகளின் முதல் விமானத்தை பகிரங்கப்படுத்த முன் "மற்றவர்கள்" வானால் தாக்க மாட்டார்கள். ஆனால் இப்போது?

Nuclear reacters ஐ குறிப்பிட்டு சொல்வதில் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

தம் நாட்டிலுள்ள "மற்றவர்களின்" உதவி கொண்டோ இல்லாமலோ தாம் உங்களை மெதுவாக உரசவும் தயங்க மாட்டோம்- என்பது செய்தி!

"message" வந்தது கோஹன்னவின் வாயால். அது வெறும் அம்பு மட்டுமே!

எய்தவன் எவனாகவும் இருக்கலாம்!

Sure!, India has lots of worries now!

இது பிதற்றல் அல்ல இது இந்தியாவை மீண்டுமொருமுறை ஈழப்பிரச்சினையில் மாட்டவைத்து அதில் குளிர்காய சிங்களம் செய்யும் தந்திரம்.இந்தமுறை இந்தியா அவ்வளவு இலகுவில் எடுபடாது எனத்தெரியும். அதற்காகத் தான் இந்தினோசியாவையும் இதற்குள் இழுத்து சார்க் நாடுகளிடமும் புலம்பி ஒரு பிராந்திய ஆதரவை எடுக்க முனையுது சிங்களம். ஆனால் பாக்கிஸ்தான் தவிர எந்த நாடும் இவர்களின் அழுகைக்கு செவிசாய்க்க போவதில்லை. பாக்கிஸ்தானின் நோக்கம் இந்திய துணைக்கண்டத்தில் அமைதி நிலவக்கூடாது என்பதே. அதன் மூலம் தான் வளர்க்கும் தீவிரவாதத்தை இலகுவில் இந்தியாவின் மேல் ஏவலாம் என்பது தான். இப்பிதற்றல்களுக்கு எல்லாம் மூலகாரணம் பாக்கிஸ்தானே.அத்துடன் தற்போது சிங்கள பேரினவாதிகள் இந்தியாவின் ராடரை உருக்கி மண்வெட்டி செய்யலாம் என கூறி இருப்பதானது. தம் தோல்வியை இந்தியாவின் ராடர் மேல் சுமத்தி இந்திய ராடர்களுக்கு பதிலாக வேறு நாடுகளின் ராடர்களை இங்கு வைத்து இந்தியாக்கு ஆப்படிக்கும் வசதியை பாக்கிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செய்து கொடுப்பதுதான்.

அதுமட்டுமல்ல கடற்புலிகளிடம் மோதமுடியாமல் புலிகளையும் இந்திய கடற்படையையும் மோத விட சந்தர்ப்பம் பாத்து அலைகிறது சிங்களம். அதற்கு சில இந்திய அரசியல் வாதிகளும் துணைபோகின்றனர். அதனால் தான் சமீபகாலமாக இந்திய தமிழக மீனவர்களை குறிபார்த்து நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்கள். இறுதியில் அழிக்கபடுபவன் தமிழனே. இதை இந்திய அரசும் கண்டு கொள்ளாது என்பது வசதியாக இருகிறது. வேறு நாடுகளில் அண்மைய நாடானது தம் பிரஜைகள் மீது எவ்வித காரணமும் இல்லாமல் தாக்குதல் மேற்கொள்ளுமானால் அந்தநாட்டு தூதுவரை வெளிநாட்டு அமைச்சுக்கு அழைத்து கண்டனம் தெரிவிப்பது வழமை. ஆனால் 5 மீனவர்கள் ஒன்றாக கொல்லப்பட்டும் அவ்வாறான நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்கவில்லையே ஏன்!!!!. தமிழகத்தில் இருக்கும் ஹம்சாவை அழைத்தேனும் கண்டனம் தெரிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன். சகல அரசியல் பலத்தையும் வைத்திருந்தும் தமிழக அரசு நட்ட ஈடு கொடுத்தும் கொலை செய்யப்படப் போகும் தமிழக மீனவார்களின் உடலங்களை தேட ஹெலிக்கப்டர் வசதியையும் விசைப்படகு வசதியையும் உயிர்காக்கும் அங்கிகளையும் கேட்கும் மர்மம் என்ன??

வார்த்தைக்கு வார்த்தை என்னினிய தமிழக மக்களே என சொல்லும் தமிழக அரசியல் வாதிகள் எல்லோரும் இதில் மவுனமாக இருக்கும் மர்மம் என்ன?.உயிரிழப்புக்கு 5 லட்சம் கொடுத்து வாயை அடைத்திடலாம் என்ற நினைப்பா அல்லது செத்தது சாமானிய மீனவன் என நினைப்பா? அல்லது இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்தும் நாடகமா?

ரோட்டில் நாய் கடித்தாலே அதை பெரிய பிரச்சினை ஆக்கும் மேலைத்தேய நாடுகள் எம்மினம் மட்டும் செத்தால் என்ன என ஏன் யோசிகின்றது. ஏன் இந்தியா கூட தன் பிரஜையின் உயிரை மதிக்கவில்லை இதில் இருக்கும் மர்மம்தான் என்ன!

இந்தியாவில் முன்பு போல ஒரு அரசியல் தலைவர் சொன்னால் அது நடக்கும் இப்போ அப்படியல்ல, நிலமை மாறிவிட்டது இந்திய ராணுவம் மறுபடியும் இலங்கைக்கு வரம் என்பது ஒரு போதும் நடக்காது. இலங்கையின் சூழ்ச்சி இந்திய அரசு கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் முன்பு போல ஒரு அரசியல் தலைவர் சொன்னால் அது நடக்கும் இப்போ அப்படியல்ல, நிலமை மாறிவிட்டது இந்திய ராணுவம் மறுபடியும் இலங்கைக்கு வரம் என்பது ஒரு போதும் நடக்காது. இலங்கையின் சூழ்ச்சி இந்திய அரசு கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறது.

உருப்படியாக ஒரு கருத்து சொல்லியிருக்கிறீர்

விடுதலைப் புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் அல்ல எரிச்சல் ஊட்டுவதாகவே உள்ளது என்கிறார் விமானப்படையின் புதிய தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகள் வான்படை ஒன்றை உருவாக்கியிருப்பது, இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அல்ல என்று இந்தியாவின் விமானப்படையின் புதிய தளபதி ஏயர் மார்ஷல் பாலி மேஜர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வான் படையினர் கடந்த மாதம் 26ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். ஏயர் மார்ஷல் பாலி மார்ச் 31ஆம் திகதி விமானப்படையின் புதிய தளபதியாகப் பதவி ஏற்றார். அதன் பின்னர் முதல் தடவையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகி இருக்கிறார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அது எங்களுக்கு ஓர் அச்சுறுத்தல் அல்ல. விடுதலைப் புலிகள் எங்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அதனைவிட அவர்கள் எமக்கு எரிச்சல் ஊட்டுபவர்களாகவே இருக்கிறார்கள் என்று விமானப்படைத்தளபதி தெரிவித்தார்.

உலகத்திலேயே தீவிரவாத அமைப்பு ஒன்று விமானப்படையைக் கொண்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கை மற்றும் நாடுகளை இது விடயம் கவலைக்குள் ஆக்கியிருக்கின்றது.

http://www.tamilwin.com/

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்தில்லை: கோகன்னவின் கருத்துக்கு அரசு மறுப்பு

இந்திய அணு உலைகளுக்கு விடுதலைப் புலிகளின் வான்படையால் ஆபத்து ஏற்படக்கூடும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கருத்தைத் திருத்தும் வகையில் இந்தியாவுக்கு புலிகளால் ஆயுத மார்க்க அச்சுறுத்தல் இல்லை என தான் கருதுவதாக சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவின் எந்தவொரு நிலைகள் மீதும் குண்டு வீசுவற்கு புலிகள் வானூர்திகளைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்து, அதிகாரிகள் கலந்துரையாடவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. நிச்சயமாக இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் புலிகளின் வான்படைப் பலம் பாரதூரமான விடயமல்ல எனவும், சிறிலங்காவில் உள்ள கேந்திர நிலைகளுக்கு அதனை அச்சுறுத்தலாகக் கருதவில்லை எனவும், பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார்.

புலிகளின் வான் தாக்குதல் பலத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டதுடன், புலிகளின் வான் படைப்பலம் பாரதூரமான அச்சுறுத்தல் அல்ல எனவும் தெரிவித்திருக்கின்றார்.

புதுடில்லி அவசர ஆலோசனை

அதேவேளையில் புலிகள் வசமிருக்கும் ஆயுத வகைகளைப் பொறுத்தவரையில் அணு உலைகளைக் குண்டுவீசித் தாக்கும் சாத்தியமில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

புலிகள் இந்திய அணு உலைகளைத் தாக்கினால், அதனால் முதலாவதாகப் பாதிக்கப்படப் போவது இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியே என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கூறியிருப்பதுடன், புலிகள் இந்திய அணு உலைகளை இலக்குவைப்பார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாததது எனவும், அந்தளவுக்கு புலிகள் மடையர்கள் அல்ல எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில், இந்திய அணுமின் நிலையங்களுக்கு வான்புலிகளால் ஆபத்திருப்பதாக கோகன்ன அறிவித்ததையடுத்து, புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அவசர ஆலோசனை ஒன்று நடத்தப்பட்டது.

இந்து சமுத்திரப் பகுதியில் 200 முதல் 300 வரையிலான கடல் மைல் சுற்றளவுக்கு வான் தாக்குதல் நடத்தும் அளவுக்கு புலிகள் வலுப்பெற்றுள்ளனர் எனவும், அதனால் இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியத் துறைமுகங்கள், அணு உலைகளுக்கும் அபாயமிருப்பதாக பாலித கோகன்ன அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த அவசர ஆலேசனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்தியத் தலைவர் புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் சேகர் தத் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுடன், இந்தியக் கடற்படைத் தளபதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் எங்களையும் மனசுல வச்சுக்கங்கய்யா

rmsachitha நிஙகள் சாணக்கியண்தாணே*************

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் கீழே இருக்கும் சின்னத்தீவின் பாதுகாப்பிற்கென மிக்-29 வரையில் பயிற்சி கொடுத்த இலங்கை விமானப்படையினால்தான்(பாகிஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு மிகவும் அருகில இருக்கிற பலாலித்தளத்தில மிகச்சிறந்த விமான ஓடுபாதையிருக்குது. கொழும்புல மிக், கிபீர் விமானங்களிருக்குது. இதெல்லாம் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான விசயங்கள். ஆனாலும் இந்தியா பலாலித்தளத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஏனெண்டால் தனக்கு அருகில அவையள வச்சிக்கொண்டால் அமெரிக்கா வரப்பார்த்தாலும், பாகிஸ்தான்வரப்பார்த்தாலும், சீனாவரப்பார்த்தாலும் என்ன தம்பி என்ன விசயம் எண்டு கொஞ்சம் தட்டிக் கேட்கலாமெண்டுதான். இதைச் சரியாப் புரிஞ்சிகொண்ட சிறீலங்கா இந்திவுயாவுட கொண்ட்றோளுக்குள்ள இல்லாத தமிழீழ விமானப்படைய வச்சிப் பூச்சாண்டிகாட்ட வெளிக்கிடுது. இதெல்லாம் தூரநோக்குள்ள இந்தியாவுடைய நரித்தனமான ராஜதந்திரத்துக்கு நல்லாப் புரியும். எங்கட பலம் அதிகரிக்க அதிகரிக்க இந்தியா எங்களோடையும் நட்புறவைப் பேண வெளிக்கிடும், அதாவது தட்டிக் கேட்கக் கூடிய விதத்தில. நாங்களும் இந்திய தேசியத்துக்குப் பாதிப்பில்லாதவர்களாக இருப்பமெண்டிறத உறுதியாக்கக் காட்டிக்கொண்டால் இந்திய வல்லரசுடைய தயவைப் பெற்றுக்கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.